விண்ணப்பித்துப் பெறுவது விருது ஆகாது.தகுதியுடையோர் தயங்கவே செய்வர். நடுவர் குழுவின் பணி,சிறந்தோரைக் கண்டு, தேர்ந்து பரிசளிப்பதுவே.இந்த நடைமுறை தமிழ்நாட்டில் எப்போது வரும்?
Friday, May 29, 2026
#Keralamemories
இச்செப்பேடுகளில் 5ஏடுகள் தமிழ்க்ரந்த எழுத்துக்களில் ஸம்ஸ்க்ருதத்தில் ராஜராஜராஜேந்த்ரர்களின் மெய்க்கீர்த்தி உள்ளதாமே!
இச்செப்பேடுகளில் 5ஏடுகள் தமிழ்க்ரந்த எழுத்துக்களில் ஸம்ஸ்க்ருதத்தில் ராஜராஜராஜேந்த்ரர்களின் மெய்க்கீர்த்தி உள்ளதாமே! அது உங்கள் திராவிட மாடல் சித்தாந்தத்திற்கு ஒத்துவருமா? ஸம்ஸ்க்ருதம் தமிழர்களின் மாற்று மொழியாக இருந்துள்ளதை ஒப்புக்கொண்டு பள்ளிகளில் சொல்லிக்கொடுக்கத் தயாரா? முதலாம் ராஜேந்திர சோழனின் அதிகாரப்பூர்வ அரச முத்திரை (Royal Seal) இந்த படத்தில் காட்டப்பட்டுள்ளது. சோழர் காலத்து வரலாற்று ஆவணங்களான செப்பேடுகளைப் (Copper Plates) பிணைக்கும் உலோக வளையத்தில் இந்த முத்திரை பொருத்தப்பட்டிருக்கும்.நெதர்லாந்து பல்கலைக்கழகத்தில் பல நூற்றாண்டுகளாகப் பாதுகாக்கப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க ஆனைமங்கலம் செப்பேடுகள் (லைடன் செப்பேடுகள்), இந்தியப் பிரதமரின் நெதர்லாந்து பயணத்தின்போது அதிகாரப்பூர்வமாக இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. அந்த செப்பேடுகளின் வளையத்தில் இடம்பெற்றுள்ள முத்திரை தான் இது.முத்திரையில் உள்ள குறியீடுகளின் விளக்கம் (Symbolism):அமர்ந்திருக்கும் புலி (சோழர் முத்திரை): மையத்தில் கம்பீரமாக அமர்ந்திருக்கும் புலி, சோழப் பேரரசின் முதன்மை அடையாளமாகும். இது அவர்களின் வீரம் மற்றும் பராக்கிரமத்தைக் குறிக்கிறது.இரண்டு செங்குத்து மீன்கள் (பாண்டியர் முத்திரை): புலிக்கு நேர் எதிரே இரண்டு மீன்கள் செங்குத்தாகச் செதுக்கப்பட்டுள்ளன. இது சோழர்களால் பாண்டிய நாடு வெல்லப்பட்டதை உணர்த்துகிறது.வில் (சேரர் முத்திரை): இவற்றிற்கு கீழே கிடைமட்டமாக வளைந்திருக்கும் வில் சின்னம் செதுக்கப்பட்டுள்ளது. இது சேர மன்னர்களை சோழர்கள் வென்று தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்ததைக் குறிக்கிறது.வெண்கொற்றக் குடை மற்றும் சாமரம்: புலி மற்றும் மீன்களின் தலைக்கு மேலே அரச குடையான வெண்கொற்றக் குடையும், இருபுறமும் கவரிகளும் (Chamaras) அமைந்துள்ளன. இவை பேரரசரின் இறையாண்மையையும் அரச மரியாதையையும் வெளிப்படுத்துகின்றன.மங்களகரமான சின்னங்கள்: முத்திரையின் இருபுறமும் ஏற்றி வைக்கப்பட்ட குத்துவிளக்குகளும், அடிப்பகுதியில் சுவஸ்திகா, மற்றும் பூக்கள் போன்ற மங்கள சின்னங்களும் செதுக்கப்பட்டுள்ளன.கிரந்த எழுத்துக்கள் (Grantha Inscription):இந்த முத்திரையின் வட்டப் பரிதியின் ஓரங்களில் கிரந்த எழுத்துக்களால் சமஸ்கிருத வாசகம் பொறிக்கப்பட்டுள்ளது. அதன் பொருள்:
இன்றைய தினகரன் நாளிதழ் செய்தியில் ….
