Thursday, April 30, 2020

*Rish_Kapoor *

*Rish_Kapoor *

#ரிஷிகபூர்_மறைவுக்கு_ஆழ்ந்த #இரங்கல்கள்

கல்லூரி நாட்களில்,*பாபி*1973இல் பல முறை ரசித்து பார்த்த ரம்மியமான இந்தி திரைப்படம். ரிஷிகபூர்  அற்புதமான திரைக்கலைஞர்......


Rish_Kapoor (4 September 1952 – 30 April 2020)was an Indian actor known for his work in Hindi cinema.He received the National Film Award for Best Child Artist for his debut role in his father Raj Kapoor's 1970 film Mera Naam Joker.He had his first lead role as an adult, opposite Dimple Kapadia, in the film Bobby (1973), which won him the Filmfare Award for Best Actor.
(4 September 1952 – 30 April 2020)was an Indian actor known for his work in Hindi cinema.He received the National Film Award for Best Child Artist for his debut role in his father Raj Kapoor's 1970 film Mera Naam Joker.He had his first lead role as an adult, opposite Dimple Kapadia, in the film Bobby (1973), which won him the Filmfare Award for Best Actor.

இன்று காலையில் மும்பையில் ரிலையன்ஸ் மருத்துவமனையில் லுகேமியா புற்று நோயால் மரணமடைந்த பாலிவுட் நடிகர் ரிஷிகபூரின் உடலை வழக்கமாக செய்வது போல வீட்டுக்குத் தூக்கிச் சென்று சடங்குகள் நடத்தி இறுதிக் காரியங்களை செய்ய வேண்டாம் என்று மும்பை போலீஸார் கபூர் குடும்பத்தினரைக் கேட்டுக் கொண்டுள்ளனராம்.

மருத்துவமனையில் இருந்து அப்படியே அருகில் இருக்கும் சந்தன்வாடி இடுகாட்டில் தகனம் செய்துவிடலாம் என்று அட்வைஸ் செய்துள்ளனராம்.

ரிஷிகபூரின் மகள் ரித்திமா கணவர், மகளுடன் டெல்லியில் வசிக்கிறார். தந்தை இறந்த செய்தியைக் கேட்டுவிட்டு தற்போது மும்பைக்கு காரில் பயணம் செய்து வருகிறாராம். 1400 கிலோ மீட்டர் தூரம். எப்படியும் 18 மணி நேரமாகும் என்கிறார்கள்.

தனி பிளைட்டில் மும்பை செல்ல.. டெல்லியில் பல முக்கிய இடங்களிலும் கதவைத் தட்டியிருக்கிறது கபூரின் குடும்பம். அனுமதி கிடைக்கவில்லையாம்.. பாவம் அவர்கள்..

இந்நேரம் யாராவது ஒரு அரசியல்வியாதியாக இருந்திருந்தால் உடனடியாக அனுமதி கிடைத்திருக்கும். இவர் ஒரு சாதாரண பாலிவுட் நடிகர்தானே என்று திட்டவட்டமாக மறுத்துவிட்டார்களாம்.

தனி விமானத்தில் ஒரு குடும்பம் மட்டும்தான் போகப் போகிறது. அனுமதித்தால்தான் என்ன.. குறைஞ்சா போகப் போகுது.. 

இந்தக் குழப்பத்தினால் ரிஷியின் இறுதிச் சடங்கு எப்போது என்பது இப்போதுவரையிலும் திட்டவட்டமாகத் தெரியவில்லை.

https://www.facebook.com/100008390956876/posts/2708750486081290/?d=n


What did the first #PMQs of the 'hybrid' #UK_House_of_Commons look like?

What did the first #PMQs of the 'hybrid' #UK_House_of_Commons look like?

Our photographer was in the House of Commons Chamber yesterday to capture images of Prime Minister’s Questions with First Secretary of State Rt Hon Dominic Raab MP and the Leader of the Opposition Sir Keir Starmer MP.

This was the first PMQs since the House approved a motion to allow participation in questions remotely, and follows a great deal of work by Parliament’s Broadcasting Unit, Digital Service, and many other teams behind the scenes. ©UK Parliament / Jessica Taylor

Courtesy UK Parliament

#கேரள_அச்சன்கோவில்_பம்பை – #தமிழக_சாத்தூர்_வைப்பாறு_இணைப்பு #Pamba_Achankovil_Vaippar_link.

#கேரள_அச்சன்கோவில்_பம்பை – #தமிழக_சாத்தூர்_வைப்பாறு_இணைப்பு

#Pamba_Achankovil_Vaippar_link.
————————————————-
கேரளாவில் உள்ள பம்பை மற்றும் அச்சன்கோவில் ஆற்றுப் படுகையின் உபரிநீரைத் தமிழகத்தின் வைப்பாறோடு இணைக்கும் திட்டம் 1972லிருந்து மத்திய அரசால் பரிந்துரைக்கப்பட்ட, தமிழகம் பயன்பெறும் திட்டம் இதனால் கேள்விக்குறி ஆகிவிட்டது.  கடந்த 43வருடங்களாக விவாதிக்கப்பட்டு, மத்திய அரசும் இத்திட்டத்தை பரிந்துரைத்தது. கேரளாவின் ஒத்துழைப்பில்லாமல் இத்திட்டம் கிடப்பில் கிடக்கின்றது. 1983ல் அடியேன், நதிகள் தேசியமயமாக்கப்பட்டு கங்கை – மகாநதி – கோதாவரி – கிருஷ்ணா – பெண்ணார் – காவிரி – வைகை – தாமிரபரணி குமரிமாவட்ட நெய்யாறோடு இணைக்க வேண்டுமென்றும், அத்தோடு கேரளாவில் மேற்கு நோக்கிப்பாயும் நதிகளின் உபரி நீரை தமிழகத்துக்குத் திருப்புவதோடு, அங்குள்ள அச்சன்கோவில்- பம்பை நதிகள் தமிழகத்தில் உள்ள வைப்பாறோடு இணைக்கவேண்டுமென்ற எனது பொதுநல வழக்கில் உச்சநீதிமன்றம்,  “பயன்பெறும் வகையில் ஆக்கப்பூர்வமான வழிமுறைகளைக் காண’’மத்தியஅரசு ஒரு குழு அமைக்க வேண்டும் என்றும், அந்தக் குழு முறையாக அமர்ந்து நாடு எதிர்பார்க்கும் இந்த முக்கியப்பிரச்சனைக்கு அவசியம் தீர்வு காணவேண்டுமென்றும்” மிகத் தெளிவாக அறிவுறுத்தியது.
மத்திய அரசு, அன்றைய பிரதமர் இந்திராகாந்தியின் நேரடித் தலையீட்டில், 1972ல் அமைத்த நீர்பாசன குழுவின் அறிக்கை தொகுதி II பக்.384ல், கேரளாவில் மேற்கு நோக்கிப் பாயும் நதிகளிலிருந்து தண்ணீர் வீணாகக் கடலுக்குச் செல்கின்றது.  இதை தமிழகத்திற்குத் திருப்பலாம் என்று அப்போதே பரிந்துரை செய்தது. 4134.கி.யூ.மீ தண்ணீர் கடலில் கலப்பதாக இந்த அறிக்கை தெளிவுபடுத்தியுள்ளது. அந்த காலகட்டத்திலிருந்து இந்தப்பிரச்சனை இதுவரை 20சுற்றுகளுக்கு மேல் பேசப்பட்டும் மத்திய அரசின் முன்னிலையில் கேரள-தமிழ்நாடு மாநிலங்களுக்கிடையே எந்த முடிவுகளும் எட்டப்படவில்லை.

 அச்சன்கோவில் – பம்பை – வைப்பாறு இணைப்பால், விருதுநகர், திருநெல்வேலி தூத்துக்குடி மாவட்டங்கள் பாசன வசதி பெறும், குடிநீர் வசதியும் கிடைக்கும். இங்கு 500மெகாவாட் நீர்மின் திட்டத்தையும் ஏற்படுத்தி மின்சார உற்பத்தியையும் பெற முடியும். 1992-93 திட்டத்தின் படி இதன் மதிப்பீடு 1397.91 கோடிகள். எட்டுவருடங்களில் இந்தப்பணியை முடிக்கலாம் என்றும் திட்டமிடப்பட்டது.

17ஆண்டுகளுக்கு முன், வாஜ்பாய் பிரதமராக இருந்தபொழுது, சுரேஷ் பிரபு தலைமையில் இயங்கிய நதிநீர் இணைப்புக் குழு, பம்பை – அச்சன்கோவில் –  வைப்பாறு இணைப்பு பற்றி ஆய்வு செய்தது. பம்பை-கல்லாறு புன்னமேடு என்ற இடத்தில், 160மீட்டர் உயரத்தில் அணைகட்டுவதும், அதுபோல, அச்சன்கோவில் கல்லாறு நதியில் சித்தார்மூழி என்ற இடத்தில் 160மீட்டர் உயர அணைகட்டி, அந்த நதிநீர்களைத் தேக்கி, அச்சன்கோவில் அருகே 35மீட்டர் உயரத்திற்கு கிராவிட்டி அணைகட்டி, புன்னமேடு சித்தார்மூழி இரண்டு அணைகளையும் இணைத்து 5 மீட்டர் விட்டத்திற்கு சுரங்கம் வெட்டி, 8கி.மீ தூரம் சுரங்கம் வழியாக தமிழக எல்லைக்குவந்து மொத்தம் 550.68கி.மீ தொலைவில் வைப்பாற்றோடு அந்த தண்ணீரை இணைக்கலாம்.

செங்கோட்டை, தென்காசி, கடையநல்லூர், புளியங்குடி, சங்கரன்கோவில், திருவேங்கடம், வெம்பக்கோட்டை, அதன்வழியாக சாத்தூர் அருகாமையில் உள்ள வைப்பாற்றில் இணைந்து தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வழியாக கடலில் சேரும். இதுதான் அச்சன்கோவில் –பம்பை –வைப்பாறு இணைப்புத்திட்டம். இத்திட்டத்தின் வாயிலாக, சிவகாசி வடபுரத்திலும், தெற்கே கோவில்பட்டி வரை நீர்பாசனபரப்புக்கும், குடிநீருக்கும் பயன்பெறும் வகையில் கிளைக்கால்வாய்களும் இடம்பெறும். இந்த கால்வாய்களில் வரும் நீர்வரத்தை கிளைக்கால்வாய்களாக சிவகிரி, இராஜபாளையம், திருவில்லிபுத்தூர் வரை கொண்டு செல்லமுடியும்.
ஏற்கனவே திருவில்லிபுத்தூர் அருகே அழகர் அணைத்திட்டமும் பரிசீலனையில் இருக்கும்பொழுது, வைப்பாறு கிளைக்கால்வாய் சேர்ந்தால் நீர்வரத்து அதிகமாகும். நெல்லை மாவட்டத்தில் உள்ள அடவிநயினார் அணைக்கும், திட்டத்தில் உள்ள உள்ளாறு, செண்பகத்தோப்பு அணைகளுக்கும் நீர்வரத்து பெருகும்.

நெல்லை மாவட்டத்தின் கடையநல்லூர் – சங்கரன்கோவில் தெற்குநோக்கி கால்வாய் வெட்டினால், மேலநீலிதநல்லூர், மானூர் பகுதி வழியாகச் சென்று தாமிரபரணியில் இணைக்கலாம். மேலும் இந்தக்கால்வாய் தெற்கே நான்குநேரிவரை கொண்டு சென்று தற்போது பணி நடக்கின்ற தாமிரபரணி- கருமேனி ஆற்றோடும் சேர்க்கலாம். தூத்துக்குடி மாவட்டத்தில் விளாத்திகுளம் அருகே தெற்கு நோக்கி கால்வாய் வெட்டினால், எட்டையபுரம், ஒட்டபிடாரம் வரை சென்று தூத்துக்குடி நகருக்கே குடிநீர் வழங்கலாம். இத்திட்டத்தால் இவ்வளவு பயன்பாடுகள் உள்ளன. வீணாகக் கடலுக்கு செல்லும் நீரைப் பெறுவதற்குத்தான் அண்டை மாநிலம்,  ஹரியின் தேசமான கேரளாவிடம் மண்டியிடுகின்றோம். ஆனால், அரசியல் மனமாச்சர்யங்களைக் கடந்து ஒரு சொட்டுத் தண்ணீர் தமிழ்நாட்டுக்குத் தரமாட்டோம் என்ற தயாள மனதில்லாமல் அங்கு வரும் ஆட்சியாளர்கள் இருக்கின்றனர்.

அச்சன்கோவில் – பம்பை – வைப்பாறோடு இணைப்பது தமிழக மக்களிடமே இன்னும் விழிப்புணர்வு வராதது வேதனையைத் தருகின்றது. குமரி நெய்யாறு, நெல்லை மாவட்டத்தின் அடவிநயினார், உள்ளாறு, செண்பகத்தோப்பு, விருதுநகர் மாவட்டம் அழகர் அணைத்திட்டம் மற்றும் முல்லைப் பெரியாறு, பாண்டியாறு-புன்னம்புழா, ஆழியாறு-பரம்பிக்குளம், சிறுவாணி, பம்பாறு என அனைத்து பிரச்சனைகளிலும் தாராளமாகத் தண்ணீர் வழங்கலாம். வழங்க மனம் தான் கேரளாவுக்கு இல்லை.

இதுகுறித்து, கேரள முதல்வர் உம்மன்சாண்டி கேரள சட்டமன்றத்தில் பேசும்போது, “பம்பை மற்றும் அச்சன்கோவில் ஆறுகளைத் தமிழகத்தின் வைப்பாற்றுடன் இணைக்க முடியாது என்றும், முல்லைப்பெரியாறுக்குச் சொன்ன கற்பனை காரணமான பேரழிவு ஏற்படும் என்று குறிப்பிட்டுள்ளார். இதனால் குட்டநாடு பகுதி பாலைவனமாகிவிடும் என்றும், உபரி நீரை தமிழகத்திற்குத் திருப்பினால் கேரளத்தில் மீன்பிடிப்புத் தொழில் பாதிக்கும் என்ற விநோதமான காரணத்தையும் சொல்கிறார். கேரளா நினைத்தால் தான்  இந்தப்பிரச்சனையில் எதுவும் செய்யமுடியுமென்று சொல்லியுள்ளது வேதனையைத் தருகின்றது. அங்கு பொதுவுடைமைக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இதே பதில்தான். தமிழகமோ 20சதவீத உபரிநீரைத்தான் வைப்பாறு இணைப்புக்குக் கேட்கின்றது.

கேரள சட்டமன்றக் கூட்டத்தில்,  06-03-2015 அன்று கேரள ஆளுனர் உரையில், பம்பை அச்சன்கோவில்-வைப்பார்-இணைப்பு செயல்படுவதற்கான  வாய்ப்புகள் இல்லை என்று தெரிவித்துள்ளது. அந்த உரையில் கேரளா கோடைகாலங்களில் தண்ணீர் தட்டுப்பாட்டால் பாதிக்கப்பட்டுள்ளது என்றும், இதர்காக வாமானபுரம், அச்சன்கோவில், மீனச்சில், சாலியாறு நதிகளின் குறுக்கே புதிய அணை கட்டப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தப் புதிய அணையைக் கட்டுவதால், அச்சன் கோவில் ஆற்றின் தண்ணீர்வரத்து வரும் பகுதியில் தான் இந்த புதிய அணை கட்டப்படும். 

ஐரோப்பாவிலுள்ள யூகோஸ்லோவியா கேரள மாநிலத்தைப் போன்று மலைப் பிரதேசமாகும். அதற்கு அண்டை நாடான ருமானியாவுக்கு யூகோஸ்லோவியா தன் நாட்டிலுள்ள எஞ்சிய நீரை கொடுத்து உதவும்போது, இந்தியாவிலுள்ள ஒரு மாநிலத்தின் எஞ்சிய நீரை மற்ற மாநிலத்திற்குக் கொடுப்பதால் எந்தவிதமான சிக்கலும், பாதிப்பும் ஏற்படாது. இதைப் போன்று சோவியத் நாட்டிலுள்ள துருக்மேனியா மாநிலத்திலுள்ள கேரிகம் கால்வாய் அண்டை மாநிலங்களுக்கு எஞ்சிய நீரைக் கொடுத்து உதவி செய்கிறது. சோவியத் நாட்டிலுள்ள வட பகுதிகளில் பாயும் நதி நீர் தென் பகுதிகளுக்குத் திருப்பப்பட்டுள்ளது.

கேரளப் படுகையில் உள்ள பாண்டியாறு, புள்ளம்புழா, மோயாறு, சோலாத்திப் புழா, பன்சிகல்லா ஆகிய நதி நீர் மூலம் கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர் வரை பயன்பெறும். இதில் எஞ்சிய நீர் சுமார் 150 டி.எம்.சி. ஆகும். இந்த நீரில் சுமார் 18 டி.எம்.சி. நீரைத் திருப்பினால் 2.80 இலட்சம் ஏக்கர்களுக்கு பாசன வசதி கிடைக்கும். மற்ற நதிப்படுகையிலிருந்து கிழக்குமுகமாக தமிழகத்திற்குத் திருப்பினால் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர், தேனி, மதுரை, திண்டுக்கல் மாவட்டங்கள் வளம்பெறும்.

நாகர்கோவில், திருநெல்வேலி, விருதுநகர், சிவகாசி, இராஜபாளையம், தேனி, மதுரை, சிவகங்கை, திண்டுக்கல், பழநி, திருச்சி, பொள்ளாச்சி, கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய நகரங்கள் குடிநீர்வசதி பெறும். பம்பை – அச்சன் கோவில் – வைப்பாறு இணைப்பு திட்டத்தை மத்தியஅரசின் தேசிய நீர்மேம்பாட்டு ஆணையம் வரையறை செய்தது. இத் திட்டத்தால் தென்தமிழகப் பகுதிகள் பாசனவசதி பெறும் என்பதால் ஆர்வத்துடன் தமிழக அரசு ஒப்புதல் அளித்தது. ஆனால், உபரிநீரை வழங்கவேண்டிய கேரள அரசு இன்றுவரை ஒப்புதல் தராமல் இழுத்தடித்து வருகிறது.

