Tuesday, April 23, 2024

*எனது சம்பாத்தியம்*….. *நான் பெற்றது*….. *ஆயிர கணக்கில் புத்தகங்கள்தான்*…. *மனிதனை மனிதனாக வாழவைப்பது புத்தகங்கள்தான்*… *இதுவே எனது சொத்து*!




//அலமாரியின் வரிசையில் நின்று நமக்கு முதுகைக் காட்டின புத்தகங்கள் ஜன்னல் விளிம்பில் சிந்தியிருந்த புத்தகங்கள். கட்டின பெண்டாட்டி மாதிரி நம்முடன் படுக்கையில் கூடப் படுத்துறங்கிய புத்தகங்கள். பெற்ற பிள்ளை மாதிரி மார் மீது கவிழ்ந்து  தவழ்ந்த  புத்தகங்கள் .படித்தவை !  படித்து  மறந்தவை,  பிடித்தவை ! பிடித்து மறக்க முடியாதவை.




பிடித்த  புத்தகம் பிடித்த பெண்ணைப்போல மறுபடி மறுபடி அழைக்கும். விடுமுறைப்  பிற்பகலில்,  நள்ளிரவில்  புரட்டக்  கூப்பிடும்.

அதைத் தேடிப் புறப்பட்டவன் கையில் கவிதை சிக்கும். தத்துவம் பிடிபடும். வாழ்க்கைப்  பந்தைப்  பிரித்து  வீசிய  கேள்விகள்  இடறும் ! பதிலும், திகிலும் எதிர்ப்படும்//

- என் யோசனை என்ற கதையிலிருந்து,
மாலன் 

#ksrpost
23-4-2024.

#*இதுதான் வாழ்க்கை உலகம்* *வாழ்க்கை என்பதே அந்த அந்த நேரத்தின் நியாயங்கள் தான்*!- -#ஜெயகாந்தன். சின்னச் சின்ன அன்பில் தானே ஜீவன் இன்னும் இருக்கு…

#*இதுதான் வாழ்க்கை உலகம்*

*வாழ்க்கை என்பதே அந்த அந்த நேரத்தின் நியாயங்கள் தான்*!- -#ஜெயகாந்தன்.

சின்னச் சின்ன அன்பில் தானே ஜீவன் இன்னும் இருக்கு…
————————————
காலம் தோறும் மனிதர்களின் வாழ்க்கை  கருத்தியல் ரீதியாகத்தான்பரிசீலிக்கப்படுகிறது.



இறுதியில் அது ஆன்மீக ரீதியாக ஒரு முடிவுரையை எழுதிப் பார்க்கிறது
மிக சிறந்த உதாரணமான பொன்மொழிகள் சொல்லப்பட்டு விட்டன.

வாழ்க்கை ஒரு நீர்க்குமிழி போல தோன்றி மறைகிற தற்கணத்தின் இருப்பு சார்ந்த அல்லது மானுட வாழ்வின் உள்ளீடற்ற அபிலாசைகள் சார்ந்ததுதான். அதற்குள் கனவுகளும் உண்டு கற்பனைகளும் உண்டு. அவை நிறைவேற வேண்டும் என்று அவன் எத்தனிக்கையில் அரசு குடும்பம் இன்ன பிற வகையில் உண்மையாக அவை எவற்றின் மீதும் விருப்பம் இல்லாவிட்டாலும் கூட அதை எதிர்கொள்ள வேண்டியே அவன் அரசியல் மயமாகிறான்

அப்படியான நிகழ்வுகள் அல்லது சம்பவங்கள் எவ்வளவு ஊதி பெருக்கப்பட்டாலும் ஒரு பலூன் இறுதியில் வெடித்து விடுவதைப் போலத்தான் என்பதாக  அவை அனுமானிக்கப்பட்டு அது சார்ந்த அனைத்தும் சுருக்கமாகத் தத்துவத்தில்  ஏற்கனவே இன்மையாகவும் வெறுமையாகவும் முன்வைக்கப்பட்டுள்ளன.

