Friday, May 29, 2026

பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகிகளுக்கு,

 பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகிகளுக்கு,

தேசிய பொதுச் செயலாளர் திரு அருண் சிங் ஜி அவர்களின் கடிதம்…… அன்புள்ள சகோதர/சகோதரிகளுக்கு வணக்கம் எனது பாரதம் எனது பங்களிப்பு உலக புகழ்பெற்ற பிரதமர் மாண்புமிகு திரு நரேந்திர மோடி அவர்களின் தலைமையில் , இந்தியா அதிவேகமாக வளர்ச்சி அடைந்து, ஆத்மநிர்பர் பாரத் (தற்சார்பு இந்தியா) என்ற தீர்மானத்தை நனவாக்கும் திசையில் முன்னேறி வருகிறது. மேற்கு ஆசியாவில் அதிகரித்து வரும் பதற்றங்கள் மற்றும் எரிசக்தி நெருக்கடிக்கு மத்தியில், மாண்புமிகு பிரதமர் அவர்கள் குடிமக்களுக்கு ஒரு முக்கிய வேண்டுகோளை விடுத்துள்ளார்: பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயுவைச் சேமிக்கவும்; ஓராண்டுக்குத் தங்கம் வாங்க வேண்டாம்; தேவையற்ற வெளிநாட்டுப் பயணங்களைத் தள்ளிப்போடவும்; ' உள்ளூர் பொருட்களுக்கு ஆதரவு' என்பதை ஊக்குவிக்கவும்; மேலும், இரசாயன உரங்களின் பயன்பாட்டைக் குறைத்து, இயற்கை மற்றும் அங்கக விவசாயத்தைக் கடைப்பிடிக்கவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். நாட்டின் செல்வத்தைப் பாதுகாப்பதும், நமது அந்நியச் செலாவணிக் கையிருப்பை அதிகரித்து ஒரு தற்சார்பு இந்தியாவை உருவாக்குவதே நமது மிகப்பெரிய முன்னுரிமையாகும். மாண்புமிகு பிரதமரின் அழைப்பை குடிமக்கள் பெரிதும் பாராட்டி, உறுதியுடன் கடைபிடித்து வருகிறார்கள் மாண்புமிகு தேசியத் தலைவர் திரு நிதின் நபின் அவர்களின் வழிகாட்டுதல்களின்படி, "எனது பாரதம் எனது பங்களிப்பு " திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட வேண்டிய அம்சங்கள் பின்வருமாறு: டீசல், பெட்ரோல் மற்றும் எரிவாயுவைச் சேமிக்க: (கார்பூலிங் பயன்படுத்தவும்.) கார்களில் கூட்டு பயணம் மெட்ரோ மற்றும் பொதுப் போக்குவரத்தை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். முடிந்தவரை மின்சார வாகனங்களைப் பயன்படுத்துங்கள். கூட்டங்கள் கருத்தரங்குகள் ஆகியவற்றை இணையவழியில் முடிந்தவரை நடத்தப்பட வேண்டும். வாகன அணிவகுப்புகளைக் கட்டுப்படுத்துங்கள்; மிகவும் அத்தியாவசியமான வாகனங்களுடன் மட்டும் பயணிக்கவும். வரவேற்பு நிகழ்ச்சிகளுக்கான ஒன்றுகூடல்களை 4-5 நபர்களுக்கு மட்டும் வரம்பிடவும். வாரத்தில் ஒரு நாள் பொதுப் போக்குவரத்தை மட்டுமே பயன்படுத்துவதாக அறிவித்து, அதனை கண்டிப்பாகப் பின்பற்றவும். முடிந்தவரை வாரத்திற்கு 1-2 நாட்கள் வீட்டிலிருந்து வேலை செய்ய முயலுங்கள். அனைத்து கட்சி அலுவலகங்களும் எரிபொருளில் 50% மற்றும் ஆற்றல் நுகர்வில் 50% சேமிப்பதை இலக்காக உறுதி செய்ய வேண்டும். சமூக அமைப்புகள், வணிக நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் போன்றவற்றைத் தங்களின் எரிபொருள் மற்றும் ஆற்றல் நுகர்வைக் குறைக்குமாறு கேட்டுக்கொள்ளுங்கள். டீசல் மற்றும் பெட்ரோல் பயன்பாட்டைக் குறைப்பதற்காக, சமூகத்தில் பொது விழிப்புணர்வுப் பிரச்சாரங்களை நடத்துங்கள். டீசல் மற்றும் பெட்ரோல் பயன்பாட்டைக் குறைப்பதற்காக, சமூகத்தில் பொது விழிப்புணர்வுப் பிரச்சாரங்களை நடத்துங்கள். அந்நியச் செலாவணியைச் சேமிப்பதற்கும், தற்சார்பு இந்தியாவை மேம்படுத்துவதற்குமான பிற ஆலோசனைகள்: சமையல் எண்ணெய் பயன்பாட்டை 10 சதவீதம் குறைப்பதற்கான பிரச்சாரத்தை நடத்துங்கள். வெளிநாட்டுச் சுற்றுலாவை ஓராண்டுக்கு ஒத்திவைத்து, இந்தியாவிற்குள் சுற்றுலாவை ஊக்குவிக்குமாறு பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்படுகிறது. ஒரு வருடம் முழுவதும் தங்க நகைகள் வாங்காமல் இருப்பதன் மூலம் அந்நியச் செலாவணியைச் சேமிக்கவும். இரசாயன உரங்களின் பயன்பாட்டை 50 சதவிகிதம் குறைக்கும் நோக்குடன், இயற்கை மற்றும் அங்கக விவசாயத்தை ஊக்குவிக்க பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். மாண்புமிகு பிரதமரின் சுதேசி ஸ்வாவலம்பன் அபியான் (சுதேசி தற்சார்பு இயக்கம்) திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் 'உள்ளூர் தயாரிப்புகளுக்கு ஆதரவு' என்ற முயற்சிக்கு ஆதரவளிக்கும் வகையில், இந்தியத் தயாரிப்புகளின் பயன்பாட்டைத் தொடர்ந்து ஊக்குவித்து, பரப்ப வேண்டும். மேற்கண்ட பிரச்சாரங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்த, ஒரு திட்டத்தை வகுத்து, அத்தகவல்களை மாவட்ட, மண்டல மற்றும் வாக்குச்சாவடி நிலைகளுக்கு உடனடியாகப் பரப்பி, அதனை அவ்வப்போது மீளாய்வு செய்ய வேண்டும். பாரம்பரிய ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் பிரச்சாரத்தை பரவலாக விளம்பரப்படுத்திப் பரப்புவதை உறுதிசெய்யுங்கள். மாநிலத் தலைமையகப் பொறுப்பாளர் மற்றும் அலுவலகச் செயலாளர், அத்துடன் மாவட்டத் தலைமையகப் பொறுப்பாளர் மற்றும் அலுவலகச் செயலாளர் ஆகியோர் இந்தப் பிரச்சாரத்தின் திறமையான செயலாக்கத்தை மேற்பார்வையிட வேண்டும். மாண்புமிகு பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களின் அழைப்பை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கும், தற்சார்பு இந்தியா என்ற உறுதியுடன் வளர்ச்சி பெற்ற இந்தியாவை நோக்கி முன்னேறுவதற்கும் நாம் அனைவரும் ஒன்றிணைந்து பங்களிப்போம்.



No comments:

Post a Comment

பிறந்த பூமியின் மண்வாசனை…. சிறுபிராயத்தில் திரிந்த என் நிலங்கள்.. என் உயிர் போன்ற ஜீவ நேசிப்புகள்…

  பிறந்த பூமியின் மண்வாசனை…. சிறுபிராயத்தில் திரிந்த என் நிலங்கள்.. என் உயிர் போன்ற ஜீவ நேசிப்புகள்…