Thursday, August 31, 2017

INDIAN INSTITUTE OF GODMEN


UN planning to eradicate colonialism by 2020.

United Nations planning to eradicate colonialism by 2020. The smallest state would have a population of 50 people.



பெண்ணாறு - பாலாறு இணைப்பு - II

நேற்றுக்கு முன்னாளில் பெண்ணாறு - பாலாறு இணைப்பு குறித்து எழுதிய எனது பதிவை படித்து விட்டு வேலூர், காஞ்சிபுரம் மாவட்ட நண்பர்கள் அனுப்பிய பின்னூட்டப் பதிவுகள் வருமாறு.
1. 73 ஆண்டுகளாக நிறைவேற்றப்படாமல் உள்ள "தென்பெண்ணை - பாலாறு" இணைப்பு திட்டத்தை நிறைவேற்றக்கோரி, அரசின் கவனத்திற்கு கொண்டுசெல்ல, வட்டாச்சி்யரிடம் மனு அளிக்க, பேரணி மற்றும் பொதுக்கூட்டம். தமிழக விவசாயிகள் சங்கம் சார்பாக இன்று மாலை நாட்டறம்பள்ளி உழவர் சந்தை முன்பு நடைப்பெற்றது.
தருமபுரி மற்றும் வேலூர் மாவட்டத்தில் தண்ணீர் பற்றாக்குறையை அறிந்த ஆங்கிலேய அரசு 1943 ஆம் ஆண்டில் தென்பெண்ணை-பாலாறு திட்டத்தை தீட்டி அதற்காக நிதியும் ஒதுக்கியுள்ளது. சுதந்திரத்திற்கு பிறகு எந்த அரசும் கண்டுகொள்ளவில்லை.
சில வருடங்களுக்கு முன்பு தேசிய நீர் மேம்பாட்டு முகமை (National Water Development Agency - NWDA) அறிவுறுத்தலின் பேரில் நீர்வளத்துறை, பொதுப்பணித்துறை அதிகாரிகள் நீர்வழி இணைப்பு பாதைக்கான இடத்தை ஆய்வு செய்தனர். நெடுங்கல் அணைக்கட்டில் தொடங்கி நாகரசம்பட்டி, சந்தூர், கன்னடஹள்ளி, கொடியூர், கந்திலி மேற்கு, புதுப்பேட்டை, B பந்தாரப்பள்ளி வழியாக கொட்டாறு (அ) கல்லாற்றில் இணைக்கும் வழித்தடத்தை இறுதி செய்தனர். (பார்க்க ஒளிப்படம்)
அதிக விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதாக இதனை விவசாயிகள் எதிர்த்தனர். அதற்கு பதிலாக நெடுங்கல் அணைக்கட்டில் தொடங்கி பேரிகை, சூளகிரி, வேப்பணப்பள்ளி, மேடுகாம்பள்ளி, வரமணகுண்டா, கனமூர், செட்டேரி டேம், பச்சூர் ஆற்றில் இணைத்து அங்கிருந்து சொரக்காயல்நத்தம், நாயனசெருவு, மல்லகுண்டா வழியாக பாலாற்றில் இணைக்க விவசாயிகள் கோரிக்கை வைப்பதோடு போராடியும் வருகின்றனர்.
அந்த வகையில் விவசாயிகள் பேரணியாக வட்டாச்சியரிடம் சென்று தென்பெண்ணை- பாலாறு இணைக்க வலியுறுத்தி அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல கோரிக்கை மனு அளித்தனர்.



National Water Development Agency (NWDA) under Ministry of Water Resources has received 36 proposals of intra-state links from 7 States viz. Maharashtra, Gujarat, Jharkhand, Orissa, Bihar, Rajasthan and Tamil Nadu so far. Out of above, Pre-Feasibility Reports (PFRs) of 12 intra-state links have been completed by NWDA. Details of intra-state link proposals received from the State Governments along with the names of respective rivers to be interlinked and status of studies is given below :-
DPRs (Detail Project Report) of Ponnaiyar –Palar link (Tamil Nadu), Wainganga (Gosikhurd)-Nalganga (Purna Tapi) link (Maharashtra), Barakar-Damodar-Subarnarekha and Vamsadhara-Rushikulya (Nandaninalla) are under progress. Out of these, DPR of Ponnaiyar-Palar link is various stages of completion.
Activists back Ponnaiyar-Palar link project to augment water supply
Linking Ponnaiyar-Palar rivers remains only on government website
....
2.இது நிறைவேற்றப்பட்டால் திருப்பத்தூர், நாட்டறம்பள்ளி வாணியம்பாடி, ஆம்பூர், பள்ளிகொண்டா, குடியாத்தம் மற்றும் வேலூர் பகுதிகளுக்கு குடிநீர் பிரச்சனையாவது சமாளிக்க பயன்படும்...
....
3.மமுதலில் உள்ளதுதான் நெடுங்கல் (தென்பெண்ணை) - கல்லாறு (பாலாறு) இணைப்பு திட்டம்

இவர்கள் என்ன அவதார புருஷர்களா...?

கேவலம் ..
என்ன கொடுமை
இவர்கள் என்ன அவதார புருஷர்களா...?
ஒரு நாள் விளம்பர பேனருக்கு 1 கோடி ரூபாய் செலவு செய்பவர்கள் எத்தனை கோடி கொள்ளை அடித்திருப்பார்கள் என்று பார்க்க வேண்டும்.

போலியான நதிநீர் இணைப்பு பிரச்சாரம்

மரங்கள், காடுகள் கொண்ட இயற்கையை அழித்தவரெல்லாம் நதிநீர் இணைப்பு குறித்து பேசுகிறார்கள்.
30 ஆண்டுகள் உச்ச நீதிமன்றத்தில் பல இன்னல்களை எதிர்கொண்டு வழக்காடி அடியேன் பெற்ற நியாயமான தீர்ப்பை படிக்க கூட தமிழக மக்களுக்கு அக்கறையோ, ஆர்வமோ, நேரமோ இருக்கவில்லை.
தீர்ப்பில் சொல்லப்பட்ட விரிவான பரிந்துரைகளை, வழிமுறைகளை பின்பற்றினாலே போதுமானது.மத்திய
அரசுயும் கொள்கை அளவில் இத் தீர்ப்பை ஏற்றுயுள்தாக சொல்லியுள்ளது.
ஆனால் அந்த தீர்ப்பை குறித்த குறைந்தபட்ச புரிதல் இல்லாமல் போலியான நதிநீர் இணைப்பு பிரச்சாரத்தை ஒப்புக்கு மேற்கொண்டு நதிநீர் பிரச்சினைகளை பேசிக் கொண்டிருந்தால் என்ன செய்ய.....?
"விதியே விதியே தமிழச் சாதியை என..........!!!"

 


Wednesday, August 30, 2017

மியான்மர் பிரச்சனை.

மியான்மரில் ரோஹிங்கியா முஸ்லிம்கள் கொடூமாக படுகொலை செய்யப்பட்டு வருகிறார்கள். இதற்கு காரணமான பவுத்தக் கிளர்ச்சியாளர்களுக்கு இராணுவம் உறுதுணையாய்இருக்கிறது. 2017 ஆகஸ்டு 25 அன்று அர்சா என்ற ரோஹிங்கியா முஸ்லிம் கிளர்ச்சிக் குழு, மியான்மர் இராணுவ முகாம் ஒன்றையும் 24 காவல் நிலையங்களையும் தாக்கியுள்ளது. இதில் காவல் துறையைச் சேர்ந்த 11 பேரும் போராளிகள் 21 பேரும் கொல்லப்பட்டுள்ளார்கள். இதைத் தொடர்ந்து,பவுத்தக்கிளர்ச்சி யாளர்களும் இராணுவமும் பதில் நடவடிக்கையாக, ரோஹிங்கியா முஸ்லிம்கள் மீது கொலை வெறித் தாக்குதலைத் தொடர்ந்துள்ளன. இதில் ஏராளமானோர் பலியாகியுள்ளனார்.18 ஆயிரத்திற்கும் அதிகமானோர், வங்காளதேசத்தில் அடைக்கலம் புகுந்துள்ளார்கள்.

பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவ, உதவ வேண்டும். பிணக்குகளைத் தீர்க்க, அமைதிப் பேச்சுவார்த்தைக் குழு அமைக்க வேண்டும். ஆங் சான் சுகி, பவுத்தர்களுக்குஆதரவாகஉள்ளதாகக்கருதப்படுவதால்,உலகநடுநிலையாளர்கள் தலைமையில்இந்தப்பேச்சுநடக்கவேண்டும்.ஐ.நா.,பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும். மேலும், மனித உரிமை மீறல்கள் குறித்துப் பன்னாட்டுப் பிரதிநிதிகளைஉள்ளடக்கியசுதந்திரமான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.
ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு உரிய பாதுகாப்பினை மியான்மர் அரசு வழங்காவிட்டால், ஐ.நா. அமைதிப் படையை அனுப்பவேண்டும். மறுவாழ்வு பணிகளை உலக நாடுகள் செய்ய வேண்டும்.
இப்படியாக உலக அளவில் மனித இன பேரழிவை சந்திக்கும் நாடுகள்.
ஸ்பெயின்
போஸ்னியா
ஏமன்
எத்தியோப்பியா
சூடான்
எகிப்து
அல்ஜீரியா
தஜகிஸ்தான்
சிரியா
நைஜிரியா
எரிட்ரியா
துருக்கி
சோமாலியா
செசன்யா
ஈழம்
ஈராக்
ஈரான்
ஆப்கானிஸ்தான்
பாலஸ்தீன்
பர்மா
லிபியா
#KSRadhakrishnanpostings
#KSRpostings
கே எஸ்.இராதாகிருஷ்ணன்.
30-08-2017

தென்பெண்ணை - பாலாறு இணைப்புத் திட்டம் - I

ரூ. 250 கோடி மதிப்பில் திட்டமிடப்பட்டு எந்த நடவடிக்கையும் இல்லை. தமிழகத்தில் தாமிரபரணி  - நம்பியாறு – கருமேணியாறு இணைப்பும், காவிரி – குண்டாறு இணைப்பு, தென்பெண்ணை  - பாலாறு என்ற மூன்று நதிநீர் இணைப்புத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டும். நிதிநிலை அறிக்கை, மானியக் கோரிக்கைகளில் தெரிவிக்கப்பட்டும் எந்த மேல் நடவடிக்கையும் இல்லை. கர்நாடகா, சிக்கமங்களுரு நந்தி மலையில் உருவாகும் தென்பெண்ணை ஆறு, ஓசூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களைக் கடக்கிறது.

தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் தற்போதைய சூழலில் செய்யாற்றையும், இணைத்திருந்தால் திருவண்ணாமலை வழியாக, செய்யாற்றில் தண்ணீர் வந்திருக்கும். செய்யாற்றில் தண்ணீர் வந்தால், காஞ்சிபுரம் மாவட்டத்தில் பாயும் செய்யாறு வழியாக, பாலாற்றிலும் தண்ணீர் வந்திருக்கும் என காஞ்சிபுரம் மாவட்ட விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

தென்பெண்ணை ஆற்றுக்கும், செய்யாறுக்கும் இடையில் 35 கி.மீ. கால்வாய் வெட்டினால், இரு ஆறுகளையும் இணைத்துவிடலாம் என பொதுப்பணித் துறையினர் தெரிவிக்கின்றனர்.

ஆனால், மூன்றாண்டுகளுக்கு முன் தயாரிக்கப்பட்ட இந்த திட்டம், இன்று வரை கிடப்பில் போடப்பட்டுள்ளதாக விவசாயிகள் குமுறுகின்றனர். இத்திட்டம் குறித்து, காஞ்சிபுரம் மாவட்ட பாலாறு படுகை விவசாயிகள் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கடந்தாண்டு பெற்ற தகவல்களை சொல்கின்றனர்.
தென்பெண்ணையாறு (சாத்தனூர் அணை)  - பாலாபறு இணைப்பு திட்டத்தில், தென்பெண்ணையாற்றின் வெள்ள உபரி நீரை, பாலாற்றின் கிளை ஆறான செய்யாற்றிற்கு கொண்டு செல்லும் திட்டத்திற்கு ரூ. 250 கோடி அளவில் மதிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால், மத்திய் அரசு புதிதாக வெளியிட்டுள்ள நில ஆர்ஜித சட்டத்தின் படி, மதிப்பீடு திருத்தி அமைக்கும் பணிகள் நடக்கின்றன. அதில் நான்காண்டுகளுக்கு முன், பாலாற்றில் தடுப்பணைகள் கட்டியிருந்தால், 2015ல் பெய்த கனமழையில் பெருமளவு தண்ணீரை பாலாற்றின் வழியே சேமித்திருக்கலாம்.
ஆனால், மழை பெய்து இரண்டாண்டுகள் கடந்தும் தடுப்பணைகள் கட்டுவதில் ஆர்வமோ, தீவிரமோ அரசு காட்டாமல் மெத்தனமாக செயல்பட்டு கொண்டு இருக்கிறது. இப்படி தான் தமிழகத்தில் உள்ள நதிநீர் இணைப்புத் திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டு ஆட்சியாளர்கள் அவர்களுடைய சுய தேவைக்காகவும், பதவியை காப்பாற்றிக் கொள்ளவும் மணல் திருட்டு போன்ற வேலைகளில் சம்பாதித்து கொண்டுள்ளனர். மக்கள் நல திட்டங்களை பற்றி மக்களுக்கே விழிப்புணர்வு இன்றி தொலைக்காட்சி தொடர்களையும், பிக் பாஸை பார்த்தே சந்தோசப்படுகின்றனர்.

குறிப்பு. பெண்ணாறு  - பாலாறு இணைப்பு குறித்தான வரைபடத்தை கூட தமிழக அரசு சரியாக ஆவணப்படுத்தவில்லை என்பது வேதனையான செய்தி.

#மாநில_நதிகள்_இணைப்பு
#தென்பெண்ணை_பாலாறு_இணைப்பு
#Pennar_palar_linking
#KSRadhakrishnanpostings
#KSRpostings
கே எஸ்.இராதாகிருஷ்ணன்.
29-08-2017

Tuesday, August 29, 2017

தோல்விகளும் பின்னடைவுகளும் சறுக்கல்களும் இல்லாத வாழ்வே கிடையாது.

தோல்விகளும் பின்னடைவுகளும் சறுக்கல்களும் இல்லாத வாழ்வே கிடையாது. தோல்விகளில் துவளாமல் இருக்கம், பின்னடைவுகளில் பின்தங்காமல் இருக்கவும், சறுக்கல்களில் சுணங்கிப் போகாமல் இருக்கவும் இந்தத் தளரா நம்பிக்கை மிகவும் அவசியம். இந்த நம்பிக்கையானது பிரச்ச்சினைகளை நேருக்கு நேர் சந்தித்து அதைத் தீர்க்கும் தெளிவான பார்வையை நமக்கு அளிக்கிறது. அது மட்டுமின்றி இந்த நம்பிக்கையானது பின்னடைவுகளில் உள்ள நல்லவற்றை மட்டும் பார்க்கும் திறனையும் நமக்கு அளிக்கிறது.

பொதுவாகவே நாம் சோர்ந்திருக்கும் பொழுதினில், பல தரப்பட்ட அறிவுரைகள் வாரி வழங்கப்படும். அது இன்னும் நம்மைக் குழப்பத்தில் ஆழ்த்தி வேதனையடையச் செய்யும். ஆனால் தளரா நம்பிக்கை கொண்டிருந்தால், தோல்விகளில் இருந்து மீள்வதற்கு பிறரின் தோள்கள் தேவையில்லை. 

நம்முடைய வேதனைகள் காட்சிப் பொருளாகத் தான் பிறருக்கு அமையும். நமக்குள்ளே உள்ளடக்கி இந்த பிரச்சனைகளை தீர்த்துக் கொள்வது நமக்கே நல்லதாகும்.

#KSRadhakrishnanpostings
#KSRpostings
கே எஸ்.இராதாகிருஷ்ணன்.

28-08-2017

Monday, August 28, 2017

காகிதக் கப்பல் தமாஷ்


மனிதனின் விபரீத ஆசை.

"ஒரேயடியாக உச்சிக்குப் போய்விட வேண்டும் என்ற முயற்சிதான் பெருந்துயரங்களுக்குக் காரணமாக அமைந்துவிடுகிறது!" 
- சாமுவேல் பட்லர் 
..............
தமிழக அரசியலில், இன்றைய ஆட்சியாளர்களுக்கு ஏற்பட்டுள்ள வியாதிகளுக்கு பணமும் பதவியுமே பிரதானம் . . . மக்கள் நலனில் அக்கறை இல்லை, இவர்களை நம்பி எதுவும் ஆகப் போவதும் இல்லை . . .

தீடீர் என அரசியலில் புகுந்து ஐந்து வருடங்களில் முதல்வராக ஆக தமிழகத்தில் மட்டுமே முடியும்....

எதற்கு தியாகம், களப்பணி, தகுதி எல்லாம் .... இங்கு தேவை இல்லையே....


ஏனெனில் மக்கள் காசு வாங்கிவிட்டு ஒரு கழுதைக்கு வாக்குஅளித்தவிட்டால் கூட இன்றைக்கு அந்த கழுதைக்கும்
மாரியாதைதான்.....

விவாசாயிகன் பரிதாப நிலை

நெல்மணியை விளைத்து அது முதிர்ந்து தலைசாய்ந்து நிற்கும் போது நெஞ்சுயர்த்தி, தனக்கு தானே தலைப்பாகை பட்டம் சூட்டிக் கொண்டு கம்பீரமாக களம் கண்ட விவசாயி இன்று வேப்பம் கொட்டைகளை பொறுக்கி விற்று தன் வயிற்றை நிரப்பு வாழ்வு நடத்துகின்ற நிலை. இதை விட இன்னொரு கொடுமை என்ன தெரியுமா? 

கரும்பு கசக்கின்றது. ஆமாங்க! கரும்பு கிடைக்கும் விலையை விட கருவேல மர விறகு விலை அதிகமாகம். இவையாவும் நேற்று நானே கிராமத்தில் மக்கள் பேச காதால் கேட்டதும் , கண்ணால் கண்டதும்.

வேப்பம் தரும் வயிற்றுப்பிழைப்பு விவசாயிகள் வாழ்வு கசக்கின்றது என்பதை தானே காட்டுகின்றது. கசக்கின்ற வாழ்வு எப்படி இனிக்கும் என்ற கவலையுடன் அங்கிருந்து இடம்பெயர்ந்தேன்.

Saturday, August 26, 2017

ஞான சூனியங்கள்

ஓட்டுக்கு காசு,ஜாதிஎன்றஅடிப்படையில் தேர்தலில் வெற்றி பெற்று பதவியை கோடிக்களுக்கு விற்கும் ஞான சூனியங்கள் இருந்தால் இப்படி தான் அலங்கோலமாக இருக்கும் தமிழகம். இந்த நிலைமை மாறுமா? இவர்கள் திருந்துவார்களா... 
கண், காது, வாய் மூடி இருப்பதே நமக்கு அமைதியை தரும்.