கேரளத்தில் உற்பத்தியாகும் நதிநீரை முழுமையாகக் கேரள மக்கள் பயன்படுத்தவில்லை. அதிகமான மலைப் பிரதேசங்கள் இருப்பதால் விவசாய நிலங்கள் குறைவு. கேரள மாநிலத்தின் நீர்வளம் தமிழகத்தைவிட அதிகமானதாகும். தமிழ்நாட்டின்  நீர்வளம் 1,300 டி.எம்.சி. ஆகும். ஆனால், கேரளத்தின் நீர்வளம் சுமார் 2,500 டி.எம்.சி. ஆகும். இதில் சுமார் 1,100 டி.எம்.சி.க்கும் அதிகமான நீர் வீணாகி அரபிக் கடலில் சேருகிறது. (இந்தத் தண்ணீரின் அளவு மேட்டூர் அணையிலுள்ள நீரைப்போல சுமார் 11 மடங்கு ஆகும்.) கேரள மாநிலத்துக்குத் தேவையான நீர் அளவு 800 டி.எம்.சி. மீதமுள்ள நீரைத் தமிழகத்திற்குக் கொடுத்தால் சுமார் 8.20 லட்சம் ஏக்கர்கள் பாசன வசதி பெறும். இதனால் கேரளத்துக்கு எவ்விதப் பாதிப்பும் ஏற்பட வாய்ப்பு இல்லை.

கேரளத்தில் 85 மேற்கு நோக்கிப் பாயும் நதிகள் உள்ளன. 1,96,000 மில்லியன் கியூபிக் மீட்டர் தண்ணீர் இந்நதிகளின் மூலம் செல்கிறது. கேரளத்தில் உள்ள நெய்யாறு நீர்ப்பிடிப்பு பகுதி 138.24 சதுர.கி.மீட்டர் ஆகும். பாம்பாறு (230 டி.எம்.சி), அச்சன்கோவில் (77 டி.எம்.சி), பெரியாறு படுகை(380 டி.எம்.சி), , கல்லட ஆறு(180 டி.எம்.சி) நீர்படுகைகளில், உபரி நீர் உள்ளது. இதில் சுமார் 1 லட்சத்து 25 ஆயிரம் மில்லியன் கியூபிக் மீட்டர் கடலுக்கு செல்கிறது என்று திட்டக்குழுவின் 1978ஆம் ஆண்டு அறிக்கை கூறுகிறது.

மேற்கு நோக்கிப் பாயும் நதிகளைத் தமிழகத்திற்குத் திருப்புவது பற்றி மத்திய அரசு 1978ஆம்  ஆண்டு ஒரு குழு அமைத்து, இத்திட்டத்தைப் பற்றி ஆராய்ந்து, இந்த நதிநீரைத் தமிழகத்திற்குத் திருப்புவதற்குச் சாத்தியக் கூறுகளை அறிந்தது. நாடாளுமன்றத்திலும், சட்டமன்றத்திலும் இப்பிரச்சினை பல முறை எழுப்பப்பட்டுள்ளது.

கேரள மக்களுக்கு, அரிசி, காய்கறிகள், பால், மீன், இறைச்சி, மணல், சிமெண்ட், மின்சாரம் போன்ற அத்யாவசியப் பண்டங்களை தமிழகம் வழங்குகின்றது. அதற்காவது தண்ணீர் கொடுத்தால் தானே விளைச்சல் செய்து அரிசி, பருப்பு, பால் என்று அவர்களுக்கு வழங்கமுடியும் என்பதை எண்ணிப் பார்க்கவேண்டாமா?

அமைதியும், அருட்கொடைகளும்  தவழ்கின்ற கேரளமண்ணில் தவித்தவாய்க்கு தண்ணீர் கொடுக்க வேண்டும் என்ற மனிதநேயப்பண்பை இயற்கை வழங்கவேண்டும்.

#அச்சன்கோவில்_பம்பை
#வைப்பாறோடு_இணைப்பு

கே. எஸ். இராதாகிருஷ்ணன்
30.04.2020 
#ksrposts

Wednesday, April 29, 2020

Raja_Ravi_Varma

#Artist_Raja_Ravi_Varma
#172nd_Birth_Anniversary. 
————————————————
Let's seek blessings from the Legendary Artist Raja Ravi Varma, a positive disruptor who changed the way we live and worship forever, on his 172nd Birth Anniversary. 

Let us all together spread the legacy of Father of Modern Art to the world. 

ஈடு இணையில்லா இராஜா இரவிவர்மா

கேரள மாநிலம் திருவாங்கூர் சமஸ்தானத்தில் உள்ள கிளிமானூரில் 1848 பிறந்தவர். 
சிறுவயதிலேயே கதகளி ஆட்டத்திலும் சங்கீதத்திலும் பயிற்சி பெற்றார்.  ஓவியம் தீட்டுவது தன் உறவினர் உறவினரிடம் இருந்து கற்றார். 

திருவனந்தபுரம் அரண்மனை ஓவியர் இராமசாமி நாயுடுவிடம் எண்ணெய் வண்ண ஓவியக்கலையை ஒன்பது ஆண்டுகள் பயின்றார். மரப்பட்டைகள், மலர்கள், மண் ஆகியவற்றிலிருந்து ஓவியத்திற்கான வண்ணங்கள் தயாரிக்கப்பட்டன. ஐரோப்பியர்களின் ஓவிய உத்தி குறித்து அறிய விரும்பினார் 1868 அரண்மனைக்கு வந்திருந்த டச்சு ஓவியர் தியோடர் ஜென்சனின்  அருகிலிருந்து கவனித்துப் பார்த்து நுணுக்கங்களை உள்வாங்கிக் கொண்டார்.

ஓவிய கலையில் பண்டைய இந்தியா சிறந்திருந்தாலும் , தென்னிந்தியாவில் அது சிற்ப கலையாகவே வளர்ந்து நின்றது. கல்லில் வடிக்கும் ஓவியங்கள் காலத்திற்கும் நிலைக்கும் என தமிழரின் கலை அதை நோக்கியே இருந்தது

சோழ சாம்ராஜ்யம் கொடிகட்ட பறந்த காலங்களில் பசி ஒழிந்து செல்வம் நிறைந்து, பாதுகாப்பும் நிறைந்த காலங்களில் தஞ்சை கலைகளின் தலைநகரமாயிற்று. அப்பொழுது கரை நாடக இசை, சிற்பம், பாடல், ஓவியம் , கட்டட கலை என அது மிக உச்சத்தில் இருந்தது

அப்பொழுதுதான் தஞ்சாவூர் ஓவியங்களும் புகழ்பெற தொடங்கின, தஞ்சாவூர் ஓவிய பாணி தனிபுகழ் பெற்றது. வண்ண வண்ணமாய் ஓவியங்கள் வந்தன‌

பிற்காலத்தில் நாயக்கரும் மராட்டியரும் தஞ்சை பக்கம் வந்தபோதும் அது சிறந்தது. அதில் தங்கத்துகள் மாணிக்க கற்கள் பதித்து அது இன்னொரு கட்டத்திற்கு நகர்ந்தது

இந்தியாவின் மன்னர்கள் எல்லாம் தஞ்சாவூர் ஓவியகலை தெரிந்தவனினிடம் தங்கள் அரண்மனை ஓவியனை பயிற்றுவித்து தங்களை வரைந்து அதை தங்கத்தால அலங்கரித்து மகிழ்ந்தார்கள்

இன்றும் இந்தியாவின் பெரும் பழம் மன்னர்கள், பழம்பெரும் கடவுள்களின் படங்கள் எல்லாம் தஞசாவூர் ஓவிய பாணியிலே அமைந்திருக்கும், அந்த அளவு அது தனித்து நின்றது

அப்படிபட்ட தஞ்சை ஓவியத்தை கற்க திருவாங்கூர் சமஸ்தானத்திலிருந்து வந்தான் ரவிவர்மா, ஆனால் கற்றுகொடுப்பார் யாருமில்லை. ஒருவழியாக மதுரையில் ஒரு ஓவியனை பிடித்து ஓரளவு கற்றார்

தஞ்சாவூர் ஓவியம் வண்ணத்தி சிறந்தது, ஆனால் தத்ரூப ஓவியம் என்பதில் வராது. தத்ரூபம் என்றால் சேலையின் மடிப்பினை கூட அப்படியே வரைவது

தஞ்சாவூர் ஓவியங்களை இன்னும் மேம்படுத்த ரவிவர்மா எண்ணியபொழுதுதான் ஐரோப்பிய ஓவிய‌ தொடர்பு கிடைத்தது

நிச்சயம் ஐரோப்பிய ஓவிய கலைக்கு மைக்கேல் ஏஞ்சலோ தலைகீழ் திருப்பம் கொடுத்திருந்தான். தத்ரூப ஓவியங்களை எப்படி வரைவது என்பதை அவன் சொல்லிகொடுத்திருந்தான் போப் ஆண்டவரே அவனை ஆலய ஓவியங்களை வரைய சொன்னார்

முகத்தில் உணர்ச்சிகள் கொட்டும் ஓவியபாணி அவன் தொடங்கி வைத்தது, இன்று கத்தோலிக்க‌ கிறிஸ்தவ ஆலயங்களில் வணங்கபடும் மிக உருக்கமான ஓவியம் மற்றும் சிலை மாடல்கள் எல்லாம் அவனால் உருவானவை. 

அப்பாணி பின் மன்னர் அரண்மனைக்கும் சென்றது, அவன் வழிவந்த  ஓவியர்கள் அரசன், ராணியினை எல்லாம் பெரும் உயரமாக வரைந்து வைத்தார்கள் அதுவும் அரண்மனையினை அலங்கரித்தது

அக்கால ஐரோப்பிய மன்னர்கள் எல்லாம் இன்று அப்படித்த்தான் ஓவியமாக தொங்குகின்றார்கள்

இந்த பாணியும் அதற்குரிய வண்ணங்களும் கிடைத்தபின் ரவிவர்மா ஓவியம் புகழ்பெற தொடங்கியது, கொஞ்சம் கொஞ்சமாக புகழடைந்தான், சென்னை ஓவிய போட்டியில் அவன் ஓவியங்கள் பரிசை தட்ட தொடங்கியதும் வெளிநாட்டு போட்டிகளுக்கும் அனுப்பபட்டது

சிகாகோவில் அவன் ஓவியம் பெரும் வரவேற்பினை பெற்றது

மிக தத்ரூப ஓவியங்களை வரைவதில் அவன் பெரும் புகழ்பெற்றான், மன்னர்களை வரைந்தது போக யார் யாருக்கோ வரைந்தான், குறிப்பாக வெள்ளையர்களுக்கு, அந்த ஓவியம் இன்றும் சென்னை விக்டோரியா ஹாலில் உண்டு

அவனுக்கு தனி அரண்மனையும் ஆட்களும் நியமிக்கபட்டனர், வெள்ளையர் அவனை சர் பட்டம் கொடுத்து ராஜா ரவிவர்மா என கொண்டாடினர்

எப்படி அவன் கொண்டாடபட்டான் என்றால் அக்காலத்திலே அவனுக்காக தனி தபால் நிலையம் திறக்கபட்டது, அந்த அளவு உலகெல்லாம் இருந்து கடிதமும் பாராட்டும் வந்துகொண்டே இருந்தன‌. அவன் வாழ்ந்த ஆட்டுங்கால் பகுதியில் அவன் ஒரு ராஜா போலவே நடத்தபட்டான்

ஓவிய ராஜா ஆனார் ரவிவர்மா

மன்னர்களை வரைய தொடங்கிய அவர் பின்பு புராண, இதிகாச படங்களை வரைந்தார். அதில் அந்த தயமந்தி படம், சாகுந்தலா படமும் பெரும் புகழ் கொடுத்தன‌

இந்த வெற்றியில்தான் இந்து கடவுள்களை மிக சிரத்தையாகவும், தெய்வீக வடிவமாகவும் வரைந்தான் ரவிவர்மா

அதுவரை இந்து கடவுள்களின் உருவங்கள் பற்றி புராணங்களில் மட்டுமே பெருமளவில்  இருந்தன, ராமனுக்கு  நீல‌கரிய நிறம், கண்ணன் கரிய நிறம், லட்சுமி வெண் தாமரையில் செல்வத்தோடு இருப்பாள், சரஸ்வதி கையில் வீணை இருக்கும் என ஏட்டிலேதான் இருந்தன‌

சில சிற்பங்களில் அது தெரிந்தது, ஆனால் வண்ண ஓவியமாக இல்லை

அதுவரை குழந்தை கண்ணன், ராமன், சரஸ்வதி போன்ற கடவுள்களுக்கு தத்ரூப படங்கள் இல்லை.

ரவிவர்மனே இந்து தெய்வங்களை மிக மிக தத்ருபமாக வரைந்த முதல் ஓவியன். அது லட்சுமி, சரஸ்வதி, ராமன், வெண்ணை திருடும் கண்ணன், விஸ்வரூப கண்ணன் என எதுவாகட்டும் அவனே மூலம்

அந்த ஓவியங்கள் பார்ப்போர் மனதை உருக்கின, இந்துக்களின் தெய்வ உருவ ஓவியங்கள் எல்லா வீடுகளிலும் வர தொடங்கின‌, வழிபட்டனர்.

இன்று காலண்டர் முதல் பூஜை அறை வரை நாம் காணும் மிக உருக்கமான இந்து ஓவியங்கள் எல்லாம் அவனே கொடுத்தது, இன்றும் அவைதான் பிரதியெடுக்கபடுகின்றன‌

மைக்கேல் ஆஞ்சலொ கிறிஸ்தவ மதத்திற்கு ஒவியம் மூலம் ஆற்றிய பெரும் பணியில் சற்றும் குறையாதது இந்து மதத்திற்கு தன் ஓவியம் மூலம் ரவிவர்மா ஆற்றியிருப்பது

இன்று அவனின் பிறந்த நாள். இந்துக்களின் தெய்வத்திற்கு உருகொடுக்க வந்த தெய்வீக ஓவியனின் பிறந்தநாள்

இந்துக்களின் வீட்டில் வணங்கபடும் எந்த தெய்வம் என்றாலும் அந்த தெய்வீக உருவம் அவன் கொடுத்தது, கடைகள் இன்னபிற இடங்களில் எல்லாம் இருக்கும் அட்டகாச ஓவியம் அவன் வரைந்து கொடுத்தது... தனது உருவத்தையும் தானே ஓவியமாக வரைந்தவர் ராஜா ரவிவர்மா.

அவ்வகையில் தன் கலையால் பெரும் சேவை செய்தவன் அந்த மாபெரும் கலைஞன்

கவிராஜா கம்பன் என்றால் சந்தேகமே இல்லாமல் சொல்லலாம் ஓவிய ராஜா ரவிவர்மன்.

இந்தியாவில் எங்கு திரும்பினாலும் அவன் வரைந்த ஏதாவது ஒரு ஓவியத்தை பார்க்காமல் ஒரு நாளை கடக்க முடியாது என்ற அளவில் இங்கு நிலைத்துவிட்ட அந்த பெரும் கலைஞனுக்கு அஞ்சலிகள். 

1870 முதல் 1880 வரை காலத்தால் அழியா புகழ் கொண்ட ஏராளமான ஓவியங்களைப் படைத்தார். அன்னப்பட்சி உடன் உரையாடும் தமயந்தி, யசோதா-கிருஷ்ணன் ஆகியவை மிகவும் பிரசித்தி பெற்றவை. 

அவர் சிருஷ்டித்த ஓவியங்கள் உலகம் முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்றன. இந்தியாவில் மட்டுமல்லாது சர்வதேச ஓவியக் கண்காட்சிகளில் பல பரிசுகள் புத்தகங்களைப் பெற்றார் பதக்கங்களை பெற்றார். தன் உருவத்தை மிகச்சிறப்பாக  வரைந்ததற்காக திருவாங்கூர் மகாராஜா இவருக்கு  "வீரஸ்ருங்கலா" என்ற விருது வழங்கிச் சிறப்பித்தார். 1904ஆம் ஆண்டில் கெய்ஸர்-இ-ஹிந்த்  என்ற பதக்கத்தை ஆங்கிலேய அரசு வழங்கியது. 

நாடு முழுவதும் இருந்து பாராட்டுகள் குவிந்த வண்ணம் வந்து கொண்டிருந்ததால் இவருக்காகவே கிளிமானூர் ஓர் தனி அஞ்சலகம் திறக்கப்பட்டது. 

இவரது ஓவியங்கள் தங்கள் வீடுகளை அலங்கரிப்பது உயர்ந்த அந்தஸ்தில் அடையாளமாகவே மக்கள் கருதினர். நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்தார் அவரது கற்பனைத் திறன் மேம்பட இது சிறந்த வாய்ப்பாக அமைந்தது. சுற்றுப் பயணம் முடிந்தவுடன் பல தலைசிறந்த ஓவியங்களுக்கு உயிர் கொடுத்தார். 

நள தமயந்தி, சந்தனு மகாராஜா-மீனவப் பெண், சத்தியவதி, சந்தனு-கங்காதேவி, ராதா கிருஷ்ணன், கிருஷ்ணன்-தேவகி, அர்ஜுனன்-சுபத்திரை, திரௌபதி துகில் உரியும் காட்சி உட்பட்ட பல ஓவியங்களை தீட்டினார். 

ஆரம்பத்தில் மலையாளம் சமஸ்கிருதம் மட்டுமே அறிந்திருந்த இவர், பிறகு ஹிந்தி, குஜராத்தி, ஆங்கிலம், ஜெர்மன் ஆகிய மொழிகளிலும் புலமை பெற்றார். 

