Sunday, October 29, 2023

#*இன்றைய அரசியல்….* '*வலியின்றி வரலாறில்லை*'

#*இன்றைய அரசியல்….*
'*வலியின்றி வரலாறில்லை*'
—————————————
*என் கோபம் எல்லாம் உனக்கு
திமிராகத் தான் தெரியும்..
ஆனால் உனக்கு
தெரிவதில்லை
அது வேதனையின்
வெளிப்பாடு என்று*…….

தேசபக்தி குறித்து 1894 ல் டால்ஸ்டாய் கூறியது,

"எளிமையான, தெளிவான ஐயத்துக்கிடமற்ற அர்த்தத்தில் தேசபக்தி என்பது ஆட்சியாளர்கள் தங்கள் ஆவல்களையும் ,பேராசைமிக்க இச்சைகளையும் நிறைவேற்றிக் கொள்வதற்கான ஒரு வழி,ஆளப்படுபவர்களுக்கு மனித மேன்மை , பகுத்தறிவு, உணர்வு இவற்றைத் துறந்து அதிகாரத்தில் உள்ளவர்களிடம் அடிமைத்தனத்துடன்  கூடிய மயக்கத்திலிருத்தல் ஆகும்."

இன்றைய அரசியல் கட்சிகள் மிக தெளிவாக ஒரு முடிவுக்கு வந்துவிட்டார்கள். குறிப்பாக தகவல் தொழில்நுட்ப மின்னணு காலத்தில் ஐ டிவிங் என்று சொல்லக்கூடிய தொழில்நுட்ப வல்லுநர்களுடன் ஒரு கூட்டணியை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் இந்த தலைவர்களுக்கு  எவ்வித சிறப்புகள் இல்லை  என்றாலும்  பிம்பமாக கட்டி பொது வெளியில் சிறப்பாக காட்டிக் கொள்ளவும்,குறிப்பிட்ட செய்தி-மீடியா வெளிச்சம் கிடைப்பதற்கான எல்லா தந்திர உபயங்களையும் கையாளுகிறார்கள் அவர்களுக்கு தேவையான பணமும் அதற்கு அளிக்கப்பட்டு வருகிறது. விடையறிந்திடவே இயலாத, புரியாத புதிராக  இந்த சிலரின் பொது வாழ்க்கை...!

முதல்வர்களோ மந்திரிகளோ கட்சி தலைவர்களோ நாடாளுமன்ற உறுப்பினர்களோ எப்போதும் சுறுசுறுப்புபாக ஊர்ஊராக அலைந்து மக்கள் நலத்திட்டங்களிலேயே எந்நேரமும் சிறப்பாக அவர்களின் இதய சுத்தி யோடு ஈடுபட்டுக் கொண்டிருப்பது மாதிரி இந்த ஊடகங்கள் உண்மையில் அவர்கள் தூங்கிக் கொண்டிருக்கும் போது கூட ஒலி மற்றும் ஒளிபரப்புகின்றன.

காலையிலிருந்து கட்சிப் பணி ஆட்சிப் பணி என்று மக்களின் முன்பாக இந்த தலைவர்களின் முகத்தை திரும்பத் திரும்பத் திரும்பதிரும்பகாட்டிக்கொண்டிருக்கிறார்
கள்.கொள்கையோ வாக்குறுதிகளோ எல்லாம் காற்றில் பறக்க விடப்பட்டு விட்டன. அதெல்லாம் இனி இந்த தலைவர்களுக்கு தேவையில்லை!மேடைகள் விழாக்கள் பரிசுகள் அன்பளிப்புகள் என்று ஒரு திருவிழா கோலத்தை இந்த வீடியோக்கள் மீண்டும் மீண்டும் மக்களின் முன்பு பலமுறை ஒரு தடவை எடுத்த காட்சியை பலமுறை போட்டு போட்டுக் காட்டுகிறார்கள்

அதுபோக இந்த ஐடி விங் காரர்கள் மொத்த ஊடகத்தையும் கையில் எடுத்து தான்ஆதரிக்கும்  தலைவர்களுக்கு எதிராகப் பேசுபவர்களை இவர்களே உருவாக்கி ஆதரவாகப் பேசுபவர்களை எதிரே அமர வைத்து மோத வைத்து அவர்களை  ஒரு விவாத பொருளாகவே எப்பொழுதும் லைம் லைட்டில் வைப்பதில் விற்பன்னர்கள் .இந்த ஐடி விங் காரர்கள்   செயல்படாத அரசாங்கத்தை கூட தீவிரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறஒருஅரசாங்கமாகக்காட்டு
வதில் கைதேர்ந்தவர்கள்.

