Tuesday, March 31, 2015

Ancient Cultural Symbols of Tamils - அழிந்துவரும் தமிழர் பண்பாட்டுப் பொருட்கள்.





இலங்கை ஒரு புதிய தேசம் என்ற புத்தகத்தில் பொய்யும் புரட்டும் விதைக்கப்பட்டுள்ளன. -SRILANKA THE NEW COUNTRY - Padma Rao Sundarji.






SRI LANKA THE NEW COUNTRY -என்ற ஆங்கில நூலினை பத்மா ராவ் சுந்தர்ஜி எழுதி, Harper Colins பதிப்பகம்  இன்றைக்கு (31-03-2015) டெல்லியில் வெளியிட்டுள்ளது. இந்நூலானது திட்டமிட்டு உண்மைகளை மறைக்க எழுதப்பட்டதுபோல தெரிகின்றது.

2009 முள்ளிவாய்காலில் நடந்த   கொடுமைகள், ரணங்கள் எல்லாம்
கண்ணீர்த்திரை சாட்சியாக இருக்கும் பொழுது, அவற்றை எல்லாம்
மறைக்கும் வகையில், இலங்கை இப்போது ஏதோ புதிய நாடு போலவும், அங்கு தமிழர்கள் நிம்மதியாகவும், மகிழ்ச்சியாகவும் இருப்பது போலவும் எழுதிவிட்டு, விடுதலைப் புலிகளுக்கு  எதிரான கருத்துகள் விஷவிதையாக இந்நூலில்  எழுத்துகளாக  உள்ளன.

எழுதுவதற்கு யாருக்கும் உரிமை உண்டு. ஆனால்,  உண்மையும் எதார்த்தமும் எழுத்தில் புலப்படவேண்டும். அதுதான் நாளைய வரலாறு.

இந்த நூலின் 125ம் பக்கத்தில் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட ஒரு பத்தியைப் படித்தாலே, நமக்கு  உண்மை இல்லை என்பதும், நம்மை மேலும் வேதனைப்படுத்துகின்ற செய்தியாகவும் அமைகின்றது.
ஈழ ஆதரவாளர்களுக்கும், தமிழர்களும் பொய்யெது  உண்மை எது என்று தெரியும். இதோ அந்த 125ம் பக்கத்தில் இடம்பெற்றுள்ள செய்தி :

"One of your famous, pro-LTTE Tamil Nadu politicians assured Prabhakaran that a ship from the United States would arrive and stand by Tamil Nadu, so to keep fighting till the very end.  Prabhakaran was urged to take innocent people as cover, head towards Mullaithivu and make escape by sea to Tamil Nadu. That is why there were so many casualties in the last phase of the war in Mullaithivu-because the LTTE brass shamelessly used thousands of poor, suffering people as human shields." - Page125.




எவ்வளவு ஜமுக்காளத்தில்  வடித்தெடுத்தப் பொய்!?.
“ தமிழகத்திலிருந்து புலிகளுக்கு ஆதரவான பிரபல தலைவர்,  “பிரபாகரனுக்கு அமெரிக்காவிலிருந்து கப்பல் வருகிறது  கவலைப்படவேண்டாம் நீங்கள் போரை நிறுத்திவிடாதீர்கள்” என்று சொன்னதாகவும், அதனால் விடுதலைப் புலிகள் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் சற்றும் மானமில்லாமல்  ஆயிரக்கணக்கான ஏழ்மையில் வாடும் தமிழர்களை கேடயமாக பயன்படுத்தினார் என்றும், கடல்வழியாக இந்தியாவுக்குத் தப்பி வந்துவிடலாம் என்றும் சொல்லப்பட்டிருப்பது மிகவும் கண்டிக்கப்படவேண்டிய புரட்டு. மானமில்லாத ஜென்மங்கள்.”

-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.

31-03-2015.






ஆலங்குளம் தமிழ்நாடு சிமெண்ட் ஆலையை மூடுவதையும், விற்பதையும் தடுக்க உயர்நீதி மன்றத்தில் விசாரணை. : W.P. against Tamil Nadu Cements (TANCEM), Alankulam - (2)

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள ஆலங்குளம் சிமெண்ட் ஆலை  மூடக்கூடாது என்றும் தனியாருக்கு விற்பனை செய்யக்கூடாது என்றும்
 சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் நான் தாக்கல் செய்திருந்த ரிட் மனு ( WP 4696 /2015)  இன்றைக்கு (31-03-2015)  விசாரணைக்கு வந்தது.  உயர்நீதிமன்ற மதுரைக் கிளை இதுகுறித்து விளக்கம் கேட்டு,  மாநில அரசுக்கு உரிய தாக்கீது நோட்டீசு அனுப்பியுள்ளது.

ஏற்கனவே இப்பிரச்சனை சம்பந்தமாக 1986ல், என்னுடைய  ரிட் மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்து, அன்றைக்கு எம்.ஜி.ஆர் ஆட்சியில் தனியாருக்கு இந்த ஆலையை விற்க முடியாமல் தடுக்கப்பட்டது மட்டுமல்லாமல், சுற்றுச்சூழல் பாதுகாக்கப்பட்டு விவசாயமும் ஆலங்குளம் வட்டாரத்தில் பாதுகாக்கப்பட்டது என்பது பழைய செய்தி.



_____________________________________________________________________

IN THE HIGH COURT OF JUDICATURE AT MADRAS
MADURAI BENCH  (SPECIAL ORIGINAL JURISDICTION).


W.P.(MD)No. of 2015


K.S.Radhakrishnan,                                                           ... Petitioner
 


-Vs-
1. The Chief Secretary to Government,
Secretariat,
Fort.St.George,
Chennai-600 009.


2. The Secretary,
Industrial Department
Government of Tamil Nadu,
Secretariat,
Fort.St.George,
Chennai-600 009.


3. The Managing Director,
Tamil Nadu Cements (TANCEM),
Alankulam,
Virudhunagar - District.    ... Respondents
AFFIDAVIT


I, K.S.Radhakrishnan, Son of K.V.Srinivasa Naidu, Hindu, aged 59 years, residing at 4/359, Sri Chaitanya Avenue, Chennai-600 041, now temporarily come down to Madurai, do hereby solemnly sincerely affirm and state as follows:-


1. I am the petitioner herein and as such I am well acquainted with the facts of the case.  


2. I also humbly submit that, I am originally native of Kurunjakulam village in Sankarankovil Taluk in Tirunelveli District, nearer to the border of Virudhunagar District, I am hailing from an agricultural family and and around my native village.  The main source of income of public was agriculture.  I am an advocate practicing in the Madras High Court.  I am also spokesperson of D.M.K. I am also much interested in social activities and welfare activities of public at large.  I also contested in the legislature assembly seat from Kovilpatti Legislature constituency.  Therefore, I am interested in the public activities of this area, where my native places is situated.   


3. I also humbly submit that, I am filing this writ petition as a Public Interest Litigation, for writ of mandamus.  I have not received any remuneration or benefits from anybodyelse to file this petition as Public Interest Litigation.  I am also an Income Tax Assessee and having Permanent Account Number.  I am ready to obey this Hon’ble High Court’s order, if this Hon’ble Court finds that I am misusing the Hon’ble Court’s jurisdiction and impose any cost.


4. I also humbly submit that, when there was a move to establish a cement factory, by the Tamil Nadu Government, in Alankulam in Virudhunagar District, the agriculturist and general public, in and around the proposed place, Alankulam, affraiding the proposed construction of cement factory, would harm health and agriculture of the public, the then Government, pacified the public and their anguish, by giving undertaking that there would not be any such harms would accur there, because of the construction of the proposed cement factory.  At last, with the support of the entire public a cement factory was constructed and installed at Alankulam.


5. I also humbly submit that, the then Tamil Nadu Government started, the erection of the cement factory and started the production of cement in 1970 itself.  But since there was emition of smoke and dust, the public were scaring about the emition  of air pollution and despite repeated request no action was taken.  I filed a Public Interest Litigation in the Principle Seat of Madras High Court, as W.P.No. 10589/1986 for the redressal to make proper arrangements for the erection of effluent treatment plant, as per the standard prescribed and provisions of the air (Prevention and Control of Pollution) Act 1981, to treat the smoke emitted from the said cement factory.  The Hon’ble High Court also passed an interim direction and finally passed an order, based on the report, filed by the Pollution Control Board Officers that the suggestion for controlling the pollution shall be properly carried out. With the above directions, the cement factory also obliged and carried out the directions and thereby satisfied the public at large.  The public also were happy and the cement production also became high and the Tamil Nadu Government also benefited and the public are also benefited by getting jobs and also the production of cement factory, even as consumers.  


6. I also humbly submit that, now, as the cement factory is running smoothly and getting profits and the public also consumed the products.  But recently as a “bolt from blue” the Tamil Nadu Government and their officers, the respondents herein, are proposing to close the running of the cement factory and also are proposing to sell the factory and its properties, both immovable and movable and also acted in not updating in any updated technologies in the factory.  Shocking to know the above news of closing of the cement factory, eventhough the entire public in this area are much agitated, some of the social activists and political and public leaders, moved with the Tamil Nadu Government to stop the proposal of closer of the cement factory.  Hence, as I also one of the Environmental and social activist interested in the public welfare and obtained earlier directions from this Hon’ble Court, sent a petition on 12.02.2015, to these respondents, to stop the proposal and wanted to know the status and also to update the technology, in controlling the pollution of emition.  The respondents also received the same petition.  I also made personal representation before the respondents 1 and 2 repeatedly, before and after written petitions.  But the respondents were not responding so far and turned deaf ear to my request and would not reply so far.  Hence there is no other alternative to approach this Hon’ble Court once again for the reddressal.
7. I also humbly submit that, the above said circumstances, I left with no other alternative or efficacious remedy than, to file this Writ of Mandamus, under Article 226 of the Constitution of India.  I have not filed any other Writ or litigation for this same redressal, before any other court of law.


8. Hence for the reasons stated above, it is prayed that this Hon'ble Court may be pleased TO DIRECT the respondents to update the technologies of Tamil Nadu Cement Factory (TANCEM) in Alankulam in Virudhunagar District, pending disposal of this Writ Petition and thus render justice.


9. Therefore, for the reasons stated above, it is prayed that this Hon'ble Court may be pleased to issue a WRIT OF MANDAMUS or any other order or direction, more in the form of WRIT, forbearing the respondents from closing or sale the same to private firms the TamilNadu Cement Factory (TANCEM), situated at Alankulam in Virudhunagar District, and pass such further or other orders, as this Hon’ble Court may deem fit and proper in the circumstances of this case and thus render justice.


Solemnly affirmed, sincerely stated and
affixed his signature before me on this the   BEFORE ME
day of March, 2015, at Madurai.  


The contents of affidavit were read over and
explained in Tamil to the Deponent    
and his understood the same and
affixed his signature in my presence.

ADVOCATE, MADURAI


Page No:5th and last page:
Corns:




Monday, March 30, 2015

மணா பதிவும் - தணிக்கை குழு நினைவுகளும்... - Censor Board Memories



நண்பர் மணா, நான் 25 ஆண்டுகள் சென்சார் போர்டு என அழைக்கப்படும் தணிக்கைக் குழுவின் உறுப்பினராக இருக்கும் பொழுது, பல படங்களைத் தணிக்கை செய்யக்கூடிய வாய்ப்புகள் கிட்டின.







அப்போதெழுந்த பல பிரச்சனைகளை இங்கே சொல்லலாம். அன்றைக்கு பெரிய சர்ச்சைகளாக பத்திரிகைகள் எழுதிய கமல்ஹாசனின்  ஹேராம் திரைப்படமும், படையப்பா திரைப்படமும் வெளியாவது தடுக்கக் கூடிய வகையில் இருந்ததையும் கடுமையாக வாதாடி தணிக்கைச் சான்றிதழ் வழங்க வைத்தவன் அடியேன். இப்படி பல திரைப்படங்களைச் சொல்லலாம்.



























நடிகர். பாக்கியராஜ்   பழைய எம்.ஜி.ஆர் படங்களின் காட்சிகளை எல்லாம் தொகுத்து  போலீஸ்காரராக நடித்து 1990ல்  வெளியான படம்  ”அவசர போலீஸ் 100” . அவ்வாண்டில் தீபாவளி தினத்தில் வெளியாகத் இரண்டு நாள் முன் தணிக்கைக்கு வந்தது. தணிக்கையில் நான் பிரச்சனை கிளப்ப குறிப்பிட்ட நாளில் அந்தப்படம் வெளியாகவில்லை.
இப்படியாக பல சம்பவங்கள் 25ஆண்டுகால தணிக்கைக் குழு உறுப்பினராக இருக்கும் போது நிகழ்ந்திருக்கிறது.

அப்போதெல்லாம் தணிக்கைக் குழுவில் மொத்தமே 10பேர் தான் இடம்பெற்றிருப்போம். இப்போது 100க்கும் மேலான உறுப்பினர்கள் இருக்கிறார்கள். அன்றைக்கு மூத்த பத்திரிகையாளர்கள், என்போன்ற அரசியல் இயக்கத்தைச் சார்ந்தவர்கள், வழக்கறிஞர்கள், ஓய்வு பெற்ற நீதிபதிகள் இடம்பெற்றிருந்தோம்.

மணா அவர்களின் பதிவைப்பார்த்ததும் பழைய நினைவுகள் மேலெழுந்தன. அந்த நாட்களின் அனுபவங்கள் குறித்து விரிவான கட்டுரை தினமணி, கலைமகள், புதிய பார்வை, கணையாழி இதழ்களில் எல்லாம் வெளிவந்திருந்தது.

இல்லஸ்ட்ரேட் வீக்லியில் ஒரு சமயம் இவைகுறித்து நண்பர் கே.பி.சுனில் என்னுடைய நேர்காணலை ஆங்கிலத்திலும் வெளியானதுண்டு. நண்பர் மணா பதிவு கீழே!

