Tuesday, February 28, 2023

இன்று மயிலாப்பூர் சென்ற போது, கிழக்கு மாட வீதிப் பகுதியில் காளத்தி கடை

இன்று மயிலாப்பூர் சென்ற போது,  கிழக்கு மாட வீதிப் பகுதியில்   காளத்தி கடை கண்ணில் பட்டது. இந்தக் கடையில்  ரோஸ் மில்க் நன்றாக இருக்கும். வேலுப்பிள்ளைபிரபாகரன், சுப்பிரமணியன், காலை மாலை நேரங்களில்  இங்கே ரோஸ் மில்க் அருந்துவது உண்டு. மணமாகவும், ருசியாகவும் இருக்கும் .நினைவுக்கு வந்தது.கடையில்  பெரிய அலங்காரம் இருக்காது. தகரத்தாலான  பெயர் பலகை கொண்ட கடையாக இருக்கும்.

#ksrpost
28-2-2023.


இந்திய அரசியல் சாசன நிர்ணயக் குழு இந்திய அரசியல் சாசனம் *CONSTITUTION OF INDIA* *INDIAN CONSTITUTION ASSEMBLY* கே.எம்.முன்ஷி *K.M.MUNSHI*

இந்திய அரசியல் சாசன நிர்ணயக் குழு
இந்திய அரசியல் சாசனம் 
*CONSTITUTION OF INDIA*
*INDIAN CONSTITUTION ASSEMBLY*
கே.எம்.முன்ஷி
*K.M.MUNSHI*
 K.S.Radhakrishnan

கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
#KSRPost

https://youtu.be/_zQDMtkCx0I
28-2-2023.

#சல்மான் ருஷ்டியின் ‘விக்டரி சிட்டி’ வெற்றி நகரம் என்ற #விஜயநகரம்

#சல்மான் ருஷ்டியின் ‘விக்டரி சிட்டி’
வெற்றி நகரம் என்ற #விஜயநகரம் 
—————————————
 
ருஷ்டியின் மீது படுகொலைத் தாக்குதலுக்குப் பின் வந்த இந்த அவருடைய படைப்பின் மீது பல எதிர்பார்ப்புகள் இருந்தன. அதற்கான முன்னெடுப்புகளைப் போலவே புரமோஷனும் அதிகமாகவே இருந்தன. கடந்த மாதம் விஜய நகரின் ஹம்பிக்குச் சென்றுவிட்டு, அதைக் குறித்தான ஒரு கட்டுரையைத் தினமணி நாளேட்டுக்கு எழுதினேன். அது வெளிவந்த நாளன்றே சரியாக ருஷ்டியின் இந்த விக்டர் சிட்டி வெளியிடப்பட்டது. அதற்கு அடுத்தநாள் விக்டரி சிட்டி கையில் கிடைத்தது. பல்வேறு பணிகளுக்கு இடையில் பொறுமையாக கையில் பென்சிலை எடுத்துக் கொண்டு முக்கிய பகுதிகளை படிக்கும்போது மார்ஜின் ஓரத்தில் குறித்துக் கொண்டு பல சிந்தனைகளோடு படித்து முடித்தேன். இதைப் படிக்கும்போது, மதுரா விஜயம், கிராவின் கோபல்ல கிராமம், ஃபர்காட்டன் எம்பயர் எல்லாம் நினைவில் வந்தன.
இந்திய வரலாற்றில் தக்காண பீடபூமி முதல் ஏறத்தாழ திருநெல்வேலி வரை தீபகற்ப இந்தியாவில் ஆட்சியில் இருந்த விஜய நகர அரசைப் பற்றியான வரலாற்றுப் படைப்பாகும். கடந்த 10- 15 நாள்களுக்கு முன்பு வெளியான இந்த படைப்பு, அனைத்துத் தரப்பினரின் கவனத்தையும் ஈர்த்தது.
விஜயநகரப் பேரரசு என்ற வெற்றி நகரம் 12,13 ஏன் 15 ஆவது நூற்றாண்டு வரை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அதோடு மட்டும் இல்லாமல், முகலாயர்கள் தெற்கே தீபகற்ப இந்தியாவை நோக்கி படையெடுத்து வந்ததைத் தடுத்தி நிறுத்தியதில் விஜயநகரப் பேரரசுக்கு பெரும் பங்குண்டு.
சல்மான் ருஷ்டி இந்த வரலாற்றுப் படைப்பை வரலாற்றோடு பின்னிப் பிணைந்து அதன் சொல்லாடல்களை அதற்கேற்ற வகையில் பயன்படுத்தியுள்ளார். கிடைத்த தரவுகள், ஆவணங்கள், செய்திகளைக் கொண்டு மட்டும் இல்லாமல், வரலாற்றுப் புனைவாக  கச்சிதமாக வரலாற்றைத் திரிக்காமல் வெகுஜன மக்களும் படிக்கக் கூடிய சுவையோடு சொல்லியுள்ளார். மக்கள் விரும்பும் அணுகுமுறையில் வாசகர்களை மனதைக் கொள்ளை கொள்ளக் கூடிய வகையில் புனைவுகளை படைப்பது சல்மான் ருஷ்டிக்கு நிகர் சல்மான் ருஷ்டியே.
வார்த்தைகளைப் பிரயோகிக்கும் முறையின் மூலமே வாசகர்களுக்கு ஈர்ப்பை ஏற்படுத்திவிடுகிறார். வரலாற்றுப் பாடம் மாதிரி இல்லாமல் கதையாடல் என்ற நிலையில் வரலாற்றுத் தரவுகளோடு மக்களின் மொழியில் எழுதுவதுதான் படைப்பு புதினமாகும்.
ருஷ்டியின் இந்தப் படைப்பில் தமிழ்நாடு, கள்ளர் - மறவர்கள், தெலுங்கு பேசுபவர்கள், சோழர்கள் என்ற குறிப்புகள் உள்ளன. நடராஜர், மதுராவிஜயம், சம்புவராயர்கள், தமிழகத்தின் சில தரவுகள் என்று ஆங்காங்கே தென்படுகின்றன. ‘சூடிக் கொடுத்த சுடர்க்கொடி’ தமிழை ஆண்ட ஆண்டாளும் இந்தப் புதினத்தில் வருவதுமாக தமிழ் மண் வாசனை தெரிகின்றது.  உணவுகள், அதிரசம், பாயசம், விருந்துகள். நடனங்கள், தமிழ்க் கலாசாரம் என நிரவி இருக்கும் இந்த நாவல் படிக்க மிகவும் சுவையாக உள்ளது. ருஷ்டியே இந்த நாவலைக் குறித்து  கீழ்க்குறிப்பிட்டவாறு எழுதியுள்ளார்:  
1.வரலாறு என்பது தவிர்க்க முடியாதது. அதுவே நிகழ்கால, வருங்காலத்துக்கு வழிகாட்டியாகத் திகழும். (History is the consequence not only people’s actions, but also their forgetfulness.)
2. Fictions could be as powerful as histories, revealing the new people to themselves, allowing them to understand their own natures and the natures of those around them, and making them real.
 
விஜயநகரப் பேரரசு துங்கபத்திரா, கிருஷ்ணா என்ற இரண்டு நதிகளின் ஓரத்தில் தென்னாட்டு நாகரிகம், கலாசாரம், இலக்கியம், மக்கள் வாழ்வியல், மதங்கள், அரசியல் என்ற பல கோணங்களிலும் மக்களாட்சி என்ற நிலைக்கு அரசைக் கொண்டு சென்று அதுபற்றிய பெரும் விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தியது. அதற்கான அடித்தளத்தையும் அமைத்தது. விஜயநகரம் கி.பி.1336 ஆம் ஆண்டு நிறுவப்பட்டு, பெருநகரமாக திட்டமிடப்பட்டு அமைக்கப்பட்டது. அதனுடைய எச்சங்களாக இன்றைக்கு ஹம்பி திகழ்கின்றது. இந்தப் பேரரசு கி.பி.1565 வரை கௌசால்யர்கள், காக்கத்தியர்கள், சோழர்கள், பாண்டியர்கள் போன்றவர்கள் அரசாண்ட பகுதிகளைத் தனது ஆட்சி எல்லைகளாகக் கொண்டு விரிந்திருந்தது. இந்த ஆட்சியில் இந்துக்களை அணிதிரட்டியது ஒருபக்கம் இருந்தாலும், தமிழகத் தொடர்புகளும் அதிகமாகவே அடர்த்தியாகவே இருந்தன.  
கேரளத்தை நோக்கி படையெடுத்துச் சென்றபோது மலையாள அரசர் மிகவும் கீழே இறங்கி வேண்டிக் கொண்டதால், திருவாங்கூர் பக்கம் செல்லாமலேயே விஜயநகர சாம்ராஜ்ய மன்னர்கள் இந்த எல்லைகளோடு நின்று கொண்டனர்.
விஜயநகர ஆட்சியைச் சொல்லும்போது,  கிருஷ்ண தேவராயர்தான் கண்முன் வருவார். ஆனால் இந்த படைப்பில் பம்பா கம்பனா என்பவர்தான் நாயகி. இவள் 247 ஆண்டுகால ஒற்றை வாழ்க்கை என்பது பல வினாக்களை வாசகர்கள் மத்தியில் எழுப்புகிறது. இவள் இளவரசியா அரசியா கவிஞரா வரலாற்று ஆய்வாளரா என அறிய முற்படும்போது நம்முன் ஏற்படும் விசாலமான பார்வை வெவ்வேறு கோணத்தில் வெவ்வேறு திசையில் சென்று இதற்கான தெளிவுகளையும், விடைகளையும் நாமே தேடிக் கொள்ள வேண்டியதுதான். அரசனுக்குப் பல மனைவிகள். அந்த நாட்டை நோக்கி போர் வருகின்றது. அரசன் கொல்லப்படுகின்றான். அரசன் மனைவிகள் அத்தனை பேரும் கணவனை இழந்துவிட்டார்கள் என்ற நிலையில் அத்தனை பேரும் சதியில் தங்களைத் தாங்களே எரித்துக் கொள்கிறார்கள். அந்தநிலையில் எரிந்த அரசனின் மனைவியின் மகள்தான் பம்பா கம்பனா.
இந்த கொடிய நிகழ்வுக்குப் பிறகு, பம்பா கம்பனா ஆற்றலும் தெய்வீக சக்தியும் வந்துவிடுகிறது. அதன் மூலமாக தன் யுக்திகளை வைத்து நகரத்தையும் நிலத்தையும் உருவாக்கி அந்த இடத்தில் மக்களை பம்பா கம்பனா படைக்கிறார். அத்தோடு இல்லாமல் அந்த மக்களின் பிறப்பின் நோக்கத்தை காதில் சொல்லி அந்த நகரத்தையும் மக்களையும் வளர்க்கிறாள். அரசர்கள் பிறக்கிறார்கள். ஆட்சிகள் நடக்கின்றன. பராக்கிரமங்களைப் பார் போற்றுகின்றன. போர்களில் வெற்றியும் தோல்வியும் மாறி மாறி கிடைக்கின்றது. சமயங்கள் வளர்கின்றன. கோவில்கள் கட்டப்படுகின்றன. கலைகள், இசைகள் வளர்கின்றன. இப்படி உச்சத்துக்குச் சென்ற அந்த ஆட்சியும் அந்த நகரும் அழிவதை அதே அரச வம்சத்தினர்  கண்ணால் பார்க்கக்கூடிய நிலையும் வருகிறது.
இந்த நிகழ்வுகளை எழுதி ‘ஜெயா பர ஜெயா’ (ஜெயா என்றால் வெற்றி. பர ஜெயா என்றால் தோல்வி ) என ஏட்டில் தலைப்பிட்டு எழுதி பானையில் பாதுகாப்பாக மூடிவிடுகிறாள். பின்பு அதாவது யாரென்று தெரியாத அனாமதேயரால் கண்டுபிடிக்கப்படுகிறது. 2400 கவிதை நடை சொல்லாடல்கள் உள்ள இந்த ஆவணச் சுவடுகள் பின் அனைவரின் பார்வைக்கும் வருகிறது. இதைப் பற்றிச் சொல்வதன் மூலம் விஜயநகரப் பேரரசின் எழுச்சி, அது கடந்து வந்த விதம், அதனுடைய வீழ்ச்சி ஆகியவற்றை ருஷ்டி நம்முன் கொண்டு வருகிறார்.

https://www.facebook.com/100085887452567/posts/154274790778769/?d=w&mibextid=0cALme

#சல்மான்_ருஷ்டியின் ‘#விக்டரி_சிட்டி’
 #விஜயநகரம் 
#vijayanagaraempire
#hampi

கே.எஸ். இராதா கிருஷ்ணன்.
K.S.Radhakrishnan. 
#KSR_Post
28-2-2023.

#Ksr_Voice


Monday, February 27, 2023

சந்திரசேகர சீதாராம் திவாரி என்ற சந்திரசேகர ஆசாத் .

சந்திரசேகர சீதாராம் திவாரி என்ற சந்திரசேகர ஆசாத் தனது பதினான்காவது வயதில் காந்தி துவக்கிய ஒத்துழையாமை இயக்கத்தில் கலந்து கொண்டார். அகிம்சைப் போராட்டத்தில் கைது செய்யப்பட்ட அவர் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார். நீதிபதி ஆசாத்திடம் உன் பெயர் என்ன என்று கேட்டபோது விடுதலை வேட்கை கொண்ட ஆசாத் "என் பெயர் ஆசாத்" , என் தகப்பனார் பெயர் "சுதந்திரம்" என்று பதிலளித்தார். ஆச்சரியப்பட்ட நீதிபதி "நீ எந்த ஊர்?" என்று கேட்டபோது "எனது ஊர் சிறைச்சாலை" எனப் பதிலளித்தார்.

      வெள்ளைக்கார I.C.S.அதிகாரியான நீதிபதி சிறுவனின் பதிலை கேட்டு கடுங் கோபம் கொண்டு 15 பிரம்படி கொடுக்குமாறு உத்தரவிட்டார். பிரம்படி கொடுப்பதற்கு முன்னால் போலீசார் ஆசாத்தை பிடித்துக் கயிற்றால் கட்டத் தொடங்கிய போது ஆசாத் திமிறியவாறு உரத்த குரலில் நீதிபதியைப் பார்த்து எதற்காக என்னை கயிற்றால் கட்டுகிறீர்கள்?  நான் சும்மா நிற்கிறேன்; நீங்கள் பிரம்பால் அடியுங்கள் என்று சத்தம் போட்டு சொன்னார். போலீஸ்காரன் பிரம்பால் ஆசாத்தின் உடல் முழுவதும் 15 அடி அடித்தான். ஒவ்வொரு அடி விழுகின்ற போதும் ஆசாத் "வந்தே மாதரம் ;  காந்திஜிக்கு ஜே"  என்று உரத்த குரலில் முழக்கங்களை எழுப்பினார். அவரது மென்மையான உடல் முழுவதும் ரத்த விளாறுகளாகிவிட்டது. அன்று முதல் புரட்சி காரராக உருமாறினார். விரைவில் புரட்சிக் கட்சியில் உறுப்பினரானார்.

