Tuesday, August 31, 2021

#தாய்_என்பவள்_சாதாரணமானவள்_அல்ல

 #தாய்_என்பவள்_சாதாரணமானவள்_அல்ல. நான் ஒரு கூட்டத்திலே குறிப்பிட்டது என் நினைவுக்கு வருகிறது. தாய்மார்களே நீங்கள் எல்லாம் நடமாடும் ஆலயங்கள். நான் உங்களிடம் வாக்குக் கேட்க வருகிற அரசியல்வாதிமட்டுமேயில்லை. ஆகவே, சத்தியத்திற்குச் சாட்சியம் சொல்லுகிறேன் என்று நீங்கள் எடுத்துக்கொள்ளலாம். நடமாடுகின்ற ஆலயங்கள் என்று நான் உங்களைச் சொன்னதற்குக் காரணம், ஆலயங்களுக்குக் கருவறைகள் உண்டு; உங்களுக்கும் கருவறைகள் உண்டு என்று குறிப்பிட்டேன் இதுவே எனது நம்பிக்கையாக இருந்து வந்திருக்கிறது.

(1989இல் கோவில்பட்டி சட்ட மன்ற தொகுதியில் தேர்தலில் போட்டியிட்ட போது எட்டையபுரம் கூட்டத்தில் 4-1-1989 தேதியில் நான் பேசியது….)
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
31-8-2021.

#திருநெல்வேலியில் -கன்னியாகுமரி சாலையில் மூன்றடைப்பு என்கிற இடத்தில், மற்றும் வேடங்தாங்கள் என

 திருநெல்வேலியில் -கன்னியாகுமரி சாலையில் மூன்றடைப்பு என்கிற இடத்தில், மற்றும் வேடங்தாங்கள் என

சில இடங்களுக்கு,அநேக வகையான நாரைகள் வந்து அமர்ந்திருக்கின்றன. ஆண்டு தோறும் எங்கிருந்தெல்லாமோ வருகின்றன ஊர் சுற்றிப்பார்க்க வேண்டும் என்கிற இவர்களுக்கு இருகிற ஆசைகூட, நம்மவர்களிலே அநேகருக்கு இல்லை என்பது வருத்தத்தக்கது.
31-8-2021.


#டெல்லி_மோதி_மகால்_உணவகம்:

 #டெல்லி_மோதி_மகால்_உணவகம்:

———————————————————

டெல்லி சென்றால் நேரம் கிடைக்கும்போது தர்யகஞ்சில் உள்ள மோதி மகாலுக்கு, இரவு உணவுக்கு செல்வது வாடிக்கை. இது பிரதமர்கள் நேரு, வாஜ்பாய், நடிகர் ராஜ்குமார் என பல ஆளுமைகள் வந்து பெரிய முற்றம் மாதிரி இடத்தில் அமர்ந்து அப்போது உணவருந்திய இடமாகும்.
மோதி மகால் 1950-60 களில் இருந்து டெல்லியின் முக்கிய உணவருந்தும் இடமாகும். டெல்லி செங்கோட்டை பக்கத்தில் பழைய டெல்லியில் சிறிய வெங்காயத்தோடு எலுமிச்சை கலந்து பெரிய கிண்ணத்தில் ( Bowl) வைத்திருப்பார்கள். அது அவ்வளவு ருசியாக இருக்கும்.
கடந்த1973 துவக்கத்தில் நாடாளுமன்றத்தில் 1960-70 களில் கடுமையான வாதங்களை வைத்தவரும், மத்திய நிதித்துறையின் ராஜாங்க அமைச்சருமான முக்கிய அரசியல் புள்ளி தாரரகேஷ்வரி சின்கா அம்மையார்.
இங்கு அழைத்து சென்றார். அதிலிருந்து இந்த உணவகத்திற்கு செல்வது வாடிக்கை.
ஒருமுறை வைகோவோடு 1998-காலகட்டத்தில் இந்த உணவு விடுதிக்கு, இரவு உணவுக்கு சென்றபோது தென்மேற்கே ஒரு மேசையை(Table) நோக்கி கைக்காட்டி வைகோ கூறினார்; 1981 காலகட்டத்தில் ஒரு முறை வாஜ்பாயும் அவர் நண்பர்களும் உணவருந்தி கொண்டிருந்தார்கள். அன்றைக்கு நானும் வந்திருந்தேன். இரண்டு மூன்று இளைஞர்கள் வாஜ்பாய் அமர்ந்திருந்த உணவு மேசைக்கு(Table) பக்கத்தில் அமர்ந்து சத்தம் போட்டு கொண்டிருந்தனர். வாஜ்பாய் அமைதியாக அவர்களைப் பார்த்து அந்த பக்கம் போங்கள் என்று கைக்காட்டி சொல்லிக் கொண்டு இருந்தார். அனால் அவர்கள் போகவில்லை. நான் எழுந்து போய் அவர்களிடம் சத்தம் போட்டு போக சொன்னேன் என்ற செய்தியை என்னிடம் வைகோ சொன்னார்.
1983-ல் ஒரு முறை இலங்கைத் தமிழரசு கட்சித் தலைவர் அமிர்தலிங்கம், சிவ சிதம்பரம், யோகேஸ்வரன், சம்பந்தனோடு இலங்கை தமிழர் பிரச்சனை துவக்கத்தில் டெல்லி சென்றபோது இந்த மோதி மகாலுக்கு இரவு உணவருந்த சென்றோம். அங்கே ஒருசேர பா.ஜ.க தலைவர்கள் அமர்ந்து இருந்தனர். இது அசைவ விடுதிதான் இருப்பினும் இந்த தலைவர்களில் ஒரு சிலர் சைவ உணவே உண்பார்கள் என்று யோசித்துகொண்டே இருந்தேன்.
அந்த சமயத்தில், அங்கே தமிழகத்தை சார்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஜனா கிருஷ்ணமூர்த்தி இருந்தார். அவருடன் வாஜ்பாய், அத்வானி, முரளி மனோகர் ஜோசி, சிக்கந்தர் பக்த், ஜே.பி.மார்ட்டின், சுந்தர் சிங் பண்டாரி, கே.ஆர்.மல்கானி, சுஷ்மா சுவராஜ், மதன் லால் குரானா, கல்யாண்சிங், விஜயராஜ சிந்தியாவும் இருந்தார்கள் என்று நினைவு.
ஜனா கிருஷ்ணமூர்த்தியிடம் அமிர்தலிங்கம் அவரோடு உடனிருந்த தமிழ் தேசிய கூட்டணித் தலைவர்களையும், என்னையும் அறிமுகம் செய்து வைத்தெல்லாம் இன்றும் நினைவில் உள்ளன.
மோதி மகாலுக்கு சென்றால் பட்டர் சிக்கன், தந்தூரி சிக்கன், டால் மக்கானி இப்படி பல உணவு வகைகளுடைய சுவை பாகம் அருமையாக இருக்கும். அந்த உணவினுடைய மணமும், காரமும் நம்மை உண்ணத்தூண்டும். அப்படியான உணவுவகைகள் மோதி மகாலில் கிடைக்கும்.
இந்த மோதி மகால் உணவகத்தை குண்டன் லால் குஜ்ரால் நிறுவினார்.
டெல்லியின் அடையாளம் இந்த மோதி மகால் உணவகம். கிட்டத்தட்ட 70 ஆண்டுகளுக்கு மேலாக பல்வேறு இந்திய ஆளுமைகள் கால்பதித்த உணவு விடுதி. சமீபத்தில் டெல்லிக்கு சென்றபோது பழைய டெல்லியில் இருந்த உணவு விடுதிக்கு செல்ல நேரம் கிடைத்தது. அங்கு வழக்கறிஞர், நண்பர் சுதர்சன் மேனனோடு சென்றுவந்தேன்.
அதே மணம், அதேசுவை.
தி.ஜானகிராமன் இதை பார்த்திருந்தால் இதையும் ரசித்து எழுதியிருப்பார்.
(# 3703, Netaji Subhash Marg, Daryaganj)
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
31-8-2021.

#டெல்லியில் அட்டைப் பெட்டி வியாபாரி பாதுகாப்பாக அட்டைப் பெட்டிக்குள்

 டெல்லியில் அட்டைப் பெட்டி வியாபாரி பாதுகாப்பாக அட்டைப் பெட்டிக்குள்….(படம்)

நாம் நாமாகவே இருப்போம்
நடப்பது எதுவாயினும்...!
30-8-2021.


#நான் நம்பிக்கை விதைகளை நாள்தோறும் எறிந்து வருகிறேன்

 நான் நம்பிக்கை விதைகளை நாள்தோறும் எறிந்து வருகிறேன். என் கண்ணுக்கு முன்பாகப் பச்சைப் பசேல் என்ற நாற்றங்கால்களும், விளைந்து செழித்துத் தெரிகின்ற மஞ்சள் நெல் மணிகளும் தாராளமாகத் தெரிகின்றன.

