( இப்படியான நிலையில் திமுக-
கலைஞர் கால பழைய திமுக நிர்வாகியின் பார்வையில்… எங்கோ காதில் கேட்ட காட்சிகள்….. like Shakespeare's plays ) #ksrpost “அறிவாலயத்தில் அதிரும் அடிகள்… இரவோடு இரவாக ரகசிய சந்திப்பில் உதயநிதி – கனிமொழி!” தோல்வியின் தீ இன்னும் அணையவில்லை… திமுகவுக்குள் தொடங்கிவிட்டதா அதிரடி சுத்திகரிப்பு? அரசியல் மேடையில் ஒருகாலம் கர்ஜித்த கழகம்… இன்று அமைதிக்குள் அதிர்ச்சியை மறைக்கிறது! தேர்தல் முடிந்தது… அதிகாரம் கைமாறியது… ஆனால் திமுகவின் தோல்விக் காயம் மட்டும் இன்னும் இரத்தம் வடிக்கிறது! அண்ணா அறிவாலயத்தின் சுவர்களே இன்று பதட்டமாக குலுங்குகின்றன! மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்… கட்சி நிர்வாகிகள் முகத்தில் கவலை… ஸ்டாலின் பார்வையில் கடும் கோபம்! “யார் காரணம்?” “எங்கே தவறு?” “ஏன் மக்கள் விலகினர்?” என்ற கேள்விகள் கழகத்தின் நெஞ்சை கிழிக்கின்றன! அதே நேரம்… இரவின் அமைதியை உடைத்து ஒரு ரகசிய சந்திப்பு! கனிமொழி இல்லத்தின் கதவு திறக்க, உள்ளே நுழைந்தார் உதயநிதி ஸ்டாலின்! அருகில் சபரீசன்… மூவரின் முகத்திலும் அதிரடியின் அறிகுறி! தோல்வியின் காரணங்கள் ஒன்றன்பின் ஒன்றாக அடுக்கப்பட்டதாம்! தொகுதிகளில் வேலை செய்யாத நிர்வாகிகள்… கடைசி நேரத்தில் காணாமல் போன பொறுப்பாளர்கள்… அனைவரின் பெயர்களும் மேசை மீது விழுந்ததாம்! “இனி சலுகை இல்லை!” என்ற கோபக் குரல் அந்த அறைக்குள் முழங்கியதாம்! தோல்விக்கு காரணமானவர்களை தூக்கி எறிய வேண்டும் என தீவிர ஆலோசனை நடந்ததாம்! ஒருகாலத்தில் தனித்தனியாக இயங்கிய அணிகள்… இப்போது ஒரே மேசையில் இணைகின்றன! அதற்குப் பின்னால் ஸ்டாலின் கொடுத்த அதிரடி அட்வைஸ்! “இனி ஒன்றாக செயல்படுங்கள்… இல்லையெனில் கட்சி சிதறும்!” என்ற எச்சரிக்கை கழகத்தின் உள்ளே புயலை கிளப்பியதாம்! உதயநிதி… கனிமொழி… சபரீசன்… இந்த மூவரின் கூட்டணி திமுகவின் அடுத்த அரசியல் வரைபடமா? அல்லது தோல்விக்குப் பின் தொடங்கும் அதிரடி அதிகாரப் போராட்டமா? அறிவாலயத்தின் கதவுகள் மூடியிருந்தாலும்… அதற்குள் எரியும் அரசியல் தீ தமிழகத்தையே சூடாக்குகிறது! #திமுக #dmk #tamilnadupolitics
Subscribe to:
Post Comments (Atom)
-
*In an unawakened state, your power is fully externalized*. Your faith is placed disproportionately on the systems, regulations, and structu...
-
Indian Army's Shameful Treatment of Women Recruits If someone were to ask new Defence Minister Manohar Parrikar what the top brass ...
-
#அன்றைய மெட்ராஸ்ராஜதானி, #சென்னை ராஜதானி, #பின்சென்னை மாகாணம் என்றும்; #இன்றைய தமிழ்நாடு 68* தமிழகம்அமைந்தநாள் #நவம்பர்1 தமிழ்நாடு நாள் ...
No comments:
Post a Comment