Saturday, September 30, 2017

ஜே கிருஷ்ணமூர்த்தி

இரண்டு என்பதிலிருந்து தேவை பிறக்கிறது. 'நான் மகிழ்ச்சியாக இல்லை. நான் மகிழ்ச்சியாக ஆக வேண்டும்.' - நான் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று எண்ணுவதிலேயே மகிழ்ச்சியற்ற தன்மை இருக்கிறது.

நாம் நல்லவனாக ஆக வேண்டும் என்று முயற்சிக்கும்போது, அந்த நல்லவன் என்ற கருத்திலேயே அதற்கு எதிரான ஒன்று உள்ளது, அதுவே ஒரு பாவச் செயலாகிறது.
நாம் வலியுறுத்தும் அனைத்திலேயுமே அதற்கு எதிர்மறையானவை உள்ளடக்கியிருக்கின்றன.
ஒன்றிலிருந்து மீண்டுவர செய்யும் முயற்சியே, எதனை எதிர்க்க போராடுகிறோமோ அதனை வலுவடைய செய்கின்றன.
#ஜேகிருஷ்ணமூர்த்தி 
அறிந்ததிலிருந்து விடுதலை, chapter 15.

வரையறை என்பது...

வரையறை என்பது நமக்கு நாம் வகுத்துக் கொண்டது.அதில் அடுத்தவர்கள் ஒரு சிறு கோடு கூட வரைய முடியாது .
ஆனல் இதையும் மீறி;
புயலாக சில வரிகள்
பூடகமாக சில வரிகள்
ஈட்டிகளாக சில வரிகள் 
யதார்த்தமில்லா சில வரிகள்
சொல்லவுமியலாத சில ஊமை வரிகள்
இவையே வலிகளின் ரணங்களின் ஊற்றுக்கண்....
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
30-9-2017


டாக்டர் குமரப்பாவின் நிலைத்த பொருளாதாரம் ஒரு சிறைப்படைப்பு



டாக்டர் குமரப்பாவின் நிலைத்த பொருளாதாரம் ஒரு சிறைப்படைப்பு. அதை எடுத்த எடுப்பிலேயே புரிந்து கொள்வது எளிதல்ல. அதை நன்கு முற்றிலுமாக தெரிந்து பாராட்ட இரண்டு அல்லது மூன்று முறை கவனமாகப் படிக்க வேண்டும். அதன் மூலப் பிரதியைக் கண்டவுடன் நான் அதிலென்ன இருக்கிறது என்று தெரிந்து கொள்ள ஆர்வமாக இருந்தேன். முதல் பகுதியிலேயே என் ஆர்வத்தை நிறைவு செய்ததுடன் என்னை சிறிதும் களைப்படைய செய்யாமல் மாறாக நல்ல பயன் தந்து இறுதிவரை இட்டுச் சென்றது.
-உத்தமர் காந்தி

குமரப்பா முன்மொழிந்துச் சென்ற `வளங்குன்றா வளர்ச்சி` பொருளாதார மாதிரி நிலத்திற்கு அடியிலிருந்து எதையும் எடுக்க அனுமதிக்காது. இல்லையென்றால் அதற்கு கடுமையான கட்டுபாடுகள் விதிக்கும். காந்தியை, குமரப்பாவை கைகழுவிய இந்த நவீன பொருளாதாரம் `நாளை என்பதில் நம்பிக்கை கொள்ளாது... தம் அடுத்த சந்ததி மீதும் அக்கறை கொள்ளாது... 
எல்லாமும் தமக்குதான், இப்போதைய மகிழ்ச்சிக்காக... 
ஆடம்பரத்துக்காகதான் எல்லாம் என்று சுவீகரித்துக் கொண்டது. `இப்போது அந்த வளர்ச்சி மாதிரி அதன் நிறை செறிவு நிலையை (Saturation) அடைந்துவிட்டது.
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.

பேரறிஞர் ஜே.சி. குமரப்பா

ஜே.சி. குமரப்பாவின் பொருளாதாரக் கொள்கைகளைப் பற்றி நேற்று ஒரு சிறு பதிவிட்டிருந்தேன். பலரும் குமரப்பா யார் என்று கேட்டிருந்தனர். ஒரு புறம் அவரை பற்றி தெரிந்து கொள்ளும் ஆர்வம் இருந்த போதிலும் கவலையாக இருந்தது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்களை பற்றி தெரிந்து கொள்ளும் தமிழகம், காந்தியின் சகாவும், பொருளாதார நிபுணருமான தமிழரை தெரியவில்லையே என்ற ஆதங்கம் தான். தஞ்சை மண்ணில் பிறந்து காந்தியுடன் பணியாற்றி இறுதி காலத்தில் மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டியில் தங்கி கிராமிய பொருளாதார வளர்ச்சிக்கு பணியாற்றிய குமரப்பாவை பற்றி தெரியவில்லையே.....

பேரறிஞர் ஜே.சி. குமரப்பா
...........................................
ஒரு முறை காந்தி காசியில் இருந்து குமரப்பாவை சந்திக்க பாட்னா வந்திருந்தார். பீகாரில் அப்போது நில நடுக்கம் ஏற்பட்டிருந்தது. நிவாரணப் பணிகள் தொடர்பான கணக்கு வழக்குகளை ஜே.சி. குமரப்பாதான் கவனித்துவந்தார். ஓரிரு நாட்களில் அது தொடர்பான முக்கியமான மீட்டிங் நடக்கவிருந்தது. வரவு செலவுகணக்கில் ஏதோ சிறிய பிழை நேர்ந்திருந்தது. ஆடிட்டர்கள் அதைக் கண்டுபிடித்து இருக்கவில்லை. ஜே.சி.குமரப்பாவுக்கு திருப்தியில்லை. என்ன தவறு என்பதைக் கண்டே பிடித்தாகவேண்டும் என்று இரவு முழுவதும் தூங்காமல் ரசீதுகளை அலசிக்கொண்டிருந்தார். காந்தி அந்த விஷயத்தைக் கேள்விப்பட்டதும், சரி நாளை காலையில் சந்தித்துக்
கொள்கிறேன் என்று சொல்லி தன் அறைக்குப் போய்விட்டார்.

மறுநாள் காலையில் குமரப்பாவை சந்திக்க போயிருக்கிறார். குமரப்பாவோ இன்று முடியாது நாளை சந்திக்கலாம் என்று சொல்லிவிட்டார். அது முடியாதே. இன்று இரவே வார்தாவுக்கு திரும்பப் போகிறேன் என்று காந்தி
சொல்லியிருக்கிறார்.சரி,அப்படியானால் என்னைப் பார்க்காமலேயே திரும்புங்கள் என்று குமரப்பா சொல்லிவிட்டார். உங்களைச் சந்திப்பதற்காக நான்
காசியில் இருந்து புறப்பட்டு
வந்திருக்கிறேன்.

இன்று நாம் சந்தித்தே ஆகவேண்டும் என்று காந்தி கேட்டுக்
கொண்டிருக்கிறாரஇதோ பாருங்கள். நான் காந்தியல்ல. நினைத்த இடத்துக்கு நினைத்தபடி போய்வர. கணக்கு வழக்குகள் தொடர்பான ஒரு முக்கியமான மீட்டிங் இருக்கிறது. அது முடிந்த பிறகு நானே உங்களைச் சந்திக்க வருகிறேன். இன்று உங்களைச் சந்திக்க முடியாது என்றூ கறாராகச் சொல்லிவிட்டார். காந்தி அன்று அவரைச் சந்திக்காமலேயேதிரும்பினார்.
***************
இன்றைய மையப்படுத்தப்பட்ட, நீடித்த தன்மையற்ற, பெருந்தொழில்மய பொருளியல் போக்குக்கு மாற்றான பரவலாக்கப்பட்ட, சூழலியலைக் கெடுக்காத, அனைவருக்கும் வளத்தைக் கொடுக்கும் ஒரு பொருளியல் மாதிரியை வடிவமைத்த பேரறிஞர் ஜே.சி. குமரப்பா.