இன்றைய தினகரன் நாளிதழ் செய்தியில் ….
#செண்பகவல்லிஅணை உடைப்பு, 62 வருட பிரச்சனையை 30 வருடம் என தவறாக பதிவு போட்டுள்ளார்கள்.. திருத்தம் வேண்டும்.பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகிகளுக்கு,
பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகிகளுக்கு,
தேசிய பொதுச் செயலாளர் திரு அருண் சிங் ஜி அவர்களின் கடிதம்…… அன்புள்ள சகோதர/சகோதரிகளுக்கு வணக்கம் எனது பாரதம் எனது பங்களிப்பு உலக புகழ்பெற்ற பிரதமர் மாண்புமிகு திரு நரேந்திர மோடி அவர்களின் தலைமையில் , இந்தியா அதிவேகமாக வளர்ச்சி அடைந்து, ஆத்மநிர்பர் பாரத் (தற்சார்பு இந்தியா) என்ற தீர்மானத்தை நனவாக்கும் திசையில் முன்னேறி வருகிறது. மேற்கு ஆசியாவில் அதிகரித்து வரும் பதற்றங்கள் மற்றும் எரிசக்தி நெருக்கடிக்கு மத்தியில், மாண்புமிகு பிரதமர் அவர்கள் குடிமக்களுக்கு ஒரு முக்கிய வேண்டுகோளை விடுத்துள்ளார்: பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயுவைச் சேமிக்கவும்; ஓராண்டுக்குத் தங்கம் வாங்க வேண்டாம்; தேவையற்ற வெளிநாட்டுப் பயணங்களைத் தள்ளிப்போடவும்; ' உள்ளூர் பொருட்களுக்கு ஆதரவு' என்பதை ஊக்குவிக்கவும்; மேலும், இரசாயன உரங்களின் பயன்பாட்டைக் குறைத்து, இயற்கை மற்றும் அங்கக விவசாயத்தைக் கடைப்பிடிக்கவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். நாட்டின் செல்வத்தைப் பாதுகாப்பதும், நமது அந்நியச் செலாவணிக் கையிருப்பை அதிகரித்து ஒரு தற்சார்பு இந்தியாவை உருவாக்குவதே நமது மிகப்பெரிய முன்னுரிமையாகும். மாண்புமிகு பிரதமரின் அழைப்பை குடிமக்கள் பெரிதும் பாராட்டி, உறுதியுடன் கடைபிடித்து வருகிறார்கள் மாண்புமிகு தேசியத் தலைவர் திரு நிதின் நபின் அவர்களின் வழிகாட்டுதல்களின்படி, "எனது பாரதம் எனது பங்களிப்பு " திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட வேண்டிய அம்சங்கள் பின்வருமாறு: டீசல், பெட்ரோல் மற்றும் எரிவாயுவைச் சேமிக்க: (கார்பூலிங் பயன்படுத்தவும்.) கார்களில் கூட்டு பயணம் மெட்ரோ மற்றும் பொதுப் போக்குவரத்தை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். முடிந்தவரை மின்சார வாகனங்களைப் பயன்படுத்துங்கள். கூட்டங்கள் கருத்தரங்குகள் ஆகியவற்றை இணையவழியில் முடிந்தவரை நடத்தப்பட வேண்டும். வாகன அணிவகுப்புகளைக் கட்டுப்படுத்துங்கள்; மிகவும் அத்தியாவசியமான வாகனங்களுடன் மட்டும் பயணிக்கவும். வரவேற்பு நிகழ்ச்சிகளுக்கான ஒன்றுகூடல்களை 4-5 நபர்களுக்கு மட்டும் வரம்பிடவும். வாரத்தில் ஒரு நாள் பொதுப் போக்குவரத்தை மட்டுமே பயன்படுத்துவதாக அறிவித்து, அதனை கண்டிப்பாகப் பின்பற்றவும். முடிந்தவரை வாரத்திற்கு 1-2 நாட்கள் வீட்டிலிருந்து வேலை செய்ய முயலுங்கள். அனைத்து கட்சி அலுவலகங்களும் எரிபொருளில் 50% மற்றும் ஆற்றல் நுகர்வில் 50% சேமிப்பதை இலக்காக உறுதி செய்ய வேண்டும். சமூக அமைப்புகள், வணிக நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் போன்றவற்றைத் தங்களின் எரிபொருள் மற்றும் ஆற்றல் நுகர்வைக் குறைக்குமாறு கேட்டுக்கொள்ளுங்கள். டீசல் மற்றும் பெட்ரோல் பயன்பாட்டைக் குறைப்பதற்காக, சமூகத்தில் பொது