நண்பர் மணா​  அவர்களுக்கு சின்ன வேண்டுகோள், புன்னைகை மன்னனான நீங்கள் முறைப்பது போல் இருக்கும் தங்களுடைய தற்போதைய புகைப்படத்தை மாற்றி வைக்கலாமே!

_________________________________________________

மணா :
அன்றைக்கு இருந்த தணிக்கை முறை
#
கலைஞரின் ' பராசக்தி' திரைப்படம் தணிக்கைக்குழு ஆய்வுக்கு வந்தபோது சென்னை பாரகன் தியேட்டரில் மூன்று நாட்கள் ஆய்வு செய்யப்பட்டது.நாத்திகக் கருத்துக்கள் இருப்பதாகக் கூறப்பட்டு, அவை தடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்தது. அப்போது தணிக்கைக்குழுவில் உறுப்பினராக இருந்தவர் 'சண்டே அப்சர்வர்' பாலசுப்பிரமணியன்.
#
மேகலா பிக்சர்ஸின் ''திரும்பிப்பார்'' படம் தணிக்கை செய்யப்பட்டபோது 3000 அடி வெட்டப்பட்டது.
#
அதே படத்தில் ராமானுஜர் திருக்கோஷ்டியூர் கோவில் மேல் ஏறியதைக் குறிப்பிடும் வகையில் '' கோபுரம் ஏறியிருக்கும் தலைவர்களே'' என்ற வசனம் தணிக்கைக்குழுவில் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டு மாற்றப்பட்டது.
#
காஞ்சித்தலைவன் -படத்தில் எம்.ஜி.ஆருக்காக சிதம்பரம் ஜெயராமன் பாடிய '' வெல்க காஞ்சி''என்ற மாடல் அண்ணாவைக்குறிப்பதாகக் கூறி அனுமதி மறுக்கப்பட்டது. பிறகு அதே வரி '' வெல்க நாடு'' என்று மாற்றப்பட்டது.
- முன்னாள் தணிக்கைக்குழு உறுப்பினரான கே.எஸ்.ராதாகிருஷ்ணன்
நவம்பர் -13 -புதிய பார்வை இதழில்



 




கதைசொல்லி -Kathai Solli .














கதைசொல்லி மீண்டும் கொண்டு வந்திருப்பதில் உள்ளூர மகிழ்ச்சி நிறைய உண்டு. இடைப்பட்ட காலங்களில் பணிச்சுமைகளால் கதைசொல்லியை கொண்டுவர இயலாமல் போனதற்கு முழுப் பொறுப்பையும் நானே ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.

கதைசொல்லி வெளிவராமல் போனது பற்றி கி.ரா ஒருவார்த்தை கூட இதுவரைக்கும் என்னிடம் வாயெழுந்து சொல்லவில்லை. அவருக்கு வெளிச்சொல்லாத ஊமைக்காயம் போல வலியாக இருந்ததை உணரமுடிந்தது என்னால்.



தி.க.சி தன் கடேசி தருவாயில் அவருடைய ஈரமான கரங்களால்  என்னைப் பற்றிக் கொண்டு,  “ கதைசொல்லியை திரும்பவும் கொண்டு வந்துடுங்க கே.எஸ்.ஆர்” என்று கேட்ட வார்த்தைகள் இன்னும் காற்றில் ஒலித்துக் கொண்டே இருக்கின்றது. அந்தக் கரங்களுக்கு வாஞ்சை செய்து விட்டதாய் நம்புகிறேன்.

தெற்குச்சீமை மண்ணை நேசிக்கிறவர்களும், ஈழத் தமிழர்களும், புலம் பெயர்ந்த தமிழர்களும், இன்னும் எத்தனையோ பேரும் கேட்டுக் கேட்டு அழுத்துப் போய் கேட்பதையே நிறுத்தியிருந்தார்கள். இந்தக் கோடையில் கதைசொல்லியினைத் திரும்பக் கொண்டுவந்து, தமிழர்கள் வாழும் இருபத்தைந்துக்கும்  மேலான உலகநாடுகளுக்கும் கதைசொல்லியினை எடுத்துச் செல்லும் முயற்சியில் அத்தனைபேரையும் சமாதானப் படுத்தியதாயே எண்ணுகிறேன்.

வெய்யில் காலத்தில் நுங்குக் குலைகளை சைக்கிளுக்கு இருபுறத்திலும் கட்டிக்கொண்டு பதனி நுரைத்திருக்கும் ஈயப்பானையின் வாய்நுனியில் சிந்திவிடாமல் இருக்க உரச்சாக்கையும் சைக்கிள் ட்யூப்பையும்  கட்டிக் கொண்டு, கொழுத்தும் வெயிலில் லொக்குலொக்கென்று சைக்கிளை அழுத்திக் கொண்டு, வீதிவீதியாக வந்து நுங்கும் பதனியும் விற்றுப் போகும் மீசைக்காரப் பெரியவருக்கு அது வெறும் விற்பனை பண்டமாக மட்டுமா இருக்கமுடியும்?

 ஊரூராகச் சென்று பதநீரும், பனங்கிழங்கும், நுங்கும், பனம்பழமும் விற்கும் மனிதருக்கு உள்ளூர இருக்கும் ஆத்ம திருப்தியை வார்த்தைகளில் கொடுத்துவிட முடியாது.
அதேபோலத்தான் கதைசொல்லியை ஒரு ஆத்ம திருப்தியோடு கொண்டுவந்திருக்கிறேன். கூடவே பல இளையவர்கள் தங்கள் பங்களிப்பையும் செய்திருக்கிறார்கள்.

நவீனயுகத்தின் குளிர்பானங்களுக்கு மத்தியில் நம் மண்ணின் மாறாத வாசத்தோடு இனிக்கும் பதநீராக, நாட்டுப்புற படைப்புகளும், கிராமியத்தின் வாசனைகளும் நிரம்பியோடும் வெயிலோடையாக,  வயதான பெரியவர்கள் ஊருக்கு மத்தியில் அமர்ந்து ஒன்று கூடி பழங்கதை பேசும் எச்சம்படிந்துகிடக்கும் ஆலமரத்தின்  நிழல்திண்டாக,  தார்சாலையின் சூட்டில் கனன்று விடுமென்று குளத்தாங் கரையில் மாட்டுவண்டியை இறக்கி மரப்பைதாவைக் குளிரூட்டும் போது தானும் கொஞ்சம் காளைகளோடு குளிர்ச்சியைத் தழுவும் பொழுதுகளாக, கதைசொல்லியின் ஒவ்வொரு பக்கத்திலும் நம் மண்சார்ந்த பரிச்சயம் நிரம்பிக்கிடக்கின்றது.

சுருங்கச் சொன்னால், இந்த தலைமுறைப் பேரம்பேத்திகளை மடியில் அள்ளிப் போட்டு கதை சொல்லும் தாத்தாக்களின் பேரன்பை பேப்பரில் கொடுப்பதே கதைசொல்லியின் எளிய விளக்கம். தொடர்ந்து ஆதரவினை நல்கும் உங்கள் அத்தனை பேருக்கும் அன்பு.

 -ப்ரியங்களுடன் -கே.எஸ்.ஆர்.



Sunday, March 29, 2015

சிலநேரங்களில் சிலமனிதர்கள்





“புத்தியுள்ள மனிதரெல்லாம் 
வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம்
புத்திசாலியில்லை... புத்திசாலியில்லை”

*
சென்னை உயர்நீதிமன்றம் எதிரேயுள்ள ஆர்மேனியன் தெருவில் அமைந்துள்ள கேத்தலிக் சென்டருக்குச் சென்றிருந்தேன். அங்கு ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதியைச் சந்திக்கச் சென்றபோது எதிரே வெள்ளையும் சொள்ளையுமாக ஒரு நபர் வந்தார். அருகில் வந்ததும் வணக்கம் வைத்து அவர் காட்டிய பந்தாவாகவும் பெரிய தோரணையும் பாசாங்கும் பகட்டாக இருந்தது.

அந்தக்காட்சியைப் பார்க்கும் போது... இப்படியா வேடிக்கை மனிதர்கள் என நினைத்துக் கொண்டேன்.

அதே நபர் 25 ஆண்டுகளுக்கு முன், வேலையில்லாமல் எனது காரில் என்னோடு பயணித்தது நினைவுக்கு வந்தது. கூடவே கவிஞர் கண்ணதாசன் வரிகளில், அற்புத நடிகர் சந்திரபாபு அன்னை படத்தில் பாடிய இந்த வரிகளும் நினைவுக்கு வந்தன...

#சிலநேரங்களில்_சிலமனிதர்கள்

விவசாயத்தை விட்டு வெளியேறுங்கள் - பொருளாதார நிபுணரின் திமிரான பேச்சு "Get out from Agriculture" highly condemnable speech. (விவசாயிகள் 5)

விவசாயத்தை விட்டொழித்தால் நாடுமுன்னேறும் என்று பொருளாதாரம் படித்த பிரகஸ்பதியின் பேச்சு.  - "Get out from Agriculture" It is a condemnable speech. 




காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் நடந்த ஒரு கருத்தரங்கில், சென்னை வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் முன்னாள் இயக்குனர், பொருளாதார நிபுணர்.  நீலகண்டன் என்பவர், “விவசாயம் ஒன்றும் உயிர்நாடி அல்ல; விவசாயத்தை விட்டு விவசாயிகளே  வெளியேருங்கள், அது தான் உங்களுக்கு நல்லது” என்று பேசியுள்ளார். இந்த செய்தி இன்றைக்கு (29-03-2015) நாளிதழ்களில் வந்துள்ளது.

இவருடைய இந்தப் பேச்சு கண்டனத்துக்குரியது. விவசாயிகளைப் புண்படுத்தும்படியாக இவர் பேசியிருப்பதை ஏற்றுக்கொள்ளவே முடியாது.
தன்னுடைய இந்தப் பேச்சுக்குத் துணையாக அமெரிக்காவில் விவசாயம் நடக்கவில்லை என்றும், தொழில்கள் தான் அங்கே அதிகமாக உள்ளது என்றும், அங்கு ஒருசதவிகிதம் தான் விவசாயம் நடக்கிறது என்றும் , அதே போல சீனாவிலும் விவசாயம் பெரிதாக நடைபெறவில்லை என்றும்,  அங்கு விவசாயம் குறைந்து வருகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அப்படியானால்,  அமெரிக்க முன்னாள் அதிபர் ஜிம்மி கார்ட்டர் குடும்பம் இன்றைக்கும் நிலக்கடலை விவசாயம் செய்கின்றார்களே! . அங்கே பல காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு விவசாயம் தான் முக்கியத்தொழில். முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ்  உலகிலேயே பெரிய ஆப்பிள் விவசாயி இல்லையா?

சீனாவிலும் தொழிலுக்கு ஒதுக்குவது போல விவசாயத்திற்கும் பட்ஜெட்டில் பணம் ஒதுக்கப்பட்டு, பொதுவுடமை நாடு எனச் சொல்லப்பட்டாலும் தனியார் பண்ணைகளும் தற்போது வளர்ந்து வருவதாகவே செய்திகள் உள்ளன.

இப்படியெல்லாம் இருப்பது நீலகண்டனுக்குத் தெரியாதா? ஒருவேலை சென்னையிலே வாழ்ந்து கிராமப்புறத்திலே ஒதுங்காத மனிதராக இருந்திருப்பாரோ?  இப்படிப்பட்ட ஞானசூன்யங்களும், மேதாவிகளும் பேசுகின்ற பேச்சுக்கு ஏற்பதான் அரசாங்கமும் நடந்துகொள்கின்றது.

இவ்வாண்டு நிதிநிலை அறிக்கையில், நேரடியாக விவசாயத்திற்கு பயன்பாட்டை விட வேளாண் வணிகத்திற்குத்தான் முக்கியமாக நிதி ஒதுக்கீடும் அமைந்துள்ளன. விவசாயமில்லாமல், விவசாய வணிகம் எப்படி நடக்கும் என்று கூட கணிக்கமுடியாத கோட்டு சூட்டு போட்ட டெல்லி பரிவாரங்களுக்கு என்ன தெரியும் விவசாயிகளைப்பற்றி.

கிராம வளர்ச்சிக்கான  நிதி ஒதுக்கீடும்  இம்முறை குறைந்துவிட்டது. மேலும் நிதிநிலை அறிக்கையில் விவசாய, கிராமப்புற, ஏழைமக்களுக்கு ஒதுக்கிய 3000கோடி ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது.

அதேசமயம், பன்னாட்டு நிறுவனங்கள், பெரிய வணிகம் மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு செல்வ வரியைக் குறைக்கும் வகையில்  8,325கோடி ரூபாய் பெரும் முதலாளிகள் கொழுக்க ஒதுக்கியதில் என்ன நியாயம் இருக்கமுடியும்.

கார்ப்ரேட் நிறுவனங்களுக்கு 2015-2016ம் நிதி ஆண்டில் 171கோடி ரூபாய் எதற்காக சலுகை வழங்கப் படவேண்டும்? இதனைக் கணக்குப் பார்த்தால் ஒருநாளில் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 7கோடி ரூபாய்க்கு கூடுதலான தொகை பெருமுதலாளிகளுக்கு சலுகையாகக் கிடைக்கின்றது என்று
பிரபல  “தி இந்து பத்திரிகையாளர் பி.சாய் நாத்” கூறுகிறார்.

கொள்ளையடித்துக் கொண்டு இருக்கின்ற கார்ப்ரேட் நிறுவனங்களுக்கு 42டிரில்லியன் ரூபாய் (1-டிரில்லியன் = 100 ஆயிரம் கோடி) அளவைத் தாண்டி சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன என்றும் சாய்நாத் மேலும் குறிப்பிடுகிறார்.

