இன்றைய அரசியல், மதம், ஜாதி, போராட்டம் என்பதெல்லாம் சுயநலம்,
தற்புகழ்ச்சி குறியீட்டை நோக்கி செல்கின்றது. மக்கள் அரசியல், மக்கள் போராட்டம், மத
நல்லிணக்கம், என்ற நிலைப்பாடுகள் எல்லாம் பின்தள்ளிவிட்டு பொருள்வாதம், ஆதாயம், சுய
வழிபாடு என்பதால் அரசியல் பாழ்பட்டு, வளர்ச்சிக்கான மெய்யான அரசியல் இல்லாமலேயே போய்விட்டது.
வாக்காளரான மக்களக்கும் இதில் எந்த வருத்தமோ, கவலையோ, இந்த புரையோடிய நிலையில் மாற்றக்கூடிய
ஈடுபாடோ இல்லாமல் போய்விட்டது.
போராட்டங்களும் கூடிக் கலைந்தும், சம்பிரதாய அறிக்கைகளும்,
சதுக்கப் பேச்சுகளாகவே முடிந்துவிடுகிறது. நாட்டில் ரேசன் இருந்தால் என்ன?, சமையல் எரிவாயு மானியத்தை நிறுத்தினால் என்ன?, எங்களுக்கு தினமும் தங்கு தடையின்றி
தொலைக்காட்சியை பார்த்தால் போதும். திரையுலக பிரபலங்கள் தான் எங்களுடைய ஆதாரப் புருஷர்கள்
என்று மக்களும் எதைப் பற்றியும் கவலை கொள்ளாமல் இருக்கின்றார்கள். உண்மையான கொள்கைவாதமும்,
நேர்மையான போராளிகளால் வேறு என்ன செய்ய முடியும்?
பல வகையில் பின்நவீனத்துவம் பேசும் பலர் அரசியல், வாக்குகள்
விற்பனைகளில் மட்டும் பின்நவீனத்துவம் இல்லாமல் போய்விடுகிறது.
ஆளவந்தார்கள், நாட்டை வேட்டைக் காடாக்கமல் வேறு என்ன செய்வார்கள்? உண்மையான மக்கள் அரசியலும் நேர்மையான போராட்டங்களும் வெற்றிபெறாத வரை இந்த அவல
நிலை தொடரும்…
#அரசியல்
#போராட்டங்கள்
#politics
#KSRadhakrishnanpostings
#KSRpostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
04-08-2017
No comments:
Post a Comment