விவாசாயிகள்பரிதாபநிலை

நெல்மணியை விளைத்து அது முதிர்ந்து தலைசாய்ந்து நிற்கும் போது நெஞ்சுயர்த்தி, தனக்கு தானே தலைப்பாகை பட்டம் சூட்டிக் கொண்டு கம்பீரமாக களம் கண்ட விவசாயி இன்று வேப்பம் கொட்டைகளை பொறுக்கி விற்று தன் வயிற்றை நிரப்பு வாழ்வு நடத்துகின்ற நிலை. இதை விட இன்னொரு கொடுமை என்ன தெரியுமா? கரும்பு கசக்கின்றது. ஆமாங்க! கரும்பு கிடைக்கும் விலையை விட கருவேல மர விறகு விலை அதிகமாகம். இவையாவும் நேற்று நானே கிராமத்தில் மக்கள் பேச   காதால் கேட்டதும் , கண்ணால் கண்டதும். 

வேப்பம் தரும் வயிற்றுப்பிழைப்பு  விவசாயிகள் வாழ்வு கசக்கின்றது என்பதை தானே காட்டுகின்றது.  கசக்கின்ற வாழ்வு எப்படி இனிக்கும் என்ற கவலையுடன் அங்கிருந்து இடம்பெயர்ந்தேன்.

#விவாசாயிகள்பரிதாபநிலை
#கசக்கின்றவாழ்வுஇனிக்கும்
#KSRadhakrishanapostings
#KSRpostings 
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்

Friday, August 25, 2017

மதுரை சத்தியமூர்த்தி வாசகர் சாலை. நெஞ்சுக்குள் எழுந்த நினைவலைகள்.









நான் மதுரையில் தங்கிருந்தால், மதுரை மேல மாசி வீதி, கோவிலை சுற்றி  உள்ள நான்கு சித்திரை வீதி மற்றும் திண்டுக்கல் சாலை(போஸ் ரோடு) வழியாக  நடைபயிற்சி செய்வதுண்டு. மேல சித்திர வீதியும், வடக்கு சித்திர வீதியும்  சந்திக்கும் முனையில் தீரர் சத்தியமூர்த்தி வாசகர் சாலை என்ற பழைய கட்டிடம் உள்ளது. 

இன்றைக்கும் அந்த கட்டிடம் புராதான சின்னம் போன்று பாதுகாப்புடன் அப்படியே  இருக்கின்றது.  அந்த கட்டிட்டத்தின் பக்கத்தில்கோபு அய்யங்கார் சைவஉணவுகடைஇருக்கும்.வெள்ளையப்பம்,
மணமான காஃபியும்  அருமையான உணவுவகை களுக்கும் அக்கடை ப்ரசித்தம். ஏறத்தாழ முப்பது ஆண்டுகளுக்கு  பின்னர்   இன்று
(25/8/2017) உள்ளே சென்றேன். 

நூறு ஆண்டுகள் வரலாறு கொண்ட மிகப்பழமையான கட்டிடம் தான் ஆனாலும் புதுப்பித்தல் என பழமைகளை காவு கொடுக்காமல் மர ஏணி மற்றும் தளவாடங்கள் அப்படியே காப்பாற்றப்பட்டு வருகின்றது. ஒவ்வொரு மரப்படிகட்டுகளும்  எத்தனை தலைவர்களை உயர்த்தி இருக்கும் தெரியுமா? உயர்த்திய அந்த படிகட்டுகளே பலருக்கு நினைவு சின்னங்கள் தான்.அந்த ஏணியில் ஏற கயிறு தொங்கும்.இந்த காட்சிகளை பார்க்கும் போது நெஞ்சினில் சில நினைவுகள் நிழற்படங்களாக மின்னி மறைந்தன. நினைவுகள் நிரந்தரமாக்க இருக்க வேண்டும் என்ற காரணத்தால் தான் இதனை  பதிவு செய்கின்றேன். 

நாடாளுமன்றம்,  சட்டமன்றம் சந்திக்காத பல தலைவர்களை தன்னகத்தே வைத்திருந்த சந்தித்த கட்டிடம் இது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின்பொதுச்செயலாளராகவும்,
ஒருங்கிணைந்த மதுரை மாவட்டத்தின் காங்கிரஸ் தலைவராக ( மதுரை, தேனி, திண்டுக்கல்) பழ.நெடுமாறன் இருந்த போது ஒருங்கிணைந்த  மாவட்டத்தின்  மைய  அலுவலகமாக செயல்பட்டது.  சுதேசி மித்திரன், தினமணி, ஆங்கில செய்தித்தாள் ஹிண்டு, இண்டியன் எக்ஸ்பிரஸ் ஆகிய நாளேடுகளை இங்கு வந்து ஆதியில் 1930-40களில் வாசித்தோர் மதுரை வாசிகள பலர். 

அங்கே வந்து சென்றவர்கள் பட்டியலைப் பார்த்தால் கட்டிடத்தின் சிறப்பு  உங்களுக்கும் புரியும். 

உத்தமர் காந்தி வந்த சென்ற இடம்.
முன்னாள் பிரதமர்கள்  நேரு,  இந்திராகாந்தி ஆகியோர் மதுரை மீனாட்சி அம்மன் ஆலயம் வந்த போது இந்த கட்டிடத்திற்கு வந்து சென்றதாக தகவல். 

பால கங்காதர திலகர் வந்து சென்ற தகவல் உண்டு.  சிறிய வினாயகர் அங்கு கோவிலும் உண்டு. வினாயகருக்கும் திலகருக்கும் நெருக்கம் உண்டு. வேறொரு பதிவில் சொல்கின்றேன். கப்பலோட்டிய தமிழன் வஉசி அவர்கள் மதுரை வந்தால் இங்கு வராமல் போக மாட்டாராம். 

காமராஜர் ஆரம்ப காலத்தில் இங்கு தங்கி பனியற்றியதுண்டு

கதர் சுமந்து வந்த தந்தை பெரியாரை இந்தக் கட்டிடம் பெருமையுடன் சுமந்த வரலாறு உண்டு. முன்னால் முதல்வர் குமாரசாமி ராஜா வந்து சென்றுள்ளார். 

'சிவம் பேசினால் சவம் எழும்' என்ற வாக்கியத்திற்கு சொந்தகாரர் , 
தேச பக்த கனலை மூட்டிய சிவா ( சுப்பையா என்பது இயற்பெயர்) அவர்கள் வந்து சென்ற வரலாறு  தற்பெருமைக்கு பயந்து  ஒட்டடைக்குள் ஒலித்து  வைத்திருக்கின்றது இக்கட்டிடம். சத்தியமூர்த்தி, முதுபெரும் தியாகி சோமையாஜுலு, தமிழ்வேள் பி.டி.இராஜன், எளிமையின் சின்னம் கக்கன், தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் ரா.கிருஷ்ணசாமி நாயுடு, தேனி என்.ஆர்.தியாகராஜன், மதுரை ஜோசப், காந்தியின் ஆலோசகர் -பொருளாதர நிபுணர் ஜோசப் குமரப்பா, கோவை அய்யாக்கண்ணு, தினமணி ஆசிரியர் டி.எஸ்.சொக்கலிங்கம், நாவலர் சோமசுந்தர பாரதி, சுத்தானந்தபாரதி, மதுரை தியாகி சிதம்பரம் முதலியார் போன்ற பலர் இன்றைய இளம் தலை
முறையினர் அறியாத பல பிரபலங்கள் வந்து தங்கிய கட்டிடம்.  

ஒடுக்கப்பட்ட மக்களும்ஆலயப்பிரவேசம் செய்யவேண்டும் என வைத்தியநாதய்யர்,
கக்கன் இங்கிருந்து ஆயுத்த பனிகளை
மேற்கொண்டனர் .

தமிழ் படைப்பாளி தி.சு.செல்லப்பா புகழ்தேடி தந்த 'சுந்தந்திர தாகம்'எனும் மூன்று தொகுப்புகளிலும் இக்கட்டிடம் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. 

கவிஞர் கண்ணதாசன், படைப்பாளி நா.பார்த்தசாரதி இங்கு வருவது உண்டு. 1972 ல் அங்கு ஜெயகாந்தனை சந்தித்த நினைவும் உண்டு. 

விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன், ஈழ தலைவர் அமிர்தலிங்கம்,
விவசாயகளின் தலைவர் நாராயணசாமி நாயுடு ஆகியோர் வந்துள்ளனர். 

1986ஆம் ஆண்டு டெசோ அமைப்பு மாநாடு  நடத்திய சமயம், அந்த அலுவலகம் வந்த திமுகவின் தென்
மண்டல அமைப்பு செயலாளர், சிறுகதை மன்னர்  எஸ்.எஸ்.தென்னரசு அவர்களை நான் தான் அலுவலகத்தின் முதல்தளத்திற்கு அழைத்து சென்றேன். இந்த கயிறை பிடித்துக் கொண்டு மேலே வர கஷ்டமாக இருக்கே. நீங்க சின்னப்பசங்க ,எளிதாகஏறிவிடுகின்றீர்கள் என சிரித்தவாறு கூறியது நினைவில் உள்ளது. 

இந்த கட்டிடத்திற்கும் எனக்கும் உள்ள உறவையும் சொல்வது அடியேனுக்கும் மகிழ்ச்சியானது என்பதால் சிலவற்றை மட்டும் சொல்கின்றேன்.