தஞ்சையில் பிறந்து இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளில் உயர்கல்வி பயின்று காந்தியடிகளால் ஈர்க்கப்பட்டு, இந்திய விடுதலைப் போரில் தன்னை இணைத்துக்கொண்டு தனது இறுதி மூச்சுவரை ஊரக மேம்பாட்டுக்காகவே அவர் பாடுபட்டார்.
மேற்கத்திய மாதிரிகளை 'காப்பியடித்து' பொருளாதாரம் முதல் அறிவியல் தொழில்நுட்பம் மட்டுமல்லாது கல்வி முதல் பண்பாட்டு துறைவரை அனைத்திலும் தற்சார்பையும் தனித்தன்மையையும் இழந்து, அதுவே ‘வளர்ச்சி’ என்று போதித்த தலைவர்களுக்கு நடுவே நமக்கான ஒரு பொருளாதார மாதிரியைக் கொடுத்து, பல பரிசோதனைகள் மூலம் அதை மெய்ப்பித்தும் காட்டினார்.
அதற்கு நிலைபேற்று பொருளாதாரம் (Economy of Permanance) என்ற புதியதொரு சொல்லாட்சியைப் பயன்படுத்தினார். இந்தியா சிறிய ஊர்களைக் கொண்ட பெரிய நாடு. எனவே, சிறிய ஊர்களுக்கான ஒரு பொருளியலை உருவாக்குவதே, இங்குள்ள பொருளாதார மேதைகளின் பணியாக இருக்க வேண்டும். உணவு உற்பத்தியை அடிப்படையாகக் கொண்ட வேளாண்மை, கூடிய மட்டும் பணத்தை அடிப்படையாகக் கொள்ளாமல் பண்டமாற்றை அடிப்படையாகக் கொண்ட தொழிற்கொள்கை, மக்களின் ஆதாரங்களை மேம்படுத்தும் வகையில் அனைவருக்கும் அடிப்படைக் கல்வி போன்றவை இருக்க வேண்டும்.
இப்படிப்பட்ட அறக் கோட்பாடுகளை உள்ளடக்கியதாகப் பொருளாதாரத்தைக் குமரப்பா உருவாக்கினார். ஆனால் போட்டியையும், பூசலையும் அடிப்படையாகக் கொண்டு கொள்ளை அடிப்பதையே அறமாகக் கொண்ட ஒரு பொருளாதார மாதிரியை மேற்குலகம் வடிவமைத்து, அதை இந்தியாவும் பின்பற்றும் நிலையைக் காண முடிகிறது.
இந்தியாவில் கடந்த 1990-ம் ஆண்டு ரூ. 19688.62 கோடி சொத்து மதிப்புடைய பெரும்பணக்காரர்கள் (billionaires) இரண்டே இரண்டு பேர் மட்டுமே இருந்தனர். ஆனால், தாராளமயமும் தனியார்மயமும் அறிமுகமான பின் இந்தியாவின் இயற்கை வளங்களும் மலிவான உழைப்பும் தனியார் கைகளுக்குத் தாரை வார்க்கப்பட்டதால் இந்தப் பெரும்பணக்காரர்கள் எண்ணிக்கை 46 ஆக உயர்ந்திருக்கிறது. இதன் மதிப்பு 1084420.42 கோடி ரூபாய். பி.பி.சி. செய்தி நிறுவனம் இதைத் தெரிவிக்கிறது.
இந்தியாவில் இன்றைக்கு 82 கோடி மக்கள், ஒரு நாளைக்கு வெறும் 20 ரூபாய்க்கும் கீழே வருமானம் உள்ளவர்களாக இருக்கின்றனர். குறிப்பாக, 1990-ம் ஆண்டு 65 கோடி மக்கள் பசியால் வாடினர். இன்று அந்த எண்ணிக்கை 82 கோடியாக வளர்ந்துள்ளது. என்னே நமது ஆட்சியாளர்களின் திட்டம், கொள்(ளை)கை.
பட்டினியால் விலா எலும்புகள் தெரியும் உழைப்பாளியை அழைத்து அவனுக்கு ஒரு திட்டத்தைக் கொடுத்து, அத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட பின்னர் அவனது விலா எலும்புகள், மறையும்படி கொஞ்சம் சதை வளர்ந்திருக்குமேயானால் அதுவே உண்மையான திட்டமிடல்' என்று குமரப்பா கூறினார். இன்று அதற்கு மாற்றாகக் கொழுப்பவர்களை மேலும் கொழுக்க வைத்து ஏழைகளை மேலும் ஏழையாக்கும் கொள்ளைப் பொருளாதார மாதிரிச் செயல்படுத்தப்படுகிறது.
தஞ்சையில் பிறந்து இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகளில் மேலைக் கல்வியைப் பயின்றிருந்தாலும், நமது நாட்டுக்கான தற்சார்புப் பொருளியலை அவர் உருவாக்கினார். கணக்காயராக வாழ்க்கையைத் தொடங்கிய குமரப்பா, மிகச் சிறந்த வருவாயை ஈட்டியவர். அவரது உடை மிக நேர்த்தியான மேற்கத்தியப் பாணியில் இருந்தது.
ஆனால் இந்திய விடுதலை இயக்கத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட பின்னர், வடக்கத்திய தலைவர்கள் எட்டு முழ வேட்டியில் தயாரான பைஜாமா என்ற உடையை அணிந்தபோது, அவர் நான்கு முழ வேட்டியில் 'தோத்திஜாமா' என்ற ஒன்றைச் செய்து அணிந்துகொண்டார்.
தனக்கான வீட்டை உருவாக்கும்போது காந்தியடிகள் வசித்த வீட்டைவிடவும் குறைவான செலவில் வீட்டை உருவாக்கிக்கொண்டார். காந்தியே எளிமையானவர். அவரைவிடவும் எளிமையான வீடு, ஆனால் வசதிகளுக்கும் குறைவில்லாத வீடு.
நிலக்கரியையும் பெட்ரோலையும் அடிப்படையாகக் கொண்ட ஒரு பொருளாதாரம் மிகவும் ஆபத் தானது. எனவே, புதுப்பிக்கக்கூடிய வளங்களைக் கொண்ட ஒரு பொருளாதாரக் கொள்கை வேண்டும் என்று கூறியதோடு மட்டுமல்லாமல், தாவர எண்ணெயைக் கொண்டு எரியும் விளக்கு ஒன்றை வடிவமைத்துக் கொடுத்தார்.
சமையல் எரிவாயு மானியத்துக்கு அல்லல்படும் நமது மக்களின் இன்றைய துயரங்களைத் தொலைநோக்குடன் சிந்தித்ததாலோ என்னவோ, புகையில்லா அடுப்பை உருவாக்கினார், அதற்குக் கல்லுப்பட்டி அடுப்பு என்றே பெயர்.
குமரப்பா 1892-ம் ஆண்டு ஜனவரி 4-ல் பிறந்து, 1960-ம் ஆண்டு ஜனவரி 30-ம் நாள் மறைந்தார். அவரது தலைவரான காந்தியடிகளின் மறைவும் ஜனவரி 30 என்பது குறிப்பிடத்தக்கது.

கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
30-9-2017

1950ல் திருநெல்வேலி குறுக்குத்துறை.

1950ல் திருநெல்வேலி குறுக்குத்துறை.
படம் :ஓவியர் இசக்கி.

Friday, September 29, 2017

அன்பு நண்பர்களுக்கு,

அன்பு நண்பர்களுக்கு,

இதுவரை  கடந்த 28 ஆண்டுகளில் நான் எழுதிய 18 நூல்கள் வெவ்வேறு காலகட்டத்தில் வெளியிடப்பட்டது. இதில் கீழ்காணும் சில நூல்கள் மறுபதிப்பாக வெளிவர இருக்கிறது. அதற்கான பணிகள் நடந்து வருகின்றன. 

இதை எதற்கு தங்களின் பார்வைக்கு வைக்கிறேன் என்றால், இது குறித்தான தரவுகள்/வரலாற்று செய்திகள் ஏதாவது தங்களிடம் இருந்தால் இந்த நூல்களில் அந்த செய்திகளை தங்களுடைய பெயரில் சேர்க்கலாம் என விரும்புகின்றேன். 

எந்த படைப்பும், எழுத்தும் ஆதாரத்தோடு நண்பர்களிடம் பெற்று தான் முழுமையாக்க முடியும் என்ற நம்பிக்கையில் இதை தங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.  

1. ‘நிமிரவைக்கும் நெல்லை’ நான்காவது பதிப்பை 2 தொகுப்பாக வெளியிட உள்ளேன். 
2. தமிழகம், இன்றைய எல்லைகள் அமைந்து 50 ஆண்டுகள் நிறைவு விழாவில் வெளியிட்ட ‘தமிழ்நாடு 50’ என்ற நூல் 2வது பதிப்பாக தமிழகம் என்று வெளிவரவுள்ளது.
3. தினமணியில் 1979ல் இருந்து நடுப்பக்க கட்டுரைகளும், தி இந்து, ஆனந்த விகடன், கல்கி, ஜனசக்தி, கலைமகள், ஜுனியர் விகடன், குமுதம் ரிப்போர்ட்டர், டைம்ஸ் ஆப் இந்தியா, எக்கனாமிக் டைம்ஸ் போன்ற ஏடுகளில் வெளியான தமிழ், ஆங்கிலக் கட்டுரைகளை தொகுப்பாக வெளிவர இருக்கின்றது. 
4. இரண்டாவது பதிப்பாக கரிசல் காட்டில் கவிதைச் சோலை பாரதி என்ற நூலும்
5. பண்டிதமணி. ஜெகவீராபாண்டியனார் 1950 இல் எழுதி வெளியிட்ட வீரபாண்டிய கட்டபொம்மனுடைய வரலாறு பாஞ்சாலங்குறிச்சி வீரசரிதம் என்று தொகுப்பாசிரியராக இருந்து நான் தொகுத்துள்ள 900 பக்கங்கள் கொண்ட நூல்
6. நான்காவது பதிப்பாக நான் எழுதிய ‘கனவாகிப் போன கச்சத்தீவு’ என்ற நூல்
7. இரண்டாவது பதிப்பாக தூக்கு தண்டனை குறித்து ‘தூக்கு தண்டனையை தூக்கிலிடுவோம்’ என்ற என்னுடைய ஆய்வு நூல்
8. மத்திய, மாநில உறவுகளை குறித்தான புதிதாக வெளியிடப்படும் நூல்
9. தமிழகத்தின் நாராயணசாமி நாயுடு தலைமையில் நடந்த விவசாயப் போராட்ட வரலாறு குறித்தான நூல்
10. ஈழத்தமிழர் பிரச்சனை குறித்தான இரண்டாவது பதிப்பான ஆய்வு நூல் (தமிழ்/ஆங்கிலம் இருமொழிகளிலும்)
11. தமிழக நதிநீர் சிக்கல்கள், 850 பக்கங்களில் புதிதாக வெளிவரவுள்ளது.

மேற்கண்ட நூல்களை குறித்தான தரவுகள் ஏதாவது இருப்பின் எனது மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்குமாறு வேண்டுகிறேன். 

rkkurunji@gmail.com



நன்றி
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.

#KSRPostings
#KSRadhakrishnanPostings
#கேஎஸ்இராதாகிருஷ்ணன்_படைப்புகள்
#கேஎஸ்இராதாகிருஷ்ணன்_நூல்கள்
28-09-2017

நல்லக்கண்ணுவுடனான சந்திப்பின் போது மணிப்பூரின் இரும்பு பெண்மணியை சந்தித்தேன்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு அவர்களுடன் நதிநீர் இணைப்பு மற்றும் மணல்குவாரி விதிமீறல்கள் குறித்து கலந்து பேச வேண்டி இருந்தது. அதனால் அவரை சந்திக்க அவரது இல்லம் சென்றேன். என்னுடன் முன்னாள் அமைச்சர் தங்கவேலு பெரியநாயக்கன் பாளையம் கழக ஒன்றிய செயலாளர் பத்மாலாயா சீனுவாசன் உடன் வந்திருந்தனர்.

