Friday, September 6, 2019

#பசித்திரு_தனித்திரு_விழித்திரு #ப_சிதம்பரம் (இது தனிப்பட்ட விமர்சனம் அல்ல நடந்த சில நிகழ்வுகள்; அவ்வளவுதான் )

#பசித்திரு_தனித்திரு_விழித்திரு  #ப_சிதம்பரம் (இது தனிப்பட்ட விமர்சனம் அல்ல நடந்த சில நிகழ்வுகள்;அவ்வளதான் )
———————————————-
ப.சிதம்பரம் நேற்று திகார் சிறையில் அடைக்கப்பட்டார். ராஜா வீட்டு மைந்தர்தான் மெத்தப்படித்தவர்தான் அவருக்கு  இப்படி  ஒரு நிலமை என்பது  கவலையளிக்கிறது.
இருப்பினும், என்ன  செய்ய..?!
என்னுடைய நினைவு அவர் எந்த அரசியல் போராட்டத்திலும் கலந்து கொண்டு சிறைக்கு சென்றதாக நினைவில்லை. ஒருமுறை எம்.ஜி.ஆர் ஆட்சியில் மூப்பனார் தலைமையில் போராட்டம் நடந்து சென்னை மாநகர மாநகர காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்தனர்.மூப்பனார் தலைமையில் Egmore ல் நடத்திய போராடத்தில்  காமராஜர் பெயர் சூட்ட வேண்டும் என்று போராடியதற்கு கைது அப்போது அவருக்கு காலில் வீக்கம் ஏற்பட்டு வலி இருந்ததாக நினைவு.அந்தசமயம் ப.சிதம்பரம் பக்கத்தில் இருந்ததாக நினைவு. மற்றபடி எந்த போராட்டத்திலும் கலந்து கொண்டதாக எனக்கு தெரியவில்லை. 
பசித்திரு, தனித்திரு, விழித்திரு இந்த மூன்றும் விவேகானந்தரால் சொல்லப்பட்டது வேறு அர்த்தத்தில்.
இந்த மூன்றும் திகார் சிறையில்  தனக்கு கிடைக்கும் என கனவிலும் நினைத்துப் பார்திருக்க மாட்டார் ப.சிதம்பரம்.
அதுவும் ஊழல் வழக்கில் மகன் சிதம்பரம் இருந்த 7ம் எண் இப்போது ப.சிதம்பரத்திற்கு கிடைத்திருக்குறது.
நேற்றிரவு அவர் நினைக்க முடியாத அளவுக்கு சிறைவாசம் உள்ளதே என்று சிந்தித்திருக்கக் கூடும். நிச்சயமாக பழைய சில நினைவலைகளும் அவர் மனதில் வந்திருக்கலாம். 

1.தனது திருமணத்தை சொந்தங்களே விரும்பாத நிலையில் தந்தை பெரியார் கலந்து கொண்டது நினைவுக்கு வந்திருக்கலாம். 

2. சி.சுப்பிரமணியம், பக்தவச்சலம் போன்ற சிலர் மட்டும் தமிழகத்தில் நடத்திய இந்திரா காங்கிரசில் 1973இல் 
சி.சுப்பிரமணியத்தின் கரிசனப் பார்வையில் தீவிர அரசியல் கால் வைத்து அகில இந்திய இந்திரா காங்கிரசின் காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் (AICC-Cong(I)), இந்திரா காங்கிரசின் இளைஞர் காங்கிரசின் தமிழகத் தலைவராக தன்னைவிட ஒரு சில சீனியர்கள் இருந்தாலும் எப்படி பெற்றோம் என்பதெல்லாம் அவரது நினைவுக்கு வரலாம். 

3. பெருந்தலைவர் காமராஜருடைய நெருக்கமே இல்லாமல் அவர் மறைவுக்கு பிறகு ஸ்தாபனக் காங்கிரசும், ஆளும் இந்திரா காங்கிரசும் 1976இல் தமிழகத்தில் இணைந்த பின்பு தான் ஜாக்பாட்டாக சி.எஸ் பரிந்துரையின் பேரில் மூப்பனாரின் உதவியால் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளர் ஆனார்.