விழிப்புணர்வுப் பிரச்சாரங்களை நடத்துங்கள். டீசல் மற்றும் பெட்ரோல் பயன்பாட்டைக் குறைப்பதற்காக, சமூகத்தில் பொது விழிப்புணர்வுப் பிரச்சாரங்களை நடத்துங்கள். அந்நியச் செலாவணியைச் சேமிப்பதற்கும், தற்சார்பு இந்தியாவை மேம்படுத்துவதற்குமான பிற ஆலோசனைகள்: சமையல் எண்ணெய் பயன்பாட்டை 10 சதவீதம் குறைப்பதற்கான பிரச்சாரத்தை நடத்துங்கள். வெளிநாட்டுச் சுற்றுலாவை ஓராண்டுக்கு ஒத்திவைத்து, இந்தியாவிற்குள் சுற்றுலாவை ஊக்குவிக்குமாறு பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்படுகிறது. ஒரு வருடம் முழுவதும் தங்க நகைகள் வாங்காமல் இருப்பதன் மூலம் அந்நியச் செலாவணியைச் சேமிக்கவும். இரசாயன உரங்களின் பயன்பாட்டை 50 சதவிகிதம் குறைக்கும் நோக்குடன், இயற்கை மற்றும் அங்கக விவசாயத்தை ஊக்குவிக்க பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். மாண்புமிகு பிரதமரின் சுதேசி ஸ்வாவலம்பன் அபியான் (சுதேசி தற்சார்பு இயக்கம்) திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் 'உள்ளூர் தயாரிப்புகளுக்கு ஆதரவு' என்ற முயற்சிக்கு ஆதரவளிக்கும் வகையில், இந்தியத் தயாரிப்புகளின் பயன்பாட்டைத் தொடர்ந்து ஊக்குவித்து, பரப்ப வேண்டும். மேற்கண்ட பிரச்சாரங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்த, ஒரு திட்டத்தை வகுத்து, அத்தகவல்களை மாவட்ட, மண்டல மற்றும் வாக்குச்சாவடி நிலைகளுக்கு உடனடியாகப் பரப்பி, அதனை அவ்வப்போது மீளாய்வு செய்ய வேண்டும். பாரம்பரிய ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் பிரச்சாரத்தை பரவலாக விளம்பரப்படுத்திப் பரப்புவதை உறுதிசெய்யுங்கள். மாநிலத் தலைமையகப் பொறுப்பாளர் மற்றும் அலுவலகச் செயலாளர், அத்துடன் மாவட்டத் தலைமையகப் பொறுப்பாளர் மற்றும் அலுவலகச் செயலாளர் ஆகியோர் இந்தப் பிரச்சாரத்தின் திறமையான செயலாக்கத்தை மேற்பார்வையிட வேண்டும். மாண்புமிகு பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களின் அழைப்பை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கும், தற்சார்பு இந்தியா என்ற உறுதியுடன் வளர்ச்சி பெற்ற இந்தியாவை நோக்கி முன்னேறுவதற்கும் நாம் அனைவரும் ஒன்றிணைந்து பங்களிப்போம்.விலகிச்செல்பவர்கள்
விலகிச்செல்பவர்கள்
மீண்டும் மறுமுறை திரும்பாமலேயே இருக்கட்டும் ஒருமையில் அழைத்துப் பழகியவர்களை பன்மையில் அழைக்க என்னமோ போலிருக்கிறது பரிச்சையமான வாசனைதான் இருந்தும் மறுமுறை முகர்கையில் மூச்சு முட்ட வைக்கிறது பற்றியிருந்த கரங்கள்தான் ஆனாலும் என்ன மீண்டும் புதிதாய் பற்ற அவ்வளவு கூச்சமாக இருக்கிறது ஒரு பிரிவு நமது வழமைகளை மாற்றி விடுகிறது பழக்கங்களை மாற்றி விடுகிறது விருப்புவெறுப்புகளை மாற்றி விடுகிறது இன்னும் ஒரு பிரிவு கொண்டாடித்தீர்த்தவர்களை அந்நியமாக்கி சற்று தொலைவினில் நிறுத்தி விடுகிறது ஆக விலகிச்செல்பவர்கள் மனம் மாறி மீண்டுமொரு முறை திரும்பாமலிருப்பதே எல்லோருக்கும் நல்லது உண்மையில் எல்லாவற்றையும் மீண்டும் ஆரம்பத்திலிருந்து துவங்குதல் எப்போதும் சாத்தியமாவதில்லைவிரும்புகிற வாழ்வை ஏற்படுத்திக் கொள்வது எல்லோருக்கும் எளிதானதல்ல.