1972ல் அரசியலில் ஆர்வத்தில் நான் முதன்முதலாக நுழைந்த அரசியல் கட்சி அலுவலகம் இது தான். சட்டக்கல்லூரியில் படித்த போது கிராமத்தில் இருந்து மதுரை வந்து விடுவேன், மதுரையில் இருந்து திருநெல்வேலி எக்ஸ்பிரஸ், பாண்டியன் எக்ஸ்பிரஸ் இரயில் பயணம் மேற்கொண்டு சென்னை செல்வேன்.  பெரும்பாலும் பாண்டியன் எக்ஸ்பிரஸ் இரயில் பயணிப்பது வழக்கம். பயண நேரம் சற்று குறைவு. இந்த இரயில் பயணங்களுக்கு முன்பதிவு செய்ய இந்த அலுவலகத்தில் பணிபுரிந்த நண்பர்கள் உதவி செய்வார்கள்.  இங்கு வரும் போதெல்லாம்  கோபு அய்யங்கார்கடையில் பஞ்சுபோன்ற, மல்லிகைப்பூ போன்ற இட்லி என்பார்களே அப்படிப்பட்ட இட்லியும், காஃபியும் தவறாமல் சாப்பிடுவது வழக்கம். இது குறித்து  என் பிளாக்கரில் பதிவு செய்திருக்கின்றேன். 
நடிகர் விஜயகாந்த் அவர்களின் தந்தை அழகிரிசாமி மதுரை நகரமன்ற உறுப்பினராக இருந்தவர். அவருடன் எனக்கு பழக்கம் அங்கிருந்துதான் ஏற்பட்டது.கமல் தந்தையார் பரமக்குடி வக்கில் சீனிவாசன் இங்கே வருவதும்யுன்டு.

மறைந்த சின்னக்குத்தூசி, அன்று
திருவாரூர் தியாகராஜன்  மதுரையில் நெடுமாறனின் செய்தி ஏட்டில்
வேலையில் இருந்து போது இங்கு இருப்பார்,

இங்கே இன்னொரு கூடுதல் தகவலை குறிப்பிட வேண்டும். இதே வடக்கு சித்திர வீதியில் " கோபாலகிருஷ்ண கோன்" எனும் பழமை வாய்ந்த பதிப்பகமும் அப்படியே பழமை மாறாமல்  உள்ளது. இந்த பதிப்பகத்திற்கு ஒரு சிறப்பு உண்டு.  மதுரை பேரகராதியை இரண்டு தொகுப்புகளாக வெளியிட்டது அவர்களின் சாதனை எனப்படுகின்றது.

எனது நினைவுக்கு வந்த பெருந்தகை பெயர்களையும், யாருடைய பெயரும் விடுபட்டு விடக்க்கூடாது என்பதால் கால அவகாசம் எடுத்து நினைவுபடுத்தி சில பெயர்களையும்  இப்பதிவில்
குறிப்பிட்டுள்ளேன்.பழையநிகழ்வுகள்,
யாருடைய பெயராவது விடுபட்டு
இருப்பின் அதற்காக  வருத்தம் தெரிவித்துக் கொள்கின்றேன். 
#மதுரை
#சத்தியமூர்த்திவாசகர்சாலை
#KSRadhakrishnanpostings 
#KSRpostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன் 
25-08-2017

SC: RIGHT TO PRIVACY IS A FUNDAMENTAL RIGHT



In a landmark judgement that will impact the lives of 134 crore Indians and may give a massive jolt to government's Aadhaar push, a nine-judge Supreme Court Constitutional bench today (24.08.2017) said Right to Privacy is a Fundamental right. 

Delivering a unanimous verdict, Supreme Court overruled the earlier eight-judge bench judgment in MP Sharma case and six-judge bench judgment in Kharak Singh case -- both of which had ruled that privacy is not a Fundamental Right. 

The apex court said Right to Privacy is intrinsic to Right to Life granted under Article 21 of the Constitution. 

However, the court has not ruled on the validity of sharing information under Aadhaar today. Now a five-judge bench of the apex court will test the validity of Aadhaar from the aspect of privacy as a Fundamental Right. 

Senior lawyer Prashant Bhushan, who was party to the case said: "Any law, like the Aadhar Act or any other law, which seeks to restrict the right to privacy will have to be tested on the touchstone of Article 21,".

In the wake of data leaks and hacking incidents, Aadhaar critics argue that biometric data linked to the card could be misused by the government agencies. 

Petitioners had apprehended that the intimate personal details could land in the hands of undesirable elements. SC today said that Right to Privacy is part of an individual's life and personal liberty. 

Furthermore, the legal validity of Section 377 can come up again before the Apex court following the verdict on Right to Privacy. It can now be argued that punishing consenting adults for indulging in a homosexual relationship can be considered as violating their Right to Privacy. 

The contentious issue of privacy had emerged when the apex court was dealing with a batch of petitions challenging the government's move to make biometric-based Aadhaar mandatory for availing the benefits of various social welfare schemes. 

While reserving the verdict on August 2, the bench had voiced concern over the possible misuse of personal information in the public domain and said that protection of the concept of privacy in the all-pervading technological era was a "losing battle". 

#Right #Privacy #Fundamental #Constitution #India #law #legal #aadhar #SupremeCourt #Court

ஈழப்போராட்டம்

ஜெனிவாவில் ஸ்ரீலங்கா அளித்துள்ள முக்கியமான வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் முன்னேற்றங்களை காண்பிக்குமாறு #இலங்கை  அரசாங்கத்துக்கு ஐ.நா மனித உரிமைகள் பேரவை அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று அனைத்துலக மன்னிப்பு சபை (Amnestinternatonal)
கோரியுள்ளது.

2015ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானத்தின் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதன் முன்னேற்றங்களை உறுதிப்படுத்த வேண்டும் என இலங்கை அதிகாரிகளுக்கு ஐ.நாமனிதஉரிமைகள் பேரவை அழைப்பு விடுக்க வேண்டும்.

நல்லிணக்கப் பொறிமுறைகளுக்கான கலந்தாய்வு செயலணியின்பரிந்துரைக்கு அமைய,உண்மை,நீதி,இழப்பீட்டு பொறி
முறைகளுக்கான வீதி வரைவு ஒன்றை உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்த வேண்டும்.நீதி,உண்மை,இழப்பீட்டுபொறிமுறைகள் அனைத்துலக தரம் வாய்ந்ததாக இருக்கும் வகையிலும், சட்ட மறுசீரமைப்பு மற்றும் மீள நிகழாமையை உறுதி செய்வதற்கான ஏனைய நடவடிக்கைகளை எடுப்பதற்கும், ஐ.நா மனித உரிமைகள் பேரவை தொழில்நுட்ப மற்றும் நிதி உதவிகளை வழங்க வேண்டும்.
சட்டத்தை நடைமுறைப்படுத்தும் முகவர் அமைப்புகள், மனித உரிமை சட்டத்தை கடுமையாகநடைமுறைப்படுத்துவதற்கும் ஐ.நா அமைதிப்படையில் பங்கேற்கும் இலங்கையர்கள் அனைவருக்கும், பயிற்சி மற்றும் திட்டங்களில் பங்கேற்கும் இராணுவத்தினருக்கும் சமமாக மனித உரிமைகள் ஆய்வு இடம்பெறுவதை உறுதிப்படுத்துவதற்கும் இலங்கைகு ஐ.நா உதவ வேண்டும்.
அனைத்துலக சட்டம் அல்லது ஏனைய மோசமான மனித உரிமை மீறல்கள் தொடர்பான குற்றங்கள் தொடர்பான விசாரணைகள் மற்றும் வழக்கு நடவடிக்கைகளுக்கு பரஸ்பர சட்ட உதவிகளையும், ஒத்துழைப்பையும் வழங்க வேண்டும்.” என்றும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையிடம் அனைத்துலக மன்னிப்புச்சபை கோரியுள்ளது.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர் அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ள நிலையில், பேரவைக்கு சமர்ப்பித்துள்ள அறிக்கையில இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.


மகாபாரதம்:ஒருபதிவு

மகாபாரதம்:ஒருபதிவு

'தற்செயல்கள் என்பது தற்செயல்களே அல்ல, அவற்றுக்குப் பின்னே நம்
நற்செயல்களும்,முற்செயல்களும்,நமதுஇயல்புகளை பின்னிப் பிணைந்தது'

பஞ்சபாண்டவர்களில் ஒருவரான சஹாதேவன் சந்தைக்குள் நுழைந்தான். அழகான குதிரையை அவனும் பார்த்தான். உடனே குதிரையின் உரிமையாளரை நெருங்கி, "குதிரை என்ன விலை? என்று கேட்டான்.

குதிரையின் உரிமையாளரோ,

 "ஐயா! இந்த குதிரை விற்பனைக்கு அல்ல. நான் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொன்னால், குதிரையை இலவசமாகவே கொடுப்பேன்" என்றார். சகாதேவன் உடனே, "சரி கேள்வியைச் சொல்லுங்கள்" என்றான்.

குதிரையின் உரிமையாளர், "நன்றாகக் கவனியுங்கள்! பிறகு பதில் சொல்லுங்கள்!

ஒரு பெரிய கிணறு. அதில் உள்ள தண்ணீரைக் கொண்டு ஏழு சிறிய கிணறுகளை நிரப்பலாம். ஆனால், அந்த ஏழு கிணறுகளில் இருக்கும் தண்ணீரை எடுத்து, மறுபடியும் அந்த பெரிய கிணற்றில் ஊற்றினால், பெரிய கிணறு நிரம்பவில்லை.

இது ஏன்? நன்றாக யோசித்து பதில் சொல்லுங்கள்" என்றார். சஹாதேவனால் பதில் சொல்ல முடியவில்லை. அங்கேயே சந்தையில் உட்கார்ந்து விட்டான்.