30-8-2021.


Monday, August 30, 2021

#“உண்ணும் சோறு பருகும்நீர்

 “உண்ணும் சோறு பருகும்நீர்

தின்னும் வெற்றிலையும் எல்லாம் கண்ணன்”

என நம்மாழ்வாருடைய பிரபந்தத்திலே இருக்கிறது என்று ஒருவர் எழுதி இருந்தார்.
இந்த வெற்றிலை என்பதற்கு, வெற்றிலை என்று பெயர் வந்ததற்குக் காரணம், அது வெற்றி தருகிற இலை என்பதால். வெற்றிய்லையிலே ஆண் வெற்றிலை, பெண் வெற்றிலை என்றே உண்டு.
மார்கோபோலோ தமிழ்நாட்டிற்கு வந்தபோது, புன்னைக்காயல் என்கிற ஊரில் அவருக்கு வெற்றிலை பாக்குத் தந்தார்கள்; வரவேற்றார்கள் என்று எழுதுகிறார்.ஆகவே வெற்றிலை அந்தக் காலத்திலே வழக்கத்திலே இருந்தது. மார்கோபோலோவே ஒரு குறிப்பு எழுதுகிற அளவிற்கு நமது இலைகளிலே வெற்றிலைக்கு ஒரு சிறப்பு இருந்திருக்கிறது.
30-8-2021.

#கிரா_2021_விருது_கோணங்கிக்கு:

 #கிரா_2021_விருது_கோணங்கிக்கு:

——————————————————-
கிரா விருது கடந்த 2020-லிருந்து, திரை கலைஞர் நடிகர் சிவகுமார் அவர்களின் முயற்சியில் சக்தி மசாலா நிறுவனர் துரைசாமி தம்பதியினர் வழங்கும் ரூ.5 லட்சம் பொற்கிழி, விருதை இந்தாண்டு கோணங்கிக்கு வழங்குகிறோம் என்று அறிவிக்கின்றோம்.
இதை கோவை விஜயா பதிப்பகம் அண்ணன் வேலாயுதமும், அடியேனும் ஒருங்கிணைத்தோம்.
தற்போது தமிழ் படைப்புலகில் பின்நவீனத்துவத்தில் தனக்கென ஒரு பாணியை வகுத்துக்கொண்டு அன்புக்குரிய கோணங்கி இயங்குகிறார். கிரா அவர் மீது அன்பையும், பாசத்தையும் கொட்டுவார். கிரா நம்மோடு இல்லாத இந்த நிலையில் இந்த அறிவிப்பு செய்யப்படுகிறது. கோணங்கிக்கு வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.

#கி.ரா விருது குறித்து இன்று அறிவிப்பு.


#KSRposting
30.08.2021

#விடுதலைப்_போரும்_தமிழ்நாடும்:

 #விடுதலைப்_போரும்_தமிழ்நாடும்:

—————————————————-
அன்று வீரபாண்டியக் கட்டபொம்மனின் குரலுக்குள் ஆங்கில ஏகாதிபத்திய எதிர்ப்புணர்வு வெடித்துக்கிளம்பியது. கி.பி.1700 – 1800 காலகட்டம் தமிழ்நாட்டின் எல்லாப்பகுதிகளிலும் இப்படி வெடித்துக் கிளர்ந்தது எதிர்ப்புக்குரல்.
பூலித்தேவன், ஒண்டிப்பகடை, கட்டபொம்மு, மாயூரம் நாகப்பன் படையாச்சி, சர்தார் ஆதிகேசவலு நாயக்கர், தீரர் சத்தியமூர்த்தி, இரட்டைமன்னர்கள் காத்தவராயன், சேந்தவராயன், பகதூர் வெள்ளையதேவன், வீரன் அழகுமுத்துக்கோன், விருப்பாட்சி கோபால நாயக்கர், தியாகி சீனிவாசராவ், தியாகி விஸ்வநாததாஸ், கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத், ரெபல் முத்துராமலிங்க சேதுபதி, வ.வே.சு.அய்யர், ஜெய்ஹிந்த் செண்பகராமன், ஊமைத்துரை, வீரன் சுந்தரலிங்கம், பொட்டிப்பகடை மருது சகோதரர்கள், சேதுபதி மன்னர், ராணி வேலு நாச்சியார், குயிலி,தீரன் சின்னமலை, திப்புசுல்தான், 1806 வேலூர் சிப்பாய்கள், பாளயங்கோட்டைச் சிப்பாய்கள் என்று பலர் அந்தக் காலப்பகுதி முழுவதும் வெள்ளையரை எதிர்த்து உயிர்நீத்த தமிழ்நாட்டு வீரர்களை சுதந்திரப் போர் வீரர்களாகக் கொண்டாடுகிறோம்.
கி.பி 16,17,18 ஆம் நூற்றாண்டு ஆகிய காலப்பகுதி தமிழ் மண்ணில் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்த காலம் ஆகும். ஐரோப்பாவிலிருந்து வணிக நோக்குடன் இந்தியாவுக்கு வந்த போர்ச்சுக்கல் கிழக்கிந்திய கம்பெனி, டச்சுக்கிழக்கிந்திய கம்பெனி போன்றவற்றை ஒடுக்கி விரட்டிய பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் நிறுவனம் தனக்கான ஒரே போட்டியாளனாக பிரெஞ்சு கிழக்கிந்திய கம்பெனியை மட்டும் கொண்டிருந்தது. தமிழ் மண்ணில் குறிப்பாக தென் பகுதியில் நாயக்க மன்னர்களின் ஆட்சி முடிவுக்கு வந்து கொண்டிருந்தது. மதுரை மைய அரசின் கட்டுப்பாட்டை இழந்த 72 பாளையக்காரர்களும் தாமே அவ்வப்பகுதிகளின் சுதந்திர அரசுகளெனத் தம்மை பிரகடனப்படுத்திக் கொண்டு வரிவசூல் செய்து ராஜ்ஜிய பரிபாலனம் செய்யத் துவங்கியிருந்த காலம்.
முரண்பாடு முற்றும்போது துணிவுடன் ஆங்கிலேயரை எதிர்த்து நின்ற பாளையக்காரர்கள் சுதந்திர போராட்ட வீரர்களாகின்றனர்.
நாகலாபுரம், மன்னார் கோட்டை, கோலார்பட்டி, செந்நெல்குடி, சாப்டூர், ஏழாயிரம் பண்ணை, காடல்குடி, குளத்தூர் பாளயங்களைத் தன்னுடன் இணைத்துக்கொண்டு கட்டபொம்மு களம் கண்டார். ஒரு குறிப்பிட்ட பாளையக்காரர் ஆங்கிலேயருக்கு உடந்தை என்றால் தனக்கு எதிரி என்று கட்டபொம்மு கருதி இயங்கியதால் அன்றைய காலகட்டத்தின் முக்கியமான சுதந்திர வீரனாகக் கட்டபொம்மு மதிக்கப்படுகிறான்.இந்த காலக்கட்டங்கள் சுதந்திரப் போராட்டத்தின் வீரியமிக்க பக்கங்களாக அமைவதை வரலாற்றில் பார்க்கிறோம்.
வலுவான கூட்டணி அமைத்த கட்டபொம்முவை (மருது சகோதரர்களையும் சந்தித்தவர்) முறியடிக்கப் போதிய படைபலம் இல்லாததால் அவரை பேச்சுவார்த்தைக்கு வரச்சொல்லி இங்கும் அங்குமாக அலைக்கழித்து 1799 மே மாதத்தில் திப்புசுல்தான் முறியடிக்கப்பட்ட பிறகுதான் அங்கிருந்த படைகள் முழுமையாக பாஞ்சாலங்குறிச்சிக்குத் திருப்பப்படுகின்றன. கடுமையான சண்டைக்குப் பிறகு பாஞ்சாலங்குறிச்சி கோட்டை தகர்க்கப்பட்டது 17.10.1799 அன்று கட்டபொம்மன் கயத்தாற்றில் தூக்கிலிடப்பட்டார்.
அதன் பின்னர், சிவகங்கை - இராமநாதபுரம் பகுதியில் ஆங்கிலேயருக்கு எதிராக வாளேந்தி நின்ற மருது சகோதரர்களின் படைகள் முறியடிக்கப்பட்டு 1801 அக்டோபரில் திருப்பத்தூரில் தூக்கிலிடப்பட்டனர். மேற்கு மண்டலத்தில் தீரன் சின்னமலை 1805 ஜூலையில் சங்ககிரியில் தூக்கிலிடப்பட்டார். ஆரம்ப எழுச்சிகள் ஒரு வழியாக ஒடுக்கப்பட்டுவிட்டன என்று ஆங்கிலேயர் கருதிய நேரத்தில் 1806 ஜூலை 10 ஆம் நாள் வேலூர் கோட்டைக்குள் இருந்த தமிழ்ச் சிப்பாய்கள் ஆங்கிலேயருக்கு எதிராக ஆயுதக் கிளர்ச்சியில் இறங்கினர். எட்டு மணி நேரத்தில் அக்கிளர்ச்சி அடக்கப்பட்டாலும் அதன் வீச்சு இன்னும் நூறு ஆண்டுகளுக்கு இந்திய மண்ணில் இருந்து கொண்டிருந்தது.
ராணுவத்துக்குள் புதிய தொப்பி அறிமுகம் மற்றும் அதன் வழி கிறித்துவமயமாக்கிவிடுவார்கள் என்கிற அச்சம் இக்கிளர்ச்சிக்கு ஒரு உடனடிக் காரணம் என்றாலும் அடிப்படையான வேறு சமூகப் பொருளாதாரக் காரணங்கள் ஆகும். பிரிட்டிஷாரின் கடுமையான வரிவிதிப்புக் கொள்கை காரணமாகத் தமிழ்மண்ணில் எழுந்த பஞ்சங்கள் மக்களைக் கடுமையாகப் பாதித்தன. 1783,1792,1807 ஆகிய ஆண்டுகளில் தமிழ்நாட்டில் கடுமையான பஞ்சங்கள் தாக்கியது "தாது வருடப் பஞ்சம்" ; பஞ்சங்களைத் தொடர்ந்த பட்டினிச்சாவுகளும் வறுமையின் தாண்டவமும் சிப்பாய்களின் மனங்களில் கோபத்தை உண்டாக்க ஒரு முக்கிய காரணம். பாளையங்கள் எல்லாம் அழிக்கப்பட்ட உடனடிக்காலமாக அது இருந்தது. பதவியும் அதிகாரமும் இழந்திருந்த பாளையக்காரர்கள் மற்றும் அவர்களது வாரிசுகள் பழிவாங்கக் காத்திருந்தனர். திப்பு கொல்லப்பட்ட பிறகு அவரது மகன்களும் உறவினர்களும்வேலூர்க்கோட்டைக்குள்ளேயே ஹைதர் மகால், திப்பு மகால் என்று அவர்களுக்காகப் புதிதாக கட்டப்பட்ட மாளிகைகளில் தங்க வைக்கப்பட்டிருந்ததும், கலகத்திட்டம் அவர்களுக்கு முழுமையாகத் தெரிந்திருந்தது என்பது அவர்களின் ஆசி இருந்தது என்பது குறிப்பிடத்தக்க அம்சங்கள். அக் கோட்டைக்குள் வீரர்களாக இருந்தவர்கள் பல நூறுபேர் கட்டபொம்மனின் படை கலைக்கப்பட்ட பின் வீட்டுக்கு அனுப்பப்பட்ட சங்கரன்கோவில் (பழைய நெல்லை மாவட்டம்) வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள்.