ஏனெனில் பிறந்தால் இறந்து போவோம் என்கிற அறிவை பெற்ற முதல்  உயிரி மனிதன்தான் .

ஐந்தறிவு உள்ள பிற மிருகங்களுக்கு இந்த உண்மை தெரியாது.

ஆகவே மனிதன் தன் பிறப்பிற்கும் இறப்பிற்கும் இடையே எதையாவது சொல்லிவிட்டு போவதை அதாவது தன் இறப்பிற்கு முன் தன்னை நிரூபணம் செய்து கொள்வதை சாகசமாக மேற்கொள்கிறான்.

அதற்காக அவன் கயிற்றின் மீது கழைக்கூத்தாடுகிறான்.
அதே கயிறு தான் அவனுக்கு சுருக்கிட்டு கொள்ளும் மரண கயிறுமாக ஆகிறது.

கர்ம வினை என்பது இவ்விடத்தில் தான் மனிதன் அறிய முடியாத மர்ம வினை ஆகி முடிகிறது.

இப்போது மனிதன் ஒரு அரசியல் உயிரி என்கிற இடத்தில் கை விலங்கு இடப்படுகிறான்.

என்னை பொருத்தவரையில் பல கோடி ஆண்டுகளாக இந்த உலகம் தோன்றித துலங்கி வந்திருக்கிறது மறைந்தும் புதுப்பித்தும் இந்த பூமி பந்து தன் உயிர் தன்மையைக் காப்பாற்றிக் கொள்கிறது ‌.

இதை ருசுபிக்க மிகச்சிறந்த உன்னத மனிதர்கள் ஆதி முதல் அந்த வரை தோன்றி கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கும் பிறப்பு இறப்பு இருந்தாலும் ஒரு வகையில் காலத்திற்கு அப்பால் அவர்கள் நெடுநாள் நினைவு கூறப்படுகிறார்கள்.

நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லோருக்கும் பெய்யும் மழை என்றான் வள்ளுவன்

இப்படித்தான் அனைத்திலும் நிறையத் தான் நான் விரும்பினேன் ஆனால் என்னிலும் எப்படியோ நிறைந்துதான் இருக்கிறது வாழ்வு.

•உங்கள் இறுதிஊர்வலத்திற்குப் பின் ஒருசில மணிநேரங்களில் அழுகுரல்கள் முழுமையாக அடங்கியிருக்கும்,
அடுத்த வேளை உணவுக்கு  ஆர்டர்கள்  ஹோட்டலுக்கு சென்றிருக்கும்,

•பேரன் பேத்திகள் ஓடிப்பிடித்து விளையாடிக் கொண்டிருக்க,..
வந்த கூட்டத்தில் ஓர் இளம்பெண்ணும் ஆணும் காதல் புன்னகையுடன் பரஸ்பரம் போன் நம்பர்கள் மாற்றிக்கொள்வர்...

•படுக்கப் போகும் முன் காலாற நடந்து வரலாமென சில ஆண்கள் தேநீர்க்கடை வரை சென்றிருப்பர்,..

•சாப்பிட்ட இலைகளயும், குப்பைகளையும் இன்னும் கொஞ்சம் தள்ளிக் கொட்டியிருக்கலாம் என உங்கள் பக்கத்துவீட்டுக்காரர் மனதுக்குள் பொறுமிக்கொண்டிருப்பார்,..

•ஒரு அவசர சூழ்நிலையால் நேரில் வர இயலவில்லையென உறவினர் ஒருவர் உங்கள் மகளிடம் போனில் பேசுவார்.

•மறுநாள் விருந்தில், கறியில் காரம் போதவில்லையென ஓரிருவர் குறைபட்டுக்கொள்வார்கள், எலும்பை நீக்கி, கறியை மட்டும் குழந்தைக்கு ஒரு அம்மா ஊட்டிக்கொண்டிருப்பார்..