இவரது யசோதா கிருஷ்ணன் ஓவியம் 2002இல் ரூபாய் 56 லட்சத்திற்கு ஏலம் போனது. இவரது ஓவியங்களுக்கு பெரும் வரவேற்பும் மதிப்பும் இருந்ததால் பரோடாவின் திவான் மாதவராவ் யோசனையின் பேரில் லித்தோகிராஃப் அச்சகம் உருவானது. இதன்மூலம் அச்சடிக்கப்பட்ட இவரது ஓவியப் பிரதிகள் உலகம் முழுவதும் சென்றடைந்தன. வசதி குறைந்தவர்கள் கூட இவரது ஓவிய பிரதிகளை வாங்க முடிந்தது. 

காலண்டர் படங்கள் என்னும் ஓவியத்துறை இந்தியாவில் தோன்ற மூலகாரணமாக இருந்தவர் ரவிவர்மா. 

உயிரோட்டம் நிறைந்த ஓவியங்களை வரைந்து இந்தியாவின் பெருமையை உலகம் முழுவதும் பரவச் செய்த ஓவிய மேதை ராஜா ரவிவர்மா தனது 58-வது வயதில் 1906இல் மறைந்தார். 

உலகப் புகழ்பெற்ற ஓவியர் ராஜா ரவி வர்மா. 

காலத்தால் அழியாப் புகழுடைய ஏராளமான ஓவியங்களை படைத்த உலகப் பிரபல ஓவியர் ராஜா ரவிவர்மா பிறந்த தினம் இன்று... 

This artificial synthetic omnipresent system is going it own course.......

The best people possess a feeling for honest beauty, the values in courage to take risks, the discipline to tell the truth, the capacity for sacrifice. Ironically, their virtues make them vulnerable: they are often (thankless ) wounded, sometimes destroyed.This is the order of the day. This artificial synthetic omnipresent  system is going it
own course.......

#ksrpost
29-4-2020.


*விதை_நெல்லை*

*விதை_நெல்லை*
————————
விதை நெல்லை பாதுகாப்பது கிராமத்தில் முக்கிய அடிப்படை கடமையாகும். அதை யாரும் தொடவும் மாட்டார்கள், எந்த பயனுக்கும் அதை பயன்படுத்துவதில்லை. விவசாயிகளுக்கு அது மரபுரீதியான வைப்புச் சொத்து (traditional fixed asset).

“*வெதை நெல்லை வித்தவைரை லாபம்னு நெனைக்கிறவனும், வெதை நெல்ல வேகவச்சு தின்னவனும்  எந்த காலமும்  வெளங்க மாட்டான்னு *‘’ எனசொலவடை சொல்லுவாங்க.தலையே போனாலும் வெதை நெல்லுல மட்டும் கை வைக்கக் கூடாது அதுதான் நம்ம வாழ்வு என பய பக்தியோடு கிராமத்தில் நம்பிக்கை.வழி வழியா பாரம்பரியமாக  இதை கடை பிடிப்பது உண்டு.

பாரம்பரிய நெல் விதைகள்,இந்தியாவில் 200000 மேற்பட்ட நெல் வகைகள் இருந்துள்ளதாக அறியப்படுகிறது. இந்தியாவில் பசுமைப்புரட்சியின் விளைவாக பல பாரம்பரிய நெல் ரகங்கள் அழிந்து பட்டன.

இந்தியாவின் கட்டாக் அரிசி ஆராய்ச்சி நிறுவன இயக்குநர் டாக்டர் ஆர்.எச். ரிச்சாரியா, 1959 ஆம் ஆண்டு இந்தியாவிற்கு அதிக விளைச்சல் தரும் பாரம்பரிய விதை நெல் வகைகளை சேகரித்து அவற்றை பயன்படுத்துவதே நல்லது  என்றும் நவீன ஐ.ஆர்.ஆர் ரக வீரிய நெல் விதைகள்  அதிகம் நோய்கள் பரப்பக்கூடியவை என்றும் எடுத்துக்கூறி நவீன ரகத்திற்கு அனுமதி மறுத்து அதன் விளைவாக அவர் மாற்றம் செய்யப்பட்டு, பின் நோயுற்று வறுமையில் வாடி அவர் இறந்தார்.

பின்னர் அப்பதவிக்கு வந்த டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதன் மற்றும் மற்ற இயக்குநர்களாலும் டாக்டர் ஆர்.எச். ரிச்சாரியா சேகரித்திருந்த பாரம்பரிய ரக விதைநெல்கள் காணாமல் போனதைப்பற்றிக் கூற மறுத்து விட்டார்கள். எம்.எஸ். சுவாமிநாதன் காலத்தில் வந்த பசுமைப்புரட்சியில் அதிக விளைச்சல் நவீன ரகங்கள் முக்கியத்துவம் தரப்பட்டு, பாரம்பரிய நெல் விதைகள் இந்தியாவில்
அழிக்கப்பட்டது பெரிய துயரமான இழப்புகள் .

மீண்டும் விவசாயிகளிடையே பாரம்பரிய நெல் விதைகளை மீட்டு  எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.
இது  குறித்து  திரு  எ. வி.  பால
சுப்பிரமணியம் சகோதரி  திருமதி கே.விஜயலட்சுமி ஆகியோர் ஆய்வு செயது CIKS சார்பில் ‘Traditional Rice
Varieties of Tamilnadu’ என்ற  அரிய
நூலை வெளியிடப்பட்டுள்ளது.  இதில் நமது தமிழகபாரம்பரியநெல்விதைகளை 
வகை படித்தி  தொகுத்துள்ளனர். 
அவர்களுக்கு பாராட்டுக்கள்.

read more at https://satavic.org/dr-richharias-story-crushed-but-not-defeated/

கே. எஸ். இராதாகிருஷ்ணன்
28.04.2020 
#ksrposts

வெள்ளாமை #செல்லமாக_வளர்க்கும்_நாய்களுக்கு #உணர்வு.....

#வெள்ளாமை 
#செல்லமாக_வளர்க்கும்_நாய்களுக்கு  #உணர்வு.....
————————————————-
வீட்டில் செல்லமாக வளர்க்கும் நாய்களுக்கு  உணர்வும்  பாசமும் அதிகமாக இருக்கும். நன்றாக நினைவிருக்கிறது பள்ளிக்கூடத்திற்கு செல்கின்ற காலத்தில் பள்ளி வரை பின்னாலேயே வரும், நன்பகல் உணவு நேரத்திலும், மாலை பள்ளி விடும் நேரத்தில் பள்ளிக்கூடத்தின் முன்னால் வந்து காத்திருக்கும். வெள்ளாமை ஆர்வம் எடுத்துக்கொண்டு நிற்க்கும்.இப்படி பல அதன் அரிய நடவடிக்கைகள்,பன்புகள்........
எங்கள் பகுதியில்  சிப்பிபாறை,ராஜபாளையம் வகை நாய்கள் முன்பு அதிகம் இருந்தது. இப்போது அவை அதிகமாக பார்க்க  முடியவிலை.கோம்பை வகை உள்ளது.

பொங்கல் அன்று விடியலில் விவசாய நிலத்தில் ஈசான மூலையில் கன்னிப் பில்ளையும் வேப்ப இலைகள் கொண்ட கொப்பினை கொண்டு பொலி கட்டுவார்கள். அந்த இடத்திற்கு நமக்கு முன்னமே வேகமாக ஓடிச் சென்று நிற்கும். வீட்டில் யாராவது மறைந்து விட்டால் அது தரையில் உட்கார்ந்து அழுதுக் கொண்டிருப்பதைப் பார்க்கலாம். நாம் கொடுப்பதே வெறும் உணவு தான், ஆனால் அது காட்டும் நன்றியும் பாசமும் அளப்பறியது. 

இதைக் குறித்து *பெ. மகேந்திரன்* *வெள்ளாமை*என்ற *கரிசல் இலக்கிய புதினத்தில்*வருமாறு. இந்த புதினம் குறித்தான விமர்சனத்தை இன்றோ நாளையோ பதிவிடுவேன்.

‘’இந்த மாதிரியான நேரங்களில் வீட்டில் வளர்க்கும் நாய் கூட பாசத்தின் நிலைகொள்ளாமல் அங்கும் இங்கும் ஓடும். பெரியவர் வீட்டிலும் ஒரு நாய் இருந்தது. கரிசல் கிராமங்களில் பெரும்பாலும் எல்லாருடைய வீட்டிலும் நாய் இருக்கும். அது எதையும் கட்டிப்போட்டு வளர்க்க மாட்டார்கள். அது பாட்டுக்கு தெரியும். சாப்பாட்டுக்கு சரியாக வந்து நிற்கும். அது அந்த மண்ணுவாகோ என்னவோ எல்லாமே ‘ஓங்கு தாங்காக’ வளர்ந்து இருக்கும். இந்த ‘சிப்பிப்பாறை’ ஜாதி கூட அப்படித்தான்.

  வீட்டுக்குள்ளே எதுவரை வரலாம் என்பதை எஜமானரின் மனஓட்டத்தை வைத்து அறிந்து வாசலோ கூடமோ தனக்கென ஒரு எல்லையைச் சரியாக வகுத்துக் கொள்ளும். நஞ்சை, புஞ்சை, படப்பு, களத்துமேடு என இதில் எதுவெல்லாம் தன் எஜமானருக்குச் சொந்தம் என்ற விபரம் இந்த நாய்க்கு எப்படித்தான் தெரியுமோ, சரியாக அங்கெல்லாம் போய் ஒரு “கண்காணிப்பு” செய்துவிட்டு வாசலில் வந்து ஒரு தோரணையாக உட்கார்ந்துக் கொள்ளும். அங்கிருந்துக் கொண்டு “பெரிய பொறுப்புகளை”த் தலையில் சுமந்துகொண்டது போன்ற தோரணையில் தெருவைப்பார்த்து உட்கார்ந்துக் கொள்ளும்.’’

 - வெள்ளாமை #பெ_மகேந்திரன்

கே. எஸ். இராதாகிருஷ்ணன்
28.04.2020 
#ksrposts

லால்_பகதூர்_சாஸ்திரி

#லால்_பகதூர்_சாஸ்திரி
———————————
லால் பகதூர் சாஸ்திரி அந்தணர் வகுப்பைச் சார்ந்தவர் அல்ல. பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகத்தில் சாஸ்திரி பட்டம் பெற்றதால் அவ்வாறு அழைக்கப்படுகிறார். சாஸ்திரியைப் போலவே போலோ விலாஸ் பஸ்வான் சாஸ்திரி பட்டம் பெற்று அவரை போலா விலாஸ் பஸ்வான் சாஸ்திரி (பிகாரில் பிறந்த ஒடுக்கப்பட்ட சமுதாயத்தில் பிறந்த காங்கிரஸ் தலைவர்)என அழைப்பது உண்டு என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிறுவனத் தலைவர்களில் ஒருவரான மறைந்த பி. ராமமூர்த்தி கூறுகிறார். அவரும் அந்தப் பல்கலைக்கழகத்தில் படித்தவர். விடுதலைப் போராட்டத்தின் போது சைமன் கமிஷன் வாரனாசிக்கு வந்த போது அப்போது மாணவர்களோடு சேர்ந்து போராடியதெல்லாம் பி. ஆர் சொல்கின்றார். சாஸ்திரி நேர்மை, எளிமையின் அடையாளம். சாதாரண ஏழைக் குடும்பத்தைச் சார்ந்தவர். மாஸ்கோவில் அவர் மறைந்த மர்மத்தை வெளிப்பட வேண்டும் என்று இன்றும் பலர் வலியுறுத்துகின்றனர். 
Indian Prime Minister Lal Bahadur Shastri  with Pakistan's President Ayub Khan after signing Tashkent Agreement in 1966. 

Minister of Foreign Affairs for Pakistan, Zulfikar Ali Bhutto, can also be seen on the right.

Shastri ji's death remains mysterious.....

#Lal_Bahadur_Shastri

கே. எஸ். இராதாகிருஷ்ணன்
29.04.2020 
#ksrposts

*இனி_காவேரி_ஒரு_கேள்வி_குறி*....... *Cauveri water dispute *

*இனி_காவேரி_ஒரு_கேள்வி_குறி*.......
*Cauveri water dispute *
————————————
மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்தின் மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர் பிரச்னைகள் சட்டம் 1956 அறவே நீக்கப்பட்டு அதன் கீழ் அமைக்கப்பட்ட காவேரி நதிநீர் மேலாண்மை வாரியம் இனி நதிநீர் வாரியச் சட்டம் 1956ன் கீழ் கொண்டுவரப்படுகிறது.

காவேரி நதிநீர் மேலாண்மை வாரியம் இனி மத்திய நீர்வளத்துறை நதிநீர் வாரியத்தின் நேரடிக் கட்டுப்பாட்டில்..

#Cauveri
கே. எஸ். இராதாகிருஷ்ணன்
29.04.2020 #ksrposts

Tuesday, April 28, 2020

In *April 1976*, when the *infamous Emergency*

In *April 1976*, when the *infamous Emergency*
was in place in India, the New York Times wrote an article eulogising a Judge of the Indian Supreme

https://www.livelaw.in/columns/remembering-justice-h-r-khanna-on-the-44th-anniversary-of-adm-jabalpur-verdict-155863

#எல்லோரும்_நலம்_வாழ_நான்_பாடுவேன் நான் வாழ யார் பாடுவார்

#எல்லோரும்_நலம்_வாழ_நான்_பாடுவேன்
நான் வாழ யார் பாடுவார்

எது சொன்னாலும் பாவம்
என் நெஞ்சம் என்னோடு பகை ஆனது

கண்ணீரை நான் எங்கு கடன்
வாங்குவேன்.அது கடனாக வந்தாலும் தடைபோடுவேன்.
ஞாயங்கள் தெளிவாக நாள் ஆகலாம்
நான் யாரென்று அப்போது  காணலாம்
நான்  இப்போது  ஊமை  மொழி 
இல்லாத பிள்ளை
என்றேனும் ஓர் நாளில் நான் பேசலாம்.....

#கரோனா_பாதிப்பால்_பசி_பட்டினி_உருவாகும்_ஐநா_உணவுத்_திட்ட_தலைவர் #டேவிட்_பெய்ஸ்லி_எச்சரிக்கை.

#கரோனா_பாதிப்பால்_பசி_பட்டினி_உருவாகும்_ஐநா_உணவுத்_திட்ட_தலைவர் #டேவிட்_பெய்ஸ்லி_எச்சரிக்கை.————————————————-உலகம் முழுதும், 82 கோடி மக்கள், தினமும் இரவு உணவின்றி, பட்டினியுடன் உறங்குகின்றனர். மேலும், 14 கோடி மக்கள், பல்வேறு நெருக்கடி நிலை காரணமாக, பட்டினி கிடக்கும் நிலையில் உள்ளதாக, உலக உணவுத் திட்ட ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், கரோனா பாதிப்பால் ஏற்பட்டுள்ள பொருளாதார இழப்பு காரணமாக, மேலும், 13 கோடி மக்கள், இந்த ஆண்டு இறுதிக்குள், பசி மற்றும் பட்டினியால் கடும் பாதிப்புகளை சந்திப்பர் என, அந்த ஆய்வு தெரிவிக்கிறது. உலகில் உள்ள, 10 கோடி மக்களுக்கு, உணவு திட்டத்தின் கீழ், தினமும் உணவு அளிக்கப்பட்டு வருகிறது. இதில், மூன்று கோடி பேர், இந்த உணவை மட்டுமே நம்பி உயிர் வாழ்கின்றனர். அந்த மூன்று கோடி மக்களுக்கு, உணவு சென்று சேர முடியாத நிலை ஏற்பட்டால், அடுத்த மூன்று மாதங்களுக்குள், நாள் ஒன்றுக்கு மூன்று லட்சம் பேர், பட்டினியால் உயிரிழக்கும் அபாய நிலை உருவாகும். ஐ.நா.,வின், உலக உணவு திட்டத்துக்கு, அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி, ஐரோப்பிய யூனியன், ஜப்பான் போன்ற பணக்கார நாடுகள், நிதி உதவிகள் அளித்து வருகின்றன.கரோனா பாதிப்பால், இந்த பணக்கார நாடுகளின் பொருளாதாரம் மிகப் பெரிய சரிவை சந்தித்து வருகிறது. இதன் காரணமாக, உலக உணவுத் திட்டத்துக்கான நிதி உதவிகள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. இந்த நிதி உதவி நிறுத்தப்பட்டால், உள்நாட்டு போர் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளால், பாதிக்கப்பட்ட பல நாடுகளில் வசிக்கும் மக்கள், பசி மற்றும் பட்டினியால் வாடும் நிலை உருவாகும் என்று ஐ.நா.,வின் உணவுத் திட்ட தலைவர் டேவிட் பெய்ஸ்லி கூறியுள்ளார்.
•••
Poverty can produce a most deadly kind of violence. In this society, violence against poor people and minority groups is routine. ... Ignoring medical needs is violence ... Even a lack of will power to help humanity is a sick and sinister form of violence." -Coretta Scott King

கே. எஸ். இராதாகிருஷ்ணன்
28.04.2020 
#ksrposts
#ஐநா
#உணவு

கரோனா_வைரஸ்_ஊரடங்கு_ஓசோன் #படலத்தின்_துளைகள்_குறைந்துள்ளது

#கரோனா_வைரஸ்_ஊரடங்கு_ஓசோன் #படலத்தின்_துளைகள்_குறைந்துள்ளது
————————————————
சூரிய ஒளியில் இருந்து வெளியாகும் புற ஊதா கதிர் உள்ளிட்ட தீங்கு விளைவிக்கும் கதிர்வீச்சுகளை பூமிக்கு வராமல் தடுக்கும் இயற்கை அரணாக ஓசோன் படலம் விளங்குகிறது. பூமியை சுற்றிலும் காணப்படும் இந்த ஓசோன் எனப்படும் ஆக்சிஜன் படலமானது (O3),சுற்றுச்சூழல் சமநிலையை பாதுகாப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது. ஆனால், வாகனங்களின் புகை, தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கார்பன் மோனாக்ஸைடு உள்ளிட்ட பசுமை இல்ல வாயுக்களால் (Green House Gases) ஓசோன் படலத்தில் கடந்த காலங்களில் ஆங்காங்கே பெரிய பெரிய துளைகள் ஏற்பட்டன. இந்த சூழ்நிலையில், கடந்த டிசம்பர் மாதம் முதல் கரோனா வைரஸ் பரவியதால் சீனா, அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ், இந்தியா என பல நாடுகளில் வெவ்வேறுகால கட்டங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த ஊரடங்கு காரணமாக பல்வேறு நாடுகளில் இயங்கி வந்த தொழிற்சாலைகள் கால வரையின்றி மூடப்பட்டன. வாகனப் போக்குவரத்து இல்லை. இதனால் பூமியில் இருந்து வெளியாகும் மாசுக்களின் அளவும் வெகுவாக குறைந்தது.
பூமியில் ஏற்பட்டுள்ள இந்த தீடீர் மாற்றத்தால் ஓசோன் படலத்தின் துளைகள் குறைந்துள்ளதா என்பது குறித்து அமெரிக்காவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் கடந்த மாதம் ஆராய்ச்சி செய்தனர். ஆனால், பூமியின் வடதுருவமான ஆர்ட்டிக்கின் மேற்பகுதியில் இருக்கும் ஓசோன் படலத்தில், ஒரு மில்லியன் சதுர கிலோ மீட்டர் அளவில் பெரிய துளை புதிதாக உருவாகியிருந்தது. மேலும், இந்த துளையானது தென் துருவத்தை நோக்கி விரிவடைந்தும் வந்தது. இந்த செய்தியானது உலக மக்களை கடும் அச்சத்தில் ஆழ்த்தியது.