விரும்புகிற வாழ்வை ஏற்படுத்திக் கொள்வது எல்லோருக்கும் எளிதானதல்ல. அதே நேரம் கிடைக்கும் வாழ்வை அப்படியே ஏற்றுக் கொள்வதும் யார்க்கும் எளிதாக இல்லை. இரண்டுக்கும் நடுவில் மத்தியதர மனிதன், தன்னைச் சுற்றிலும் ஆசையின் மெல்லிய வலையை நெய்தபடி, அதனுள் ஊசலாடிக் கொண்டு இருக்கிறான்..
பண்டைய தமிழ் மக்களின் நாகரிகத்தின்
பண்டைய தமிழ் மக்களின் நாகரிகத்தின் அடையாளமாக சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே வைகை ஆற்றின் கரையோரம் உள்ள கீழடி அகழ்வாராய்ச்சியில் கிடைத்த பொக்கிஷங்களை விட பண்டைய தமிழ் மக்களின் நாகரிகத்தின் அடையாளங்கள் எங்கள் கரிசல் மண்ணில் தென்காசி மாவட்டம் #திருவேங்கடம் வட்டத்தில் உள்ள புண்ணிய நதியான #நிச்சேபநதியின் கரையோரம் அமைந்துள்ள காரிசாத்தான் அகழ்வாராய்ச்சியில் கிடைக்கும்.கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தின் முன் தோன்றிய மூத்த குடியாம் தமிழ்குடியின் நாகரிகம் விரைவில் தமிழகம் பார்வைக்கு
#ஆகழ்ஆய்வு #archeology#நாற்காலியில்டர்க்கிடவலை போட்டு அமர்வது ஒரு ஆடம்பரமோ விளம்பரமோ அல்ல!!!
#நாற்காலியில்டர்க்கிடவலை போட்டு அமர்வது ஒரு ஆடம்பரமோ விளம்பரமோ அல்ல!!!