•இத்தனை தூரம் வந்தாச்சு போற வழியில் அங்கேயும் பார்த்துவிட்டுப் போலாமா என வெளியூர் உறவுகள் சுற்றுலாத் திட்டங்கள் ரகசியாமாய் வகுத்திருப்பர்,

•தன்னுடைய பங்குக்கு மேல் சிலநூறு ரூபாய்கள் அதிகமாக செலவாகிவிட்டதென ஒரு பங்காளி கணக்கிட்டு நொந்துகொண்டிருப்பார்..
கூட்டம் மெல்ல மெல்லமாய்க் கரையத் தொடங்கும்..

•அடுத்து வரும் நாட்களில்
நீங்கள் இறந்ததே தெரியாமல் உங்கள் தொலைபேசிக்கு சில அழைப்புகள் வரக்கூடும்,..

•உங்கள் அலுவலகம் உங்கள் இடத்துக்கு வேறொருவரை அவசரமாகத் தேடத் துவங்கியிருக்கும்,

•ஒரு வாரம் கழிந்து, உங்கள் இறப்புச் செய்தி கேள்விப்பட்டு, 
உங்கள் கடைசிப் பதிவு என்னவென ஆர்வம் கலந்த சோகத்தோடு சில பேஸ்புக் நண்பர்கள் தேடக்கூடும்.

•இரண்டு வாரங்களில் உங்கள் மகன் மகளின் எமெர்ஜென்சி லீவு முடிந்து பணிக்கு திரும்பிடுவர், 

•ஒரு மாதமுடிவில் உங்கள் வாழ்க்கைத்துணை டிவியில் வரும் ஏதோ ஒரு நகைச்சுவைக் காட்சிக்கு சிரிப்பார்,

•அடுத்துவரும் மாதங்களில், உங்கள் நெருங்கிய உறவுகள் மீண்டும் சினிமாவுக்கும், பீச்சுக்கும் சகஜமாய்ச் செல்லத்துவங்கியிருப்பர்,

•அத்தனை பேரின் உலகமும் எப்போதும்போல் மிக இயல்பாக இயங்கிக்கொண்டிருக்கும்,

•ஒரு பெரிய ஆலமரத்தின் இலை ஒன்று வாடி உதிர்ந்ததற்கும், நீங்கள் வாழ்ந்து மறைந்ததற்கும் எள்ளளவும் வித்தியாசம் இல்லாதது போல, அத்தனையுமே சுலபமாய், வேகமாய், எந்தச் சலனமுமின்றி நடக்கும்,

•மழை பெய்யும், தேர்தல் வரும், பேருந்துகளில் கூட்டம் வழக்கம்போலவே இருக்கும்,  ஒரு நடிகைக்குத் திருமணம் ஆகும், திருவிழா வரும், உலகக்கோப்பை கிரிக்கெட் திட்டமிட்டபடி நடக்கும், வண்ண வண்ணமாய் பூக்கள் பூக்கும், உங்கள் செல்லப்பூனை அடுத்த குட்டி ஈனும்..

•நீங்களே வியக்கும் வேகத்தில் இந்த உலகத்தால் நீங்கள் மறக்கப்படுவீர்கள்,
இதற்கிடையில் உங்கள் முதல்வருடத் திதிகொடுத்தல் மட்டும் மிகச்சிரத்தையாக நடக்கும்.

•கண்மூடித் திறக்கும் நொடியில்
வருடங்கள் பல ஓடியிருக்கும், உங்களைப் பற்றிப் பேச யாருக்கும் எதுவுமே இருக்காது, 
என்றாவது ஒருநாள், பழைய புகைப்படங்களைப் பார்க்கையில் மட்டும், உங்கள் வாரிசுகளில் ஒருவர் உங்களை நினைவுகொள்ளக்கூடும்,

•உங்கள் ஊரில், நீங்கள் நெருங்கிப் பழகிய ஆயிரம் ஆயிரம் பேர்களில், யாரோ ஒருவர் மட்டும், நீங்கள் இருந்ததாய்,அபூர்வமாய் உங்களைப்பற்றிப் யாரிடமோ பேசக்கூடும்..

