Tuesday, October 17, 2023

#இன்றைய முதல்வர் ஸ்டாலின் அவர்களின் நினைவுக்கு…..

#இன்றைய முதல்வர்ஸ்டாலின்அவர்களின்
நினைவுக்கு…..
—————————————————————-
கடந்த 1988களில் (13-19 March 1988)சண்டே ஆங்கில ஏட்டில் திமுக வாரிசு அரசியல- ஸ்டாலின் குறித்து  மிக மோசமாக  விமர்சனம் கட்டுரை வெளிவந்தது.






























அச்சமயம்  உடனே அண்ணன் முரசொலி மாறன் என்னை அழைத்து அதற்கு தக்க பதிலாக விட்டுக் கொடுக்காமல் எழுதுங்கள்   என்றும் பணித்தார் . 



அன்று,இன்றைக்கு மூத்த அமைச்சர்கள் இருக்கும்நேரு,பொன்முடி,பெரியசாமி,எ.வ.வேலு, எம்.ஆர்.கே பன்னீர்செல்வம்,  கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன், சேகர் பாபு  வரை அன்று  இவர்கள் எங்கு இருந்தார்கள் என யாருக்கும் தெரியாது.   துரைமுருகன் மட்டும் இருந்தார். அப்போது அவர் அமைச்சர் ஆக வில்லை. திமுக சட்ட மன்ற உறுப்பினர். 1989 இல் துரைமுருகன் அமைச்சர் ஆகிறார். 









எ.வ.வேலு(நடிகர் பாக்கியராஜ் இயக்கத்தில் இருந்தார்) கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன்அதிமுக-ஜெ அணி).

அதே போல அதிகாரிகள், உதவியாளர்கள்
ஆட்சி உள்ளவரை பாசாங்கு வேடங்கள் இருக்கும்.

அன்று,  34 ஆண்டுகளுக்கு முன்இன்றைய முதல்வர் ஸ்டாலின் வாரிசு அரசியலுக்கு முட்டு  கொடுத்து எழுத தேவைப்பட்டேன்.இதற்கு கலைஞர் அன்று என கைகளை குலுக்கி பாராட்டினார். 

இதே திமுக வாரிசு அரசியல் குறித்து தினமணியில்;
பின் 2001 காலகட்டத்தில் வந்த மூத்த பத்திரிகையாளர் ஜே. வி. கண்ணன் கட்டுரைக்கு
மறுநாளே பதில் கட்டுரை தினமணியில் வர 
வேண்டும் என கலைஞர் என்னிடம் கூறினார்.
கலைஞர் விரும்பியபடி மறு நாளே வெளிவந்தை அன்று காலை 5.30 கலைஞர்
கைபேசியில் என்னை தனது மகிழ்ச்சியை சொன்னார். அன்று திருச்சில் இருந்த ஸ்டாலின் கைபேசியில்  அழைத்து தனது நன்றியை  என்னிடம் சொன்னார்…பின அந்த 
வேளை கடந்த விட்டால் இந்த நன்றியற்ற பணிகள் அவர்களுக்கு மறந்து விடும். இது அவர்கள் குடும்ப வடிக்கை

இப்பொழுதும் நான் திமுகவில் இல்லை..

ஒருவரின் உண்மையான பயன் தெரிய வேண்டும். அதை தாங்கள் பெற்றதை நினைக்கவேண்டும்.அதற்கு நயத்தக்க நாகரிகங்கள் வேண்டும்.
ஒட்டுண்ணிகளுடனான உறவு நீண்ட நாள் நீடிக்காது.

#திமுக
#DMK 

 #திமுகவாரிசுஅரசியல_ஸ்டாலின்

கே எஸ் இராதாகிருஷ்ணன்
#ksrpost
#கே௭ஸ்ஆர்போஸட்
17-10-2023.


No comments:

Post a Comment