எங்கள் சந்திப்புக்களுக்கிடையே மணிப்பூரின் இரும்பு பெண்மணி, தனது உடலை, உயிரை ஆயுதமாக கொண்டு 16 ஆண்டுகாலம் உண்ணாவிரத போராட்டம் செய்து தேர்தல் அரசியலில் தகுதியே தடை என வெறும் 16 வாக்குகளை பெற்று தோல்வியடைந்த சகோதரி ஐரோம் சர்மிளா அவர்கள் தன் கணவர் உடன் அங்கு வந்திருந்தார். அவரை வடகிழக்கு மாநிலங்களுக்கு பயணம் செய்த போது சந்திக்க முயன்று இருக்கின்றேன் ஆனால் முயற்சி வெற்றி பெறவில்லை. இன்று அவரை சந்திக்க நேர்ந்தது. அவரது வீரத்தையும் மனவலிமையையும் பாராட்டி மகிழ்ந்தோம்.
மக்களால் புறக்கணிக்கப்பட்டாலும், நான் வழக்கமாக சொல்வது போல் தகுதியே தடை என்ற கோட்பாட்டின் படி மக்களுக்கு பணியாற்றும் வாய்ப்பை இழந்தாலும் தன்னம்பிக்கை இழக்காமல் மனவலிமையுடன் காணப்படுகின்றார். அவருடைய கணவர் கோவாவை சேர்ந்தவர்,அவரும்ஒருபோராளி.
அவருடைய திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக அமையவும் கொள்கை போராட்டத்தில் வெற்றி அடையவும் எங்கள் வாழ்த்துகளை தெரிவித்தோம். பொதுநலத்தில் மனம் இரனமானதே அதிகம். இந்த சந்திப்பால் இன்றைய நாள் திருப்தியான, மிக மகிழ்ச்சியான நாட்களின் பட்டியலில் ஒன்றானது.

கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
28-09-2017

மணல் கொள்ளை.

மணல் கொள்ளைகள் தமிழகத்தில் இருந்து மற்ற வடமாநிலங்களிலும் பரவிவிட்டது. எவ்வளவு தான் சட்டங்களும், வரையறைகளும், உத்தரவுகள் இருந்தாலும் அனைத்தையும் கட்டிப்போட்டு மணலை கபளீகரம் செய்வதை தடுக்க முடியாத நிலையில் மக்கள் விரோத சக்திகள் கொண்டு செலுத்திவிட்டன. 

இதை குறித்து மாதமிருமுறை இதழான ‘டவுன் டூ எர்த்’ (Down to Earth) எனும் ஆங்கிலஏட்டில் (செப்டம்பர் 16-30) செய்தி கட்டுரையாக வந்துள்ளது. 

#sand_mafia
#sand_looting
#மணல்_கொள்ளை
#KSRPostings
#KSRadhakrishnanPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
28-09-2017


Why even Arab nations are buying sand?
You wouldn't think it could ever run short but it turns out that like many other resources, humans are consuming sand faster than the earth's capacity to replenish stocks. The frenzy of building that has accompanied rising populations across the globe has fuelled indiscriminate mining, spelling danger for the environment. Here is all you need to know about use of sand and its indiscriminate mining.

Why can't we take it from the deserts?
1. Sand used for construction comes mainly from riverbeds and oceans.
2. If you wonder why we can't simply lift it from the deserts, it is because desert sand is too smooth for construction.

Why Sand is important: second only to water?
1. All the major building materials — concrete, bricks, glass — are made using sand.
2. That makes sand the second most used natural commodity after water.
3. Sand constitutes up to 85% by weight of everything mined globally each year, a 2014 UNEP report said.
4. More than 40bn tons of sand and gravel used every year. Mining of sand is a $70 billion industry.

So even Arabs are buying sand
1. Dubai now imports sand from Australia, because it has exhausted its marine sand supply.
2. BBC says UAE imported $456m worth of sand, stone and gravel in 2014.

Why unbridled sand mining is dangerous
1. Sand acts as an aquifer and natural carpet at the bottom of the river.
2. Stripping this layer leads to downstream erosion, changes in channel bed, deepening of rivers, etc.
3. Local groundwater is affected, causing water scarcities that threaten agriculture  4. It also creates habitat and ecological problems.

Sand mining is a global threat now
1. China's biggest freshwater lake — Poyang Lake — is drying up due to sand dredging.
2. In Kenya, sand dredging from the riverbeds of poor rural counties is leaving communities without access to water.
3. Beaches in Morocco and the Caribbean have been stripped of sand, making them vulnerable during rough weather.

What is at risk in India?
Major rivers in Kerala such as the Pampa, Manimala, and Achankovil have faced significant degradation, leading to a sharp fall in ground water table levels. In eastern Uttar-Pradesh, mechanised sand mining in rivers like Chhoti Gandak, Gurra, Rapti and Ghaghara has resulted in soil erosion and turned thousands of acres of land infertile. Coastal sand mining destroys fisheries, disturbs coral, and has led to the near extinction of ghariyals, a crocodile species unique to India. Although regulations exist to limit sand mining, excessive demand has created a booming illegal sand mining sectorworth more than Rs 1,000 cr annually, says CSE.

(Source: BBC; Centre for Science and Environment; MoEF).

Thursday, September 28, 2017

நதிநீர் இணைப்பு அச்சன்கோவில் - பம்பை - வைப்பாறோடு இணைப்பு

உச்சநீதிமன்றம் நதிநீர் இணைப்பு, கேரள அச்சன்கோவில் பம்பை தமிழக வைப்பாறோடு இணைத்தல் மேற்கு நோக்கி கேரளாவில் பாயும் நதிகளை தமிழகத்துக்கு திருப்புதல் குறித்த எனது வழக்கில் 30 ஆண்டுகளுக்கு பிறகு தீர்ப்பு வழங்கியது. 

இந்த திட்டங்கள் யாவும் சாத்தியமானவை என்று உச்சநீதிமன்றம் நினைக்கும் போது சில கேரளத்தினர் இது குறித்து தவறான தகவல்களை வெளியிட்டுள்ளனர். இது குறித்து தவறான எதிர்வினையை ஆலப்புழையிலிருந்து அதன் செய்தியாளர் பிஜூ இ. பால் எதிர்வினையாக திட்டமிட்டு வேண்டுமென்றே எழுதியது ஏற்றுக்கொள்ள முடியாது. 

சேட்டன் என்று சொல்லிக் கொண்டு தமிழர்களிடம் அனைத்து அத்தியாவசிய பொருள்களை மட்டும் பெற்றுக் கொண்டு, நதிநீர் பிரச்சனைகளில் அனைத்து கேரளத்தினரும் எதிர்த்து செயலாற்றுவது ஆரோக்கியமற்ற போக்கு மட்டுமல்லாமல் இந்தியாவின் சமஷ்டி அமைப்பையே பாழ்படுத்தும் நடவடிக்கையாகும். 

இந்த செய்தியாளர் எப்படி திட்டமிட்டு வரிந்து வரிந்து எதிர்வினைகளை வைத்துள்ளார் என்பதை பார்த்தாலே நம்மை வேதவையடைய செய்கிறது.

#நதிநீர்_இணைப்பு
#அச்சன்கோவில்_பம்பை_வைப்பாறு_இணைப்பு
#achankovil_pamba_vaipar_linking
#KSRPostings
#KSRadhakrishnanPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
28-09-2017

Will the pampa and the achankovil quietly flow to TN?

ALAPPUZHA: The Centre has finally decided to navigate troubled waters. It is gearing up to go ahead with the controversial river-linking scheme, raising the hackles of environmentalists and scientists.

The Union Ministry of Water Resources has approved the `5.5 lakh crore project and its first phase was announced a few days ago. As many as 30 projects have been envisaged by the National Water Development Agency (NWDA) and the linking of the Pampa and Achankovil rivers in the state with Vaipar in Tamil Nadu is also part of it.
While Kerala has decided to swim against the tide, its neighbour is gung-ho about connecting the rivers. Green activists and scientists also oppose the move tooth and nail, saying it could spell doom for the ecology of Central Kerala and concoct a recipe for environmental disaster in the Vembanad wetlands.
 In the NWDA study carried out two decades ago, it was found the water was excess in Pampa and Achankovil rivers. But they were wrong. From the mouth of the Pampa river to Aranmula, the water is scarce for more than 180 to 200 days every year, Pampa Parirakshana Samithi general secretary N K Sukumaran Nair told Express.
“Only the tailrace water from the Sabarigiri project is a relief to the river. The Achankovil river is also in the same condition and it is almost dry during the entire stretch.” “The Vembanad ecosystem exists with the flood waters of Pampa and Achankovil rivers,” said K G Padmakumar, director of International Research and Training Centre for Below Sea Level Farming. “If dams are constructed on the rivers, it will destroy the system. The salinity in the Vembanad Lake reaches almost half the salinity level of the sea in summer. If the flow of water decreases, it will destroy agriculture in the region. The study of NWDA did not analyse the real situation and they look only at the flood in Kuttanad during the monsoon. The linking project could dry up Alappuzha, Kottayam and Pathanamthitta districts, affecting 30 lakh people.”  Every year, around 4 to 5 crore devotees from across the country reach the Sabarimala pilgrim centre and they depend on the river. The level of pollutants in the Pampa is already high and, after the linking, it will go up further, destroying the river, the serenity of the temple and the Vembanad region, Padmakumar said.
Water Resources Minister Mathew T Thomas told reporters in New Delhi the project will not be implemented without the permission of the state. “The meeting of NWDA chaired by Union Minister Nitin Gadkari on September 12 has agreed to our demands. The demand for the project is based on unscientific studies,” he said.
Pampa-Achankovil-Vaipar project
The project looks at diverting 634 cubic metres of water from Pampa and Achankovil rivers to Vaipar in Tamil Nadu through tunnels and dams. The aim is to irrigate three districts in the neighbouring state - Tirunelveli, Thoothukudi and Virudhunagar. It also looks at producing  500 MW electricity. Three dams at Punnamedu, Chittarmoozhy and Achankovil have been proposed. Punnamedu and Chittarmuzhi reservoirs are interconnected with an 8-km tunnel. Water from Achankovil reservoir has to be pumped to Chittarmuzhi reservoir.  A 9-km tunnel will be constructed through the Western Ghats. A 50-km-long canal has been proposed to bring water from the tunnel to Mekkara dam. Six mini hydro power plants are also proposed in Achankovil, Punnamedu and in TN along the canal route.
Estimated cost of the project
A2,588 cr
(2000-01 estimate. 8 per cent annual escalation recommended in the estimate)
Ecological imbalances
Three reservoirs will submerge 2,000 hectares of virgin forest and 10 sqkm forest land in Konni and Achenkovil divisions will be destroyed. The flow of water helps in purifying the Vembanad Lake and supports paddy farming in Kuttanad region, which produces around 1.25 lakh tonnes of rice each season. If the flow is reduced, the sediments deposited and saline water intrusion will destroy agriculture. The Vembanad eco-system will be devastated and more than 5 lakh inland fishermen will be rendered jobless.

