நாட்டுப்புறப் பழமொழிகளும் மூலிகை மருத்துவமும்
------------------------------
நாட்டுப்புற மக்கள் கூறும் பழமொழிகளிலும் மருத்துவக் கூறுகள் அமைந்துள்ளமையை அறிய முடிகிறது!
மருந்துச் செடிகளைப் பற்றிய பழமொழிகள் :
'மாதுளை தூதுளை வளர்த்த வீடு வயிற்றிலே நெஞ்சிலே களங்கமில்லை'
' கொடி முல்லை நாலும் கபத்தை அறுக்கும் '
(தூதுவளை இரண்டு, ஆதொண்டை, கழற்சி)
' பீதரோகிணி பேரையுரைத்திடில் காதவழி கண்தெரியும் '
' விடாச்சுரத்துக்கு விஷ்ணுக்கரந்தை '
'நன்னாரி விரும்பப் பொன்னாகும் மேனி '
' புக்கடைப் பச்சிலை மருந்துக்குதவாது '
மூலிகை மருந்து முறைகளைக் கூறும் பழமொழிகள் :
-----------------------------
' இஞ்சிச் சுரதம் சளிபோக்கும் '
' ஆற்றுநீர் வாதம் போக்கும்
அருவி நீர் பித்தம் போக்கும்
சோற்றுநீர் இரண்டும் போக்கும் '
' வேலம் பட்டை பித்தத்தைப் போக்கும்
ஆலம்பட்டை மேகத்தைப் போக்கும் '
' வேப்பெண்ணெய் ஆபத்துக்கு உதவும் '
நோய்களை பற்றிக் கூறும் பழமொழிகள் :
----------------------------
' தின்ற மண்ணுக்குக் தக்க சோகை '
' துக்கத்தைச் சொல்லி ஆற்ற வேண்டும்
கட்டியைக் கீறி ஆற்ற வேண்டும் '
' சாப்பிணி மருந்தேற்காது '
இவ்வாறு பழமொழிகள் மருந்துத்தைவப் புலப்படுத்துகின்றன. நாட்டுப்புற மக்கள் தங்களுடைய மருந்துவத்தை வாய்மொழியாகவே வெளிப்படுத்தி வந்துள்ளமையையும் உணர முடிகிறது.
No comments:
Post a Comment