Thursday, September 28, 2023

#*தலைவர்-தலைமை என்பது என்ன? எப்படி?*



#*தலைவர்-தலைமை என்பது என்ன? எப்படி?*




————————————————————-
தலைவர்-தலைமை என்பது நிர்வாகியாக இருப்பதை விட மேலானது. பிரச்சினைகளைக்  கண்டறிவதற்கு விமர்சன சுயமான சிந்தனைகள் போதும். ஆனால் ஒரு சிக்கலைத் தீர்ப்பதற்கு ஆக்கப்பூர்வமான சிந்தனைகள் தேவை. Commission Omission கூடாது. No to artificial or synthetic deeds, speech’s, actions etc- loyal to followers and well wishers பிரச்சினைகளைக் கண்டு விலகி ஓடுவது என்பது, தீர்வுகளை விட்டும் விலகி ஓடுவதாகும்.தனக்கு உழைத்த எவரையும் ஒழிக்க நினைக்கூடாது. நாடு மக்கள் நினைப்பதை விட்டு தன் குடும்பம் என பொந்தில் அடைதல் கூடாது.அறமான சிந்தனகள், நல் கடப்பாடுகள் அவசியம்….தன் நலமாக பொருள் ஈட்டல் வியாபார பொது வாழ்வு என்பது    Animal Farm
Novella by George Orwell’s கதைதான் நினைவில் வருகிறது.

எண்ணத்தில் சிறுமைகள் அச்சம், மடமை, துன்பம்,பொய் முதலிய தீமைகள் அற்ற  வினைகள் வேண்டும். கொடுமைகள் எல்லாம் மாய்ந்து துயர் தீரும். நாகரிகம், பண்பாடு, கண்ணியம் இயற்கையாக இருத்தல் நிமித்தம் முக்கியம். எழுச்சிமிக்க எண்ணத்தின் சக்தியில் சிறியது பெரியது என்ற பாகுபாடில்லை; ஒரே ஒரு எண்ணத்தையோ, சொல்லையோ, செயலையோ கொண்டு பெரியதொரு மாற்றத்தைத் தோற்றுவிக்கும் ஆற்றலே  தலைவனுக்கு தகுதி ஆகும். இதுவே தலைவன் என்பதன் இலக்கணம்- சூத்திரம் ஆகும்

தலைவன் உதாரணம்: நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், பகத்சிங், வ.உ.சிதம்பரனார்,  ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார், இராஜபாளைம் பி.எஸ். குமாரசுவாமி ராஜா, ஜே. சி. குமரப்பா, ஜெயபிரகாஷ் நாராயண் என இப்படி சிலர் உண்டு.

#தலைவர்_தலைமை_என்பது_என்ன? #எப்படி? #leadership

 #கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
28-9-2023.

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...