வேலூர் கலகம் அடக்கப்பட்ட பிறகும் அதே ஆண்டில் பாளையங் கோட்டையிலும் ராணுவத்தில் கலகம் ஏற்பட்டு அது சில மணி நேரங்களில் அடக்கப்பட்டது.பாளையக்காரர்களின் எழுச்சியும் வேலூர் சிப்பாய்களின் எழுச்சியும் என்றென்றும் மங்கா ஒளி விளக்காக சுதந்திரத்துக்கான போராட்டத்துக்கு வழிகாட்டிக் கொண்டிருக்கும். ஆனால் இப்போராட்டங்கள் பின்னர் எழுதப்பட்ட இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் சேர்க்கப்படவில்லை.
மீண்டும் ஒரு எழுச்சி ஏற்பட தமிழ்நாடு 100 ஆண்டுகள் காத்திருக்க வேண்டியதாயிற்று. 1905 இல் கர்சன் பிரபு செய்த வங்கப்பிரிவினையை ஒட்டி வீறு கொண்டெழுந்த சுதேசி இயக்கத்தின் குரலை தமிழகத்தில் வ.உ.சி எதிரொலித்தார்‌. பாரதியின் வார்த்தைகளில் சொல்வதானால், திருநெல்வேலி கலெக்டர் விஞ்ச் ஸ்ரீ சிதம்பரம் பிள்ளைக்குச் சொன்னது:
"நாட்டி லெங்கும் சுதந்திர வாஞ்சையை
நாட்டினாய் - கனல்-மூட்டினாய்
வாட்டியுன்னை மடக்கிச் சிறைக்குள்ளே
மாட்டுவேன் - வலி- காட்டுவேன்"
கலெக்டர் வின்சுக்கு ஸ்ரீ சிதம்பரம் பிள்ளை சொல்லிய மறுமொழி:
சதையைத் துண்டு
துண்டாக்கினுமுன்னெண்ணம்
சாயுமோ?- ஜீவன் ஓயுமோ?
இதயத்துள்ளேயிலங்கு மஹாபக்தி
யேகுமோ? - நெஞ்சம்- வேகுமோ?
இந்தியாவின் முதல் தொழிலாளர் அரசியல் வேலைநிறுதத்தை முன்னின்று வழிகாட்டி,தலைமை ஏற்று நடத்தியவர் வ.உ.சி. கூலி உயர்வு,வேலை நேரம் போன்ற தங்கள் கோரிக்கைகளுக்காகப் போராடி வந்த தூத்துக்குடி கோரல் மில் தொழிலாளிகள் 27.02.1908 அன்று வேலை நிறுத்தம் செய்தனர்.தூத்துக்குடி மக்கள் வ.உ.சி. யின் உரைகளைக் கேட்கத் தெருக்களில் திரண்டனர். கடையடைப்புச் செய்யப்பட்டது. ஆங்கிலேயர்களுக்கு சவரம் செய்ய நாவிதர்கள் மறுத்தனர். சலவை செய்ய சலவைத்தொழிலாளிகள் மறுத்தனர். ஊருக்குள் குடியிருக்கப் பயந்து ஆங்கில அதிகாரிகள் இரவு நேரங்களில் கப்பல்களில் குடும்பத்தினருடன் தூங்கினர்.
பேச்சுவார்த்தைக்காக என வ.உ.சியை திருநெல்வேலிக்கு அழைத்த கலெக்டர் விஜ்ச் நயவஞ்சகமாக அவரைக் கைது செய்தான். 1908 மார்ச் 12-ம் தேதி கைது. அன்றே திருநெல்வேலி போர்க்களமானது. மக்கள் தெருக்களில் காவல்துறையோடு சண்டையிட்டனர். உதவி கலெக்டர் ஆஷ் கைத்துப்பாக்கியால் சுட்டார். போலீஸ் துப்பாக்கிச் சூடும் நடந்தது. நான்கு பேர் கொல்லப்பட்டனர். ஒருவர் பட்டியல் பிரிவைச் சேர்ந்தவர். ஒருவர் முகம்மதியர். ஒருவர் கோவில் பூசாரி. ஒருவர் ரொட்டிக்கடைத் தொழிலாளி. நான்கு பேரின் ரத்தமும் ஒன்றாகக் கலந்து நெல்லை மண்ணில் ஓடியது.
13-ம் தேதி தூத்துக்குடி கோரல் அலைத் தொழிலாளிகள் வ.உ.சி. கைதைக் கண்டித்துத் தாமாகவே வேலை நிறுத்தத்தில் இறங்கினர். தமது கோரிக்கைகள் ஏதும் இல்லாமல் தொழிலாளிகள் நடத்திய இந்தியாவின் முதல் அரசியல் வேலை நிறுத்தம் இதுதான். ஆனால் வரலாற்றில் இது பதிவாகவில்லை. திலகர் கைதை ஒட்டி பம்பாய் தொழிலாளர்கள் 1908 ஜூலையில் நடத்திய வேலைநிறுத்தமே முதல் அரசியல் வேலை நிறுத்தம் என எழுதப்பட்டுள்ளது.
1911 ஜூன் 17 அன்று திருநெல்வேலி கலெக்டராக இருந்த ஆஷ்துரை எனப்பட்ட ராபர்ட் வில்லியம் டிஎஸ்கார்ட் ஆஷ், மணியாச்சி ரயில் நிலையத்தில் சங்கர அய்யர் எனப்பட்ட வாஞ்சிநாதனால் சுட்டுக்கொல்லப்பட்டான்.
வாஞ்சி பயன்படுத்திய துப்பாக்கி ஜெர்மனியில் தயாரிக்கப்பட்ட பிரவுனிங் துப்பாக்கி ஆகும். இதனை பிரான்சிலிருந்து பொம்மைக்குள் வைத்து ரகசியமாகக் கப்பலில் பாண்டிச்சேரிக்கு அனுப்பியவர் மேடம்காமா. பாண்டிச்சேரிக்குச் சென்று வ.வே.சு அய்யரிடம் துப்பாக்கி சுடப் பயிற்சி எடுத்தார் வாஞ்சி. மேடம் காமா துவங்கி வாஞ்சி வரை அனைவரும் அபிநவபாரத் சபா அமைப்பின் உறுப்பினர்களாக இருந்தனர். ஒரு பெரிய வலைப்பின்னலின் பகுதியே வாஞ்சிநாதன்.
1885-ல் பம்பாயில் நடைபெற்ற இந்திய தேசியக் காங்கிரசின் முதல் மாநாட்டுக்கே தமிநாட்டிலிருந்து பதினேழு பேர் பிரதிநிதிகளாகக் கலந்துகொண்டனர். 1885 முதல் 1947 வரை காங்கிரஸ் இயக்கம் இடையறாது ஆங்கிலேயருக்கு எதிராகப் போராடி வந்ததுபோன்ற ஒரு படத்தை காங்கிரசார் மக்களுக்கு காட்டி வந்தாலும், உண்மையில் காங்கிரஸ் நடத்திய போராட்டங்கள் மூன்றே மூன்றுதாம். 1919-22 முதல் ஒத்துழையாமை இயக்கம். 1930-32 உப்புச் சத்தியாக்கிரகம். 1942 வெள்ளையனே வெளியேறு இயக்கம். முதல் ஒத்துழையாமை இயக்கத்தின் தாக்கம் தமிழ்நாட்டில் பெரிதாக இருக்கவில்லை. எல்லாப் போராட்டங்களும் அடக்கப்பட்டிருந்த காலம் அது. ஆனால் உப்புச் சத்தியாக்கிரகம் திருப்பூர் குமரனையும் கத்தியின்றி ரத்தமின்றி பாடலையும் நமக்குத் தந்துள்ளன. வேதாரண்யத்துக்கு ராஜாஜி தலைமையில் உப்புக் காய்ச்சப்போன நடைபயணம் பிரசித்தம். வெள்ளையனே வெளியேறு இயக்கத்துக்கு காந்திஜி அறைகூவல் விடுத்தாலும் அனைத்துத் தலைவர்களும் கைது செய்யப்பட்டுவிட்டதால் மக்கள் தாங்களே எடுத்து நடத்திய போராட்டமாக அது மாறியது.
1945-ல் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பர்மாவில் திரட்டிய இந்திய தேசிய ராணுவத்தில் எண்ணற்ற தமிழ் மக்கள் வீரர்களாகவும் படைத்தளபதிகளாகவும் பங்கேற்றுப் போரிட்டு மடிந்தனர். அவர்களின் தலைவராக எழுந்தவர்தான் லட்சிமிபாய் பெண்கள் படைப்பிரிவின் தலைவர் கேப்டன் லட்சுமி.
இப்படி பல நிகழ்வுகள்……..
30-8-2021.

