Thursday, August 15, 2024

காவேரிப் புது நீர்க்கடுவரல் வாய்த்தலை..❤️

 காவேரிப் புது நீர்க்கடுவரல் வாய்த்தலை..❤️


திங்கள் மாலை வெண்குடையான்

சென்னி செங்கோல் அது ஓச்சி

கங்கை தன்னைப் புணர்ந்தாலும்

புலவாய் வாழி காவேரி !

புலவாய் வாழி காவேரி !


கங்கை தன்னைப் புணர்ந்தாலும்

புலவாதொழிதல் கயற்கண்ணாய் !

மங்கை மாதர் பெருங்கற்பென்று

அறிந்தேன் வாழி காவேரி !


மன்னும் மாலை வெண்குடையான்

வளையாச் செங்கோல் அது ஓச்சி

கன்னி தன்னைப் புணர்ந்தாலும்

புலவாய் வாழி காவேரி !

புலவாய் வாழி காவேரி !


கன்னி தன்னைப் புணர்ந்தாலும்

புலவாதொழிதல் கயற்கண்ணாய் !

மன்னும் மாதர் பெருங்கற்பென்று

அறிந்தேன் வாழி காவேரி !


உழவர் ஓதை மதகோதை

உடை நீர் ஓதை தண்பதம் கொள்

விழவர் ஓதை திறந்தார்ப்ப

நடந்தாய் வாழி காவேரி !

நடந்தாய் வாழி காவேரி !


விழவர் ஓதை திறந்தார்ப்ப

நடந்ததெல்லாம் வாய்காவா

மழவர் ஓதை வளவன் தன்

வளனே வாழி காவேரி !

•••


தலைக்காவேரி முதல் கழிமுகப்பகுதியான பூம்புகார் வரையிலான காவேரி பாசனப்பகுதியொட்டிய வழியாலான தமிழின் முதல் பயணக் கட்டுரை நூல்தான் சிட்டி மற்றும் தி.ஜானகிராமன் எழுதிய "நடந்தாய் வாழி, காவேரி" புத்தகம்.


குடகு மலையில் காவேரி உற்பத்தியாகின்ற தலைக்காவிரியில் தொடங்கி ஒகேனக்கல் வரையிலான ஒரு நீண்ட பயணமும் பின் தென்கரை வழியாக பூம்புகாரிலிருந்து மேட்டூர் அங்கிருந்து வடகரை வழியாக மீண்டும் பூம்புகார் என மற்றொரு பயணமும் மேற்கொண்டு அந்த பயண அனுபவங்களினூடாக எழுப்பட்டிருக்கிறது.


முதல் பாதியில் முழுமையாக ஒரு பயண அனுபவத்தைத் தருகிற இந்நூல் இரண்டாம் பாதியில் நூலின் தன்மையை விட்டு விலகி நின்று சில விசயங்களை பேசுகிறது.


திருச்சிக்கு பிறகான  காவேரியை  பேசும்போது அங்கு அதன் வளத்துடன் சேர்த்து கலை, இலக்கியம், இசை, பொருளாதாரம், அரசியல், சமயம் என பல்வேறு விசயங்களை குறிப்பிடாமல் நகர முடியாது என்பது உண்மைதான்.


அதனால்தான் கங்கையில் எவ்வளவு கழிவுநீர் கலந்தாலும் அதை சுத்திகரிக்கின்ற பாக்டீரியாக்கள் கங்கை நதியில் இயற்கையாகவே இருக்கிறது,


இருந்தாலும் தமிழில் இதுபோன்ற பயணக் கட்டுரை நூல்கள் குறைவாகவே வெளிவந்திருக்கின்றன என்பதால் இந்த முயற்சி தமிழ் இலக்கிய சூழலில் வரவேற்கத்தக்கது. அதுவும் இந்த நூல் 1971ம் ஆண்டு வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


கோபாலய்யர்‌ என்பவர் ஆன்மீக நோக்கில் எழுதிய "காவேரி ரகசியம்" என்ற நூலை வழிகாட்டியாகக் கொண்டு குடகிலிருந்து பூம்புகார் வரை பயணித்து எழுதியிருப்பதால் என்னவோ இந்த நூலிலும் ஆன்மீக தகவல்களே நிறைந்துள்ளன.


படிப்பதற்கேற்ற உரைநடையாக இருந்தாலும் முழு வனப்பையும் கண்டு அதன் பேராற்றலை அறிந்து கொள்ள இந்த தென்மேற்கு பருவமழை காலம்தான் சரியான காலகட்டம். தலைக்காவிரி முதல் பூம்புகார் வரை செல்ல வேண்டும் என்கிற நீண்ட நாட்கள் பயண வேட்கையை தீர்த்து கொள்ள இதுவே சரியான நேரம்.


#கேஎஸ்ஆர்போஸட் 

#ksrpost

25-7-2024.



No comments:

Post a Comment

8 september

உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்