   காகோரி ரயில் கொள்ளை 1925ஆம் ஆண்டில் நடந்தது. பிரிட்டிஷ் ஆட்சியாளர்களை நடுங்க வைத்த கொள்ளை அது. லக்னோ நகருக்கு மேற்கே இருந்த ஒரு சிறிய ரயில்வே ஸ்டேஷன். அங்குதான் ரயிலை நிறுத்தி அரசாங்க கஜானா பணம் கொள்ளையிடப்பட்டது. இந்திய விடுதலைப் போரில் இந்த ரயில் கொள்ளை ஒரு அத்தியாயமே ஆகும். பாசஞ்சர் ரயில் இரண்டாம் வகுப்புப் பெட்டியில் ஏறிய அஷ்பா குல்லா கான், சசீந்திர நாத், ராஜேந்திர லாகிரி ஆகிய மூன்று இளைஞர்கள் சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தினர். ராம் பிரசாத் பிஸ்மில், கேசவ் சக்கரவர்த்தி, முராரி லால், முகுந்தலால், சந்திரசேகர ஆசாத், பன்வாரிலால்,மன்மதநாத் குப்தா ஆகியோர் மூன்றாம் வகுப்புப் பெட்டியில் ஏறினர். பின்பு எஞ்சின் டிரைவரையும், கார்டையும் அசைய விடாமல் செய்தனர். ரயிலிலிருந்து கஜானா பெட்டியை மட்டுமே கொள்ளையிட போவதாகவும் பயணம் செய்யும் மற்ற எவருக்கும் எவ்வித தீங்கும் செய்ய மாட்டோம் என்றும் அவர்கள் அறிவித்தனர். பாதுகாப்பிற்காக இரண்டு தோழர்கள் துப்பாக்கிகளோடு ரயிலின் இருபுறமும் நின்றார்கள். கஜானாப் பெட்டியை இறக்கி அதில் இருந்த பணம் முழுவதையும் அள்ளி மூட்டை கட்டிக்கொண்டு நகரத்திற்கு சென்று விட்டனர். கொள்ளையடிக்கப்பட்ட பணமும் கிடைத்த ஆயுதங்களும் பத்திரமான இடத்தில் கொண்டு சேர்க்கப்பட்டன. இந்நிகழ்ச்சி பிரிட்டிஷ் அரசை கதிகலங்க வைத்தது.சந்திரசேகர ஆசாத், முகுந்தன்லால் ஆகிய இருவரைத் தவிர மற்றவர்களை பிரிட்டிஷ் அரசு கைது செய்து மூவர் தூக்கு மேடைக்கும் மற்றவர்கள் ஆயுள் சிறைக்கும் அனுப்பியது.

    ககோரி கொள்ளை முடிந்ததும் ஜான்சி நகருக்கு போய்விட்டார். அன்று முதல் நிரந்தர தலைமறைவு வாழ்க்கையை மேற்கொண்டார். இவரது வெற்றிகரமான தலைமறைவு வாழ்விற்கு அவரது உருவம் ஒரு காரணம் என்றே கூறலாம். நிதானமான உயரம், பருத்த வலிமையான உடல் அமைப்பு கொண்டவர். ஒரு பூணூல்,குடுமி, கையில் ஒரு பாகவதபுத்தகம் இவற்றோடு கதாகாலட்சேபம் செய்யும் பாகவதராக வேடமிட்டு மாறிவிடுவார். சாதாரண தொப்பி,வேட்டி, ஜிப்பா என ஒரு பணக்கார வியாபாரி ஆகிவிடுவார். அழுக்கு உடைகளோடு பணக்கார வீட்டு வேலைக்காரனாக மாறிவிடுவார். அதாவது சூழ்நிலைக்கேற்ப மாறு வேடமிட்டு தப்பிச் செல்வதில் மிகவும் திறமையானவர். அவரது சூட்சும அறிவும், எச்சரிக்கை உணர்வும் கடைசி வரை அவரை பிடிபடாமல் பாதுகாத்தது.

   லாகூர் நேஷனல் கல்லூரி மாணவர்களோடும், பகத்சிங் மற்றும் தோழர்களோடும் அவருக்கு உறவு ஏற்பட்டது. பகத்சிங்கை "தம்பி இன்குலாப் " ,அதாவது புரட்சி தம்பி என்றே அன்புடன் அழைப்பார்.

  பல மாநிலங்களைச் சார்ந்த போலீசார் ஆசாத்தை பல வழக்குகளுக்காக வலைவீசி தேடிவந்தனர். அவரைப் பிடித்துக் கொடுப்பவர்களுக்கு ஆயிரக்கணக்கான ரூபாய்கள் சன்மானமாக தருவதாக மாநில அரசுகள் அறிவித்தன.இந்துஸ்தான் சோசலிஸ்ட் குடியரசு படையின் தளபதியாக சந்திரசேகர ஆசாத்தை முன்மொழிந்தவர் பகத்சிங். அதுமுதல் இனிமேல் *  நான் இந்து மதவாதி யல்ல; பிராமணனுமல்ல; இனி நான் இந்தியன்; இனி சாதி மத வேறுபாடுகளை ஒருபோதும் பின்பற்ற மாட்டேன்; இனி நாம் அனைவரும் ஒன்று *  என்று பிரகடனம் செய்து தலைமறைவு வாழ்க்கைக்காக குடுமியை வெட்டிக் கிராப் வைத்து முறுக்கு மீசையும் வைத்துக் கொண்டவர். அன்று நடந்த கூட்டத்தில் தனது பூணூலை அறுத் தெறிந்தவர்.

     லாலா லஜபதி ராயின் மண்டையை உடைத்த போலீஸ் டிஎஸ்பி சாண்டர்ஸை திட்டமிட்டபடி பகத்சிங்கும் ராஜகுருவும் சுட்ட பிறகு டிஏவி கல்லூரியின் மாணவர் விடுதிப் பக்கம் ஓடிவிட வேண்டும் என்றும் ஆசாத் அவர்கள் தப்பிச்செல்ல கவசமாக நின்று கண்காணிக்க வேண்டுமென தீர்மானிக்கப்பட்டு அதன் படி ஆக் ஷனில் ஈடுபட்டனர் . ஆனால் துப்பாக்கி ரவைகள் காலியாகி விட்டதால் ஓடுவதைத் தவிர பகத்சிங்கிற்கும் ராஜகுருவிற்கும் வேறு வழி தெரியவில்லை. அவர்களைப் பின்தொடர்ந்து ஏட்டு  சனன்சிங் ஓடி பிடிக்க முயன்றான்.சனன் சிங் வேகமாக பாய்ந்து பகத்சிங்கை பிடிக்க தனது பலமான கைகளை நீட்டிய போது ஆசாத் சுட வேண்டிய சூழல் ஏற்பட்டது. முதல் குண்டு அவனது தொடையை துளைத்தது. அப்போதும் அவன் ஓடிக்கொண்டிருந்தான். ஆசாத் மீண்டும் சுடவே சனன் சிங் வயிற்றில் குண்டு பாய்ந்து குப்புற விழுந்து இறந்தான் மூன்றுபேர் சேர்ந்தாற்போல் ஓடும்போது ஒருவனை மட்டும் குறிவைத்து சுட்டு வீழ்த்த ஆசாத் ஒருவரால்தான் முடியும். ஒவ்வொரு செயலையும் திட்டமிட்டு உறுதியோடு நிறைவேற்றுவது ஆசாத்தின் தனி சிறப்பாகும்.

   லாகூரில் இச்சம்பவம் நடந்தபோது ஒரு குருவி கூடத் தப்பிப் போக முடியாதபடி பலத்த கண்காணிப்பு இருந்தது.எனினும் ஆசாத் சாது வேடமிட்டு தீர்த்த யாத்திரை குழு ஒன்றுடன் சேர்ந்துகொண்டார். சாதுகளோடு சாதுவாய் ரயிலில் ஏறி லாகூரில் இருந்து மதுரா வழியாக ஆக்ராவிற்கு தப்பிச்சென்றார். அவசியமில்லாமல் யாருக்கும் தன்னை அறிமுகம் செய்து கொள்ளமாட்டார். ரகசியக்காப்பு விதிகளை கடுமையாக பின்பற்றினார்.கட்சியை குறித்து அதிகப் பிரசங்கம் செய்ய மாட்டார். சந்திக்க போகிறவர்கள், பேசவிருக்கும் விஷயம் எதையும் அனாவசியமாக யாருக்கும் தெரிவிக்க மாட்டார். டெல்லி சதி வழக்கிலும் பிரதான குற்றவாளியாக இருந்த ஆசாத்தை பிடித்துக் கொடுத்தால் 5000 ரூபாய் பரிசு என்று அரசு அறிவித்தது. அவருடைய உருவப்படம் (பூணூலுடன் மீசையை முறுக்கியவாறு உள்ள படம் )  எல்லா ரயில்வே ஸ்டேஷன் களிலும், பொதுமக்கள் கூடும் இடங்களிலும் ஒட்டப்பட்டது. ஆனால் கடைசிவரை போலீசாரால் அவரை பிடிக்க முடியவில்லை. அவரை யாரும் காட்டிக் கொடுக்க முன்வரவில்லை. ஆசாத்தை கண்டவுடன் சுட்டுக் கொல்லும்படி அனைத்து மாநில அரசுகளும் போலீசாருக்கு உத்தரவிட்டிருந்தன.

     1931ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 27 ஆம் நாள் காலை 10 மணிக்கு அலகாபாத்தில் உள்ள ஆல்பிரட் பார்க்கில் சந்திக்குமாறு போலீஸ் உளவாளியாக மாறிவிட்ட நண்பன் கடிதம் எழுதியிருந்தார்.நண்பனின் அழைப்பை நம்பி ஆசாத் ஆல்பிரட் பூங்காவிற்கு வந்த போது போலீஸ் படை சுற்றி வளைத்தது. இதை உணர்ந்த ஆசாத் தனது கைத்துப்பாக்கியை வெளியில் எடுத்தபோது துரோகி நண்பன் ஓடிவிட்டான். போலீசார் ஆசாத் மீது சுடத் தொடங்கியபோது ஒரு மரத்தின் பின்னால் நின்றுகொண்டு ஆசாத் திருப்பி சுட்டார். தொடர்ந்து சுட்டுக் கொண்டே இருந்தார். பல போலீஸ்காரர்கள் குண்டடிபட்டு விழுந்தனர். இறுதியில் போலீசாரின் குண்டடிபட்டு ஆசாத் கீழே விழுந்தார் போலீசார் நெருங்கிவந்து சுட்டனர். பலமுறை சுட்ட பின்பும் அவரது உடலை நெருங்கவே போலீசார் அஞ்சினர். பலமுறை சுட்டு துப்பாக்கி சனியன்களால் குத்தி உயிர் போய்விட்டது என்பதை உறுதி செய்து கொண்ட பிறகு அவரது உடலை நெருங்கினர்.14 வயதில் விடுதலைப் போரில் குதித்து பத்தாண்டுகள் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து இடைவிடாது போராடிய ஆசாத் வெள்ளைக்காரர்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தார். கடும் போரில் தனது 24 வது வயதில் விழுந்தார். தனது இறுதி மூச்சுவரை சுதந்திரத்திற்காக வே போராடி வாழ்ந்தார். அதனால்தான் தனது பெயரோடு விடுதலை என்ற பொருள் படும் விதத்தில் ஆசாத் என்பதை சேர்த்துக்கொண்டார். தான் உயிரோடு இருந்தவரை போலீஸ்காரர்கள் யாவரும் தன்னை நெருங்கவே முடியாதபடி செயல்பட்டார். போலீஸ்காரர் சுட்ட குண்டு ஆசாத்தின் தொடையைத் துளைத்தது. அவர் கீழே சாய்ந்து விட்டார். " அவர் கீழே சாயாவிட்டால் போலீஸ்காரர்கள் யாரும் உயிரோடு திரும்பி இருக்க முடியாது. ஆசாத்தை பிடிக்கச் சென்ற போலீஸ் பட்டாளத்தின் தலைமை அதிகாரிக்கு ஆசாத் சுட்டதில் இரு கைகளும் ஊனம் ஆகிவிட்டன. ஒரு புரட்சி இயக்கத்தின் தளபதியாக இருப்பதற்கு பொருத்தமானவர் தான் சந்திரசேகர ஆசாத் " என்று போலீஸ் அதிகாரி சிஐடி பிரிவு எஸ்.பி குறிப்பிட்டிருக்கின்றார்.

         அலகாபாத் ஆல்பிரட் பூங்காவில் ஆசாத்திற்கும் பிரிட்டிஷ் போலீசாருக்கும் நடந்த போரில் ஆசாத்துக்கு பாதுகாப்பு கவசமாக நின்றது வேப்பமரம்.அந்த வேப்பமரத்தை புனித மரமாக எண்ணி தினமும் நூற்றுக்கணக்கானோர் வந்து அஞ்சலி செலுத்தி விட்டு சென்றனர். அந்த மரத்தை உணர்ச்சி மேலீட்டால் தொட்டுப்பார்த்து பரவசமடைந்தனர். இதைக் கண்டு பொறுக்காத பிரிட்டிஷ் அரசு அடுத்த சில வாரங்களிலேயே அந்த மரத்தையும் வெட்டி சாய்த்தது. ஆசாத்தை நினைவுபடுத்தும் உயிர் இல்லாத மரம் கூட பிரிட்டிஷாரை அந்த அளவிற்கு பயமுறுத்தி உள்ளது. இறந்தும் பிரிட்டிஷ் அரசுக்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்த, மறக்கப்பட்ட சந்திரசேகர ஆசாத் என்ற மாவீரனை என்றும் நினைவு கூர்வோம்.



( 27 .02. 1931 - 27.02 .2020).

How many times did Velupillai Prabhakaran get ‘killed’?