இந்நிலையில், இந்த துளை தொடர்பாக செயற்கைக்கோள் உதவியுடன் விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் அண்மையில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, அதிசயிக்கும் விதமாக ஓசோனில் ஏற்பட்டிருந்த அந்த ராட்சத துளை தாமாக மூடிக்கொண்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஓசோன் படலத்தில் ஏற்பட்டிருந்த மிகப்பெரிய துளை தாமாக மூடிக்கொண்டதற்கு, பூமியில் இருந்து வெளியாகும் பசுமை இல்ல வாயுக்களின் அளவு குறைந்ததே காரணம் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வந்தனர்.ஆனால், இந்தக் கூற்றினை விஞ்ஞானிகள் திட்டவட்டமாக மறுத்துள்ளனர். ஓசோனில் மிகப்பெரிய துளை ஏற்பட்டதும் அதுதாமாக மூடியதும் ‘போலார் வோர்டெக்ஸ்’ எனப்படும் வாயு சுழற்சியே காரணம் என அவர்கள் தெரிவிக்கின்றனர்.
#ozen

கே. எஸ். இராதாகிருஷ்ணன்
28.04.2020 
#ksrposts

#எல்லாப்_புகழையும்_வழிப்பறி_செய்யும் #பேராசைக்காரர்களும் #அற்பர்களுமான .... -#தீபம்_நா_பார்த்தசாரதி

#எல்லாப்_புகழையும்_வழிப்பறி_செய்யும் #பேராசைக்காரர்களும் #அற்பர்களுமான ....

-#தீபம்_நா_பார்த்தசாரதி
————————————————-
'எல்லாப் புகழையும் வழிப்பறி செய்யும் பேராசைக்காரர்களும் அற்பர்களுமான அரசியல்வாதிகள் நிறைந்துவிட்ட நாட்டில் அறிவாளிகள் கொண்டாடப்பட மாட்டார்கள். நினைவு கூரப்படவும் மாட்டார்கள். இந்த உண்மை பலமுறை நிரூபிக்கப்பட்டு விட்டதென்றாலும், இளம் இலக்கிய அன்பர்களின் நாளைய உலகைப் பற்றி இன்னும் நமக்கு நம்பிக்கை இருக்கிறது. ஆஷாடப்பூதித்தனங்களையும் போலிகளையும் தகர்த்து எறிந்து உண்மையான தொண்டனை கொண்டாட மறுக்காத காலம் வரும் என்று திட்டமாக நம்புகிறோம் நாம். அதற்காக இடையறாது உழைக்கவும் விரும்புகிறோம்’ (தீபம், அக்டோபர் 1970) என்று நாபா கூறுகிறார்.கே. எஸ். இராதாகிருஷ்ணன்
28.04.2020
#ksrposts

கூட்டம் வாகன நெரிசல் நிறைந்த பகுதி #மதுரை- #சிம்மக்கல். இன்றைக்கு......

கூட்டம் வாகன நெரிசல் நிறைந்த பகுதி
#மதுரை- #சிம்மக்கல்.
இன்றைக்கு......


ஏகாந்த_நினைவும்......

#ஏகாந்த_நினைவும்......
—————————-
‘’தேனாற்றங்கரையில் தெய்வீகக்குரலில் 
நாந்தானே ஒரு பாட்டிசைத்தேன்,

தினந்தோறும் இரவில் நடு ஜாம நிலவில் 
நாந்தானே அதைக் கேட்டிருந்தேன்,

அரங்கேற்றந்தான் ஆகாமல்தான் 
அலைபாயும் என் ஜீவந்தான்,
வா வா என் தேவா செம்பூவா என் தேகம் 
சேராதோ உன் கைகளிலே....
குருவாயூரப்பா குருவாயூரப்பா
நான் கொண்ட காதலுக்கு நீதானே சாட்சி...

ஏகாந்த நினைவும் எரிகின்ற நிலவும் என் மேலே ஒரு போர் தொடுக்க,
எனை வந்து தழுவு ஏனிந்தப் பிரிவு 
மானே வா உனை யார் தடுக்க,
பரிமாறலாம் பசியாறலாம் பூமாலை நீ சூடும் நாள்
மாது உன் மீது இப்போது என் மோகம் 
பாயாதோ சொல் பூங்குயிலே......
குருவாயூரப்பா குருவாயூரப்பா
நான் கொண்ட காதலுக்கு நீதானே சாட்சி,....’’

#நெல்_மூட்டைகள்_மழையில் #நனைந்து_போய்விட்டது_னு' #விவசாயிகள்_கதறும் #அவல_நிலை....

#நெல்_மூட்டைகள்_மழையில் #நனைந்து_போய்விட்டது_னு' #விவசாயிகள்_கதறும்
#அவல_நிலை....

#ksrpost
28-4-2020.


கம்யூனிஸ்ட்_தலைவர்_பி_ராமமூர்த்தி #சிறையிலிருந்தே_சட்டமன்றத் #தேர்தலில்_வெற்றிபெற்றார்

#கம்யூனிஸ்ட்_தலைவர்_பி_ராமமூர்த்தி #சிறையிலிருந்தே_சட்டமன்றத் #தேர்தலில்_வெற்றிபெற்றார்
===========================
சிறையிலிருந்தே தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்றவர் பி. ராமமூர்த்தி ஆவார். சிறையில் விசாரணை கைதிகள் வாக்களிக்கவேண்டும் என்று ஏற்கனவே உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கையும் தாக்கல் செய்தவன் என்ற முறையில் இந்த செய்தியை பதிவு செய்ய விரும்புகிறேன்.

கம்யூனிஸ்ட் இயக்கத்தையும் தொழிற்சங்கத்தையும் தமிழகத்தில் வழிநடத்திய பி. ராமமூர்த்தி 1952 ஆம் வருடம் சிறையில் அடைக்கப்பட்டு தேர்தல் பிரச்சாரத்திற்கு கூட செல்ல முடியாமல் மதுரை சிறையிலிருந்து வெற்றி பெற்றார்.  அப்போது தலைமறைவு வாழ்க்கை நடத்திய பி. ராமமூர்த்தி உடல்நலம் கெட்டு இரவில்தான் வெளியே வருவார். 1951ல் இவர் பம்பாய் செல்லும்போது கைது செய்யப்பட்டார். மாறுவேடத்தில் சென்ற இவரை எப்படியோ காவல்துறையினர் பிடித்துவிட்டனர். வழியில் அமலாபுரத்தில் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறைக்கு கொண்டுவரப்பட்டார். அப்போது 1952 தேர்தல் நேரம். மதுரை வடக்குத் தொகுதி சட்டமன்றத் தேர்தலில் களம் இறங்கினார் பி. ராமமூர்த்தி. மதுரையில் ஜவுளித் தொழிலாளர் பிரச்சினையிலும், மக்கள் பிரச்சினையிலும் ஈடுபட்டு மக்களிடம் செல்வாக்கை பெற்றார். 1952 தேர்தலில் இவரை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் பிரமுகர் சிதம்பர பாரதியை காட்டிலும் 3332 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.  பிரச்சாரத்திற்கு கூட போகாமல் சிறையிலிருந்தே வெற்றி பெற்ற இந்தியாவில் முதல் சட்டமன்ற உறுப்பினர். இந்தப் படத்தில், அம்பாசமுத்திரத்தில் தொழிற்சங்கப் பணியை துவங்கி பல்வேறு தியாகங்களை செய்து தமிழ்நாடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயலாளராகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும், சட்டமன்ற உறுப்பினராகவும் திகழ்ந்த தோழர் என். நல்லசிவம். இவர் நெல்லை மாவட்டத்தின் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னோடி. என்னுடைய ‘உரிமைக்கு குரல் கொடுப்போம்’1993ல் நூலுக்கு அணிந்துரையும் வழங்கியுள்ளார். இவரை திருவல்லிக்கேணி தேரடித் தெருவில் இருந்த கட்சி அலுவலகத்திலும், பின்பு தி.நகர் வைத்தியராம ஐயர் தெருவில் உள்ள அலுவலகத்திலும் பலமுறை சந்தித்து பேசியது உண்டு. அவர் அருகே அன்புக்கும், பாசத்துக்கும் உரிய அண்ணன் எஸ்.ஏ. பெருமாள், செம்மலர் ஆசிரியர், என் மீது அன்பு பாராட்டக்கூடியவர், சிந்தனையாளர், தமிழகத்தில் பல இலக்கிய படைப்பாளிகளை உருவாக்கியவர். இந்தப் படம் மொத்தத்தில் தியாகங்களின் அடையாளம். 
#தேர்தல்
 #சிபிஎம் #கம்யூனிஸ்ட்கட்சி
 #elections 
#பிராமமூர்த்தி 

கே. எஸ். இராதாகிருஷ்ணன்
28.04.2020

#ksrposting 
#ksradhakrishnanposting

Monday, April 27, 2020

#Kesavananda_Bharati -II :


#Kesavananda_Bharati -II : The Case We Do Not Know, But Ought To Know
[This post is part of a special series celebrating 47 years of the decision in #Kesavananda_Bharti v. #State_of #Kerala, wherein the Supreme Court of India laid down the 'Basic Structure

[This post is part of a special series celebrating 47 years of the decision in Kesavananda Bharti v. State of Kerala, wherein the Supreme Court of India

Kesavananda Bharati -II : The Case We Do Not Know, But Ought To Know Swapnil Tripathi27 April 2020 8:19 AM 996 


https://www.livelaw.in/columns/kesavananda-bharati-ii-the-case-we-do-not-know-but-ought-to-know-155820

மதுரை

#மதுரை
—————
மதுரை ரோம் நகரை போன்று 2500 ஆண்டுகளை கடந்தது. இதற்கு இணையான கல்வெட்டு சான்றுகள்,  புராணங்கள், இலக்கியங்கள் வேறு எந்த நகருக்கும் இல்லை. மதுரையின் கழுத்தை ஆரமெனச் சுற்றிய கிருதுமால் நதியும், பொய்யாக்குலக்குடி வை(கை)யையும் மதுரையின் புகழுக்கு மகோன்னதச் சான்றுகள். அசோக மன்னர், கிரேக்க மெகஸ்தனீசு எழுதிய 'இண்டிகா' புத்தகமும், தாலமி, பிளினியும் வரலாற்று ஆய்வுரைகளில் விளக்கிய பெருநகர்.மதுரைபோல் நீர்நிலைகள் நிறைந்த நகரை வேறெங்கும் காண முடியாது. மதுரையைப் பற்றி பல புத்தகங்கள் வெளிவந்துள்ளன. அவை திருவிளையாடல் உட்பட மதுரையின் பெருமைகளைச் சொல்கின்றன.
பென்சில், பேனா கண்டுபிடிப்பதற்கு முன் எழுத்தாணிகளால்தான் மக்கள் எழுதினர்.இதை செய்தவர்களும், இதனால் எழுதியவர்களும் வாழ்ந்த இத்தெருவில் எழுத்தாணி பெயரளவிலேயே உள்ளது.மதுரையில் ஒரு காலத்தில் 'ஹார்வி' மில் மட்டுமே இருந்தது. பின் தமிழ் பேசும் தொழிலதிபர்கள் ஆலைகளை துவங்கினர். தெற்கு பகுதியில் மீனாட்சி ஆலையை தியாகராஜ செட்டியார் துவக்கினர். தேனூர் சிவகாமி மில், விளாங்குடி விசாலாட்சி மில், பைகாராவில் மகாலட்சுமி மில், ஆண்டாள்புரத்தில் மீனாட்சி மில், புது ராமநாதபுரம் ரோட்டில் மங்கையர்க்கரசி மில் என பெண்கள் பெயரில் துவக்கப்பட்டன.

மதுரைக்கும் சினிமா தொழிலுக்கும் நீண்டதொடர்புஉண்டு.தென்னிந்தி
யாவில் சேலம் மாடர்ன் தியேட்டரைவிட, பழமையானது மதுரை திருநகர் சித்ரகலா ஸ்டுடியோ. இதில் அல்லி அர்ச்சனா, குமரகுரு, தாய்நாடு போன்ற தமிழ் படங்கள், சில சிங்களப் படங்கள் தயாரிக்கப்பட்டு நெடுநாள் ஓடின.உலகில் முதன் முதலில் பொதுத் தேர்தலில் ஒரு நடிகரை அதாவது நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரனை எம்.எல்.ஏ., (அப்போதைய சேடபட்டி தொகுதி) ஆக்கியது மதுரை தான்.. ஒரு தெருவுக்கு ஒரு கோயிலும், இரண்டு தெருவுக்கு ஒரு சினிமா தியேட்டரும் உடையது மதுரை.
மதுரையின் ஆதி தியேட்டர் இம்பீரியல். ஜெனரேட்டர் வைத்து 1890களிலே படம் காட்டிய அரங்கம். மீனாட்சி அம்மன் கோயில் அருகிலிருந்த அது, வணிக வளமாக மாறிவிட்டது.

கோவில்பட்டி "#காராச்சேவும் - #கடலைமுட்டாயும் - #ஹாக்கிப்பட்டியும்_சில #நினைவுகள்......

#கோவில்பட்டி
"#காராச்சேவும் - #கடலைமுட்டாயும் - #ஹாக்கிப்பட்டியும்_சில #நினைவுகள்........
————————————————
"காராச்சேவும் - கடலைமுட்டாயும் - ஹாக்கிப்பட்டியும்" என்ற தலைப்பில் கோவில்பட்டி மற்றும் அதன் வட்டார கிராமங்கள், அங்கு நிலவிய கடந்த கால அரசியல், சமூகப் பார்வை என பல விஷயங்களை பதிவு செய்யலாம் என்று விரும்பினேன். இன்றைக்குள்ள அரசியல் சூழ்நிலையில் இப்போது அது தேவையில்லை என்று சில நண்பர்கள் சொன்னார்கள். இருப்பினும் 1996 வரை வேட்பாளராகவும், வேட்பாளரின் முகவராகவும், இன்று வரை களப்பணியாளராகவும் இருந்துள்ளேன். 

இத்தோடு இணைக்கப்பட்டுள்ள தேர்தல் கால 1996க்கு முந்தைய கால புகைப்படங்கள் கண்ணில் பட்டபோது பல தேர்தல் சம்பவங்கள் நினைவுக்கு வந்தன. 

1952லிருந்து யார் யாருக்கு இடையே தேர்தல் களத்தில் போட்டி நடந்தது என்பதை வேட்பாளர்களின் பெயர்களோடு பட்டியல் இதோ.

1952 - ராமசாமி (காங்கிரஸ்) -  vs  - சண்முகம்
1957 - சுப்பய்யா நாயக்கர் (காங்கிரஸ்) -  vs  - செல்வராஜ்
1962 - என்.வி. வேணுகோபால் கிருஷ்ணசாமி (காங்கிரஸ்) -  vs  - ஆர்.எஸ். அப்பாசாமி (எஸ்.டபுள்யூ.ஏ)
1967 - எஸ். அழகர்சாமி (சி.பி.ஐ.) -  vs  - வி.ஓ.சி. ஆறுமுகம் பிள்ளை (காங்கிரஸ்)
1971 - எஸ். அழகர்சாமி (சி.பி.ஐ.) -  vs  - எல். சுப்பா நாயக்கர் (காங்கிரஸ்)
1977 - எஸ். அழகர்சாமி (சி.பி.ஐ.) -  vs  - பி. சீனிராஜ் (அ.தி.மு.க.)
1980 - எஸ். அழகர்சாமி (சி.பி.ஐ.) -  vs  - வி. ஜெயலட்சுமி (காங்கிரஸ்)
1984 - ரங்கசாமி (காங்கிரஸ்) -  vs  - எஸ். அழகர்சாமி (சி.பி.ஐ.)
1989 - எஸ். அழகர்சாமி (சி.பி.ஐ.) -  vs  - கே.எஸ். இராதாகிருஷ்ணன் (தி.மு.க.)
1991 - ஆர். ஷியாமளா (அ.தி.மு.க.) -  vs  - எல். அய்யாலுசாமி (சி.பி.ஐ.)
1996 - எல். அய்யாலுசாமி (சி.பி.ஐ.) -  vs  - கே.எஸ். இராதாகிருஷ்ணன் (ம.தி.மு.க.)