#மகாகவி பாரதியார்

 நான் அவரிடத்தில் எனக்காக எதற்கும் சென்றதில்லை. நீண்ட நாளாக அவர் நமக்கு எதிராக இருந்தவர் என்ற உணர்வு மாத்திரம் எனக்கு இருந்தது. ஆனால் என்னால் அவர்களுக்கு பயன்கள் ஏற்பட்டதுண்டு. இந்த மாதிரி உணர்வுகளை – எதிர்வினைகள்,விருப்பு வெறுப்புகளை தாண்டி இருக்கிறேன்.

"அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் - அதை
அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்
வெந்து தணிந்தது காடு - தழல்
வீரத்திற் குஞ்சென்று மூப்பென்று முண்டோ?
தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்"
- மகாகவி பாரதியார்


#"She dwells with Beauty—Beauty that must die;

 "She dwells with Beauty—Beauty that must die;

And Joy, whose hand is ever at his lips
Bidding adieu; and aching Pleasure nigh,
Turning to poison while the bee-mouth sips:"
Melancholy is the happiness of being sad.

#KSRposting
29.08.2021

#Before the Indian government declared Tamil as a classical language

 Before the Indian government declared Tamil as a classical language, Dr. George Hart from UC Berkeley sent this letter to them. Interesting one……

I have been a Professor of Tamil at the University of California, Berkeley, since 1975 and am currently holder of the Tamil Chair at that institution. My degree, which I received in 1970, is in Sanskrit, from Harvard, and my first employment was as a Sanskrit professor at the University of Wisconsin, Madison, in 1969. Besides Tamil and Sanskrit, I know the classical languages of Latin and Greek and have read extensively in their literatures in the original. I am also well-acquainted with comparative linguistics and the literatures of modern Europe (I know Russian, German, and French and have read extensively in those languages) as well as the literatures of modern India, which, with the exception of Tamil and some Malayalam, I have read in translation. I have spent much time discussing Telugu literature and its tradition with V. Narayanarao, one of the greatest living Telugu scholars, and so I know that tradition especially well. As a long-standing member of a South Asian Studies department, I have also been exposed to the richness of both Hindi literature, and I have read in detail about Mahadevi Varma, Tulsi, and Kabir. I have spent many years — most of my life (since 1963) — studying Sanskrit. I have read in the original all of Kalidasa, Magha, and parts of Bharavi and Sri Harsa. I have also read in the original the fifth book of the Rig Veda as well as many other sections, many of the Upanisads, most of the Mahabharata, the Kathasaritsagara, Adi Sankara’s works, and many other works in Sanskrit.

I say this not because I wish to show my erudition, but rather to establish my fitness for judging whether a literature is classical. Let me state unequivocally that, by any criteria one may choose, Tamil is one of the great classical literatures and traditions of the world. The reasons for this are many; let me consider them one by one.
First, Tamil is of considerable antiquity. It predates the literatures of other modern Indian languages by more than a thousand years. Its oldest work, the Tolkappiyam, contains parts that, judging from the earliest Tamil inscriptions, date back to about 200 BCE. The greatest works of ancient Tamil, the Sangam anthologies and the Pattuppattu, date to the first two centuries of the current era. They are the first great secular body of poetry written in India, predating Kalidasa’s works by two hundred years.
Second, Tamil constitutes the only literary tradition indigenous to India that is not derived from Sanskrit. Indeed, its literature arose before the influence of Sanskrit in the South became strong and so is qualitatively different from anything we have in Sanskrit or other Indian languages. It has its own poetic theory, its own grammatical tradition, its own esthetics, and, above all, a large body of literature that is quite unique. It shows a sort of Indian sensibility that is quite different from anything in Sanskrit or other Indian languages, and it contains its own extremely rich and vast intellectual tradition.
Third, the quality of classical Tamil literature is such that it is fit to stand beside the great literatures of Sanskrit, Greek, Latin, Chinese, Persian and Arabic. The subtlety and profundity of its works, their varied scope (Tamil is the only premodern Indian literature to treat the subaltern extensively), and their universality qualify Tamil to stand as one of the great classical traditions and literatures of the world. Everyone knows the Tirukkural, one of the world’s greatest works on ethics; but this is merely one of a myriad of major and extremely varied works that comprise the Tamil classical tradition. There is not a facet of human existence that is not explored and illuminated by this great literature.
Finally, Tamil is one of the primary independent sources of modern Indian culture and tradition. I have written extensively on the influence of a Southern tradition on the Sanskrit poetic tradition. But equally important, the great sacred works of Tamil Hinduism, beginning with the Sangam Anthologies, have undergirded the development of modern Hinduism. Their ideas were taken into the Bhagavata Purana and other texts (in Telugu and Kannada as well as Sanskrit), whence they spread all over India. Tamil has its own works that are considered to be as sacred as the Vedas and that are recited alongside Vedic mantras in the great Vaisnava temples of South India (such as Tirupati). And just as Sanskrit is the source of the modern Indo-Aryan languages, classical Tamil is the source language of modern Tamil and Malayalam. As Sanskrit is the most conservative and least changed of the Indo-Aryan languages, Tamil is the most conservative of the Dravidian languages, the touchstone that linguists must consult to understand the nature and development of Dravidian.
In trying to discern why Tamil has not been recognized as a classical language, I can see only a political reason: there is a fear that if Tamil is selected as a classical language, other Indian languages may claim similar status. This is an unnecessary worry. I am well aware of the richness of the modern Indian languages — I know that they are among the most fecund and productive languages on earth, each having begotten a modern (and often medieval) literature that can stand with any of the major literatures of the world. Yet none of them is a classical language. Like English and the other modern languages of Europe (with the exception of Greek), they rose on preexisting traditions rather late and developed in the second millennium. The fact that Greek is universally recognized as a classical language in Europe does not lead the French or the English to claim classical status for their languages. To qualify as a classical tradition, a language must fit several criteria:
it should be ancient,
it should be an independent tradition that arose mostly on its own not as an offshoot of another tradition, and
it must have a large and extremely rich body of ancient literature.
Unlike the other modern languages of India, Tamil meets each of these requirements. It is extremely old (as old as Latin and older than Arabic); it arose as an entirely independent tradition, with almost no influence from Sanskrit or other languages; and its ancient literature is indescribably vast and rich. It seems strange to me that I should have to write an essay such as this claiming that Tamil is a classical literature — it is akin to claiming that India is a great country or Hinduism is one of the world’s great religions. The status of Tamil as one of the great classical languages of the world is something that is patently obvious to anyone who knows the subject. To deny that Tamil is a classical language is to deny a vital and central part of the greatness and richness of Indian culture.
(Signed:)
George L. Hart
Professor of Tamil
Chair in Tamil Studies.