How many times did Velupillai Prabhakaran get ‘killed’?
Look at the numerous news reports about his death since 1980s….
It was falsely reported that he was shot dead by the Sinhalese Army on 5th Sep 1984 but he was in Tamil Nadu at that time.
It was claimed by the Sinhala government that Prabhakaran was killed on 25th July, 1989 in a fight between Prabhakaran and Mathaiya. Puppet Chief Minister Varadaraja Perumal also  vouched this.
The Sinhalese government spread the news that Prabhakaran had drowned in the sea on 24th Decemeber 2004 when the tsunami struck. The next day, Prabhakaran’s picture with Norwegian Foreign Minister appeared in newspapers and proved that news was wrong.
On 15 December 2007, the Sinhalese government claimed that Prabhakaran had died in an airstrike. That too had gone wrong.
The Sinhalese government eventually confirmed that his body was found in Mullivaikal on 18 May 2009 and Karuna identified it as Prabhakaran. Udayananayakkara, an Army officer, initially said it was not Prabhakaran later withdrew his statement due to insistence of the Sinhalalese government.
One genuine concern is, if Prabhakaran was dead, what stopped the media especially Television channels from broadcasting the footages of the spot where he was said to have died and from where his body was said to have been recovered? There is no evidence to support this. Even if that was true, Rajapaksa would have taken the body to Colombo and displayed in front of international journalists.
The funny part was that his body was sent for the genetic test by 11 am and by 12.15 pm it was confirmed that it was Prabhakaran. Generally, it will take at least a week to get the results of any genetic test.
Earlier on 17 May 2009, it was announced that he was killed. It should be noted that the above mentioned army officer, Udayananayakkara gave a news to Reuters stating it was not Prabhakaran. The Sinhalese government also claimed that the body of Prabhakaran, who was killed on 17 May 2009, was recovered on 18 May 2009 in an ambulance in Vadapulam, Mullivaikal.  There were confusing reports stating that Sinhalese Armywere fired at from the ambulance and so Army had to retaliate with gunfire. It was also mentioned that later the Ambulance was abandoned and when they went there, they found Prabhakaran’s body.
Some people even claimed they had cremated Prabhakaran’s body and thrown the ashes into the sea. So many messages are doing rounds.
It should be noted that the death and DNA certificate of Prabhakaran and also Sinhala Government’s official white paper were not discussed in the Sri Lanka Parliament.
There have also been scenes in the past that Prabhakaran himself was reading the headline in a newspaper which stated “Prabhakaran killed”.
This post is to state that all these aspects must be kept in mind…

தமிழகத்து உரிமைகள், நதி நீர் சிக்கல்கள் மற்றும் ஈழத்தமிழர் பிரச்சனைகள்

பிப்ரவரி  24 அன்று  ராஜ்பவனில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியைச் சந்தித்து பல விடயங்களைப் பேசினேன் என்பதை ஏற்கனவே பதிவிட்டிருந்தேன். 

மேலும்,தில்லியில் சில முக்கியப் புள்ளிகளை அழைப்பின் பேரில் வெகு விரைவில் சந்தித்து பேச இருக்கிறேன். தமிழகத்து உரிமைகள், நதி நீர் சிக்கல்கள் மற்றும் ஈழத்தமிழர் பிரச்சனைகள் குறித்தும் ஏதேனும்  ஆலோசனைகள் இருந்தால் என்னிடம் தெரிவிக்கலாம்.

ஈழத்தமிழர் பிரச்னை, தமிழ்நாட்டு நதிநீர்ப் பிரச்னைகள், தமிழக உரிமைகள்  என நான் தொடர்ந்து பேசிக் கொண்டு வருகிறேன். வேறு எந்தப் பதவி குறித்த எண்ணமோ, நோக்கமோ எனக்குக் கிடையாது .அப்படி ஒன்றும் எனக்குப் பதவி தேவையில்லை என்பதுதான் என் கருத்து.

 இன்றைக்கு தமிழக உரிமைகள், ஈழத்தமிழர் பிரச்னைகள் பற்றி என்னை அழைத்துப் பேசக் கூடிய அளவுக்கு முக்கிய பொறுப்பிலிருப்பவர்கள் எல்லாம் என்னை அறிந்து வைத்திருக்கிறார்கள். இதுவே எனக்குக் கிடைத்துள்ள அங்கீகாரம்.  நான் சாமானியன்தான். ஆனால் என்னை அழிக்க முடியாது.

#ksrpost
27–2-2023.

#வேலுப்பிள்ளை பிரபாகரன். #தமிழகஅரசியல்

#வேலுப்பிள்ளை பிரபாகரன். #தமிழகஅரசியல்

கே.எஸ். இராதா கிருஷ்ணன்.
K.S.Radhakrishnan.  #கேஎஸ்ஆர்

#ksrpost 
27-2-2023.
https://youtu.be/XSSBb0UyomI

Sunday, February 26, 2023

#Meeting with Tamilnadu Governor #தமிழக ஆளுநருடன் சந்திப்பு #ksr voice

#Meeting with Tamilnadu Governor
#தமிழக ஆளுநருடன் சந்திப்பு #ksr voice #ksradhakrishnan #prabhakaran #KSR Post












#கேஎஸ்ஆர்போஸ்ட்#கே.எஸ்.இராதாகிருஷ்ணன்



26-2-2023





https://youtu.be/kzl3E55B5Gs https://youtu.be/kzl3E55B5Gs

#எனது சுவடுகள்-11 KSR கேஎஸ்ஆர்

#எனது சுவடுகள்-11   

உனக்கு இதுதான் சரி என்பார்கள்
நீயும் அதை ஆமோதிப்பாய்
உனக்கு இது வேண்டாம் என்பார்கள்
நீயும் அதை ஆமோதிப்பாய்
உனக்கு இதுவே நல்லதென்பார்கள்
நீயும் அதை ஆமோதிப்பாய்

அவர்கள் 
இப்படித்தான் உன் வாழ்வை 
கொஞ்ச கொஞ்சமாய் தம்வசப்படுத்துவார்கள்
அவர்கள் உனக்கு இதுதான் சரி என்பார்கள்
நீயும் அதை ஆமோதிப்பாய்
உனக்கு இது வேண்டாம் என்பார்கள்
நீயும் அதை ஆமோதிப்பாய்
உனக்கு இதுவே நல்லதென்பார்கள்
நீயும் அதை ஆமோதிப்பாயா?

பின்னும்
நீ இதை பேசக்கூடாது என்பார்கள்
நீ இதை கேட்கக்கூடாது என்பார்கள்
நீ இதை நம்பக்கூடாது என்பார்கள்
நீ இதையெல்லாம் செய்யக்கூடாது என்பார்கள் 

அவர்கள் 
இப்படித்தான் உன் வாழ்வை 
கொஞ்ச கொஞ்சமாய் அழித்தாலும்
உன் வாழ்வு நீ அல்லாத
யார் யாரோவால் வாழப்படுவதை
வெறுமனே நீ நின்று 
வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருப்பாய்
வேறொன்றும் செய்வதற்கில்லை என…. ஆனால் அப்படி நினைப்பவன் நான் அல்ல
https://youtu.be/Bcx95XYyHZI
      
கே.எஸ். இராதா கிருஷ்ணன்.
K.S.Radhakrishnan. 
#KSR_Post
26-2-2023.

#Ksr_Voice

Saturday, February 25, 2023

தீப்பெட்டித் தொழிற்சாலைக்கு வயது 100!

https://thaaii.com/2023/02/21/match-production/

#கிரா நூற்றாண்டு நிறைவு விழா

#கிரா நூற்றாண்டு நிறைவு விழா 
—————————————
கிரா நூற்றாண்டு நிறைவு விழா வரும் மார்ச் 13 ஆம் தேதி திங்கள் கிழமை நடக்கின்றது.  இன்றைக்குப் பலர் கிராவுக்கு விழா எடுப்பது மகிழ்ச்சிதான். கிரா மணி விழா மதுரையில் (காலேஜ் அவுஸ்)கவிஞர் மீராவுடன் இணைந்து,  சென்னையில் கிரா 70, 75, 80,பின் 90 டில்லியில் என் முன் எடுப்பில் தினமணி- டில்லி தமிழ் சங்கம் இணைந்தும், 95 புதுவையில் எடுத்தேன் என்பது பலர்(?) மறந்து விடுவார்கள்.

இறுதியாக  வரும் மார்ச் 13,இந்த விழாவையும் சிறப்பாக நடக்கவிருக்கின்றது. கிரா 100 என்ற தலைப்பில் இரண்டு தொகுதிகளாக கிராவைப் பற்றி தமிழகம் போற்றும் அறிஞர்கள், அவருடைய நண்பர்கள் எழுதி அனுப்பி வைத்த 500 கட்டுரைகளை ஆய்வு செய்து அவற்றில் 160 கட்டுரைகள்  வரை என்று இறுதிப்படுத்தப்பட்டு; பல்வேறு நண்பர்களின் ஒத்துழைப்பால் இந்தப் பணிகளைச் செய்ய முடிந்தது. பலர் இன்னும் அந்த தொகுப்பு நூல் வெளியாகவில்லையா என்று கேட்டார்கள். 




இந்தப் பணிகளுக்காக நான் எடுத்துக் கொண்ட காலமும் நேரமும் அதிகம். தனியொரு மனிதனாக பல்வேறு எனது பணிகளுக்கு இடையில் இந்த அரிய பணியைச் செய்ய வேண்டி இருந்தது. 

இதற்கான கட்டுரைகள் 2022  ஆகஸ்ட் வரை வந்ததும் உண்டு.  அவற்றை எல்லாம் ஏற்றுக் கொண்டு, அவற்றை ஒழுங்குபடுத்தி, பிழை பார்த்து, சரி செய்து கொண்டு வருவதில் தனிமனிதனாக எனக்கேற்பட்ட சிரமங்கள் சற்று அதிகமே. 

இந்த விழாவில் முக்கிய அகில இந்திய புள்ளிகள் கலந்து கொள்கின்றனர். கிராவின் புகழ் பாடக் கூடிய அளவில், கிராவின் புகழை இந்திய நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு எடுத்துச் செல்லக் கூடிய வகையில், சில திட்டங்களை வகுத்து இந்த விழாவில் அறிவிக்க உள்ளோம் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
 
இந்த விழா  சென்னை அடையாறு டாக்டர் எம்.ஜி.ஆர் ஜானகி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் கூட்ட அரங்கில்  (சத்யா ஸ்டுடியோ ) நடக்க உள்ளது. பங்கேற்பவர்களுடைய பெயர்களோடு அழைப்பிதழ் வலைதளங்களிலும் பகிரப்படும். 
அனைவரும் வருக.

#கிரா #கி_ராஜநாரயணன்
#kira

 #ksr #KSRadhakrishnan
  #ksrvoice, #கேஎஸ்ஆர்,  #கேஎஸ்ஆர்போஸ்ட், #கேஎஸ்இராதாகிருஷ்ணன்


#வேலுப்பிள்ளை பிரபாகரன்.

     #வேலுப்பிள்ளை பிரபாகரன்.

கே.எஸ். இராதா கிருஷ்ணன்.
K.S.Radhakrishnan.  

#ksrpost 
25-2-2023.
https://youtu.be/MT26vqtbGH4

#சேதுசமுத்திர திட்டம் #*Sethu Canel project*

#சேதுசமுத்திர திட்டம் #*Sethu Canel project* 

 #ksr #ksrvoice #K.S.Radhakrishnan
 #ksrvoice, #கேஎஸ்ஆர், #அரசியல்சிந்தனை, #கேஎஸ்ஆர்போஸ்ட், #கே.எஸ்.இராதாகிருஷ்ணன், #geoPoltics #politics,

 2 )https://youtu.be/2XXFaj7Wd0c

Friday, February 24, 2023

உயிருடன் பிரபாகரன்

உயிருடன் பிரபாகரன்.. ஆளுநர் ஆர்.என். ரவியுடன் மூத்த வக்கீல் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் திடீர் சந்திப்பு!
http://dhunt.in/JSWjI

By Oneindia via Dailyhunt

தமிழக ஆளுநருடன் சந்திப்பு-கேஎஸ்ஆர்



—————————————
இன்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களை ராஜ்பவனில் சந்தித்து பேசினேன். இலக்கியத்தில் ஆர்வம் உள்ளவர். HISTORY OF THE TAMILS FROM THE EARLIEST TIMES TO 600 A.D, THIRUKKURAL AS THE BOOK OF THE WORLD, TRAILS OF TAMIRAPARANI, கரிசல் காட்டின் கவிதைச் சோலை பாரதி, நாலடியார் ஆங்கில மொழிபெயர்ப்பு நூலையும் ஆளுநரிடம் வழங்கினேன். அதோடு அய்யன் வள்ளுவர் சிலையையும், தமிழக கிராமப்புறங்களில் கிடைக்கும் Aaranya Alli Aaranya Kudil அனுப்பி தந்த கருங்காலிக் குச்சியையும் வழங்கினேன். கருங்காலி குச்சியின் சிறப்புகளை அவரிடம் சொல்லும்போது கவனத்தில் கொண்டார். பக்தி, இலக்கியங்கள், சங்க இலக்கியங்கள், நவீனகால இலக்கியங்கள் பற்றியும் கூறினேன். 







திருக்குறள், நாலடியார், சிலப்பதிகாரம், திரிகடுகம், ஏலாதி, இன்னா நாற்பது, இனியவை நாற்பது, ஆசாரக் கோவை, நான்மணிக்கடிகை, சிறுபஞ்சமூலம், கார் நாற்பது, களவழி நாற்பது, புறநூனூறு மற்றும் பதினெண்கீழ்க்கணக்கு, பத்துப்பாட்டு, எட்டுத் தொகை, தேவாரம், திருவாசகம், நாலாயிரம் திவ்யபிரபந்தம், பெரியபுராணம், கம்ப இராமாயணம் இவற்றைப் பற்றியெல்லாம் கலந்துரையாடினோம். 

அரசியல், இன்றைய தேர்தல்கள் (தேர்தல் கூத்துகளைச் சொல்லாமல் சொன்னேன்), அறமற்ற அரசியல் மற்றும் தமிழ்நாட்டின் உரிமைகள், திட்டங்கள், குறிப்பாக 16 முக்கிய நதிநீர்ச் சிக்கல்கள் போன்றவை பற்றியெல்லாம் ஆளுநரிடம் எடுத்துரைத்தேன். 

எங்கள் பகுதியான கோவில்பட்டி தனிமாவட்டமாக அமைய தமிழ்நாடு அரசிடம் பரிந்துரைக்க வேண்டும் என்ற என்னுடைய கோரிக்கையையும் முன் வைத்தேன்.

இன்றைய அரசியலின் போக்குகளைப் பற்றியெல்லாம் பல கோணங்களில் பேசப்பட்டது.

ஈழத்தமிழர் சிக்கல், இந்திய பாதுகாப்பு, இந்துமகா சமுத்திரம் அமைதி மண்டலமாக கடந்த காலங்கள் போல பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் தென்கிழக்கு ஆசிய புவியரசியலைக் குறித்தும் கருத்துகளை அவரிடம் வெளியிட்டேன். ஈழத்தமிழர் பிரச்னை, இந்தியாவின் பாதுகாப்பு, இந்துமகா சமுத்திரம் அமைதி மண்டலம் ஒருங்கிணைந்த முக்கோண வடிவமான பிரச்னையாகும்.

அம்பன் தோட்டாவை சீனா இலங்கையிடமிருந்து  99 வருடத்திற்குக் குத்தகைக்கு எடுத்திருப்பது, இந்து மகா சமுத்திரத்தில் பட்டு வழிச் சாலையை (silk way) அமைத்திருப்பது, இந்து மகாசமுத்திரத்தில் சீனாவின் ஆதிக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருப்பது, சீசல்ஸின் டீகோ கார்சிர்யா தீவுப் பகுதியில் பிரிட்டன் மூலமாகக் குத்தகைக்கு எடுத்து அமெரிக்கா ராணுவத் தளம் மீண்டும் அமைத்திருப்பது, பிரான்ஸும் ரஷ்யாவும் இந்துமகாசமுத்திரத்தில் தனது ஆதிக்கத்தை செலுத்தத் திட்டங்களை தீட்டியுள்ளது, ஜப்பான் எண்ணெய் ஆய்வு என்ற நிலையில் இக்கடலில் கீழ்ப்புறம் தன்னுடைய ஆதிக்கத்தைப் பெருக்க நினைப்பது,  இந்தியப் பெருங்கடலில் நம்முடைய கண்காணிப்பையும் மீறி இலங்கையின் தயவால் சீனா  தனது போர்க் கப்பல்களை எல்லாம் நிறுத்துவதோடு மட்டுமல்லாமல்,  கடற்படைப்  பயிற்சிகளும் நடத்துவது, தற்போது ரஷ்யா மற்றும் சீனா தென்னாப்பிரிக்காவின் ரிச்சர்ட்ஸ் பட்டியாலா பகுதியில் கூட்டு இராணுவப் பயிற்சியை 17.02.2023- இல் தொடங்கி நடத்தி வருகிறது.