விவசாயம் அழியட்டும், பெரும் முதலாளிகள் கொழுக்கட்டும், பன்னாட்டு நிறுவனங்கள் உள்நுழையட்டும் என்ற மனப்பாங்கை, படித்த அதிகாரிகள், மற்றும் அரசாங்கங்கள் கொண்டுள்ளனர்.  விவசாயத்தை ஒழிக்க வேண்டும் என்று திட்டமிட்டால் இவர்கள் எல்லாம் மானமுள்ள மனிதர்களா?

பல்லாயிரக்கணக்கான விவசாயிகளின் நிலங்களும் பறிக்கப்பட்டு, அதனை மலிவாகக் கார்ப்ரேட் நிறுவனங்களுக்கு வழங்கியும், பல இலவசங்களையும், சலுகைகளையும்  அவர்களுக்கு அளித்தும், டாடா, அம்பானி, அதானி, மற்றும் பன்னாட்டு நிறுவனங்கள் போன்றோரையே தொடர்ந்து கொழுக்கச் செய்கிறது அரசுகள்.

ஆனால் விவசாயிகளுக்கு மட்டும் வெறுங்கையை நீட்டிக்கொண்டு விவசாயம் செய்யாதே என்று உபதேசம். அட மானங்கெட்டவர்களே!  மைதாசு போல சோறு இல்லாமல் பணத்தையா மெல்லப் போகிறீர்கள் வருங்காலத்தில்...

இப்படியெல்லாம் கண்ணெதிரே நடக்கும் கொள்ளைகளும், கேடுகளும். இதற்கு நீலகண்டன்கள் போன்ற மெத்தப் படித்த எமகண்டன்களும் காவடி தூக்குகிறார்கள்.   அடப்பாவிகளே! ஜான் அகஸ்டஸ் வால்க்கரும், ஆல்பர்ட் ஓவார்டும் போற்றிய ஞானம் இந்த மண்ணின் விவசாயிகளுக்குரியது. வேளாண்மையில் புரட்சிகளைக் கண்ட உழவர்களை அடையாளம் கண்ட விஞ்ஞானிகள் ரிச்சாரியாவும், யக்ஞராமனும் வாழ்ந்த பூமி இது.
கொஞ்சமாவது பாடுபடும் விவசாயி மீது மனசாட்சியைக் காட்டக்கூடாதா?






-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
29-03-2015


டாஸ்மாக் கடைகள் 6823. உயர்நிலைப்பள்ளிகள் 2739 - Tasmac TamilNadu

தமிழக மக்களே பாரீர். இந்த புள்ளி விபரத்தை, இதற்கு உங்கள் மனசாட்சி என்ன .சொல்கிறது? .




விமர்சன வித்தகரும், சிறியன சிந்தியா தி.க.சி. -Tee.Ka.cee






 நம்மிடம் வாழ்ந்த முக்கிய இலக்கிய கர்த்தாவாக இருந்த தி.க.சி அவர்கள் மறைந்து ஒராண்டு காலம் நிறைவு பெற்றுவிட்டது.
பல எழுத்தாளர்களை தாமரை இதழ் மூலம் ஊக்குவித்தவர் தி.க.சிவசங்கரன்.

நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்று வாதாடும் குணமுடையவர். பல நேரம் இதனால் தி.க.சிக்கும், ஜெயகாந்தன் அவர்களுக்கும் சர்ச்சைகள் ஏற்பட்டிருக்கின்றன.

கி.ராவின் கதையே ”தாமரையில்” வெளியிட மறுத்த போது, நா.வானமாமலை, என்.டி.வானமாமலை போன்றோர் முன்னிலையில் பெரிய விவாதமே நடந்தது. நவீன இலக்கிய போக்கில் திறனாய்வு என்ற வாசலைத் திறந்து வைத்தவர் தி.க.சி.

நெல்லையில் பிறந்து, கேரளத்தில் தொழிற்சங்கப் பணியாற்றி, சென்னையில் தாமரை இதழில் ஆசிரியராகவும், சோவியத் நாடு இதழில் பணியாற்றியும், தன்னுடைய இறுதிகாலத்தில் நெல்லை டவுணில் உள்ள தன்னுடைய சுடலைமாடன் தெரு வீட்டிலேயே வாழ்ந்து மறைந்தார்.

நேற்றைக்கு அவருடைய முதலாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டது, அவரோடு ஏற்பட்ட பழக்கத்தாலும், நெருக்கத்தாலும் தான். என்னுடைய “நிமிரவைக்கும் நெல்லை” நூலினை விரும்பி, நேசித்து பல சமயம் பலரிடம் என்னைக்குறித்து   அவர் பாராட்டிப் பேசியதெல்லாம் செவிகளுக்கு வந்ததுண்டு.

 தன் முகநூல் பதிவில், அண்ணன் எஸ்.ஏ. பெருமாள் ( Sap Marx​ )  குறிப்பிட்டது போல  “ஒரு கல்லைக்கூட கார்டு (போஸ்ட் கார்டு) எழுதி எழுத்தாளனாக்கிவிடும் அற்புத மனிதர் தான் திகசி” .

தி.க.சி.யின் கால் காசு கடுதாசி பல விசயங்களைப் பேசும். பொதுவுடைமைவாதியாக, தொழிற்சங்கத் தலைவராக, கனிந்த மனம்கொண்டவராக, இளைஞனுக்கும் தோழனாக, ஏகலைவன்களை உருவாக்கும் துரோணராக, தத்துவ மேதையாக, நிறைவாக வாழ்ந்த மாமேதை எங்கள் பாசத்துக்குரிய தி.க.சி. அவர்கள்.  அவருடைய எழுத்துகளும் , கடிதங்களும் தமிழ் இலக்கிய வரலாற்றைச் சொல்லும். நம்முடைய “கதைசொல்லியின்” ஆலோசகர். இப்படி அவருடைய புகழ்களைச் சொல்லிக்கொண்டே போகலாம்.

காலம் எத்தனை வேகமாகச் சுழல்கிறது. தி.க.சி யை என்றும் தமிழ்கூறும் நல்லுலகம் நினைவில் கொள்ளும்.

*
கே.எஸ்.இராதாகிருஸ்ணன்.
29-03-2015.

நேற்றைய நிகழ்வில் கலந்துகொண்ட புதிய தலைமுறை. திரு.வேங்கட பிரகாஷ்  அவர்களின் பதிவையும் இத்துடன் இணைத்துள்ளேன்.

***
தி.க.சி.

விழா இரவு 8மணிக்கு முடிந்ததும் திரு.கே.எஸ்.ஆர். என்னையும் (வேங்கட பிரகாஷ்) திரு.கல்கி ப்ரியனையும் காரிலேற்றி அசோகா ஓட்டலுக்குக் கொண்டு சென்றார். நான்கு பேர் அமரக்கூடிய மேசையில் மூன்று பேர் அமர்ந்திருக்கிறோம். ’’காபி சாப்பிடுவோம்’’ என்றார். ஒரு சந்தேகத்தில்தான் கேட்டேன் ’‘என்ன மாமா இங்க?’’ அவர் சொன்னார்….’’இல்ல இங்கதான் தி.க.சி.யக் கூட்டிட்டு வந்து சாப்பிடுவோம். இன்னைக்கு அவர் ஞாவகமாவே இருக்குல்ல…..அதான் !’’ என்றார்.

தி.க.சி.காப்பியென்று ஒரு காப்பியை இன்று சுவைத்தோம். குடித்ததும் எழுந்துவிடவில்லை. ஏனென்றால் அந்த நான்காம் இருக்கையில் தி.க.சி. இன்னும் காபி குடித்து முடித்திருக்கவிலை…..!

......................
தி.க.சி. குறித்துப் பேச ’கதைசொல்லி’கள் திரு.கே.எஸ்.ஆர்., மற்றும் திரு.கழனியூரன் பணித்திருந்தனர். எழும்பூர் இக்சா மையத்தில் நேற்று மாலை நிகழ்ச்சி சிறப்புற நடந்தேறியது. என்னை எழுதவைக்கிறார்கள் பேசவைக்கிறார்கள்…. இன்னும் என்னென்னவோ தெரியவில்லை….. தி.க.சி. என்பது அடையாளம்தானே…. ஒவ்வொருவருக்கும் வாழ்வில் தி.க.சி.க்கள் கிடைப்பார்கள்! எனக்கு இவர்கள். நன்றி… ’நீங்களும் வாசிச்சி நானும் வாசிக்கவா..!’ என்று கலவரத்தோடுதான் ஒவ்வொரு மேடையிலும் திருப்பூர் கிருஷ்ணன் உள்ளிட்டோரைப் பார்க்கிறேன்.

ஆனால் அவர்களோ சிரித்த முகமென்கிறார்கள்! ஊடகப் பழக்கம்….! இலக்கியவாதிகளோடு உறவு இனிக்கத்தான் செய்கிறது. இந்த இனிப்பெல்லாம் ‘ உங்கள் ஆட்சியில் நீங்கள் மட்டும் என்ன செய்தீர்களாம்? ‘ என்பது போன்ற கசப்புக்கேள்விகளில் கரைத்துவிடத்தானா…?!

இனி நான் பேசியது:

‘’ திறனாய்வுத்தென்றல் தி.க.சி. அவர்களின் முழுமையான விமர்சனக் கட்டுரைத் தொகுப்புநூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்றிருக்கின்ற, கதைசொல்லியைத் துயிலெழுப்பியிருக்கும் கரிசல்குயில், தாமரை இலைத் தண்ணீர் போல் அரசியலில் வீற்றிருக்கும் அன்பர், (தாமரை ஆசிரியர் தி.க.சி.யை விரும்பும் மனிதர் அரசியலில் அப்படித்தானே இருக்க முடியும்!) பெருமதிப்பிற்குரிய கே.எஸ்.ராதாகிருஷ்ணன் அவர்களே, நான் எப்போதும் விரும்பிக் கேட்கின்ற பேச்சுக்குச் சொந்தக்காரர், சொற்களை அருவியாய்க் கொட்டும் அன்புநிறைந்த ஐயா திருப்பூர் கிருஷ்ணன் அவர்களே, வரலாறு வாழ்த்துகின்ற பணிகளாகத் தொடர்ந்தாற்றிவரும் பெருமதிப்பிற்குரிய கழனியூரன் அவர்களே, ஐயா செந்தில்நாதன் அவர்களே, ஐயா முகம் மாமணி அவர்களே, ஐயா தருமராசன் அவர்களே, காவ்யா பதிப்பகத்தார் ஐயா சண்முகசுந்தரம் அவர்களே மற்றும் அரங்கில் முன்னமர்ந்திருக்கும் பேரன்புள்ள இலக்கிய ஆர்வலர்களே வணக்கம்.

என் இலக்கிய வாழ்வு நிறைவாழ்வென்றுதான் நான் கருதுகிறேன் என்பது திகசி தன்னைப் பற்றிச் சொன்னது. இந்த மனநிறைவு ஒவ்வொரு எழுத்தாளருக்கும் இருக்கவேண்டும். மிகச்சிலரைத் தவிர பெரும்பாலானோர்க்குச் சில புத்தகங்களை எழுதியதுமே வாழ்நாள் முழுவதும் இந்த மனநிறைவென்பது வந்துவிடுகிறது. திகசியின் விமர்சனங்களை முழுமையாகப் படித்தால்தான் சமூகத்திற்கு ஆக்கப்பூர்வமான பங்களிப்பை நல்கக்கூடியவனாக ஒரு எழுத்தாளன் எப்படி மிளிர வேண்டும் என்பது தெரியும் என்று கருதுகிறேன்.
அந்த இலக்கணத்தில் நின்று இயங்கி பிறகு மனநிறைவு வந்தால் அதுவே உண்மையான மனநிறைவாக இருக்கமுடியுமென்று கருதுகிறேன்.

பொதுவில் யாரும் விரும்பாத ஒன்று விமர்சனம். தப்பித்தவறி ஒருவர் ஒரு விமர்சனத்தை விரும்புகிறாரென்றால அதில் அவரைப் பற்றிப் பாராட்டுவார்த்தைகள் இருக்குமென்பது திண்ணம். இடித்துரைக்கும் சொற்களை எந்தக் கண்களும் காணத்துடிக்காது எந்தக்காதுகளும் கேட்கத்துடிக்காது.

தொடக்கத்தில் வல்லிக்கண்ணன் பணியாற்றிய கிராம ஊழியன் இதழில் திரைப்பட விமர்சனங்களை எழுதிவந்தவரை பேராசிரியர்.நா.வானமாமலை இலக்கிய விமர்சனப் பாதைக்கு இட்டுச்செல்கிறார். ஆனால் இன்றைக்கு அவர் இருந்தால் திரைப்படங்களுக்கு மட்டும் விமர்சனங்களைத் தொடர்ந்து எழுதுங்கள். நாட்டை அது பாழ்படுத்துவது போல் வேறெதுவும் பாழ்படுத்தவில்லை என்று நாம் மன்றாடிக் கேட்டுக்கொண்டிருப்போம்.