கேரளாவில் கம்யூனிஸ்ட் மூத்த முதல்வர்கள் இ எம் எஸ் முதல் இ கே நாயனார் அச்சுதானந்தன் பினராய் விஜயன் இன்றைக்கு கேரளா முதல்வராக இருக்கிற காங்கிரஸ் சதீசன் வரை தங்கள் முதல்வர் இருக்கையில் பச்சைக் கலரில் கோடு இருக்கும் டர்க்கி டவல் போட்டநாற்காலியில் தான்அமர்வார்கள்.! அமர்கிறார்கள!! இதுதான் கேரளாவின் வாடிக்கையும் கூட! தமிழ்நாட்டில் நடந்தால் இதையெல்லாம் ஆடம்பரம் என்று சொல்லக்கூடிய ஆட்கள் இங்குதான் இருக்கிறார்கள்! இதுதான் தமிழ்நாட்டின் அரசியலும் கூட!! பொதுவாக இந்தியா முழுக்க எனக்குத் தெரிய கேரள முதல்வர்களை எளிமையானவர்கள் சிக்கனமானவர்கள் ஆடம்பரம் அற்றவர்கள் என்று தான் அழைப்பார்கள். #கேஎஸ்ஆர்போஸ்ட் #ksrpost#முள்ளிவாய்க்கால்17
••••••••
முள்ளிவாய்க்கால் பேரவலம் நிகழ்ந்து 17 ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. ஆண்டுதோறும் மே மாதம் வந்துவிட்டால், தமிழர்களிடம் ஒரு தற்காலிக ‘வலி சுமந்த’ உணர்வு ஒட்டிக்கொள்கிறது. மே 17 அல்லது 18ஆம் தேதிகளில் ஒரு சிரட்டையில் கஞ்சியைக் குடித்துவிட்டு, அதைச் சமூக வலைத்தளங்களில் புகைப்படமாகப் பதிவேற்றி ‘லைக்’ வாங்குவதோடு நமது தாயகக் கடமை முடிந்துவிடுவதாக நாம் நம்புகிறோம். அடுத்த நாளே, அந்த வலியையெல்லாம் மறந்துவிட்டு, தத்தமது அன்றாட வேலைகளில் மூழ்கிவிடும் ஒரு விசித்திரமான மறதி நோய் ஒட்டுமொத்தத் தமிழினத்தையும் தொற்றிக்கொண்டுள்ளது. அதைவிடுத்து, நமது விடுதலைப் போராட்டம் ஏன் அழிக்கப்பட்டது? முப்படை கொண்டு வீறுகொண்டு எழுந்த புலிகள் இயக்கம் எவ்வாறு தோற்கடிக்கப்பட்டது? இறுதி யுத்தத்தில் நமது மக்கள் ஈவிரக்கமின்றிக் கொன்று குவிக்கப்பட்டதன் பின்னணியில் இருந்த சூத்திரதாரிகள் யார், அவர்களை எவ்வாறு உலக அரங்கில் அம்பலப்படுத்துவது என்று எவராவது சிந்தித்திருக்கிறோமா என்றால்... விடை ‘இல்லை’ என்பதுதான். முகநூலில் பதிவு போடுவதும், போனஸாக தி.மு.க மற்றும் காங்கிரஸ் கட்சிகளை இனத்தை அழித்த கயவர்கள் எனத் திட்டித் தீர்ப்பதுடன் தமிழர்களின் போராட்டம் சுருங்கிப்போய்விட்டது. நமது வீழ்ச்சிக்குக் காரணமான உண்மையான துரோகிகளையும், சர்வதேசச் சதிகளையும், சுயநலக் கூட்டத்தையும் நாம் இன்னும் ஆழமாக அலசிப் பார்க்கத் தவறிவிட்டோம். அந்த வரலாற்றுத் துரோகிகளின் பட்டியலை நாம் சுயவிமர்சனத்தோடு நோக்குவது இன்றியமையாதது. ஈழப் போராட்டத்தை நசுக்கியதில் முதன்மைப் பங்கு சர்வதேச வல்லரசுகளுக்கு உண்டு. 'பயங்கரவாதத்திற்கு எதிரான போர்' (War on Terror) என்ற போர்வையின் கீழ், அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் ஒன்றிணைந்து விடுதலைப் புலிகளை அழிக்கத் திட்டமிட்டன. இதற்கு இந்தியாவின் அப்போதைய காங்கிரஸ் அரசும், தமிழகத்தின் ஆளுங்கட்சியான தி.மு.