Thursday, August 15, 2024

நாட்டுப்புறப் பழமொழிகளும் மூலிகை மருத்துவமும்

 நாட்டுப்புறப்  பழமொழிகளும்   மூலிகை    மருத்துவமும் 

------------------------------



நாட்டுப்புற    மக்கள்  கூறும்    பழமொழிகளிலும்   மருத்துவக் கூறுகள் அமைந்துள்ளமையை அறிய முடிகிறது! 


 மருந்துச்  செடிகளைப்   பற்றிய   பழமொழிகள் :


'மாதுளை தூதுளை வளர்த்த வீடு வயிற்றிலே  நெஞ்சிலே களங்கமில்லை'


' கொடி முல்லை நாலும் கபத்தை அறுக்கும் '

(தூதுவளை இரண்டு, ஆதொண்டை,  கழற்சி) 


' பீதரோகிணி பேரையுரைத்திடில்  காதவழி கண்தெரியும் '


' விடாச்சுரத்துக்கு  விஷ்ணுக்கரந்தை '


'நன்னாரி விரும்பப் பொன்னாகும் மேனி '


' புக்கடைப் பச்சிலை மருந்துக்குதவாது '


 மூலிகை  மருந்து  முறைகளைக்  கூறும் பழமொழிகள் :

-----------------------------


' இஞ்சிச்  சுரதம் சளிபோக்கும் '


' ஆற்றுநீர் வாதம் போக்கும் 

அருவி நீர் பித்தம் போக்கும் 

சோற்றுநீர்  இரண்டும் போக்கும் '


' வேலம்  பட்டை  பித்தத்தைப் போக்கும் 

ஆலம்பட்டை மேகத்தைப்  போக்கும் '


' வேப்பெண்ணெய் ஆபத்துக்கு உதவும் ' 


நோய்களை பற்றிக் கூறும் பழமொழிகள் :

----------------------------


' தின்ற மண்ணுக்குக் தக்க சோகை '


' துக்கத்தைச் சொல்லி ஆற்ற வேண்டும் 

கட்டியைக் கீறி ஆற்ற வேண்டும் '


' சாப்பிணி மருந்தேற்காது ' 


இவ்வாறு பழமொழிகள் மருந்துத்தைவப்  புலப்படுத்துகின்றன.  நாட்டுப்புற மக்கள்  தங்களுடைய   மருந்துவத்தை   வாய்மொழியாகவே  வெளிப்படுத்தி வந்துள்ளமையையும்   உணர முடிகிறது.

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...