ஜெமினி எஸ்.எஸ்.வாசன் தயாரித்த மங்கம்மா சபதம் திரைப்படத்தில் பாலுணர்வைத் தூண்டக்கூடிய காட்சிகள் நிரம்ப இருந்தது கண்டு கொதித்துப்போய்த் தமிழகத்தின் பெரும் பண்பாட்டை மண்ணாக்கும் மசாலாத்தனமான படம் என்ற வகையில் எழுதிவிட்டார். அந்த இதழுக்கு அதுவரை அளிக்கப்பட்டு வந்த விளம்பரத்தை நிறுத்திவிட்டார் வாசன். ஆனால் அத்தோடு இவர் நிறுத்தினாரா என்றால் இல்லை. விகடன் நிறுவனம் நடத்திவந்த நாரதர் இதழில் நடிகையர் பயன்படுத்தும் வாசனைத்திரவியங்கள் குறித்தெல்லாம் கவர்ச்சியாக எழுதப்படுவதையும் கண்டித்தார் திகசி. விளைவு அந்த இதழ் இவர்களுக்கு அனுப்பப்பட்டதேகூட நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் நா.வானமாமலை தி.க.சி.யை மடைமாற்றிவிடுகிறார். சரி அங்கும் என்னதான் ஆயிற்று?! மு.வ.வின் நூல்கள் தமிழகத்தில் பரபரப்பாக விற்பனையாகிக்கொண்டிருந்த காலகட்டமல்லவா அது? அவரது 80 க்கும் மேற்பட்ட புத்தகங்களை வாங்கி ஊன்றிப் பயின்று ஆழ்ந்த விமர்சனக் கட்டுரைகளை ஜனசக்தியில் தொடர்ந்து எழுதினார். பின்னர் அதைத் தொகுத்து அவருக்கே அனுப்பியும் வைத்தார். வந்த பதிலென்ன தெரியுமா? ஓர் அஞ்சலட்டையில் ஒற்றை வரி. ‘உங்கள் கருத்தைச் சொல்லியிருக்கிறீர்கள் நன்றி’ என்று மட்டுந்தான்.

நான் இப்பெருமகனார்களைக் குறை சொல்லவில்லை. ஆனால் விமர்சனத்தை எதிர்கொள்ளும் பாங்கு இப்படித்தான் இருந்திருக்கிறது. இத்தனைக்கும் மென்மையான மனிதர்தான் திகசி. நெல்லையிலிருந்து மூன்று மைல் ஆற்றிலிறங்கி நடந்துசென்று அக்கரையில் வண்ணார்பேட்டையில் அப்போது குடியிருந்த டி.கே.சியோடு அளவளாவி வருவார்களாம். அவரும் இவரைப் போல் மென்மையானவர்தானே. வயதில் மிக இளையவர்கள் என்றாலும் பேரன்போடு டிகேசி நடத்துவாராம். அடிப்படையில் திகசி மென்மையான மனிதரென்றாலும் விமர்சனம் என்று வந்துவிட்டால் கறார் தன்மை வந்துவிடும். கூடவே இருந்த வல்லிக்கண்ணனையும் விடவில்லை. ஜெயகாந்தனையும் விடவில்லை. நேர்மையாக அளவிட்டுச் சென்றுகொண்டே இருந்தார்.

விமர்சகர்கள் என்றாலே கசப்போடு பார்க்கும் போக்குதானே இருக்கிறது. காலம் கடக்கக் கடக்கத்தான் உலகம் விமர்சகர்களின் அளப்பரிய பணியைப் புரிந்துகொள்ளும்.

உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர் மார்க்சிம் கார்க்கி 20000 த்திற்கும் மேற்பட்ட இலக்கியத்தரம் வாய்ந்த கடிதங்களை எழுதியிருப்பதாகச் சொல்லப்படுகின்றது. அப்படியாக இலக்கியத்தரம் வாய்ந்த கடிதங்களை வெறும் அஞ்சலட்டைகளிலேயே எழுதிக்குவித்தவர்கள் திகசியும் வல்லிக்கண்ணனும். தனது விமர்சனக் கட்டுரைகளின் வாயிலாக தி.க.சி.என்றென்றும் தனது பணியை ஆற்றிக்கொண்டே இருக்கிறார். இளைய தலைமுறையினர் தி.க.சி.யைச் சிக்கெனப் பிடித்துக்கொள்ள வேண்டும் என வேண்டுகிறேன். இந்த முழுமையான தொகுப்பை ’நம்மை விமர்சிக்கவில்லையே…. வேறு யார்யாரையோதானே விமர்சித்திருக்கிறார்’ என்ற எண்ணத்திலேனும் படித்துவிடவேண்டும்.

 படித்துமுடிக்கும்போது இந்த நூல் நம்மைச் செதுக்கி முடித்திருக்கும். ஒரு சிறந்த எழுத்தாளர் பிறந்திருப்பார்.  இந்நூலின் வாயிலாக தி.க.சி. என்றும் நம்மோடிருப்பார் நம்மைச் செதுக்கிக்கொண்டும்..! நன்றி..’’
- வேங்கட பிரகாஷ் .

Friday, March 27, 2015

கடல் ஆரம் - Ocean Necklace







இன்றைய நியூ இந்தியன் எக்ஸ்ப்ரஸ் ஆங்கில ஏட்டில் உள்நாட்டு நீர்வழிப்போக்குவரத்து, கடல்வழி போக்குவரத்து துறைமுகங்கள் வளர்ச்சியைப் பற்றி இந்திய வரைபடத்தில் குறிப்பிட்டு விளக்கமான செய்தி வந்துள்ளது.

இந்தியாவில் ஆங்கிலேயர் காலத்தில் அன்றைய புகைவண்டிகளுக்கு இருப்புப் பாதை அமைத்தது போல, நீர்வழிப்பாதை அமைக்கவேண்டும் என்று அப்போதே திட்டங்கள் இருந்தன.  அன்றைக்கு வேடிக்கையாக இதனை இரும்பு வெர்சஸ் தண்ணீர் என்று சொல்லி எந்தப்பாதை வெற்றிகரமாக அமையுமென்று ஆங்க்லிலேயப் பரிவாரங்களிடையே பேசப்பட்டது.

கிராமங்களிலிருந்து நகரங்கள் வரை நீர் வழிப்போக்குவரத்தால் எப்படி இணைப்பது என்று இந்த வரைபடம் அனைத்து விபரங்களோடு நமக்கு விளக்குகின்றது. இது ஒரு அற்புதமான திட்டம். இதிலும் சுற்றுச் சூழல் இடையூறுகள் இருக்கத்தான் செய்யும். முடிந்த அளவு சுற்றுச்சூழலையும் கவனத்தில் கொண்டு இத்திட்டங்கள் நடைமுறைக்கு வரவேண்டும்.

தற்போது கேரளாவிலும், மேற்குவங்கம், பீகார், பிரம்மபுத்திரா பாயும் அசாம், அருணாச்சலப் பிரதேசப்பகுதிகளில் நீர்வழிப்போக்குவரத்து மிகவும் பயன்பாட்டில் இருக்கின்றது. தமிழ்நாட்டைப்பொறுத்தவரையில்  மரக்காணத்தில் துவங்கி சென்னைக்கு வந்து ஆந்திரம் மசூலிப்பட்டிணம் வழியாக கஞ்சம் மாவட்டம் வழியாக ஒடிசா எல்லைவரைத் தொடும் பக்கிங்ஹாம் திட்டம் முக்கியமான திட்டமாகும்.

நீர்வழிப்போக்குவரத்து குறித்தும், பக்கிங்ஹாம் கால்வாய் திட்டம் குறித்தும் என்னுடைய இணையதளத்தில் விரிவான பதிவுகள் முன்பே எழுதி இருக்கிறேன்.

இத்திட்டம் கனவுத்திட்டமா செயல்த்திட்டமா என்று காலம் தான் முடிவு செய்யவேண்டும்.

-கே.எஸ்.இராதா கிருஷ்ணன்.


#Waterways
#Shipping
#Ports
#KSR_Posts


பாரதரத்னா வாஜ்பாய் - Bharat Ratna Atal Bihari Vajpayee






அடல்பிகாரி வாஜ்பாய் அவர்களுக்கு, பாரத ரத்னா விருது  வழங்கப்பட்டுள்ளது. தாமதமாகவே இந்த விருது அவருக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.  இந்தியக் குடியரசுத் தலைவரான பிரணாப் முகர்ஜி நேரில் சென்று, அவர் இல்லத்திலே இந்த விருதினை வழங்கி திரு.வாஜ்பாய் அவர்களைப் பெருமைப்  படுத்தியுள்ளார்.  

உலக அளவில் பார்த்தால் இன்றைக்கு விரல்விட்டு எண்ணக்கூடிய சில அரசியலில் மூத்த தலைவர்களே  நம்மிடையே வாழ்கின்றார்கள்.  இந்தியாவில் பிரதமராக இருந்த வாஜ்பாய், தலைவர் கலைஞர், அமெரிக்காவின் சீனியர் புஷ், க்யூபாவின் பிடல் காஸ்ட்ரோ  போன்றோர் உள்ளனர்.

பாரத ரத்னா விருது பெற்ற  வாஜ்பாய் அவர்கள் ஒரு சிறந்த கவிஞர், இலக்கியகர்த்தா, ரசனைமிகுந்தவர், ஆங்கிலத்திலும் இந்தியிலும் சிறப்பாக மக்களை ஈர்க்கக் கூடிய பேச்சாளர், சிறந்த நாடாளுமன்றவாதி, மென்மையானவர்,  அரசியலில் அடிமட்டத்திலிருந்து வளர்ந்தவர்.  இவருடைய நாடாளுமன்ற பேச்சுக்கள் நான்கு தொகுதிகளாக புத்தகமாக வெளிவந்துள்ளன. அவை இந்தியாவின் சமகால அரசியலைப்பற்றி சொல்கின்ற ஆவணங்களாகும்.

அயோத்தி பிரச்சனையும், குஜராத்தில் நடந்த கோத்ரா பிரச்சனையும் இவர் இதயத்தை குத்துகின்ற சம்பவங்களாக இருந்தது. அரசியலில் இவருடைய சகாக்களை மதவாத தீவிரவாதிகள் என்று விமர்சிக்கின்றவர்கள் கூட வாஜ்பாய் அவர்களை மனம்திறந்து பாராட்டுவார்கள்.  ரைட் மேன் இன் ராங் ப்லேஸ் (Right Man in Wrong Place)  என்று பலர் இவரைச் சொல்வதுண்டு.

தன் இளமைக்காலத்தில் இவரும் எல்.கே அத்வானியும் டெல்லியில் ஒரு சிறு அறையில் தங்கி, இவர்களே சமைத்து உண்டு , அரசியல் பணிகளை மேற்கொண்டாகள். தலைவர் என்ற வார்த்தைக்கு இலக்கணமாகத் திகழ்பவர் வாஜ்பாய். மொரார்ஜி தேசாய் பிரதமராக இருந்த ஜனதா ஆட்சி காலத்தில், வெளியுறவுத்துறை  அமைச்சராக வாஜ்பாய் இருந்தார்.  அப்போது அமெரிக்கா மற்றும் ரஷ்யாவுடன் இந்தியாவிற்கு இருந்த இருநாட்டு உறவுகளை சமச்சீராக அமைத்துக் கொண்டவர்.

1975ம் ஆண்டு இந்திராகாந்தி அவசரநிலையை பிரகடனம் செய்தபோது அதைத் தீவிரமாக  எதிர்த்தவர். வங்க தேச விடுதலைக்கு இந்திராகாந்தி ஆற்றிய பணிகளைப் பாராட்டி  “எங்கள் துர்கா தேவியே” என்றும் அழைத்தவர். இப்படி இவருடைய சிறப்புகளைச் சொல்லிக்கொண்டே போகலாம். 1986லிருந்து 2000 வரைக்கும் இவரைச் சந்திக்கக்கூடிய வாய்ப்புகள் அமைந்தன.




டெல்லியில்  வை.கோ அவர்களை கேபினட் அமைச்சர் ஆகவேண்டும் என்ற எண்ணத்துடன்,   எந்தத் துறை வேண்டும் என்று மட்டும் என்னிடம் சொல்லுங்கள் என்று கேட்டுக் கொண்டார் வாஜ்பாய். ஆனால், .வை.கோ   “வெறும் நான்கு எம்.பிக்களைக் கொண்டு எனக்கு அமைச்சர் பதவி வேண்டாம். தமிழ்நாட்டில் என்னுடைய கட்சியை வளர்க்கவேண்டும்” என்றார். அதற்கு பதிலளித்த வாஜ்பாய் அவர்கள், “ ராமகிருஷ்ண ஹெக்டே மூன்று எம்.பிக்களை வைத்துக் கொண்டு வணிக  அமைச்சராக இல்லையா... என்றபோது வை.கோ வேண்டவே வேண்டாம் என்று தலையசைத்துவிட்டார். அப்போது ஒரு கூட்டணிக் கட்சியை  ஒரு பிரதமர்  எப்படி மதித்தார் என்று கண்கூடாகப் பார்த்திருந்தேன். இன்றைக்கும் அது நினைவில் உள்ளது.


வாஜ்பாய் அவர்களது ஆட்சியில் அரசியல் அமைப்புச் சட்டம் மாறுதல் குறித்து நீதிபதி வெங்கடாச்சலைய்யா குழுவில் அல்லது கேபினட் அந்தஸ்தில் உள்ள காதி கிராம வளர்ச்சி வாரியத்தில் தலைவராக என்னை நியமிக்க தன் கைப்பட எழுதிய கடிதத்தை வை.கோ அவர்களின் பரிந்துரையில் கையொப்பமிட்டு “ஆல் தி பெஸ்ட்” என்று சொல்லி அவருடைய காலை உணவை உண்டுவிட்டு, பப்பாளி பழத்தினை சாப்பிட்டுக்கொண்டே என்னைப் பார்த்து தலையசைத்துப் புன்னகைத்த நிமிடங்களை மலரும் நினைவுகளாக எண்ணிப்பார்க்கிறேன். (பின் 1998 இறுதியில் ஜெயலலிதா மத்திய அரசுக்கு அளித்துவந்த ஆதரவைத் திரும்பப் பெற்றதால்,  பொதுத்தேர்தல் வந்தது.  இதற்கிடையில் இந்த பொறுப்பு கிடைக்காமல் போனது வேறுவிஷயம்)


கடந்த 1998 செப்டம்பர் 15 அன்று அண்ணா பிறந்த நாளை எழுச்சி நாள் என்று சென்னைக் கடற்கரையில் வை.கோ அவர்கள் நடத்தினார். அந்த நிகழ்வை முன்னின்று நடத்தியது அடியேன். அன்றைக்கு பிரதமர் வாஜ்பாய் சென்னைக்கு வருகை தந்திருந்த பொழுது, விமான நிலையத்தில், 1993ல் தி.மு.கவிலிருந்து வெளியேறிய வை.கோ மீண்டும் தலைவர் கலைஞர் அவர்களைச் சந்திக்க அன்றைக்குத் தான் வாய்ப்பு ஏற்பட்டது.