சற்று நேரத்தில்.... சகாதேவனை தேடிக்கொண்டு நகுலனும் சந்தைக்கு வந்து விட்டான். அவனும் குதிரையைப் பார்த்து, அதன் அழகில் மயங்கிப் போய் விலை கேட்டான்.

குதிரையின் உரிமையாளர், நகுலனிடம் ஒரு கேள்வி கேட்டார். "ஐயா! நான் ஒரு கேள்வி கேட்கிறேன். பதில் சொல்லிவிட்டு, குதிரையை இலவசமாகவே பெற்றுக்கொள்ளுங்கள்.

துணி தைக்கும் ஊசி இருக்கிறது அல்லவா? அதன் ஓட்டையின் வழியாக ஒரு யானை புகுந்து, அடுத்த பக்கம் போய்விட்டது. ஆனால் யானையின் வால் மட்டும் அந்த ஓட்டையின் வழியாகப் போக முடியவில்லை. ஏன்?" என்றார்.

நகுலனால் பதில் சொல்ல முடியவில்லை. அவனும் சந்தையில் உட்கார்ந்திருந்த சஹாதேவனுடன் சேர்ந்து உட்கார்ந்துவிட்டான்.

அதன் பிறகு ஒரு சில நிமிடங்களில், அர்ஜுனனும் அங்கு வந்தான். அவனும், குதிரையைப் பார்த்து, அதன் அழகில் மயங்கிப் போய் விலை கேட்டான். குதிரையின் உரிமையாளர், அர்ஜுனனிடமும் கேள்வி கேட்டார்.

"ஐயா! ஒரு வயல் காட்டில் நன்றாக விளைந்து இருந்தது. அதற்கு வேலியெல்லாம் போட்டு பாதுகாப்பாக வைத்து இருந்தார்கள். ஆனால் அறுவடை காலத்தில், அந்த வயல் காட்டில் எதுவுமே இல்லை. வேலியெல்லாம் அப்படியே இருந்தது. அப்படி இருந்தும் விளைந்த தானியங்களை எல்லாம் யார் எடுத்தார்கள்? 

பதில் சொல்லிவிட்டு, குதிரையை கொண்டு செல்லுங்கள்" என்றார். அர்ஜுனனால் பதில் சொல்ல முடியவில்லை. அவனும் ஆலோசனை செய்தபடி அங்கேயே உட்கார்ந்து விட்டான்.

சகோதரர்கள் மூவரும் இப்படியே உட்கார்ந்திருக்க, அரண்மனையில் அவர்களைக் காணாமல், தர்மர் திகைத்தார். பீமனைக் கூப்பிட்டு, "தம்பி! நம் தம்பிகள் மூவரையும் நீண்ட நேரமாக காணவில்லை. நீ போய், அவர்கள் எங்கு இருந்தாலும் தேடி அழைத்து வா!" என்றார்.

பீமனும் போய் தேடிப்பிடித்து, அர்ஜுனன், நகுலன், சஹாதேவன் மூவரையும் அழைத்து வந்தான். பாஞ்சாலியோடு அரியணையில் அமர்ந்திருந்த தர்மர், அவர்களைப் பார்த்ததும், "அர்ஜுனா! நீண்ட நேரமாக நீயும்,தம்பிகளும் இங்கு இல்லை. எங்கே போய் இருந்தீர்கள்?" எனக் கேட்டார்.

அதற்குப் பதிலாக அர்ஜுனன், நடந்ததை எல்லாம் சொல்லி, குதிரை உரிமையாளர் கேட்ட மூன்று கேள்விகளையும் சொன்னான். 

அதைக் கேட்டதும் தர்மர் நடுங்கினார். அதைப் பார்த்த தம்பிகள்  எல்லாரும் திகைத்தார்கள். 

"அண்ணா! நீங்கள் நடுங்கும்படியாக என்ன நடந்தது?" எனக் கேட்டார்கள்.

தர்மர் பதில் சொல்லத் தொடங்கினார்.....

"தம்பிகளே! எதிர்காலத்தில் நடக்கப்போகும் விபரீதங்களை, அந்த மூன்று கேள்விகளும் சொல்கின்றன. அதை நினைத்துத்தான் நடுங்கினேன். ஒவ்வொன்றாகச் சொல்கிறேன் கேளுங்கள்....." என்று விரிவாகக் கூறினார்.

"உங்களிடம் கேள்வி கேட்டவன் கலி புருஷன். அவன் கேட்ட முதல் கேள்வியில் பெரிய கிணறு என்பது பெற்றோர்கள். ஏழு சிறிய கிணறு என்பது அவர்களது பிள்ளைகள். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை, அவர்கள் எவ்வளவு பேர்களாக இருந்தாலும் சரி! அவ்வளவு பிள்ளைகளையும் காப்பாற்றுவார்கள். இதைத்தான் பெரிய கிணற்றின் தண்ணீரைக் கொண்டு சிறிய கிணற்றை நிரப்பினார்கள் என்றது குறிக்கிறது. ஆனால் அந்த பிள்ளைகளோ, அவ்வளவு பேர்களும் சேர்ந்தால் கூட, தங்கள் பெற்றோரை காப்பாற்ற மாட்டார்கள். இதைத்தான் ஏழு சிறிய கிணறுகளில் உள்ள தண்ணீரைக் கொண்டு, பெரிய கிணற்றை நிரப்ப முடியவில்லை என்பது குறித்தது.

அடுத்து இரண்டாவது கேள்விப்படி, இனி வருங்காலங்களில் அக்கிரமங்கள், முறைகேடான செயல்கள் ஏராளமாக நடைபெறும். ஆனால் நல்ல செயல்கள் நடைபெறுவது மிகவும் கடினமாக இருக்கும். இதைக்த்தான் யானையே போன வழியில், அதன் வால் போக முடியவில்லை என்று சொல்லி இருக்கிறார்.

அடுத்து மூன்றாவது கேள்வியில் பயிர்கள் என்பது மக்களைக் குறிக்கும், பாதுகாக்கும் வேலி என்பது அதிகாரிகளைக் குறிக்கும். அதாவது மக்களைப் பாதுகாக்க வேண்டிய அதிகாரிகளே அவர்களை அழித்து விடுவார்கள். மக்கள்தான் வறுமையில் வாடுவார்களே தவிர, அதிகாரிகள் செழிப்பாகத்தான் இருப்பார்கள். இதைத்தான், வேலி அப்படியே இருக்க,  பயிர்கள் எப்படி அழிந்தன என்ற கேள்வி குறிப்பிடுகிறது என்று சொல்லி முடித்தார் தர்மர்.

எங்கோ படித்ததில் பிடித்தது.
#மகாபாரதம்

Thursday, August 24, 2017

"விதியே விதியே தமிழச் சாதியை என்செய..."

முதல்வர் பதவியை இந்தியத்
தலைவர்கள் பலர் அலங்கரிதனர்.
அவர்களின் தகுதி, நேர்மையால் அந்த பதவி மாண்பு பெற்றது. இன்றைக்கு முதலமைச்சர் பதவிக்கான கீர்த்தியை பாழ்படுத்துகின்றனர் சில அநாமதேயங்கள்... நேற்று முளைத்த பதர்கள் எல்லாம் தகுதியே தடை, ஓட்டுக்கு துட்டு என்று அவர்களின் வழியில் முதல்வராகிவிடுகிறார்கள்.

அமைதியான வாழ்க்கை

சுயமரியாதையோடு எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் இருந்தாலே நோய், நொடி, பிணி, மன அழுத்தம் இல்லாத 
  இந்த போட்டியான உலகில் எவருக்கு கிடைக்கும்.

Wednesday, August 23, 2017

மனம் திறந்து பேசுகின்றேன்.

மனம் திறந்து பேசுகின்றேன்.

எனது அரசியல் வாழ்வில் நேற்று நடந்த தலைவர் கலைஞர்-அண்ணன் வைகோ சந்திப்பு மிகுந்த  மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியையும் அளித்தது.

1996க்கு பின்னர் எந்த தேர்தலிலும் போட்டியிடவில்லை.
பெருந்தலைவர் காமராசர் அறிமுகத்துடன் அரசியலில் நுழைந்து, 
ஸ்தாபன காங்கிரஸ்-ஆளும் இந்திரா   காங்கிரஸ் இணைப்பு, ஈழப்பிரச்சனை
மதிமுக உதயம், நள்ளிரவில் தலைவர் கலைஞர் கைது  போன்ற பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளேன். 

நேற்று தலைவர் கலைஞர் அவர்களை,  செயல்தலைவர் முன்னிலையில் அண்ணன் வைகோ அவர்கள் சந்தித்தது மகிழ்ச்சியையும் நெகிழ்ச்சியையும் 
அளித்தது. 

இந்த சூழலில் நட்பும் உறவும் நீடிக்க வேண்டும். நீடிக்க வேண்டியது காலத்தின் அவசியம். 

என்னைப் பற்றி கழகத்தினர் அதிகம் அறிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் பெருந்தலைவர் காமராசர், பழ.நெடுமாறன்,  எம்ஜிஆர், விடுதலைப் புலிகள் இயக்க தலைவர் தம்பி பிரபாகரன், அண்ணன் வைகோ, தலைவர் கலைஞர் ஆகியோரால் விரும்பப்பட்டவன் அடியேன் என்பதை மகிழ்ச்சியுடன் சொல்வேன். 

நேற்று நடந்த சந்திப்பு இருவருக்கும் இடையே இருந்த மனமாச்சர்யங்களை நீக்கி இருக்கும் என நம்புகிறேன். இந்த சந்திப்பு தமிழக மக்களுக்கு நிச்சயம் பலனளிக்கும் என நம்புகிறேன். இது என் உள்ளர்ந்த தனிப்பட்ட கருத்து. 