க-வும் தங்களது நேரடி மற்றும் மறைமுக ஆதரவை வழங்கி, தமிழின அழிப்பின் நேரடிப் பங்காளிகளாக மாறின. விடுதலைப் புலிகளின் இராணுவப் பலவீனங்களையும், பாதுகாப்புப் பாதைகளையும் சிங்களப் பேரினவாத அரசிற்குப் பிய்த்துப் போட்டுக் காட்டிய கருணா , டக்ளஸ், சித்தார்த்தன் போன்ற உள்ளூர் துரோகிகள், இந்த இன அழிப்பிற்குப் பெரும்பாதையை அமைத்துக் கொடுத்தனர். "நாட்டைக் காக்க வீட்டுக்கொருவர் முன்வாருங்கள்" எனப் புலிகள் இயக்கம் அழைப்பு விடுத்தபோது, அதைக் காதில் வாங்காமல் கப்பலேறியும், விமானமேறியும் வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்றவர்கள் பலர். குறிப்பாக, சமாதானக் காலத்தில் ஏ-9 பாதை திறக்கப்பட்டதும், "விட்டதால் போதும்" என்று தமிழ் மக்களைக் கொலைக்களத்தில் கைவிட்டுவிட்டு, வன்னியிலிருந்து தப்பி ஓடி இன்று வெளிநாடுகளில் தங்களை 'ஈழ உணர்வாளர்களாகக்' காட்டிக்கொள்ளும் கோழைகள் இப்போராட்டத்தின் பெரும் சாபக்கேடு. நாட்டை விட்டு ஓடிய பத்து இலட்சம் தமிழர்களில், ஒரு இலட்சம் பேர் புலிகள் இயக்கத்தில் இணைந்திருந்தால், யுத்தத்தின் முடிவு வேறாக இருந்திருக்கும்; தமிழீழம் மலர்ந்திருக்கும். ஈழத்தில் வன்னியில் கடைசி நேர யுத்ததில் மக்கள் கொத்துக் கொத்தாகக் கொல்லப்பட்டுக் கொண்டிருந்தபோது, தங்களது அகதிக் கோரிக்கை (Refugee status) அங்கீகரிக்கப்பட வேண்டும் என்பதற்காகவும், ஊடகங்களில் தங்கள் முகம் வர வேண்டும் என்பதற்காகவும் புலிக்கொடியைப் பிடித்து வீதியில் We want TamilE*lam என கத்தியவர்கள் பலர். இவர்களின் இத்தகைய முதிர்ச்சியற்ற, சுயநலப் போராட்டங்கள் சிங்களப் பேரினவாதிகளுக்கு மேலும் வெறியூட்டியது. இதனால் வன்னியில் இருந்த அப்பாவி மக்கள் மீது சிங்கள அரசு தன் இனவெறியை இன்னும் கொடூரமாகக் கட்டவிழ்த்துவிட இவர்கள் மறைமுகக் காரணமாயினர். வன்னியில் ஒரு புதிய வரலாறே அழிந்து கொண்டிருந்தபோது, தமக்கும் அதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லாதது போல, எந்தவிதப் போராட்டங்களோ, கொந்தளிப்புகளோ இன்றி அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த வடக்கு-கிழக்கு , கொழும்பு வாழ் தமிழ் உயிரினங்கள் மற்றும் ஏனைய தமிழர்களின் மௌனமும் இந்த அழிவுக்கு முக்கியக் காரணியாகும். புலிகளுக்கு ஆயுதம் வாங்கவும், மக்களின் மருத்துவத் தேவைகளுக்காகவும் நிதி சேகரிப்பில் ஈடுபட்ட பல புலம்பெயர் தமிழ் முதலாளிகள், சேர்ந்த நிதியில் வெறும் 10 சதவீதத்தை மட்டுமே தாயகத்திற்கு அனுப்பிவிட்டு, மீதி 90 சதவீத நிதியைத் தங்களுக்குள் சுருட்டிக்கொண்டனர். இந்த நிதியிழப்பு போராட்டத்தின் பின்னடைவுக்குப் பலத்த அடியாக அமைந்தது. புலிகளின் சர்வதேசச் சொத்துக்களையும், வணிகக் கட்டமைப்புகளையும் பராமரித்து வந்த சில ஈழத்தமிழர்கள், அந்தச் சொத்துக்களின் மேல் ஏற்பட்ட பேராசையினால், அவற்றை முழுமையாகக் கையகப்படுத்தத் திட்டமிட்டனர். இதற்காகச் சிங்களஅரசிற்குப் புலிகள் சம்பந்தமான பல இரகசியங்களைக் காட்டிக்கொடுத்து,
அரசிற்குப் புலிகள் சம்பந்தமான பல இரகசியங்களைக் காட்டிக்கொடுத்து, போராட்டத்தையும் அதன் கட்டமைப்பையும் நிர்மூலமாக்கத் துணை நின்றனர்.