தலைவர்களும் கட்சிக்காரர்களும் அவர்களைக் காட்டிலும் மிகத் தெளிவானவர்கள். தேர்தலில் மக்களுக்கு பணம் கொடுத்து விட்டால் வாக்கு கிடைத்து விடும் என்று தெளிவாக புரிந்து வைத்திருக்கிறார்கள்.

ஒரு பக்கம் ஊடக வெளிச்சம் இன்னொரு பக்கம் பணம் செல்வாக்கு இது இரண்டும் இருந்தால் இன்று ஒருவர் அரசாங்கத்தை பிடித்து விடலாம் என்கிற அளவில் இந்த அவலமான போக்கு தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஒரு பெரும் கோடீஸ்வர கட்சி என்பதை தவிர என்ன கொள்கையை அது இனி மக்களிடம் சொல்லி அவர்களை ஏமாற்ற பார்க்கிறது ஒரு திட்டமும் நிறைவேறவில்லை கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தும் பொய்யாய் போய்விட்டது போய்விட்டது. இலவச ஏமாற்று வேலைகளில் தமிழர்கள் இனம் புரியாது குழம்பி கிடக்கிறார்கள்.  ஒரு கம்பெனி விளம்பரங்கள் மாதிரி   இந்த கட்சி சென்னை சில்க்ஸ் மற்றும் நகர்ப்புற அல்சாமால்களில் குடி கொண்டு விட்டது. எல்லாம்  விளம்பரம் தான். வியாபார பொருள்கள் Pears, lux  soapகள் Horlics என விளம்பரங்கள் தொலைகாட்சி, ஏடுகள் வருவது போல அரசியல் வியாபாரா சர்க்கு ஆகி விட்டது. கட்சிகளின் அரசியல் இன்று இப்படி மடை மாறிவிட்டது.

தனக்கான  செய்தியாளர்கள்,வெறும் பிம்ப ஊடக அரசியல் தொழில்நுட்ப வாதிகளை வைத்துக்கொண்டு அவர்களை நம்பி மட்டும் இனிமேல்  கொண்டு செலுத்த முடியாது அவை மாறும் எதார்த்தங்களாலும் மாறி மாறி ஆட்டம் போடும் மூலதன விளையாட்டுகளால் ஒரு பின்ன நவீன முறையில் மூலதனத்தில் விளையாடும் ஒரு பொம்மை அமைப்புகள்! அதை நம்பி தன் கொள்கைகளை  அது இருந்தால் அல்லது அது இருக்கிறதாக நம்பிக் கொண்டால் கூட மக்களிடம் கொண்டு போய் அதனை சேர்ப்பதில் தத்துவம் ஏதுமில்லை வெறும் பணம் மட்டும் தான் இறுதியில் உங்களிடம் இருக்கிறது.

உண்மை ஒரு எட்டு எடுத்து வைப்பதற்குள் பொய் உலகைச் சுற்றி வந்துவிடும் என்பார்கள் வேறு வழியில்லை மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.ஊடகங்கள் எல்லாம் வெறும் நாடகங்கள் என்கிற உண்மை புரிதல் வேண்டும் அரசாங்கமும் என்பதே வியாபாரமாக ஆகிவிட்டது. தொலைகாட்சிகள், செய்திதாட்கள் நடு நிலை, அறத்தை தவறி விட்டது. இவை கட்சி, சாதி சார்பாக சென்று விட்டது. உண்மையில், நல்ல கள நேர்மையாளர்களுக்கு மற்றவர்களின் அங்கீகாரம் ஒருவருக்கு தரும் அந்த மன நிறைவான சந்தோஷம்.அதற்கு ஈடு இணை, 
இந்த அகில உலகத்தில் வேறு எதுவும்  இல்லை என்பதை எவருக்கு அக்கறை இல்லை. போலி பாசாங்கு செயவர்களை உயர்த்தி செய்திகளாக வரும்.