விமான நிலையத்திற்கு வந்திறங்கிய அன்றைய பிரதமர் வாஜ்பாய் வரவேற்பு நிகழ்ச்சிகள் முடிவடைந்தவுடன், ராஜ் பவன் செல்ல தயாரான போது என்னிடமிருந்த சேது சமுத்திர திட்டம் சம்பந்தமாக வைகோ எழுதியிருந்த கடிதத்தை வாங்கி பிரதமரிடம் “சேது சமுத்திர கேனால்....” என்று சொல்லி கொடுக்கும்போதே தன் கைகளைக் காட்டி......  “கடிதத்தை வைத்துக் கொள்ளுங்கள்.. சேது சமுத்திர திட்டம் பற்றிய மனுதானே...  இன்றைக்கு மாலை அதைப் பற்றி அறிவிப்பேன்” என வை.கோவிடம் சிரித்துக் கொண்டே சொன்னார்.

திட்டமிட்டவாறு அன்று மாலை  எழுச்சியான கூட்டம் நடைபெற்றது . கூட்ட மேடைக்குப் பின்புறம் தமிழக உணவு வகைகள் சுடச்சுட மணக்கும் வகையில் தயாராகி இருந்தது. மேடைக்குப் பின்புறம் வந்த பிரதமர் வாஜ்பாய் இதைப்பார்த்தவுடன் வை.கோவிடம் “சாப்பிடலாமா” என்று உரிமையுடன் கேட்டு ருசித்துச் சாப்பிட்ட பின்,  சமையல்காரரைப் பார்த்து “நன்றாக இருந்தது” என்று சந்தோசத்தோடு  பாராட்டவும் செய்தார்.  இதை தன்னோடு நிகழ்ச்சிக்கு வந்திருந்த எல்.கே.அத்வானி, ஜார்ஜ் பெர்னாண்டஸ், பாருக் அப்துல்லா, பிரகாசிப் பாதல், வெங்கைய்யா நாயுடு போன்றவர்களிடம் “நான் தமிழக உணவுகளை நேசிக்கிறேன். நீங்களும் சாப்பிடுங்கள்” என்று சொன்னதையெல்லாம் மறக்க முடியாது.

ஒருமுறை   தீப்பட்டித்தொழில் பிரச்சனைகள் குறித்து சிவகாசி, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி போன்ற அவ்வட்டார  தீப்பட்டி உற்பத்தியாளர்களின் பிரதிநிதிகளை அழைத்துக் கொண்டு, டெல்லியில் உள்ள  பிரதமர் அலுவலகத்தில் சிவகாசி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த வை.கோ அவர்கள் சென்றிருந்தார். அவர்களை  வாஜ்பாயைச் சந்திக்க வைக்கும்போது பிரதிநிதிகள்  அனைவரோடும் தேனீர் அருந்திவிட்டு, ஒவ்வொருவர் பெயரையும் கேட்டுத் தெரிந்துகொண்டு இரண்டு நிமிடத்தில் மனுவை வாங்கிவிட்டு அனுப்பவேண்டிய பிரச்சனையை, ஒரு நாட்டின் பிரதமராக இருபத்து ஐந்து நிமிடங்கள் எங்களோடு செலவிட்டார்.

ஈழத் தமிழர்கள் பிரச்சனையில், தமிழர்களுக்கு ஆதரவாகவே தம் ஆட்சிகாலத்தில் முடிவுகளை மேற்கொண்டார். இலங்கைக்கு ஆயுதங்கள் வழங்கும் ஒப்பந்தந்தை நிறுத்திவைத்ததோடு, எதிர்காலத்திலும் ஆயுத தளவாடங்கள் எதுவும் இலங்கைக்கு அளிக்கக்கூடாது என்று தெளிவான உத்தரவைப் பிறப்பித்தார். பம்பாயிலிருந்து இவர் ஆட்சிகாலத்தில் இந்தியாவின் போர்கப்பல் ஒன்று இலங்கைக்கு அனுப்ப இருந்ததை தடுத்து ஆணையிட்ட இரும்பு மனிதர் .



சாராணமான என்னைப்போன்ற எளியவர்களையே ஈர்த்த மாமனிதர் தான் அடல்பிகாரி வாஜ்பாய். விவசாயிகள் பிரச்சனை, சுரேஷ் பிரபு தலைமையில் நதிநீர் இணைப்புக்கு ஆய்வுக்குழு அமைத்தது,  நாட்டில் இன்றைக்கு எளிதில் பயணிக்க முடிகின்ற நாற்கரச் சாலைகள் போன்ற பல அரிய சாதனைகளை நாட்டுக்கு அர்பணித்த அற்புத மனிதர்.

 1986ம் ஆண்டு  மே மாதம் மதுரை பந்தயத்  திடலில் டெசோ மாநாடு நடைபெற்றது. அம்மாநாட்டில் திரு வாஜ்பாயும் கலந்துகொண்டார். அப்போது அவரையும், காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த எச்.என் பகுணாவையும் மறுநாள் விடியற்காலையில் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு அழைத்துச் செல்லவேண்டிய பொறுப்பு என்னிடம் ஒப்படைக்கப்பட்டது.

அவர்கள் தங்கியிருந்த பாண்டியன் ஓட்டலிலிருந்து கோவிலுக்கு அழைத்துச் சென்றுவிட்டுத் திரும்பும் போது, வாஜ்பாய் “இட்லி தோசா சாப்பிடலாம்” என்றார். உடன் வந்திருந்த பகுணாவும் இந்தியில் “சாப்பிடலாமே” என்று சொல்ல, காலேஜ் ஹவுஸ் உணவு விடுதிக்கு இருவரையும்அழைத்துச் சென்றேன்.

காலை 9.00மணியளவில் ஓட்டலுக்கு வெளியே வந்ததும்,  “அமைதியாக எங்களை யாருக்கும் அடையாளம் தெரியாதவாறு கோவிலைச் சுற்றிக் காண்பித்து, நல்ல உணவையும் சாப்பிட வைத்ததற்கு நன்றி” என்றார் வாஜ்பாய் அவர்கள்.   மீண்டும் பாண்டியன் ஓட்டலுக்குத் திரும்பிய போது வாஜ்பாயிடமும் பகுணாவிடமும் அடுத்தவாரம் நடைபெற இருந்த  தலைவர் கலைஞர், பழ.நெடுமாறன், வை.கோ, தமிழக மற்றும் ஈழத்தலைவர்கள், உயர்நீதிமன்ற நீதிபதிகள் கலந்துகொள்கின்ற என்னுடைய திருமணவிழா அழைப்பிதழைக் கொடுத்தேன். உடனே இருவரும் தங்களுடைய வாழ்த்துகளைத் தெரிவித்தார்கள்.

ஆனாலும்  வாஜ்பாய் அவர்கள்  டெல்லிக்கு சென்ற பின்,   திருமண நாளான
12-05-1986 அன்று நினைவில் வைத்து எனக்கு வாழ்த்துத் தந்தி அனுப்பி இருந்தார். இந்தப்  பதிவை எனக்கு உதவியாக இருக்கும் படைப்பாளி கார்த்திக் புகழேந்தி தட்டச்சு செய்யும் பொழுது, என் தாயறிய இதய சுத்தியோடு சொல்கிறேன் என் கண்களிரண்டிலும் கண்ணீர் திரண்டு நிற்கின்றது. என்னுடைய 42வருட பொது வாழ்க்கைக்கு  இதைவிட வேறு என்ன பெரிய பெருமை வேண்டும். எம்.எல்.ஏவாகவும், எம்.பியாகவும்  ஆகவில்லையென்று என்னுடைய நண்பர்களும், நெருங்கியவர்களும், என் நலம்விரும்பிகளும் ஆதங்கப்பட்டாலும்  இந்த பேறுகள் எல்லாம் யாருக்குக் கிடைக்கும்...

இத்தகைய அன்பான மனிதருக்கு தாமதமாக பாரத ரத்னா வழங்கப்பட்டாலும், பொறுத்தமான மனிதருக்கே வழங்கப்பட்டுள்ளது என்று பாரத ரத்னாவுக்குத்தான் பெருமை.






-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
27-03-2015.













President Pranab Commutes Death Sentence in a Rare Case


 


After rejecting mercy petitions of 22 convicts on death row, President Pranab Mukherjee recently commuted the death sentence of a convict to life imprisonment.


Man Bahadur Deewan, alias Tote Deewan, was convicted for killing his wife Gauri and two minor sons, Rajib and Kajib, in September 2002 at a village in Dibrugarh district of Assam. He later killed another inmate of the house Bidhimaya and surrendered before the police. .


This is one of the rare cases where Mukherjee has commuted the death sentence after taking over in 2012. The death sentence of 1993 blast convict Yakub Menon, whose mercy petition was rejected by the president, had been stayed by the Supreme Court. Nithari serial rape and murder convict Surender Koli's mercy petition, too, was rejected by Mukherjee but he got relief from SC.


‪#‎KSR_Posts‬‪#‎Commutes_Death_Sentence‬‪#‎PresidentofIndia‬

Thursday, March 26, 2015

சில நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வீடுகள் ஒதுக்கப்பட்டும் நட்சத்திட ஓட்டல்களில் ஜாகையா?




சில  நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வீடுகள் ஒதுக்கப்பட்டும்  ஆடம்பர நட்சத்திர ஓட்டல்களில் ஜாகையா?
_____________________________________________________

கடந்த மேமாதம் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்று, நாடாளுமன்ற உறுப்பினர்களாக பொறுப்பேற்று பத்துமாதங்கள் ஆகின்றது. அவர்களுக்கு டெல்லியில் தங்குவதற்கு வீடுகள் பெரும்பாலானவர்களுக்கு ஒதுக்கப்பட்டு விட்டது.

முன்னாள் அமைச்சர்களும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒருசிலரும் இன்னும்  தங்கள் இருப்பிடத்தைக் காலி செய்யாமல் இருப்பது வெட்கக் கேடு.

இப்போது பதவியேற்ற உறுப்பினர்கள் டெல்லி அசோகா ஓட்டல்,  சாம்ராட் போன்றஆடம்பரமான  ஐந்து நட்சத்திர ஓட்டல்களில் தங்குகி இருப்பதாக செய்திகல் வந்துள்ளன.  அமைச்சர் வெங்கய்யா நாயுடு இதைப்பற்றி வருத்தத்தோடு ”வீடுகள் ஒருசிலருக்கு ஒதுக்கப்பட்டுவிட்டது, ஒருசிலருக்கு ஒதுக்கப்பட்ட வீடுகளில் சீரமைப்புப்பணிகள் நடந்துகொண்டிருக்கிறது என்று குறிப்பிட்டது பத்திரிகையில் செய்தியாக வெளிவந்துள்ளது.

 டெல்லி ஆடம்பர ஓட்டல்களில் ஒருநாள் வாடகை எவ்வளவு?
மக்களின் வரிப்பணத்தில் தானே அரசு அதனை வழங்குகின்றது.

வீடுகள் வழங்கப்பட்டும் இம்மாதிரிப் போக்கில் மக்களின் பிரதிநிதிகள் சிலர்  இருப்பது கவலையைத் தருகின்றது. நாடாளுமன்ற உறுப்பினர் என ஆகிவிட்டாலே MP என்றால் Most Privileged என்று நினைத்துக் கொண்டு சிலர் பொறுப்பில் இருப்பது வேதனையாக இருக்கின்றது.

நாடாளுமன்றத்தையும் சரியாக நடந்த்த விடுவதில்லை.
 மக்களின் உண்மையான பிரதிநிதியாக சிலரெல்லாம் பிரதிபலிப்பதில்லை. நாடாளுமன்றத்தில் ஒருகாலத்தில் மசாணி, பிலுமோடி, மதுலிமாயி, ஜோதிர்மயுர் பாசு, பேரறிஞர் அண்ணா, பேராசிரியர் என்.ஜி ரங்கா, ஏ.கே.கோபாலன், பெரோஸ் காந்தி, கேரே, மது தண்டவடே, ரவீந்திர வர்மா, ராம் மனோகர் லோகியா என பல ஆளுமைகள் உறுப்பினர்களாக  இருந்து எப்படி பணியாற்றினார்கள் என்பதை இன்றைய உறுப்பினர்கள் உணரவேண்டும்.

இத்தனைபேரின் பெயர்களையாவது இன்றைக்கு பதவியில் இருக்கும் சிலர் கேள்விப்பட்டிருப்பார்களா என்பது தெரியவில்லை.  நாடாளுமன்ற உறுப்பினர் என்றால் விமானத்தில் டெல்லிக்குப் பறப்பதும், தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தில் நிதியை விருப்பத்திற்கேற்ப ஒதுக்குவதுமே தலையாய பணியாக சிலர் நினைக்கின்றனர்.