Potable water projects use water of Pampa and Achankovil rivers and they could be jeopardised as well.

ஸ்லீப்பர் செல்கள் (Aaya Ram - Gaya Ram)

ஸ்லீப்பர் செல்கள் என்று சொல்வது சரியா? என்று சொல்லமுடியாது. ஏனெனில், மக்கள் பிரதிநிதிகளை ஸ்லீப்பர் செல் என்று சொல்வது மக்களையே களங்கப்படுத்துகின்ற நிலைக்கு ஒப்பானது. ஆனால், சுயநலத்தில் விலைபோகும் நபர்களை ஸ்லீப்பர் செல் என்று சொல்வது சரியாகத்தான் படுகிறது. விலைக்குப் போன எந்த சரக்கும் உயர்திணையில் அழைக்கப்படாது என்பது எழுதப்படாத சொல்லாடல் மட்டுமல்ல, மரபும் கூட. மக்களின் உண்மையான பிரதிநிதியாக இருந்தால் ஸ்லீப்பர் செல் என்று சொல்வது நாடாளுமன்ற முறைகளுக்கு முரணானதாகும். 
1960களில் வடஇந்திய அரசியல்வாதிகளின் மத்தியில் ‘ ஆயா ராம், காயா ராம் ’ என்று அழைக்கப்பட்டது.



The term was coined when Gaya Lal a Member of the Legislative Assembly from Haryana in 1967 changed party thrice in a fortnight first from the Indian National Congress to United Front, back to Congress and then within nine hours to United Front again with personal interest and benefits not for policy and honest political approach. Defection should be adhred only on reasons like policy, self-respect and natural circumstances but not for personal benefits. When Gaya Lal decided to quit the United Front and join the Congress, then Congress leader Rao Birendra Singh brought him to Chandigarh press and declared,

“Gaya Ram was now Aya Ram”
It became the subject of numerous jokes and cartoons. In 1985 the Constitution amended the anti-defection act. to prevent such defections, during Rajiv Gandhi period and also amended in the tenth schedule, the Constitution of India.

#aaya_ram_gaya_ram
#sleeper_cells
#KSRPostings
#KSRadhakrishnanPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
27-09-2017

Taking advantage of Dassara holidays, youngsters use govt school as bar,

Taking advantage of Dassara holidays, youngsters use govt school as bar .....



Photos by Ravuri.New Indian Express


Wednesday, September 27, 2017

குர்திஸ்தானும், தமிழ் ஈழமும்

ஈராக்கிலிருந்து குர்திஸ்தான் பிரிவதை குறித்தான நடந்த பொது வாக்கெடுப்பில் (Referendum) 92 விழுக்காடு வாக்குகள் ஆதரவாக கிடைத்துள்ளன. ஆனால் ஈராக் இதில் முரண்டு பிடிக்கின்றது. நிச்சயம் குர்திஸ்தான் மலரும். அதே போல பலூசிஸ்தானும் பாகிஸ்தானிலிருந்து பிரிவதை தடுக்க முடியாத நிலையில் உள்ளது. 

இந்த இரண்டு நாடுகளின் சுயநிர்ணய போராட்டத்திற்கு முன்னத்தி ஏராக தமிழ் ஈழம் விளங்கியது. ஒரு நாள் நிச்சயம் பன்னாட்டு ஆதரவோடு தமிழ் ஈழம் மலரும் !!!


#KSRPostings
#KSRadhakrishnanPostings
#kurdistan
#குர்திஸ்தான்
#தமிழ்_ஈழம்
27-09-2017

Tippi Hedren having her cigarette lit by a crow on the set of The Birds.

Tippi Hedren having her cigarette lit by a crow on the set of The Birds. Dangerous......


1940 களில் நாடாளுமன்றம்.

சமீபத்தில் டெல்லியில், இந்தியா இண்டர்நேஷனல் சென்டரில் நடந்த கருத்தரங்கிற்கு சென்றபோது நாடாளுமன்றத்தின் பழைய கருப்பு வெள்ளை புகைப்படத்தை ஓய்வுபெற்ற பேராசிரியர் நண்பர் கோயல் காட்டினார். அந்த புகைப்படத்தில் ஆங்கிலத்திலும், உருது மொழியில் எழுதப்பட்ட பலகையில் ‘நாடாளுமன்ற வளாகத்தில் மாட்டு வண்டிகள் தடை செய்யப்பட்டுள்ளது’ என உள்ளது. 
(Urdu & English signboard written 'BULLOCK CARTS PROHIBITED' in front of Parliament House in 1946....!)



அதாவது, 1940 களில் என்றால் 70 ஆண்டுகளுக்கு முன்னாலேயே நாடாளுமன்றத்திற்கு வருபவர்கள் மாட்டு வண்டியில் வராமல் நடந்து வாருங்கள். இந்திய மக்கள் வாகனங்களை பயன்படுத்துவதில்லை. எனவே அவருடைய பிரதிநிதிகளான நீங்களும் சிறிது தூரம் நடந்து வந்து நேர்மையாக உண்மையாக மக்கள் பணியாற்றுங்கள் என்பது தான் இதிலிருக்கும் உள்ளார்ந்த அர்த்தம் என்று புரிந்துகொள்ள முடிகிறது. 

அன்று நாடாளுமன்றத்திற்கு குற்றவாளிகளும், மக்கள் விரோத சக்திகளும் மக்களின் பிரதிநிதிகளாக செல்லவில்லை, அன்றைக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களுடைய ஊதியமும், சலுகைளும் இந்தளவு கிடையாது. மறைந்த முன்னாள் அமைச்சர் சி. சுப்ரமணியம் தன்னுடைய நினைவுகளில் நாடாளுமன்றத்துக்கு முதன்முறையாக சென்றபோது கார் கேரேஜில் தங்கியதாக எழுதியுள்ளார் என்று என்னுடைய நினைவு.  அப்போது மாநில அரசுகளின் இல்லங்களோ, விடுதிளோ, பவன்களோ கட்டப்படாத காலகட்டம். ஒரு சில எம்.பிக்கள் திருவிதாங்கூர் அரண்மனையில் ஆரம்ப கட்டத்தில் விருந்தினராக தங்கியதாக சொல்வார்கள்.

உறுப்பினர்கள் நாடாளுமன்றத்திற்கு ஒரு கிலோமீட்டர் அல்லது 2 கிலோமீட்டர்கள் நடந்தே தான் செல்லவேண்டும். இயலவில்லை என்றால் மாட்டு வண்டியில் சென்றால் சன்சத் மார்க், ரெட் கிராஸ் ரோடு, தல்கோத்ரா ரோடு, பண்டிட் பந்த் மார்க், சர்ச் ரோடு, ரெட் கிராஸ் ரோடு வரை மட்டுமே மாட்டு வண்டியில் செல்ல முடியும். தங்களுடைய துணிகளை தாங்களே சலவை செய்து கொள்வதுண்டு. அன்றைய சென்னை ராஜதாணியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் கன்னாட்டு பிளேசில் உள்ள மெட்ராஸ் ஹோட்டலில் தான் உணவுக்கு செல்வது வாடிக்கை.

இங்கு தமிழ்நாடு, ஆந்திரா, மலையாள உறுப்பினர்கள் விரும்பி சாப்பிடும் சோறு, இட்லி, தோசை முதலானவைகள் கிடைக்கும். இது தற்போதுள்ள சென்ட்ரல் நியூஸ் ஏஜென்சி பேப்பர் கடைக்கு அருகிலும் அதன் மாடியிலும் இருந்தது. சூடான சாம்பாரில் இட்லியை போட்டு உண்பது இங்கு வாடிக்கை. இதை வடஇந்தியர்கள் கூட விரும்பி சாப்பிடுவது உண்டு.

சுதந்திரா கட்சியின் எம்.பிக்களாக இருந்த கரூர் முத்துசாமி கவுண்டர், சிவகாசித் தொகுதியின் முளிச்செவல் பி. இராமமூர்த்தி ஆகியோர் டெல்லியில் இருந்த சமயத்தில் நான் சென்றபோது இந்த காட்சிகளை கண்டதும் உண்டு.

அன்றைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதயசுத்தியோடு மனசாட்சிக்கு அஞ்சி மக்கள் பணியாற்றினார்கள். இன்றைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களுடைய சுயபுகழ்ச்சிக்கும், தன்னலத்தினை தங்களுடைய இதயத்தினில் சுமந்து கடுமையான பணிகளை மேற்கொள்கின்றனர். 

#இந்திய_நாடாளுமன்றம்
#KSRPostings
#KSRadhakrishnanPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
27-09-2017

குர்திஸ்தான் தனி நாடா...? Referendum.

குர்திஸ்தான் தனி நாடா...?
Referendum.