"நிறைய மக்கள் இறந்தால் உலக நாடுகள் தலையிடும், அமெரிக்கா நேரடியாகக் களம் இறங்கும்" என்ற தவறான, போலியான இராஜதந்திரத் தகவல்களைப் புலிகளின் தலைமைக்கு வழங்கி, பெருமளவு மக்கள் வன்னிப் பெருநிலப்பரப்பில் ஒன்றுகூடவும், அவர்கள் கொன்றொழிக்கப்படவும் காரணமான 'அரசியல் மேதாவிகளும்' இதில் அடங்குவர். ஆயுதக் கொள்வனவில் மிகப்பெரிய ஊழல்களைச் செய்து, தரம் குறைந்த ஆயுதங்களைக் கப்பலில் அனுப்பிவிட்டு, அந்த ஆயுதக் கப்பல்கள் பற்றிய விபரங்களை இலங்கை கடற்படைக்கே கசியவிட்டு, கப்பல்களை மூழ்கடித்த புலம்பெயர் தமிழர்களும் உண்டு. இதன் மூலம் முழு நஷ்டத்தையும் இயக்கத்தின் தலையில் கட்டிவிட்டு, இன்சூரன்ஸ் மற்றும் கமிஷன் பணத்தில் கொழுத்தவர்கள் இன்றும் வெளிநாடுகளில் தம்மை ஈழ உணவாளர்கள் போல காட்டிக் கொள்கின்றனர். இவர்கள் அனைவரும் நமது விடுதலைப் போராட்டம் தோற்கடிக்கப்படவும், முள்ளிவாய்க்காலில் நமது உறவுகள் அநாதரவாகக் கொல்லப்படவும் ஏதோ ஒரு வகையில் காரணமாக இருந்தவர்களே ஆவர். ஆண்டுக்கு ஒருமுறை சிரட்டைக் கஞ்சி குடித்துவிட்டு, உணர்ச்சிவசப்படுவதால் மட்டும் இழந்த மண்ணையோ, மக்களுக்கான நீதியையோ நாம் பெற்றுவிட முடியாது. நம்மைச் சுற்றி இருக்கும் இத்தகைய துரோகிகளையும், சுயநல சக்திகளையும் அடையாளம் கண்டு புறக்கணிப்பதே, மடிந்த மாவீரர்களுக்கும் மக்களுக்கும் நாம் செய்யும் உண்மையான அஞ்சலியாகும். வரலாறு எவரையும் மன்னிக்காது; குறிப்பாகத் துரோகிகளை அது ஒருபோதும் மன்னிக்காது."ஒரு கட்டு வெற்றிலை
"ஒரு கட்டு வெற்றிலை
பாக்கு சுண்ணாம்பு புகையிலை வாய் கழுவ நீர் பிளாஸ்க் நிறை ஐஸ் ஒரு புட்டி பிராந்தி வத்திப்பெட்டி சிகரெட் சாம்பல் தட்டு பேசுவதற்கு நீ நண்பா இந்தச் சாவிலும் ஒரு சுகம் உண்டு." - #நகுலன்நான் அரசியலுக்கு வந்திருந்தால் 100% வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்திருப்பேன்!
நான் அரசியலுக்கு வந்திருந்தால் 100% வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்திருப்பேன்! தமிழ்நாட்டிற்கு முதலமைச்சராகி இருப்பேன்! என்று நடிகர் ரஜினிகாந்த் இப்போது சொல்லுகிறார்!
