#*கீதா மேத்தா*
#*பிஜி பட்நாயக்*
#*திமுக -அதிமுக இணைப்பு 1979 தமிழக அரசியல் களம்*
#*Geetha Mehta* #*Biju Patnaik*
#*Merger of DMK-AIDMK 1979*
#*Naveen Pattnaik*
—————————————
My friend, Geetha Mehta, the renowned English novelist, sadly passed away in Delhi last week. She was the daughter of Biju Patnaik, one of the founders Indian modern politics, Close to M K Gandhi,
the former Union Minister and Chief Minister of Odisha. Nehru liked aircraft pilot also.Interestingly, Biju Patnaik played a pivotal role, in merger of DMK -AIDMK 1979; bringing together two iconic figures, MGR and Kalaignar, at a meeting held in Tamil Nadu State Guest House, Chepauk. But his efforts turned futile. I noticed that Naveen Patnaik, the current Chief Minister of Odisha and Geetha Mehta's brother, did not mention his sister's passing on his social media profiles. This approach reflects a commendable separation of family matters from the realm of politics. It serves as an admirable example of how politics should ideally operate, without undue influence of familial connections. In a political landscape often characterized by dynastic trends, Naveen Patnaik's decision to maintain this distinction between family and politics is praiseworthy. His silence on his sister's passing demonstrates his commitment to this principle.
எனது நண்பர்,இலக்கிய படைப்பாளி கீதா மேத்தா ஒரிசா முன்னாள் முதலமைச்சர், முன்னாள் மத்திய அமைச்சர் பிஜி பட்நாயக்கின் மகளும் இந்நாள் ஒரிசா முதலமைச்சரான நவீன் பட்நாயக்கின் அக்காளும் ஆவார். தொடக்கத்தில் இந்தியாவிலும் இங்கிலாந்தில் உள்ள கேம்பிரிஜ்ஜிலும் பயின்றார். கீதா மேத்தா கதைகளையும், கதைகள் அல்லாத பிற நூல்கள் ஆகியவற்றையும் எழுதினார்.அவற்றில் இந்திய வரலாறு, நாகரிகம், பண்பாடு ஆகியவற்றுடன் தொடர்புடைய பல செய்திகள் உள்ளன. ஆங்கில நூல்களை எழுதியதோடு, இங்கிலாந்து, அமெரிக்கா ஐரோப்பா ஆகிய பகுதிகளின் தொலைக்காட்சிகளுக்காக ஆவணப்படங்களை இயக்கியும் தயாரித்தும் உள்ளார். வங்காளதேசப் போரைப் பற்றிய ஆவணப் படங்களும் தயாரித்து இருக்கிறார். கீதா மேத்தாவின் கணவரான சானி மேத்தா, நூல்கள் பதிப்புத் தொழில் செய்கிறார். இவர்களுடைய குடும்பம் நியூயார்க்கில் உள்ளது.
ஒரிசா முதல்வர் நவீன் பட்நாயக்கின் தன் சகோதரி மறைவு குறித்த துயரத்தை தன் மனதில் கொண்டார். தனது சமூக ஊடகங்களில் கூட வெளிப்படுத்த வில்லை.
தனது குடும்பம் தன் பொது வாழ்கையை எப்பொழுதும் இணைத்து பார்ப்பதும் இல்லை நவீன். இன்று நம்பர் ஒன் இந்தியாவின் நேர்மையான அரசியல் தலைவர். பிஜி பட்நாயக்கின் மகனாக அரசியல் களம் புகுந்த நிலையில் ஆதிக்க குடும்ப அரசியலை வெறுப்பவர்.
இவரின் தந்தை பிஜு பட்நாயக்கின் (செப்டம்பர் 12, 13-1979 இல்) தமிழகத்தின் அரசியலில் மாஸ்டர் பிளான் வெற்றி பெற்றிருந்தால் தமிழக அரசியல் களம் முற்றிலும் மாறுபட்டதாக இப்பவும் இருந்திருக்கலாம். இப்போதும் தொலைதூரக் கனவாக தோற்றமளிக்கும் முயற்சியில் அவர் ஈடுபட்டார் - திமுக மற்றும் அதிமுக இணைப்பு.
தமிழகத்தில் எம்.ஜி.ஆர் முதல்வராக பதவியேற்று இரண்டு ஆண்டுகளில்.
பிஜு பட்நாயக் ஜனதா கட்சியின் தலைவர் திமுக மற்றும் அதிமுகவை இணைக்கும் யோசனையை பட்நாயக் கொண்டு வந்தார்.
திமுகவின் பெயரையும், அண்ணா இருந்த அதிமுகவின் கொடியையும் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பது கருணாநிதியின் நிபந்தனைகளில் அடங்கும். மேலும், எம்.ஜி.ஆரை முதலமைச்சராக நீடிக்க வேண்டும் என்றும், அதே நேரத்தில் இணைந்த கட்சியின் தலைவராக கலைஞர் இருக்க வேண்டும் என்றும் அவர் பரிந்துரைத்தார். நிபந்தனைகளைக் கேட்ட பட்நாயக், தி.மு.க.வின் தலைவரைக் கட்டிப்பிடித்து, சாத்தியமற்ற நிபந்தனைகளை அவர் முன்வைப்பார் என்று நினைத்ததாகக் கூறினார்.