•மறுபிறவி உண்மையென்றால் மட்டும் நீங்கள் வேறெங்கேயோ, வேறு எவராகவோ வாழ்ந்து கொண்டிருக்கக்கூடும்..

•மற்றபடி, நீங்கள் எதுவுமே இல்லாமல் ஆகி,பேரிருளில் மூழ்கி பல பத்தாண்டுகள் ஆகியிருக்கும்,
இப்போது சொல்லுங்கள்.. உங்களை இத்தனை சீக்கிரம் மறக்கக் காத்திருக்கும் மனிதர்களில் யாரைத் திருப்திப்படுத்த இன்று, இப்போது, இவ்வளவு பதற்றமாய் ஓடிக்கொண்டிருக்கிறீர்கள்?. 

உங்கள் வாழ்க்கை , யாரையும் நீங்கள் திருப்தி படுத்த தேவையில்லை, யாரும் உங்களை திருப்தி படுத்தபோவதும் இல்லை. வாழுங்கள் உங்களுக்காகவும் வாழுங்கள் .

சின்னச் சின்ன அன்பில் தானே ஜீவன் இன்னும் இருக்கு…

#ksrpost
23-4-2024.


Monday, April 22, 2024

மதுரை வரும் அழகரை தூங்காநகர் வரவேற்கிறது.

மதுரை வரும் அழகரை தூங்காநகர்  வரவேற்கிறது. 









ஆலவாய் அண்ணலும் அங்கயற்கண் அம்மையும் அவர்களோடு செவ்வேளும்...






ஊரெல்லாம் மீனாட்சி! அன்பின் அரசாட்சி!மதுரை…








***

அழகரு வருஷத்துல ஒரு தடவ மதுரைப் பக்கம் வந்துட்டுப் போறதுக்குள்ள காட்சிகள் அதிகம்…!!!







மதுரை புதூர்ல ஒரு பைக்கை எடுத்தா இருபது நிமிஷத்துல அழகர் கோவிலுக்குப் போயிடலாம். வருஷம் பூராம் அழகரு அங்கேயே தான் இருக்காரு. ஆனால், அழகரு வருஷத்துல ஒரு தடவ மதுரைப் பக்கம் வந்துட்டுப் போறதுக்குள்ள…



தங்கச்சி மீனாச்சி கல்யாணத்தப் பாக்க ஆசப்பட்டு அழகர்மலையில இருந்து மதுரைக்கு கிளம்புவாரு… சும்மால்லாம் கிளம்பிட முடியாது, அங்க காவல் தெய்வமான பதினெட்டாம்படிக் கருப்புகிட்ட உத்தரவு வாங்கிட்டு தான் கிளம்ப முடியும். 

அங்க இருக்கிற ஒத்த கருப்ப சாமி ஓராயிரம் கருப்பசாமியா மாறி பக்தர்களுக்குள்ள இறங்கி  பாதுகாப்புக்குக் கூடவே வரும். சாமி இறங்கினவங்க ’திரி’ப் பந்தம் ஏந்தி, கையில் மொரட்டு அருவாளைத் தூக்கிக்கிட்டு கருப்பன் அருளோட சாமியாடிட்டு வருவதை எதிரில் நின்னு பார்த்தா அடிவயித்துல அமிலம் சுரக்கும்.

வருஷத்துக்கொரு தடவ வெளியே வர்றவர சும்மா விட்டுட முடியுமா? வர்ற வழியில கள்ளந்திரி, அப்பன் திருப்பதின்னு எல்லா ஊர்லயும் மண்டகப்படி போட்டு மரியாத பண்ணி கொஞ்சிக் கூத்தாடும் பக்தர்கள் அன்புல தங்கச்சி கல்யாணத்துக்கு நேரத்துக்குப் போகணும்ங்கிறதையே மறந்துடுவாரு. 
 