சீனா இந்தியாவுக்குக் கிடைக்க வேண்டிய கிழக்கு முனையத்தை அபகரித்து தன்னுடைய இறையாண்மையை அங்கே நிலைநாட்டி, அங்கு வசிக்கும் மக்களிடம் சீனநாட்டின் அடையாள அட்டையை வழங்கியிருப்பது வேடிக்கையான செயலாகும். அதேபோல கச்சத்தீவு பகுதியில் உள்ள தீவுகளை சீனா குத்தகைக்கு எடுத்து காற்றாலை மின்சார உற்பத்தியைத் தொடங்க இருக்கிறது. சீனாவின் உளவுக்கப்பலை இந்தியா எதிர்த்தும் இலங்கை அனுமதித்தது.
நான் கூறிய பிரச்னைகளை எல்லாம் நன்கு கவனித்து  அமைதியாக உள்வாங்கிக் கொண்டார். 

ஆளுநர் நன்கு உபசரித்தார். நல்ல பயனுள்ள சந்திப்பு.

கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
K.S.Radhakrishnan
#KSR_POST
#ksrvoice #கேஎஸ்ஆர்
24.02.2023

ஆளுநருடன் சந்திப்பு- கேஎஸ்ஆர்

#ஆளுநருடன் சந்திப்பு
————————————
இன்று (24-2-2023)காலை  ராஜ்பவனில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியைச் சந்தித்து பல விடயங்களைப் பேசக் கூடிய வாய்ப்பு கிடைத்தது. 

தமிழ் இலக்கியம்,  ஈழத்தமிழர் பிரச்னை, இந்து மகாசமுத்திரமும் இந்திய பாதுகாப்பும், இன்றைய அரசியல் போன்றவை குறித்து  ஏறத்தாழ 1 மணி நேரத்துக்கும் மேலாக அவருடன் விவாதிக்க வாய்ப்புக் கிடைத்தது. ஆளுநர் நன்கு உபசரித்தார். பல விடயங்களைக் குறித்தான தரவுகளைப் பகிர்ந்து கொண்டேன். விரிவான பதிவை இன்று மாலையில் செய்கின்றேன்.









 #ksr #ksrvoice #KSRadhakrishnan
  #ksrvoice, #கேஎஸ்ஆர், #அரசியல்சிந்தனை, #கேஎஸ்ஆர்போஸ்ட், #கேஎஸ்இராதாகிருஷ்ணன், #geoPoltics #politics

#KSR_Post
#கேஎஸ்ஆர்
24-2-2023.

Thursday, February 23, 2023

புரிதலற்றவர்க்கு இல்லை வாழ்க்கை என்றொரு சின்னக்குரல் மனசுக்குள்ளிருந்து ஒலித்தபோது சற்றே மண்டியிருந்த சூனியப்புகை அரூவமாய் விலகியது. புரிகிறது எல்லாமே அதனதன் பொருளோடு.

புரிதலற்றவர்க்கு
இல்லை வாழ்க்கை
என்றொரு சின்னக்குரல்
மனசுக்குள்ளிருந்து
ஒலித்தபோது
சற்றே மண்டியிருந்த
சூனியப்புகை
அரூவமாய் விலகியது.

புரிகிறது எல்லாமே
அதனதன் பொருளோடு.


வேலுப்பிள்ளை பிரபாகரன் எத்தனை முறைகொல்லப்பட்டார்… முன் வந்தசெய்திகள் பட்டியலைப்பாருங்கள்

வேலுப்பிள்ளை பிரபாகரன் எத்தனை முறைகொல்லப்பட்டார்… 

முன் வந்தசெய்திகள் பட்டியலைப் பாருங்கள்….
—————————————
• சிங்கள ராணுவத்தால் 05 செப்டம்பர் 1984 – இல் சுட்டுக் கொல்லப்பட்டார் என்ற பொய்யான தகவல் சொல்லப்பட்டுள்ளது. அந்த சமயத்தில் அவர் தமிழகத்தில் இருந்தார். 
• பிரபாகரனுக்கும் மாத்தையாவுக்கும் ஏற்பட்ட சண்டையில் 1989 ஜூலை 25 ஆம் தேதி பிரபாகரன் கொல்லப்பட்டார் என்று சிங்கள அரசு கூறியது. பொம்மை முதலமைச்சரான வரதராஜப் பெருமாளும் இதை உண்மையென்று சொன்னார்.

• சுனாமி ஏற்பட்ட 2004 டிசம்பர் 24 ஆம் தேதி கடலில் மூழ்கி பிரபாகரன் இறந்துவிட்டார் என்ற செய்தியை சிங்கள அரசு பரப்பியது. அதற்கு அடுத்த நாள் நார்வே நாட்டு வெளிவிவகார அமைச்சர் பிரபாகரனைச் சந்தித்த படம் செய்தித்தாள்களில் வெளி வந்து அந்த தவறான செய்திக்குப் பதிலாக அமைந்தது. 

• விமானப்படை தாக்குதலில் பிரபாகரன் இறந்துவிட்டார் என்று 2007 டிசம்பர் 15 ஆம் தேதி சிங்கள அரசு கூறியது. அதுவும் பிழையாகிப் போய்விட்டது. 

• இறுதியில் முள்ளிவாய்க்காலில் 2009 மே 18 - ஆம் தேதி அவர் உடல் கிடைத்ததாகவும், கருணா பிரபாகரன்தான் என்று அடையாளம் காட்டியதாகவும் சிங்கள அரசு உறுதிப்படுத்தியது. இதை ராணுவ அதிகாரி உதயநாணயக்கார கொல்ல பட்டது பிரபாகரன் இல்லையென்று முதலில் கூறிவிட்டு சிங்கள அரசின் வற்புறுத்தலால், அவர் பின்னர் மாற்றிச் சொன்னதும் உண்டு. 

பிரபாகரன் இறந்திருந்தால், பிரபாகரன் இறந்ததாகச் சொல்லப்படும் இறந்த இடத்திலிருந்து, அவர் உடலைக் கைப்பற்றிய இடத்திலிருந்து எடுக்கப்பட்ட எந்த காட்சிகளும் எந்த தொலைக்காட்சியிலும் காட்டப்படவும் இல்லை. அது குறித்தான தரவுகளும் இல்லை. அப்படி உண்மை என்றால் ராஜ பக்சே உடனே கொழும்புக்கு எடுத்து சென்று சர்வதேச பத்திரிகையாளர் முன் வைத்திருப்பார்.

மரபணு சோதனைக்கு 11 மணிக்கு அனுப்பப்பட்டு, 12.15 மணியளவில் அன்றே மரபணு சோதனையில் பிரபாகரன்தான் என்று 1 மணி நேரத்தில் உறுதி செய்ததுதான் வேடிக்கை. மரபணு பரிசோதனை முடிவு தெரிய குறைந்தபட்சம் ஒரு வாரமாவது ஆகும். 
மே 17 ஆம் தேதி கொல்லப்பட்டார் என்றும் சொல்லப்பட்டது.
மேலே குறிப்பிட்ட உதய நாணயக்கார கொல்லப்பட்டது பிரபாகரன் இல்லை என்பதை ராய்ட்டர் செய்தியில் குறிப்பிட்டதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். 2009 மே 17 ஆம் தேதி கொல்லப்பட்ட பிரபாகரனின் உடல் 2009 மே 18 ஆம் தேதி முள்ளிவாய்க்காலின் வடபுலத்தில் உள்ள ஆம்புலன்ஸ் கைப்பற்றியதாகவும்  சிங்கள அரசு கூறியது. ஆம்புலன்ஸில் இருந்து துப்பாக்கியால் சுட்டார்கள். சிங்கள ராணுவமும் ஆம்புலன்ஸை நோக்கிச் சுட்டது என்றும் ஆம்புலன்ஸ் பின்பு அமைதியாகக் காட்சி தந்தது என்றும் அங்கே சென்று பார்த்தபோது பிரபாகரன் உடல் இருந்ததாகவும் குழப்பான செய்திகள்தாம் அன்றைக்கு வந்தன. 

ஒரு சிலர் பிரபாகரனின் உடலை எரித்துவிட்டு சாம்பலையும் கடலில் போட்டுவிட்டோம் என்றார்கள். இப்படியான பல செய்திகள்.

இறப்புச் சான்றிதழ், டிஎன்ஏ சான்றிதழ், சிங்கள அரசின் அதிகாரப்பூர்வமான வெள்ளை அறிக்கையை இலங்கை நாடாளுமன்றத்தில் வைத்து விவாதிக்கப்படாதது எல்லாவற்றையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.  
‘பிரபாகரன் கொல்லப்பட்டார்’ என்ற தலைப்பில் வெளிவந்த செய்தியை அவரே செய்தித்தாளில் படிப்பதைப் போன்ற காட்சிகளும் கடந்த காலத்தில் இடம் பெற்றன. 

இவற்றை எல்லாம் கவனத்தில் கொள்ள வேண்டும் என்பதற்காகவே இந்தப் பதிவு.

#KSR_Post
#கேஎஸ்ஆர்
23-2-2023.

Wednesday, February 22, 2023

Mamallapuram

*

*.

சிலை எடுத்தான் ஒரு சின்ன பெண்ணுக்கு கலை கொடுத்தான் அவள் வண்ண கண்ணுக்கு…. 

அன்னமிவள் வயதோ பதினாறு! ஆண்டுகள் போயின ஆறு நூறு !இன்னும் இவள் முதுமை எய்தவில்லை! என்னதான் ரகசியம்…
#KSR Post 
22-2-2023.

ரசிகமணி டிகேசியின் அன்றைய குற்றாலம் ‘ குற்றால முனிவர் ரசிகமணி’

இன்றைய (22-2-2023)தினமணியில்  ரசிகமணி -குற்றாலம் 

 என்ற கட்டுரை வெளி வந்துள்ளது.
***
ரசிக மணியும் திருக்குற்றாலமும்!
வழக்கறிஞர் கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
 