மறுநாள் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில் கலைஞர் - எம்ஜிஆர் சந்திப்புக்கு பட்நாயக் ஏற்பாடு செய்தார். விருந்தினர் மாளிகையில் திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் கே.அன்பழகன், அதிமுகவின் நாவலர் வி.ஆர்.நெடுஞ்செழியன், பண்ருட்டி ராமச்சந்திரன் ஆகியோர் இருந்த நிலையில், மற்றொரு அறையில் எம்.ஜி.ஆரும் கருணாநிதியும் நேருக்கு நேர் சந்தித்துக் கொண்டனர். இரு தரப்பினரும் நிபந்தனைகளுக்கு ஒப்புக்கொண்டதை தொடர்ந்து, அந்தந்த கட்சிகளின் அவசர செயற்குழு கூட்டத்தை கூட்டி, இணைப்பு குறித்து தீர்மானங்களை நிறைவேற்ற தலைவர்கள் முடிவு செய்தனர்.
பின்,மறுநாள் வேலூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் எம்.ஜி.ஆர்., இணைப்பு குறித்து எதுவும் பேசவில்லை. இரு கட்சிகளையும் இணைக்கும் முன்மொழிவு இறந்தது போல் ஆனது.
••••
கீதா மேத்தா தனது 80 வது வயதில் இயற்கை எய்தியுள்ளார். கனடிய இந்திய எழுத்தாளர் என்று அறியப்பட்ட இவர் என்னுடைய மிகச்சிறந்த நண்பர்களில் ஒருவர். அவரின்
இழப்பு தனிப்பட்ட முறையில் துக்கரமானது. அவருக்கு ஆழ்ந்த அஞ்சலியும் வணக்கங்களும்.
கதைகள் மற்றும் கட்டுரைகள் பலவற்றையும் எழுதி உலகப் புகழ் பெற்ற கீதா மேத்தா மிகச் சிறந்த ஆவணப்பட இயக்குனரும் ஆவார், "எரிவர் சூத்ரா" எனும் நூல் இவரது மிக முக்கியமான படைப்புகளில் ஒன்றாகும்! பல சிறப்புகளைப் பெற்ற கீதா மேத்தா பிரசித்தி பெற்ற முன்னாள் ஒரிசா மாநில முதல்வர் பிஜுபட்நாயக் அவர்களின் புதல்வியும் ஆவார்!
மதிப்பிற்குரிய பிஜு பட்நாயக் அவர்கள் அக்காலத்திய நேரு அமைச்சரவையில் அங்கம் வகித்தவர். இந்திய அரசியல் வரலாற்றில் தவிர்க்க முடியாத மிகப் பெரும் முக்கியமான ஆளுமையும் கூட. காமராஜருடனும் பிரதமர் நேருவுடனும் இணைந்து பல முக்கியமான மக்கள் நலத் திட்டங்களுக்கு உறுதுணையாக இருந்தவர்.
பிற்காலத்தில் திருமதி இந்திரா காந்தி அவர்களின் சில பிடிவாத போக்குகளால் மனம் கசந்து காங்கிரஸ் கட்சியை விட்டு வெளியேறி வந்தவர்.
அவருடைய புதல்வர்தான் இன்றைய ஒரிசாவின் மாநில முதல்வர் நவீன் பட்நாய்க் ! தந்தையைத் தொடர்ந்து மிகச் சிறந்த நல்லாட்சியை அங்கு தந்து கொண்டிருக்கிறார். இந்திய முதல்வர்களில் குறிப்பிட தகுந்த செயலாற்றலும் மாநில மக்களின் நம்பிக்கையை சிறப்பாக பெற்ற வருமான நவீன் பட்நாயக் இன்று தன் சகோதரி கீதா மேத்தா அவர்களின் இழப்பைச் சந்தித்து இருக்கிறார்.
அப்பிடியான இழப்பை வெளியே விளம்பரங்கள் ஏதும் செய்யாமல் அல்லது அதையே
துக்கநாளாக அறிவித்து இரக்கம் தேடாமல் மிகுந்த மனவலியுடன் தனக்குள்ளேயே தன் குடும்பத்திற்கு உள்ளேயே அவருக்கான இறுதிச் சடங்குகளை முடித்த கையோடு மேற்கொண்டு
அரச காரியங்களைத் தொடர்ந்து பார்த்து வருகிறார். ஒரு பக்குவமான பாரம்பரியத்தில் பிறந்து நல்ல மன உயரங்களோடு மக்களாட்சி செய்து வரும் இன்றைய ஒரிசா முதல்வர் நவீன்பட்நாய்க் அவர்களின் துக்கத்தில் இணைந்து அவருக்கான ஆறுதல்களை விழைகிறேன்!
#கீதாமேத்தா #பிஜிபட்நாயக்
#திமுக_அதிமுக_இணைப்பு1979_தமிழகஅரசியல்_களம்
#GeethaMehta #BijuPatnaik
#Merger_of_DMK_AIDMK_1079
#NaveenPattnaik
#ksrpost #கேஎஸ்ஆர்போஸ்ட்
24-9-2023.