Friday, November 30, 2018

வழிப்பறி டோல்கேட்கள்

வழிப்பறி டோல்கேட்கள் 
———————————-
கேரளத்தில் வழிப்பறி டோல்கேட்கள் கேரள முதல்வர் பினராயி விஜயன் முடிவு என தகவல் . கேரளாவின் 1,782 கி.மீ., நீளமுள்ள நெடுஞ்சாலையில் 14 டோல்கேட்கள் உள்ளன. அவை அனைத்தையும் மூடப்போவதாக தகவல்கள் வந்துள்ளன. மகாராஷ்டிராவில் 15,433 கி.மீ., நீளமுள்ள நெடுஞ்சாலையில் 44 டோல்கேட்கள் மக்களிடம் பகல் கொள்ளையடிக்கின்றன. ஆனால் தமிழ்நாட்டில் 5,381 கி.மீ., நெடுஞ்சாலையில் 51 டோல்கேட்கள் உள்ளன. மகாராஷ்டிரா, கேரளா, கர்நாடகா, ஆந்திராவை ஒப்பிடும்போது தமிழகத்தில் தான் 35 சதவீதத்திற்கும் அதிகமான  டோல்கேட்கள் உள்ளன. இந்த பகல்கொள்ளை அடிக்கும் டோல்கேட்களை மூடாமல் சர்க்கார், மீடு என பேசிக்கொண்டு வருகிறோம். இந்த வழிப்பறி கொள்ளை பற்றி பேசாமல் இருப்பது ஏனோ. மத்திய மாநில அரசுகள் மக்களுக்கான ஜனநாயக அரசா? இல்லை வியாபார சந்தை ஜனநாயக அரசா?

கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
29/11/2018

#KSRadhakrishnanpostings
#KSRpostings
#வழிப்பறி_டோல்கேட்
#tollgate


No comments:

Post a Comment

Make a choice to get better, and to move forward. Move boldly against any currents*

*Make a choice to get better, and  to move forward. Move boldly against any currents*. Be persistent and consistent with your change, no mat...