இதுதான் அவர் முக்கிய அரசியல் பிரவேசம். எந்த பாடும் எந்தவித தியாகமும் இல்லாமல் இந்தளவுக்கு வளர்ந்தார். தொடர்ந்து இதே பாணியில் எந்தவித சிரமமும் எம்.பி, மத்திய மந்திரியும் ஆனார். சட்டமன்ற தேர்தலில் காரைக்குடி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

4. எப்படி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியில் நெடுமாறன், மூப்பனார் பிரச்சனையில் எப்படி நெடுமாறன் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் தேர்தலில் 7 ஓட்டு வித்தியாசத்தில் தோற்கடிக்கப்பட்டார் என்ற நினைவுகளும் அவருக்கு நேற்றிரவு வந்து சென்றிருக்கும்.

5. தன்னுடைய தொகுதியில் சாதாரண ஏழைக்கோ, கட்சிக்காரருக்கோ பயன்தரும் வகையிலான நியாயமான உதவியோ,கிராஃபைட் ஆலை சிவகங்கைக்கு மத்திய அரசின் பரிவாரத்தில் அமைச்சராக இருந்து இவரால்கொண்டவர மனது வரவில்லை. பின்தங்கிய தொகுதியாகவே சிவகங்ககை தொகுதியை வைத்துவிட்டார்.

6. தோழமை கட்சிகளால் வெற்றி பெற்றாலும் தோழமைகளை நன்றி பாராட்டாமல் இருந்ததும்,

7. பார்வையில் எளிதாகவும், பழகுவதற்கு சகஜமாகவும், இல்லாமல் எவ்வளவு பெரிய பொறுப்பில் இருந்தாலும் சக மனிதர்கள் நம்மை அணுக முடியாத எட்டாத நிலையில் வைத்துக் கொண்டோமே என்ற நினைவுகள் நிச்சயமாக அவருக்கு எழும்.

8. பெருந்தலைவர் காமராஜரோடு நெருக்கமான தொடர்பில்லாமல் தமிழக காங்கிரஸ் கமிட்டியில் இவ்வளவு பெரிய ஆளுமையாகிவிட்டோமே என்ற எண்ணமும் ஏற்பட்டிருக்கலாம்.

9. முள்ளிவாய்க்கால் போரில் ஈழத் தமிழர்களை நாதியற்ற வகையில் ஆக்கிவிட்டோமே என இப்படியான பல உண்மைகள் நேற்றிரவெல்லாம் மனதில் ஊசலாகியிருக்கலாம்.

10. ஜெயித்தால் மட்டுமே மந்திரியும், அரசியலும், தோற்றால் வக்கீல் தொழில் மட்டுமே......

ஆர்ப்பாட்டமில்லாத,அலட்டிக்
கொள்ளாத  அவரது அரசியலில் மக்களுக்கான போராட்டமோ, உண்ணாவிரதமோ ஏதும் கிடையாது. 
மக்களுக்கான வாழ்வாதாரத்திற்கு மக்கள் நல் அரசியலை நாடு பார்க்கவில்லை. பெரிய வழக்கறிஞர் என
காட்டிக்கொள்ளும் அவர் நாட்டின் முக்கிய பிரச்சனைகளுக்கு ஒரு வழக்கைகூட இது வரை தொடர்ந்தது இல்லை. 

தமிழகமே கொந்தளித்து எதிர்த்த திட்டங்களைக் கூட சற்றும் கூச்சப்படாமல் சிரித்துக் கொண்டே வரவேற்பவர்.

சூரியனுக்கும் கண்கூசும் அவருடைய வெள்ளை ஆடை, மெதுவான நடையால் பூமியே கொஞ்சம் கூசித்தான் போகும்.
ரசிக்க வைக்கும் தமிழ்,ஆங்கில பேச்சுகள்....
வாய் சொல் வீரராக எந்த பயனும் இல்லை.

கிராமப்புறங்களில் மழையின்றி  வறட்சியாக  இருந்தால்  மழை வேண்டி விராட பர்வதமும்,ராமயாணமும்  படிப்பார்கள்..இப்போது  அவரும்  சிறையில்  ராமயாணம் படிப்பதாக  சொல்கிறார்கள்  என்ன  செய்ய..?!! 

#KSRPostings
#KSRadhakrishnan_Postings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
06-09-2019

No comments:

Post a Comment

#*Salman Rushdie* , #*Knife*

#*Salman Rushdie* , #*Knife*  ———————————— Milan's words in "Knife" resonate deeply: "'Dad,' he said, 'there ...