“குற்றாலத்துக்கு வந்தவர்கள் எல்லாரும் மலை, செவ்வானம், மேகம், மலை ஓடைகள், குரங்குகள், கோவில் எல்லாவற்றையும் அனுபவிக்கிறார்கள். அந்த அனுபவங்களைத் தாளத்திலும், தமிழிலும் வைத்துப் பரிமாறும்போது மனம் இழுபட்டுக் கூத்தாடவே ஆரம்பித்துவிடுகிறது. பாடலை அனுபவிக்கிறது என்றால் அதுதானே?” என்கிறார் ரசிக மணி டி.கே.சி. நீதிபதி மகராஜனுக்கு 23.07.1945 - இல் எழுதிய கடிதத்தில் இவ்வாறு எழுதியுள்ளார்.  
ஸ்ரீவில்லிபுத்தூரில் பிறந்த டி.கே.சி.யின் உள்ளத்தைக் கொள்ளை கொண்ட ஊர் குற்றாலம். குற்றாலம் பகுதியில் போல இயற்கையாக எழும் ஒலிகளையும் தமிழ் பாடல்களின் ராக, தாளங்களையும் இணைத்துக் காண்கிற இந்த அவருடைய ரசனை உணர்வே அவரை ரசிகமணியாக்கி இருக்கிறது. 
இதை, டி.கே.சி. எழுதிய கட்டுரையில் இருந்தே தெரிந்து கொள்ளலாம். 
“கவி என்பது உணர்ச்சி உலகத்தில் ஊடாடுகிற காரியம். லகுவான முரையில் விஷயத்தை ஒரு தாளத்தில் வைத்து அது பேசும். அப்படிப் பேசும்போது எதிர்பாராத முறையில்  அரிய உணர்ச்சி ஒன்று பிறந்துவிடும். அதிசயமாய் இருக்கும்.
கவியிலும் அதாவது உண்மை ததும்பும் உருவத்தோடு கூடிய கவியிலும் ஈடுபட்டுவிட்டால், வார்த்தை, தாளம், தமிழ்ப் பண்பு இவைகளில் அப்படியே கரைந்துவிடுகிறோம் நாம். பாஷைக்கு ஒரு மந்திர சக்தி இருக்கிறதாகவே தெரிய வருகிறது. கவியிலுள்ள உணர்ச்சி வசமாய்ப் போய், வார்த்தை, தாளம், செய்யுள்கோப்பு இவைகளால் ஆகிய உருவமாகவே மாறி விடுகிறோம். கவிக்கு விஷயம் அல்ல, உருவமே பிரதானம் ” என சொல்கிறார். 
வழக்கறிஞரான டி.கே.சி. நெல்லைவண்ணார்பேட்டையில் வாழும்போது, வட்டத் தொட்டி என்ற பெயரில் இலக்கியக் கூட்டங்களை நடத்தியிருக்கிறார். ஜஸ்டிஸ் மகராஜன், வையாபுரி பிள்ளை, ரா.பி.சேதுப்பிள்ளை, சோமசுந்தர பாரதியார், மீ.ப.சோமு, ல.சண்முகசுந்தரம், பாஸ்கரதொண்டைமான், அ.சீனிவாச ராகவன், பெ.நா.அப்புஸ்வாமி, கே.பி.கணபதி, டி.டி.திருமலை, நீலாவதி சுப்பிரமணியம், மு.அருணாசலம், ஜி.சி.பட்டாபிராம் மற்றும் பல இலக்கியவாதிகள், ஆர்வலர்கள் கலந்து கொண்ட கூட்டம் அது. தமிழ்க் கவிதைகளில் புதைந்து கிடந்த ஆழமான கருத்துகளை எல்லாம் தனது சுவையான பேச்சுகளின் மூலம் வெளிக்கொண்டுவந்து அவற்றின் சுவையை ஏராளமானோரை அனுபவிக்கச் செய்திருக்கிறார்.
ரசிகமணி நெல்லையில் இருந்தபோதும் சரி,திருக்குற்றாலத்தில் இருந்தபோதும் சரி அவர் வீட்டில் கூடும் தமிழ் அன்பர்களிடம் கம்பனின் கவியாற்றலையும் கம்பரின் பெருமைகளையும் டி.கே.சி விவரிக்கும்போது எல்லாரும் மெய்மறந்து கேட்பார்கள். 
வாரம் ஒருமுறை ஒவ்வொருவரும் நேர்முகமாகப் பார்க்கும் விதத்தில் வட்ட வடிவமான முறையில் அமர்ந்து நடத்தப்பட்ட இந்த வட்டத்தொட்டி இலக்கிய முற்றம் ‘டி.கே.சி. வட்டத்தொட்டி’ எனப் பிரபலமடைந்தது. இந்த வட்டத் தொட்டி நிகழ்ச்சிக்கு மட்டுமல்லாமல்,எழுத்தாளர் லா.ச.ரா. திருநெல்வேலி வண்ணார்பேட்டைடி.கே.சி. வீட்டுக்கு அடிக்கடி வருவது வழக்கமாகஇருந்திருக்கிறது. லா.ச.ரா தென்காசியில் 3 ஆண்டுகள் வங்கி மேலாளராக பணிபுரிந்த காலம் அது.
டி.கே.சி 1926- இல் சென்னை மாகாண சட்டமன்ற மேலவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதையடுத்து இந்து அறநிலையத்துறை ஆணையராகவும் பொறுப்பேற்றார்.
நெல்லையில் டி.கே.சி. இருந்தபோதே ராஜாஜி, கல்கிகுடும்பத்தினர் அவருக்கு நெருக்கமான நண்பர்களாக இருந்திருக்கின்றனர். நெல்லை வீட்டுக்கு அவர்கள்குடும்பத்தோடு வந்து தங்கி டி.கே.சி.யுடன் குடும்ப நண்பர்களாகப் பழகியிருக்கின்றனர். கல்கி, சதாசிவம், எம்.எஸ்.சுப்புலட்சுமி என கல்கி குடும்பத்தினரும் அடிக்கடி இங்கே வருவதுண்டு.
ராஜாஜியும் கல்கியும் எப்போதும் டி.கே.சி.யுடன் நல்ல நண்பர்களாகவே இருந்திருக்கிறார்கள். ராஜாஜி, கல்கி, டி.கே.சி. மூவரும் பழகத் தொடங்கிய காலத்தில் ராஜாஜியும் கல்கியும் காங்கிரஸ் கட்சியில் இருந்தனர். நீதிக் கட்சியில் சிறிது காலம் தொடர்பு வைத்திருந்தார் டி.கே.சி. ஆனால் அவர்களுடைய நட்பை அவர்கள் சார்ந்திருந்த கட்சி எந்தவிதத்திலும் பாதிக்கவில்லை. அவர்களுடைய நட்பு இலக்கியத்தை அடிப்படையாகக் கொண்டது. ஒருவரையொருவர் உண்மையாகப் புரிந்து கொண்ட, தூய அன்பை அடித்தளமாகக் கொண்டது.
டி.கே.சி. நெல்லையில் இருக்கும்போதே குற்றாலத்துக்கு அடிக்கடி வந்துவிடுவார் வருவதற்கு முன்பு ராஜாஜியையும், கல்கியையும் குற்றாலத்துக்கு வரச் சொல்லி கடிதம் எழுதிவிடுவார். குற்றாலத்தில் டி.கே.சி. தங்குவது கோவிலுக்கு அருகே உள்ள 1 ஆம் எண் பங்களாவில்தான். டி.கே.சி. ஐந்தாண்டுகள் இந்து சமய அறநிலையத்துறையின் ஆணையராக பணியாற்றியவர் என்பதால் அங்கே தங்குவதற்கு அவரிடம் வாடகை கேட்க மாட்டார்கள்.
அதற்குப் பிறகு நிரந்தரமாகவே குற்றாலத்துக்கே குடிவந்துவிட்டார். குற்றாலம் தேவஸ்தானத்தினரிடத்தில் இருந்து 1942 -ஆம் ஆண்டு குற்றாலம் ஐந்தருவிச் சாலையில் அருகருகே உள்ள எட்டறை என்ற வரிசை வீடுகளில் இரண்டு வீடுகளை வாடகைக்கு எடுத்துக் கொண்டார். ஒரு வீட்டில் குடும்பத்தார் தங்கினார்கள். அந்த வீட்டில் சமையல், சாப்பாடு, விருந்தினர்களை உபசரிப்பது எல்லாம் நடக்கும். இன்னொரு வீட்டில் டி.கே.சி. தங்கியிருந்தார்.  படிப்பது, எழுதுவது, நண்பர்களுடன் உரையாடுவது எல்லாம் அங்கேதான். தமிழ்க் கவிதைகளைப் பாடுவது, அவற்றுக்கு விளக்கம் கூறுவதும் இங்கேதான்.  
டி.கே.சி. வீட்டில் தினமும் 20 பேர் , 25 பேர் பந்தியில் அமர்ந்து சாப்பிடுவார்கள். அவர்களுடைய  ஒரே மகன் செல்லையா என்கிற  தீத்தாரப்பன் 32 வயதில் மறைந்தார். அந்த மறைவை டி.கே.சி.யாலும் அவருடைய துணைவியாராலும் தாங்கிக் கொள்ள முடியாதநிலையில் பல விருந்தினர்கள் வீட்டுக்கு வருவதும், வந்த விருந்தினர்களை நன்கு உபசரிப்பதும் அந்த கவலையில் இருந்து அவர்கள் மீள உதவியிருக்கிறது.
டி.கே.சி. தரையில் சம்மணம் போட்டு அமர்ந்துஇலையில் சாப்பிடுவது வாடிக்கை. பின் தரையில் அமர்ந்து எழ இயலாத காலத்தில் நாற்காலியில் உட்கார்ந்து சாப்பிடுவார். ரசிகமணி கையில் உணவை எடுத்துச் சாப்பிடுவதே தனி அழகாக இருக்கும். பருப்பு,நெய் எப்படி குழைய வேண்டும்? சாம்பாருடன் எப்படி சாதத்தைப் பிசைந்து சாப்பிட வேண்டும்? ரசத்தைச் சாப்பிட்ட பின் ரசநீர் பருக்கையோடு  கைவிரல்களால் எப்படி சுவையாக உறிஞ்சிச் சாப்பிடுவது? பாயசத்தில் பொரித்த அப்பளத்தை, காராபூந்தியையோ விட்டுச் சாப்பிட வேண்டும் என்பதையெல்லாம் சொல்வார். கட்டித் தயிராக விரும்பிச் சாப்பிட்ட ரசிகமணி.பிற்காலத்தில் நீரிழிவு நோய் ஏற்பட்டதால், தயிரைத் தவிர்த்து மோரைச் சாப்பிட்டார். ஊறுகாயை ஆள்காட்டி விரலின் ஓர் ஓரமாகச் சற்று எடுத்து நாக்கில் வைப்பார்.சிறு கரண்டியில் எடுத்து வாயில் வைப்பதைப் போல துவையலை இரண்டு விரல்களில் எடுத்து வாயில் வைக்க வேண்டும் என்று சொல்வார். சாப்பிடுவதை ஒரு கலை என்று சொல்வார். 
இன்றைக்கு இட்லி, தோசைக்கென்று தனி அரிசி வாங்குகின்றோம். அப்போது இட்லி தோசைக்குஎல்லாம் ஒரே அரிசிதான். ரசிகமணி வீட்டில் அப்போதேசோறு பொங்க தனி அரிசிதான். இட்லி, தோசை, வடை போன்ற சிற்றுண்டிகளுக்கு சரியான அளவில் அரிசியும் உளுந்தும் போட வேண்டும் என்று அவரே சொல்வார். மோர் மிளகாயும், ஊறுகாயும் இத்தனை நாள் சூரிய வெப்பத்தில் வைக்க வேண்டும் என்பதையெல்லாம் அவரே சொல்வதுண்டு. ரசிகமணி வீட்டுத் தோசை அன்றைக்கு எல்லாராலும் சிலாகிக்கப்பட்டது. 
திருநெல்வேலி வண்ணார்பேட்டையில் டிகேசி இருந்த வீடு மாளிகை போன்றிருக்கும். ஆனால் குற்றாலத்தில் இருந்த வீடு அந்த அளவுக்குப் பெரியதில்லை. 
டி.கே.சி. குற்றால வீடுகளுக்கு குடியிருக்க வரும்போது வீட்டில் மின் இணைப்பு இல்லை. அரிக்கேன் விளக்குதான். இரண்டு மாடுகள் பூட்டிய வில்வண்டியில்தான் பயணம் செய்ய வேண்டும். வில்வண்டிகள் தவிர, சைக்கிள்தான் அப்போது போக்குவரத்துச் சாதனமாக அங்கிருந்தது. இன்று உள்ளதைப் போல அன்றைக்கு தொலைபேசி வசதி எல்லாம் கிடையாது. ராஜாஜி, கல்கி ஆகியோரிடம் இருந்து வரும் தகவல்கள், செய்திகள் எல்லாம்கடிதங்கள், தந்தி மூலமாகத்தான் வரும். குற்றாலத்தில் சாரல் தொடங்கி, அருவிகள் பெரிய அளவில் வழியத் தொடங்கும்போதுதான் குற்றாலத்தில் மக்கள் நடமாட்டம் அதிகரிக்கும். அது வரை ஒரு கிராமத்தைப் போல, குறைவாக மக்கள் நடமாட்டம் இருக்கும்.  
அப்போது குற்றாலத்தில் உணவகங்கள் கூட மிகவும் குறைவாகவே இருந்தன. கடைத் தெருவில் இருந்த போத்தி ஹோட்டல், மண்டபம் ஹோட்டல், பாம்பகோயில் பிள்ளை உணவகம், அய்யங்கார் உணவகம் என்று ஒருசில உணவகங்களே இருந்தன. 
குற்றாலநாதர் திருக்கோயிலின் வடக்கு வாசலில் இருந்து அருவிக்குப் போகும் வழியில் வலது பக்கம் மலையின் அடியில் கசிந்து வரும் நீரை தொட்டியில் நிரப்பி, கோயிலின் மடப்பள்ளிக்கு பயன்படுமாறு ஒரு குழாயும், கோயிலுக்கு வெளியே மக்களுக்குப் பயன்படுமாறு இன்னொரு குழாயும் அமைக்கப்பட்டிருக்கும். வடக்கு வாசல் பக்கத்தில் வரும் தண்ணீரை தென்காசி பகுதியில் வாழ்பவர்கள் எல்லாம் பிடித்துக் கொண்டு சென்று பயன்படுத்தும் வழக்கம் இருக்கிறது. அதற்குக் காரணம், தென்காசியில் அப்போது தண்ணீர் சற்று சவராக இருக்கும். 
இந்த நீர் விழும் பகுதிக்கு அருகில் இருந்த சிறு வீடுஒன்றில் ஸ்ரீமத் மௌன ஸ்வாமிகள் தங்கியிருந்தார். நாட்கள் செல்ல பக்தர்கள் வருகை அங்கேஅதிகரித்ததால், செங்கோட்டை சாலையில் ஸ்ரீமத்மௌன ஸ்வாமிகள் மடம் அமைக்கப்பட்டது.  
முன்னாள் பிரதமர் பி.வி.நரசிம்மராவ், என்னகாரணத்தாலோ ராஜீவ்காந்தியால் இந்திரா படுகொலைக்குப் பிறகு புறக்கணிக்கப்பட்டார். இதனால் மிகவும் மனவேதனை அடைந்த நரசிம்மராவ்,தன்னுடைய சொந்த ஊரான ஹைதராபாத்துக்குசென்றுவிடுவோம்; இனிமேல் அரசியல் வேண்டாம் என்றுமுடிவெடுத்துவிட்டார். அதன் பின் குற்றாலத்தில் உள்ள தற்போது இருக்கும் ஸ்ரீமத் மௌன ஸ்வாமிகள்மடத்திலேயே இறுதிக் காலம் வரை தங்கிவிடலாம் என்று தீர்மானித்தார். ஆனால் எதிர்பாராதவிதமாகஅவருக்குப் பிரதமராகும் வாய்ப்பு 1991- இல் கிட்டியது. 
 