ஈராக்கிய குர்திஸ்தான் (Iraqi Kurdistan) அல்லது குர்திஸ்தான் பிராந்தியம் (Kurdistan Region, குர்து: هه‌رێمی کوردستان, ஹெரேமி குர்திஸ்தான்), என்பது ஈராக்கின் ஒரு தன்னாட்சிப் பகுதியாகும்.இதன் எல்லைகளாக கிழக்கே ஈரான், வடக்கே துருக்கி, மேற்கே சிரியா, தெற்கே ஈராக்கின் ஏனைய பகுதிகள் ஆகியன அமைந்துள்ளன. இப்பிராந்தியத்தின் தலைநகர் ஆர்பில். குர்திஸ்தான் பிராந்திய அரசு இதனை அதிகாரபூர்வமாக நிருவகித்து வருகிறது.

குர்திஸ்தானில் பொது வாக்கெடுப்பு நடைபெற்றுள்ளது. ஈராக்கிலிருந்து பிரிந்து செல்ல விருப்பம் தெரிவித்து      90 % மக்கள் வாக்களித்துள்ளனர். ஈராக்  அரசு இந்த வாக்கெடுப்பைச் சட்டவிரோதமென்று சொல்லி ஏற்க மறுத்துள்ளது.

Tuesday, September 26, 2017

மௌனம் அடர்த்தியானது!

மௌனம் அடர்த்தியானது!
திமிரான பிரகடனங்கள்..
வெட்டி பேரிரைச்சல்கள்..
வீரமற்ற கூக்குரல்கள்..
விவேகமற்ற புலம்பல்கள்..
போலி முனகல்கள்..
பாசாங்கு அழுகுரல்கள்..
தவிர்த்து...
தனித்திருக்கும்
நலம் ஈடுயற்றது.....
#KSRadhakrishnanpostings
#KSRpostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
26-09-2017

Our soils


Our soils are by nature linked to the micro-nutrient content of our food production. Ensuring crop rotation is one of the most effective ways of naturally restoring soil's fertility. Let's resolve to consider crop's impact on soil fertility before taking sowing decision in Rabi. 

#Agriculture 
#Soils
#KSRpostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
25-09-2017

இன்றைய (25/9/2017) ie இந்தியன் எக்ஸ்பிரஸ் இணைய இதழின் தளத்தில் வெளியான காவிரி பிரச்சனை -அ முதல் அக்கு வரை குறித்தான எனது பத்தி.

இன்றைய (25/9/2017) ie இந்தியன் எக்ஸ்பிரஸ் இணைய இதழின் தளத்தில் வெளியான காவிரி பிரச்சனை -அ முதல் அக்கு வரை குறித்தான எனது பத்தி.
கனவாகிப் போன காவிரி
----------------------------------------