இந்த தேர்தல் களங்களில் கிட்டத்தட்ட மங்கலான நினைவுகளோடு 1957ல் இருந்து சற்று நினைவுக்கு வருகிறது.  

1952 பொதுத் தேர்தலில் கட்சிகளுக்கு சின்னங்கள் இல்லாமல் வர்ணங்களை அடையாளப்படுத்திய வாக்குப் பெட்டிகள் மூலமாக தேர்தல் நடந்தது. சுயேச்சைகளுக்கு தனி வர்ணமாக ஒரு பெட்டி என்று ஒதுக்கப்பட்டது. அன்றைய தேர்தல் ஆணையர் சுகுமார் சென் நாட்டில் எப்படி தேர்தல் நடத்துவது என்று முறைப்படுத்தினார். 

மஞ்சள், கறுப்பு வர்ணமடித்த அம்பாசிடர் காரில் மைக் செட்டைக் கட்டிக்கொண்டு, வேட்பாளரும், கட்சி நிர்வாகிகளும் ஒருவர் மீது ஒருவர் நெருக்கடியில் அமர்ந்துகொண்டு அப்போது கிராமங்களுக்கு சென்று வாக்குகள் கேட்பது உண்டு.  ஒரு வேட்பாளருக்கு ஒரு கார்தான் இருக்கும். அதிகபட்சம் இரண்டு கார்கள். அன்றைக்கு ஒரு காருக்கு வாடகை வெறும் 80 ரூபாய். வேட்பாளர்கள் இப்போது போல இல்லாமல் கிராமங்களில் நிர்வாகிகள் வீட்டில் என்ன கிடைக்கிறதோ, அதை உண்டுவிட்டு கிராம பம்புசெட்டு கிணறுகளில் குளித்ததெல்லாம் பார்த்துள்ளேன். அழகர்சாமி அவர்கள் 1977ல் போட்டியிடும்போது நல்லகண்ணுவும், கோடங்கால் கிருஷ்ணசாமியும், நானும் இந்த மஞ்சள் கறுப்பு வண்டியில்தான் கோவில்பட்டி தொகுதிக்கு உட்பட்ட திருவேங்கடம், குருவிகுளம் வட்டார கிராமங்களில் வேகாத வெயிலில் பயணிப்பது உண்டு. சேவு, கருப்பட்டி மிட்டாய், வடை இவையெல்லாம் வண்டியில் வாங்கி வைத்துக்கொண்டு எங்காவது மோட்டார் கிணறில் தாகத்துக்கு தண்ணீர் குடிப்பது உண்டு. ஒரு சில இடங்களுக்கு போக்குவரத்து வசதி இல்லை என்றால், காடுகளைத் தாண்டி போகும்போது செருப்பு போட்டிருந்தாலும் காலில் முள் தைத்துவிடும். அந்த காலத்தில் கலைநிகழ்ச்சி இளையராஜா சகோதரர் பாவலர் வரதராஜன் நடத்துவார். அதேபோல தி.மு.க.வுக்கு சிவகங்கை சேதுராமன் நடத்துவார். ஒரு சில இடங்களுக்கு இரவில் செல்லவேண்டும் என்றால் வெள்ளி முலாம் பூசிய டார்ச் லைட்டும், பெட்ரோமாக்ஸ் விளக்கையும் எடுத்துக்கொண்டு மைக் இல்லாமல் கிராமங்களில் எல்லாம் பேசியது உண்டு. 1959, 1962 வரை எங்கள் பகுதியில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், சுதந்திரா, பிரஜா சோசலிஸ்ட் பார்ட்டி, சம்யுக்த சோசலிஸ்ட் பார்ட்டி என்பவை களத்தில் இருந்தன. இரட்டை மாடு பூட்டிய ஏர் (காங்கிரஸ்), நட்சத்திர சின்னம் (சுதந்திரா), கதிர் அரிவாள் (கம்யூனிஸ்ட்), மற்ற கட்சிகளுக்கு ஆலமரம், தீபம், குடிசை சின்னங்கள் எல்லாம் இருந்தன. கம்யூனிஸ்ட் கட்சி 1964ல் பிளவுபட்டபின், அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சி.பி.எம். சின்னமாக அமைந்தது. அப்போது காங்கிரஸ் வட்ட வடிவில் காளைமாட்டு சின்னத்தையும், கம்யூனிஸ்ட் சிகப்பு அட்டையில் கதிர் அரிவாளும், சுதந்திரா கட்சி நீல வண்ணத்தில் சட்டையில் குத்திக்கொள்ளும் பேட்ஜ்களை கொடுப்பார்கள். அவற்றை தபால் தலைகள், அயல்நாட்டு நாணயங்களை சேர்ப்பது போல விருப்பத்தோடு சேர்ப்பது ஒரு வாடிக்கை. 

பிரச்சாரத்துக்கு காங்கிரசில் காமராஜர், செல்லப்பாண்டியன்; கம்யூனிஸ்ட் கட்சிக்கு எம்.கல்யாணசுந்தரம்; சுதந்திரா கட்சிக்கு லட்சுமி மில் ஆலை அதிபர் ஜி.கே. சுந்தரம், என்.ஜி. ரங்கா, எஸ்.எஸ். மாரிசாமி ஆகியோர் வருவார்கள். 

1957 தேர்தலில் தி.மு.க. உதயசூரியன் சின்னத்தில் கோவில்பட்டியில் போட்டியிடவில்லை. அந்தத் தொகுதியில் உதயசூரியன் சின்னத்தை அனைத்துப் பகுதியினரும் அறியக்கூடிய வகையில் முதல் முதலாக 1989ல் போட்டியிட்டது அடியேன்தான்.

இத்துடன் இணைத்துள்ள எனக்கு முன்னாள் பிரதமர் வி.பி. சிங், வைகோ உரையாற்றும் புகைப்படம் எடுத்த கோவில்பட்டி காந்தி மைதானத்துக்கு ஒரு வரலாறு உண்டு. இந்த காந்தி மைதானத்தில் அண்ணல் காந்தி அவர்கள் உரையாற்றியுள்ளார். வ.உ.சிதம்பரனாரும் உரையாற்றியுள்ளார். பாரதிக்கும் தொடர்பு உண்டு. இதே மைதானத்தை ஒட்டிய ஒரு வாடகை வீட்டில் வ.உ.சி. ஏழ்மையில் வாடி, கோவில்பட்டி கோர்ட்டில் வக்கீலாக இருந்தார். இதே இடத்தில்தான் ஒன்றுபட்ட நெல்லை மாவட்டத்தில் 1950ல் திராவிட முன்னேற்றக் கழகத்தை அண்ணா ஆரம்பித்தபோது தலைவர் கலைஞர் அவர்கள் நெல்லை மாவட்ட தி.மு.க.வை இதே இடத்தில் கொடியேற்றி துவக்கி வைத்து உரையாற்றினார் என்பதெல்லாம் வரலாற்று செய்திகள்.  இந்த காந்தி மைதானத்தில்தான் மூதறிஞர் ராஜாஜி, ஜெயப்பிரகாஷ் நாராயணன், அப்போதைய காங்கிரஸ் தலைவர் தாரகேஸ்வரி சின்ஹா, இவர்கள் மட்டுமல்லாமல் பேரறிஞர் அண்ணா, உரையை கேட்கக்கூடிய வாய்ப்பு கிடைத்தது.  இந்த மேடையில் காமராஜர், நெடுமாறனோடு அமரவும், பிற்காலத்தில் விவசாய சங்கத்தில் பணியாற்றியபோது நாராயணசாமி நாயுடு முதல் முதலாக உரையாற்றியதும் இன்றும் மனதில் உள்ளது. கலைஞர் அவர்களின் உரையை இந்த மேடையில் பார்வையாளராக கேட்டது மட்டுமல்லாமல் அதே மேடையில் தலைவர் கலைஞரோடு அமர்ந்து உரையாற்றக் கூடிய சூழ்நிலையும் பிற்காலத்தில் உருவாகின.  வைகோ அவர்களுடன் இந்த மேடையில் பல கூட்டங்களில் கலந்துகொண்டது மட்டுமல்லாமல் அவருக்கு பிடித்த இந்த காந்தி மைதானம் சிமெண்ட்டால் கட்டப்பட்ட மேடையாகும். கலைஞர் அவர்கள் இந்த மைதானத்தில் பேசிய "இளைஞர் குரல் அன்று போலவே என்றும் ஒலித்திட.... " என்ற பேச்சை நூல் வடிவமாக என்னை 2003ல் தயாரித்து தளபதி ஸ்டாலின் அவர்களுடைய 26.10.2003 தேதியிட்ட வாழ்த்துச் செய்தியோடு வெளியிட்டபோது கலைஞர் அவர்கள் என்னை பாராட்டினார். அது இந்த மேடையில் பேசிய பேச்சுதான்.

நான் 1989ல் தி.மு.க. வேட்பாளராக போட்டியிடும்போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான எஸ். அழகர்சாமி அவர்களை எதிர்த்து களத்தில் நின்றேன். அப்போதெல்லாம் ஆரோக்கியமான போட்டியாக இருந்தது. எட்டயபுரத்தில் அவர் வீட்டிற்கே வாக்கு சேகரிக்க சென்றபோது, என்னை வரவேற்று தேனீர் கூட அருந்திவிட்டுதான் செல்லவேண்டும் என்றார்கள்.  தேர்தல் பிரச்சாரத்தில் கீழஈரால் கிராமத்தில் திரு. அழகர்சாமி அவர்களை சந்திக்கும்போது "என்னப்பா, கடுமையான உழைப்பு போலிருக்கே. முகமெல்லாம் கருப்பாய் போய்டுச்சே" என்று என்னிடம் விசாரித்து, சற்றுநேரம் தூத்துக்குடி சாலையில் உள்ள காப்பி கடையில் காப்பி சாப்பிட்டுவிட்டு, பிரச்சாரத்தில் இறங்கும்போதெல்லாம் ஒன்றும் வித்தியாசங்கள் இல்லை. அழகர்சாமி அவர்களோடு கிட்டத்தட்ட 1970களில் இருந்து நல்ல அறிமுகம். சட்டக் கல்லூரியில் சேர்வதற்கு எனக்கு பரிந்துரை செய்தவர்களில் அவரும் ஒருவர். அதையெல்லாம் நன்றியோடு எண்ணிப் பார்க்க வேண்டும். அன்றைக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தி.மு.க. வுடன் கூட்டணியில் இல்லை. வைகோ அவர்கள் பரிந்துரை செய்து, தலைவர் கலைஞர் அவர்கள் அந்தத் தொகுதியில் போட்டியிட வாய்ப்பை வழங்கினார். 

அப்போது கோவில்பட்டி நகரத்திலும், குருவிகுளம் ஒன்றியத்திலும் தி.மு.க. கிளைக் கழகங்கள் முழுமையாக இருந்தன. கோவில்பட்டி ஒன்றியத்தில் வெறும் 35 கிளைகளாக இருந்ததை தேர்தல் பணியோடு 140 கிளைகளாக அன்றைய ஒன்றிய செயலாளர் பா. முத்துவோடு இணைந்து கூடுதலாக்கி அமைத்தோம். அச்சமயத்தில் தேர்தல் களத்தில் பா. முத்து, எம்.டி.ஏ. காளியப்பன், ஈ.ச. நாராயணன், நகர்மன்றத் தலைவர் தம்பி பாலசுப்ரமணியம் போன்ற நிர்வாகிகள் என்னோடு வாக்கு சேகரிக்கும் பணியில் இருந்தனர்.

அப்போதெல்லாம் பிரச்சாரம் காலையும், மாலையும் உண்டு. ஒவ்வொரு கிராமத்திலும் வீடு வீடாக சென்று வாக்குகள் கேட்பது உண்டு. நள்ளிரவு தாண்டி 2 மணி வரை கூட பிரச்சாரங்கள் செய்வது உண்டு. ஒரு கிராமத்திற்கு சென்றால் வேட்பாளர் வந்துவிட்டார் என்று வரவேற்பும், விருந்து உபசரிப்பும் நடக்கும். கிராமத்தில் வாக்குகள் கேட்டு திரும்பும்போது என்னிடம் ஒரு கவரில் வைத்து "இந்தாங்க, இது எங்க ஊர் உங்கள் தேர்தல் நன்கொடை" என்று 5 ஆயிரம், 10 ஆயிரம் என்று தருவதுண்டு. தேர்தல் காலத்தில் பூத் செலவுக்கு பணம் கொடுத்தாலே, வாங்க கிராமத்தில் மறுத்துவிடுவார்கள். களத்தில் சுவரொட்டிகளும், பிரச்சார சாதனங்களை பிற்காலத்தில் அமைச்சரான மைதீன்கான், ஸ்ரீவைகுண்டத்தில் எம்.எல்.ஏ.வான டேவிட் செல்வின் எடுத்துக்கொண்டு வந்து கோவில்பட்டியில் ஒப்படைப்பார்கள். அப்போது கோவில்பட்டியில் அழகர்சாமி அவர்களுக்கும், எனக்கும் கடுமையான போட்டி. தலைவர் கலைஞர் அவர்கள் எனக்கு பிரச்சாரத்திற்கு வந்த பொதுக்கூட்டம் மாநாடு போல கோவில்பட்டி நெடுஞ்சாலையில் ஸ்டேட் பாங்க் அருகில் சாலையை மறித்து போடப்பட்ட மேடையில் பேசும்போது, அவ்வளவு ஆர்ப்பரித்த கூட்டம். அந்தக் கூட்டத்தில் வைகோ, ஆற்காடு வீராசாமி அவர்கள் கலந்துகொண்டனர். வைகோ அவர்களிடம் கலைஞர் அவர்கள் ராதா ஜெயித்துவிடுவார் என்று சொல்லிவிட்டு புறப்பட்டார்.  அப்போது குருவிகுளம் ஒன்றியம், கோவில்பட்டி ஒன்றியம், எட்டயபுரம் பேரூராட்சி, கோவில்பட்டி நகரம் என உள்ளடங்கி 1 லட்சத்து 43 ஆயிரத்து 671 வாக்குகள். ஆனால் பதிவானதோ 1 லட்சத்து 58 ஆயிரம் வாக்குகள். இந்த நிலையில் நான் 31,724 வாக்குகளை பெற்றேன். என்னுடைய தொகுதியில் கதிர் அரிவாள், உதய சூரியன் களத்தில் இருந்தது. மற்றத் தொகுதிகளில் எல்லாம் காங்கிரஸ், அ.தி.மு.க.வில் ஜா, ஜெ. அணிகள் என்று பிரிவு பெற்று நின்றார்கள். கோவில்பட்டித் தொகுதியில் கைச் சின்னம் நின்றிருந்தால் அல்லது ஜா, ஜெ அணி நின்றிருந்தால் 15,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருப்பேன். அரசியல் சூழல் வேறு விதமாகியிருக்கும். வைகோ அவர்களும் கடுமையான பிரச்சாரத்தை மேற்கொண்டார். 

அன்றைக்கு தூத்துக்குடி மாவட்டத்தில் என்னை விட குறைவாக வாக்குகளைப் பெற்ற குமரி அனந்தன், சாத்தான்குளத்திலும், டேனியல்ராஜ் ஸ்ரீவைகுண்டத்திலும், ஓட்டப்பிடாரத்தில் முத்தையாவும் வெற்றி பெற்றனர். அப்போது தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவராக இருந்த ஆர். ஆறுமுகம் "என்ன பிரதர், நீங்கள் எல்லாம் ஜெயிச்சிருவீங்க என்று நினைச்சேன்" என்று வருத்தப்பட்டு சொன்னதெல்லாம் நினைவில் உள்ளது.  அப்போதெல்லாம் வாக்கு சீட்டுகள்தான். வாக்கு எண்ணிக்கை முடிய கிட்டத்தட்ட 30 மணி நேரம் ஆகும். அந்த தேர்தலில் பாரதி பிறந்த எட்டயபுரம் வரை 3000 வாக்கு வித்தியாசத்தில் முன்னணியில் இருந்தேன். எட்டயபுரத்துக்கு தென்பகுதியில் இருந்த கிராமங்களில் வாக்குகள் கிடைக்காமல் அப்போது வெற்றி வாய்ப்பு இல்லாமல் ஆகிவிட்டது. 

நெல்லை தூத்துக்குடி மாவட்டத்தில் அப்போது தி.மு.க. வில் முக்கிய களப்பணியில் வைகோ இருப்பார். அப்போது இந்த இரண்டு மாவட்டத்தில் முக்கிய நிர்வாகிகளாக கருதப்பட்டவர்கள் தினகரன் கே.பி. கந்தசாமி, ஏ.எல். சுப்ரமணியம், மஸ்தான், டி.ஏ.கே. லக்குமணன், கா.மு. கதிரவன், தூத்துக்குடி இரா. கிருஷ்ணன், சுப. சீதாராமன், புளியங்குடி பழனிச்சாமி, தூத்துக்குடி பெரியசாமி, தங்கவேலு, அடியேன் போன்றவர்கள் முக்கியமாக நிர்வாகத்தில் இருந்தோம். அன்றைக்கு ஒரு பாசப்பிணைப்பு இருந்தது. 

