#ஈழம்
1918 பொன்னம்பலம் அருணாசலம் சிங்களத் தலைமைகளை நாடி ஒப்பந்தம் செய்தார், ஏமாற்றப்பட்டார்.
1925 மகிந்திரி ஒப்பந்தமும் தமிழரை ஏமாற்றியது.
1957 பண்டா-செல்வா ஒப்பந்தம் பண்டாரநாயக்காவால் கிழித்தெறியப்பட்டது.
1962 டட்லீ -செல்வா ஒப்பந்தம் டட்லீ சேனநாயக்காவால் கிழித்தெறியப்பட்டது.
1985 தமிழர் தரப்பையும் சிங்கள அரசையும் இந்தியா திம்புவில் பேச்சுவார்த்தையில் ஈடுபடுத்தியது பயனற்றுப் போனது.
1989-90 களில் பிரேமதாசா அரசுடன் விடுதலைப் புலிகள் பேசினர் அதுவும் பயனற்றுப் போனது.
1994 ,95 காலப்பகுதியில் சந்திரிக்கா குமாரதுங்கா அரசுடன் விடுதலைப்புலிகள் பேசினர் அதுவும் பயனற்றுப் போனது.
2000ரணில்விக்கிரமசிங்காவுடன் விடுதலைப்புலிகள் பேசினர். அது முன்பு போன்று இல்லாத வகையில் மூன்றாம் தரப்பு மத்தியஸ்தத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுப் பல கட்டமாகப் பேச்சுவார்த்தை நடந்து வந்தது .இதன் விளைவாகச் சிரான் கட்டமைப்பையோ மீள் சுனாமி நிவாரணக் கட்டமைப்பையோ அல்லது இடைக்காலத் தன்னாட்சி வரைவையோ ஏற்காத சிங்கள அரசதரப்பு,
ஆப்ரேசன் வெக்கன் திட்டத்தை நிறைவேற்றுவதில் கண்ணும் கருத்துமாக இருந்தது. இப்படி அரசியல் சீர்திருத்தம், ஒப்பந்தம், பேச்சுவார்த்தை, தனிச்சிங்களச் சட்டம், திட்டமிட்ட சிங்கள குடியேற்றம், மற்றும் பல்கலைகழகப் புகுமுக மாணவர்களில் தமிழ் மாணவர்களைத் தரப்படுத்தல்,எனப் பல்வேறு வழிகளைக் கொண்டு தமிழர்களை அழிப்பதில் சிங்களப் பெரினவாத அரசு குறியாக இருந்தபோது, வேறு வழியின்றித் தமிழ் இளையோர் ஆயுதம் எந்திப் போராட நிர்பந்திக்கப்பட்டனர்.
பேச்சுவார்த்தை மூலம் எட்டாததைத் தமிழ் இளையோர் ஆயுதப்போராட்டம் மூலம் எட்டிப் பிடித்தனர். உச்சமாக விடுதலைப்புலிகள் இயக்கம் தமிழீழ நிழல் அரசைக் கட்டி எழுப்பியது.
2009 மே நடுப்பகுதியில் ஆப்ரேசன் வெக்கன் திட்டம் மூலம் ஆயுதப்போராட்டம் மௌனித்துப் போனது.
இருந்தும் சிங்களப் பேரினவாதிகள் ஓய்ந்தார்களா இல்லை. வனவளத் திணைக்களம், தொல்பொருள் திணைக்களம், பௌத்த அமைப்புகள், மற்றும் முப்படைகளெனத் தமிழர்களின் நிலங்களை அபகரித்துத் தமிழர்களின் பண்பாட்டு அடையாளங்களைத் திட்டமிட்ட வகையில் அழித்து வந்தனர்.
குறிப்பிட்டுச் சொல்வதானால் பூர்விகமாகத் தமிழர் வாழ்ந்த தமிழீழ நிலப்பரப்பைச் சிங்கள மயமாக்குவதுதான் ஸ்ரீலங்கா அரசின் நிலைப்பாடு.