காவிரி நடுவர் மன்றம் 1990ல் அமைக்கப்பட்டு, 17 ஆண்டுகளுக்குப் பின் 2007ல் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று இறுதி தீர்ப்பை வழங்கியது. அப்போதிருந்தே இந்தப் பிரச்சினை கண்ணாமூச்சி விளையாட்டாகிவிட்டது. உச்சநீதிமன்றம் வலியுறுத்தியும் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முடியாது என்று கூறியுள்ளது வேதனையைத் தருகின்றது. மத்திய அரசின் சார்பில் வாதிட்ட அட்டர்னி ஜெனரலின் உறுதிமொழிக்கு முற்றிலும் முரணாக தமிழக மக்களை மத்திய அரசு வஞ்சித்துவிட்டது. உச்சநீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே. கங்குலி, அரசியல் சாசன பிரிவு 144ன் படி உச்சநீதிமன்றத்தின் உத்தரவுக்கு மத்திய அரசும், கர்நாடக அரசும் கட்டுப்பட்டு நடக்கவேண்டும் என்றும், கர்நாடக அரசு உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்தே கேரளா முல்லைப்பெரியாறுப் பிரச்சினையில் தீர்மானம் நிறைவேற்றியது போல கர்நாடக சட்டமன்றத்திலும் உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றவும் முடியாது என்ற கருத்தை தெளிவாக கூறியுள்ளார். இவ்வாறான நிலையில் எதையும் மதிக்காமல் மத்திய அரசும், கர்நாடக அரசும் காவிரிப் பிரச்சினையில் நடந்துகொள்வது தான்தோன்றித்தனமாக தெரிகிறது.
காவிரியும், தமிழகமும் பிரிக்க முடியாத வரலாற்றையும், தொன்மையும், பழமையும் கொண்டது. பல்வேறு காலகட்டங்களில் காவிரிப் பிரச்சினையில் சிக்கல்கள் வந்தாலும் தீர்க்கப்பட்டுள்ளன. 1872ல் காவிரிப் பிரச்சினை துவங்குகிறது. 140 வருடங்களாக அமைதிப் பிரச்சினைகளாக இருந்து வந்தன. ஆனால் கடந்த 43 ஆண்டுகளில் கொழுந்துவிட்டு எரிகின்றது. ஆனால் தற்போது ஏற்பட்டுள்ள கடினமான சிக்கல் எப்போதும் ஏற்பட்டதில்லை. காவிரி பிரச்சினை தோன்றி 48 ஆண்டுகளாக சிக்கல்கள் தொடர்கின்றன. இதனால் 10 மாவட்ட தமிழக விவசாயிகள் தவிக்கின்றனர். நடுவர் மன்றம் அமைத்தும், இடைக்காலத் தீர்ப்பையும், இறுதித் தீர்ப்பையும் மதித்து கர்நாடகா செயல்படவில்லை. இந்த காலகட்டத்தில் தமிழகத்தின் ஒப்புதல் இல்லாமல், கபினி, ஹேரங்கி, ஹேமாவதி, சுவர்ணவதி, யாகாட்சி என்ற ஐந்து காவிரி துணையாறுகளில் கர்நாடகா அணையைக் கட்டி பாசன நிலங்களை அதிகப்படுத்தி, கால்வாய்களையும், ஆழப்படுத்தியும், அகலப்படுத்தியும் எந்த நெறிமுறையையும் மதிக்காமல் நடந்துகொண்டது. காவிரி மொத்தத்தில் பாயும் தூரம் தமிழகத்தில்தான் அதிகம் (ஏறத்தாழ 416 கி.மீ.). கடைமடைப் பகுதியான தமிழகத்திற்குத்தான் உரிமைகள் அதிகம். இந்த உரிமைகளையெல்லாம் கர்நாடகா மறுத்துவிட்டு கையகப்படுத்திக் கொண்டது. நதிநீர்ப் பகிர்வு பன்னாட்டு அளவில் ஹெல்சிங் கோட்பாடு என்று சர்வதேச அளவில் ஹெல்சிங் நகரில் கூடி முடிவெடுத்து இந்த உலகம் ஏற்றுக்கொண்ட நடைமுறைகளையும், கர்நாடகாவும், மத்திய அரசும் மதிப்பதில்லை.
வரலாற்று ரீதியாக தமிழர் நீர் மேலாண்மை நிர்வாகம் உலகத்துக்கு வழிகாட்டியது. காவிரியில் தமிழகத்தில் ஆதிபத்தியம் இருந்ததால்தான் கரிகாலன் கல்லணையைக் கட்டினார். இயற்கையின் போக்கில் உள்ள ஆறுகளை தன் போக்குக்கு மாற்றுவது இயற்கைக்கு முரணானது. காவிரி சிக்கல்கள் வரலாற்று ரீதியாகப் பார்த்தால் சில நேரங்களில் சர்ச்சைகள் ஏற்பட்டாலும, உடனுக்குடன் தீர்க்கப்பட்டுள்ளன.
கி.பி. 11ம் நூற்றாண்டில் சோழராட்சி நடந்து கொண்டிருந்த போதும், கர்நாடகத்தில் ஹொய்சள வம்சத்தினர் ஆட்சியில் இருந்தபோது, காவிரியின் குறுக்கே அணைகட்டி நீரை வேறு திசைக்குத் திருப்பிவிட்டனர். அப்போது சோழமன்னன் இரண்டாம் ராஜராஜன் அந்நாட்டின் மீது படையெடுத்துச் சென்று, அவ்வணையை உடைத்துக் காவிரியின் தண்ணீரை பழைய பாதையில் ஓடச்செய்து சோழ நாட்டிற்குத் தண்ணீரைக் கொணர்ந்திருக்கிறான்.இச்செய்தியை ஒட்டக் கூத்தர் தக்கயாகப் பரணியிலும், ராஜராஜசோழன் உலாவிலும் கூறப்பட்டுள்ளது. இதை எறிபத்த நாயனார் புராணத்தில் சேக்கிழாரும் கூறியிருக்கிறார்.
கி.பி. 17 ஆம் நூற்றாண்டிலும் ராணி மங்கம்மாளும், தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னரும் பெரும் படையோடு காவிரியை மீட்க சென்றதெல்லாம் வரலாற்று செய்திகள். 1807ம் ஆண்டு பேச்சுவார்த்தை இரண்டு வட்டாரங்களில் துவங்கின. மைசூருக்கான ஆங்கிலேய அதிகாரி கர்னல் ஆர்.ஜே. சாங்கி, மைசூர் சமஸ்தானத்துடன் இணைந்து கர்நாடக மலைச்சரிவில் விழும் நீரை முழுமையாக பயன்படுத்த திட்டமிட்டர். இதற்கு அன்றைய சென்னை மாகாண அரசு ஒத்துக்கொண்டது. அதன்பின்பு தமிழகத்துக்கு வரும் நீர்வரத்து குறைந்துவிடும் என்று திரும்பவும் பேச்சுவார்த்தையில் இறங்கி அணையை கட்டவேண்டாம் என்றும் வலியுறுத்தியது. பல சுற்று பேச்சுவார்த்தைக்குப் பின் 1892 பிப்ரவரி 18ம் தேதி ஒரு ஒப்பந்தம் இறுதியானது. அதுதான் காவிரியின் முதல் ஒப்பந்தம். மைசூர் அரசு 41.5 டி.எம்.சி. கொள்ளளவில் கண்ணம்பாடியில் கிருஷ்ணராஜசாகர் அணையை திட்டமிட்டபோதுதான் சென்னை மாகாண அரசும் மேட்டூர் அணையை கட்ட திட்டமிட்டது. 1910ல் இந்த தாவா சற்று விஸ்வரூபமெடுத்தது. பல பேச்சுவார்த்தைகளுக்குப் பின் எந்த முடிவும் எட்டப்படவில்லை. 1924ம் ஆண்டு திரும்பவும் ஒப்பந்தம் கையெழுத்தானது. இவ்வாறான கடந்த கால வரலாறு துவங்கி இன்றைக்கும் தீர்க்கப்படாத சிக்கலாக உள்ளது.
இவ்வளவு சிக்கல்கள் காலத்திலும் காவிரி பாசனப் பகுதியில் கர்நாடகத்தில் ஹேமாவதி, ஹாரங்கி, கபினி, கிருஷ்ணராஜசாகர், தமிழ்நாட்டில் மேட்டூர், கீழ்பவானி, அமராவதி மற்றும் கேரளத்தில் பனசுரசாகர் ஆகிய அணைகள் கட்டப்பட்டன. கேரளா துவக்கத்தில் காவிரி சிக்கலில் ஒரு மாநிலமாக இல்லை. 1956க்கு பின் மாநில எல்லைகளை சீரமைத்தப்பின் கேரளாவும் காவிரியில் உரிமை கொண்டாடியது. 1960களில் ஒருதலைபட்சமாக தமிழகத்தை சற்றும் மதிக்காமல் கர்நாடகா தன் போக்கில் காவிரியில் அணைகள் கட்டிகொண்டபோதுதான் வழக்கு சிக்கல்கள் துவங்கின. 1976ம் ஆண்டு காவிரி உண்மை அறியும் குழு ஓர் அறிக்கையை தயாரித்தது. இதற்கிடையில் உச்சநீதிமன்றத்தில் தமிழக வழக்குகளை அன்றையப் பிரதமர் இந்திரா காந்தி திரும்பப் பெற சொன்னதால் திரும்பப் பெறப்பட்டது. அதற்குப் பிறகும் மத்திய அரசு காவிரி பிரச்சினையில் தமிழ்நாட்டின் நியாயங்களை கவனிக்காமல் பாராமுகமாகவும் இருந்தன. 1983ல் நடுவர் மன்றம் அமைக்கவேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. அந்த வழக்கின் தீர்ப்பு 1990ல் கிடைத்து, நடுவர் மன்றமும் அமைக்கப்பட்டது. இப்படிப் பல இழப்புகள் தமிழகத்திற்கு தொடர்கதையாக உள்ளன.
உலக அளவில் நைல், அமேசான், சீனாவில் யாங்சே, அமெரிக்காவில் மிசிசிப்பி-மிசூரி, யெனிசே-அங்காரா, ஓப்-இர்டிஷ், ஹுவாங்-ஹ (மஞ்சள் ஆறு), ஆமுர், காங்கோ, லெனா, அமு டாரியா, காங்கோ, தாமோதர், தன்யூப், கொலம்பியா, டெட்ரோயிட், நீப்பெர் (Dnieper), நீஸ்ட்டர் (Dniester), இயூபிரட்டீஸ் , ஜோர்தான் ஆறு, மியூஸ் ஆறு, நைஜர் ஆறு, ரியோ கிராண்டே, பரனா ஆறு, ரைன், ரோன், வோல்ட்டா போன்ற பல நதிகள் நாடு விட்டு நாடு கடந்து பாய்கின்றன. எந்த சிக்கலும் இல்லாமல் நீர் பங்கீடு முறைப்படுத்தப்பட்டுள்ளது. ஏன்? நமது பிரம்மபுத்திரா நதியே இந்தியா, வங்கதேசம், திபெத் ஆகிய நாடுகளுக்கிடையே முறையாக நீரைப் பங்கீடு செய்கின்றது. தீஸ்டா நதி நீரையும் வங்கதேம் பகிர்ந்துகொள்கிறது. அண்டை நாடுகளில் பாயும் சிந்து நதி மற்றும் கங்கை-பிரம்மபுத்திரா-மேகனா படுகை என்பதெல்லாம் அண்டைநாடுகளுடன் தீர்க்கப்பட்டு உரிய நீர்வரத்து கிடைக்கின்றது. ஆனால் தமிழகத்துக்கு மட்டும் நதிநீர்ப் பிரச்சினையில் எதுவும் தீர்ந்தபாடில்லை.
இந்தியாவிலும் நதிநீர் சிக்கல்கள் வட இந்தியாவிலும், தக்காண பீடபூமி மாநிலங்களிலும் நடுவர் மன்றங்கள் அமைக்கப்பட்டு விரைவாக தீர்ப்புகளையும் பெற்று நீர்ப் பகிர்மானத்தை எந்தவித சர்ச்சைகள் இல்லாமல் மாநிலங்கள் இடையே ஒப்பந்தங்கள் செய்து நடைமுறைப்படுத்தப்படுகிறது. ஆனால் காவிரி நடுவர் மன்றத்துக்கு மட்டும் மத்திய - கர்நாடக அரசுகளும் வாய் மூடி மௌனியாகவே இருக்கின்றன. வன்சதாரா நதிநீர் பிரச்சினை ஒடிசா-ஆந்திரப் பிரதேசம் இடையில் சிக்கலாக உள்ளது. இது குறித்து விசாரிக்க 2010ல் நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது. மகாதாயி / மண்டோவி நதிநீர் சிக்கல் மகாராஷ்டிரா, கோவா, கர்நாடகம் ஆகிய மாநிலத்துக்கு இடையே நிலவுகிறது. இதையும் விசாரிக்க 2010ல் நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது. ஏற்கனவே நர்மதா ஆற்றுப் பிரச்சினைக் குறித்து குஜராத், மகாராஷ்டிராம், மத்தியப் பிரதேசம், இராஜஸ்தான் இடையே பிரச்சினையாகி, 1979ல் நடுவர் மன்றம் தீர்ப்பை அளித்தது. மகாராஷ்டிரம், ஆந்திரப் பிரதேசம், கர்நாடகம், மத்தியப் பிரதேசம், ஒடிசா ஆகிய மாநிலங்களுக்கிடையில் நடந்த கோதாவரி நதிநீர் பிரச்சினையிலும் 1980ல் நடுவர் மன்றம் தீர்ப்பு வழங்கியது. அதைப் போலவே கிருஷ்ணா நதிநீர்ப் பிரச்சினையில் மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கிடையே நடந்த பிரச்சினையில் 1976ல் நடுவர் மன்றம் தீர்ப்பு வழங்கியது. ஆனால் காவிரிக்கு மட்டும் தீர்ப்பு வந்தும், நடைமுறைப்படுத்தாமல், காவிரி ஒரு கேள்விக் குறியாக உள்ளது.
இவ்வளவு நியாயங்கள் தமிழகத்துக்கு இருந்தும் காவிரி பிரச்சினையில் தமிழகத்துக்கு தண்ணீர்விட மறுத்து; கர்நாடக முதல்வர் சித்தராமைய்யா, காவிரி ஆற்றின் குறுக்கே 5700 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்த சிக்கல் கொழுந்துவிட்டு எரியும் போதே, மேகதாட்டில் அணை கட்டுவேன் என்று கொக்கரிக்கின்றார். பெங்களூர் நகரத்திற்கு குடிநீர் காவிரியிலிருந்து பெறுவது ஒப்பந்தத்துக்கு முரணானது. ஆனால் காவிரியிலிருந்து பெங்களூருவுக்கு குடிதண்ணீரை எடுப்பதை நிறுத்தாமல் சென்று கொண்டு தான் இருக்கின்றது. அது மட்டுமல்லாமல் மேகதாட்டிலிருந்து இனிமேல் தண்ணீரும் 400 மெகாவாட் மின்சாரமும் தயாரிக்க கர்நாடகா திட்டமிட்டுள்ளது. இதனால் மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீர் குறையும்.
மேட்டூர் அணையிலிருந்து கடந்த 78 ஆண்டுகளில் 15 தடவை மட்டுமே மேட்டூர் அணை ஜூன் 12ஆம் நாள் திறக்கப்பட்டது. அதுகூட கடுமையான வெள்ளப் பெருக்கால்தான் உபரி தண்ணீரால் திறக்கப்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டது. மற்ற சமயங்களில் காலதாமதத்தில் மேட்டூர் அணை திறக்கப்பட்டது. மேட்டூர் அணையைத் திறக்க குறைந்த அளவு 75 டி.எம்.சி. தண்ணீர் அணையில் இருக்க வேண்டும். இல்லையென்றால், பாசனத்துக்கு தண்ணீர் திறந்துவிட முடியாது.
காவிரி சிக்கலில் இன்னொரு அபத்தத்தையும் சொல்லியாக வேண்டும். முன்னாள் பிரதமர் தேவகவுடா உண்ணாவிரதம். 1996ல் காவிரிப் பிரச்சினையில் தமிழ்நாடு, புதுவை, கேரளத்தை எதிரிகளாக சேர்த்து பெங்களூர் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். அந்த வழக்கு நிலுவையில் இருக்கும்போதே பிரதமர் பொறுப்பையும் எப்படி ஏற்க முடிந்தது? 1996ல் தேவ கவுடாவை எதிர்த்து பிரதமர் பதவியில் இருக்க தகுதியற்றவர் என Quo Warranto ரிட் மனுவை தாக்கல் செய்தவுடன் அலறியடித்து தன்னுடைய மனுவை திரும்பப் பெற்றார். பிரதமர் பொறுப்புக்கு வந்தபின்னும் தமிழகத்தை எதிரியாகப் பார்த்தவர் தேவ கவுடா. முன்னாள் பிரதமர் சலுகைகளைப் பெற்றுக்கொண்டு இன்றைக்கு பொதுவான நபராக இருந்து, காவிரிப் பிரச்சினையை மாநிலங்களிடைய மத்தியஸ்தம் செய்யவேண்டியவர், வாட்டாள் நாகராஜன் போல உண்ணாவிரதம் இருப்பது முன்னாள் பிரதமருக்கு அழகா? அது மட்டுமா? இந்திய உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்த வெங்கட்ராமைய்யாவும், கர்நாடகத்துக்கு ஆதரவாக குரல் கொடுத்தார். இப்படி அரசியல் சாசன கடமைகள், மரபுகள், பண்பாடுகளை கடைப்பிடிக்காத நபர்கள் கர்நாடகத்தில் காவிரிக்கு முரட்டுத்தனமாக அர்த்தமற்ற முறையில் நடந்துகொள்வதையும் மத்திய அரசு பார்த்துக்கொண்டுதான் இருக்கின்றது. உச்சநீதிமன்றம் ஜல்லிக்கட்டு கூடாது என்று சொன்னவுடன் மத்திய அரசு என்ன சொன்னது? உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்கவேண்டும் என்று சொன்னது. ஆனால் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை ஏன் மத்திய அரசு மதிக்கவில்லை? இப்படியும் மத்திய அரசு முரணாக நடந்துகொள்கிறது. எல்லாம் தேர்தல் அரசியல்.
பிரதமர் மோடியின் மாநிலமான குஜராத்துக்கு நர்மதை ஆற்றின் தண்ணீர் செல்கின்றது. அதில் ஏதாவது சிக்கல் வந்தால் மோடி குரல் கொடுக்கின்றார். நர்மதை ஆறு மத்திய பிரதேசம், மகராஷ்டிரம், குஜராத், இராஜத்தான் வரை செல்கின்றது. அதில் ஏதாவது சிக்கல் ஏற்பட்டால் தான் முதல்வராக இருந்தபோது குஜராத்துக்கு குரல் கொடுத்தார். ஆனால் தமிழகத்தின் உரிமைகளின் நியாயங்களை கண்டுகொள்ளாமல் கர்நாடக அரசைப் போல மத்திய அரசு நடந்துகொள்வதுதான் கொடுமையிலும் கொடுமை. பன்மையில் ஒருமை எங்கே இருக்கின்றது? மாற்றான் தாய் போக்கில் நடந்துகொண்டால் வேற்றுமையில் ஒற்றுமை எப்படி வலுப்பெறும்? பல்வேறு மொழிகள், இனங்கள், கலாச்சாரங்கள் கொண்ட இந்தியாவில், கர்நாடகா, மத்திய அரசு போல நடந்துகொண்டால் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும் என்பதை டெல்லி பாதுஷாக்களும் உணரவேண்டும். காவிரி, முல்லைப் பெரியாறு, பாலாறு, சிறுவாணி, பம்பாறு, நெய்யாறு, பரம்பிக்குளம்-ஆழியாறு, பாண்டியாறு-புன்னம்புழா, பொன்னியாறு, தென்பெண்ணை, அச்சன்கோவில்-பம்பை-வைப்போறோடு இணைப்பு என்ற பிரச்சினைகள், பிரச்சினைகளாகவே பல ஆண்டுகளாக உள்ளன. இதற்கு எப்போது தீர்வோ?
ஜூன் இறுதியில் தொடங்கி ஆகஸ்ட், செப்டம்பர் தொடக்கம் வரை குற்றலாத்தில் சாரல் சீசன் தமிழர்களை மகிழ்விக்கும் காலமாகும். அதே ஜூன் இரண்டாவது வாரம் வந்துவிட்டாலே காவிரி டெல்டா மக்களுக்குக் காவிரியில் தண்ணீர் வராமல் திண்டாடும் சீசனும் தொடங்கிவிடும். இது முடிவில்லா சோகக் கதையாகத் தொடர்கிறது.

