Friday, October 20, 2023

#*திமுகஆட்சியில்….* #*மாதம் மும்மாரி மழை பெய்கிறது?!*

#*திமுகஆட்சியில்….*
#*மாதம் மும்மாரி மழை பெய்கிறது?!*—————————————
திமுக ஆட்சிக்கு வந்து இரண்டரை வருடங்கள் ஆகிவிட்டது மதுவிலக்கை கொண்டு வருவோம் என்று  கிராம சபை கூட்டங்கள், பெண்கள் மத்தியில ஸ்டாலின் பேசும் போது  வாக்குறுதி கொடுத்தார்கள்.































கனிமொழி மதுவிலக்கு போராளி என் வேஷத்தை கடந்த 2021 சட்ட மன்ற தேர்தல் வரை கட்டி உலா வந்தார். தேர்தல் 






பின் மதுவிலக்கா? நாங்கள் எங்கே சொன்னோம்? தேர்தல் அறிக்கையில் சொல்லவில்லையே… என பம்மாத்து வேலை



இதுவரை அதன் மீது எந்த நடவடிக்கையும் இல்லை. 

ஒரு வாக்குறுதி  மட்டுமா கொடுத்தார்கள் 500 வாக்குறுதிகளுக்கு மேல் கொடுத்திருக்கிறார்கள். சொன்னதை மட்டுமில்லை, சொல்லாததையும் செய்வோம் என முதல்வர் ஸ்டாலின்  சொன்னார்.ஆனால் இதில் சொன்னதை பலதும் இன்னும் நிறைவேறவில்லை. இம்மாதிரி வாக்குறுதிகளைக் கொடுத்து ஆசை காட்டி மக்களிடம்  பணம் கொடுத்து ஓட்டைப் வாங்கி/பெற்று விட்டு அதை நிறைவேற்றாமல் இருப்பது எந்த வகையில் நியாயம். ஓட்டைப் போட்டு ஓட்டைப் போட்டு ஓட்டை ஏந்தித்தான் தான் திரியவேண்டும். திராவிட மாடல் விடியல் அரசு எனும் விளம்பரங்கள் தமிழ்நாடு முழுக்க பேனர் பேனராக தொங்குகிறது.  தமிழ்நாடு முழுவதும் மது திறந்து விடப்பட்டு ஆறு போல் ஓடுகிறது ஏராளமான இளைஞர்களின் முதற்கொண்டு வயதான முதியவர்கள்  மாதர் வரை குடித்து உடல்நிலையை அழித்துக்கொள்வது மட்டுமல்லாமல் பல வகையிலும் விபத்துகளுக்கும் மதுவே முக்கியமான காரணம் ஆகிறது. இது ஒரு குடும்பத்தின் தாத்பரியத்தை வெகு மோசமாக குலைக்கிறது இதை ஒரு முடிவுக்கு கொண்டு வராவிட்டால் ஏறக்குறைய இன்னும் பத்து வருடங்களில்  பலரும் நோயாளியாகி  மனித வளமே என்பதேஆரோக்கியம் அற்றுப் போய்விடும் என்பதுதான் கவலைக்குரிய விஷயம்.

நாட்டின் பல்வேறு வரவினங்களை ஒழுங்காக செம்மைப்படுத்தி  அதன் மூலம் வளத்தை காப்பாற்ற வேண்டுமே ஒழிய மதுவை திறந்து விட்டு அதன் மூலமாக தான் நாடு சுபிட்சமாக இருக்கிறது என்று சொன்னால்  அறிவும் மானமும் உள்ள யார்தான்ஏற்றுக்கொள்வார்கள். .இதற்கிடையில் அன்றாடம் காய்ச்சிப் பெண்கள் படும் பாடு எழுத்தில் சொல்ல இல்லாத அளவிற்கு வேதனை மிகுந்ததாய் ஆகி விட்டது. ஆங்காங்கே கடன் தொல்லைத்தற்கொலைகள்.