இன்றைக்கு இவர்களுக்கெல்லாம் வசதிகள் அதிகம். நாடாளுமன்ற உறுப்பினர்களாக பெருந்தலைவர் காமராஜர், பேரறிஞர் அண்ணா, மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர் பி.ராமமூர்த்தி , பேராசிரியர்.க . அன்பழகன், நாஞ்சிலார்,இரா.செழியன், முரசொலி மாறன்,  வை.கோ, கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் எம். கல்யாண சுந்தரம், மார்ஷல் நேசமணி போன்றோர்கள் உறுப்பினர்களாக இருந்தனர். அவர்களுக்கெல்லாம் இப்போது இருக்கும் வசதிகளும் சலுகைகளும் வழங்கப்படவில்லை.

1990வரைக்கும் தொகுதி மேம்பாட்டு வளர்ச்சி திட்டத்துக்கான நிதி, விமானத்தில் பறக்கும் வசதிகளோ இப்போதுபோல அவர்களுக்கெல்லாம் இல்லை. இரண்டுமுறை விமானத்தில் செல்லலாம். மீதிமுறையெல்லாம் ஜி.டி.எக்ஸ்ப்ரஸில் முதல் வகுப்பில் தான் டெல்லிவரை இரண்டு இரவுகள் ஒருபகல் பயணிக்க வேண்டும். அதற்குமேல் விமானத்தில் போகவேண்டுமென்றால்
சொந்த செலவில்தான் போக வேண்டும்.

இப்படியான நிலையில் அன்றைக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்தவர்களின் பணிகள் என்ன... இன்றைக்கிருக்கும் சிலரின் நிலைப்பாட்டையும் இணைத்துப் பார்த்தால் வேதனைதருகின்றது.

டெல்லியின் பிரபலாமான அசோகா ஓட்டலில்யாரோ வாடகை கொடுக்கிறார்கள் என்ற மமதையில் ஒரு சில உறுப்பினர்கள் தங்கி இருப்பது நாட்டின் கஜானாவை காலி செய்வது மட்டுமல்ல சுரண்டுவதும் கூட.

கடந்த காலங்களில் சில உறுப்பினர்கள் வெளிநாடு செல்லும் போது   மூன்றாவது நபரை தனது மனைவி என்று கூச்சமில்லாமல் விசா பெற்றது. அவையில்  கேள்விகள் கேட்டதில் நடைபெற்ற முறைகேடுகள் எனப் பல குற்றச்சாட்டுகளுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளான செய்திகளும் வந்தன.

இப்படி இருந்தால் பொதுவாழ்வில் தூய்மை எப்படி ஏற்படும். மக்கள் குரலே மகேசன் குரல் என்று சொல்வார்கள். மகேசனான மக்கள் சிந்திப்பார்களா!?




-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
26-03-2015


தமிழக நதிகள் இணைப்புத்திட்டம் - River linking in Tamil Nadu.


______________________________________________________

திமுக ஆட்சியில் நெல்லை தூத்துக்குடி மாவட்டங்கள் பயன்பெறும் வகையில் அறிவிக்கப்பட்டு துவக்கப்பட்ட, தாமிரபரணி - கருமேனியாறு- நம்பியாறு இணைப்புத்திட்டம் நான்கு கட்டங்களாகச் செயல்படுத்த 369கோடி ரூபாய்க்கு திட்ட மதிப்பீடு செய்யப்பட்டு, பணிகளும் நடந்தவண்ணம் இருந்தன.
திடீரென நான்குநேரிவரை நெருங்கிய இப்பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

காவிரி-வைகை-குண்டாறு இணைப்புத் திட்டத்துக்கு 5166 கோடி ரூபாய் திட்ட மதிப்பீடு செய்யப்பட்டது. இவையாவும் வெறும் அறிவிப்புகளாகவே உள்ளன. தமிழக அரசின் நேற்றைய பட்ஜெட் நதிகள் இணைப்புத் திட்டத்திற்கு வெறும் 253கோடி ரூபாய் மட்டும் ஒதுக்கியுள்ளது.

இந்த ஒதுக்கீடு போதுமான நிதியும் இல்லை. மத்திய அரசும் இந்தப் பிரச்சனையில் கண்டும்காணாமல் இருக்கின்றது. இத்திட்டம் கேள்விக்குறியாகத் தான் இருக்கின்றது.

#River_linking_in_Tamilnadu

#KSR_Posts

Wednesday, March 25, 2015

ராம் மனோகர் லோகியா105 . ( Ram manohar lohia ) Finally,A Documentary on Lohia.



சோசியலிஸ்ட்டும் ஜெயப்பிரகாஷ் நாராயணனின் சகாவுமான
ராம் மனோகர் லோகியாவுக்கு நாளை 105வது பிறந்தநாள். 1910ல் பிறந்து 1967ல் தனது 57வது வயதில் காலமானார். இன்னும் பலகாலம் அவர் வாழ்ந்திருக்கவேண்டும்.

இந்நாளில் அவரைக்குறித்த ஆவணப்படம் அவர் இறந்து 47ஆண்டுகளுக்குப் பின் டெல்லியில் வெளியிடப்படுகிறது. ராம் மனோகர் லோகியா
 சிறந்த நாடாளுமன்றவாதியாவார். காங்கிரஸ் ஆட்சிகாலங்களில் நேருவின் அரசை ஆக்கப்பூர்வமாகவும், தாக்கம் ஏற்படும் வகையிலும் விமர்சிப்பார்.

இவர் பேச எழுந்துவிட்டாலே காங்கிரஸ் அமைச்சர்கள் அச்சம் கொள்வார்கள். பண்டிதர் நேருவே  லோகியா என்ன பேசப்போகிறார் என்று எதிர்பார்ப்போடு உற்று கவனிப்பார். நேருவுக்கு நண்பராகவும் இருந்தார். நாட்டு விடுதலைக்குப் பின் நேருவின் கொள்கைகளை ஆணித்தரமாக எதிர்க்கவும் செய்தார்.

எந்த பிரச்சனையானாலும் தெளிவாகச் சிந்தித்து அதைக்குறித்து படம்பிடித்துக் காட்டி நாடாளுமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் பேசக்கூடிய ஆற்றல் பெற்ற பேச்சாளரும் கூட. எளிமையான வாழ்வு அவருடையது படோபடங்கள் பந்தாக்கள் எதுவும் கிடையாது. அவரால் வளர்க்கப்பட்ட சீடர்கள் தான் இன்றைய நிதீஷ்குமார், முலாயம்சிங் யாதவ்,லல்லுபிரசாத் யாதவ் போன்றவர்கள்.

அவருடைய சப்த கிரந்தி தத்துவத்தில் (ஏழு போராட்டங்கள்)  ஆண்களுக்கும், பெண்களுக்கும் சம உரிமைகள் வழங்க வேண்டும் என்பதற்கு  முதலிடம் தந்தார். "ஒருவன் பிறருக்கு எதை உபதேசிக்கிறானோ, அதை கண்டிப்பாக அவனே நடைமுறையில் செய்து அந்த உபதேசங்களைத் தானே முதலில் கடைப்பிடித்து ஒழுக வேண்டும்." என்பார்

 1964ல் அமெரிக்காவுக்குச் சென்றபோது வெள்ளையரல்லாத கருப்பர் என்ற காரணத்தால் அவரை அங்குள்ள உணவு விடுதிக்குள் அனுமதிக்க மறுத்த அமெரிக்க வெள்ளையர்களின் இனவெறியை  எதிர்த்து அங்கு போராட்டத்தைத் தொடங்கினார் டாக்டர் லோகியா. அதனால் அவர் அங்கு சிறையிலடைக்கப்பட்டார்.

லோகியா அவர்கள் சிறை செய்யப்பட்டதை அறிந்த அமெரிக்க அதிபர் லிண்டன்.பி. ஜான்ஸன் அவரை உடனடியாக விடுதலை செய்ய உத்தரவிட்டதோடு, அவரிடம் மன்னிப்பும் கேட்டுக் கொண்டார். அப்போது டாக்டர் லோகியா  அனுப்பிய பதிலில் "அமெரிக்கஅதிபர் அவர்கள் என்னிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்வதற்குப் பதிலாக நியூயார்க் நகரில் அமெரிக்க மக்களால் நிறுவப்பட்டுள்ள "சுதந்திர தேவிச் சிலை"யிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்ளட்டும். எந்தக் கொள்கைகளுக்காக அந்த "சுதந்திரச்சிலை" நிறுவப்பட்டதோ அந்தக் கொள்கைகளை தற்போது அமெரிக்கர்கள் பின்பற்றுவதில்லை" என்று எழுதினார்.

டாக்டர். ராம் மனோகர் லோகியா அவர்கள் தனது ஏழுபுரட்சிகளில் ஒன்றாகத் தனி மனிதனிடம் அளவுக்கதிகமாகச் செல்வம் குவிவதை எதிர்த்தும், மக்களிடையே திட்டமிட்டு உற்பத்தியைப் பெருக்குவதுடன் பொருளாதார வளர்ச்சியும் சமத்துவமும் ஏற்படச் செய்வதை ஆதரித்தும் போராட வேண்டுமென்றார். நாடு முழுவதும் மக்கள் அவ்விதப் போராட்டங்களில் ஈடுபட வேண்டுமென டாக்டர் லோகியா கூறினார்.

ஒரு நாட்டுக்கு எதிராக வேறொரு நாடு சுரண்டலில் ஈடுபடுவதற்கு எதிராகவும் போராட வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார். அப்படிப்பட்ட போராட்டங்கள் தொடர்ந்து நடந்துகொண்டே இருக்கவேண்டும் என்றார். நமது நாட்டில் பல அரசுகள் புதிதாக வருகின்றன. ஆண்டுவிட்டுச் சென்றுவிடுகின்றன. ஆனால் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளுக்கெதிரான போராட்டங்கள் எந்த அளவிற்கு நடைபெற வேண்டுமோ, அந்த அளவுக்கு நமது நாட்டில் நடைபெறவில்லை. இன்றைக்கும் லோகியோவின் வாக்கு பொறுத்தமாகவே அமைந்துவிட்டது.

சிவப்புக் கம்பளங்கள் விரிக்கப்பட்டு, பன்னாட்டி நிறுவனங்கள் படையெடுத்து விட்டன. புதிய பொருளாதாரக் கொள்கைக்கு அடியெடுத்துவைத்து 20ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது.
India for Sale என்ற நிலையில் இந்தியாவைத் திரும்பவும் வெளிநாட்டவர்கள் கையில் சென்றுவிடுமோ என்ற அச்சம்தான் இன்றைக்கு ஏற்பட்டுள்ளது.

ராம் மனோகர் லோகியா ஓர் ஆளுமை, ஓர் கம்பீரம், நாட்டு விடுதலைக்கும் காங்கிரஸ்காரர்கள் போல போராட்டத்தில் சிறைக்குச் சென்றவர். கடந்த 2010ல் இவருடைய நூற்றாண்டு விழாவில் நாடே அறியும் வகைல் இவருடைய சோசியலிச  சப்த கிரந்த கொள்கைகளை மக்களிடம் கொண்டு செல்கின்ற நிகழ்வுகள் திருப்தியாக நடத்தப்படவில்லை என்ற வேதனை பலருக்கும் உண்டு.

வேடிக்கை என்னவென்றால், குஷ்புவுக்கு காங்கிரசில் பதவி வழங்கப்பட்டுள்ளது என்ற  செய்திகளைப் பதிவு செய்துகொண்டிருக்கும் பத்திரிகைகள் லோகியோ போன்ற ஆளுமைகொண்ட தலைவர்களைப் பற்றி எழுத மனம் இல்லாதவர்களாக இருக்கிறார்கள்.

எதிலும் நியாயமற்ற முறைகளும் விளம்பரங்களும் தகுதியற்றவர்களுக்கு  பதவிகளும் வழங்கப்படுவதால் தான் நாட்டில் இளைஞர்கள்  “என்னடா பொல்லாத அரசியல்” என்று மாவோயிசத்தை நோக்கிப் பயணிக்கத் துவங்குகின்றார்கள். இது  சமுதாயத்தின் குறையா?  இல்லை நமது அரசியல் அமைப்புகளின் குறையா?  என்று தீர்மானிக்க வேண்டிய கட்டாயம் வரும்.

பொது வாழ்விலிருந்து போலிகளை அப்புறப்படுத்த வேண்டியது  அவசியம். இயற்கையின் அருட்கொடை அதற்கான வாய்ப்பை வழங்கினால் தான் ஆரோக்கிய அரசியல் சமுதாயமும் , பொதுவாழ்வும் உருவாகும்.

பொதுவாழ்வுக்கு அடையாளமாகத் திகழ்ந்தவர்தான் ராம் மனோகர் லோகியா. அவரது பிறந்ததினத்தில் இந்த ஆவணப்படம் வெளியாகியுள்ளது வரவேற்கத்தக்கது.


Finally,A Documentary on Lohia.


It took more than 47 years after his death to make the first film, a  documentary . on the life and times of Ram manohar lohia, arguably the architect of India's anti-Congress, and the larger, Opposition politics.


Its first Screening took place before a select audience on Lohia's 105th Birth anniversary on Thursday. The attempt to put Lohia and his "ism" into a short film was not an initiative of any top-rung leaders of the samajwadi stream of politics.


The  Documentary 'Lohia-Champion of the downtrodden', was produced by  Vichar Nyas headed by DP Tiripathi, a Rajya Sabha member of NCP. it was directed by Yashwant Giri, a young director from Mumbai film world and nephew of Nepal-based Socialist Pradeep Giri. The paucity of funds took it over two years to complete the film.



-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
25-03-2015.

#Ram_manohar_lohia

#A_Documentary_on_Lohia.

#KSR_Posts

மத்திய அரசின் நிலம் கையகப்படுத்தும் சட்டம் . -- Land Acquisition.(4)







நிலம் கையகப்படுத்தும் சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற வரும் 5ம் தேதியோடு காலக்கெடு முடிவடைகிறது. அதேவேளையில்  அவசரச் சட்டமும் காலாவதி ஆகின்றது. இப்படியான சூழ்நிலையில் மத்திய அரசு என்ன செய்யப்போகிறது என்று தெரியவில்லை.