இந்தப் பக்கம் எங்க ஆத்தா மீனாச்சிக்கும், எங்கப்பன் சொக்கனுக்கும் கல்யாணம் நடந்திடும். எங்க வீட்டுக் கல்யாணக் கொண்டாட்டத்துல அந்தப் பக்கம் அழகர் இன்னும் வரலைங்குறதையே இவய்ங்களும் மறந்துடுவாய்ங்க… மங்கையர்க்கரசி திருக்கல்யாணத்துக்காகவே வருஷம் பூராம் காத்திருந்து மதுரை மகராசிக பூராம் மாங்கல்யம் மாத்துவாங்க. 

அதாவது, அன்னிக்கு அம்புட்டு வீட்லயும் கல்யாணந்தேன். ஆத்தாவையும் அப்பனையும் தேர்ல வச்சு ஊர்வலம் சுத்தி வந்தப்புறம் தான், ஐயய்யோ அழகரு வாராம எல்லாம் நடந்துடுச்சேன்னு இவய்ங்களுக்கு சுருக்குனு இருக்கும். இருந்தாலும் எப்படியாவது சமாதானப் படுத்துவோம்னு தென்கரையில நினைச்சுட்டு இருக்கிற நேரத்துல, வடகரையில அழகரு ஆடி அசஞ்சு மதுரைக்குள்ள வந்துடுவாரு.

ராத்திரி கொஞ்சம் காலாறுவோம்னு தல்லாகுளம் பெருமாள் கோவிலுக்கு போயிட்டு, அங்க ஏற்கனவே வந்து காத்திருக்கும் நம்ம ஆண்டாள் நாச்சியின் மாலைய தோளில் வாங்கிச் சாத்திக்கிட்டு,  மறுபடி தங்கக் குதிரையில ஏறி கோயில விட்டு வெளியே வரும் அழகைப் பார்த்ததும், ” *கோயிந்தா…. கோய்ய்ந்தோவ்வ்வ்* ”னு லட்சக்கணக்கான குரல்கள் ஒன்னா கூப்பிடும் பாருங்க….. ஆத்மா சிலிர்த்தெழுறதுன்னா என்னானு அப்ப தெரியும்.

சித்திர மாசக் கத்திரி வெயிலுல இத்தன லட்சம் பேரு கூடியிருந்தா வெந்து போயிட மாட்டீங்களானு வெளியூர்க்காரங்களுக்கு தோணலாம். ஆனால்,  தண்ணீர் பீச்சும் பக்தர்கள் தோள் வலிக்க வலிக்க சந்தோசமா தோப்பறையில தண்ணிய நெப்பிக்கிட்டு ரோட்டிலேயும் ஆகாசத்திலும் தண்ணியப் பீச்சிப் பீச்சு மதுரையவே குளிர வச்சுடுவாங்க… (தோலினால் செய்யப்பட்ட பை. ஒரு பக்கம் பெரிய துவாரம் வழியாக நீரை ஊற்றி அடைத்துவிட்டு இன்னொரு பக்கம் சின்னதா ஒரு துவாரம் வழியாக நீரினைப் பீச்சி அடிப்பது).

இப்படி ஒவ்வொரு மண்டகப்படியா அழகரை இழுத்துப் பிடிச்சு வாங்கய்யா வாங்கய்யானு மதுரக்காரய்ங்க பாசத்தைக் கொட்டிக் கொட்டி அலைக்கழிச்சு ஆத்துக்குள்ள இறங்கிறப்ப விடிஞ்சுடும்… 

விடியக்காலம் அழகர் ஆற்றில் இறங்கும் போது ஒட்டு மொத்த மதுரையும், லட்சக்கணக்கான குரலில் அடிமனசிலிருந்து “ *கோவிந்தாஆஆஆஆ*…..”னு கூப்பிடும் போது பாற்கடலிலிருந்து பரந்தாமன் லேசா திரும்பி மதுரையைப் பாப்பாரு… 

எங்க அழகர் தங்கக் குதிரையில் பட்டுடுத்தி, பவனிக்கும் அழகில் மயங்கி மறுபடி சயனத்துக்கே போயிருவாரு. 

