——————————————————-
ஒவ்வொரு மனிதனுக்குள்ளேயும் ஒரு மனிதன்; கொலைகாரனுக்குள்ளேயும் ஒரு கவிஞன், திருடனுக்குள்ளே ஒரு வள்ளல்,ஊர்முழுவதும்சோரம்போனாலும் மனசுக்குப் பிடித்த ஒருவனுக்காக சுண்டுவிரலின் ஓரத்தையேனும் கறைபடாமல் காத்துக் கொண்டிருக்கும் விபச்சாரி.
வாழ்க்கை எவ்வளவோ சந்தர்ப்பங்களில் தன் அதிசயக் கோணத்தை அகலத்திறக்கிறது. எனக்குள்ளேயும் ஒரு மனிதன். இவன் என்னிலிருந்து அந்நியப்பட்டவனல்லன்.தேவதைகளி
டத்தில் தென்றலை அனுப்பு;தீமையைக் கண்டால் தீயினால் பொசுக்கு.
இவன் – இப்படி, ஆயிரமாயிரம் கட்டளைகளை எனக் கிட்ட மோசஸ் என்று எழுதி இருந்தார். இந்த நடைக்காக இந்த நல்லவரின் நளினத்தை பாராட்டுகிற அதே நேரத்தில்,ஒவ்வொருமனிதனுக்குள்ளேயும் ஒரு மனிதன் என்று சொன்ன அற்புதம் எனக்கு வெகுவாகப் பிடித்தது. காரணம் அதை விளக்க ஆரம்பித்ததே நாந்தான். ஒவ்வொரு மனிதனுக்குள்ளேயும் இருக்கிற மனிதனை எவன் பிடித்து வைத்துக் கொள்கிறானோ, அவன் வாழ்விலே வெற்றி பெறுவான் என்று நான் அடிக்கடி சொல்லி வருவேன்.
கிருஷ்ணசாமி ரெட்டியாரிடத்திலே அவர் நீதிபதியாக இருந்தாலும் அவருள் ஒளிந்து கொண்டிருப்பவன் ஆழ்வார்! மு.மு.இஸ்மாயில் இடத்திலே, அவர் நீதிபதியாக இருந்தாலும், அவர் மனதுக்குள் ஒளிந்திருப்பவன் கம்பன்!
இப்படி ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒருமனிதன்ஒளிந்துகொண்டிருக்கிறான் வெளி மனிதனைப் பிடிக்கிறவர்கள் வழுக்கி விழுந்து விடுகிறார்கள்; உள்மனிதனைப் பிடிக்கிறவர்கள் உயர்ந்து சிறக்கிறார்கள்.
No comments:
Post a Comment