உங்களின் தீவிர ரசிகர்களையும் அண்ணன் தமிழருவி மணியன் போன்றவர்களையும் நம்ப வைத்து கட்சியை தொடங்க அனைத்துப் பணிகளையும் செய்ய வைத்து அதற்கான எல்லா தயாரிப்புகளும் முடிந்த நிலையில் அவர்களை ஏமாற்றி அரசியலுக்கு வர மாட்டேன் என்று ஏன் ஜகா வாங்கினீர்கள் ரஜினிகாந்த்! தைரியமாக வந்திருக்க வேண்டியதுதானே! உங்களைத் தடுத்தது யார்! இப்போது சொல்கிறீர்கள் வந்தால் நூறு சதவீதம் வெற்றி பெற்று இருப்பேன் என்று!உங்கள் வரவை எதிர்பார்த்து தானே உங்கள் ரசிகர்கள் ஆர்வத்துடன் இருந்தார்கள்! சென்னை வள்ளுவர் கோட்டத்தில்! எல்லாம் உங்களை அரசியலுக்குள் வரச் சொல்லி உண்ணாவிரதம் எல்லாம் ஏற்பாடு ஆகியும் அதையும் தடுத்து நிறுத்திய தாங்கள் இப்போது இப்படி பேசுவது நியாயமா? எல்லாவற்றுக்கும் உச்சமாக “நான் நிறைய சம்பாதித்து விட்டேன் தமிழ்நாட்டு மக்களுக்காகச் சேவை செய்யப் போகிறேன்’ என்றெல்லாம் சொன்னீர்களே!வந்திருக்க வேண்டியது தானே! உங்களை யார் தடுத்தார்கள்! திமுக தரப்பிலிருந்து உங்களுக்கு தடை விதித்தார்களா? உண்மையைச் சொல்லுங்கள்! தென்னை மரத்தில் தேள் கொட்ட பனை மரத்தில் நெறி கட்டியது மாதிரி இப்பொழுது வந்து கர்ஜனை செய்கிறீர்கள்! கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்!. தமிழ்நாட்டில் ஒரு பழமொழி உண்டு “மீன் துறையும் அம்பலமும் காத்திருந்தவனுக்குத்தான்” @JunioVikatan r #ksrpost #கேஎஸ்ஆர்போஸ்ட்DMK functionaries have been posting about the reasons for the defeat.
DMK functionaries have been posting about the reasons for the defeat. Among them, these are the factors I found most reasonable as one of the old DMK Senior functionaries .
This is not my personal opinion. I have compiled these from posts made by long-time DMK supporters and grassroots workers. (Top 10) 1) Before the election, the DMK Youth Wing organized 7 conferences. In one of them alone, they claimed that 1.5 lakh people participated. If the Youth Wing truly has over 10 lakh members, and each member had convinced even 10 people to vote, the party could have crossed 2 crore votes easily. Inflated numbers and artificial projections ultimately benefit no one. Also, why is importance given only to the Youth Wing within the DMK? 2) Red Giant Movies should stop film production altogether. Some believe this is why Vijay was not strongly criticized before the elections. 3) While many in the DMK struggle and work for years, how did leaders like Anbil Mahesh and TRB Raja rise so quickly? 4) Why was Sabareesan’s face made so visible during the election campaign? 5) Durga Stalin visiting temples is her personal choice. But why should it happen in a way that gains media attention? 6) Unlike Kalaignar, Stalin seems inaccessible to party cadres and grassroots workers. 7) The DMK IT Wing functions more like a corporate company. Many feel actual DMK cadres have little place in it. 8 ) Even after all these criticisms, many believe Stalin will never remove Minister Sekar Babu and will continue to keep him close. 9) Some feel that “civilized politics” does not work in Tamil Nadu. In the Karur incident, at the very least, Aadhav Arjuna should have been arrested or a case should have been registered against him. 10) Pen and Sabresan 11)High level of corruption 12)Fast growth of Immature Anti Hindu Udyanidhi stalin 12) Excessive Paid useless Media hype of Stalin & Cycling Gym Tea shop walking in park & Naming almost everything- Karunidhi 13) Durga Stalin priveleged & publicised access to Temple irritating genuine Worshipper etc etc #ksrpostவிண்ணப்பித்துப் பெறுவது விருது ஆகாது.
விண்ணப்பித்துப் பெறுவது விருது ஆகாது.தகுதியுடையோர் தயங்கவே செய்வர். நடுவர் குழுவின் பணி,சிறந்தோரைக் கண்டு, தேர்ந்து பரிசளிப்பதுவே.இந்த நடை...
-
#ஆந்திர துணைமுதல்வர் பவன்கல்யாண் அவர்களை சந்திப்பு #Meeting with AP DyCM Shri Pawan Kalyan Garu —————————————————————- நேற்று பிற்பகலில்...
-
My colum on Katchatheevu published today’s (7-6-2025)Pioneer - New Delhi edtion #Katchatheevu - K.S. Radhakrishnan Prime Minister Modi an...
-
அடல்பிகாரி வாஜ்பாய் அவர்களுக்கு, பாரத ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது. தாமதமாகவே இந்த விருது அவருக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த...