திருப்பதி ஏழுமலையானும், திருவனந்தபுரம் பத்மநாபசாமியும் என்னதான் கட்டி கட்டியாக தங்கமும், கட்டுக்கட்டாக பணமும் வைத்திருந்தாலும் அவர்கள் இருவரும் திருமாலிருஞ்சாேலை அழகரை நெருங்கக் கூட முடியாது.

 " ஏனெனில் அழகுமலையான் மக்களைத் தேடி வரும் தெய்வம், எளியவர்களின் தெய்வம் "

" திருவிழாக்களின் தலைநகரம் மதுரை "  



கோவிந்தா….!!! கோவிந்தா!!!


(1915 pic of the Temple street in Madurai)

#மதுரைசித்திரைதிருவிழா
#MaduraiMeenakshi

தல்வர் ஸ்டாலின் #மேகேதாட் குறித்து ஏன் திருவாய் திறக்காமல் உள்ளார்⁉️இந்தியா கூட்டணி வேடிக்கை காட்சிகள்… அடி தடிகள் நடக்கிறது.

முதல்வர் ஸ்டாலின் #மேகேதாட் குறித்து ஏன் திருவாய்  திறக்காமல் உள்ளார்⁉️இந்தியா கூட்டணி வேடிக்கை காட்சிகள்… அடி தடிகள் நடக்கிறது.
——————————————————-
கர்நாடகாவில் மேகேதாட்அணையைக் கட்டியே தீருவோம் என்று கர்நாடக முதல்வர், துணை முதல்வர்  சூளுரைக்கிறார்கள். 

கர்நாடக முதல்வர் சித்தராமையா பிரதமர் மோடி மேகேதாட்அணையைக் கட்டுவதற்கான அனுமதியை இன்னும் எங்களுக்கு தரவில்லை. அவர் சமீப காலமாக  தமிழ்நாட்டு பக்கமே  சென்று கொண்டிருக்கிறார். தமிழ்நாட்டிற்கு சாதகமாகவே இயங்குகிறார். ஆனால் இங்கு கர்நாடகாவிற்கு வந்து மட்டும் ஓட்டு கேட்கிறார் என்று முறையிடுகிறார்.






















இது பற்றி தமிழ்நாடு முதலமைச்சர் ஏன் எதையும் சொல்லாமல் வாயைத் திறக்காமல் இருக்கிறார். ஏதோ துரைமுருகன் மட்டும் தேர்தல் நாளில் மேகேதாட் அணையை பற்றி ஏதோ குறிப்பிட்டுச்  சொல்லி இருக்கிறார்.

அந்த அணையைக் கட்டினால் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் வரத்து குறையும் என்று தெரிந்தும் முதல்வர் ஸ்டாலின் இது பற்றி பேச மறுப்பது இந்திய கூட்டணியின் ஓட்டு வங்கிக் காகவா?

வெற்றி பெறும் வரை உம்மென்று இருந்துவிட்டு நாளை மேகேதாட் பிரச்சனை வருகிற போது எதுவும் செய்ய முடியாமல் கையைப்பிசைவது  முதல்வரது வழக்கம் ஆகிவிட்டது.

மேகதாது அணை நீண்ட தொலைநோக்குப் பார்வையில் மாநிலங்களுக்கு  இடையேயான தண்ணீர் பங்கீட்டில் கூர்மையாக ஆராயப்பட வேண்டியது. 

வழக்கம்போல் கொம்பை விட்டு வாலை பிடிப்பது இனி ஆகாது அதற்கான நிரந்தர முடிவுகளை இரு மாநிலங்களும் எட்ட வேண்டும்.

போக கேரளாவின் வயநாட்டில் ராகுல் காந்தியை எதிர்த்துப் போட்டியிடும் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்  டி ராஜா அவர்களின் மனைவி படு மோசமாக ராகுலை விமர்சனம் செய்கிறார்.

