Monday, September 4, 2023

சனாதனம் #Sanatan

ஆழ்வார்களும் நாயன்மார்களும் கம்பரும்  நாராயணகுரு  சங்க இலக்கியங்கள் அனைவரும் சமம் என போற்றியதுதான் சனாதன தர்மம். அது அழியாது.

ஒரே பேச்சில் இந்திய பிரபலம் ஆகிவிட்டதுதான் மிச்சம் ஸ்டாலின் ஜூனியர். இது ஒரு வகை பிம்ப- போலி அரசியல் புகழ். இப்படி எப்போதும் கலைஞர் குடும்ப ராசி.இதில் வேறு ஒன்றும் இல்லை. சனாதனம் என்றால் என்னவென்றே இவர்களுக்கே தெரியாது. இவர்களின் வார்தைகளுக்கும் செயல்பாடுகளுக்கும் சம்பந்தமே கிடையாது.யாரோ கூலிக்கு எழுதி கொடுத்து, அந்த எழுத்துக்களை படிப்பது. அவ்வளவுதான்.வசனம் கூட இல்லை.விளையாட்டாக வாழ்கிற பேசுகிற விளையாட்டாக உயர்பதவிகளை பெறுகிற  empty trade politics காலம். இதையும் இங்கே மக்கள் ரசிக்கின்றனர். 
வாழ்க இந்த மக்கள்
வாழியவே இந்த கரும்-செம் மண்.

கலைஞர் குடும்பத்தில் பிறக்காத ஒருவர் திமுக தலைவராக வரமுடியுமா? அப்படி வர முடியாது என்றால் உங்களின் பார்வையின் படி திமுக வும் ஒரு "சனாதன" கட்சி தான்.என்ன உழைத்தாலும் அங்கு அவர்களின் பார்வை பட்டால்தான் 
இருக்கமுடியும்.

அரசியல் வாதிகளைப் போல் எழுத்திலும் பேச்சிலும் ஒன்று , குறிக்கோள் என்னவோ பணமும் பதவியும் என்றிருப்போரால் சத்திய தர்மமே பொய்யென்று ஆகிவிடுமா என்ன? சாதியை விட்டு, ஏற்றத் தாழ்வை விட்டு, வெறுப்பை விட்டு மனதளவில் வெளியே வந்தால் எல்லாரையும் உள்ளடக்கிய பரிபூரணமான சனாதன தர்மம் தரிசனம் தரும். 

சாதிகள் இல்லையடி பாப்பா… குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்," எனப்பாடிய பாரதி ஒரு சனாதனி.  வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய வள்ளலார் ஒரு சனாதனி. உண்மை என்னவென்று உள்ளே போய்ப் பார்ப்பவர் சனாதனர். சுருக்கமாகச் சொன்னால் தன் மனசாட்சிக்கு விரோதமில்லாமல் நேர்மைக்குத் தன்னை ஒப்புவித்தவர் எல்லாரும் சனாதனர்.

இருத்தல் ஒன்தறே சாசுவதமானத்து.  சனாதன தர்மம் என்பதற்கு எப்போதுமே அழியாமல் இருக்கும் தர்மம் என்று பொருள். ஜாதிகளுக்கும் அதற்கும் சம்பந்தமில்லை. தமிழ்நாடு அரசு இப்போதே ஜாதிகளை ஒழித்துவிடலாம். இன்று முதல் ஜாதி கிடையாது என்று சொல்லட்டுமே. ஜாதி, அரசியல் அவசியம். சத்தியம் தர்மம்  இவை இரண்டும் ஆதி அந்தமற்றவை. மொழிகளில் இல்லை சனாதனம். ஜாதியில் இல்லை சனாதனம். பிரிவினையில் இல்லை சனாதனம். தனக்குத் தானே உண்மையாக இருப்பவரெல்லாரும் சனாதனர். யார் வேண்டுமானாலும் சனாதனி ஆகலாம்  ஒருவர் வாழ்க்கை அன்பும் அறனும் உடைத்தாயின் அவர் சனாதனி. 





#சனாதனம்
#Sanatan

#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
4-9-2023. 


No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...