2001, 2004 தேர்தல்களம், 2016 ஆகிய காலக்கட்டத்தில் நடந்த குழப்பங்களால் ஏற்பட்ட  பிரிவுகளின் போது நான் பட்ட மனவேதனைகளை வார்த்தைகளால் சொல்ல முடியாது. ஆனால் நேற்றைய சந்திப்பு அத்தனை காயங்களுக்கும் நிரந்தர நிவாரனியாக இருந்தது. உள்ளத்தில் உவகை மேலோங்கியது.   

தேசிய நதிநீர் இணைப்பு குறித்து உச்சநீதி மன்றத்தில் பெற்ற தீர்ப்பு, 
கூடங்குளம் வழக்கு , கண்ணகி கோட்டம் பிரச்சனையில் பெற்ற தீர்ப்பு, சட்டமேலவை  அமைப்பது தொடர்பாக உயர்நீதி மன்ற தீர்ப்பு, ஆலங்குளம் சிமெண்ட் தொழிற்சாலை வழக்கு, 
விவசாயிகள் மீது ஜப்தி நடவடிக்கைகள் ரத்து, இதுபோன்ற பல்வேறு வழக்குகளில் நான் பெற்ற தீர்ப்பும், அந்த தீர்ப்புகளின் மூலம் மக்களுக்கு கிடைத்த நன்மைகள் என் அரசியல் பணிக்கு கிடைத்த பலனாக கருதுகிறேன். இவற்றில் தன்நிறைவு அடைகின்றேன். ஆகவே  நேற்றைய சந்திப்பின் பலனை தமிழக மக்கள் நிச்சயம் அடைவார்கள் என்ற நம்பிக்கை நிறைய உண்டு.

#கலைஞர்_வைகோசந்திப்பு
#KSRadhakrishnanpostings
#KSRpostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
23-08-2017

Article 356

இன்றைய (27/8/2017)ஜூனியர் விகடன் இதழில் விஐபி கேள்வி என்ற தலைப்பிடப்பட்ட பகுதியில் என்னுடைய கேள்வியும் பிரசுரமாகி உள்ளது. 

அந்த பதிவில் , அரசியல் சட்டம் 
356 ஆவது பிரிவை பயன்படுத்தி70 ஆண்டுகளில் மத்திய அரசு பல மாநில அரசுகளை 125 முறை கவிழ்த்துள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.   

அரசியலமைப்பு சட்டத்தை 67
ஆண்டுகளில்  101  முறைகள் திருத்தப்ப்ட்டுள்ளது..

#ஜூனியர்விகடன்
#KSRadhakrishnanpostings
#KSRpostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
23-08-2017

India at 70: how are we doing?

இந்தியா விடுதலை பெற்று 70 ஆண்டுகள் நிறைவாகிவிட்டன. விவசாயம், மக்கள்  நல்வாழ்வு, கல்வி போன்றவை நமது திருப்திக்கேற்ற வகையில் இயங்கவில்லை, ஏனெனில் மக்கள் தொகை பெருகிக் கொண்டே போகின்றது. மாற்றங்களும் சீர்திருத்தங்களும் ஓரளவே திருப்தி தரக்கூடிய அளவிலே உள்ளன. இது குறித்து பேராசிரியர் Sudipto Muldrek  மின்ட் இதழில் கடந்த 18/08/2017 அன்று எழுதிய செய்தி கட்டுரை வருமாறு.,

In the seven decades since independence, India has emerged as a robust democracy and a rising economy but it also has a long list of unfinished tasks
India is observing several milestones that are nested one into another. The Modi government completed three years of its term in May earlier this year. July marked the completion of 26 years of economic reforms. The 15th of August earlier this week marked the 70th anniversary of our independence. In 1947, there were many who doubted whether the new nation would survive. Yet here we are today, a robust if somewhat chaotic and noisy democracy. A good time to look back and take stock of what has been achieved and what has not, which sets the agenda of unfinished tasks for the future.
Taking stock through the lens of economic performance, the average Indian is more than seven times richer today compared to 70 years ago. Per capita annual income is now Rs82,269 compared to Rs11,570 in 1950-51, measured at constant 2011-12 prices (Chart 1). The pace of change has been uneven over time. Real per capita income doubled during the first four decades, rising from Rs11,570 in 1950-51 to Rs24.634 in 1990-91. But it more than doubled again within the next 20 years, rising to Rs60,476 in 2010-11. It then increased by a further one-third by 2015-16.

A part of this growth acceleration was the natural consequence of structural changes as the faster growing sectors gained in weight compared to the slower growing sectors. However, the sustained increase in growth observed during the last three decades compared to the first four is attributable in large measure to a paradigm shift in the policy regime. The dysfunction of the “licence permit” control regime had already become evident since the mid-1960s, and some reforms were initiated during the 1980s. But comprehensive reforms in industrial policy, trade and exchange rate policy, fiscal reforms and financial sector reforms were initiated only after the 1991 balance of payments crisis. It has subsequently been sustained by successive governments under different ruling parties.

The large rise in real per capita income despite the growth of population from 359 million to 1.3 billion over these 70 years reflects an even faster rise in national income. It rose from under Rs5 trillion to over Rs120 trillion at constant 2011-12 prices over the same period (Chart 1). In nominal dollar terms, India is now a $2.3 trillion economy, the seventh largest in the world. It is the third largest after China and the US in purchasing power parity (PPP) terms. India is also now considered the fastest growing major economy in the world with growth rates averaging over 7% in recent years, though some experts question that figure. Thus, while the pace of change has varied between different periods, India’s overall growth performance during the past 70 years is clearly impressive.

The country has also registered significant gains in health and education standards during the seven decades. On the education front only 18% of the population was literate in 1951. That figure has now risen to over 74%. The gross enrollment rate in elementary education has risen from 32.1% in 1950-51 to 96.6% at present ​ (Chart 2). In health, the infant mortality rate has declined from 146 in 1951 to 37 at present. The maternal mortality rate estimates available since 1997-98 indicate that it has gone down from 398 to 167. A more comprehensive measure of the health status of a country is the expectation of life at birth. Data available since the 1970s shows that this has gone up from only 49.7 years in 1970-75 to 66.1 years during 2006-10 (Chart 3).


That was the good news. Now look at the other side of the picture. Its impressive growth performance notwithstanding, with a per capita income of $1,709, India is still classified as a lower middle-income country, ranked 134th by the World Bank. Compare that with China which had a per capita income similar to India’s in 1951. After decades of very rapid growth, China is now ranked 75th with a per capita income of $8,125. At $11 trillion, five times the size of India, it is the second largest economy in the world after the US, and the largest in PPP terms.

The proportion of India’s population below the Tendulkar poverty line has declined from over 45% in 1993-94 to 21.9% today. But that still means there are nearly 270 million people living on the margins of survival. India is home to the largest share of the world’s poor.

Underlying this grim statistic, there is the challenge of employment, the single most important economic challenge facing the economy today. Unfortunately, the three most important sectors requiring urgent reforms to address this challenge were simply bypassed by the reforms of the past 25 years, i.e., agriculture, education and health.

Agriculture was the main focus of reforms in the late 1960s, when India was food deficit and desperately begging abroad for food aid. But after India became self-sufficient in food, agriculture has been neglected. Similarly, while the indicators show improvement in the education and health status of the country compared to 1951, the pace of improvement over 70 years has been excruciatingly slow. Hence India shamefully is still ranked at 131 out of 188 countries in the Human Development Index rankings. Besides, there is a large variation around the improving national indicators, such as they are, and many states are lagging far behind. But these sectors have also not been included in the post-1991 reform agenda.

Seven decades of growth have been accompanied by a dramatic change in the production structure. At independence, agriculture, including animal husbandry, fishery and forestry, accounted for 54% of the gross domestic product (GDP), followed by services at 32% and industry at 14%. Today agriculture accounts for only 15% of GDP, with services accounting for 62% and industry for the balance 23%. But agriculture still accounts for about 49% of the workforce.

Strategically our most important policy failure has been the failure to draw out the growing labour force dependent on agriculture for more productive non-agricultural employment. As I had mentioned in my previous column (goo.gl/7DFtsy), the intense pressure of population on land has pushed the land:man ratio down to less than 0.2 hectares per head of rural population. Over 82% of rural households are either landless or near landless, operating holdings of less than a hectare. Optimizing the use of scarce land will require a significant reorganization of agricultural production, a massive expansion of irrigation, which still covers only about 30% of cropped area, a shift to higher value-added products, and complete reform of agricultural markets. So far none of this is happening.

Even if public investment and reforms in agriculture were to happen, it will simply not be possible for all these households to make a decent living out of their tiny plots of land. Thus the challenge of employment will ultimately have to be addressed through the expansion of productive employment opportunities outside agriculture, especially in the organized sector. However, employment has hardly grown in recent years, according to recent Labour Bureau surveys, and the organized sector remains a little island in a sea of low productivity small and medium enterprises.

The recently released Volume II of the Economic Survey has cautioned that in view of the headwinds facing the economy, even maintaining a growth rate of 7% would be difficult in the medium term, let alone higher growth to step up the absorption of workers in employment outside agriculture.

These demand-side constraints are compounded by a serious reform deficit on the supply side. For workers to be productively employed at decent wages they have to have the necessary skills. But skilling is not possible if the large majority of workers lack the foundation of basic education. Though formally the target of universal basic education finally seems within reach, learning outcomes have remained very poor.