இந்திய கூட்டணியில் காங்கிரஸ் கம்யூனிஸ்டுகள் என்கிற தேசியக்கூட்டணிக் கட்சிக்குள்ளேயே ஒற்றுமையற்று இந்த முரண்பாடு நிகழ்வது எனில் இந்த இ.ந்.தி.யா கூட்டணி நெல்லிக்காய் மூட்டை போல தான் இருக்கிறது.

இந்தியக் கூட்டணியிடம் ஒரு கேள்வி நீங்கள் சிபி எம் ஐ வைத்து என்ன செய்யப் போகிறீர்கள். மேற்கு வங்காளம் மம்தா பானர்ஜியை வைத்து என்ன செய்யப் போகிறீர்கள்? சரத் பவார்  சரி படுவாரா? காஷ்மீர் பரூக்  முதலில் வெட்டி விட்டார். இப்போது மீண்டும் இணைந்து கொண்டார். இப்படி மாநிலங்கள் பல்வேறு போக்கில் இருக்க பழைய ஜனதா கட்சி 1977 இல் அரசமைத்தது தான் ஞாபகத்திற்கு வருகிறது. இவைகள் தாக்கு பிடிக்குமா என்று தெரியவில்லை.

என்ன கேட்டால் அருகருகே இருக்கக்கூடிய மாநிலங்களின் பிரச்சனைகளை முதலில் தீர்த்து கொண்டு பிறகு இந்திய அளவில் நாடாளுமன்ற இணைப்பு மற்றும் கூட்டணி தலைமை பற்றி பேச வேண்டும். ஒருவருக்கொருவர் உள்ளுக்குள்ளே முரண்பாடு வைத்துக்கொண்டு ஆட்சி  ஒற்றுமையை எப்படி அவர்கள் வலியுறுத்த முடியும். நடைமுறைப்படுத்த முடியும். 

நேற்று( 21-4-2024) ராஞ்சியில் நடைபெற்ற இந்தியா கூட்டணி பொதுக்கூட்டத்தில் ராஷ்டிரிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கட்சி தொண்டர்களிடையே நடைபெற்ற கடும் மோதலில் பலருக்கும் காயம் ஏற்பட்டது.
 ராஞ்சியில் ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் மற்றும் டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டுள்ளதைக் கண்டித்து, 'உல்குலன் நியாய யாத்திரை' என்ற பெயரில், மாபெரும் பொதுக்கூட்டத்துக்கு ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா ஏற்பாடு செய்திருந்தது. 

ராஞ்சியில் நடைபெற்ற இந்த பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் காங்., தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ஆம் ஆத்மி எம்.பி., சஞ்சய் சிங், பஞ்சாப் முதல்வர் பகவந்த்சிங் மான், சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ், பீஹார் முன்னாள் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ், ஜார்க்கண்ட் முதல்வர் சம்பாய் சோரன், தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா உட்பட இந்தியா கூட்டணியின் முக்கியத் தலைவர்கள் பங்கேற்றனர்.ஆனால் திட்டமிட்டு ராகுல் இதில் கலந்து கொள்ளவும் இல்லை.

இன்னும் எத்தனை முரண்பாடுகள் இருக்கிறதோ? இதுவரையிலும் முதல்வர் ஸ்டாலின் மேகதாது அணை பற்றி வாயைத் திறக்கவில்லை.

#மேகேதாட்
#இந்தியகூட்டணி
#megathat
#IndiaAllaince

#ksrpost
#கேஎஸ்ஆர்போஸ்ட்
22-4-2024.

Thursday, April 18, 2024

நாடாளுமன்ற தேர்தல்-2024.

