Monday, October 16, 2023

*தமிழகத்தில் கல்விக்கண்ணை திறந்தவர்கள் யார்?* *காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி திமுக மகளிர் உரிமை மாநாட்டில் வரலாறு அறியாமல் பேசியது*…. . *தமிழக காங்கிரஸ் அன்றைய தலைவர்களின் பெயர்கள் கூடவா சோனியாவுக்கு தெரியல*….

#*தமிழகத்தில் கல்விக்கண்ணை திறந்தவர்கள் யார்?*

*காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி திமுக மகளிர் உரிமை மாநாட்டில் வரலாறு அறியாமல் பேசியது*…. .
 *தமிழக காங்கிரஸ் அன்றைய தலைவர்களின் பெயர்கள் கூடவா சோனியாவுக்கு தெரியல*….

*வாழ்க இந்திய -தமிழக அரசியல்*…..
—————————————

தமிழ்நாட்டின் கல்விக் கண்ணைத் திறந்தவர்கள் என்று இன்று யார் எவரையோ  மக்கள்  முன்நிறுத்தி  வரலாறு பற்றி ஒரு எழவும்  தெரியாத பலர் தங்கள் மனம் போன போக்கில் பலவாறாக தவறாக கூறிக்கொண்டுத் திரிகிறார்கள். திரும்பத் திரும்ப அதை சொல்லி இன்றைய சமகாலத்தில் அரசியல்  சுயலாபமடையப் பார்க்கிறார்கள்.உண்மையில் தன்னலமற்று அதற்கு உழைத்தவர்கள் எல்லாம் வரலாற்றில் மறக்கடிக்கப்படுகிறார்கள் என்பதுதான் நிதர்சனம்.




நாட்டின் விடுதலைக்கு பின் அன்றைய முதல் அமைச்சரான சென்னை ராஜதானி (பிரிமியர்) ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் மற்றும் அதற்குப் பிறகு முதல்வரான 
ராஜபாளையம் பி எஸ் குமாரசாமி ராஜா ஆகியோர் காலத்தில் தான் தமிழ்நாட்டின்  (மற்றும் ஆந்திரம் உள்கொண்ட)கிராம்ப்புறம் அனைத்திலும் ஓடு வேய்ந்த காரை மற்றும் கல்கட்டடங்களும்  அவற்றின் முற்றங்களில் காகித பூக்கள் என்று சொல்லக்கூடிய போகன்வில்லா பூச்செடிகளும் நடப்பட்டு   மாணவர் சேர்க்கைக்காக கிராமப்புறங்களில் ஆசிரியர்களே சென்று சிறார்களை  அழைத்து வந்து பள்ளி மைதானத்தில் வைத்து நாட்டுப்பற்று பாடல்களை கீதமாகப் பாடி  அன்றைய பள்ளிகளைத் தொடங்கினார்கள். அப்படியான ஒரு ஆதாரா பள்ளிக்கூடத்தில் படித்தவன்தான் நானும்.

ஏறக்குறைய அக்கால ரயில்வே ஸ்டேஷன்களும் ஓட்டுக் கல் கட்டடங்களோடு இம்மாதிரியாகத்தான் போகன் வில்லாச் செடிகளின் முகப்புகளோடு ரயில் நிலைய அதிகாரிகளுக்கான வீடுகளோடு அங்கே கட்டப்பட்டதை ஞாபக மூட்டுகிறேன்.

இப்படியான பள்ளிக்கூடங்களைக் கட்டுவதற்கான  அமைப்பை தி ட்டமிட்டு ஒருங்கிணைப்பை காந்திய சிந்தனையாளரான ஜே சி குமரப்பா நண்பரான   வெங்கடாசலபதியிடம்  அந்த பொறுப்பு  அன்று ஒப்படைக்கப்பட்டு மேற்சொன்ன இரு காங்கிரஸ் முதல்வர்கள ஆட்சி காலத்தில் செவ்வனே நிறைவேற்றப்பட்டது.

ஏறக்குறைய வடக்கே ஆந்திர எல்லையில் இருந்து தெற்கின் கடை கோடியான கன்னியாகுமரி வடக்கு எல்லை வரை பரவலாக இந்த ஓட்டுப் பள்ளிக்கூடங்கள் இன்றைய தமிழகம் அன்றைய சென்னை மாகானம் எல்லைகள் அமைந்த நவ1 இல 1956 வரை திறக்கப்பட்டு விட்டதை வரலாற்றில் இருந்து யாரும் மறைக்க முடியாது. அவற்றுக்கான எச்சங்கள் அடையாளங்கள் இன்னும் இருக்கின்றன.