The Annual Status Of Education Report report for 2016 has again pointed out that half the class V students could not read a class II text or do a simple subtraction meant for class II. Such poor learning outcomes were also confirmed by the well-known global Trends in International Mathematics and Science Study test for 2008, where Indian students have been ranked 43rd and 47th out of 49 participants. Similarly, in the Organisation for Economic Co-operation and Development’s globally conducted Programme for International Student Assessment test for 2009, Indian students were ranked at the bottom at 72nd and 73rd out of 74th contestants.

Complete reform of a failing basic education system in the public sector along with effective regulation of the private sector is urgently required. Much the same could be said about the health sector. But both sectors have been largely bypassed by reform.

How is it that agriculture, education and health, three vital sectors affecting the bulk of India’s population, have been so neglected in the reform agenda of the past 25 years? Politically the Congress party has been in power at the Centre for a major part of this period and could be held accountable, but the National Democratic Alliance governments have also been in power for several years.

Besides, agriculture, education and health are all state subjects. As former Union minister P. Chidambaram astutely pointed out in a recent article (goo.gl/MQ7uud), the Congress has not been in power in many of the poor-performing states like Uttar Pradesh, Bihar, West Bengal, and Odisha for several years.

So it is not a question of this or that party being responsible for these reform deficits, but more fundamental forces that drive their agendas. Evidently, those who would benefit from the reforms in agriculture, education and health may be numerically large but have lacked any effective political “voice”. Do we have reason to believe that this is likely to change?

Sudipto Mundle is emeritus professor at the National Institute of Public Finance and Policy and was a member of the Fourteenth Finance Commission.


#indian_economy
#indian_development
#இந்திய_பொருளாதாரம்
#இந்திய_வளர்ச்சி
#KSRadhakrishnanpostings
#KSRpostings
கே எஸ்.இராதாகிருஷ்ணன்.
22-08-2017

வி.எஸ். நைப்பால் (V.S. Naipaul) - நோபல் பரிசு பெற்ற இங்கிலாந்து இலக்கியவாதி.

இங்கிலாந்தை சேர்ந்த புகழ்பெற்ற படைப்பாளியும் இலக்கியத்துக்கான நோபல் பரிசை வென்றவருமான வி.எஸ். நைப்பால் (V.S. Naipaul)  அவர்களின் பிறந்ததினம் ஆகஸ்ட் 17. அவரை குறித்த அழகிய முத்துப் பதிவுகள்.




- இங்கிலாந்தின டிரினிடாடில் சாகுவானஸ் என்ற இடத்தில் 1932ல் பிறந்தார். வித்யாதர் சூரஜ் பிரசாத் நைப்பால் என்பது இவரது முழுப்பெயர். இவரது பாட்டனார்கள் இந்தியாவிலிருந்து புலம்பெயர்ந்தவர். இவரின் தந்தை ஒரு பத்திரிக்கையாளர். 


- சிறுவயதிலேயே தானும் ஒரு எழுத்தாளராக வேண்டும் என்று விரும்பினார். பள்ளிப் படிப்புக்கு பின்னர் குவின்ஸ் ராயல் கல்லூரியில் பயின்றார். அரசு உதவித்தொகையை கொண்டு, ஆக்ஸ்போர்டில் உயர் கல்வி பயின்றார். சிறிது காலம் பி.பி.ஜியில் கரீபியன் வாய்சஸ் நிகழ்ச்சியை எழதித் தயாரித்தார்.

 - நூல்கள் எழுதும் இவரது முயற்சி ஆரம்பத்தில் வெற்றி பெறவில்லை. 1952ல் ஸ்பெயன் சென்றார். அடுத்த ஆண்டு தந்தை இறந்ததால் வருமானத்துக்கு பல்வேறு பணிகளில் ஈடுபட்டார்.

- ‘போகார்ட்’ என்ற தலைப்பில் 1955ல் இவரது கதை முதலமுதலில் 1995ல் வெளிவந்தது. தொடர்ந்து எழுதினாலும் அவரால் பெரிதும் சம்பாதிக்க இயலவில்லை. 

- ‘மிஸ்டர் ஸ்டோன் அன்ட் தி நைட்ஸ் கம்பாணியன்’  என்ற முதல் நாவலை 1963ல் வெளியிட்டார். இந்த நாவலுக்கு ‘ஹாவ்தார்ன்டே’ விருது கிடைத்தது. 
- ‘ஏ பிளாக் ஆன் தி ஐலேண்ட்’1964ல் வெளியான நாவல் ஓரளவிற்கு வர்த்தக ரீதியில் வெற்றி பெற்றது. அடுத்தடுத்து வெளிவந்த இவரது நூல்கள் விமர்சன அரங்கில் பெரிதும் பாராட்டப்பட்டது. சிறுகதைகள், புதினம், உரைநடை நூல்கள் பலவற்றை இவர் எழுதியுள்ளார்.

ஈரான், இந்தோனேசியா, ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு அதன் பயண அனுபவங்களை தழுவி ஒரு நூல் வெளியானது. ‘மிஸ்டிக் மெசைர்’ என்று 1957ல் வெளிவந்த இந்த திரைப்படம் இவரின் நாவலைத் தழுவி எடுக்கப்பட்டது.

இந்தியாவில் ‘இல்லஸ்ட்ரேட்டட் வீக்லி’ இதழுக்காக ‘லெட்டர் ஃபிரம் லண்டன்’ என்ற மாதாந்திர கட்டுரையை எழுதினார். பல்வேறு நாடுகளின் அடிமை முறைகள், உள்ளூர் புரட்சிகள், அரசியல் நிலவரங்கள், ஊழல்கள், ஏழைகள், ஒடுக்கப்பட்டோரின் நிலை, கொரில்லா போர் என்று பல்வேறு நிகழ்வுகளை குறித்தும் எழுதியுள்ளார். 

மூன்றாம் உலக நாடுகளில் நிலவும் பண்பாட்டுச் சிக்கல்களைப் பற்றியும் தன் எழுத்தால் பதில் அளித்துளார். இவரது ‘ஏ பென்ட் இன் தி ரிவர்’ விமர்சன ரீதியிலும், வர்த்தக ரீதியிலும் பெரிய வரவேற்பை பெற்றது. ‘இன் ஏ ஃப்ரீ ஸ்டேட்’ என்ற நாவல் இவரது தலையாய படைப்புகளில் ஒன்று.

‘ஏ ஹவுஸ் ஃபார் மிஸ்டர் பிஸ்வாஸ் ’,‘ஹாஃர்ப் ஏ லைஃப்’,‘ஏ ரிடர்ன் ஆஃப் ஈவா பெரோன் அன்ட் தி கில்லிங்ஸ் டிரினிடாட்’,‘ஏ பென்ட் இன் தி ரிவர்’,‘ஏ வே இன் தி வேர்ல்ட்’,‘ஆன் ஏரியா ஆஃப் டார்க்னஸ்’,‘அமாங் தி பீலீவர்ஸ்: ஆன் எக்கனாமிக் ஜர்னி’,‘தி லாஸ் ஆஃப் எல்டொரேடோ’ உள்ளிட்ட அவரது படைப்புகளில் குறிப்பிடத்தக்கவை.

புக்கர் பரிசு, டேவிட் , கோகன் பிரிட்டிஷ் இலக்கியப் பரிசு மற்றும் ஸ்மிம்த இலக்கிய பரிசையும், நைட் பட்டம், கேம்பிரிட்ஜ், கொலம்பியா பல்கலைக்கழக சிறப்பு முனைவர் பட்டங்களையும் பெற்றவர். 2001ல் இலக்கியத்திற்கான நோபல் பரிசை வென்றவர். உலகின் தலைசிறந்த படைப்பாளிகளுள் ஒருவராகப் போற்றப்படும் வி.எஸ். நைப்பால் இன்று 86வது வயதில் அடியெடுத்து வைக்கின்றார்.

#நைப்பால்
#naipaul
#nobel_laurete
#KSRadhakrishnanpostings
#KSRpostings
கே எஸ்.இராதாகிருஷ்ணன்.
22-08-2017

Tuesday, August 22, 2017

புத்துயிர் பெறுமா ஆங்கிலேயர்களின் எஸ்கேப் ரோடு.

கொடைக்கானல் முதல் மூணாறு வரை உள்ள சாலையே ஆங்கிலேயர்களின் எஸ்கேப் ரோடு என்று அழைக்கப்படுகிறது.

சுமார் 81 கி.மீ. நீளத்தில் கொடைக்கானல் - மூணாறு சாலை தமிழகத்தின் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் இருந்து தேனி மாவட்டம் வழியாக கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்துடன் முடிகிறது.



தென்னிந்திய மலைப்பகுதிகளில் மிக உயர்ந்த சாலையாக இருந்த இந்த சாலை கடல் மட்டத்தில் இருந்து சுமார் 2480 மீட்டர் உயரத்தில் (அதாவது 8140 அடி) ஆங்கிலேயர்களால் அமைக்கப்பட்டது. வந்தரவு சிகரத்தில் அமைந்துள்ள இந்த சாலை 1942ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டு 1990ஆம் ஆண்டில் மூடப்பட்டது. 

வத்தலகுண்டில் இருந்து கொடைக்கானலுக்கு 1915ஆம் ஆண்டு சாலை அமைக்கப்பட்டது. பின் 1925ஆம் ஆண்டு கொடைக்கானலில் இருந்து பேரிஜம் ஏரி வழியாக டாப் ஸ்டேசன் வரை சாலை அமைக்கப்பட்டது. மூணாறு முதல் கொச்சி வரையிலான சாலையையும் இணைக்கும் இந்த எஸ்கேப் ரோடு வழியாக 11 மணி நேரத்தில் கொச்சியை அடையலாம். மழைக்காலங்களில் இந்த சாலையை பயன்படுத்த முடியாது. இந்த சாலையில் ஆபத்தான 17 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன.