டி.கே.சி. வீட்டுக்கும் ஐந்தருவிச் சாலைக்கும் நடுவே வாய்க்கால் ஓடும். தெளிந்த நீர் அதில் பளிங்குபோல் எப்போதும் ஓடிக் கொண்டு இருக்கும்.டி.கே.சி.குடியிருந்த எட்டறை வரிசை வீடுகளுக்குஎதிரில் சிற்றருவிகளுக்குப் போகும் பாதை மலைமேல்ஏறத் தொடங்கும். எப்போதும் வண்டுகளின் ரீங்காரம், காட்டுமல்லியின் நறுமணம், பேரருவியின் ஓசை என மனதுக்கு மகிழ்ச்சி தரும் சூழல் நிலவியதால், அனைத்து வசதிகளும் இருந்த நெல்லை வண்ணார்பேட்டையை விட்டுவிட்டு டி.கே.சி. குற்றாலத்துக்கு குடிபெயர்ந்திருக்கிறார்.
குற்றாலத்துக்கு டி.கே.சி.குடியேறிய பிறகும், ராஜாஜி, கல்கி குடும்பத்துடன் குற்றாலத்துக்கு வருவார்கள். பிச்சம்மாள் அண்ணிக்கு அதாவது டிகேசியின் மனைவிக்கு விருந்தினர்களை உபசரிப்பதுதான் வேலை. அண்ணி என்பது பெண்களைக் குறிக்கும் சொல்லாக அன்றைக்கு இருந்திருக்கிறது. 50 ஆண்டுகளுக்கு முன்பு பாட்டியை குழந்தைகள் அண்ணி என்றே கூப்பிடுவார்கள். ராஜாஜி, கல்கி, எம்.சுப்புலட்சுமி, பாலசரஸ்வதி எல்லாரும் அண்ணி என்றே பிச்சம்மாளை அழைப்பார்கள். 
குற்றாலத்தில் மலைமேல் திறந்தவெளி இருந்தது. அதில் டி.கே.சி.யும் அவருடைய நடைப்பயிற்சி செய்தும் அமர்ந்தும் தமிழ் இலக்கியத்தைக் குறித்து எப்போதும்போல மாலை நேரங்களில் பேசுவது உண்டு. 
ராஜாஜி கேட்டுக் கொண்டதற்கிணங்க 1953 இல் சென்னை ஆளுநர் ஸ்ரீபிரகாசா குற்றாலத்துக்குவந்திருக்கிறார். ஆங்கிலத்தில் விளக்கமளித்து பின்னர் தமிழ் கவிதைகளை டி.கே.சி. பிரகாசாவுக்கு பாடிக் காட்டினார். இதுபோன்று இதற்கு முன்பு காந்தி,வினோபா பாவே அவர்களுக்கும் டி.கே.சி. இதுபோன்று பாடிக் காட்டியிருக்கிறார். அதற்குப் பின்பு ஒருமுறை ஆளுநர் பிரகாசா வந்தபோது, டிகேசி காலமாகிவிட்டார். ஆளுநர் பிரகாசா டிகேசி இல்லம் சென்று ரசிகமணியின் மறைவைக் குறித்து விசாரித்ததும் உண்டு. அன்றைய தமிழக சட்டப்பேரவைத் தலைவர் சிவசண்முகம் பிள்ளையும் குற்றாலம் வீட்டுக்கு வந்திருக்கிறார்.
அறிஞர் அண்ணா 1947 இல் கம்பராமாயணம் குறித்து ‘கம்பரசம் ’ என்ற நூலை எழுதினார். கம்பராமாயணத்தில் காணப்படும் காமம் தொடர்பான பாடல்களை அதில் அவர் குறிப்பிட்டு இருந்தார். 
அதற்கு முன்பிருந்தே  கம்பனின் கவியுள்ளத்தை வெளிப்படுத்தும் பணியில் டி.கே.சி. ஈடுபட்டிருந்தார். ‘கம்பர் தரும் காட்சி’ என்னும் தலைப்பில் கல்கி இதழின் ஆரம்ப இதழில் 1941 ஆகஸ்ட் மாதத்தில் இருந்து கம்பராமாயணத்தை விளக்கப்படுத்தி எழுதி வந்தார் டி.கே.சி. சுமார் பத்து ஆண்டுகள் ஒவ்வொரு இதழிலும் அந்த கட்டுரைகள் இடம் பெற்றன. அதன் மூலம் சாதாரண படிப்புள்ள வாசகரையும் கம்பர் கவியை அனுபவிக்கச் செய்ய முடிந்ததே என்ற எல்லையில்லா மகிழ்ச்சி கொண்டார் டி.கே.சி.
கம்பராமாயணத்தில் ஆழமாக மூழ்கிய இவர், அந்தக் காவியத்தில் சேர்க்கப்பட்டிருந்த 627 இடைச்செருகல்களை அடையாளம் கண்டார். அவற்றை எல்லாம் டி.கே.சி. நீக்கினார்.  கம்பர் கவிதைகளில் சிலவற்றை திருத்தம் செய்து அவற்றை அர்த்தம் பாவம் பொலிந்த கவிதைகளாகப் பதிப்பித்தார். இதற்கு நிறைய எதிர்ப்புக் கிளம்பியது. அது 1953 ஆம் ஆண்டு ‘கம்பர் தரும் ராமாயணம்’ என்ற நூலாக வெளிவந்தது.‘கம்பர் தரும் ராமாயணம்’ நூலின் முதல் தொகுதிவெளியீட்டு விழா குற்றாலத்தில் நடந்தது. அதில் ராஜாஜிபங்கேற்றார். 
இதன் முதல் தொகுதி திருநெல்வேலி டவுனில் உள்ள அச்சகத்தில் அச்சிடப்பட்டது. அதன் முதல் தொகுதியின் பிரதி டி.கே.சி.யால் கையெழுத்திடப்பட்டுபிரதி கிராவுக்கு அனுப்பப்பட்டது. அதை கிரா என்னிடம் கொடுத்தார். கடந்த வருடம் திரும்பவும் டி.கே.சி.யின் ராமாயணத்தை அல்லயன்ஸ் பதிப்பகம் மூன்று தொகுதிகளையும் ஒன்றாகச் சேர்த்து ஒரு தொகுப்பாக வெளியிட்டது. அதற்கு ரசிகமணியின் பேரன் தீப.நடராஜன், கி.ரா., மாலன், அடியேனும் வாழ்த்துரை வழங்கினோம். வெளியிடப்பட்ட அந்தப் புத்தகத்தை எப்படியாவது பார்த்துவிட வேண்டும் என்று தீப.நடராஜன் விரும்பினார். அவர் மறைந்த இரண்டு நாள்களுக்குப்பிறகுதான் அச்சடிக்கப்பட்டு, பைண்டிங் செய்யப்பட்டு நூல் கைக்கு வந்தது. நூலைப் பார்க்காமலேயே கிராவும் மறைந்துவிட்டார். இந்த இருவரும் இந்த மூன்று தொகுதிகளையும் ஒருங்கிணைந்தமுறையில் பார்க்க விரும்பினார்கள். இதற்காகப் பொறுப்பெடுத்து பணியாற்றிய என்னால் உரிய நேரத்தில் நூலை அவர்களுக்கு வழங்க முடியவில்லையே என்பதுஎன்னுடைய வாழ்க்கையில் தீராத கவலையாக உள்ளது.
ரசிகமணி டி.கே.சி. என்று மனத்துள் எண்ணும் போதே கவிதை நினைவுக்கு வரும். அதே போல் அடுத்து நினைவுக்கு வருவது இசையாகும். கவிதையை எப்படி அனுபவித்தாரோ அதுபோன்றே இசையையும் அனுபவித்தவர் டி.கே.சி. 
 இசை அறிவும் ஈடுபாடும் டி.கே.சி.க்கு அதிகம். தமிழ்க் கவிதைகளை எல்லாம் தனக்கேயுரிய பாணியில் இசையோடு பாடித்தான் பிறருக்கு வழங்கி வந்தார்.
சென்னையில் டி.கே.சி. இருந்தபோது வீணை தனம்மாளை அடிக்கடி சந்தித்து தனது இசையறிவை வளர்த்துக் கொண்டார். டி.கே.சி. வீட்டில் வீணை தனம்மாளின் படம் இருந்தது.
 சென்னை மாநகராட்சி ஆரம்பப் பள்ளி ஆசிரியர் ஜே.ராமானுஜாச்சாரி ஓராண்டு விடுமுறை எடுத்துக் கொண்டு குற்றாலத்துக்கு வந்தார். டி.கே.சி.வீட்டில் தங்கி டி.கே.சி.பேரப்பிள்ளைகளுக்கு கல்வி கற்பித்தார். இதெல்லாம் கல்கியின் ஏற்பாடு. இதற்குக் காரணம்,கல்கிக்கும் இந்த கருத்து உண்டு. குழந்தைகள் புத்தகமூட்டையைச் சுமந்து செல்வது, வேண்டாத பாடங்களை அவர்கள் மூளைக்குள் திணிப்பது, ஆசிரியர்கள் கடுமையுடன் பிள்ளைகளிடம் நடந்து கொள்வது ஆகியவற்றிற்கு எதிரான கருத்துகளை பெற்றோன் என்ற புனைபெயரில் கல்கியில்  தொடர்ந்து எழுதியிருக்கிறார். 
கல்கி குடும்பத்தினர் குற்றாலம் வந்தால் டி.கே.சி. வீட்டில்தான் தங்குவார்கள். சென்னைக்கு டி.கே.சி. குடும்பத்தினர்  சென்றால் கல்கி வீட்டில்தான் தங்குவார்கள். 1937 முதல் குற்றாலம் செல்வதை கல்கி வழக்கமாக வைத்திருந்தார்.  ஆஸ்த்மா நோயாளியான கல்கிக்கு குற்றாலம் குளியலால் எந்தவிதப் பாதிப்பும் ஏற்படவில்லை.  சிவகாமியின் சபதத்தில் குற்றாலம் தொடர்பான காட்சிகள் பல இடம் பெற்று இருக்கின்றன. புரச மரங்கள் பூத்துக் குலுங்குவதை எழுதியிருக்கிறார். 
கல்கியில் நன்கொடை வசூலித்து எட்டையபுரத்தில் பாரதி மணிமண்டபம் கட்டியதும், திறப்பு விழா நடத்தியதும் கல்கிதான். ‘பாரதி ஸ்பெஷல்’ என்ற ரயில் கோவில்பட்டிக்கு விடப்பட்டது. இந்த பாரதி மண்டபம் கட்டும் பணிகளுக்கான அலுவலமாக டிகேசியின் குற்றால வீடு இரவும் பகலுமாக காட்சி தந்தது. 
ரசிகமணி டி.கே.சி. 1954-ஆம் ஆண்டு 73-ஆம் வயதில் மறைந்தார்.
‘கம்பனைப் போன்று ஒரு ரசிகன் கிடைப்பதற்கு வள்ளுவர் 700 ஆண்டுகள் காத்திருந்தார். டி.கே.சி.யைப் போன்ற ஒரு ரசிகன் கிடைப்பதற்கு கம்பன் 1000 ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருந்தது’ என டி.கே.சி.க்கு புகழ்மாலை சூட்டியுள்ள ஜஸ்டிஸ்மகராஜன், “நவீன குற்றாலத்தில் ஐந்தருவி செல்லும் சாலையில்தான் டி.கே.சி வாழ்ந்த வீடும் அவரது நினைவாய் அமைந்துள்ள நூலகமும் உள்ளது என்கிற விஷயமே அங்கிருக்கும் பலருக்கும் தெரிந்திருக்கவில்லை. தன் உற்ற நண்பர் இந்தியாவின் கவர்னர் ஜெனரலாகவும் சென்னை மாகாணத்தின் முதலமைச்சராகவும் இருந்த சமயத்தில் கூட தனக்கென எதையும் பெற்றுக் கொள்ள முனையாது குற்றால முனிவராகவே வாழ்ந்த டி.கே.சி தனது இறுதிகாலத்தில் வசித்த இரண்டு வீடுகளும் இன்று சுற்றுலாப் பயணிகள் வாடகைக்குத் தங்கும் விடுதிகளாக இருப்பதைப் பார்க்க சங்கடமாயிருந்தது. அவரது நினைவாக உள்ள நூலகத்தின் ‘பெயர் பலகை’கூட நிறம் மங்கி நிற்பது டி.கே.சிக்கு பெருமை தருவதாயில்லை.
இதற்கு மாறாக பழைய குற்றாலத்துக்கு செல்லும் பாதையில் அமைந்திருக்கும் அவரது நினைவிடம் நம் மனச்சோர்வை அமைதிப்படுத்துவதாய் உள்ளது. இயற்கை எழில் கொஞ்சும் திரிகூட மலையின் நீலச் சிகரங்களின் நிழலில் பசுமை கொஞ்சும் வயல்வெளிகளின் புறத்தில் எளிமையாக அமைந்துள்ளது அவரது சமாதி ” என்கிறார்.
பொருநை ஆற்று ஞானியாகவும், திருநெல்வேலி கன்னல் தமிழின் காவலராகவும் வாழ்ந்தவர் டி.கே.சி. கம்பனின் கவியுள்ளத்துக்கும், தமிழுக்கும், கடிதஇலக்கியத்துக்கும், தமிழிசைக்கும் உழைத்த.டி.கே.சி.க்கு உரிய மரியாதையை செலுத்த வேண்டியதுநமது கடமையாகும்.



 
கட்டுரையாளர்: அரசியலாளர்
ஆசிரியர், கதைசொல்லி

#கேஎஸ்ஆர்போஸ்ட்
#KSR_Post
22-2-2023.

மறைந்த நடிகர் மயில்சாமியைக் குறித்து கீழ்க்கண்ட பதிவு கண்ணில்பட்டது. இப்படிப்பட்ட மயில்சாமிகள் பலர் இன்றும் இருக்கின்றனர். ***************** வாழ்க்கை மிகவும் புதிரானது.. நல்லவர்.. வல்லவர்.. மனித நேயமிக்கவர்.. எல்லோருக்கும் ஓடி ஓடி உதவி செய்தவர்.. பலரது பசியையும் ஆற்றியவர்.. இளகிய மனம் கொண்டவர்.. என்றெல்லாம் இன்றைக்கு புகழுகின்ற ஒருவர் கூட,

மறைந்த நடிகர் மயில்சாமியைக் குறித்து கீழ்க்கண்ட பதிவு கண்ணில்பட்டது. இப்படிப்பட்ட மயில்சாமிகள் பலர் இன்றும் இருக்கின்றனர். 
*****************

வாழ்க்கை மிகவும் புதிரானது..

நல்லவர்..
வல்லவர்..
மனித நேயமிக்கவர்..
எல்லோருக்கும் ஓடி ஓடி உதவி செய்தவர்..
பலரது பசியையும் ஆற்றியவர்..
இளகிய மனம் கொண்டவர்..

என்றெல்லாம் இன்றைக்கு புகழுகின்ற ஒருவர் கூட, 

அந்த மனிதர் விருகம்பாக்கம் சட்டமன்ற தேர்தலில் (2021) சுயேச்சையாகப் போட்டியிடுகின்ற பொழுது..

மயில்சாமி மிகவும் நல்ல மனிதர் என்று கூறி..

அவருக்காக வாக்கு கேட்கவில்லை..

அவருக்கு ஆதரவாக ஒரு அறிக்கைக்கூட விட்டதில்லை..

தேர்தல் செலவுகளுக்காக எதுவும் கொடுத்ததில்லை..

நானிருக்கிறேன் நண்பா..வா.. களமாடலாம் என்று ஒருவர்கூட பிரச்சாரத்திற்குப் போனதில்லை..

கேவலம்.. ஒரே ஒரு பேஸ்புக் பதிவுகூட அவருக்காக அந்தத் தேர்தலில் யாரும் ஆதரவாக எழுதி நான் பார்த்திருக்கவில்லை..

அவருக்கு யாரும் வாக்களிக்கவும் இல்லை..

அந்தத் தேர்தலில் அவர் பெற்ற வாக்குகள் வெறும் 1,440..

இத்தனைக்கும் அந்த தொகுதிக்குதான் மயில்சாமி விழுந்து விழுந்து பேரிடர் காலங்களில் உதவினார்.. அதைவிட, நம் மக்கள் எதைப் பார்த்து வாக்களிக்கிறார்கள் என்பதும் புரியாத புதிராகவே இருக்கிறது. அரசியலுக்கு வந்தால் நல்லது செய்வார்கள் என்று நினைத்துதான், எத்தனையோ புதுமுகங்கள் காலடி எடுத்து வைக்கிறார்கள்.. ஆனால், நல்லது செய்துவிட்டு அதன்பிறகு அரசியலுக்கு வந்த மயில்சாமிக்கே இந்த நிலைமை என்றால்?!!

*இன்று அவர் மரணத்திற்குப் பிறகு...*

-மைக் பிடித்து அழுவது..

உருகி உருகி பதிவு போடுவது..

ஆளுயர மாலை கொண்டு வந்து போடுவது..

என்று செய்வது எல்லாம் சரிதான்..

ஆனால்..

அது எதுவும் அவருக்குத் தெரியாது..

அதையெல்லாம் அவர் பார்க்கவும் முடியாது..

இதுதான் வாழ்க்கை..

இவ்வளவுதான் வாழ்க்கை..

இனியாவது..

மனிதர்களை.. அதிலும் பிறருக்கு உதவி செய்து வாழும் நல்லவர்களை

அவர்கள் இந்த பூமியில் வாழும் போதே
கொண்டாடப் பழகுங்கள்..

*வாழ்க்கை மிகவும் புதிரானது...*
————————————————————-
இப்படியாக;
மகாகவி பாரதி உயிரோடு இருந்தவரை, யாரும் அவரைக்  கொண்டாடவில்லை. அவர் மறைந்த பின் அவருடைய இறுதிப் பயணத்தில் வெறும் ஏழு, எட்டு பேர் மட்டுமே கலந்து கொண்டனர். நாம் இப்போது பாரதியைக் கொண்டாடுகிறோம். அவர் மறைந்து இப்போது சரியாக நூறாண்டுகள் ஆகிவிட்டன.

