Friday, July 9, 2021

இலங்கையின் உண்மையான நண்பன் சீனா; ஆசியாவின் வளர்ச்சியை சீனாவே வழிநடத்தும் என இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே பேச்சு

*இலங்கையின் உண்மையான நண்பன் சீனா; ஆசியாவின் வளர்ச்சியை சீனாவே வழிநடத்தும் என இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே பேச்சு*

சிங்களஅரசின்ஆட்சிமாற்றத்தால்,ஈழத்
தமிழர்கள்தமிழர்கள் அடைந்த அனு
கூலங்கள் என்ன? மேற்குலகம் ஆட்சி மாற்றத்தை கொண்டு வந்ததன   டட்லி சேனநாயக்காவை,  சந்திரிக குமாரதுங்கவை ,மைத்திரி ஸ்ரீசேனாவை காலத்திற்கு காலம் கொண்டுவந்தார்கள். 

இந்த ஆட்சி மாற்றங்களால் ஈழத்தமிழர்கள் அடைந்த இலாபம் என்ன ? இந்தியா பெற்ற அனுகூலங்கள்  என்ன?

மேற்குலகத்தின் ஆதிக்கத்தில் இந்துசமுத்திர பிராந்தியத்தில் ஒருகட்டத்தில் அமெரிக்காவையும், மறுகட்டத்தில் சீனாவையும் மேலோங்க செய்ததை தவிர எந்த இலாபமும் இலக்கும் இந்தியாவிற்கு கிடைக்க
வில்லை.மேலும் இந்தியாவின் தமிழ் தொப்புள் கொடி உறவுகளை அழித்துஇந்தியாவையும்பகடைக்காயாக ஈழத்தமிழர்களுக்கு எதிராக திருப்பிய நாடகமே நடந்து முடிந்தது.

இந்துசமுத்திர பிராந்தியத்தின் வல்லமை மிக்க நாடான இந்தியாவை தவிர, வேறு எந்தவொருநாடும்இந்துசமுத்திரபிராந்
தியம் பற்றிய முடிவை தீர்மானிக்க முடியாது. 

இந்து மகா சமுத்திர பிராந்திய நலனின் முடிவுகள் அனைத்தும் இந்தியாவால் மட்டுமே எடுக்கப்பட வேண்டும். இதுவே இந்தியாவின் பாதுகாப்பிற்கும் ஈழத்
தமிழர்களுக்கும் நன்மையளிக்கும். 

இன்றைய சூழ்நிலையில் இந்தியாவின் பாதுகாப்பிற்கு தமிழீழம் உருவாகுவது மட்டுமே தீர்வாக அமையும்.

இதில் புவி அரசியல்,கச்சதீவு, தமிழக மீனவர் சிக்கல், அமெரிக்கடி-கோகர்
சியா உள்ளடக்கமாகும்.

#KSRpostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
09-07-2021.

No comments:

Post a Comment

hhhhhhh

hhhhhhh