கடந்த டிசம்பர் 31ம் தேதி நில கையக அவசரச் சட்டத்தை மத்திய அரசு பிறப்பித்தது. மக்களவையில் புதிய மசோதாவை தாக்கல் செய்து நிறைவேற்றி உள்ளது. நாடாளுமன்றத்தின் கூட்டத்தொடர் அடுத்தமாதம் 20ம் தேதிமுதல் துவங்குகின்றது. மாநிலங்கள் அவையில் இம்மசோதா நிறைவேறுமா என கேள்விக்குறி எழுந்துள்ள நிலையில், அனைத்து எதிர்கட்சிகளும் இந்தச் சட்டம் கூடாது என்று குடியரசுத்தலைவரை நேரில் சந்தித்து முறையிட்டுள்ளது.

கடந்த இரண்டு காங்கிரஸ் கூட்டணி ஆட்சிகளிலும் மன்மோகன் சிங் அரசு கொண்டு வந்த நிலம் கையகப்படுத்தும் மசோதாக்களில் சில திருத்தங்கள் செய்யப்பட்டன. மோடி அரசு அவ்வாறு திருத்தங்களைச் செய்யாமல் விவசாயிகள்,  பழங்குடியினர், மீனவர்கள் நலன்களை புறக்கணித்துவிட்டு, புணரமைப்பு , மறுகுடியமர்த்தல், நியாயமான இழப்பீடு மற்றும் வெளிப்படைத்தன்மை எனச்  தெளிவான பரிகாரங்கள் எதுவுமில்லை.

பொதுநோக்கத்திற்காக நிலம் கையகப்படுத்துதல் என்பதற்கு தெளிவான வரையறைகளோ விபரங்களோ சரியாக இல்லை. தனியார் நிறுவனங்களுக்கு நிலங்கள் கையகப்படுத்தும் போது 80சதவிகிதம் நில உரிமையாளர் ஒப்புதலும், பொது மற்றும் தனியார் கூட்டு நிறுவனங்களுக்கு நிலம் கையகப்படுத்தும் போது 70சதவிகித நில உரிமையாளர் ஒப்புதல் வேண்டுமென இருந்ததை 50சதவிகிதம் இருந்தாலே போதும் என இப்பொழுது மோடி அரசு குறிப்பிடப்பட்டுள்ளது.

பாதுகாப்பு, ஊரக வளர்ச்சி மற்றும் கட்டமைப்பு, வீட்டு வசதி, தொழில்வளர்ச்சி, உள்கட்டமைப்பு என்ற ஐந்து துறைகளிலும் தனியார் கூட்டு நிறுவவங்களோடு செயல்படும்போது விவசாயிகள் தங்கள் ஒப்புதல்களை அளிக்கத் தேவையில்லை என்று இப்பொழுது மோடி கொண்டுவந்துள்ள மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பொது நோக்கமென்று சொல்லப்படுகின்ற திட்டங்களுக்கு எந்த மதிப்பீடும், சமூக அக்கறையோ, தாக்கமோ மதிப்பிடத் தேவையில்லை என்று, அடாவடியாக நிலங்களை அபகரித்துக்கொள்ளும் வகையில் இப்போதைய மசோதா அமைந்துள்ளது.

வளமான விவசாய நிலங்களை கையகப்படுத்தக்கூடாது என்று முந்தைய சட்டத்திலிருந்த பிரிவை மாற்றி, எதைப்பற்றியும் சிந்திக்காமல் கையகப்படுத்திக் கொள்ளலாம் என்றநிலையில் மசோதா அமைந்துள்ளது. இந்தவகையில் எளிதாக மீத்தேனுக்கும், நியூட்ரினோவுக்கும் நிலங்களை கையகப்படுத்த முடியும்.

முந்தைய சட்டத்தில், நிறுவனங்கள் கம்பெனி திட்டம் 3வது பிரிவின் கீழ்
பதிவு செய்திருக்க வேண்டும். இப்பொழுது அதை அறவே நீக்கி தனியார் நிறுவனங்கள், பங்குதாரர்கள், கார்ப்ரேஷன்கள் என யார்வேண்டுமானாலும் பெரிய முதலாளிகளுக்கு உதவியாக நிலத்தை கையகப்படுத்தும் முறை எளிமையாக்கப்பட்டுள்ளது.

நிலம் இழந்தோர்கள் இழப்பீடு வழங்குவதற்கு தவறும் பட்சத்தில் அரசால் கையகப்படுத்தப்பட்ட நிலம் பாதிக்கப்பட்டவர்களிடம் ஒப்படைக்கப்படலாம். இம்மாதிரி பிரச்சனைகளுக்கு ஐந்தாண்டுகள் காலவரையில் பாதிக்கப்பட்டவர் நீதிமன்றத்திற்கு செல்லலாம் என்பதை மாற்றி, நீதிமன்றம் சென்று நிவாரணம் கேட்டோ, இடைக்கால தடைகேட்டோ செல்ல முடியாதபடி நீதியே மறுக்கப்பட்டுள்ளது.

இப்படியான கொடிய முறையில் இந்திய அரசியலைமைப்புச் சட்டத்திற்கு எதிராக இந்த மசோதா அமைந்திருக்கிறது என்று பலரும் தங்கள் கருத்துகளைத் தெரிவித்துள்ளனர்.


The UPA's 2013 Act made it mandatory to obtain the consent of 70-80% of farmers in case land was acquired for private and PPP projects.

The NDA's amendments to the UPA's land law severely compromise farmer rights and violate the Article 14th of Our Constitution of India.

The Fight for Land will go on....

ஆங்கிலேயர்கள் நில கையகப்படுத்தும் சட்டம் 1894ல் பிறப்பித்து நாட்டின் விடுதலைக்கு முன்னால் ஜமீன்தார்களுக்கும், ஜாகிர்தார்களுக்கும் நிலத்தை அள்ளி வழங்கினார்கள். அதே நிலைமையாக இப்போதைய மோடிதலைமையில் உள்ள  மத்திய அரசு கார்ப்ரேட் நிறுவனங்களுக்கு நிலங்களை வழங்கத்தான் இந்தச் சட்டம்.



தேர்தல் நேரத்தில் மோடி பேசியதென்ன?
இப்போது செய்துகொண்டிருப்பதென்ன?

-கே.எஸ். இராதாகிருஷ்ணன்.
25-03-2015.

ரசிகமணி டி.கே.சி-யின் வட்டத்தொட்டி சகா ல.ச காலமானார். - Vatta Thotti -T.K.C - La.Sa


ரசிகமணி டி.கே.சிதம்பரநாத முதலியார்

சிகமணி நடத்திய “வட்டத்தொட்டியில்” முக்கிய உறுப்பினராக பங்கேற்றதில் நம்மிடையே மிச்சமாக இருந்தவர் ல.சண்முக சுந்தரம் அவர்கள். அவரை அன்புடன் ஆங்கிலத்தில் எல்.எஸ் என்றும் அழைப்பார்கள். அவர் இன்று தம் 95-ம் அகவையில் சென்னை ஆதம்பாக்கத்தில் உள்ள தன் மகன் வீட்டில் காலமானார்.

திருநெல்வேலி வண்ணாரப்பேட்டையிலும், குற்றாலத்திலும் டி.கே.சி நடத்தும் “வட்டத்தொட்டி” கூட்டங்களிலும், ஏனைய இலக்கியக் கூட்டங்களிலும் ல.ச.வின் முக்கியப் பங்கேற்பு இருக்கும். இவர் கி.ராவுக்கு நெருக்கமானவர். இவரிடம் கழனியூரன் பேட்டிகளும் எடுத்துள்ளார். அந்தப் பேட்டிகள் கதைசொல்லி இதழிலும் வெளிவந்துள்ளது.

கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதியில் நான் போட்டியிட்ட போதெல்லாம், அந்தத் தொகுதியில் உள்ள ல.சவின் சொந்த கிராமமான நாச்சியார்புரம் கூட்டங்களில் இவரைப்பற்றி மக்களிடம் சொல்லும்போது மகிழ்ச்சியான வரவேற்பு இருக்கும்.

தன் இறுதிகாலத்தில் தென்காசி அருகே மேலகரத்தில் வாழ்ந்தார். டி.கே.சியின் பேரன் தீப.நடராஜனோடு கடைசிவரை நட்பு பாராட்டியவர். திரு. வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது டி.கே.சியின் அஞ்சல் தலையை வெளியிட தீப.நடராஜனும், ல.ச-வும் பெரிதும் மெனக்கிட்டார்கள். அப்பொழுது அரசியல் பணிகளுக்காக அடிக்கடி நான் டெல்லி செல்லும் பொழுது, திரு.வைகோ அவர்களோடு சேர்ந்து டி.கே.சியின் அஞ்சல்தலையை வெளியிடச் செய்ய நாங்களும் முயற்சி செய்தோம். ஆனால் அந்த முயற்சி பல்வேறு காரணங்களால் ஈடேறவில்லை என்பது வருத்தம் தருகின்ற செய்தி.






ரசிகமணியினுடைய வாழ்கை வரலாற்றை நூலாக வடித்தவர் ல.சண்முகசுந்தரம். அந்நூலை சாகித்ய அகாடமி வெளியிட்டது. இலக்கிய உலகில் டி.கே.சியின் புகழைத்தாங்கி நின்ற கடேசி சீடரையும் இழந்து தவிக்கும் ரசிகமணியின் நேசர்களுக்கு எங்களுடைய ஆழ்ந்த இரங்கல்கள்.







-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
‪#‎Vatta_Thotti‬
‪#‎TKC‬
‪#‎RIP_LaSa‬



Monday, March 23, 2015

கதை சொல்லி * இதழ்-27, Kathai solli




திட்டமிட்டவாறு ”கதை சொல்லி” -யின் பணிகள் நடக்கின்றன...
அட்டைப்படம் மாட்டுவண்டியோடு இருப்பதை பார்க்க மகிழ்ச்சியாக இருந்தது.  கி.ராவுக்கு சந்தோஷம். கழனியூரன் உடல்நிலை சரியில்லை என்றாலும் கூட பொறுப்புகளை எடுத்துச் செய்தார்.

கோவில்பட்டி மாரீஸின் உழைப்பு அதிகம். படைப்பாளிகளின் படைப்புகள் பல வந்துள்ளன. யாவும் பரிசீலனையில் உள்ளன. முடிந்தவரை நாட்டுப்புற, வட்டார வழக்கு படைப்புகளுக்கு முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது.

இந்த கதைசொல்லி இதழை நாங்கள் இருக்கின்றோம் என்று பொறுப்புகளைத் தலையில் ஏற்றிக்கொண்ட இளைஞர்களான,  கார்த்திக் புகழேந்தி (திருநெல்வேலி) , கனவுப்பிரியன் (தூத்துக்குடி), சிவகாசி சுரேஷ், பேராசிரியர் விஜய ராஜேஸ்வரி (திருவனந்த புரம்), ஸ்ரீதேவி செல்வராஜன் (விருதுநகர்), காயத்ரிதேவி (நாகர்கோவில்),   இராதா இராமச்சந்திரன் (புதுக்கோட்டை) பாராட்டக்கூடிய வகையில் தயாரித்து வருகின்றனர்.

ஏப்ரல் 1ம் தேதி  “கதைசொல்லி” கத்தாயஇதழ் வெளிவருகின்றது. இதழ் வருவதை கேட்டு, தினமணி ஆசிரியர் வைத்தியநாதன், மாமா தோப்பில் முகம்மது மீரான், தீப நடராஜன், நண்பர்கள் மணா, அப்பணசாமி, பேராசிரியர் பஞ்சாங்கம், பேராசிரியர் அ.ராமசாமி,  கவிஞர் வெண்ணிலா, உதயசங்கர்,  கோவை ரவீந்திரன், கல்கி பிரியன் இதுகுறித்து மகிழ்ச்சியைத் தெரிவித்தார்கள்.

-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
23-3-2015.

#KSR_Posts.

#Kathai_solli.

நாடுகள் செய்யும் படுகொலையே மரணதண்டனை - போப். Abolish death penalty -Pope







போப் ஆண்டவர் பிரான்ஸிஸ் தொடர்ந்து மரண தண்டனைகள் கூடாது என்று தான் பொறுப்பேற்ற நாளிலிருந்து  உலக நாடுகளை வலியுறுத்தி வருகிறார்.

கடந்த 21-03-2015 அன்று மரண தண்டனைக்கு எதிரான சர்வதேச அமைப்புக்கு இதுகுறித்து தன்னுடைய தெளிவான கருத்தை வலியுறுத்தி கடிதமும் எழுதியுள்ளார் போப் பிரான்ஸிஸ்.

மரணதண்டனை மூலம் ஒரு மனிதனைக்கொல்ல இன்னொரு மனிதனுக்கு ஒருபோதும் உரிமை கிடையாது. அதை நியாயமும்  படுத்தமுடியாது. எவ்வளவு கொடிய குற்றம் செய்தவனாக இருந்தாலும்  அவனுக்குத் தூக்குதண்டனை வழங்குவதால் என்ன நீதி கிடைக்கப் போகிறது.

மரண தண்டனையினால் எந்த நன்மையும் நல்ல பலனையும் உலகில் எந்த நாடும் இதுவரை உருவாக்கவில்லை. குற்றம் செய்தவன் திருந்த தண்டனை கொடுக்கவேண்டும். அதை மறுக்கமுடியாது.

