Thursday, August 15, 2024

#மதுரை மேலமாசி வீதியில் எண்பதுகளில்கூடச் செயல்பட்ட சாந்தி

 #மதுரை மேலமாசி வீதியில் எண்பதுகளில்கூடச் செயல்பட்ட சாந்தி திரையரங்கின் பூர்வீகப் பெயர் 'பூர்வீக பெயர் பழநி பிறகு சாந்திராவாகி பின் சாந்தியாக மாறியது. #சந்திராடாக்கீஸ்', சந்திரா டாக்கீஸ், சனி ஞாயிறு காலைகளில்  இந்தி ஆங்கில படங்கள் குறைந்த கட்டணங்களில் போடுவார்கள் அது பல்வேறு நாடகக் கம்பெனிகள் மாதக்கணக்கில் நாடகம் போடும் இடமாக இருந்துள்ளது. நவாப் ராஜமாணிக்கம், டி.கே.எஸ். சகோதரர்கள், கண்ணையா போன்ற நாடகக்குழுக்களின் நாடகங்களைக் கண்டுகளிக்குமிடமாக விளங்கிய பெரிய நாடகக் கொட்டகை எனப் பொதுமக்களால் அழைக்கப்பெற்ற சந்திரா டாக்கீஸ், இன்று பெரிய கார் நிறுத்துமிடமாக மாற்றப்பட்டுவிட்டது. வெளியே நின்று அந்தக் கட்டடத்தைப் பார்க்கும்போது, ஏதோ நடந்து முடிந்ததன் சாட்சியாக நிற்கிறது.



No comments:

Post a Comment

8 september

உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்