Thursday, September 28, 2023

#M.S.Swaminathan #எம்.எஸ்.சுவாமிநாதன்

*MS Swaminathan, 98 eminent agricultural scientist, passes away.. my well wisher…appreciated my national rivers link- net work  case on the file of the Supreme Court of India*…
*My deep condolences*.

*எம்.எஸ்.சுவாமிநாதன்* பிறந்தது குடந்தையில். பள்ளிப்படிப்பு முடித்த பின்னர், திருவாங்கூர் பல்கலைக்கழகத்தில் இளநிலை அறிவியல் பட்டத்தையும், கோவை வேளாண் பள்ளியில் (தற்போது வேளாண் பல்கலைக்கழகம்) இளநிலை வேளாண்மை பட்டத்தையும் பெற்றார். பல்வேறு ஆய்வு நிறுவனங்களில் பணியாற்றிய பிறகு, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார்.சுவாமிநாதன் மீனாவினை மணந்தார். இவர் கேம்பிரிட்ஜில் படிக்கும் போது 1951-ல் மீனாவினைச் சந்தித்தார்.[3] திருமணத்திற்கு பின்னர் சென்னையில் வசித்து வந்தனர். இவர்களுக்கு மூன்று மகள்கள் உள்ளனர். மூத்த மகள் சௌமியா சுவாமிநாதன் ஓர் குழந்தை மருத்துவர் ஆவார். மதுரா சுவாமிநாதன் ஓர் பொருளாதார நிபுணர் ஆவார். இளைய மகள் நித்யா சுவாமிநாதன் பாலினம் மற்றும் கிராமப்புற மேம்பாடு குறித்து பணியாற்றுகின்றார்.

Ph-1960s :: Dr. M. S. Swaminathan Inspecting Wheat In The Field







மகாத்மா காந்தி மற்றும் இரமண மகாரிசியால் ஈர்க்கப்பட்ட சுவாமிநாதன், தமது சொந்த நிலத்தின் ஒரு பகுதியினை வினோபாபாவின் பூமி தானம் இயக்கத்திற்க்கை வழங்கினார். 2011ல் சுவாமிநாதன் அளித்த பேட்டி ஒன்றில், தான் இளமையாக இருந்தபோது, சுவாமி விவேகானந்தரை பின்பற்றியதாக கூறினார்.
பசுமைப் புரட்சியை முன்னின்று நடத்தியவர். இந்தியாவிலும் சர்வதேச அளவிலும் புகழ்பெற்ற ஆய்வு நிலையங்களில் பேராசிரியர், ஆராயச்சி நிர்வாகி, தலைவராக இருந்தவர். வேளாண்மைத்துறைச் செயலாளர்,  மத்திய திட்டக் குழுவின் உறுப்பினர், மற்றும் துணைத்தலைவர் பதவிகளை வகித்தவர். எம். எஸ் .சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளை நிலையம் (MS Swaminathan Research (institute)Foundation) சென்னை தரமணியில் இருக்கிறது. 

உச்ச நீதி மன்றத்தில் நான் தொடர்ந்த தேசிய நதிகள்- கங்கை கன்னியாகுமரியை - இணைப்பு வழக்கை பற்றி சந்திக்கும் எல்லாம் கேட்பார். பாராட்டுவார்.

ஆழ்ந்த இரங்கல்,
****

எம். எஸ். சுவாமிநாதன் மறைவு குறித்த செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன.
அஞ்சலிகள்!

சுவாமிநாதன் மண்கொம்பு என்கிற ஊரைச்சேர்ந்தவர். குடந்தையில் இவர் குடும்பம் பூர்விகம் ஆலப்புழையின் அருகில் இருக்கிறது. பூதலிங்கம் பூதப்பாண்டி. ஐ.சி.எஸ் தேர்வு பெற்றவர் ரிசர்வ் வங்கி கவர்னர் மற்றும் நிதித்தைறை செயலாளராகப்பணியாற்றியவர். இவரது மனைவியின் இயற்பெயர் மதுரம். கிருத்திகா எனும் புனைப்பெயரில் தமிழில் , புகைநடுவே, வாசவேஸ்வரம் போன்ற மிகச்சிறந்த நாவல்கள் எழுதியிருக்கிறார். கல்வியில் நாடகக்கலையை கலந்து பல சாதனைகள் புரிந்தவர். இவரது ஊர் திருப்பதிசாரம்.ஆனால் இவர் வடிவீஸ்வரத்தைச்சேர்ந்தவர் என்றே நான் 
அறிந்திருக்கிறேன். அதை மனதில் வைத்துத்தான் தனது  ஒரு நாவலுக்கு 
வாசவேஸ்வரம்என்று அவர் பெயரிட்டதாகக்கூறக் கேள்விப்பட்டிருக்கிறேன்,


#M.S.Swaminathan 
#எம்எஸ்சுவாமிநாதன்

#ksrpost
#கேஎஸ்ஆர்போஸ்ட்
28-9-2023.


No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...