#KSRposting
29.08.2021

#Mumbai today…

 Mumbai today….

#KSRposting

29.08.2021#தமிழக_நீர்நிலைகள்

 #தமிழக_நீர்நிலைகள்

—————————————-
தமிழக நீர்நிலைகள் படிப்படியாக அழிக்கப்பட்டுவருகின்றன. பண்டைய மன்னராட்சி காலத்தில் நீர்நிலைகளுக்கு முக்கியத்துவம் தரப்பட்டது. ஜனநாயக முறைக்கு திரும்பியப் பின் மக்களாட்சியில் நீர்நிலைகள் அழித்துக்கொண்டுதான் வருகிறோம். நீர்நிலைகள் மட்டுமல்ல இயற்கையின் அருட்கொடையான மலைகள், மணல் செல்வங்கள், வனங்கள் எல்லாவற்றையும் சூறையாடி விட்டோம். நீர்நிலைகள் இன்றைக்கு தமிழகத்தை பொறுத்த வகையில் 30,000 எண்ணிக்கையில்தான் இருக்கின்றன. இதையாவது பாதுகாப்போம்.
இதை குறித்தான எனது வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. தமிழக உரிமைகளுக்கும், நலன்களுக்கும் செயலாற்றுகின்றோம், பேசுகின்றோம், மொழியில் உரக்கச் சொல்கின்றோம், கவலை படுகின்றோம் இதுதான் இன்றைய நிலை. இது குறித்து சட்டமன்ற உறுப்பினருக்கும், நாடாளுமன்ற உறுப்பினருக்கும் என்ன கவலை இருகின்றது. ஏதோ வெற்றி கொள்ள வேண்டும், பதவி பெற வேண்டும், பதவி காலம் முடிந்தவுடன் கதை முடிந்தது என்று நடையை கட்ட வேண்டும். இதுதானே இன்றைக்கு பொறுப்பில் உள்ளவர்களுடைய கடமையாக இருக்கிறது.
சரி. இதற்கு மக்கள் சரியில்லை, அவர்கள் சரியான முடிவுகள் எடுக்காமல் ஓட்டுக்கு காசு வாங்கிக்கொண்டு முடிவுகளை எடுக்கின்றன. பிறகு இப்படிதான் முடிவுகள் இருக்கும்.
தமிழக நீர்நிலை குறித்தான பதிவு இது.
இயற்கை வழங்கிய நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டும் என்பது ஒவ்வொரு குடிமகனின் கடமையாகும். பண்டைய சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் இந்த நீர்நிலைப் பாதுகாப்பினை தங்களுடைய ஆட்சியின் முக்கியக் கடமை என்று எண்ணினார்கள்.
இந்த நிலையில் தான் கரிகாலன் கல்லணையைக் கட்டினான். வீராணம் ஏரி என்பதெல்லாம் இன்றைக்கு சான்றுகளாக உள்ளன. அறிவியல் ரீதியாக திட்டமிட்டு கட்டப்பட்டுள்ள மதுரையில் வண்டியூர் தெப்பகுளம், மீனாட்சியம்மன் கோவிலில் உள்ள பொற்றாமரைக் குளம் என்பதெல்லாம் இன்றைக்கும் பயன்பாட்டில் உள்ளன.
அதன் பின்னர், நாயக்கர் மக்கள் காலத்திலும் இந்த பணிகள் தொடர்ந்தன. கிராமப்புறங்களில் மன்னராட்சி காலத்தில், விவாசாய ஆயக்காட்டுத்தாரர்கள் நீர்நிலைகளை பாதுகாக்கக் கூடிய அளவில் குடிமராமத்துப் பணிகளை மேற்கொண்டார்கள்.
கூட்டுறவு முறையில் ஒற்றுமையாக கிராமப்புறங்களில் நீர் நிலைகளின் கரைகளை உயர்த்தவும், மதகுகளை அவ்வப்போது சரி செய்யவும், குளங்களை தூர்வார வேண்டும் என்று அடிப்படைப் பணிகளை திட்டமிட்டு செய்தனர்.
இந்த பழமையான பணிகளை பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில், அதிக உணவு தானிய உற்பத்தி என்ற கொள்கையின் அடிப்படையில், இந்த திட்டத்தை அப்போதே விரிவுப்படுத்தப்பட்டது.
மேலும் 1846இல் குடிமராமத்து பணிகளை எழுத்துப்பூர்வமான நடவடிக்கையை கொண்டு வந்தது. 1930ல் மெட்ராஸ் வாட்டர் போர்டு ஆக்ட் என்ற சட்டத்தினைக் கொண்டுவந்து இந்த பணிகளை மேலும் வேகப்படுத்தினர். இதை முதன்முதலாக தஞ்சை மாவட்டத்தில் பிரிட்டிஷ் அரசு 1905ல் குடிமராமத்தை விழாக்கோலத்தில் துவக்கி வைத்தது. அப்போது இதை நீர்க்கட்டு என்று அழைப்பது உண்டு.
பிற்காலத்தில் அன்றைக்கு இருந்த சென்னை மாகாணத்தின் 12 மாவட்டங்களுக்கும் இது விரிவுபடுத்தப்பட்டது. இந்த திட்டத்தின் வளர்ச்சிக்காக 1940இல் பிரிட்டிஷ் அரசின் தலைமைப் பொறியாளர், நீர்ப்பாசனம் மற்றும் பொதுப்பணித்துறைக்கு 1940ல் நிர்வாக ரீதியாக மாற்றியதெல்லாம் வரலாற்றுச் செய்திகள். இப்படியான நீர் நிலைகள் பல காணாமல் போய்விட்டன. இருப்பவைகள் பாராமரிப்பில்லாமல் போய்விட்டன. இது தான் இன்றைய நிலை. இந்த அவலத்தை போக்கி நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டுமென்பது அவசர, அவசியமாகும்.
தமிழகத்தின் குளம், ஏரிகள், நீர்நிலைகள் பாதுகாப்பு குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் எனது வழக்கு
--------------------------------------
Public Interest Litigation on water storages problem
--------------------------------------
தமிழகத்தில் 1947ல் நாடு விடுதலை பெற்ற போது 65,000 ஏரி, குளங்கள், நீர் நிலைகள் இருந்தன. சுயநலப் போக்கோடு இந்த குளங்களை சமூக விரோதிகள் கபளீகரம் செய்துவிட்டனர். இதில் பாதியளவு எண்ணிக்கையான நீர்நிலைகளே தற்போது உள்ளது. தமிழக அரசு பொதுப் பணித் துறை ஒப்புக்கு பராமரித்து வரும் ஏரிகள் 39,202 என கணக்கில் உள்ளது. 18,789 நீர்நிலைகள் நூறு ஏக்கர் பரப்பில் அப்போது அமைந்திருந்தது. உள்ளாட்சி அமைப்புகள் 20,413 ஏரிகள், குளங்கள், நீர் நிலைகளை தன்னுடைய நிர்வாகத்தின் கீழ் பராமரிக்கிறது.
ஆனால், இவையாவும் கணக்கில் மட்டுமே உள்ளதே அன்றி ஆயக்காட்டுதாரர்களுக்கு பயன்படுத்தும் அளவில் பராமரிப்பு இல்லாமல் உள்ளது. குடிமராமரத்துப் பணிகளும், கடந்த 40 ஆண்டுகளில் சரியாக நடத்தப்படவில்லை. இயற்கை வழங்கிய நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டும் என்றும் இதற்கான மேலாண்மை கொள்கையும் இன்றைக்குள்ள சூழ்நிலையில் வகுக்க வேண்டுமென்றும் மூன்று மாதத்திற்கு முன்னால் தமிழக அரசுக்கு கடிதம் எழுதியதையும், தமிழக அரசு அந்த கடிதத்தின்படி நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் இது குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய ஆணையை பெறுவேன் என்று என்னுடைய சமூக வலைத்தளப் பதிவுகளில் மூன்று மாதங்களுக்கு முன் பதிவிட்டேன்.
அதன்படி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த என் மனுவினை இணைத்துள்ளளேன்.
இந்த மனுவில் நீர்நிலைகளை பற்றி விரிவான விவரங்களும், அதன் வரலாறும், குடிமராமரத்து, ஆயக்காட்டு, தமிழகத்தில் சமூக விரோதிகளால் சீரழிக்கப்பட்ட சில நீர்நிலைகளை பற்றியும் விரிவாக தொகுத்துள்ளேன்.
இது ஆங்கிலத்தில் சிறு நூலாக வெளியிடவும் திட்டமிட்டுள்ளேன்.
••••••
IN THE HIGH COURT OF JUDICATURE AT MADRAS
(SPECIAL ORIGINAL JURISDICTION)
W.M.P.No. of 2017
In
W.P. No. 36135 of 2015
AFFIDAVIT OF K.S.RADHAKRISHNAN
1. I K.S.Radhakrishnan, S/o K.V.Seenivasan, aged 61 years, residing at 4/359, Sri Chaitanya Avenue, Anna salai, Palavakkam, Chennai - 600041 do hereby solemnly and sincerely affirm and state as follows.
2. I am the petitioner herein. I am personally acquainted with the facts deposed to here below.
3. I submit that I am an advocate. I have been a political and social activist from 1972. I submit that I am a columnist as well. I have edited more than 15 books regarding Human rights, Environment, Politics, History, etc., I have published several articles apropos water resources.
4. I submit that I filed WP (Civil) No. 668 of 2002 before the Hon’ble Supreme Court of India seeking nationalization of rivers and praying for linking of Ganges – Cauvery – Vaigai – Tamirabarani and Neyyaru (Kanyakumari District). I have alos filed several Public Interest Litigations before the Hon’ble Supreme Court of India and also before this Hon’ble Court.
5. I submit that W.P.No.36135 of 2015 has been filed by the 1st respondent. Though the writ petition relates to restoration of a water body in Erode District, this Hon’ble Court was pleased to enlarge the scope of the writ petition, appointed an amicus curiae and has passed orders directing the Government to prevent deterioration of water bodies, to reclaim water bodies and to provide a mechanism for protection of water bodies. The Secretary to Government, Public Works Department has filed a detailed counter affidavit and the same has been adopted by the Secretary to Government, Revenue Department and the District Collectors. The typed set of papers filed on behalf of the Government contains details of Tanks under the control of bodies such as Public Works Department, Rural Development and Panchayat Department and Town Panchayats.
6. I submit that the compliance report filed on behalf of the State Government apropos an order dated 06/08/2014 in W.P. (MD) No. 1496 of 2014 reveals the laxity of the part of the Government. The steps taken by the Government for the contemplated work to preserve the water bodies appears to be cosmetic. G.O.Ms.No.540 Revenue Department dated 04/12/2014 filed in the typed set of papers filed by the Government contains the mechanism said to have been established by the Government at the Taluk level for preservation of water bodies. It only illustrates that the Government is not serious on the issue.
7. I submit that there are several publications containing details of the glories of rivers, tanks and the nature of the water which were available to the public free of contamination. Many well meaning public men have highlighted the importance of preserving water bodies by contributing various articles in periodicals and newspapers. These publications have not been made for any publicity or any collateral purpose but in genuine public interest. I am therefore seeking leave of this Hon’ble Court to highlight certain relevant facts which have come to light thanks to publications by such public interested citizens.
8. I submit that The Hindu (English) dated 05/11/2016 contains the story of seven water bodies around Chennai. According to the report;