பின் நாட்களில் 1996ல் மதிமுக சார்பில் களத்தில் இறங்கினேன். அப்போது குடைச் சின்னம். அப்போது 1,75,222 மொத்த வாக்காளர்கள். பதிவானவை 1,15,456. இதில் கம்யூனிஸ்ட் கட்சி அய்யலுசாமியிடம் வெற்றி வாய்ப்பை இழந்தேன். அப்போதும் வாக்காளர்களை சந்திக்கும்போது, பணத்தை எதிர்பார்க்காமல் அவர்களே தேர்தல் செலவை பார்த்துக்கொள்வார்கள் கிராமப்புறத்தில். அப்போது வேட்பாளருக்கு ஒரு தனி மரியாதையும் கௌரவமும் உண்டு.  எந்தவிதமான பிடுங்கலும், சிக்கலும் இல்லாமல் வீடு வீடாக, தெருத் தெருவாக வாக்குகள் கேட்பது உண்டு. தேர்தலில் வெற்றி வாய்ப்பிழந்த பின்னும், பலர் "நீங்கள் எல்லாம் இந்தத் தொகுதியில் ஜெயிலக்கலையே. எங்களுக்கு கொடுத்து வைக்கல" என்பார்கள்.  1996 தேர்தலில் மதிமுக சார்பில் போட்டியிட்ட வைகோ அவர்கள் விளாத்திகுளத்திலும், தங்கவேலு சங்கரன்கோவிலும், நான் கோவில்பட்டியிலும் டெபாசிட்டை பெற்றோம். அப்போது களத்தில் இருந்த கண்ணப்பன் சிங்காநல்லூரில், எல். கணேசன் ஒரத்தநாட்டில், பொன்.முத்துராமலிங்கம் சேடப்பட்டியில், செஞ்சி ராமச்சந்திரன் செஞ்சியில், திருச்சி செல்வராஜ் போன்றவர்கள் எல்லாம் 10 ஆயிரத்துக்கும் குறைவான வாக்குகளை பெற்றார்கள். பிற்காலத்தில் இதில் ஒரு சிலர் நாடாளுமன்றத் தேர்தலில் அமைச்சர்களும் ஆனார்கள். இதுதான் நான் சந்தித்த கடைசித் தேர்தல். 

என்னுடைய தேர்தல் களத்தில் கலைஞர், வி.பி.சிங், வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் நம்பூதிரிபாட், தளபதி மு.க. ஸ்டாலின் எனப் பல முக்கியப் புள்ளிகள் எல்லாம் தேர்தல் களப் பரப்புரையை செய்தனர். 

அன்றைக்கு இருந்த தேர்தலும் இன்றைய தேர்தலும் பார்க்கும்பொழுது பல விதத்திலும் மாறுபட்டுவிட்டது. இப்போது வேட்பாளர்களும் அதிகம். கட்சிகளும் அதிகம். அப்போது சுயேச்சைகள் இரண்டு மூன்று பேர் களத்தில் இருப்பார்கள். தேர்தல் என்றால் பிரச்சாரம் ஒரு மாதம் நடக்கும். எனவே வாக்காளரை வீடு வீடாக சந்திக்க வேண்டும். அப்போது சுவரொட்டிகள்தான் பிரதான விளம்பரம் ஆகும். அதே போல் சின்னங்கள் பொறித்த டோர் ஸ்லிப் என்பது தவிர்க்க முடியாதது. இப்போதெல்லாம் சுவர் எழுத்துக்கள், பிளக்ஸ் போர்டுகள் என வந்துவிட்டன. வாக்காளர்களை கூட்டங்களுக்கு பணம் கொடுத்து அழைத்துவரவேண்டிய கட்டாயம். அப்போது கோவில்பட்டியில் கூட்டம் என்றால் கிராமங்களில் இருந்து அவர்களே பேருந்திலோ, சைக்கிளிலோ முன்கூட்டியே வந்து காந்தி மைதானத்திலோ, கிருஷ்ணன் கோவில் தெருவிலோ, சரஸ்வதி தியேட்டர் அருகிலோ கூடி விடுவார்கள். அன்றைக்கு வேட்பாளர் தங்கள் வீட்டு பிள்ளை என்று அந்தந்த கட்சியைச் சார்ந்தவர்கள் கொண்டாடுவதெல்லாம் உண்டு. கட்சி நிர்வாகிகள் வேட்பாளர்களை அறிவித்துவிட்டால் முழு ஒத்துழைப்பும், தேர்தல் முடியும் வரை வேறு எந்த பணியிலும் கவனம் செலுத்த மாட்டார்கள். என்ன செய்ய... அது ஒரு காலம். இது ஒரு காலம். அரசியல் இன்றைக்கு ஜாதி, மதம், பணபலம், குண்டர்பலம் என்று ஆகிவிட்டது. 

ஒரு காலத்தில் சென்னையைச் சேர்ந்த ஐயங்கார் குலத்தைச் சேர்ந்த டி.டி.கிருஷ்ணமாச்சாரியர் திருச்செந்தூர் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டார். தினமணி நிறுவனர் ராம்நாத் கோயங்கா திண்டிவனத்தில் போட்டியிட்டார். சென்னை பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ஜி.ஆர். தாமோதரன் பொள்ளாச்சியில் போட்டியிட்டார். வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் மற்ற மாநிலங்களிலும் போட்டியிட்டது உண்டு. கிருஷ்ண மேனன் கேரளாவை விட்டுவிட்டு பம்பாயில் போட்டியிட்டார். திருநெல்வேலி பேட்டையில் பிறந்த காயிதே மில்லத் கேரளா மலப்புரத்தில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டார். இப்படி பல உதாரணங்களைச் சொல்லலாம். இப்போதெல்லாம் இதை நினைத்துப் பார்க்க முடியுமா? காயிதே மில்லத் வேட்பு மனுவை தாக்கல் செய்துவிட்டு திருநெல்வேலிக்கு வந்துவிடுவார். இறுதி பிரச்சார நாளுக்கு மட்டும்தான் மலப்புரத்திற்கு போவார். அந்தத் தொகுதியில் வெற்றி பெற்ற பின், மலப்புரத்தில் சாதாரண கயிற்று கட்டிலில் அமர்ந்திருப்பவரிடம், யார் வேண்டுமானாலும் தங்களுடைய குறைகளை சொல்லலாம்.  இப்படியான புனிதமான பொது வாழ்வு இப்போது புரையோடிவிட்டது. இதற்கு காரணம் யார்? இந்த சூழல் ஏன்?  நல்ல கனவுகள் மெய்ப்படாமல், சீரழிவுகள் கண்முன் தெரிகின்றன. இதற்கு தீர்வு எட்டுமா என்பதுதான் நம்முடைய ஏக்கமும் சமுதாயத்தின் தாக்கமும் கூட.  

•••••
1989 தேர்தலில் தலைவர் கலைஞர் அவர்கள், கரூர் உள்ளடங்கிய திருச்சி மாவட்டம், தஞ்சை, நாகை, அன்றைய தென் ஆற்காடு, அன்றைய செங்கல்பட்டு, அன்றைய வட ஆற்காடு, அன்றைய சேலம், தர்மபுரி, ஈரோடு, அன்றைய கோவை, நீலகிரி மாவட்டங்களில் தேர்தலுக்கு தொகுதிவாரியாக யாருக்கு வெற்றி வாய்ப்பு இருக்கும் என்று ரகசிய ஆய்வுச் செய்யச் சொல்லி பணித்தார். ஒரு 6 மாத காலம் அன்றைக்கு இருந்த எனது அம்பாசிடர் காரில் பயணம் செய்து ஹால்டா டைப்ரைட்டரில் தட்டச்சு தொகுதி வாரியாக தனிக் கோப்புகளாக செய்து அறிக்கையாக வழங்கினேன். தலைவரும், முரசொலி மாறனும் பாராட்டியதுண்டு. அப்போது திருச்சி மாவட்டத்தில் பஞ்சாயத்து சேர்மனாக இருந்தவர் கே. என். நேரு. அவர் வெற்றி வாய்ப்புள்ளவர் என்று அவர் பெயரை அங்குள்ள மக்கள் விரும்புகிறார்கள் என்று அறிக்கையில் எழுதிக் கொடுத்ததும், அதே போல விழுப்புரத்தில் அன்றைக்கு சட்டமன்ற உறுப்பினராக இருந்த வழக்கறிஞர் பழனியப்பன் மீண்டும் போட்டியிட முயற்சி செய்தார். ஆனால் டாக்டர். க. பொன்முடி அவர்கள் தெய்வசிகாமணி என்ற பெயரில் அன்றைக்கு அழைக்கப்பட்டார். அவர் பெயரையும் இந்த ஆய்வறிக்கையில் விழுப்புரம் தொகுதிக்காக சேர்க்கப்பட்டது. அதே போல செங்கல்பட்டு மாவட்ட்டம் அச்சிரப்பாக்கம் (தனி) தொகுதிக்கு ராமகிருஷ்ணன் பெயரும் சேர்க்கப்பட்டது. இந்த மூவரும் 1989ல் கழக ஆட்சி அமைந்த போது அமைச்சர் ஆனார்கள். சேலம் மாவட்டத்திற்கு சென்ற போது வி.பி. துரைசாமி பெயரை அங்குள்ள மக்கள் வக்கீல் துரைசாமி போட்டியிடலாம் என்று கருத்து சொன்னதை கொண்டு அவரின் பெயர் சேர்க்கப்பட்டது. கோவை மாவட்டம் பொங்கலூர் தொகுதியில் பொங்கலூர் பழனிசாமி மனைவியார் மறைந்த விஜயலட்சுமி பழநிசாமி இடம் பெற்றது.

இவையெல்லாம் கடந்த கால நிகழ்வுகள். இந்த பணிகள் இருந்ததால் ஆய்வுக்கு செல்லாமலே 1989ல் கோவில்பட்டி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கிடைத்தது. ஆனால் எனக்கு அன்றைக்கு இருந்த சூழலில் வெற்றி வாய்ப்பு அமையவில்லை, ஏனெனில் தமிழகத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் ஜானகி அணி, ஜெயலலிதா அணி என்று இரட்டை புறா, சேவல், காங்கிரஸ் கை சின்னம் போட்டியிட்டது. ஆனால் நான் போட்டியிட்ட கோவில்பட்டி தொகுதியில் இந்த காங்கிரஸ்,அதிமுக(ஜா) அதிமுக(ஜெ)மூன்றும் போட்டியிடவேயில்லை. காங்கிரஸ்,அதிமுக(ஜா) அதிமுக(ஜெ)என மூன்றும் போட்டியிட்டு இருந்தால் 1989ல் குறைந்தது 10,000 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுருப்பேன். என் அரசியல் பயணம் மாறி இருந்து இருக்கும்.ஆனால் இயற்க்கை,ஊழ்  என்னை சூழட்டி விட்டது.நேரடியாக திமுகவின் உதயசூரியன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கதிர் அரிவாள் களத்தில் இருந்தது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நீண்ட காலமாக சட்டமன்ற உறுப்பினராகவும் மக்களிடம் நற்பெயர் பெற்ற அழகிரிசாமி நின்றார்,அவரை எதிர்த்து நான் போட்டியிட வேண்டியிருந்தது. நான் போட்டியிட்ட போது மார்க்சிஸ்ட் கட்சியும் ஜனதா கட்சியும் தான் தோழமை கட்சிகளாக இருந்தது. இன்றைக்கும் பலர் 1989ல் திமுக பல இடத்தில் வெற்றி பெற்ற போது நீங்கள் ஏன் வெற்றி பெறவில்லை என கேள்வி கேட்பதுண்டு.

கோவில்பட்டி தொகுதியில் அன்றைக்கு மாறுபட்ட நிலை. காங்கிரஸ், ஜா, ஜெ என யாரும் போட்டியிடவில்லை. ஆனால் மற்ற தொகுதிகளெல்லாம் தனித்தனியாக போட்டியிட்டார்கள். எனவே என்னுடைய தொகுதியில் பன்முனை போட்டியில்லாமல் இருமுனை போட்டியாக இருந்ததால் வெற்றி வாய்ப்பு பறிபோனது பல பேருக்கு தெரியாமல் இருக்கலாம். இதை ஏன் இப்போது பதிவிடுகிறேன் என்றால் பல நண்பர்கள் ,சமீபமாக ‘ஏன் நீங்க 89ல் ஜெயிச்சிருக்கலாமே?’ என்ற கேள்விக்கான பதில். இதை ஆதாரமில்லாமல் நான் சொல்லவில்லை. தலைவரும் முரசொலி மாறனும் இன்று உயிருடன் இல்லை. வைகோவிற்கு நன்றாக தெரியும்.  முன்னாள் அமைச்சர் ச. தங்கவேலுவிற்கும் இது நன்றாக தெரியும். நாமக்கல் காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த பி. சித்திக், மதிமுக் நாமக்கல் வழக்கறிஞர் பழனிச்சாமி போன்றவருக்கும் தெரியும். மறைந்த சா. கணேசன் மற்றும் மறைந்த செ. குப்புசாமி மற்றும் சா.கணேசன் அவர்களுக்கும் தெரியும்.
அன்றைக்கு என்னிடம் ஓட்டுநராக இருந்தவர் இன்று இல்லை, அவருக்கும் தெரியும். மற்ற யாருக்கும் தெரியக் கூடிய வாய்ப்பில்லை. நாமக்கல் சென்ற போது, ரகசியமாக ஆய்வு செய்யும் போது ஒரு இடத்தில் நண்பர் சித்திக்கும் பழனிச்சாமியையும் தவிர்க்க முடியாமல் சந்திக்க வேண்டிய நிலைக்கு தள்ளிவிட்டது. ஏனென்றால் எல்லோரும் எளிதாக நினைப்பது பல விசயங்களை சொல்லாமல் இருப்பதால் தான் என கால நேர வர்த்தமான்கள் புரிய வைக்கின்றன. சக வழக்கறிஞர்களாக இருந்து எனக்கு அன்று தேர்தல் பணியாற்றியவர்கள், இன்று உயர் நீதிமன்ற நீதிபதிகளாகவும்,
தலைமை நீதிபதிகளாகவும், உச்சநீதிமன்ற நீதிபதிகளாகவும் உயர்ந்துள்ளார்கள். அவர்களுக்கும் தெரியும்.


அன்றைய கோவில்பட்டி தொகுதி தேர்தல்களின் மலரும் நினைவுகளை வெளிப்படுத்தும் புகைப்படங்கள்.

#ksrposting #ksradhakrishnanposting #தேர்தல் #tnelections #kovilpatti #கோவில்பட்டிசட்டமன்றத்தொகுதித்தேர்தல்கள்

#சாத்தூர் கடந்த 45ஆண்டுகளுக்கு முன் இருந்த 300க்கு மேற்பட்ட #பேனா_நிப் #ஆலைகள்_என்னவானது?

#சாத்தூரில் கடந்த 45ஆண்டுகளுக்கு முன் இருந்த 300க்கு மேற்பட்ட #பேனா_நிப் #ஆலைகள்_என்னவானது?
————————————————
அரசு மானியம் இல்லாதததும், 'லெட்' மற்றும் 'பால்பாயின்ட்' பேனா வருகையாலும் சாத்தூரில்  செயல்பட்டு வந்த 300க்கும் மேற்பட்ட பேனா நிப் தொழிற்சாலைகள் இன்று வெறும் மூன்றாக குறைந்துள்ளது. பேனாவில் தேய்மானம் என்பது அதன் நிப் மட்டுமே என்பதால் நிப்பை மாற்றினால் போதும் பேனாவை தொடர்ந்து பயன்படுத்த முடியும். இதனால் ஒரு காலத்தில் பேனாவை விட பேனா நிப் தேவை அதிகமாக இருந்தது. எங்கள் கிராமத்தை சேர்ந்த கருப்பையா ஆசாரிமகன்கள்  எனது பள்ளி  தோழர்கள் சுப்பிரமணி, மாணிக்கம் ஆகிய இருவர்சாத்தூரில் நிப் கம்பெனி நடத்தினர்.
அவர்களிடமிருந்து தெரிந்த விபரங்கள்
வருமாறு....

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் மற்றும் சுற்றுப் பகுதிகளில் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன் 300க்கு மேற்பட்ட பேனா நிப் தயாரிக்கும் தொழிற்சாலைகள் செயல்பட்டு வந்தன. 2,500க்கும் மேற்பட்டோர் இத் தொழிலில் ஈடுபட்டு வந்தனர். இந்திய அளவில் சாத்துர்ரில் மட்டுமே நிப் தொழிற்சாலைகள் இருந்தது குறிப்பிடத்தக்கது. 
அக்காலகட்டத்தில் நிப் தொழிலாளர்கள் நாள் ஒன்றுக்கு இரண்டு ஷிப்ட் ஆக இரவு பகலாக வேலை பார்த்தனர். அதன்பின் அந்த மானியம் நிறுத்தப்பட்டு விட்டது. அனைத்து துறை அலுவலர்கள் மைப் பேனா பயன்படுத்தி வந்தனர். பேனாவில் அதிகம் தேய்மானம் ஆகும் பகுதி அதன் நிப். இதனால், பேனா நிப் தேவை அதிகமாக இருந்தது. அதன் காரணமாக விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் மட்டும் 1962-ஆண்டில் 250 க்கும் மேற்பட்ட பேனா நிப் தயாரிக்கும் தொழிற்சாலைகள் இருந்ததாக ஒரு தகவல். சாத்தூரை சுற்றியுள்ள சுமார் 20 க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த சுமார் 2,500 தொழிலாளர்கள் இவற்றில் பணி புரிந்து வந்துள்ளனர். தென்னிந்திய அளவில் சாத்தூரில் மட்டுமே நிப் தொழிற்சாலைகள் இருந்தது குறிப்பிடத்தக்கது. அமெரிக்கா, ரஷ்யா, முதலான நாடுகளிலிருந்து பேனா நிப் தயாரிப்புத் தொழிலுக்காக மானிய விலையில் எவர்சில்வர் தகடுகள் வழங்கப்பட்டன.