#கேஎஸ்ஆர்,#கேஎஸ்ஆர்போஸ்ட்,#கேஎஸ்ராதாகிருஷ்ணன்,#கேஎஸ்ஆர்வாய்ஸ்,#ksr,#ksrvoice,#ksrpost,#ksradhakrishnan#dmk, #admk, #congress, #bjp, #stalin, #kalingar, #mgr, #jayalaitha, #arignaranna,

*கனவாகிப் போன கச்சத்தீவு*- எனது நூல்-KSR

*கனவாகிப் போன கச்சத்தீவு*- 
எனது நூல்
••••
எனது "கனவாகிப் போன கச்சத் தீவு" எனும் எனது நூல் விரிவான நான்காவது பதிப்பாக  வெளிவருகிறது.

கச்சத்தீவின் ஆதி முதல் அந்தம் வரை குறிப்பாக இன்றைய சமகாலத்தில் அதன் மீது நடந்து வரும் விவாதங்கள் பல்வேறு வரலாற்று தகவல்கள் என  அத்தனை ஆவணங்களையும் இந்த நான்காவது பதிப்பில் இணைத்து தொகுத்து ஒரு புதிய பரிமானத்துடன் அந்நூல் வெளிவருகிறது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். கட்சத்தீவு ஒப்பந்தங்கள் குறித்த புதிய உண்மைகள் இதில் விரிவாக எழுதப்பட்டிருக்கிறது.

#கனவாகிப்போனகச்சத்தீவு
#katchathivu 

#ksrpost
#கேஎஸ்ஆர்போஸ்ட் 
18-4-2024.


#*Cauvery* #*காவேரி*

#*Cauvery*
#*காவேரி* 
————————————
T. Ramakrishnan's latest book, "Cauvery: A Long-Winded Dispute," published by The Hindu Group, is an extraordinary piece of work that deserves to be translated into Tamil. It delves deeply into all facets of the Cauvery dispute, showcasing meticulous observation and research. Ramakrishnan, undoubtedly one of the finest journalists, has handled this subject with exceptional skill. His work is a highly valuable resource for anyone seeking insights into this complex issue. I  remember Hindu already published a book on cauvery thirty years ago..most likely written by Guhan  Rtd I.A.S officer. I extend my heartfelt congratulations to him and eagerly anticipate more such exemplary works in the future.

தி இந்து குழுமத்தால் வெளியிடப்பட்ட டி.ராமகிருஷ்ணன் அவர்கள் சமீபத்தில் எழுதிய புத்தகம், "Cauvery: A Long-Winded Dispute," மிகச் சிறந்த படைப்பாக நிற்கிறது. இவர் காவேரி பிரச்சனையின் அனைத்து அம்சங்களையும் ஆழமாக ஆராய்ந்து, உன்னிப்பாக அவதானித்துப் பெரும் அளவில் ஆய்வினை மேற்கொண்டு எழுதியுள்ளார். இந்த புத்தகம் தமிழிலும் வெளிவர வேண்டும் என்பதே எனது விருப்பம். மிகச்சிறந்த பத்திரிகையாளர்களில் ஒருவரான ராமகிருஷ்ணன், இந்தச் சிக்கலான பிரச்சனையைத் திறமையுடன் கையாண்டுள்ளார். காவேரி பிரச்சனை பற்றிய தகவல்களைத் தேடும் அனைவருக்கும் இந்த நூல் ஒரு ஆதாரமாக விளங்கும். அவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதுடன், எதிர்காலத்தில் இதுபோன்ற முன்மாதிரியான பல படைப்புகளை ஆவலுடன் அவரிடமிருந்து எதிர்பார்க்கிறேன் என்பதனையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

#Cauvery
#காவேரி
#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
18-4-2024


*எனது சம்பாத்தியம்*….. *நான் பெற்றது*….. *ஆயிர கணக்கில் புத்தகங்கள்தான்*…. *மனிதனை மனிதனாக வாழவைப்பது புத்தகங்கள்தான்*… *இதுவே எனது சொத்து*!

//அலமாரியின் வரிசையில் நின்று நமக்கு முதுகைக் காட்டின புத்தகங்கள் ஜன்னல் விளிம்பில் சிந்தியிருந்த புத்தகங்கள். கட்டின பெண்டாட்டி மாதிரி நம்ம...