Wednesday, November 14, 2018

இலங்கை நாடாளுமன்ற கூட்டம்...

இலங்கை நாடாளுமன்ற கூட்டம்...
-------------------
இன்றைக்கு இலங்கை நாடாளுமன்றத்தில் கூச்சலும், குழப்பமுமாக ராஜபக்சே ஆதரவாளர்கள் கருப்பு பேட்சை அணிந்து கொண்டு அவையின் கதாநாயகரை (அவை சபாநாயகர்) கூட்டத்தை நடத்தவிடாமல், முடிவை அறிவிக்க செய்யாமல் வெளியேறிவிட்டனர். ரணில் விக்கிரமசிங்கேவுக்கு கிட்டத்தட்ட 122 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு உண்டு. மூத்த நாடாளுமன்ற உறுப்பினரான 80 வயதை எட்டிய பவுஸ் கூட ராஜபக்சே முகாமில் இருந்து இன்றைக்கு ரணில் முகாமிற்கு வந்துவிட்டார். ராஜபக்சே அமைச்சரவையில் பதவியேற்றவரும், மலையக எம்.பியான சுரேஷ் வடிவேலுவும் ரணில் பக்கம் சாய்ந்துவிட்டார். நாடாளுமன்றத்தில் தங்களுடைய பெரும்பான்மையை காட்டி இயலாததால் பிரச்சனையை செய்து ராஜபக்சே தலைமையில் வெளியேறியது ஜனநாயகத்தை சாகடித்து, மேலும் அதை குழியில் புதைக்கும் வேலையை தான் அதிபர் மைத்ரிபால சிறிசேனேவும், ராஜபக்சேவும் ஒன்றாக செய்து வருகின்றனர்.
Image may contain: sky, cloud and outdoor உச்சநீதிமன்ற தீர்ப்பையும், உலக நாடுகளின் கருத்துகளையும் மதிக்காத இவர்கள் கண்டனத்துக்குரியவர்கள். போர்க் குற்றவாளியும், ஜனநாயகப் படுகொலையை செய்த ராஜபக்சேவை இந்த சம்பவத்துக்குப் பிறகாவது சர்வதேச சுதந்திரமான நம்பகத்துக்குரிய புலனாய்வு விசாரணை நடத்த உலக நாடுகள் முன்வர வேண்டும். கே.எஸ்.இராதாகிருஷ்ணன் 14-11-2018 #KSRadhakrishnan_postings #KSRpostings #Constitutional_Crisis_Sri_Lanka #Sri_Lanka_Supreme_Court #ராஜபக்சே #மைத்ரிபால_சிறிசேனே #ரணில்_விக்கிரமசிங்கே #rajapaksa #sirisena #ranil_wickramasinghe

No comments:

Post a Comment

Make a choice to get better, and to move forward. Move boldly against any currents*

*Make a choice to get better, and  to move forward. Move boldly against any currents*. Be persistent and consistent with your change, no mat...