#சாக்கு_மூட்டையில்_தூங்கும்_நூலக_புத்தகங்கள்
———————————————————-
கடந்த பல ஆண்டுகளாக விவசாய விளை பொருட்களை போல, சாக்கு மூட்டையில் தூங்கும் நூலக புத்தகங்கள். தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வட்டம் புதூர் கிளை நூலகம் 20.3.1958ம் ஆண்டு துவங்கப்பட்டது. ஆண்டுகள் 63 ஆகியும் புதூர் நூலகத்திற்கு விடிவு காலம் பிறக்கவில்லை. பாரதியின் எட்டையபுரம் அருகில் இருக்கும் புதூர் மிகவும் பின்தங்கிய மாவட்டத்தின் கடைகோடியில் உள்ளது. புதூர் பேரூராட்சியில் சுமார் 5 பள்ளிகள் உள்ளன. இந்த நூலகம் துவக்கப்பட்ட நாள் முதல் இன்று வரை ஒரே வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது. இந்நூலகத்தில் சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் உள்ளன. இந்நூலகத்திற்கு சொந்த கட்டிடம் இது வரை கிடையாது. இணையதள வசதி கிடையாது, புத்தகங்கள் வைக்க போதிய ரேக் வசதி கிடையாது, மழைக்காலங்களில் மழை நீர் கசிவு ஏற்பட்டு புத்தகங்கள் நனைகிறது. கட்டிடம் மிகவும் பழமையான கட்டிடம் என்பதால் காரை பெயர்ந்து விழுகிறது. புதிய இடம் மற்றும் கட்டிட வசதி கேட்டு 10 ஆண்டுகளாக கோரிக்கை….
#KSRposting
24.08.2021
No comments:
Post a Comment