இப்படியான நிலையில் குறைந்தபட்சம் கிடைக்கின்ற நீரை சேமிக்கவும் அதனால் ஏற்படும் பயன்பாட்டையும் நாம் நினைவில் கொள்ளவேண்டும். 
காவிரி ஆறு கரூரிலிருந்து திருச்சி வரை அகன்ற காவிரி ஆறாக உள்ளது. அதனால், காவிரியின் இரு கரைகளையும் சுமார் 10லிருந்து 15அடி வரை உயர்த்தி தடுப்பணை மிக எளிதாக கட்டலாம்.

பயன்கள்:-
1. ஆற்றின் இரு கரைகளை 15அடி உயர்த்தி சாலைகள் அமைத்து, போக்குவரத்து நெரிசலை வெகுவாக குறைக்கலாம்!
2. 15அடிகள் உயர்த்தி நீர் தேக்கி வைக்கும் போது தஞ்சையில் முப்போகம் தங்கு தடை இன்றி விளையும்!
3. ஒரே ஒரு முறை #காவிரி நீர் மற்றும் மழை நீர் கொண்டு தேக்கி வைத்தால், அங்குள்ள மண் மூலம் அத் தண்ணீர் கிரகிக்கப் பட்டு, அடுத்த மூன்றாண்டுகளுக்கு நிலத்தடி நீர் பஞ்சமே இருக்காது.
4. விவசாய நிலங்கள் விளை நிலங்களாக மாறும் போது அது சார்ந்த.இஞ்சினியரிங் படித்த மாணவர்களுக்கு ஏகப்பட்ட தொழில் வாய்ப்புக்கள் அமையும்!
6, ஆங்காங்கே இரு கரைகளுக்கு இடையே பாலங்கள் கட்டி, போக்குவரத்து தூரங்களை குறைக்கலாம். அத்துடன் இரு ஊர்களுக்கும் இடையே உள்ள பொருட்களை மிக எளிதாக பண்டம் மாற்றிக் கொள்ளலாம்!
7. இந்த நீண்ட தடுப்பணையில் மீன்கள் வளர்க்க ஏற்பாடு செய்யலாம். அதன் மூலம் அரசு மிகப் பெரும் வருவாய் ஈட்டலாம்!
8. மிகப் பெரிய அளவில் நடக்கும் மணல் கொள்ளை தடுப்பணை கட்டி விட்டால், கனவில் கூட நடக்காது.
9. கரூர், திருச்சி, தஞ்சை ஐந்தே ஆண்டுகளில் முக்கிய நகரங்களில் ஒன்றாகி விடும்.
காவிரி உபரிநீர் மற்றும் மழை நீரைச் சேமிக்க, கரூர் மாவட்டம் மாயனூரில் தடுப்பணை கட்டியும், 1.05டி.எம்.சி தண்ணீரைத்தான் சேமிக்க முடிந்தது. மீதமுள்ள நீர் அணைத்தும் வீணாகக் கடலுக்குச் செல்கின்றது. திட்டங்களை ஒழுங்குபடுத்தி இந்நீரைச் சேமித்து வைத்திருந்தால் காவிரிநதி தீரத்தில் உள்ள தென்கரை வாய்க்கால், கட்டளை மேட்டு வாய்க்கால், கிருஷ்ணராயபுரம் வாய்க்கால், புதுக்கட்டளை மேட்டுவாய்க்கால் மட்டுமல்லாமல் மேலும் ஏழு தடுப்பணைகள் கட்டி வீணாகக் கடலுக்குச் சென்ற நீரை சேமித்திருக்க முடியும்.

காவிரியின் இன்றைய நிலை:
காவிரி நீர் பங்கீட்டில் தமிழகத்துக்கும், கர்நாடகத்துக்கும் இடையேயுள்ள சிக்கலில், காவிரி நீரில் கேரளாவுக்கும், புதுச்சேரிக்கும் இந்த பிரச்சனையில் உரிய நீராதாரப் பங்குண்டு. காவிரியில் ஒட்டுமொத்தமாக, குறைந்தபட்சம் எவ்வளவு நீர் உருவாகிப் பெருகுகிறது என்ற அடிப்படையில் Cauvery Water Dispute Tribunal (CWDT) 2007ல் நீர் பங்கீடு பற்றிய தீர்ப்பை வழங்கியது. இந்த காவிரி நீர் பங்கீட்டுத் தீர்ப்பாயம் 1901ம் ஆண்டு முதல் 1972ம் ஆண்டு வரை வருடந்தோறும் காவிரியில் உற்பத்தியாகும் நீர்வரத்து குறித்து ஆராய்ந்தது. அதன் வழியே பருவ மழையானது 50 சதவீதம் மட்டுமே பெய்கையில் கூட குறைந்தபட்சம் காவிரியில் 740 டி.எம்.சி தண்ணீர் வரத்து இருக்கும் என்று கண்டறிந்த்து. 
தமிழ்நாட்டில் கீழ் அணைக்கட்டு வரை காவிரியில் பாயும் மொத்த, குறைந்த பட்ச நீர் 740 டி.எம்.சி அளவு என்று கணக்கிட்டது தீர்ப்பாயம். இந்த ஒட்டுமொத்த நீர் அளவை கொண்டு தமிழகத்துக்கு 419 டி.எம்.சி, கர்நாடகத்துக்கு 270 டி.எம்.சி, கேரளாவுக்கு 30 டி.எம்.சி, புதுச்சேரிக்கு 7 டி.எம்.சி, மீதமிருக்கும் 14 டி.எம்.சி யை இயற்கை வளத்திற்காக என்று பங்கிட்டது தீர்ப்பாயம்.

மேலும் தமிழகத்துக்கு கர்நாடகம் 192 டி.எம்.சி வழங்க வேண்டும் என்றும், மாத வாரியாக எவ்வளவு திறக்க வேண்டுமென்று கணக்கிட்டு ஒரு உத்தரவை தீர்ப்பாயம் வெளியிட்டது.
அதன்படி ஜுன் மாதத்தில் 10 டி.எம்.சி, ஜூலை மாதத்தில் மாதத்தில் 34 டி.எம்.சி, ஆகஸ்ட் மாதத்தில் 50 டி.எம்.சி, செப்டம்பர் மாதத்தில் 40 டி.எம்.சி, அக்டோபர் மாதத்தில் 22 டி.எம்.சி, நவம்பர் மாதத்தில் மாதத்தில் 15 டி.எம்.சி, டிசம்பரில் மாதத்தில் 8 டி.எம்.சி, ஜனவரி, பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் ஒவ்வொரு மாதமும் தலா 2.5 டி.எம்.சி வழங்கவேண்டும் என்று கூறப்பட்டது. அந்த உத்தரவுக்கு எதிராக நான்கு மாநிலங்களும் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து அது இன்றும் முடிந்தபாடில்லை.
இந்தப் புள்ளி விபரங்களில் ஒரு குழப்பம் ஏற்படலாம். 50% பருவ மழை பெய்தால் காவிரியில் மொத்தம் 740 டி.எம்.சி இருக்கும் என்கிறது கணிப்பு. அந்த 740 டி.எம்.சி நீர் முழுவதும் கர்நாடகத்தின் நீர்பிடிப்பு பகுதிகளில் இருந்து காவிரிக்கு கிடைக்கும் என்கிற அடிப்படையில் இல்லை.