சீமான் வீட்டுப் பிள்ளை வ.உ.சிதம்பரனார், தன்னலமில்லாமல் நாட்டுக்கு உழைத்ததை யாரும் கண்டுகொள்ளவில்லை. இறுதிக் காலத்தில் அவர் பட்ட சிரமங்கள் அதிகம். வக்கீல் - பிலீடர் - ஆக இருந்த வ.உ.சி., பருத்திக்கொட்டை, புண்ணாக்கு, எண்ணெய்யை விற்று சென்னையில் கடைசிக் காலத்தைக் கடக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. காலில் செருப்பு கூட இல்லாமல் கோவில்பட்டியில் அவர் வக்கீலாகப் பணியாற்றியதை எல்லாம் மறக்க முடியுமா?
விடுதலைப் போராட்டத்தில் திலகரோடு இணைந்து தீவிரவாதியாக இயங்கிய வ.உ.சிதம்பரனாருக்கு, பொது வாழ்வு கொடுத்த கொடை, ரணங்களும்   சிரமங்களும்தான்.

சேலம் பி.வரதராஜுலு நாயுடு ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ஸையும், நல்ல தமிழ்நடையில் தினசரி பத்திரிகை வர வேண்டும் என்பதற்காக ‘தமிழ்நாடு ’ பத்திரிகையையும் நிறுவினார். ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ஸை வரதராஜுலு நாயுடுவிடமிருந்து எக்ஸ்பிரஸை வாங்கியவர் சதானந்த். அவர் அதை பின்னர் கோயங்காவிற்கு விற்றார் (கோயங்காவுக்கும்), ‘தமிழ்நாடு’ தின ஏட்டை மதுரை கருமுத்து தியாகராஜ செட்டியாருக்கும் இறுதியாக வழங்கிவிட்டார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியில் இருந்த வரதராஜுலு நாயுடுவின் கீழ்தான் ஈ.வெ.ரா. பெரியார்  காங்கிரஸ் காரியதரிசியாகப் பொறுப்பிலிருந்தார். காமராஜரும் சி.சுப்பிரமணியமும் தமிழ்நாடு முதல் அமைச்சர் பதவிக்குப் போட்டியிட்டபோது, காமராஜர் அந்தத் தேர்தலில் வெற்றி பெற்று முதல்வர் பொறுப்புக்கு வர சேலம் வரதராஜுலு நாயுடு உதவியாக இருந்தது, இன்றைக்கு எத்தனை பேருக்குத் தெரியும்?
நாட்டின் விடுதலைக்கு முன்பு, காந்தி, நேரு ஆகியோர் இலங்கைக்குச் செல்வதற்கு காரணமாக அவர் இருந்தது மட்டுமல்ல, இலங்கையில் வாழும் தமிழர்கள் பட்ட சிரமங்களை ஆங்கிலேயர் காலத்திலேயே எடுத்துச் சொன்னவர் சேலம் வரதராஜுலு நாயுடு. சேலம் ராசிபுரத்தில் ஆயிரம் ஏக்கருக்கு மேல் அவருக்குச் சொந்தமாக நிலங்கள் இருந்தன. அவருடைய இடத்தில்தான் அரசுக் கல்லூரியும் கட்டப்பட்டது. வரதராஜுலு நாயுடு 1930- 40 களில் மக்கள் பயணிக்கும் 7 பேருந்துகளுக்கு உரிமையாளராக இருந்தார். இப்படிப்பட்ட கண்ணியமிக்க பொதுவாழ்க்கை வாழ்ந்தவர்களைப் பதம் பார்த்தது தானே நம்முடைய மண்?
அதைப் போலத்தான் இன்றைக்கும் பல மயில்சாமிகள் நம் முன் இருக்கிறார்கள். ‘வாய்மையே வெல்லும்’ என்பதற்கு மாறாக, தரகு அரசியல், வியாபார அரசியல் செய்யும் மனிதர்கள் நிரம்பியிருக்கும் இந்தக் காலத்தில்,   என்ன சொல்லி என்ன பயன்?

#கேஎஸ்ஆர்போஸ்ட்
#KSR_Post
22-2-2023.

Tuesday, February 21, 2023

#இந்து மகா சமுத்திரம். #இலங்கைத்தமிழர்களுக்கு ஆதரவான நிலை எடுக்காத கம்யூனிஸ்ட் அணி நாடுகள் சீனாவும் ரஷ்யாவும் இப்போது கூட்டுச்சேர்ந்து ராணுவ இந்து மகா சமுத்திரத்தில் ராணுவ பயிற்சிகளை மேற்கொள்கிறார்கள்.



—————————————

இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவான நிலை எடுக்காத கம்யூனிஸ்ட் அணி நாடுகள் சீனாவும், ரஷ்யாவும் இப்போது கூட்டுச் சேர்ந்து ராணுவ பயிற்சிகளை மேற்கொள்கிறார்கள்.  ஒரு பக்கம் இந்துமாக்கடல் பகுதியில் டிக்கோகார்சியா தீவில் அமெரிக்கா கடற்படைத் தளம் ...






இந்து மகாசமுத்திரத்தில் சீனாவின் ஆதிக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. 

ஒருபக்கத்தில் சீசல்ஸின் டீகோ கார்சிர்யா தீவுப் பகுதியில் பிரிட்டன் மூலமாகக் குத்தகைக்கு எடுத்து அமெரிக்கா ராணுவத் தளம் அமைக்க இருக்கிறது. பிரான்ஸும் ரஷ்யாவும் இந்தக் கடலில் தனது ஆதிக்கக்தை செலுத்தத் திட்டங்களை தீட்டிட்யுள்ளன. இந்தியப் பெருங்கடலில் நம்முடைய கண்காணிப்பையும் மீறி இலங்கையின் தயவால் அமெரிக்காவும் சீனாவும்  தனது போர்க் கப்பல்களை எல்லாம் அங்கு நிறுத்துவதோடு மட்டுமல்லாமல்,  கடற்படைப் பயிற்சிகளும் நடப்பதாக செய்திகள் வருகின்றன. அமெரிக்கா-சீனா போட்டி, சிக்கல் என பிரச்சனைகள் ஏற்படலாம். 

தற்போது ரஷ்யா மற்றும் சீனா தென்னாபிரிக்காவின் கூட்டு இராணுவப் பயிற்சியை 17.02.2023- இல் தொடங்கி நடந்து வருகிறது. ஏற்கெனவே  இலங்கையின் ஆழ்கடலில் சீன வலுவான நிலையை அடைந்துள்ளது
ஆப்பிரிக்கா பகுதியில் தனது செல்வாக்கை வளர்ப்பதற்காகவே இத்தகைய கூட்டு ராணுவப் பயிற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக கூறப்படுகிறது.  
சீனாவின் நோக்கம், இந்தப் பயிற்சியைப் பயன்படுத்தி, அதன் கடற்படையைச் சர்வதேசக் கடற்பரப்பிற்குள் மிகப் பெரிய அளவில் பரவச் செய்வதாகும். 
சீனா ஏற்கனவே கிழக்கு ஆப்பிரிக்க  கடற்கரையில் உள்ள ஜிபூட்டியை கடற்கொள்ளையர்களை எதிர்த்துப் போராடும் காரணத்தைக் காட்டி கடற்படைத்தளமாகப் பயன்படுத்துகிறது.
இந்தநிலையில், தென்னாப்பிரிக்கா மற்றும் ரஷ்யாவுடனான சீனாவின் கூட்டு இராணுவப் பயிற்சி சீனாவின் ஆதிக்கத்தை வலுப்படுத்துவதாகவே அமையும்.   
இந்திய – சீன எல்லைப் பிரச்னையில் சிக்கல்கள் நீடிக்கும்நிலையில், இலங்கை அரசுடன் நட்புறவுடன் இருக்கும் சீனா, இந்திய கடல்பகுதிகளில் மேற்கொள்ளும் ராணுவ ஆதிக்கங்கள் எந்த அளவுக்கு இந்தியாவுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதைக் கூறத் தேவையில்லை.  
 இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக இந்தியா செயல்பட வேண்டிய தேவை அதிகரித்து வருகிறது என்பதே உண்மை.

இலங்கைத் தமிழர்களை ஆதரித்ததுண்டா?
கியூபா, சீனா, ரஷ்யா ஆகிய நாடுகள் ஐநா சபையில் இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக எப்போதாவது வாக்களித்ததுண்டா?
தேசிய இனப் பிரச்னை குறித்து லெனின் கூறியுள்ளதை எப்போதாவது அவர்கள் கவனத்தில் கொண்டார்களா?
‘இல்லை’ என்பதே இவற்றுக்கான பதில்.
தேசிய சுயநிர்ணய உரிமை குறித்து லெனின், “தேசிய இனங்களின் சுயநிர்ணயம் என்பதற்கு அரசியல் சுயநிர்ணயம், அரசின் சுயேச்சைத்தன்மை, ஒரு தேசிய அரசு அமைத்தல் என்கிற பொருள்தான் உண்டு. வேறு பொருள் இருக்க முடியாது  ” என்று கூறுகிறார். இதை இலங்கைத் தமிழர் பிரச்னையில் இந்த கம்யூனிஸ்ட் அணி நாடுகள் பொருத்திப் பார்த்திருப்பதாக தெரியவில்லை. 

KSR VOICE

 #ksr #ksrvoice #KSRadhakrishnan
  #ksrvoice, #கேஎஸ்ஆர், #அரசியல்சிந்தனை, #கேஎஸ்ஆர்போஸ்ட், #கேஎஸ்இராதாகிருஷ்ணன், #geopoltics #politics,

#KSR_Post
21-2-2023.

இன்று (21-2-2023)பிற்பகல் அண்ணன் பழ.நெடுமாறனைச் சந்தித்தேன்

இன்று (21-2-2023)பிற்பகல் அண்ணன் பழ.நெடுமாறனைச் சந்தித்தேன். பல விடயங்களை குறித்து விவாதித்தோம்.

#KSR_Post
#கேஎஸ்ஆர்
21-2-2023.


சேது சமுத்திர திட்டம்…

https://youtu.be/2vgYmE-2tHc

"சேது சமுத்திர திட்டத்திற்காகக் கலைஞரை கடிதம் எழுத வைத்தவன் நான்"

KSR VOICE
part 2 on  Feb 24, 2023 
 #ksr #ksrvoice #radhakrishnan
 #ksr #ksrvoice   #radhakrishnan, #கேஎஸ்ஆர், #அரசியல்சிந்தனை, #கேஎஸ்ஆர்போஸ்ட், #கே.எஸ்.இராதாகிருஷ்ணன், 
#KSR Post 
21-2-2023.

வேலுப்பிள்ளை பிரபாகரன்.

#வேலுப்பிள்ளை
பிரபாகரன்.
https://www.youtube.com/watch?v=33Pe4Gcilwc

கே.எஸ். இராதா கிருஷ்ணன்.
K.S.Radhakrishnan.  

#ksrpost 
21-2-2023.

Monday, February 20, 2023

சங்கரன்கோவிலில் டீ ஸ்டால் TEA STALL- இந்த கந்தசாமி கடையில் ஸ்டராங் டீ குடித்தால் தலைவலி பறந்தோடும்.

சங்கரன்கோவிலில் 
டீ ஸ்டால் TEA STALL- இந்த கந்தசாமி கடையில் ஸ்டராங் டீ குடித்தால் தலைவலி பறந்தோடும், புத்துணர்வு கிடைக்கும், மூளை சுறுசுறுப்பாகும். காலையில்  இட்லி, பொங்கல், மதியம் குஸ்கா, தக்காளி, லெமன், தயிர் சாதம், இரவு புரோட்டா, தோசை, இட்லி என அந்த ஊரின் டீ மற்றும் ஹோட்டல் உணவு தேவையை பூர்த்தி செய்து வருகிறது.

கொதிக்கும் பாய்லர் பக்கத்தில் நின்றுகொண்டு கடைக்கார்ர் டீ போடுவார். அவரே கல்லாவையும் பார்த்துக்கொள்வார். டிபன், மதியம் சாப்பாடு தயாரிக்க மற்றும் இரவு புரோட்டா போடுவதற்கு மாஸ்டர் மற்றும் வேலை ஆட்கள், பாத்திரங்கள்  கழுவ, காய்கறி வெட்ட மற்றும் இதர வேலைகளுக்கு  மற்றவர்கள் உணவு பரிமாற, பார்சல் கட்ட, மற்ற எடுபிடி வேலைகளுக்கு ஒருவர் என நான்கு ஐந்து பேர் மட்டுமே..

டிக்கையாளர்கள் விரும்பும் வகையில் சுவையான டீ போடுவது, உணவு சமைப்பது, வாடிக்கையாளர்களிடம் நட்பாக பேசி அவர்களை நிரந்தர வாடிக்கையாளராக ஆக்குவது இதெல்லாம் மார்க்கெட்டிங் (Marketing). இதுவும் வியாபார யுக்திதான்…

#KSR Post 
20-2-2023.


இந்த பூமி தனிப்பட்ட மனிதனுடையதோ ஒரு சமூகத்திற்கு உடையதோ ஒரு தேசத்தினுடையதோ அல்ல.



ஏன்? மனிதனின் கூட்டுச் சொத்துமல்ல
நாம்
பூமிக்கு விருந்தினர் மட்டுமே
பூமியில்
நமக்குக் கிடைத்ததை விட
உயர்ந்த நிலையில்
வரும் தலைமுறைக்கு
கைமாற்றிக் 
கொடுக்க வேண்டிய
கடப்பாடு
நமக்கு இருக்கிறது.

#KSR Post
20-2-2023.

மனிதனாகப் பிறந்தவன் இரண்டு வரலாறுகளைத் தெரிந்து இருக்க வேண்டும். ஒன்று மனிதகுல வரலாறு; இரண்டு அவன் சார்ந்திருக்கக் கூடிய தொழிலின் வரலாறு.

மனிதனாகப் பிறந்தவன் இரண்டு வரலாறுகளைத் தெரிந்து இருக்க வேண்டும். ஒன்று மனிதகுல வரலாறு; இரண்டு அவன் சார்ந்திருக்கக் கூடிய தொழிலின் வரலாறு. இந்த இரண்டு வரலாறுகளையும் சரியாகத் தெரியவில்லை என்றால் 2000ஆம் ஆண்டிற்கு பிறகு வரும் மனிதர்கள் கம்ப்யூட்டர்களை இயக்கக்கூடிய காட்டுமிராண்டி மனிதர்களாகத் தான் இருப்பார்கள். எனவே பள்ளிகளில் வரலாற்றுப் பாடத்தை புரிதலுக்கு கண்டிப்பாக வேண்டும். அதை எடுத்து விடக்கூடாது. வரலாறு,பழைய விடயங்கள்,  நிகழ்வுகள்,சங்கதிகள் அவசியமில்லை என சொல்வது முட்டாள்தனம்.

#KSR_Post
20-2-2023.