(a) 80% of the Villivakkam Lake which had 214 acres in 1972 is reduced to an extent of 20 acres only.
(b) Many commercial establishments and residential apartments have come into existence in the 600 acre Korattur Lake and the Lake is slowly disappearing.
(c) The Narayanapuram Lake has now been split into two. A 200 Feet road, a Badminton Court and a Temple have come into existence in the water body and the water body is disappearing.
(d) The story of Pallavaram periyaeri is also disturbing. 70% of the area has gone for residential development and 20% area is used as garbage dump by the Municipality.
(e) The Chittlapakkam lake has been reduced to 40 acres from 80 acres.
(f) Apropos Pallikarnai Marsh, 6000 Hectares of Marsh Land is reduced to 600 hectares.
(g) The same is the story of Tirupananthal Lake.
9. I submit that a report in the Tamil daily, The Hindu dated 22/11/2016 contains the present pitiable condition of Vandalur Tank. According to the report the total extent of the tank was 102 acres. The tank is encroached and has become a dumping ground for waste. The canals which bring water to the tank have been completely blocked. This is the order of the day.
10. I submit that an article in the Hindu dated 09/04/2017 under the caption Kudimaramathu: A much needed revival or water down revamp highlights massive corruption by politicians and officials siphoning of 50% of the monies allotted for renovation of water bodies.
(i) Kudimaramathu literally means maintenance and repair (of water bodies) by people. Kudi means farmers/people and maramathu means repair. This ancient concept of participatory water management by farmers got watered down by the Madras Water Board Act of 1930 and Later by Grow More Food Campaign of 1846 during the British Period.
(ii) A dedicated person, 'Neerkattu' kept a close watch on the water level of small tanks in villages and channelized water to individual tanks. Villagers shared the produce with him. They got together to perform repair and maintenance to keep the water bodies in act.
(iii) But things changed with the entry of British as a management of tanks went to the Chief Engineer for Irrigation of Public Works Department, in 1940.
(iv) As the water bodies were verified with the government, their maintenance became a government responsibility. Village property became government property and local responsibility became government responsibility. This led to neglect and determination of water bodies.
(v) This revived practice of kudimaramathu was introduced in the composite Thanjavur district by the PWD in 1905. It was extended to all districts in 1979.
(vi) Aim is to entrust accountability in execution of work through participatory approach.
(vii) Farmers will have greater interest in speedy and efficient execution of works.
Ayakattu means that the area limit where the water of the tank / river used for irrigating and serving.
11. I submit that a report in the Tamil daily, Dinamalar dated 09/04/2017 highlights the apathy on the part of the Government in preserving even big dams such as Mettur Dam. Steps have not been taken to remove the silt resulting in reduction of capacity of major dams in Tamil Nadu.
12. I submit that the neighboring states have taken several steps to preserve water bodies and to augment water resources. On the contrary in Tamil Nadu there is laxity even in preserving the existing water bodies. This has been highlighted in a full page report published in a Tamil Daily Dinakaran dated 04/09/2016.
13. I submit that another article in the tamil daily, The Hindu dated 11/12/2016 contains shocking details of waste of water for want of proper steps to store the rain water. It is stated that between 1990 and 2015 1165.71 TMC water has been lost on account of Government apathy in not maintaining the existing water storage facilities and in not taking steps to augment water resources.
14. I submit that Tamil Nadu Act 49 of 1974 was passed amending Tamil Nadu (Estates Abolition and Conversion into Ryotwari) Act 1948. The patta granted by the Government in respect of Private Tanks stood automatically cancelled and they became public tanks. However the Government has not taken any worthwhile follow up measure to identify the private tanks for which patta were given and to retrieve the same. When the private tanks have become public tanks it is the duty of the State Government to restore the same for public use. The Government have all the data in their possession. But no steps have been taken to give effect to the provisions of the Act.
15. I submit even after my representation dated 23/08/2016 the Government have not taken any steps to restore the private tanks for public use.
16. I submit that the Government itself has constructed bus stands and other institutions in water bodies. Several educational institutions and hospitals have encroached water bodies with the active connivance and co-operation of Government Officials.
17. I submit that the present state of Tamil Nadu had more than 60,000 water bodies at the time of independence. It is now reduced to one half. Presently a reliable statistics says nearly 39,202 lakes are controlled by PWD department, controlled by The Government of Tamil Nadu. But this figure is uncertain. Nearly 18,789 water storage bodies extend about hundred acres per tank. It is approximately 20,413 water storages are controlled by local bodies. In Cauvery Delta 12,000 water storages and 36 sub canals are running as per Government records. There is no proper maintenance and water management policy. The history reveals that the Chera, Chola and Pandiya Kings carefully planned canals and water storage facilities. Kallanai (Grand Anicut) is a telling example. It is the 4th oldest water diversion, water regulator structure in the world in use built by King Karikalan of the Chola Dynasty in the 2nd century AD. Veeranam lake built between 1907 and 1955 AD by Chola Kings is the main water source for the Chennai city. The temple tanks like Vandiyur Mariamman Theppakulam, Madurai and other Temple Tanks reveal the foresight of our fore- fathers to preserve the ground water facility.
18. I submit that it has become necessary to take necessary steps in this regard. Wherefore its prayed this honorable court direct the authorities to implement the following measures.
(i) To visit the old records, identify the water bodies lost and to retrieve the same.
(ii) The Government have to identify the private tanks which were given patta retrieve the same and convert it as public tanks available for public.
(iii) A proper mechanism should be put in every District for preservation of water bodies, de-silting and maintenance, every once in five years.
(iv) Tank Bunds and Sluices should be properly maintained and shutters should be periodically monitored by experts.
(v) A mechanism should be evolved to allow the agriculturists alone to use the sediments which can be used a high quality manure.
(vi) The local bodies should be empowered to regulate fishery rights and the villagers should not be denied their right to fish in local waters.
(vii) There should be committees at Village, Taluk and District levels and there should be ombudsman in every District to ensure that erring public servants are under proper control and render justice.
Solemnly affirmed at Chennai Before me
on this 1st day of July, 2017
and signed his name in my presence. Advocate Chennai.
———————————————————-
பல நூற்றாண்டுகளுக்கு முன்பு, தமிழ் நாட்டில் நமது முன்னோர்களால் அமைக்கப்பட்ட, சுமார்65,000 கண்மாய்கள், எளிதான பாசன விவசாயத்திற்கு மட்டுமின்றி, மீன் வளர்ப்பு, நிலத்தடி நீரப் பெருக்கம், கால் நடை வளர்ப்பு, வண்டல் மண் சேகரிப்பு, மரம் செடி கொடிகள் நிறைந்த இதமான சுற்றுச்சூழல் ஆகியவற்றிற்கும் பயன்படக் கூடியவை ஆகும். இவைகள், ஒட்டு மொத்தக் கிராமப்புற பொருளாதாரவளர்ச்சிக்கு அடிப்படை ஆதாரமான சமுதாயக் கட்டமைப்புகளாகும். வருடத்தில் சுமார் 40 நாட்களில் மட்டுமே மழை பெறும் பருவ மழைக்குப் பொருத்தமான நீர்ச் சேகரிப்புக் கட்டமைப்புகளான நமது கண்மாய்களின் சங்கிலித் தொடர் மழை நீர்ச் சேகரிப்புத் தொழில் நுட்ப்பத்தைப் பன்னாட்டு நீர்வள நிபுணர்கள் இன்றும் வியந்து போற்றுகின்றனர். ஆனால், இங்கு அதிகார வர்க்கத்தின் முன்னுரிமை வேறு என்பதால், கண்மாய்கள் பாழடைந்துவிட்டன.