காவிரி நீரில் கர்நாடகத்தின் பங்கு 270 டி.எம்.சி, தமிழ்நாட்டின் பங்காக கொடுக்க வேண்டியது மேலும் 192 டி.எம்.சி என்றால், காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலிருந்து காவிரியில் நீர்வரத்து 462 டி.எம்.சி என்று அர்த்தம். தமிழ்நாட்டுக்கு காவிரியில் இருந்து கிடைக்க வேண்டிய 419 டி.எம்.சி யில் கர்நாடகாவிலிருந்து 192 டி.எம்.சி கிடைக்கிறது என்றால், மீதம் 277 டி.எம்.சி தமிழகத்தில் பெய்யும் பருவ மழையால், தமிழகத்தின் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் இருந்து காவிரியில் சேரும் நீரின் மூலமாக கிடைக்கிறது எனத் தெரிகிறது. தமிழ்நாடு (277 டி.எம்.சி), கர்நாடகம் (462 டி.எம்.சி) நீர் பிடிப்பு பகுதிகளில் இருந்து 689 டி.எம்.சி நீர் காவிரிக்கு கிடைத்தால், கேரள நீர் பிடிப்பு பகுதிகளில் இருந்து 51 டி.எம்.சி நீர் காவிரிக்கு கிடைக்கிறது. அதில் இருந்து கேரளாவுக்கு 30 டி.எம்.சி நீர் பகிரப்படுகிறது. மிச்சம் 7 டி.எம்.சி நீர் புதுச்சேரிக்கும், 14 டி.எம்.சி நீர் இயற்கை வளத்திற்கும் கிடைக்கிறது.
இதுதான் CWDT எனப்படும் காவிரி நீர் பங்கீட்டு தீர்ப்பாயம் வழங்கியுள்ள பங்கீட்டு முறை.
காவிரியில் கர்நாடக பகுதியில் பெறப்படும் நீர், மேற்குத் தொடர்ச்சி மலை காவிரி நீர்பிடிப்பு பகுதிகளான ஹசன், கூர்க், மைசூரு போன்ற பிரதேசங்களின் வழியே தென்மேற்குப் பருவமழை மூலமாக கிடைக்கிறது. இந்தப் பருவ மழையானது ஜூன் மாதத்திலிருந்து செப்டம்பர் மாதம் வரை நீடிக்கும். இந்த பருவமழை நீர் கேரளாவின் பருவ மழை வாயிலாகவும் அதன் நீர்ப் பிடிப்பு பகுதிகளில் இருந்து காவிரியில் சேர்கிறது. அதனால் கேரளாவுக்கும் காவிரி நீரில் பங்கு இருக்கிறது. மலையிலிருந்து கீழே சமவெளியில் காவிரி நதி இறங்கியபின் பெரும்பாலும் தமிழகத்தில், அக்டோபர் முதல் டிசம்பர் வரை பெய்யும் வடகிழக்கு பருவ மழையில் வரும் நீர் காவிரியில் சேர்கிறது. இப்படி பருவ மழைகளினால் காவிரியில் வந்து சேரும் நீர் 227 டி.எம்.சி தான், கர்நாடகத்திலிருந்து தமிழகத்துக்கு நீரை (192 டி.எம்.சி) விட அதிகம்.
ஆனால் தமிழகத்தில் பெய்யும் வடகிழக்குப் பருவமழை மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்யும் தென்மேற்கு பருவமழை இவை பொய்த்தாலோ, குறைந்தாலோ தமிழகத்துக்கு காவிரியில் இருந்து கிடைக்கும் நீர் மிகவும் குறைந்து விடுகிறது. அதேசமயம் குடகில் தென்மேற்கு பருவமழையும் குறைந்தால் நீர் பற்றாகுறை இன்னும் அதிகமாகிறது. அந்த சமயத்தில் CWDT நிர்ணயித்தபடி தமிழகத்துக்கு தர வேண்டிய பங்கை கைவிரிக்கிறது கர்நாடகம். அந்த நேரங்களில் தமிழகம் உச்சநீதிமன்றத்தை நாடி நீரை போராடி பெற்றுக்கொள்கிறது. காவிரி நீரை CWDT கூறியவாறு பங்கீடு செய்ய காவிரி நீர் மேலாண்மை வாரியம் ஒன்றை அமைக்க வேண்டும் என்று கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றம் கூறியது. 04/10/2016ம் தேதிக்குள் மேலாண்மைக்கு தத்தமது உறுப்பினர்களை நியமனம் செய்யவேண்டுமென்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இச்சமயத்தில் உச்ச நீதிமன்றம் குறித்த அளவு நீரை தமிழகத்துக்கு கர்நாடகம் வழங்கியவுடன், காவிரி நீர் மேலாண்மையை அமைக்கும்படி பணித்த தன்னுடைய ஆணையை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்திருக்கிறது.
இந்த நிலையில் தான் கர்நாடக அரசு, மேகதாது என்ற இடத்தில் காவிரி ஆற்றில் ஏறக்குறைய ரூ. 6000 கோடி செலவில் பிரம்மாண்ட அணை கட்ட முடிவு செய்துள்ளது. முக்கியமாக பெங்களூரு நகரத்திற்கு நீர் கிடைக்க வேண்டும் என்ற காரணத்திற்காக இந்த அணை கட்டப்படுவதாகவும், தமிழகத்துக்கு தர வேண்டிய 192 டி.எம்.சி பங்கு நீரை எந்தவித மறுப்பும், பாதிப்பும் இல்லாமல் இந்த அணை கட்டப்படும் என்று கர்நாடகம் கூறுகிறது. இந்த அணை 64 டி.எம்.சி நீரை தேக்கும் அளவுக்கு அமையும் என்று தெரிகிறது. ஆனால், சமீபத்தில் உச்ச நீதிமன்றம் ஒரு கருத்து தெரிவித்துள்ளது. அதில் தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நீருக்கு எவ்வித பிரச்சனையும் வராதெனில் மேகதாது அணையின் கட்டுமானத்தை தொடரலாம் என்று கூறியுள்ளது. இந்த அணையினால் தமிழக, கர்நாடக மாநிலங்களுக்கு இடையே மேலும் சச்சரவுகளை உருவாக்கும் என்றே தோன்றுகிறது.
குடகில் உற்பத்தியாகி, கர்நாடகத்தில் தவழ்ந்து, தமிழகத்தில் அலைபரப்பி நடந்து தனது கரத்தை கேரளத்துக்கு விரித்து தன் சுவர்களை புதுவையில் மிதித்து வங்கக் கடலில் இணையும் காவிரி இன்றைக்கு தவிக்கின்றது. தன்னுடைய இயற்கையான போக்கை கர்நாடகம் தடுக்கின்றது என்று காவிரி கண்ணீர் வடிக்கின்றது. இதைத் தீர்க்க வேண்டியவர்களும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள். தீர்ப்பின்படி 419 டி.எம்.சி. தமிழகத்திற்கும், இதில் கர்நாடக அணைகளிலிருந்து 192 டி.எம்.சி. என்றும் எஞ்சிய 227 டி.எம்.சி., காவிரிப் படுகையில் பெறக்கூடிய மழை, மற்றும் கசிவு நீர் ஆதாரங்களிலிருந்து பெறப்பட வேண்டும். கர்நாடகத்துக்கு 270 டி.எம்.சி.யும், கேரளத்துக்கு 30 டி.எம்.சி. யும், புதுவைக்கு 7 எடி.எம்.சி.யும், ஆற்றின் சுற்றுச் சூழல் போக்கிற்கு 10 டி.எம்.சி.யும், கடலில் நன்னீர் 4 டி.எம்.சி. கலக்க வேண்டும். இந்தச் சுற்றுச் சூழல் மற்றும் கடலைச் சேர்ந்த 14 டி.எம்.சி. தண்ணீர் மீன்வளத்தைக் காக்கவும் அறிவுறுத்தப்பட்டது. ஆனால் இவையெல்லாம் தீர்ப்பில்தான் உள்ளன. மதிக்கப்படவேண்டிய தீர்ப்பு ஏட்டுச்சுரைக்காய் ஆகிவிட்டது. இதை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றால் மத்திய அரசு மேலாண்மை வாரியம் அமைத்தால்தான் தீர்வு எட்டப்படும்.
இதிலும் சுணக்கங்களும் புறக்கணிப்புகளும் காட்டுவதில் அர்த்தமில்லை. 40 ஆண்டுகளுக்கு முன்னால் எப்படி ஹேமாவதி, கபினி அணைகளை கர்நாடகம் கட்டியதோ அந்த தைரியத்தில் இப்போது மேகதாதுவில் பெரிய அணையை கட்டி தமிழகத்துக்கு உரிமையான நீரை தடுக்க அனைத்து பணிகளையும் கர்நாடக அரசு செய்து வருவது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதாகும்.
காவிரி ஒரு சோகத் தொடர்கதையாக இல்லாமல் என்றைக்கு முற்றுப்பெறும்? இதுவே ஒவ்வொரு தமிழருடைய தவிப்பாகும்.

https://www.ietamil.com/opinion/cauvery-dream/ : கனவாகிப் போன காவிரி

BBC - MDMK மதிமுக பழைய சங்கதிகள்

https://www.bbc.com/tamil/articles/cpekp475v48o?fbclid=IwAR0AbwO3Tm8L7Jq2sNptv5Gz1mw9yjqMROo_gxGls02hTHu51CtQBCW3uPs