Thursday, April 23, 2020

#உயிரற்ற_கொரோனா_உணர்த்தும் #சமூகவியல்_பாடம். #CORONA_has_turned_ordinary #people_into_philosophers.

#உயிரற்ற_கொரோனா_உணர்த்தும் #சமூகவியல்_பாடம்.
#CORONA_has_turned_ordinary #people_into_philosophers.
————————————————
#இயற்க்கையை_யாரும்_மீற_முடியாது...
#The_world’s #a_stage

All the world’s a stage,
And all the men and women merely players;
They have their exits and their entrances;
And one man in his time plays many parts,
His acts being seven ages. At first the infant,
Mewling and puking in the nurse’s arms;.......
-#WILLIAM_SHAKESPEARE (Today 23rd April,his brith day)

கரானாவைப்பற்றி  இங்குள்ளவர்
களிடமும்  அமெரிக்க, கனடா, ஐரோப்பா, ஆஸ்திரேலியாவில் வசிக்கும் நன்பர்கள் மருத்துவர்கள் வழக்கறிஞர்கள் அரசியல் களத்தில் உள்ளவர்கள் என்ற நிலையில் நண்பர்களிடம் உறவினர்களிடம் கடந்த சில நாட்களாக பேசிக் கொண்டிருந்த போது மனதில் சில கருத்துகளை அறியக் கூடிய வாய்ப்புகள் கிடைத்தன. அவை



1. கரானாவை வரும் மே, ஜூன் மாதத்திற்குள் பிரச்சனை முடிந்து சகஜ நிலைக்கு வருமா என்பது கேள்விக்குறி தான். 2021 வரை கூட இந்த பிரச்சனை இருக்கலாம் என்று படுகிறது.

2. இப்படி கால நிர்ணயம் இல்லாமல் இந்த பிரச்சனை நீடித்தால் ஏற்படும் சிக்கல்களும் தாக்கங்களையெல்லாம் எப்படிஎதிர்கொள்ளப்போகின்றோம்.
கடும்  விளைவுகள்  சொல்முடியா பாடுகளை எப்படி நாம் மட்டுமல்ல உலகமே கடக்க வேண்டும்.இன பாகுபாடுகள், புவி அரசியல், நாட்டு அரசியல், வட்டார அரசியல் வரை தாக்கங்கள், போக்குகள் திசை மாறி
செல்லும்.

3. இந்நோயால் அரசாங்ககளே பொருளாதாரத்தில் திக்குமுக்காடும் போது பொதுமக்கள் என்ன செய்ய முடியும் என்பது தான் வேதனையான விடயம். #டார்வின்_கொள்கைப்படி ஒவ்வொருவரும் எந்த நிலையுலும் வாழ வேண்டும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டால் நாகரீகமான அமைப்பு ரீதியான சமுதாயத்தில் அமைப்பு பாழ்பட்டு விபரீதங்கள் நடந்து விடுமோ என்ற ஐயப்பாடு எழுகின்றது. சமநிலையான தீர்வுகள் அனைவருக்கும் கிடைக்க வேண்டிய உரிமைகள் சலுகைகள் எந்த அளவு சாத்தியமாக கிடைக்குமென்பதும்காலவரையில்
லாமல்  இந்த கரானா பிரச்சனை நீடித்தால் இதையெல்லாம் எப்படி தீர்க்க முடியும்?

4. இந்த வருடம் பீகார் மற்றும் ஜம்மு காஷ்மீரில் சட்டமன்ற தேர்தல்கள் நடக்க வாய்ப்பில்லை. அடுத்த வருடம் 2021 சட்டமன்ற தேர்தல் தமிழகம், புதுச்சேரி, கேரளம், மேற்கு வங்கம், அசாம் நடத்த வேண்டும். அதுவும் எப்படியான சூழ்நிலை அமையுமென்பது தெரியவில்லை. பிரச்சனைகளை விவாதிக்க நாடாளுமன்றமும் சட்டமன்றமும் கூடக் கூடிய வாய்ப்பு சாத்தியம் தானா. 

5.இந்த நோயினுடைய வீரியம் நீண்டுக் கொண்டாலோ மீண்டும் தொற்றிக் கொண்டாலே என்பதெல்லாம் கவனிக்க வேண்டிய விடயம். கரானா சிக்கல் ஒரு பக்கம் இருந்தாலும் மழையளவு திருப்தியாக அமைந்தால்தான் குடிநீர், மின் உற்பத்தி, விவசாயம் மற்றும் வேறு சில பிரச்சனைகள் இல்லாமல் இருக்க முடியும். இப்படி ஒவ்வொரு கோணத்திலும் பார்க்கும்போது இந்த கரானா முடிவுக்கு வந்தால் தான் வேறு எந்த அவசிய பிரச்சினையும் நாம் எதிர்கொள்ள முடியும். 

6.இனி வருங்காலங்களில் மக்கள் அதிகமாக கூடுகின்ற திருமணங்களோ, நிகழ்ச்சிகளோ, மாநாடுகளோ, அரசியல் கூட்டங்கள் (பணம்  கொடுத்தும்,
பிரியாணி வழங்கியும் அழைக்க வேண்டியது இல்லை)
கருத்தரங்கங்களோ, சினிமா அரங்கங்களோ, பெரிய வணிக வளாகங்களோ இன்னும் ஒரு ஆண்டுக்கு மக்கள் செல்ல்லத் தயங்குவார்கள். 

7.நிச்சயமாகவிமானம், ரயில், பேருந்து பயணத்தில் இனி கூட்டத்தோடு பயணிக்க தயக்கமிருக்கும். பயண நெருக்கடிகள் இருக்காது.

மேலும்;

•அமெரிக்கா முன்னணி நாடு அல்ல.
•உலக நலனைப் பற்றி சீனா ஒருபோதும் சிந்திக்காது.
•இந்தியர்களின் நோய் எதிர்ப்பு சக்தி உலக மக்களை விட மிக அதிகம்.
•இந்தியப் பணக்காரர்கள் பலர் நற்குணம் நிறைந்தவர்கள்.

பொருளாதாரத்தை சரி செய்தல், அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்தல்,  கொரானாவால் ஏற்பட்ட பாதிப்பிலிருந்து மீண்டு வருதல் என இப்படியான கவலை தருகின்ற உணர்வுகள் நம மனதை வாட்டுகின்றது

ஒற்றைக் குடும்பத்தை விடக் கூட்டுக் குடும்பம் சிறந்தது என தோன்றும்.
இருப்பதை வைத்துக் கொண்டு எளிமையாகவும்,மாசு இல்லா சூழலில் வாழக் கூடிய நிலைக்கு மக்கள் தள்ளப்படுவார்கள்,அது ஒரு நல்ல செய்தி தான்.

கே. எஸ். இராதாகிருஷ்ணன்
23.04.2020
#ksrposts

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...