பாரம்பரியமாக, சமுதாயச் சொத்துக்களாய் இருந்து வந்த கண்மாய்களை, வரிவருமானம் பெறும் நோக்கத்தில், அப்போதிருந்த பிரிட்டீஷ் அரசு அரசுடமைஆக்கியதோடு, அவற்றைக் "குடி மராமத்து" முறையில் மக்களே பராமரிக்க வேண்டும் என்றும் ஆணையிட்டது. நாடு விடுதலை அடைந்த பின்பும், விவசாயம் கட்டுபடியாக இருந்த காலம் வரை (உத்தேசமாக 1970 வரை), விவசாயிகளே கண்மாய்களை இயன்ற அளவு பராமரித்துப் பயன்படுத்தி வந்தனர். கண்மாயில் சேர்ந்துள்ள பயிர்ச் சத்துக்கள் நிறைந்த வண்டல் மண்ணை விவசாயிகள் எடுத்துச் சென்று தங்களது நிலங்களுக்கு இட்டு வந்ததால், விளைச்சல் கூடியதோடு, கண்மாய்கள் தூர் வாரப்பட்டதாகவும் ஆனது. பின்னர், போதிய கவனமின்றி அமைக்கப்பட்ட கிராமச் சாலைகள் போன்ற பணிகளால், நீர் வழித் தடங்கள் மறிக்கப்பட்டு பல கண்மாய்களின் நீர் வரத்து குறைந்தது. இதனால், பெரிய விவசாயிகள் கடன் வாங்கி கிணறுகளை வெட்டிப் பயிர் செய்ததால், கண்மாய் பராமரிப்பில் ஆர்வம் காட்டவில்லை. விளை பொருள்களுகளுக்கும் உரிய விலைகிடைக்காத நிலையில், அரசுக்குச் சொத்தான கண்மாய்களை அரசுதான் பராமரிக்க வேண்டும் என்று மேலோங்கிய கருத்தால், விவசாயிகள் கண்மாய்களின் பராமரிப்பில் அக்கரை கொள்ளவில்லை. இலவசங்கள் வழங்கி பாமரர்களைக் கவரும் உத்தியைக் கையாளத் தொடங்கிய மாநில அரசும் கண்மாய்களைக் கண்டு கொள்ளவில்லை. இதனால், கண்மாய்கள் தூர்ந்து போய், அவற்றின் மொத்தக் கொள்ளளவில் மூன்றில் ஒரு பங்கு குறைந்து விட்டது. வரத்துக் கால்வாய்கள் சீரழிவாலும், ஆக்கிரமிப்புகளாலும் பல கண்மாய்களில் பாசன விவசாயம் பொய்த்து விட்டன.
ஆனால், வெள்ளம் வந்தாலோ, வறட்சி ஏற்பட்டாலோ மத்திய அரசிடமிருந்து நிவாரண நிதியை வாங்கி, தேவையில்லாமல், கண்மாய்க் கரைகளை உயர்த்துவது அரசின் வாடிக்கை. அடுத்த மழைக்குக் கரைந்து மீண்டும் கண்மாய்க்குள் போகும்படி, கரைக்கு அருகிலேயே உள்ள வண்டல் மண்ணை எடுத்துக் கரையை உயர்த்தும் இந்தப் பணிகளால், ஆளும் கட்சியின் காண்டிராக்டர்களைத் தவிர எவருக்கும் பயன் கிடையாது என்பது அப்பாவி மக்களுக்குத் தெரிந்ததே. மண் மேடிட்டு முட்ப் புதர்கள் மூடிய வரத்துக் கால்வாய்களையோ, நீர்ப்பிடிப் பகுதிகளையோ சீர் செய்யும் அத்தியாவசிய பராமரிப்புப் பணிகளை மேற்கொள்வதில் காண்டிராக்டர்கள் கொள்ளை லாபம் சம்பாதித்துப் பகிர்ந்து கொள்ள முடியாது என்பதால், அதில் அரசு நிர்வாகத்திற்கு ஆர்வம் இல்லாது போயிருக்கலாம். இது போல், உட்க்கார்ந்து இளைப்பாரும் நூறு நாள் வேலைத் திட்டச் செலவிற்கும் கண்மாய்க் கரைகள்தான் கை கொடுக்கின்றன. இது வரை எங்கள் ஊர்க் கண்மாய்க் கரைக்காகச் செலவு செய்த பணத்தைக் கொண்டு கரையை இரும்பாலேயே கட்டியிருக்க முடியும் என்று நான் சந்தித்த விவசாயி மிகுந்த வேதனையுடன் கூறிய உண்மை இன்னும் என்னை வாட்டிக் கொண்டிருக்கிறது. இதன் ஆழத்தை இரு முறை தமிழ் நாடு அரசுக்கு நேரடியாகத் தெரிவித்தும் பலனில்லை. அரசின் சில திட்டங்கள், மக்களின் பணத்தை வீணாக்குவதோடு, கண்மாய்களை முடக்கிவிடும் அளவிற்கு அவலமானவையாகவும் உள்ளன.
ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக நிலைத்து நின்று பலனளித்துக் கொண்டிருந்த நமது பாரம்பரிய மழைநீர் சேமிப்புக் கட்டமைப்புகளான கண்மாய்களைத் தூர் வாரி, அவற்றை மீண்டும் முழுப் பயன்பாட்டிற்குக் கொண்டு வரக்கூடிய அறிவார்ந்த சிந்தனைக்கு மாறாக, "அங்கங்கே பெய்யும் மழை நீரை அங்கங்கே பயன்படுத்துவோம்" எனும் கோஷத்துடன், கண்மாய்களின் நீர்வடிப்பகுதி நிலங்களில் பண்ணைக் குட்டைகள், கசிவுநீர்க் குட்டைகள் மற்றும் கண்மாய்களுக்கு நீர் கொண்டு செல்லும் ஓடைகளுக்குக் குறுக்கே தடுப்பணைகள் எனப் புதிய கட்டமைப்புகளை அரசு பல கோடிகள் செலவு செய்து உருவாக்கியதால், அங்குள்ள பாரம்பரிய கண்மாய்களுக்கான நீர் வரத்து குறைந்து, அவற்றின் பயன்பாடும் குறைந்தன. இப்பணிகளால், கிணறுகள் வைத்துள்ள மிகச் சில வசதியான விவசாயிகள், உள்ளூர் அரசியல்வாதிகள் மற்றும் காண்ட்ராக்டர்கள் மட்டுமே பயனடைந்தனரே தவிர, அனைத்து விவசாயிகளுக்கும் பெரும் இழப்பே ஏற்பட்டுள்ளது. இது தவிர, சாலைகள் அமைப்பு, செங்கல் தயாரிப்பு போன்ற தொழில்களுக்காக, சட்ட விரோதமாக மண்ணை அள்ளியதில் பல கண்மாய்களில் பெரும் பள்ளங்கள் உருவாகிப் பாசனத்திற்கான நீர் குறைந்து விட்டது. இதைக் காரணமாக வைத்து, விவசாயிகள் தங்கள் நிலங்களுக்கு வண்டல் மண் எடுத்துச் செல்வதிலும் அரசு நடைமுறைக்கு ஒவ்வாதக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளதால், விவசாயிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
எக்காலத்திற்கும் ஏற்ற சிறப்பு மிக்க நமது கண்மாய்கள் போதிய பராமரிப்பின்றி சிதலமடைந்து வரும் நிலையைக் கண்டு கவலையுற்ற நீர்வள வல்லுனர்களும், தானம் அறக்கட்டளை போன்ற தொண்டு நிறுவனங்களும் நமது கண்மாய்களைப் புனரமைப்பு செய்து உரிய பயன்பாட்டிற்குக் கொண்டுவர வேண்டியதின் அவசியத்தைத் தொடர்ந்து வலியுறுத்தி வந்ததால், வெளி நாட்டு நிதி உதவியுடன் அண்ணா பல்கலைக் கழக நீர் வள மையத்தின் கண்காணிப்பில் நடை பெற்ற கண்மாய் சீரமைப்புப் பணிகளில் பெறப்பட்ட அனுபவங்களின் அடிப்படையில், கண்மாய்களைச் சீரமைக்க அரசு முன் வந்தது.
இதில் முக்கியமானது, உலக வங்கியின் பெரும் நிதி உதவியுடன் "IAM WARM" எனும் பெயரில் செயல் படுத்தப்பட்ட கண்மாய்கள் நவீனப்படுத்தும் திட்டமாகும். இத்திட்டத்தில், வழ்க்கம்போல் காண்டிராக்டர்கள் இலகுவாக பெரும் லாபம் ஈட்டக்கூடிய, அத்தியாவசியம் இல்லாத கரைகள் பலப்படுத்தும் பணிகள் மற்றும் தேவையற்ற மடைகள் சீரமைப்புப் பணிகள் மட்டுமே செயல்படுத்தப்பட்டுள்ளன. நமது மூதாதையர்களின் உயர்ந்த தொழில் நுட்பம் கொண்ட மடை அமைப்புகளை மாற்றி மிகுந்த செலவினை உடைய இரும்பு ஷட்டர்களை மாட்டி வைத்திருப்பது அபத்தனானதாகும். கண்மாயில் நீர் சேகரிப்பை உறுதி செய்யக்கூடிய வரத்துக் கால்வாய்களைச் சீர்மைக்கும் பணிகளையோ, ஆக்கிரமைப்புகளை அகற்றும் பணிகளையோ செயல்படுத்தவில்லை.
திட்டப் பணிகளில் விவசாயிகளை ஈடுபடுத்தும் நோக்கத்தில், உலக வங்கியின் நிபந்தனைப் படி, கண்மாய் சங்கங்கள் அமைக்கப் பட்டிருந்தாலும், விவசாயிகளின் கருத்துக்கள் புறம் தள்ளப்பட்டன. ஆய்வு செய்யப்பட்ட இரண்டு கண்மாய்களில், போதிய நீர் வரத்தில்லாத காரணத்தால், கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாகப் பயிரே செய்யப்படாமலிருந்தும், பெரும் நிதி செலவழிக்கப்பட்டு கரைகளும், மடைகளும் பலப்படுத்தப் பட்டுள்ளன. நீர் சேகரிக்கத் தேவையான முயற்சிகள் எதுவும் செய்யப்படவில்லை. ஒரு சிலரின் சுய லாபத்திற்காக மக்களின் பணத்தை வீணாக்கிய இந்த செயல் கண்டனத்திற்குரியதாகும். ஒரு கண்மாயின் நீராதாரத்திற்கு அடிப்படையான நீர்வடிப்பகுதிகளிலேயே (catchment areas) நீரைத் தடுப்பது கண்மாய்களை அழிப்பதற்குச் சமம்.
பண்னைக் குட்டைகள், ஓடைகளில் தடுப்பணைகள் அமைக்கும் போது, அதனால் கீழே உள்ள கண்மாய்களுக்கு நீர் வரத்து பாதிக்கப்படுமா என்பதை ஆராய்ந்து செயல்பட வேண்டும். பொதுவாக, இப்படிப்பட்ட கட்டமைப்புகளை கடலோரப் பகுதிகளுக்கு மேலுள்ள நிலங்களில் தான், கண்மாய்களுக்குப் பாதிப்பில்லாமல் செயல்படுத்த முடியும்.
கண்மாய்கள் நீர் வரத்து களை குறுக்கு நெடுக்காக அணை கட்டி பின் கண் மாய்க்கு நீ ர் போவதில்லை. கண்மாய்கள் சனவரி மாதமே காயும் நிலை. இவற்றை சரிவர கையாளா விட்டால் பாதிப்பு விவசாயிகள். சிலபகுதிகளில் நீ ர் ஓடை கள் குறைந்த பட்சம் ஆறுமாதம் நீர் வரத்து உண்டு. அதனை யும் குறுக்கே தடுத்து கண்மாய்கள் வரட்சியை தான் சந்திக்கும் நிலை.
பெரும் நிதியைச் செலவு செய்து, முக்கிய நோக்கத்தையே அடையாத இத்திட்டச் செயலாக்கத்தை உலக வங்கி புகழ்ந்திருப்பது வேதனைக்குரிய உள் நோக்கமாகவே தெரிகிறது. இந்நிலையில், உலக வங்கியின் இரண்டாம் கட்ட திட்டமும் ஒப்புதலாய் இருப்பது சமூக ஆர்வலர்கள் அனைவராலும் கண்காணிக்கப்பட வேண்டியதாகிறது. நமது பாரம்பரியமிக்கக் கண்மாய்களைச் சரியாகப் பராமரித்து கிராமப்புற வாழ்வாதாரத்தைக் காக்க வேண்டியது மாநில அரசின் தலையாய கடமையாகும். இனிமேலாவது, ஏற்கனவே முடிக்கப் பட்டுள்ள பணிகள் மீதான மதிப்பாய்வு அறிக்கைகளில் (Evaluation Reports) சுட்டிக்காட்டப்பட்ட குறைபாடுகள் மீண்டும் நிகழா வண்ணம் கண்காணிப்பது அவசியமாகும். போதிய நீர் பெறும் வாய்ப்புள்ள கண்மாய்களை மட்டும் தேர்வு செய்து முதற்கட்டத்தில் புனரமைப்புப் பணிகளை மேற்கொள்வதற்கு ஆவன செய்ய வேண்டும்.
ஈடுபாட்டுடன் விருப்பத்துடன் மனசாட்சியுடன் செயல்படும் அலுவலர்களைக் கொண்டு இது போன்ற பணிகளை செய்தால் தான் பலன் கிட்டும். கட்டுமானப் பணிகளில் தரம் இல்லாவிட்டால் வெளியே தெரிந்து விடும். மாட்டிக் கொள்வோம் என பயந்து பணிகள் மேற்கொள்வர். ஆனால் இது போன்ற நீர் பாசன பணிகளில் தவறு செய்தால் சமாளிக்க பல வழிகள் உள்ளதால் மோசமான நிலையில் அல்லது பணியே செய்யாமல பட்டியல் தயார் செய்யும் பணிகளே பல இடங்களில் நடக்கின்றன. எனவே தான் பயனாளிகள் பங்கிட்டுடன் பணிகள் செய்ய திட்டம் கொண்டு வந்தனர். அதிலும் பல ஓட்டைகள் இருந்ததால் அதிலும் வெற்றி கிடைக்கவில்லை. மனசாட்சியுடன் நேர்மையாக பணிகள் செய்தால் பெய்யும் மழைநீர் முழுவதையும் வீணாகாமல் சேமிக்கலாம் அதன் மூலம் உணவு உற்பத்தியை பெருக்கலாம்.
கர்நாடகா மற்றும் பிரிக்கப்படாத ஆந்திர மாநிலங்களில் சுமார் ஒரு லட்சம் கண்மாய்கள் உள்ளன. தானம் அறக்கட்டளையின் ஆலோசனைகளைப் பெற்று புனரமைப்புப் பணிகள் செம்மையாக நடைபெறுகின்றன. மத்திய அரசின் நூறு நாள் வேலை திட்டமும் கணமாய்கள் பராமரிப்பில் விவசாயிகளுக்கு சாதகமான பணிகளில் செயல்படுத்தப்படுகிறது. ஆனால், தமிழ்நாட்டில் நிலமை வேறு. இங்குள்ள ஐ.ஏ. எஸ் அதிகாரிகள் வித்தியாசமானவர்கள்.
பொது நலன் கருதி, நண்பர்கள் அனைவரும் இப்பதிவைப் பகிர்வு செய்யும்படி கேட்டுக் கொள்கிறோம்.

என் மண்…. என் பூமி….. #கரிசல்காடு

என் மண்…. என் பூமி….. #கரிசல்காடு  The beauty of village.  The beauty Of nature  Love of everything  village #கேஎஸ்ஆர்போஸ்ட்  #ksrpost  20-6...