அப்படியான கல்லுப்பட்டி  வெங்கடாஜலபதி  ஒரு அரசு அதிகாரியாகவும் பணியாற்றிக் கொண்டிருந்தவர். அதே கல்லுப்பட்டியில் இருந்த காந்தி நிகேதன் ஆசிரமத்தில் அதன் நிர்வாகியாகவும் இருந்தவாறே இப்பணிகளை தன் வாழ்நாள் உழைப்பாகவும் செய்து முடித்தார். விடுதலை கனவுகளும் நாட்டு முன்னேற்றமும் மக்களின் விழிப்புணர்வும் ஒன்று சேர்ந்திருந்த காலம் அது. மேலும் அது நாட்டுப்பற்றின் மீதான ஆதர்சமும் கடமையும் கொண்ட மனிதர்கள் வாழ்ந்திருந்த காலமும் இல்லையா.

இன்றும் போய் பார்க்கலாம்.அந்த கல்லுப்பட்டி காந்தி நிகேதன் ஆசிரமத்தில்  தான் ஜே .சி.  குமரப்பா அவர்களின் சமாதியும் திருவெங்கடாஜலபதி அவர்களின் சமாதியும் இருக்கிறது.

குலக்கல்வி திட்டத்தை கொண்டு வந்ததனால் அன்றைய முதலமைச்சர் ராஜாஜி அவர்கள் கடுமையாக விமர்சிக்கப்பட்டார் என்றாலும் கூட இந்த மாதிரியான புதிய பள்ளிகளை திறப்பதில்  அவர் மிகுந்த ஆர்வத்துடன் செயல்பட்டார். 

அதற்குப் பிறகு  பெருந்தலைவர் முதல்வர் காமராஜரும் இக்கல்வி திட்டத்தில் மிகுந்த முனைப்பு காட்டி அதை மதிய உணவு அளித்து இன்னும் விரிவு படுத்தினார்.
இதெல்லாம் அக்காலத்தில் நிகழ்ந்த அருமையான நினைவு கூறக்கூடிய முன்னோரின் செயல்கள் என்று  நாம் உணர வேண்டும்.

இந்த காலத்தில் கல்வி அமைச்சர் எம்.பக்தவத்சலம், அதன் முன் அமைச்சர் 
சி. சுப்பிரமணியம், அமைச்சர் அவினாசிலிங்கம் செட்டியார்,மத்திய அமைச்சர் காந்தி கிராம் டி. வி. எஸ் . சௌந்தர அம்மா,  பொள்ளாச்சி மகாலிங்கம், சாத்தூர் எஸ். ராமசாமி நாயுடு,
என காங்கிரஸ் முன்னோடிகள் அவர் பகுதி கிராமங்களில் பாடசாலைகள் அமைக்க பணிகள் ஆற்றினர். இவர்கள அனைவரும்
காங்கிரஸ்காரர்கள்தான். இவர்கள் பெயர்கள் ஏன் சோனியா காந்தி நினைவுக்கு
வர வில்லை. இல்லையெனில்  தமிழ்நாடு காங்கிரஸ்  கமிட்டியிடம் தகவல்களை பெற்றுயாவது  பேசி இருக்க வேண்டும்.

இந்த காங்கிரஸ் தலைவர்கள்/ முதலவர்கள 1947-1967 வரை கல்வி  வளர்ச்சி மற்றும் கிராம  ஆதார பணிகளை ஆற்றினர்.  சோனியா காந்திக்கு இதை  தெரியாது. அவருக்கு அன்றைய காங்கிரஸ் பற்றியும் தெரியாது.இத்தாலி அம்மையார் தன் மாமியார் கணவர் என்ற பெயர்களை கொண்டு காங்கிரஸ் பரிபாலனம் செய்கிறார்.

Anandabazar Paper குழுமம் வார இதழ் அன்றைக்கு வெளிவந்த Sunday இதழில்; பத்திரிக்கையாளர் குல்தீப் நய்யார், கடந்த 1968 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 25 ஆம் தேதி, இருவருக்கும் திருமணம் டெல்லியில்  நம்பர் 1 சப்தர்ஜுங் சாலையில் உள்ள இந்திரா காந்தி  வீட்டில் நடந்த பின்னும் இந்தியா பிரஜா உரிமை சோனியா பெறவில்லை எனவும் 
(இந்திரா படுகொலை  முன்பு)
இந்தியா பிரஜா உரிமை அவரின் கணவர் 
ராஜிவ்  காங்கிரஸ் கட்சியில் பொறுப்புக்கு
வந்த பின் ஏறத்தாழ 15 ஆண்டுகளுக்கு பின்தான்  இந்திய பிரஜை ஆனார் சோனியா என குறிப்பிட்டதாக தகவல்.


#தமிழககல்வி #taminadu_school_education

#கே௭ஸ்ஆர்போஸட்
#ksrpost
16-10-2023.


No comments:

Post a Comment

நீங்கள் நீங்களாகவே இருக்கணும் …குறை ஒன்றும் இல்லை

ஏறக்குறைய மானவர் பருவத்தில் 17 வயதில் அரசியல  தொடர்பு ஏற்பட்டது. என்னுடைய நண்பர்கள் கிரிக்கெட், ஃபுட்பால்,வாலிபால் என விளையாடிக் கொண்டிருக்க...