Tuesday, October 17, 2023

#*பிரமிளா தன்டவதே* *திமுகமகளிர் உரிமைமாநாட்டில் பெரிதாக நினைவு கூறவில்லையே*…. *பிரமிளா தன்டவதே 33 சதவீதம் மகளிர் இட ஒதுக்கீடு சட்டம் வேண்டும் முதலில் முன் எடுத்தவர்*.

#*பிரமிளா தன்டவதே* *திமுகமகளிர் உரிமைமாநாட்டில் பெரிதாக நினைவு கூறவில்லையே*….
*பிரமிளா தன்டவதே  33 சதவீதம் மகளிர் இட ஒதுக்கீடு சட்டம் வேண்டும் முதலில் முன் எடுத்தவர்*.
—————————————
பிரமிளா தன்டவதே  (Pramila Dandavate) முன்னாள்  நாடாளுமன்ற உறுப்பினர், (பிரஜா சோசிலிஸ்ட் கட்சி  பின் ஜனதா கட்சி) 33 சதவீதம் மகளிர் இட ஒதுக்கீடு சட்டம்  வர வேண்டும் முதலில் முன் எடுத்தவர். இவரை பற்றி யாரும்  நடைபெற்ற திமுக மகளிர் உரிமை மாநாட்டில் பெரிதாக நினைவு கூற வில்லையே…ஆம்..அதுதான் இந்திய பெண் வாரிசு அரசியல் மாநாடாகதான் நடத்தினர் கனிமொழி. இவர் பிரமிளா தன்டவதே மற்றும் அவருடைய பணிகள் அறிந்திருக்கமாட்டார். எல்லோரும்



கலைஞர் ஆக முடியாது, அல்லவா.. கலைஞரின் குடும்ப வாரிசுகள் ஆக இருக்கும் நிலையில் இவர்களுக்கு பதவிகள்…அவ்வளதான். 

இவரின் கணவர்தான் மது தன்டவதே மகாராட்டிர மாநிலம் அமைவதற்குப் போராடிய சம்யுக்தா மகாராட்டிர இயக்கத்தில் ஈடுபட்டார். #பிரஜாசோசிலிஸ்ட் கட்சியின் அனைத்திந்திய இணைச் செயலாளராகவும் ஆனார். நில மீட்பு இயக்கத்தில் இணைந்து செயலாற்றினார். 1942 இல்  நாட்டின விடுதலை போரில் கலந்து கொண்டார். மொரார்சி தேசாய் தலைமையில் ஜனதா அமைச்சரவையில்  ரயில்வே அமைச்சர், வி.பி. சிங் பிரதமராக இருந்தபோது இவர் நிதி அமைச்சர் ஆனார். 1990 இல் திட்டக் குழுவின் தலைவராகப் பொறுப்பேற்றார். இருவரும் எளிமையாக வாழ்க்கையை நடத்தியவர்கள். இறுதி வரை கறுப்பு வெள்ளை தொலைக்காட்சி பெட்டியை பயன் படித்தினார்கள். மறைந்த அண்ணன் இரா. செழியன், கார்நாடக முன்னாள் முதலமைச்சர் ராமகிருஷ்ண ஹெக்டே மூலம்
எனக்கு அறிமுகம். ஈழத்தமிழர் பிரச்சனை குறித்து பேச 1980களில் சந்திப்பது வடிக்கை. ஒரு முறை வேலுப்பிள்ளை பிராபகரன் மற்றும் பாலசிங்கத்தை அழைத்து சென்றதும் உண்டு.

#பிரமிளாதன்டவதே  #மதுதன்டவதே 

#33சதவீதம்மகளிர்_இடஒதுக்கீடு

#கே௭ஸ்ஆர்போஸட்
#ksrpost
17-10-2023.


No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...