மரணதண்டனை வலியில்லாமல் நிறைவேற்றலாம் என்ற விவாதங்கள் இருந்தாலும்கூட எந்த வகையிலும் தூக்குதண்டனையை மனிதாபிமான செயலாகக் கருதமுடியாது. மரண தண்டனை என்ற பெயரில் அந்தந்த நாடுகள் செய்கின்ற படுகொலைதான் தூக்குதண்டனை என போப் பிரான்ஸிஸ் சொல்லியுளளது பாராட்டுக்கும் பரிசீலனைக்கும் உரிய விஷயம் ஆகும்.


போப் பிரான்சிஸ் உலகநாடுகளின் அமைதியும், மத நல்லிணக்கங்களுக்கும், மனித உரிமைகள் காப்பது குறித்தும் அவர் எடுத்துக் கொள்கின்ற அக்கறைகள் நிமிர்ந்து நின்று அவரை வணங்கவேண்டும் என்று தோன்றுகிறது.

-கே. எஸ். இராதாகிருஷ்ணன்.
23-03-2015

#Abolish_death_penalty

#pope_francis 

அய்யகோ! தாய்பாலுமா விற்பனைக்கு ! - Breast milk becomes a commodity. sry state of affairs.



As industry grows in US, activists raise ethical concerns about commercialization
                                                        ****
When Gretty Amaya took an unpaid maternity leave five months ago, she started what she calls a part-time job to help pay the bills. Amaya, who lives in Miami, has made more than $2,000 (Rs 1,25,520) so far by pumping breast milk and selling what is left over after feeding her baby daughter.
Frozen milk from Amaya -and from hundreds of other women throughout the country -is flown in to what resembles a pharmaceutical factory . Inside, it is concentrated into a high-protein product fed to premature babies in intensive care units. 


Breast milk, that most ancient and fundamental of nourishments, is becoming an industrial commodity , and one of the newest frontiers of the biotechnology industry -even as concerns abound over this fast-growing business. "This is white plasma," said Scott A Elster, the chief executive of the company that owns the factory, Prolacta Bioscience. He was comparing milk to blood plasma, which has long been collected from donors and made into medical products like immune globulin, which helps fight infections, and clotting factors for hemophiliacs. 


                                                        ****  


நேற்றைக்கு (22-03-2015) சண்டே டைம்ஸில் அமெரிக்காவில் தாய்ப்பாலையே விற்பனைப்பொருளாக ஆக்கிவிட்டார்கள். தாய்மை இயற்கையின் அருட்கொடை. தாய் என்ற நமது இறை நமக்கு வழங்குகின்ற தாய்ப்பாலின் புனிதத்தன்மையை மறுதலிக்கிறார்களே என்ற வேதனை, நேற்றைக்கு இந்த செய்தியைப் படித்ததிலிருந்து மனம் வெம்புகிறது.

#Breast_milk_becomes_commodity
#KSR_Posts

-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
23-03-2015

விவசாயியின் அபயக்குரல் -tragedy voice of Agriculturist.


ஞாயிற்றுக்கிழமைகளில் அன்புக்குரிய நண்பர்கள் சிங்கப்பூர், மலேசியா, துபாய், குவைத் போன்ற வளைகுடா நாடுகளிலிருந்து மட்டுமில்லாமல் புலம் பெயர்ந்த ஈழ சகோதரர்களும் அழைப்பது வாடிக்கை.

நேற்றைக்கு வடமலாபுரம் செல்வராஜ் மஸ்கட்டிலிருந்து அழைத்து “நீங்கள்லாம் ஏன் அரசியல்ல இருக்கீங்க அண்ணாச்சி. பாருங்க நம்ம ஊர்பக்கங்கள்ள விவசாயிகள் கஷ்ட்டப்படுறாங்க. நான்லாம் மஸ்கட்ல இருந்து சம்பாதிச்சுட்டு இருக்கேன். பாருங்க மானாவாரியிலே விதைச்ச கோவில்பட்டி சோளம் இன்றைக்கு குவிண்டாலுக்கு 1100ரூவாதான் , கொத்தமல்லி 40கிலோ 2800ரூவா, மக்காசோளம் 100கிலோ 1100ரூவா செகப்புச் சோளம் 100கிலோ 100 ரூவா தான், ஆனா நெருஞ்சிமுள்ளு ஒரு கிலோ 170ரூவாயாம், நெல்லு விலை அப்படியேத்தான் இருக்குது, ஆனா சிமெண்டு விலைமட்டும் நாளுக்கு நாள் கூடுது” என்று வருத்தத்தோடு புலம்பியது வேதனை படுத்தியது.  என்ன செய்ய?

சமீபத்தில் மக்களவையில் மார்க்சிஸ்ட் கம்ப்யூனிஸ்ட் கட்சியின் கேரள உறுப்பினர் பி.கருணாகரன் இதையெல்லாம் எடுத்துச் சொல்லி பேசும் போது, விவசாய துறை அமைச்சர் இதற்கான பதிலையே சொல்லவில்லையாம். பி.கருணாகரன் பேசியதாவது :

விவசாயத்துறையில் விவசாயிகளும், விவசாயத்தொழிலாளர்களும் ஒரு பெரும் சக்தியாக உள்ளார்கள். எனவே அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளில் விவசாயத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும்.

கரும்பு விவசாயிகளுக்கு சர்கரை ஆலைகள்  சுமார் 11ஆயிரம் கோடி ரூபாய் பாக்கி வைத்திருக்கின்றன. கூட்டுறவு சங்கங்கள் சேமிப்புகளைப் பெறக்கூடாது என்று அரசாங்கம் சொல்வதற்கு காரணம் என்ன? இதன்மூலம் ஆட்சியாளர்கள் விவசாயிளைத் தனியாரிடம் கடன்வாங்க தள்ளிவிடுகின்றார்கள்.

இதுகுறித்து பலமுறை நிதி அமைச்சரிடம் முறையிட்டிருக்கிறேன் ஆயினும் அரசாங்கம் இதில் எவ்வித முடிவும் எடுக்கவில்லை  ஒவ்வொரு 32 நிமிடத்திகும், ஒரு விவசாயி கடனால் தற்கொலை செய்துகொள்ளும் நிலைமை. லட்சக்கணக்கான விவசாயிகள் கடனால் தற்கொலை செய்துகொண்டு இந்த பூமியிலே மடிந்துவிட்டார்கள் என பி.கருணாகரன் மக்களவையில்  பேசியுள்ளார்.


சுழன்றும் ஏர் பின்னது உலகம் அதனால் உழந்தும் உழவே தலை - வள்ளுவத்தின் இந்த வரிக்கு அர்த்தமில்லாமல் போய்விட்டது.

#tragedy_voice_of_Agriculturist.
#KSR_Posts

ஆலங்குளம் தமிழ்நாடு சிமெண்ட் ஆலையை மூடுவதையும், விற்பதையும் தடுக்க உயர்நீதி மன்றத்தில் ரிட் மனு : W.P. on Tamil Nadu Cements (TANCEM), Alankulam,


விருதுநகர் மாவட்டம் ஆலங்குளத்தில் இயங்கிவரும் தமிழ்நாடு சிமெண்ட் ஆலையினை மூட்விட்டு தனியாருக்கு விற்கலாம் என்ற நிலையில் அதனை எதிர்த்து சென்னைன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ரிட் மனு தாக்கல் செய்துள்ளேன்.  அம்மனு இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே சென்னை உயர் நீதிமன்றத்தில் இதுகுறித்து
 ரிட் மனு எண் : 10589/1986  தாக்கல் செய்து அதன்படி, உயர்நீதிமன்ற உத்தரவு பொற்று ஆலையிலிருந்து தூசி வெளியேறாமல் பலகோடி ரூபாய் மதிப்பிலான இயந்திரங்களும் கருவிகளும் பொறுத்தப்பட்டன.

அப்போதே ஆலையினை விற்றுவிடலாம் என்று தமிழ்நாடு அரசு யோசித்தபொழுது 1986ல் என்னுடைய மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்ததனால் ஆலையினை விற்கமுடியாமல் போனது.

-கே.எஸ்.இராதா கிருஷ்ணன்.
23-03-2015.
                                                          ****




IN THE HIGH COURT OF JUDICATURE AT MADRAS
MADURAI BENCH
(SPECIAL ORIGINAL JURISDICTION)
W.P.(MD)No. of 2015


K.S.Radhakrishnan,                                                           ... Petitioner
 


-Vs-
1. The Chief Secretary to Government,
Secretariat,
Fort.St.George,
Chennai-600 009.


2. The Secretary,
Industrial Department
Government of Tamil Nadu,
Secretariat,
Fort.St.George,
Chennai-600 009.


3. The Managing Director,
Tamil Nadu Cements (TANCEM),
Alankulam,
Virudhunagar - District.   ... Respondents
AFFIDAVIT


I, K.S.Radhakrishnan, Son of K.V.Srinivasa Naidu, Hindu, aged 59 years, residing at 4/359, Sri Chaitanya Avenue, Chennai-600 041, now temporarily come down to Madurai, do hereby solemnly sincerely affirm and state as follows:-


1. I am the petitioner herein and as such I am well acquainted with the facts of the case.  


2. I also humbly submit that, I am originally native of Kurunjakulam village in Sankarankovil Taluk in Tirunelveli District, nearer to the border of Virudhunagar District, I am hailing from an agricultural family and and around my native village.  The main source of income of public was agriculture.  I am an advocate practicing in the Madras High Court.  I am also spokesperson of D.M.K. I am also much interested in social activities and welfare activities of public at large.  I also contested in the legislature assembly seat from Kovilpatti Legislature constituency.  Therefore, I am interested in the public activities of this area, where my native places is situated.   


3. I also humbly submit that, I am filing this writ petition as a Public Interest Litigation, for writ of mandamus.  I have not received any remuneration or benefits from anybodyelse to file this petition as Public Interest Litigation.  I am also an Income Tax Assessee and having Permanent Account Number.  I am ready to obey this Hon’ble High Court’s order, if this Hon’ble Court finds that I am misusing the Hon’ble Court’s jurisdiction and impose any cost.


4. I also humbly submit that, when there was a move to establish a cement factory, by the Tamil Nadu Government, in Alankulam in Virudhunagar District, the agriculturist and general public, in and around the proposed place, Alankulam, affraiding the proposed construction of cement factory, would harm health and agriculture of the public, the then Government, pacified the public and their anguish, by giving undertaking that there would not be any such harms would accur there, because of the construction of the proposed cement factory.  At last, with the support of the entire public a cement factory was constructed and installed at Alankulam.


5. I also humbly submit that, the then Tamil Nadu Government started, the erection of the cement factory and started the production of cement in 1970 itself.  But since there was emition of smoke and dust, the public were scaring about the emition  of air pollution and despite repeated request no action was taken.  I filed a Public Interest Litigation in the Principle Seat of Madras High Court, as W.P.No. 10589/1986 for the redressal to make proper arrangements for the erection of effluent treatment plant, as per the standard prescribed and provisions of the air (Prevention and Control of Pollution) Act 1981, to treat the smoke emitted from the said cement factory.  The Hon’ble High Court also passed an interim direction and finally passed an order, based on the report, filed by the Pollution Control Board Officers that the suggestion for controlling the pollution shall be properly carried out. With the above directions, the cement factory also obliged and carried out the directions and thereby satisfied the public at large.  The public also were happy and the cement production also became high and the Tamil Nadu Government also benefited and the public are also benefited by getting jobs and also the production of cement factory, even as consumers.  


6. I also humbly submit that, now, as the cement factory is running smoothly and getting profits and the public also consumed the products.  But recently as a “bolt from blue” the Tamil Nadu Government and their officers, the respondents herein, are proposing to close the running of the cement factory and also are proposing to sell the factory and its properties, both immovable and movable and also acted in not updating in any updated technologies in the factory.  Shocking to know the above news of closing of the cement factory, eventhough the entire public in this area are much agitated, some of the social activists and political and public leaders, moved with the Tamil Nadu Government to stop the proposal of closer of the cement factory.  Hence, as I also one of the Environmental and social activist interested in the public welfare and obtained earlier directions from this Hon’ble Court, sent a petition on 12.02.2015, to these respondents, to stop the proposal and wanted to know the status and also to update the technology, in controlling the pollution of emition.  The respondents also received the same petition.  I also made personal representation before the respondents 1 and 2 repeatedly, before and after written petitions.  But the respondents were not responding so far and turned deaf ear to my request and would not reply so far.  Hence there is no other alternative to approach this Hon’ble Court once again for the reddressal.
7. I also humbly submit that, the above said circumstances, I left with no other alternative or efficacious remedy than, to file this Writ of Mandamus, under Article 226 of the Constitution of India.  I have not filed any other Writ or litigation for this same redressal, before any other court of law.


8. Hence for the reasons stated above, it is prayed that this Hon'ble Court may be pleased TO DIRECT the respondents to update the technologies of Tamil Nadu Cement Factory (TANCEM) in Alankulam in Virudhunagar District, pending disposal of this Writ Petition and thus render justice.


9. Therefore, for the reasons stated above, it is prayed that this Hon'ble Court may be pleased to issue a WRIT OF MANDAMUS or any other order or direction, more in the form of WRIT, forbearing the respondents from closing or sale the same to private firms the TamilNadu Cement Factory (TANCEM), situated at Alankulam in Virudhunagar District, and pass such further or other orders, as this Hon’ble Court may deem fit and proper in the circumstances of this case and thus render justice.


Solemnly affirmed, sincerely stated and
affixed his signature before me on this the BEFORE ME
day of March, 2015, at Madurai.  


The contents of affidavit were read over and
explained in Tamil to the Deponent    
and his understood the same and
affixed his signature in my presence.

ADVOCATE, MADURAI


Page No:5th and last page:
Corns:















*Confident Walking is more Successful than Confused Running*.

*Confident Walking is more Successful than Confused Running*. Confidence doesn't come when you have all the answers. Be brave to live fr...