இந்த நிலையில் இன்றைய இளையோர் நாம் எமது தமிழீழத்தை மீட்டெடுக்கப் போராட வேண்டும்.
மோரோ தேசிய விடுதலை இயக்கம் மிந்தனவைச் சுதந்திர நாடாக்கப் போராடியது. அவர்களைப் பேச்சுவார்த்தைக்குள் இழுத்துச் சிதைத்தார்கள்.
ஆனால் சுதந்திர வேட்கையுடன் மிந்தனவை மீட்பதற்கு மோரோ தேசிய விடுதலை இயக்கம் இன்றும் போராடுகிறது.
நைஜீரியா பியசராவின் விடுதலைப் போராட்டத்தை முடித்து விடலாமென, நசுக்கி விடலாமெனக் கொடூரமான தாக்குதல்களைச் செய்து பியசராவின் விடுதலையை முடிக்கலாமென நம்பியது. ஆனால் பியசரா தனது விடுதலைக்காக இன்றும் போராடுகிறது.
குர்த்திஸ்தானின் போராட்டம் அவர்களின் தலைவர் ஒற்றாள்தனின் கைதுடனும் மற்றும்
ஈர்த் ஈராக் குருதீஸ்தானின் பாராளுமன்ற அமைப்புடனும் முடிவுக்கு வருமெனப் பலர் கருதினர். ஆனால் குருதிஸ்தான் போராளிகள் தங்கள் சொந்த மண்ணை மீட்க இன்றும் போராடுகின்றனர்.
பலஸ்தீன மக்களைப் பேரழிவுக்குள்ளாக்கி அவர்களின் நிலங்களைப் பேரழிவுக்கு உள்ளக்கிய போதும் பலஸ்தீன மக்கள் போராடுகின்றனர்.
இன்று எங்களுக்கு முள்ளிவாய்கால் போல அவர்களுக்குக் காசா பிரபலத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இருந்தும் பலஸ்தீன மக்கள் தங்கள் மண்ணை மீட்கப் போராடுகின்றனர்.
இப்படி உலகம் முழுவதும் போராடினால் தான் வெற்றியை அடைய முடியும் என்பதற்கு ஏராளம் எடுத்துக்காட்டுக்கள் உள்ளன.
இன்று நாம் போகன்வில்லைப் பார்ப்போம். போகன்வில் 1960 களில் இருந்து தனியரசு அமைப்பைக் கோரிப் போராடி வருகிறது. அப்போது அது ஆஸ்ரேலியா ஆட்சிக்கு உட்பட்டு இருந்தது.
1975 இல் ஆஸ்ரேலியா போகன்வில்லைப் பப்புவாநியூகினியாவுடன் இணைத்து விடுவித்தது.
எப்படிக் கிட்டத்தட்ட 1948 இல் பிரித்தானியா தமிழீழத்தைச் ஸ்ரீலங்காவுடன் இணைத்து விடுவித்தது போல. இருந்தும் போகன்வில் தனியரசுக் கோரிக்கையை வலியுறுத்தி நின்றது. அதன் அடுத்த கட்டமாக 1988 தொடக்கம் 1998 காலப்பாகுதியில் நடந்த ஆயுதப் போராட்டத்தில் 20000 உயிர்களை இழந்ததன் விளைவாக ,
2019 நவம்பர் 23 தொடக்கம் டிசம்பர் 7 வரை போகன்விலுக்கு போது வாக்கெடுப்பு நடத்தப்பட்டு 98 விழுக்காடு போகன்வில்லுக்காக அமைந்தது.
எதிர்வரும் குறுகிய நாட்களுக்குள் போகன்வில் புதிய நாடாகப் போகிறது. எனவே இப்படித்தான் தமிழீழம் மீது போது வாக்கெடுப்பை வெற்றிகாரமாகச் செய்து முடிக்க இன்றைய இளையோர் நாம் களப்பணி ஆற்ற வேண்டும். உலகம் முழுவதும் போராட்டத்தில் குதித்தது இளையோர் என்பது புதிதல்ல.1/2
No comments:
Post a Comment