Thursday, October 5, 2023

வைணவ நம்பிக்கோவில் - திருக்குறுங்குடி, திருநெல்வேலி மாவட்டம் .திவ்விய தேசம். வைணவத்திற்க்கு இன்றும் குடை, கொடை வழங்கும் டிவிஎஸ்யின் பூமி*…

*இன்றைய பயண செலவு 

டி.விசுந்தரம் அய்யங்கார்( என் பாட்டானர் ஆர். வெங்கடாசல நாயுடு மீது அனபு கொண்டவர்) நேரு காலத்தில்,. மத்திய முன்னாள்அமைச்சர், இன்றைய பயண செலவு எங்கள் வைணவ #நம்பிக்கோவில் - திருக்குறுங்குடி, திருநெல்வேலி மாவட்டம் !!! திவ்வியதேசம்.. வைணவத்திற்க்கு இன்றும் குடை, கொடை வழங்கும் டிவிஎஸ்யின் பூமிடி.வி.சுந்தரம அய்யங்கார்






( என் பாட்டானர் ஆர். வெங்கடாசல நாயுடு மீது அனபு கொண்டவர்) இவரின் மகள் - நேரு காலத்தில்,. மத்திய முன்னாள்அமைச்சர் டாக்டர் டி.வி. எஸ் சௌந்தரம்அம்மா (காந்திகிராம கிராமிய பல்கலை கழகத்தை நிறுவியவர்)

வாழ்வே, ஒரு நாட்டியக் கலைதான் என இன்றைய Postcolonialism பின் நவீனத்தவம் என்ற நிலையி்ல்; காப்பியங்கள்,( epics)வரலாறு,  அரசியல்,அறிவியல் பழமையும், புதுமையும் கலந்த பரத பகலையை நாட்டிற்க்கு வழங்கும்@tvsmotorcompany குடும்ப திருமகள்@aratnam *அனிதாரத்னம் அவர்களின் பூர்விக பூமி…இவரின் நாட்டியக் அனுகுமுறை*:

இன்றைய மனித உணர்ச்சிதான் மூளையில் அறிவாகவும், நாவில் பேச்சாகவும், வாக்கில் கவியாகவும் குரலில் பாட்டாகவும், விரலில் கருவியிசையாகவும் நடனம் புரிகிறது. உணர்ச்சிதான் முகபாவனைகளாலும், தலை, மார்பு, கைகள், இடுப்பு, கால்கள், அங்கங்களாலும் அபிநயமும் கலந்தே வருகிறது. பேச்சில்லாமல் சாடையாலேயே உணர்ச்சியை வெளிப்படுத்துகிறோம். ஒருவன் மனதை முகக்குறியும் கைக்குறியும் காட்டும். 'ஹா, என்ன வியப்பு ...அப்பா காரியம் ஒரு வழியாக முடிந்தது. என் இன்பமே வா, வா! என் கண்ணே சாப்பிடு!... ஐயோ, என்கதி இப்படியானதே! ஹா, புலி புலி! பாம்பு பாம்பு! சை, இதென்ன உலகம்! என்ன மனிதன், எல்லாம் அவ்வளவுதான்! விடு கழுதையை! அட மோசக்காரா, இப்படியா செய்தாய்!... நன்றாக வேண்டும், படு, படு!...ஹ...ஹ...ஹ, சிரிப்புத்தான் !... பூசையிலே கரடி ஓட்டுவதுபோல வந்தான்... ஓடு ஓடு, நாழியாயிற்று! இதென்னடீ இந்த மனிதர் அதிசயம்; நன்றாயிருக்கிறதம்மா!... இப்படித்தானுண்டோ? எனக்குப் பிடிக்கவேயில்லை! நாதா நாம் அன்றில்போலிருப்போம்...ஹா, ப்ராணநாதா!' இந்த உணர்ச்சித் தொடர்களை ஒரு கண்ணாடிமுன் பேசிப்பாருங்கள்! பேச்சுக்கேற்ற அபிநயம் தானே வரும். பேசக்கூடத் தேவையில்லை; ஒருவன் தலையில் கைவைத்து முகத்தைக் கோணும்போது, கையை விரிக்கும்போது, அவன் உள்ளம், 'ஐயோ, இப்படிவந்ததே' என்ற சோகத்தை விளக்கும். இரண்டு காதலர் இரண்டு கைகளையும் அகல விரிக்கும்போது, 'நீயே என் ஆவி; உன்னை என் உயிரில் அணைத்து கொள்வதே இன்பம்!" என்று மனம் அவருள்ளே பேசும். இப்படி இயற்கையாக வருவதே உண்மையான நாட்டியமாகும். அதில் சுருதியும் பாட்டும் போலவே, பேச்சும் அபி நயமும் பொருந்தியிருக்கும்.
நீண்டகாலமாக உலகில் இந்த அபிநய பாஷைதான் வழங்கிவந்தது. இன்னும் சில ஜாதியாரிடையே சைக்கினைதான் உள்ளுண்ர்வை வெளியிடுகிறது. தமிழே அறிந்த ஒருவன். தமிழே அறியாத ஒரு இந்திவாலாவுடன் பேசுவதானால் மொழி பயனாவதில்லை; கைச்சாடையுடம் முகக்குறிகளுமே பயனாகும். அபிநயம், 'பேசா உலகமொழியாக' வழங்குகிறது. அதை மனிதசமுதாயம் நன்றாக உணர்ந்தால் எவரும் எவருடனும் பாஷை தெரியாமலே கைக்குறிகளாலும் கரணங்களாலும் முகச்சுளிப்புகளாலும் நன்றாகப் பேசலாம். "கானா காலியா;" என்று பேசத்தெரியாத ஒரு தமிழன், நம் இந்தியாவைப்பார்த்து பத்மகோச முத்திரையாக வலக்கை விரல்களை மடக்கி, வாய்க்கருகே வைத்து சாடை காட்டினால், உடனே இந்திவாலா, "காலியா" என்று பதிற்சொல்லுவான். 'அவன் வயிறு காலியில்லை, நிரம்பிவிட்டது' என்று நாமும் அறிவோம், அல்லது, அவன் ஆம் என்று தலையை அசைத்து வயிற்றைக்காட்டினாலும் போதும். பசித்தவன் வலக்கையால் எக்கிய வயிற்றைக்காட்டிமுகஞ்சோர்ந்தாலே. அவன் பசி மிகுந்தவன் என்றறிவோம்காதலரமனத்தந்தியை முகக்குறிகளாலும்கண்குறிகளாலும் கைச்சாடைகளாலும் அனுப்பி உட்கலப்பெய்துகின்றனர். அவள் ஏழாம் மாடிமேல் நின்றாலும், இவன் முச்சந்திப் புழுதியில் இருந்தாலும், கண்பார்வையாலும் உதட்டு மடிப்புகளாலும் காதல் தந்தி பறந்துபோகிறது; கையும் சேர்ந்துவிட்டால், தந்தியின் வேகத்திற்குக்கேட்க வேண்டியதில்லை! இப்படி இயல்பாக நமது மனித வாழ்வில், ஏன் விலங்கு வாழ்விலே கூட, அபிநய பாஷைதான் முதன்மையாக உணர்ச்சியறியும்சாதனமாயிருக்கிறதுஉலகெங்கும்வாழ்வை இயக்கும் இந்த அபிநய பாஷையை உலகெங்கும், உலகில் உள்ள எல்லா நாட்டினரும் போற்றி வளர்க்கின்றனர். ஒவ்வொரு நாட்டினரும் நாட்டியக்கலையில் அளவற்றஉற்சாகங்கொண்டிருக்கிறார்கள். மனிதவாழ்வின் இன்பச் சிகரத்தில் இவரை போல சில நாட்டியக் கலைவாணிகள்*
••••
*வாழிபரகாலன் வாழிகலிகன்றி*
*வாழிகுறையலூர் வாழ்வேந்தன்*
*வாழியரோ மாயோனை வாழ்வலியால் மந்திரங்கொள்* 
*மங்கையர்கோன் நூயோன் சுடர்மானவேல்*%.
•••
மங்களாசாஸனம் -

பெரியாழ்வார் - 71

திருமழிசையாழ்வார் - 813

திருமங்கையாழ்வார் - 1005, 1399, 1470, 1788-1807, 2065, 2674 (114)

நம்மாழ்வார் - 2782, 2986, 3161-71

மொத்தம் 40 பாசுரங்கள்.

#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
5-10-2023.

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...