இரண்டாம் உலகப் போரின் போது, 1942ஆம் ஆண்டு ஜப்பான், அன்றைய மதராஸை (இன்றைய சென்னையை) தாக்கியது. இதனால் அச்சம் கொண்ட பல ஆங்கிலேய குடும்பங்கள் பல கொடைக்கானலுக்கு இடம் பெயர்ந்தன. தாக்குதல் அதிகரிக்கும் பட்சத்தில் இந்த சாலை வழியாக கொச்சி துறைமுகத்தின் தப்ப திட்டமிட்டனர். இதன் காரணமாக தான் இந்த சாலைக்கு எஸ்கேப் ரோடு என்று பெயரிட்டனர். 

1990வரை பயன்பாட்டில் இருந்த இந்த எல்லையோர சாலை தமிழக - கேரள வன எல்லை பிரச்சனை தொடர்பாக அதன் பராமரிப்பு பணிகள் கைவிடப்பட்டது. பயன்பாட்டில் இல்லாத சாலையை கேரள மாநில அரசு அதன் எல்லையான டாப் ஸ்டேசன் வரை நன்றாக பராமரித்து வருகிறது.

#கொடைக்கானல்_மூணாறு_கொச்சி
#எஸ்கேப்_ரோடு
#escape_road
#kodaikanal_munnar
#KSRadhakrishnanpostings
#KSRpostings
கே எஸ்.இராதாகிருஷ்ணன்.
22-08-2017

புத்துயிர் பெறுமா ஆங்கிலேயர்களின் எஸ்கேப் ரோடு.


------------------------------------------------------------------
கொடைக்கானல் முதல் மூணாறு வரை உள்ள சாலையே ஆங்கிலேயர்களின் எஸ்கேப் ரோடு என்று அழைக்கப்படுகிறது. 

சுமார் 81 கி.மீ. நீளத்தில் கொடைக்கானல் - மூணாறு சாலை தமிழகத்தின் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் இருந்து தேனி மாவட்டம் வழியாக கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்துடன் முடிகிறது. தென்னிந்திய மலைப்பகுதிகளில் மிக உயர்ந்த சாலையாக இருந்த இந்த சாலை கடல் மட்டத்தில் இருந்து சுமார் 2480 மீட்டர் உயரத்தில் (அதாவது 8140 அடி) ஆங்கிலேயர்களால் அமைக்கப்பட்டது. வந்தரவு சிகரத்தில் அமைந்துள்ள இந்த சாலை 1942ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டு 1990ஆம் ஆண்டில் மூடப்பட்டது. 

வத்தலகுண்டில் இருந்து கொடைக்கானலுக்கு 1915ஆம் ஆண்டு சாலை அமைக்கப்பட்டது. பின் 1925ஆம் ஆண்டு கொடைக்கானலில் இருந்து பேரிஜம் ஏரி வழியாக டாப் ஸ்டேசன் வரை சாலை அமைக்கப்பட்டது. மூணாறு முதல் கொச்சி வரையிலான சாலையையும் இணைக்கும் இந்த எஸ்கேப் ரோடு வழியாக 11 மணி நேரத்தில் கொச்சியை அடையலாம். மழைக்காலங்களில் இந்த சாலையை பயன்படுத்த முடியாது. இந்த சாலையில் ஆபத்தான 17 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன.

இரண்டாம் உலகப் போரின் போது, 1942ஆம் ஆண்டு ஜப்பான், அன்றைய மதராஸை (இன்றைய சென்னையை) தாக்கியது. இதனால் அச்சம் கொண்ட பல ஆங்கிலேய குடும்பங்கள் பல கொடைக்கானலுக்கு இடம் பெயர்ந்தன. தாக்குதல் அதிகரிக்கும் பட்சத்தில் இந்த சாலை வழியாக கொச்சி துறைமுகத்தின் தப்ப திட்டமிட்டனர். இதன் காரணமாக தான் இந்த சாலைக்கு எஸ்கேப் ரோடு என்று பெயரிட்டனர். 

1990வரை பயன்பாட்டில் இருந்த இந்த எல்லையோர சாலை தமிழக - கேரள வன எல்லை பிரச்சனை தொடர்பாக அதன் பராமரிப்பு பணிகள் கைவிடப்பட்டது. பயன்பாட்டில் இல்லாத சாலையை கேரள மாநில அரசு அதன் எல்லையான டாப் ஸ்டேசன் வரை நன்றாக பராமரித்து வருகிறது.

#கொடைக்கானல்_மூணாறு_கொச்சி
#எஸ்கேப்_ரோடு
#escape_road
#kodaikanal_munnar
#KSRadhakrishnanpostings
#KSRpostings
கே எஸ்.இராதாகிருஷ்ணன்.
22-08-2017

Qualifiers of Democracy


---------------------------------------
 The main reason for all these freedoms and rights within modern democracy, which actually limit the power of the people within it, is that the liberal concept of representative, constitutional and limited government is prior to the concept of democracy, both historically and logically ,within the modern Western political tradition, the main source of modern democracy. When we say ‘democracy’ we are in effect using a shorthand expression for ‘liberal democracy’.

 Liberal democracy is not the only qualifier for democracy – there are many different versions and varieties of the principle. Some of these have to do with the simple question of range, method or function. Hence ancient Greek democracy was a form of direct democracy, where the members of the polis took direct votes on what should be done. Some Swiss cantons still operate today with this method, and some townships in New England still exercise a residual form at town meetings. But generally speaking modern democracies, because of the numbers and distances involved, and the exigencies of the modern economy, are representative democracies, where the electorate elects representatives, who are the ones who actually vote on policy decisions. Referenda and ballot measures in various American states [and also in many European states] are attempts to replicate the direct popular control of direct democracy, but the popular will is mostly shown by voting for ‘representatives’, ‘delegates’ or ‘deputies’ to vote in legislative assemblies, or presidents and chancellors to exercise executive power, representing the popular will.

Some other ‘democracies’
------------------------------------------
Local democracy refers to popular decision-making at the communal level; federal democracy to multi-layered structures of political power whether sovereignty is split between regional states within the federal whole and between the federal and the regional state level.

Parliamentary democracy refers to democratic systems that place popular sovereignty in an elected assembly, while presidential democracy is a system that puts most power in the hands of an elected chief executive. 

Aleatory democracy, where power is distributed by lottery, was quite popular in ancient Athens, and is still present in many modern democracies in the method used to select jurors for court trials.

Participatory democracy is more a definition of hope than reality, but describes systems where the whole populace takes an active role in government, much as was the Athenian, ancient ideal.

Monitory democracy is a term coined to describe the prevalence of non-governmental organizations and watchdogs in today’s democracies trying to keep elected governments on the straight and narrow.

Banyan democracy describes the intricate complexities and contradictions within India’s democratic system, which more generally might come under the heading of pluralist democracy, democratic systems created to manage apparently self-contradicting diversity of many kinds.

Genuine People's Democracy (vs) Democracy of Opportunism

Democracy for the people (vs) Manufactured Democracy

Limited Democracy in welfare state (vs) Unlimited Democracy in Tyrannical state

Controlled Democracy for people (vs) Uncontrolled Democracy for few

Sovereignty (vs) Subservient

#ஜனநாயகம்
#democracy
#concepts_of_democracy
#KSRadhakrishnanpostings
#KSRpostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
22/8/2017.

Monday, August 21, 2017

நாடோடி மன்னன் நாயகனே,

நாடோடி மன்னன் நாயகனே,

நாடோடி மன்னன் திரையில்மக்களாட்சி என்று சொல்லிவிட்டு, மதிகெட்ட மானங்க கெட்டவர்களுடைய ஆட்சிக்கு விதையை போட்டுவிட்டு போய்விட்டாயே.

நமது அரசியல், கலாச்சாரம்

படத்தில் தலை நிமிர்ந்து நிற்பது  கங்கை கொண்ட சோழபுரம்,தஞ்சை  கோவிலகளின் உயர்ந்த கோபுர
கட்டிடங்கள் நமது அரசியல், கலாச்சாரம், பண்பாடு என தமிழகம்  தலைநிமிர்ந்துஇருந்ததைகாட்டுகின்றது

ஆனால் இன்றைய நிலை அவர் வருவாரா? இவர் வருவாரா? என கால் பிடிக்க காத்திருக்கின்றது. 

சிலர் ஆசைக்கும் தேவைக்கும் வாழ்வுக்கும் வசதிக்கும் ஊரார் கால் பிடிப்பார்...
ஒரு மானம் இல்லை,அதில் ஈனமில்லை.. அவர் எப்போதும் வால் பிடிப்பார்.

சுயமரியாதை சுடர்மிகு தமிழகத்தின் தற்பொழுது காணப்படும் நிலமைக்கு காரணமான இந்த அரசியல் அழுக்கு, கசடுகளை நீக்கிய பின்  தூய்மையான தமிழகத்தின் நிலப்பரப்பை அவர்  மண், அவர் ஆண்டபூமி,சோழபூமி ,சேரநாடு,
ஆண்ட நிலம் என சொல்லிக் கொள்ளவோம் 

#அரசியல்கசடுகள்
#KSRadhakrishnanpostings
#KSRpostings
கே எஸ்.இராதாகிருஷ்ணன்.
21-08-2017



#*தகுதியே தடை* *நான் பார்த்த அரசியல் இதுதான்*…

#*தகுதியே தடை* *நான் பார்த்த அரசியல் இதுதான்*…  ——————————— இங்கு அரசியல் என்ன நிலை, ஓட்டுக்கு பணம் Vote for sales வாரிசு அரசியல், குடும்ப அ...