•மணல் கொள்ளை.. இதில் லட்ச கணக்கான கோடிகள்  பணம்  எங்கே ? யாருக்கு செல்கிறது… இங்கு அரசியல் - தேர்தல் தொழில், வியாபாரம்…

•மாணவர்களின் கல்விக் கடனை முழுவதும் அரசை ஏற்கும் என்று சொன்னார்கள் மீண்டும் நடக்கவில்லை.

•அரசு மற்றும் அமைச்சர்களின் ஊழலை தடுக்க அமைப்பதாகச் சொன்ன லோக்ஆயுக்தா குழு என்னவாயிற்று. நல்ல கொள்ளை அடிக்கிறார்கள். பண வேட்டைதான். பணத்தோட்டம்தான்..

•மின்வாரியத்தில் ஒப்பந்த கூலிகளை நிரந்தரமாக்குவோம் என்று சொன்ன வாக்குறுதி என்ன ஆயிற்று

•சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள் அரசு ஊழியராக அறிவிக்கப்படுவார்கள் என்று சொன்ன வாக்குறுதி என்ன ஆயிற்று 

•தமிழகத்தில் 20 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் அதிகமாக உற்பத்தி செய்யப்படும் என்று சொன்ன முயற்சி நடக்கிறதா?

•அரசுத்துறை 3.50 லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும் என்று சொன்னார்கள். வெறும் கண் துடைப்பா?

•அரசு ஊழியர்களுக்கு 
 ரத்து செய்யப்பட்ட பென்ஷன் திட்டம் மீண்டும் அமலுக்கு வரும் என்று சொன்னார்களே ஏன் இன்னும் அது நிறைவேற்றப்படவில்லை? வருடம் இரண்டரை ஆகிவிட்டது!.பழைய பென்ஷன் முறை….?
 
• மின்சார கணக்கு எடுப்பு..

•நீட் உடனே ரத்து.

• மகளிர் உரிமை தொகையில் குழப்பம்.

•தமிழக அரசின் பன் மடங்கு கடன் சிக்கல்

இப்படி பல திட்டங்களைச் செய்யப் போவதாக மக்களுக்கு ஆசை காட்டி ஆட்சிக்கு வந்த பிறகு அதை நிறைவேற்ற முடியவில்லை என்றால் வாக்குறுதிகளை ஏன் கொடுக்கிறார்கள்.? இனிவரும் காலங்களும் இப்படித்தான் தொடருமேயானால் மக்கள் செல்வாக்கு ஒருபோதும் நீடிக்காது

ஆனால் நடந்தது
- பால் விலை உயர்வு
-வீட்டு வரி உயர்வு
-சொத்து வரி உயர்வு
-குடிநீர் கட்டணம் உயரவு
- மின் கட்டண உயர்வு
-முத்திரை தாள் கட்டண உயர்வு

இப்படி பல வகையில் கட்டணம்  உயர்வுகள்…விலை வாசி ஏற்றங்கள்.

சாத்தான்குளத்தில் எதிர் கடசியாக எப்படி
இவர்களின் கூப்பாடுகள் இருந்தன..
அதை விட பல மடங்கு காவல் மரணங்கள், பட்ட பகல் கொலைகள், கொள்ளைகள், சட்ட ஒழங்கு சீர் கேடுகள் என நித்தமும் நடக்கும் பல துயர் சம்பவங்களின்  நீண்ட பட்டியல் உண்டு.

இப்படி திமுக ஆட்சி தொடர்ந்தால் காளமேகப் புலவர் போல இவர்களின் மீது 
தமிழ் மக்கள்  அறம் பாடுவார்கள். ஏற்கனவே
#ஈழத்தமிழர் 2009 இல் பாடி விட்டனர்.

#திமுக_ஆட்சி 
#சொன்னதை_மட்டுமில்லை_சொல்லாததையும்_செய்வோம் 
#DMK

#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
20-10-2023.


No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...