பிடிக்கும் பிடிக்காது என்று ஒரு கண்ணாடியை மாட்டிக்கொண்டு எந்த ஒரு விஷயத்தையும், ஒருவரையும் பார்க்கவே கூடாது. நம் கருத்துக்கு மாறாக இருந்தாலும், நம் எண்ணத்தை திணிக்காமல்,,
அந்த விஷயத்தில் உள்ள நல்லதை மட்டும் எடுத்துக் கொள்ளலாம்.. அல்லது கடந்து விடலாம். ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு சூழல் சரியோ தவறோ தெரியாமலோ தெரிந்தோ சில செயல்களை செய்து விடுவோம். அல்லது வார்த்தைகள் வீசிவிடுவோம்.. பின்னாடி தவிர்த்திருக்க வேண்டும் என்று தோன்றும் போது, கடந்து பிரச்சனையா மாறிக் கூட விடும். கொஞ்சம் அமைதியா விட்டு சில நாட்கள் கழித்து புரிய வைக்கலாம். எங்குமே உடன் பழகுபவர்கள் தாக்கம் தான் அதிகம் influance செய்யும்.. சின்ன சின்ன விஷயங்களில் கூட அதன் தாக்கம் கொஞ்சம் கவனித்து நாமே நம்மை அனலைஸ் செய்தால் புரியும்.. நாம் ரொம்ப நெருக்கம் என்று தேர்வு செய்யும் மனிதர்கள் தவறானவர்கள் என்று ஒதுக்கி விட்டாலும், அவர்கள் விட்டு செல்லும் தாக்கங்கள் அவ்வளவு எளிதில் நம்மிடம் இருந்து மாறாது.. சின்ன சின்ன வெளிப்படா வெளிப்பட்டு நம்மை நிம்மதியா இருக்க விடாது.. நிறைய பேர்களை பார்த்த அனுபவத்தில் சொல்கிறேன்.. ஆரம்பம் எங்கு தெரியுமா.. குழந்தைகள் முன்பு பெரியவர்கள் ஒவ்வொரு நடவடிக்கை.. பொது இடங்களில் கூட நம் எந்த ஒரு கெட்ட செயலும் யாருக்கும் தாக்கம் தந்து விடக்கூடாது.. இயல்பாகவே இப்போ உள்ள குழந்தைகள் நிறைய கவனிகின்றன. காலமாற்றம் டெக்னாலஜி வளர்ச்சி.. எதைப் பற்றியும் தெரிந்து கொள்ள தகவல் பெற நல்ல வசதிகள்.. நல்லது கெட்டது இரண்டும் கலந்து.. உண்மையா குழந்தை வளர்ப்பு ஒரு பெரிய சவால் தான்... இப்போது.. எவ்வளவு சரியா நம் பிள்ளைகளை வளர்த்தாலும்.. இன்னொரு பெற்றவர்கள் பிள்ளை மேல் உள்ள கவனமின்மை அடுத்த குழந்தையையும் பாதிக்கும்..செலவு செய்து விட்டால் குழந்தை நல்லா வந்துடும் என்ற நம்பிக்கை.. கடவுளை கண்ணீர் மல்க வேண்டி வழிபடுவது போல்.. குழந்தைகள் வளர்ப்பில் அதிகம் கவனம் அவசியம். அவர்கள் ஒவ்வொரு விஷயமும் நம்மிடம் இருந்து தான் கற்க தொடங்குகிறார்கள்.. கவனம் கவனம் கவனம்... வேலைக்கு போறேன் பிசினஸ் பிசி.. வீட்டில் மனைவி கவனிக்கிறாள்... இதெல்லாம் பேசினா, குழந்தைக்கும் அப்பாவுக்கும் உள்ள இடைவெளி கூடும்..இப்போது பெண்கள் நிறைய வேலைக்கு செல்கிறார்கள். ஆண்களை விட பெண்கள் அதிகம் சம்பாதிக்கிறார்கள்.. சமீபத்தில் ஒரு வீட்டுக்கு சென்று விட்டு, அங்கிருந்த மூன்று பேருக்கும் work from home.. மூன்று பேருக்கும் காபி போட்டு குடுத்து விட்டு, நானும் குடித்து வந்தேன்.. அவர்கள் மேல் கோவம் வரவில்லை.. அதற்கு பதில் நான் காபி போட்டு..தந்து விட்டேன்(.just joke ) ஒரு கட்டத்தில் பெரியவர்கள் ஆகும் போது அட்டாச்மென்ட் க்கு ஏங்க வேண்டும்.. பிரச்சனை, கவலை, போராட்டம், கஷ்டம் எல்லாம் இருக்கும் தான். ஆனால் குழந்தைகள் நன்றாக வளர பெற்றவர்கள் செலவு செய்து விட்டால், வாங்கி குடுத்து விட்டால் மட்டும் போதாது... குழந்தைகள் மேல் நாம் காட்டும் அக்கறை, அவர்கள் முன்பு நாகரீகமா நடப்பது.. குறிப்பாக சண்டை போட்டுண்டே இருப்பது.. இப்படி சில விஷயங்கள் குழந்தையின் கவனமின்மையை அதிகரிக்கும் என்கிறார்கள்.. நிறைய பெரியவர்கள்... ஒரு நிமிடம் யோசித்தால்... குழந்தை இல்லை என்று கோவில் கோவிலா, மருத்துவ மனைக்கு செல்லும் ஒரு சில தம்பதிகளை பார்த்தால்.. அவர்கள்கண்ணீர் கண்டால்... நம் குழந்தை கடவுளா தெரியும்... குழந்தை வளர்ச்சிக்காக நம் பிடிவாதம் கொஞ்சம் தளர்த்திக் கொள்ளலாம்.. நல்ல சமுதாய வளர்ச்சிக்கு நம் contribution முதலில் நம் குழந்தை முன்பு நாம் சரியா இருக்க வேண்டும்...
Subscribe to:
Post Comments (Atom)
8 september
உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்
-
#ஆந்திர துணைமுதல்வர் பவன்கல்யாண் அவர்களை சந்திப்பு #Meeting with AP DyCM Shri Pawan Kalyan Garu —————————————————————- நேற்று பிற்பகலில்...
-
#கச்சத்தீவுகுறித்தசிலஅறியாதவிஷயங்கள்! ———————————————————- கச்சத்தீவு பற்றிச் சில செய்திகளைச் சொல்ல வேண்டியது அவசியம்! டச்சுக்காரர்களும் ஆங...
-
#ஈவேகிசம்பத் அண்ணன் நினைவு நாள் இன்று பிப்ரவரி 23, 1977- ஆரம்ப காலக் காங்கிரஸில் காமராஜருடன் நான் இருந்தபோது சம்பத் அவர்களுடன் பயணித்த காலங...
No comments:
Post a Comment