நிப்புத் தொழிலை, சாத்தூரில் 1950-ஆம்ஆண்டுகளில்தொடங்கப்பட்டதாகும். இக்காலக் கட்டங்களிலில் இராஜகோபால ஆச்சாரி என்பவர், தன்னுடன் மேலும் சிலரையும் சேர்த்துக்கொண்டு,பேனா நிப்புத் தயாரிக்கிற தொழிலில் முதன் முதலாக ஈடுபட்டார். இவர் பித்தளையில்தான் முதலில் நிப்புகளைத் தயாரித்துள்ளார். பித்தளையில் நிப்புத் தயாரிப்பதால், ஊற்பத்திச் செலவுகள் அதிகமாக ஆனது, இதனால் சேலம் உருக்காலையிலிருந்து கழிவுத் தகடுகளை வாங்கிக்கொண்டு வந்து, அவற்றில் நிப்புத் தயாரித்தார்.

இத் தொழிலில் இவர் கண்ட வெற்றியைப் பார்த்து, அழகர்சாமி ஆச்சாரி என்பவரும் நிப்புத் தயாரிப்புத் தொழிலில் இறங்கினார். இவருடன், இவரது புதல்வாரன மனோகரன் ஆச்சாரியும், சகோதரர் வரதராஜ ஆச்சாரியும் இணைந்து இத்தொழிலை இன்னும் வேகமாக முன்னெடுத்துச் சென்றனர். அதைத் தொடர்ந்து சுத்தியல் மற்றும் வெட்டிரும்பால் தகடுகளைத் துண்டாக்கி நிப்புத் தயாரித்த நிலையை மாற்றி, இதற்கென்றே கையால் இயக்கக்கூடிய இயந்திரத்தையும் உருவாக்கி, அதன் மூலமாக நிப்புகள் உற்பத்தியை அதிகரித்து, ராஜஸ்தானில் உள்ள நிப்பு வியாபாரி ஒருவருடன் சந்தைப் படுத்தும் தொடர்பை உண்டாக்கிக் கொண்டு அவருக்கு தயாரிக்கிற நிப்புகளை விற்பனை செய்தனர்.

பின்பு இராஜகோபால் ஆசாரி மற்றும் அழகர்சாமி ஆச்சாரி கூலிமுறையில் வேலை பார்த்து வந்த தொழிலாளர்கள், தனித்தனியாக நிப்புத் தயாரிக்கிற இயந்திரத்தை வைத்து குடிசைத் தொழில் போல தனித் தனியாக தொழிலைத் தொடங்கினர்.

சத்தூரில் நிப்புக் கம்பெனிகளின் எண்ணிக்கை, சீக்கரமே 20 ஆக உயர்ந்தது. 1975 முதல் 1985 வரையிலான இந்தப் பத்தாண்டுக்கால இடைவெளியில் மொத்தம் 150 நிப்புக் கம்பெனிகள் சாத்தூரில் உருவாயின. இந்த 150 கம்பெனிகளில் 2000 க்கும் அதிகமான கூலித் தொழிலாளர்கள் வேலை பார்த்தனர்.இந்த வேகமான வளர்ச்சி காலமும் ‘நிப்புத் தொழிலின் பொற்காலம் ஆகும்.

தொழிலாளர்களுக்கும் குறைவின்றிக் காசு புழங்கும் தொழிலாய் இது இருந்தது. நாள் ஒன்றுக்கு இரண்டு ஷிஃப்ட் பகல் இரவு என வேலை பார்த்து, தினமும் 500 ரூபாய வரையில் இரட்டிப்பாகக் பெற்றனர்.

இத் தொழில் இங்குத் துவக்கப்பட்டக் காலக்கட்டங்களில், 144 எண்ணிக்கை கொண்ட நிப்பு ஒரு ‘குரோஸ்’ என நிர்ணயம் செய்யப்பட, குரோஸ் ஒன்றுக்கு 25 பைசா எனவும் கூலி நிர்ணயம் செய்யப்பட்டது. அடுத்தடுத்தக் காலக்கட்டங்களில், ஒரு ரூபாய், ஒன்றரை ரூபாய், இரண்டு ரூபாய் என கூடுதலாக்பட்டது, இதனால் ஆர்வத்துடன் இந்த சீர்ய பணியில் ஈடுபட்டத் தொழிலாளர்கள், நாள் ஒன்றுக்கு 35 முதல் 40 குரோஸ் வரையில் உற்பத்தித் திறனையும் கூடுதலாக்கினர். தொழிலாளர்களுக்கு நிர்வாகம் வாரம் ஒரு முறை கூலி தந்தது. ஏற்கனவே இப்பகுதியில் செயல்பட்டுவந்த சேவு உற்பத்தி மற்றும் தீப்பெட்டித் தொழிலுக்கு இணையான நிப்பு தொழிலாக உயர்ந்தது.
இதனால் சாத்தூர் பொருளாதார அந்தஸ்தில் வளர்ச்சி அடைந்தது.

பேபி மாடல், 2 ஆம் நம்பர் நிப்பு, 3 ஆம் நம்பர் நிப்பு, 4 ஆம் நம்பர் நிப்பு, ஐந்தரை நம்பர் நிப்பு, உருண்டை நிப்பு, ஆர்ட் நிப்பு எனப் பல விதமான ரகங்கள்  சாத்தூரில் உற்பத்தி செய்யப்படும் நிப்புத் தொழிலுக்கு காரணம், உத்திரப் பிரதேசம் உள்ளிட்ட சில வட மாநிலங்களும், நேபாளமும்தான், ஏன் என்றால் இவ்விடங்களில் மழைக் குளிர் காலங்களில் பால் பாயிண்ட் நிரப்பப்பட்டிருக்கும் மை உறைந்துவிடும் என்பதால்,இதற்க்கு பதிலாக மை நிரப்பிய நிப்புப் பேனாக்களே பயன்படும்.

நிப் தயாரிப்பு  துவங்கிய ஆரம்பகாலங்களில் நல்ல வரவேற்பு இருந்தது. 1990 காலக்கட்டத்தில்ல் பால் பாயின்ட் மற்றும் லெட் பேனாக்களின் வருகையால் மை பேனாக்கள் மற்றும் நிப்புகளின் தேவை குறைய துவங்கியது. குடிசைத் தொழிலில் வரும் இத்தொழிலுக்கு அரசின் சலுகையோ கடனுதவியோ வழங்கப்படுவதில்லை. கூடவே அரசும் நிப் தயாரிப்புக்கு அளிக்கப்பட்டு வந்த மானியத்தையும் நிறுத்தப்பட்டதால் தற்போது தொழில் நடத்தவே சிரமமாக உள்ளது. தற்போது மொத்தமே 3 தொழிற்சாலைகளில் 10 தொழிலாளர்களைக் கொண்டு நிப் தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. மீண்டும் இத்தொழில் புத்துயிர் பெற வேண்டுமானால் மானிய விலையில் எவர்சில்வர் தகடுகள் வழங்க அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்களில் பேனா பயன்படுத்துமாறு அறிவித்தால் எங்கள் தொழிலில் பலம் பெறும். 

கே. எஸ். இராதாகிருஷ்ணன்
26.04.2020
#ksrposts
*சாத்தூர்* #sattur
#நிப் #pen_nip

Sunday, April 26, 2020

*I am no bird; and no net ensnares me; I am a free human being with an independent will* *Some of the best people that ever lived have been as destitute as I am;, you ought not to consider poverty a crime* *I would always rather be happy than dignified* *There is no happiness like that of being loved by your fellow-creatures, and feeling that your presence is an addition to their comfort* #ksrpost 26-4-2020.

*I am no bird; and no net ensnares me; I am a free human being with an independent will*

*Some of the best people that ever lived have been as destitute as I am;, you ought not to consider poverty a crime*

*I would always rather be happy than dignified*

*There is no happiness like that of being loved by your fellow-creatures, and feeling that your presence is an addition to their comfort*#ksrpost
26-4-2020.

அதி காலையில் நான் கேட்பது நீ பாடும் பூபாளம் என் கண்கள் ரெண்டும் பல்லாண்டு பாடி

நீரின்றி ஆறில்லை 
நீயின்றி நானில்லை
வேரின்றி மலரே ஏதம்மா!
 
ஐயா உன் நினைவே தான்
நான் பாடும் ராகங்கள்
அப்போதும் இப்போதும் தப்பாத தாளங்கள்
கண்ணீரிலே நான் தீட்டினேன்
கன்னத்தில் கோலங்கள்...

செந்தூர பந்தம் நிலையாகும் வண்ணம்
சம்சாரத் தேரில் நானேறி வந்தேன்
நினைவாலே சிலை செய்து
உனக்காக வைத்தேன்அதி காலையில் நான் கேட்பது
நீ பாடும் பூபாளம்
என் கண்கள் ரெண்டும் பல்லாண்டு பாடி
செவ்வானமானேன் உனை தேடித் தேடி
திருக்கோவிலே ஓடி வா

#linkingofrivers #நதிநீர்இணைப்பு

#நதி_நீர்_இணைப்பு
===============
*கங்கை-கிருஷ்ணா-காவிரி-வைகை-தாமிரபரணி-குமரி நெய்யாற்றோடு இணைக்க வேண்டும்*

*கேரளாவில் மேற்கு நோக்கி பாயும் நதிகளின் உபரி நீரையும், அங்குள்ள அச்சன்கோவில்-பம்பை-தமிழகத்தின் (சாத்தூர்)வைப்பாறோடு இணைக்கவேண்டும்+
————————————————-
உச்சநீதிமன்றத்தில் இந்திய நதிகள் தேசியமயமாக்கப்பட்டு, கங்கை-கிருஷ்ணா-காவிரி-வைகை-தாமிரபரணி-குமரி நெய்யாற்றோடு இணைக்க வேண்டும். கங்கை குமரியை தொடுவதோடு, கேரளாவில் மேற்கு நோக்கி பாயும் நதிகளின் உபரி நீரையும், அங்குள்ள அச்சன்கோவில்-பம்பை-தமிழகத்தின் வைப்பாறோடு இணைக்கவேண்டும் என்ற எனது வழக்கை 1983ல் தொடுத்து, 30 ஆண்டுகாலம் (2012 பிப்ரவரியில் தீர்ப்பு வந்தது)அதற்கெல்லாம் போராடியது நண்பர்கள் அனைவருக்கும் தெரியும். வழக்கின் மனுக்களில் குறிப்பிட்ட பிரச்சினைகள், தரவுகள், செய்திகள், புள்ளி விவரங்கள் அனைத்தும் இந்தியா டுடே ஆங்கில இதழில்ஒரு முக்கிய பத்தியாக வெளியாகியுள்ளது. நதிநீர் இணைப்புக்கு சிறு அணிலாக என்னால் முடிந்த முயற்சி இந்த அளவு நதிநீர் இணைப்பு பிரச்சினைகளில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது ஆறுதலோடு மகிழ்ச்சியை தருகிறது. இன்றைக்கு இல்லை என்றாலும், என்றோ ஒரு நாள் கங்கை குமரி வழியாக இந்தியப் பெருங்கடலை தொட வேண்டும். அது பாரதியின் கனவு கூட.

Why linking rivers won't work
======================

Deep inside India's most celebrated big cat haven-the Panna Tiger Reserve-a red line, freshly painted over the khaki outcrops of ancient Vindhyan sandstone, marks the alignment of the proposed 77-metre-high, 2.03 km-long Dhaudan dam on Madhya Pradesh's Ken river. It will be the first of some 3,000 big dams and storage structures that Prime Minister Narendra Modi's government wants to build as part of a grand plan to interlink and redesign the natural flow of 37 major rivers. The aim is to end water scarcity, while booting up for the country's future water needs.

It's an audacious, some say "hubristic", venture. Touted as the world's largest irrigation infrastructure project, the Interlinking of Rivers (ILR) programme proposes 30 river links. ILR will see the excavation of 15,000 km of new canals to relocate 174 cubic km of water-enough to annually supply over 100 mega-metropolises the size of Delhi or Mumbai. The National Water Development Agency (NWDA), which has designed the projects-14 for Himalayan rivers and 16 in peninsular India-as part of the National Perspective Plan (NPP) for Water Resources Development since 1982 is already listing the "benefits".

Ultimate idea

NWDA director-general S. Masood Hussain, 56, who has over three decades' experience in designing mega dam projects, including the Indira (Narmada) Sagar, says the ILR will double India's current 42,200 megawatt hydropower generation (from medium and major projects), adding 34 additional gigawatts to the capacity. Also designed to irrigate 35 million monsoon-dependent hectares, Masood says ILR is the only realistic means to raise the country's irrigation potential from 140 million to 175 million hectares by 2050, when the population is projected to touch 1.6 billion.

But 'unofficial' estimates published by the Delhi-based South Asia Network on Dams, Rivers and People (SANDRP) say the project will displace nearly 1.5 million people from their homes. This caused by the submergence of at least 27.66 lakh hectares of land needed for the storage structures and the network of planned canals. And it's not just the human cost. The overall land area going under includes 104,000 hectares currently under natural forest cover, including reserves and sanctuaries. 

It will also be an astronomically expensive adventure. Initially pegged at Rs 5.6 lakh crore at 2002-03 prices, Union water resources, river development and Ganga rejuvenation minister Uma Bharti tells india today that "ILR will now cost Rs 11 lakh crore". This includes cost of land acquisition, compensation and construction. Hussain says final cost outlays for individual links will only be known after the "detailed project reports (DPRs) have been techno-economically approved" in each case.

An old dream

Dreams of bending river courses aren't anything new. In 1858, Arthur Thomas Cotton, a British military engineer, proposed navigable canal links between major rivers to serve the East India Company ports and deal with recurrent droughts in the southeastern provinces. In 1972, Kanuri Lakshmana Rao, India's irrigation and power minister in three successive regimes, mooted an ambitious 2,640 km-long canal that would transfer monsoon floodwaters from the Ganga near Patna to the Cauvery in the south. Two years later, Dinshaw J. Dastur, a commercial pilot-turned-water management expert, advocated long-distance irrigation through a network of 'garland canals' in the Himalayas and the Western Ghats.

Grand notions of interconnecting rivers continued to exercise the country's water bureaucracy, and a decade after Dastur's proposal was discarded as economically unviable, the NWDA was established as an autonomous society under the water resources ministry to examine ILR proposals mooted in the 1980 NPP. The NWDA has completed reports for 14 peninsular and nine of 14 Himalayan river-linking projects. DPRs are currently in place for four 'priority' links in peninsular India. Successive governments, significantly, chose to ignore the NWDA proposals for years. This went on until October 2002 when a Supreme Court bench asked for action. Avidly pushed by then PM A.B. Vajpayee, a national task force was put together amid grand proclamations. Little, however, happened.

Dream coming true

After a full decade of considered disdain under UPA-I and UPA-II, during which then environment minister Jairam Ramesh described the proposal as "disastrous", the ILR programme has got a strong second wind under NDA-II. "Atalji's dream of linking rivers is our dream as well. This can strengthen the efforts of our hard-working farmers," Modi tweeted after a poll rally in Bihar in April 2014, signalling his intent more than a month before moving from Gandhinagar to Delhi.

The Centre's confidence flowed from a second judgement in February 2012, wherein an SC bench including then chief justice S.H. Kapadia and National Green Tribunal (NGT) chairman Swatantra Kumar, said the programme was "in the national interest". They ordered the creation of a "special committee for inter-linking of rivers".

Acting with predictable alacrity, Modi's administration constituted a special committee under the water resources ministry on September 23, 2014. An independent task force too was established in April 2015 under the ministry's chief advisor, B.N. Navalawala, to identify means of fast-tracking projects and to bring on board many of the reluctant states. Now, 22 months after Modi took office, construction is ready to begin on the first project-a link canal that will annually transfer 1,074 million cubic metres (MCM) from the Ken river at Dhaudan (inside Panna Tiger Reserve) in Madhya Pradesh to the Betwa river, 221 km to the south in Uttar Pradesh.

The first among five "priority links", there's a palpable sense of urgency about Ken-Betwa. Bharti calls it a "model project" which plans to allocate a third of projected outlay-Rs 6,323 crore of Rs 15,000 crore-to environment management and rehabilitation. Hussain talks about the payoffs-"irrigation to 6.35 lakh hectares across Chhatarpur, Tikamgarh and Panna in MP, and Mahoba, Jhansi and Banda in UP; domestic drinking water for 13.42 lakh people in both states; and 78 MW of power from two hydropower stations". It all sounds too good to be true.

Bad science, good science

"It is," says Himanshu Thakkar, 53, SANDRP's convenor, who has spent most of his life battling big dam lobbies. He calls the SC's February 27, 2012 judgement "judicial overreach". Focusing on the Ken-Betwa project, Thakkar questions the very wisdom of the ILR programme. "There's simply no scientific evidence to justify what the government wants to attempt," he says. He says the NWDA's simplistic identification of 'water surplus' and 'water deficit' river basins is premised on "flimsy and dubious scientific data".

Thakkar believes many of NWDA's water balance studies (for 137 basins and sub-basins) have been "deliberately manipulated", while most feasibility reports since 1982 "are outdated because water use patterns since then have far outstripped availability in almost all basins". Thakkar also points to the fact that the NWDA has "deliberately overlooked examining the complete water resource management options before decreeing a particular river basin as 'surplus' or 'deficit'".

Water balance studies, their basis for showing the Ken is surplus and the Betwa dry, are prejudiced, he says. "Both rivers are in the same situation." On the ground too there is scant evidence of any "surplus". By October, the Gangau, an old weir 2.5 km downstream from where the 77-metre-high Dhaudan dam is to be built, is almost out of water. The predominantly Adivasi residents of Dhaudan, like nine other villages inside the Panna Reserve, are back to using contaminated old wells for their needs. The Ken, shrivelled in the wake of another failed monsoon (2015), is too distant. Things are worse downstream in Panna district.
"Betwa mein paani zyada hai (the Betwa has more water)," Mohan Lal Gautam, a guard at the famous temples of Khajuraho located nearby, is visibly surprised by the plan to transfer water from the Ken to the Betwa. Then resignation sets in: "Sahib, ye government ke kaam hai, kuchh bhi ho sakta hai (Sir, this is the government's work, anything can happen)."

