————————————————————-
தமிழ்நாட்டில் உள்ள நீர்நிலைகளை பாதுகாக்க, அந்ந நீர் நிலைகளை உள்ளூர் மக்களின் பங்களிப்புடன் ஆயக்கட்டு,.
பாசனப் பரப்பு-ஆறு அல்லது அணை போன்ற நீர்நிலைகளின் துணை கொண்டு பாசனம் செய்யப்படும் வேளாண் நிலப்பகுதி யை கவனிக்க, பொது மராமரத்து பணிகள் என….. சீர் செய்ய, நடுவன் ஆயம்(ombudsmen) அரசு் அமைக்கவும், அதன் மூலம் நீர்நிலைகளை நிர்வாகம் செய்யவும் உத்திரவு இட வேண்டி சென்னை உயர்தநீதி மன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்தேன். அந்த வழக்கானது என் ரிட் மனு எண்.30863/2023 மாண்பமை தலைமை நீதிபதி தலைமை எஸ்.வி.கங்காபூர்வாலா,
நீதிபதி பரதசக்கரவர்த்தி்அடங்கிய டிவிஷன் பென்ஞ்ச் முன்பு விசாரனைக்கு இன்று (31-10-2023)வந்தது. மூத்த வழக்கறிஞர் திரு. அரவிந்த பாண்டியனும் மற்றும் வழக்கறிஞர்கள் எ.பி.பசுபதி, வருன் ஆஜர் ஆயினர். அரசானது 2002ம் ஆண்டு வெளியிடப்பட்ட ஓர் அரசானையின் மூலம் மாவட்ட ஆட்சியர் தலைமையிலான குழு, தலைமைச் செயலர் தலைமையில் வழிகாட்டு குழு நீர்நிலைகளை பராமரிக்க அமைக்கப்பட்டுள்ளது என்றது. ஆனால் அக்குழுவின் பணிகள் என்ன, என்ன நடவடிக்கைகள் இதுவரை எடுக்கப்பட்டுள்ளது என தகவல் இல்லை என எனது வழக்கறிஞர்கள் வாதிட்டனர். ஆகவே, மாண்பமை சென்னை உயர்நீதி மன்றம் மேற்படி குழுவினரால் இதுவரை பெறப்பட்ட புகார்கள் என்ன, அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்ற ஓர் விரிவான நிலைமையை விளக்கும் அறிக்கையை அளிக்க உத்தரவிட்டு வழக்கை ஓத்திவைத்துள்ளது. எனது இந்த மனுவை ஏற்று தமிழக அரசுக்கு இது குறித்து தாக்கீதும் அனுப்ப உத்தரவுவிட்டுள்ளது.
எனது வழக்கிற்கு ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி. எச்.அரவிந்த பாண்டியன் அவர்கள் "சரி நீங்கள் (தமிழக அரசு) தமிழ்நாட்டில் உள்ள நீர்நிலைகளை பாதுகாக்க, அந்ந நீர் நிலைகளை உள்ளூர் மக்களின் பங்களிப்புடன் எந்த வகையில் எப்படி எதையெல்லாம் சரி செய்து வைத்திருக்கிறீர்கள் என்பதை விவரமாக சொல்லுங்கள்."
நமது உண்மையான கவலையும் வைத்திருச்சலும் என்னவென்றால் 1947 இல் சுதந்திரம் பெற்ற பிறகு தமிழ்நாட்டில் 65,000 ஏரிகள், குளம், குட்டைகள் பாசனங்கள் (இலைஞ்சி, பண்ணை, ஏல்வை, குண்டம், அலந்தை, பொய்கை, வலயம், சுனை, சிறை, பட்டம், உடுவை, பயம்பு, படுகர், குட்டம், தாங்கல், கோட்டகம், ஏரி, உவளகம், மடு, ஓடை, படு, தடம், வாவி, தடாகம், ஆவி, சூழி, கிடங்கு, சலதரம், கேணி, பணை, கயம், பல்வலம், நளினி, இலந்தை, மூழி, குழி, குளம்.) என்று நிரம்பி தழும்பி கொண்டிருந்த தமிழ்நாட்டில் இன்றைக்கு சரி பாதியாக 30,000 மட்டும் எஞ்சியுள்ளன.எல்லாவற்றையும் இழுத்து மூடி மண்ணை போட்டு அவரவர்கள் தொழிற்சாலைகளையும் கல்விக்கூடங்களையும் வீடுகளையும் கட்டிவிட்டு அதன் மூலம் பொருளீட்டி அனுபவித்து கொண்டிருக்கும் வேளையில் மீதம் வெறும் முப்பதாயிரம் குளம் குட்டைகள் தான் இன்று மானாவாரி விவசாயத்திற்கு நன்செய் பாசன விவசாயத்திற்கும் மிஞ்சி இருக்கிறது என்பதை மீண்டும் நீதிமன்றத்தில் தெளிவான வழக்காக முன் வைக்கிறோம். இன்னைக்கு தமிழ்நாடு முழுக்க உள்ள விவசாயிகள் இந்த பிரச்சனையை மீண்டும் பேசத் தொடங்கியுள்ளார்கள் என்பதை எச்சரிக்கையாக்கி இந்த வழக்கு மேலும் தொடர்ந்து நீதிமன்றத்தில் நீடிப்பதை இந்தப் பதிவில் சொல்லிக் கொள்கிறேன்.
நியாயமும் தர்மமும் சரியாகத்தான் நிறைவேறும் என்பதற்கு மக்கள் இன்றைய அரசாங்கங்களை விட நீதிமன்றங்களை தான் அதிகம் நம்புகிறார்கள். ஆகவே இந்த குளம் குட்டைகளை அபகரித்திருப்பவர்கள் காவிரி நதிநீர் தாவாவிற்கு வெற்று விளக்கங்களைக் காகிதத்தில் எழுதிக் காட்டிக் கொண்டிருக்காமல் அல்லது வெறும் வாயில் சொல்லிக் கொண்டிருக்காமல் தமிழ்நாட்டின் உரிமையான குடிநீருக்கும் விவசாயத்திற்கும் வேண்டியதை மக்களுடனும் விவசாயிகளுடன் இணைந்து போராடிப் பெற வேண்டும்.அதுவே அவசியம் என்பதற்காக தான் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது என்பதை நினைவூட்டுகிறேன். வெறும் மாநில முதலமைச்சர்களின் நட்பும் கேளிக்கையும் அல்ல இது.
வாழ்வாதார உயிராதாரப் பிரச்சனையில் மெத்தனமும் அறிவற்ற அலட்சியத்தையும் காட்டினால் இந்த வழக்கு மேலும் தீவிரமாகும் என்பது திண்ணம்.
#தமிழ்நாட்டில்_உள்ள_நீர்நிலைகள்…..
#இவை65000_ஏரிகள்_குளம்_குட்டைகள்_பாசனங்கள்_எங்கே? #பாதுகாக்க_வழக்கு….
#ஆயக்கட்டு_பொதுமராமரத்து
கே.எஸ். இராதாகிருஷ்ணன்.
#கேஎஸ்ஆர்போஸட்
#ksrpost
31-10-2023.