நீங்கி நிரைதலே நிதர்சன வாழ்க்கையின் நிலையான தத்துவம் ....நீங்கலை நிதானித்தால் நிலைத்திறுப்பது அர்த்தமற்ற வேடிக்கை நிலைப்பில் மயக்கம் என்றால் அது தீராத வேட்கை நிலைப்பது நிஜமா? நீங்குதல் நிஜமா? நிஜமே இங்கே நிஜம் இல்லை பொய் என்று உரைப்பதில் பொருளும் இல்லை. மாயை எல்லாம். நல்லவர்கள், நற்பணிகள் மதிப்பற்றது இங்கு….ஏன் என்றால் 
பாசாங்கு கூட்டம்.

ஒரு காலத்தில் இந்திராவே இந்தியா என்று முழக்கமிட்ட அலைவரிசை மிக மோசமான முறையில் முடிந்துவிட்டது! அதேபோல்  குடும்பம் தான் அரசியல் என்கிற வரலாறும் சிதையும் போது உங்களுடன் இந்த ஐடி விங், இன்று தூக்கி பிடிக்கும் சில செய்தியாளார்கள, உங்கள் காலை வணங்கியவர்கள்  யாரும்  உடன்வர மாட்டார்கள்! அவர்கள் உண்மையில் தங்கள் சுய லாபங்களுக்காக அப்போதும் உங்களைக் கைவிடுவார்கள். அதைக் காப்பாற்ற மாற்றுக் கட்சிகளுக்கு இடம்பெயர்வார்கள்! ஏனெனில் அவர்கள் தங்களுடைய உடைமைகளை பாதுகாக்கவே திரும்புவார்கள்! பலவற்றைகாலம்  உண்டாக்கும் .அப்போது விசாரணைக்குள்  வருவீர்கள். கவலைகள் சலனங்கள் தொடங்கும். எனவே இயக்க நெறி கொள்கைகள் மட்டுமே கை கொடுக்கும்.

••••
தெளிவின்கண் ஆற்றும் 
      திறன்வழி ஆக்கம்
களித்திடும் வாழ்க்கையின் 
      காப்பு.
-Vanathi Chandharasekaran
வானதி சந்திரசேகரன் #குறள்_வெண்பா
••••
இவ்வளவு பின்னடைவுக்குள்ளான காலத்துல ஒரு நல்ல தலைமை என்ன செய்யணும்னா, எங்கேயாவது ஏதாவது கிடைக்குமான்னு இடைவிடாது தேடணும். கொஞ்சமே கொஞ்சம் ஒத்து வருகிற மாதிரியான ஆளுங்க யார் கிடைச்சாலும் அவங்ககிட்டப் போய் உட்காரணும்.விவாதிக்கனும்… செயல் படனும்….. '#வலியின்றி_வரலாறில்லை
•••••
புதிய மாதவி வரிகள்…
மறதியும் கூட
நம்மை 
மீண்டும் அப்படியே
பார்க்க துடிக்கிறது.
...
அப்படியே இருப்பது
எப்படி!?
தயங்குகிறாய்.
ஏ.. என் செல்ல முட்டாளே..
ஒரு முறை
அப்படியே வந்து
நடித்துவிட்டுப் போ.
இப்போதெல்லாம்
ஒப்பனைகள்
பழகிவிட்டது.
நடித்து நடித்து
நம் நிஜங்கள்
மறந்தும் போனது.
நடித்தாவது
அதை மீட்டெடுப்போமா
-@pudhiyamadhavi

கே.எஸ். இராதாகிருஷ்ணன்.
#கேஎஸ்ஆர்போஸட்
#ksrpost
29-10-2023.


No comments:

Post a Comment

*Live in joy. Life goes by in the blink of an eye*

*Live in joy. Life goes by in the blink of an eye*. Don't live in upset, angry  or ungrateful. Look for the good, you'll find it. Ch...