Outside the dense teak forests too, the farmlands are decidedly desiccated. Shyamendra Singh, 52, who runs the popular Ken River Lodge adjoining the tiger reserve, is still taking stock of the drought situation. He says scores of distressed small farmers and farm workers have migrated in search of work. The Ken catchment has witnessed many monsoons of alternating flood and drought. Water activists point to "concomitant floods and droughts in both Ken and Betwa basins", to challenge the NWDA's assertions of the Ken as a surplus river.

Hussain argues that the criticisms "are based on apprehensions, fears and preconceived notions without scientific basis". Seated at an expansive writing table inside the NWDA's well-appointed chambers in south Delhi, he makes a compelling case for big dams: "The development debate in India has been very unfair-activists oppose projects to serve vested interests and the press plays along," he says, a trifle impatiently, asserting that "the reality is, India needs more big dams".

There are some statistics to support this view. A 2015 Food & Agriculture Organisation's water development and management unit report ranks India below Mexico, China and South Africa in per capita water storage (from large and small dams). With an annual storage capacity of 250 BCM (billion cubic metres), the average Indian has access to just 225 cubic metres of water (from storage reservoirs) annually. This is "minuscule" compared to, say, Russia's 6,130 cubic metres or even China's 1,111 cubic metres. Per capita water availability (1,545 cubic metres from all sources) is precariously close to 'stress' levels. Over 220 million Indians make do with under 1,000 cubic metres, the minimum level.

Those pushing the ILR programme insist it's the "only way forward". They point to India's projected 2050 population of 1.6 billion. "We need to boost foodgrains production from the 265 million tonnes now to 450 million tonnes, which is impossible without unconventional mechanisms like ILR," Hussain says.

Dangerous delusion

But could the Modi government be chasing a dangerous dream? Consider this: M&M (major and medium) irrigation projects or big dams account for 16 million hectares which is a fourth of the total irrigated area (66-68 million hectares) in the country. "The maximum coverage ever achieved (17.7 million hectares) from M&M projects was in 1991-92," Thakkar says, pointing to the largely ignored fact that over 60 per cent of India's current irrigation needs are met from groundwater and small irrigation projects. And this is going up with every passing year.

Not just that. The November 2000 report by the World Commission on Dams concluded that a mere 10-12 per cent of India's foodgrains production comes from big dams. But it is groundwater that has been India's real lifeline,Thakkar says. It is estimated to be 70 per cent more productive than canal irrigation, it needs to be sustained by protecting traditional recharge systems. If implemented, the ILR programme, he says, would seriously jeopardise the very resource that sustains India's food security.

Former water resources secretary and a determined ILR opponent, the late Ramaswamy Iyer had dismissed it as "technological hubris", famously saying that a river wasn't "a bundle of pipes which can be cut, turned and welded at will". Equally vehement, Thakkar says the gargantuan scale would play havoc with groundwater recharge "because river courses-the most important recharge areas-completely lose their capacity to replenish aquifers because of being denied flows downstream of the dams".

The ILR's detractors say the programme entails environmental tinkering on an epic scale-destruction of natural rivers, aquatic and terrestrial biodiversity, salinity ingress and a significant increase in methane emissions from storage reservoirs. Activists say "the cumulative devastation from 30 ILR projects will be irreversible".

And that's not the half of it. Mihir Shah, 59, Planning Commission member from 2009-14, points to the evidence that "the (ILR) scheme will deeply compromise the very integrity of the monsoon cycle". Inflows from rivers help maintain high sea-surface temperatures in the Bay of Bengal, critical for creating low-pressure areas and intensification of the monsoon. Shah says reducing the flow of river waters into the sea could bear "serious long-term consequences for climate and rainfall in the subcontinent".

Interestingly, there are dissenters to ILR even within the BJP. Women & child development minister Maneka Gandhi, a former environment minister herself, openly criticised river-linking projects on TV while speaking on India's role in climate change and global warming on December 4 last year. In May 2014 too, days before she found a place in Modi's cabinet, she had declared linking two rivers was "extremely dangerous".
Meanwhile, Maharashtra CM Devendra Fadnavis, whose consent is critical for the ILR projects on Damanganga-Pinjal and Par-Tapi-Narmada-two other projects Delhi hopes to fast-track-also seems sceptical. During an assembly debate last July, the CM stated that despite having 40 per cent of India's big dams, 82 per cent of the state remains rain-fed. Fadnavis called for a return to watershed management and conservation instead of pushing big dams for irrigation.

Many states have opposed the ILR programme questioning the NWDA's water balance assessments. Odisha turned down a proposal on the ambitious Mahanadi-Godavari link project days after a central team briefed CM Naveen Patnaik in June 2015. Responding to concerns over extensive submergence from the big dam at Manibhadra, the Navalawala task force is drafting alternative strategies. The Mahanadi-Godavari link is critical to the construction of eight other downstream river links.

Refusing to cut any slack, Bharti is promising (if she doesn't "face any hurdles") to complete the first three priority river links in the next seven years. But the start date for the Ken-Betwa (Phase One) has already been missed twice, last in March 2016. Hussain told india today on April 12 that a fresh date for implementation could only be set after clearances from the National Wildlife Board and the water resources ministry's Environment Appraisal committee. At the end of the day, Ken-Betwa will also need to be cleared by the Supreme Court since it involves interventions in a protected wildlife reserve.

In March 2012, Centre for Science & Environment director-general Sunita Narain said, "The idea of interlinking rivers is appealing as it is so grand. But this is also why it is nothing more than a distraction that will take away from the business at hand-to provide clean drinking water to all." So is that what it is, just a grand distraction?
கே. எஸ். இராதாகிருஷணன்
26.04.2020
#ksrposting
#ksradhakrishnanposting

#நானும்_அரசியல்_செய்யணும்ல”

“#நானும்_அரசியல்_செய்யணும்ல”
————————————————
இன்று காலை  தென் மாவட்டத்தைச் சார்ந்த நண்பர்,அரசியலில் இருக்கும் புள்ளி  ஒருவர்  நீதிமன்ற  வழக்கு குறித்தான உதவிக் கேட்டு பேசினார். 

எண்பதுகளில்  இருந்து ஏதோ  ஒரு வகையில் தேர்தலில் வெற்றிப் பெறுவார். இன்றைக்கு  அவர்  பேசிக்கொண்டிருக்கும் போது “நானும் அரசியல் செய்யணும்ல” என்றார். நான் குறுக்கிட்டு, “வியாபாரம் செய்வாங்க, ஓட்டல்  நடத்துவாங்க,   சினிமா தியேட்டரை நடத்துவாங்க, ‘இதென்ன நானும் அரசியல் செய்யணும்ல’ சொல்றீங்களே, புரியலயே,’’ அரசியல தத்துவம் எப்படி வந்தது தெரியுமா?” என்று கேட்டேன். “அண்ணாச்சி அதெல்லாம் எனக்கெதுக்கு? ஏதோ தேர்தல்ல போட்டியிட்டோமா ஜெயிச்சோமா, பதவிய வாங்குனோமா, இருந்தோமான்னு இருக்கணும்”. சரிதானே” கமிஷன் கடை  வியாபாரி மாதிரி பேசினார்.இவருக்கு மக்கள் நல அரசியல் தெரியவில்லை.  தன்  நல அரசியல் இவருக்கு பிடி படுகிறது.
அவரை பற்றி நன்றாகத் தெரியும், நயா பைசாவுக்கு கூட கணக்கு பார்த்து கறாராக  இருப்பவர் அவர். வெறுங்கையில் வெள்ளைக் காக்கையை ஓட்டுவார். இப்படி அவர் பேசியதைப் பார்த்து என்ன சொல்ல முடியும்..
அவ்வளவுதான். 

#அரசியலில்_அரசியல்......

#அரசியல்_இல்லாத_அரசியல் .....

#அரசியலே_வேண்டாம்_என்பதிலும் #அரசியலே......

என்று சூட்சமமாக in between the lines அறியக் கூடிய விஞ்ஞான அரசியலைப் படித்துள்ளோம். 

‘அரசியல் செய்யணும்ல’ என்பதை இதுவரை கேள்விப்படவில்லை. இந்த பதத்தை உருவாக்கிய இந்த ‘அரசியல் நிபுணரைப் பார்த்தால் ப்ளாட்டோவோ, பிதாகரசோ, டைசியோ, வேர் போன்ற அரசியல் பண்டிதர்கள் நடையைக் கட்டி விடுவார்கள். எல்லாம் சுய ஆதாயம், இருத்தல் நிமித்தம், ஊடக வெளிச்சம்தான்.
இங்குதான் #தகுதியே_தடை அல்லவா

கே. எஸ். இராதாகிருஷணன்
26.04.2020
#ksrposts

#சங்கரன்கோவில்_சுல்தான்_பிரியாணி

#சங்கரன்கோவில்_சுல்தான்_பிரியாணி
===========================சங்கரன்கோவில் என்றால் ஆடித் தபசு, நவநீத கிருஷ்ணன் லாலா கடை அல்வா, குல்குந்து, விடியற்காலையில் அசைவ ஆட்டுக் கால் சூப்பு, சுல்தான் ஹோட்டல் பிரியாணி, நெல்லை சாலையில் உள்ள பழைய தாலுகா ஆபிஸ், தற்போதைய பள்ளி வாசலில் அருகில் உள்ள பஸ் ஸ்டாண்ட், கோமதி சங்கர் திரையரங்கம், உயர்நிலைப்பள்ளி, அக்காலத்தில் அம்பலவாணன் பிள்ளை தாளாளராக இருந்து நடத்திய மடத்துப்பட்டி கோபாலநாயக்கர் கலைக் கல்லூரி, டாக்டர் சீனிவாசன் மருத்துவமனை நினைவுக்கு வரும் அடையாளங்களும், குறியீடுகளும். இதில் சுல்தான் ஹோட்டல் பிரியாணியைப் பற்றி சொல்ல வேண்டும். என்னுடைய மாமனார் பெரும்பத்தூர் கிராமத்தைச் சார்ந்த சங்கரப்பன், சங்கரன்கோவில் ஊராட்சி ஒன்றிய சேர்மன் சண்முகசாமி, காங்கிரஸ் நிர்வாகி அமராவதிநாடார்,மேலநீலித


நல்லூர் சேர்மன் முத்துப்பாண்டியனோடு இந்த பிரியாணி கடைக்கு பள்ளிக் காலங்களில் அழைத்துச் செல்வார்கள்.  அங்குள் பென்ஞ்சில் உட்கார்ந்துகொண்டு, அன்றைய அரசியல் பேசிக்கொண்டே இந்த பிரியாணி சாப்பிடுவது வாடிக்கை.  மறைந்த சுல்தான் அவர்கள் என் மீது பாசமாக "என்ன மாமா" என்று சிறுவனாக இருக்கும்போது அழைப்பார். எனக்கு அப்போது அர்த்தம் என்னவென்றே தெரியாமல் இருக்கும். என்னுடைய மாமா சங்கரப்ப நாயக்கர், மாவட்ட சுதந்திரக் கட்சித் தலைவராக இருந்த ராமானுஜ நாயக்கருடன் அந்த வட்டாரத்தில் பணிகளை செய்வார். இந்தியாவின் மூத்த அரசியல்வாதியாக இருந்த என்.ஜி. ரங்கா, ராஜாஜிக்கு மிகவும் நெருங்கியவர்.  அவர் ஒரு முறை இந்த பிரியாணிக் கடையில் சாப்பிட்டுவிட்டு ஹைதராபாத் பிரியாணியைவிட சுவையாக இருக்கின்றது என்று பாராட்டியது இன்றைக்கும் நினைவில் உள்ளது. வேறொரு சமயம் டெல்லியில் அவரை சந்திக்கும்போது இதை நினைவுபடுத்தும்போது மகிழ்ச்சியோடு அவர் சொல்லிய பாராட்டு வார்த்தைகள் இன்றைக்கும் நினைவில் உள்ளது.

தலைப்பாக்கட்டு பிரியாணி (திண்டுக்கல்), ஆம்பூர் பிரியாணி,ஹைதராபாத் பிரியாணி,மலபார் பிரியாணி,பெங்கால் பிரியாணி, சிந்தி பிரியாணி என பல ஊர்களின் பெயர்களில் புகழ்பெற்ற பிரியாணிகளைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம். ஒவ்வொன்றுக்கும் ஒரு ருசி என்றாலும் சங்கரன்கோவில் பிரியாணி தனித்தன்மை வாய்ந்தது.  சங்கரன்கோவில் சுல்தான் ஹோட்டலில் செய்யப்படும் ஆட்டிறைச்சி பிரியாணி மிகவும் பிரபலம். இந்த பிரியாணி தூத்துக்குடி, நெல்லை, விருதுநகர் மாவட்டங்களில் வளர்க்கப்படும் கன்னி என்ற வகையைச் சேர்ந்த ஆடுகளை கொண்டு தயாரிக்கப்படுகிறது.

பயன்படுத்தும் அரிசியும், எண்ணெய்யும், மற்ற மூலப்பொருட்களை கவனமாக பதப்படுத்தி, வித்தியாசமான முறையில் செய்யப்படுகின்றது. இன்றைக்கும் பிரியாணிகள் பல இடங்களுக்கு செல்லும்போது அவ்வளவு விருப்பத்தோடு உண்ண மனம் வருவதில்லை. ஏனெனில் சங்கரன்கோவில் பிரியாணியை உண்டுவிட்டு, ஏனைய பிரியாணிகள் உண்ண மனம் வரவில்லை.இதற்க்கு ஓர் தனித்தன்மையான ருசி, மனம் உண்டு.இது ஒவ்வொருவருடைய விருப்பத்தைப் பொறுத்தது.  ஆனால் சங்கரன்கோவில் சுல்தான் பிரியாணியை உண்டால், திரும்பவும் அந்த பக்கம் போகும்போது பிரியாணியை சாப்பிட்டுவிட்டு போவோம் என்றுதான் மனம் உத்தரவு போடும்.  பாரம்பரியமாக தொடர்ந்து அதே சுவையை நிலைநாட்டி வருகின்ற சுல்தான் ஹோட்டலுக்கு பாராட்டுக்கள்.

#சங்கரன்கோவில்சுல்தான்பிரியாணி #பிரியாணி 

கே. எஸ். இராதாகிருஷ்ணன்
26.04.2020

#ksrposting 
#ksradhakrishnanposting

Saturday, April 25, 2020

A_wisdom_to_share- ——————————- #The_best_and_most_intelligent_public #speech_ever_made_during #Covid_19. #SALUTE_to_his #Excellence

#A_wisdom_to_share- 
——————————-
#The_best_and_most_intelligent_public #speech_ever_made_during #Covid_19. #SALUTE_to_his #Excellence .#Ugandan_President_HE #KAGUTA #MUSEVENI (inspired)#address_to_his_nation. 

Uganda President KAGUTA MUSEVENI warns against people misbehaving during this COVID-19 period, "God has a lot of work, He has the whole world to look after. He cannot just be here in Uganda looking after idiots...". Below is his reported statement.
"In a war situation, nobody asks anyone to stay indoors. You stay indoors by choice. In fact, if you have a basement, you hide there for as long as hostilities persist. During a war, you don't insist on your freedom. You willingly give it up in exchange for survival. During a war, you don't complain of hunger. You bear hunger and pray that you live to eat again

During a war, you don't argue about opening your business. You close your shop (if you have the time), and run for your life. You pray to outlive the war so that you can return to your business (that's if it has not been looted or destroyed by mortar fire).

During a war, you are thankful to God for seeing another day in the land of the living. During a war, you don't worry about your children not going to school. You pray that the government does not forcefully enlist them as soldiers to be trained in the school premises now turned military depot.

The world is currently in a state of war. A war without guns and bullets. A war without human soldiers. A war without borders. A war without cease-fire agreements. A war without a war room. A war without sacred zones.

The army in this war is without mercy. It is without any milk of human kindness. It is indiscriminate - it has no respect for children, women, or places of worship. This army is not interested in spoils of war. It has no intention of regime change. It is not concerned about the rich mineral resources underneath the earth. It is not even interested in religious, ethnic or ideological hegemony. Its ambition has nothing to do with racial superiority. It is an invisible, fleetfooted, and ruthlessly effective army.

Its only agenda is a harvest of death. It is only satiated after turning the world into one big death field. Its capacity to achieve its aim is not in doubt. Without ground, amphibious and aeriel machines, it has bases in almost every country of the world. Its movement is not governed by any war convention or protocol. In short, it is a law unto itself. It is Coronavirus. Also known as COVID-19 (because it announced its destructive presence and intention in the year of our Lord 2019)

Thankfully, this army has a weakness and it can be defeated. It only requires our collective action, discipline and forbearance. COVID-19 cannot survive social and physical distancing. It only thrives when you confront it. It loves to be confronted. It capitulates in the face of collective social and physical distancing. It bows before good personal hygiene. It is helpless when you take your destiny in your own hands by keeping them sanitized as often as possible.

This is not a time to cry about bread and butter like spoilt children. After all, the Holy book tells us that man shall not live by bread alone. Let's obey and follow the instructions of the authorities. Let's flatten the COVID-19 curve. Let's exercise patience. Let's be our brothers' keeper. In no time, we shall regain our freedom, enterprise and socializing."

In the midst of EMERGENCY, we practice urgency of service and the urgency of love for others✨
God bless us all.....

#ksrpost
25-4-2020.

என் மண்…. என் பூமி….. #கரிசல்காடு

என் மண்…. என் பூமி….. #கரிசல்காடு  The beauty of village.  The beauty Of nature  Love of everything  village #கேஎஸ்ஆர்போஸ்ட்  #ksrpost  20-6...