சுதந்திரமே வாழ்க்கை,

சுதந்திரமே வாழ்க்கை, மற்ற 
தந்திரங்கள் செயற்கை!                 ஊழ் வினை உன் வினை
தன்னைச்சுடும் வினை முன் வினை
அதன் முன் வணங்கிடு தலைவனை
சேர்வாய் காலனை உதைத்த நாயன் நடுவனை


இருக்கும் வரை வாழ்வை வாழ்ந்து தீர்த்துக்கொள்கிறேன் சற்றே விலகி இருங்களேன்

பிடித்தப் பாடலைக் கேட்பேன்
விரும்பிய உணவை உண்பேன்
நினைத்த நொடியில் புறப்பட்டு வெளிச்செல்வேன்
விருப்பம்போல் ஆடை அணிவேன்
கடற்கரையில் காலாற நடப்பேன்
உறக்கம் தொலைத்த இரவொன்றில் வானம் பார்த்து அமர்ந்திருப்பேன்
புத்தகங்கள் படிப்பேன்
படிக்காமலும் இருப்பேன்
அறையை என் விருப்பம் போல மாற்றியமைப்பேன்
மொட்டை மாடியில் பூச்செடிகள் வளர்ப்பேன்
மணிக்கணக்காய் ஆன்லைனில் இருப்பேன்
ஜன்னல் வழியே தூரத்துப்பறவைகளை வேடிக்கைப் பார்ப்பேன்
மழை நனைக்க சாலை நடுவே நடந்து வருவேன்
காய்ச்சல் கண்டு போர்வைக்குள் சுருண்டுக் கிடப்பேன்
அடிக்கடிக் கொள்கைகளை மாற்றிக்கொள்வேன்
திரையரங்கில் கூட்டத்தோடுக் கூட்டமாய் விசிலடிப்பேன்
கதவடைத்து ஆதங்கத்தை அழுதுத்தீர்ப்பேன்

இதுதான் 
சுதந்திரம் என்கிறேன் 

இல்லை 
நீ தனிமையிலிருக்கிறாய் 
என்கிறீர்கள்

தனிமையோ 
விடுதலையோ 
பெயர்களா அவசியம் 

இருக்கும் வரை
வாழ்வை 
வாழ்ந்து தீர்த்துக்கொள்கிறேன்

சற்றே 
விலகி இருங்களேன்

-ரிஸ்கா முக்தார்-


Sunday, February 19, 2023

#*கோபாலகிருஷ்ண கோகலே*

பிப்ரவரி 19: 
#*கோபாலகிருஷ்ண கோகலே நினைவு தினம்*
****
பெரும் கூச்ச சுபாவம் உடையவராய் இருந்த மகாத்மா காந்தியை எல்லோருடனும் தாராளமாகப் பழகவேண்டும் என அறிவுறுத்தி மாற்றியவர் அவர்தான். காந்தியால் பெரிதும் மதிக்கப்பட்டவர். காந்தியின் அரசியல் குரு எனப் போற்றப் பட்டவர். கோகலே என் அரசியல் குரு என காந்தியே தம் சுயசரிதையில் குறிப்பிட்டுள்ளார். 

கடும் வறுமையில் வளர்ந்தவர். இளமைக் காலத்தில் ஒரே டிராயர், ஒரே சட்டை தான் இவரிடம் இருந்தன. அவற்றைத் துவைத்துத் துவைத்து அணிய வேண்டிய நிலை. 

திலகர் தீவிரவாதி. கோகலே மிதவாதி. திலகர் கைதான சந்தர்ப்பத்தில் இங்கிலாந்தில் இருந்த அரசியல் எதிரியான கோகலேதான் திலகர் கைதுக்குக் காரணம் எனப் பத்திரிகைகள் தவறாகக் குற்றம் சாட்டின. வருந்திய கோகலே பத்திரிகைகள் மேல் மானநஷ்ட வழக்குத் தொடருமாறு தன் வழக்கறிஞர்களுக்கு இங்கிலாந்திலிருந்தே தந்தி அனுப்பினார்.

நாடு விடுதலை, சமூக மறுமலர்ச்சி  முக்கியம் என்றார் கோகலே. கோபால கிருஷ்ண கோகலே, எந்த நன்மைகளும் ஆடம்பரங்களும் இல்லாமல் தனது வாழ்க்கையைத் தொடங்கியவர், நன்கு அறியப்பட்ட சுதந்திரப் போராட்ட வீரராகவும், தாராளவாத அரசியல் தலைவராகவும் மாற முனைகிறார். ஏழை மக்களுக்கு உதவ எப்போதும் தயாராக இருந்த அவர், தன்னைத் தயங்கச் செய்ய கல்வியை வழங்குவதில் எப்போதும் ஆதரவாக இருந்த ஒரு நல்ல மனிதர். கோகலே எப்போதும் தனது நாட்டிற்காகப் பேசினார், இந்தியாவில் சுயராஜ்யத் திட்டத்தை வளர்த்துக்கொண்டு ஆங்கிலேயர் ஆட்சியிலிருந்து விடுதலையை விரும்பும் இந்தியர்களின் பிரதிநிதியாக ஆனார். ஆங்கிலேயர்களின் உதவியை அவர் விரும்புவதில்லை. கோபால கிருஷ்ண கோகலே தனது அணுகுமுறையால் பல புகழ்பெற்ற ஆளுமைகளைக் கவர்ந்தார், தி டெக்கான் எஜுகேஷன் சொசைட்டி மற்றும் தி சர்வண்ட்ஸ் ஆஃப் இந்தியன் சொசைட்டி ஆகியவற்றில் முதன்முதலில் உறுப்பினரானார்.

கோகலே தமது நாற்பத்தி ஒன்பதாம் வயதில் 1915 பிப்ரவரி 19ஆம் நாள் மறைந்தார்.

#கோபாலகிருஷ்ண_கோகலே

#KSR_Post
19-2-2023.


*La Belle Dame sans Merci: A Ballad* -*JOHN KEATS

*La Belle Dame sans Merci: A Ballad*
-*JOHN KEATS*
—————————————
(*A beautiful girl without mercy*) 
***
O what can ail thee, knight-at-arms,
       Alone and palely loitering?
The sedge has withered from the lake,
       And no birds sing.

O what can ail thee, knight-at-arms,
       So haggard and so woe-begone?
The squirrel’s granary is full,
       And the harvest’s done.

I see a lily on thy brow,
       With anguish moist and fever-dew,
And on thy cheeks a fading rose
       Fast withereth too.

I met a lady in the meads,
       Full beautiful—a faery’s child,
Her hair was long, her foot was light,
       And her eyes were wild.

I made a garland for her head,
       And bracelets too, and fragrant zone;
She looked at me as she did love,
       And made sweet moan

I set her on my pacing steed,
       And nothing else saw all day long,
For sidelong would she bend, and sing
       A faery’s song.

She found me roots of relish sweet,
       And honey wild, and manna-dew,
And sure in language strange she said—
       ‘I love thee true’.

She took me to her Elfin grot,
       And there she wept and sighed full sore,
And there I shut her wild wild eyes
       With kisses four.

And there she lullèd me asleep,
       And there I dreamed—Ah! woe betide!—
The latest dream I ever dreamt
       On the cold hill side.

I saw pale kings and princes too,
       Pale warriors, death-pale were they all;
They cried—‘La Belle Dame sans Merci
       Thee hath in thrall!’

I saw their starved lips in the gloam,
       With horrid warning gapèd wide,
And I awoke and found me here,
       On the cold hill’s side.

And this is why I sojourn here,
       Alone and palely loitering,
Though the sedge is withered from the lake,
       And no birds sing.


#எனது சுவடுகள்-10 KSR

#எனது சுவடுகள்-10   

இனி,
வான் பிளந்து வழி திறக்க
என் சிறகுகள் சுதந்திரமாகஅகல விரியும் ..
௭ந்த பந்தாவுமற்ற, இயல்பின் வடிவமாக  என்னை நானே நம்பச்செய்வது…

கே.எஸ். இராதா கிருஷ்ணன்.
K.S.Radhakrishnan. 
#KSR_Post
12-2-2023.
#Ksr_Voice.                    https://youtu.be/1di-0bk8mDw

கரிசல் கந்தக பூமிக்கு தீப்பெட்டித் தொழில் வந்து 100ஆண்டுகளாகிவிட்டன.

#கரிசல் கந்தக பூமிக்கு தீப்பெட்டித் தொழில் வந்து 100ஆண்டுகளாகிவிட்டன.
 —————————————
சிவகாசி, ஆமத்தூர், விருதுநகர், சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், கோவில்பட்டி, விளாத்திகுளம் – புதூர், கழுகுமலை, திருவேங்கடம், சங்கரன்கோவில் மற்றும் குடியாத்தம் போன்ற பகுதிகளில் தீப்பெட்டித் தொழில் பல ஆண்டுகளாக பிரதானமாக நடக்கின்றது. 

தீப்பெட்டித் தொழிலுக்கு இந்தப் பகுதியின் சீதோஷ்ணநிலை பொருத்தமாகவும் அமைந்தது. விவசாயம் செய்வதோடு, ஒவ்வொரு வீட்டிலும் குடிசைத் தொழிலாகவும் தீப்பெட்டித் தொழில் செய்யப்பட்டது.

தீப்பெட்டித் தொழிலில் பெட்டிகள் செய்வது, அடிக்கட்டு அடுக்குவது, தீப்பெட்டி குச்சிகளைச் செய்வது என்று 3 விதமாக பணிகள் நடப்பதுண்டு. அந்த வெப்பமான பூமியில் தீப்பெட்டித் தொழில் வெற்றிகரமாக நடக்கும் என்று புரிதலோடு, 1923 - ஆம் ஆண்டு சிவகாசி அய்யநாடார் கல்கத்தா, பம்பாய் வரை சென்று அதற்குத் தேவையான தளவாடங்களை எல்லாம் வாங்கி, ‘நேஷனல் மேட்ச் பேக்டரி’ என்று சிவகாசியில் அமைத்தார். இன்றைக்கு தீப்பெட்டித் தொழில் இந்த வட்டாரத்தில் 100 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.
தீப்பெட்டித் தொழிலுக்குத் தேவைப்படும் லேபிளை அச்சடிக்க அன்றைக்கு இந்தப் பகுதியிலிருந்து பம்பாய், சென்னைக்கோ சென்றுதான் அச்சடிக்க வேண்டியிருந்தது. அந்த சிரமத்தைத் தவிர்க்க அச்சகங்கள் இங்கேயே தொடங்கப்பட்டதன் விளைவாகத்தான் பிற்காலத்தில் சிவகாசியில் காலண்டர்கள், டைரிகள். சுவரொட்டிகள், புத்தகங்கள் அச்சடிக்கக் கூடிய பெரிய அளவிலான அச்சகங்கள் அமைந்தன.

இதற்கு லேபிளுக்குச் சித்திரங்கள் வரைய கோவில்பட்டி கொண்டைய ராஜு போன்றவர்கள் உதவியாக இருந்தனர்.
இந்தத் தீப்பெட்டித் தொழிலுக்கு வேண்டிய ரசாயனப் பொருட்களால் கிணறுகள் தோண்ட வெடி மருந்துகள், பட்டாசுகள் எல்லாம் செய்யலாம் என்று தெரிந்த பின், சிவகாசியை ஒட்டிய இந்த வட்டாரங்களில் வேட்டு ஆபீஸ், அச்சாபீஸ்கள் நிறைய வந்தன.

குடிசைத் தொழிலாக இருந்த தீப்பெட்டித் தொழிலைச் செய்ய, நரசிம்மராவ் பிரதமரானவுடன் புதிய பொருளாதாரக் கொள்கையின் அடிப்படையில் பகாசுர இயந்திரங்கள் மூலமாக தீப்பெட்டிகள் செய்யக் கூடிய பெரிய ஆலைகள் நிறுவப்பட்டன. விம்கோ போன்ற நிறுவனங்கள் கடந்த 31 ஆண்டுகளாக இயந்திரம் மூலமாக அதிக அளவு உற்பத்தி செய்யக் கூடிய முறைக்கு மாறின. இதனால் குடிசைத் தொழிலாக பலருக்கு அன்றாட வாழ்க்கைக்கு உதவிய இந்த தொழில், பாழ்பட்டுப் போனது.அந்த கட்டத்தில் பிரதமர் நரசிம்மராவ், ஐ.கே.குஜ்ரால், வைகோவோடு வாஜ்பாய் ஆகியோரை தீப்பெட்டி உற்பத்தியாளர்களோடு நான் உடன் சென்று சந்தித்து, இதைக் குறித்தெல்லாம் முறையிட்டதெல்லாம் நினைவுக்கு வருகிறது.

#கரிசல்_கந்தக_பூமிக்கு_தீப்பெட்டித்_தொழில்

கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
#KSR_Post
19-2-2023


#வேலுப்பிள்ளை பிரபாகரன்

#வேலுப்பிள்ளை பிரபாகரன்.

கே.எஸ். இராதா கிருஷ்ணன்.
K.S.Radhakrishnan.  

#ksrpost 
19-2-2023.
https://youtu.be/qC0T9EOX6L4

Saturday, February 18, 2023

*மேதகு சகோதரர் பிரபாகரன் குறித்து... * *சில புரிதல்களுக்காக...*

*மேதகு சகோதரர் பிரபாகரன் குறித்து... *
*சில புரிதல்களுக்காக...*

அண்ணன் பழ.நெடுமாறன் அவர்கள் பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்று முள்ளிவாய்க்கால் இறுதிப் போருக்குப் பின்னும், இரண்டாவது முறையாக இடைப்பட்ட காலத்திலும், தொடர்ந்து மூன்றாவது முறையாக இப்போதும் அறிவித்துள்ளார். 
1979-80 - இலிருந்து பிரபாகரனைத் தெரிந்த எங்களைப் போன்றோர், அண்ணன் நெடுமாறனின் கருத்தை ஆதரிப்பதோடு மட்டும் இல்லாமல், நாங்களும் அது குறித்தான தகவல்களை உறுதி செய்து, அவர் சொன்னதை ஏற்றுக் கொண்டோம். 
அந்த வகையில் சில வினாக்களை இங்கே வைக்கின்றேன்:

கீழ் குறிப்பிட்ட இலங்கை அரசின் அதிகாரபூர்மாக ஆவணங்கள் சரியாக வெளியிட பட்டதா?

1. பிரபாகரனுடைய இறப்புச் சான்றிதழில் பிரபாகரன், த/பெ, வேலுப்பிள்ளை, வயது, அவர் கொல்லப்பட்ட நேரம், இடம் ஆகியவற்றைத் தெளிவாகப் பதிவு செய்து, அந்த மரணச் சான்றிதழை இலங்கை அரசு சரியாக அளித்துள்ளதா?
2. பிரபாகரனைப் பற்றிய டிஎன்ஏ அறிக்கைக்கு யாருடைய ரத்தம்  பயன்படுத்தப்பட்டது? அவருடைய தாய், தந்தை,  சகோதர, சகோதரிகள், அவரின் புதல்வியின் ரத்தத்தைக் கொண்டுதான் டிஎன்ஏ பரிசோதனையை நடத்த முடியும். டிஎன்ஏ பரிசோதனை ரத்தத்தைச் சோதித்து அறிக்கை தர வேண்டும் என்றால் ஏறத்தாழ ஒருவாரம் ஆகும். ஆனால் அப்போது உடனே டிஎன்ஏ அறிக்கை தயாராகிவிட்டது என்று சொன்னார்கள். அப்படி அவர்கள் சொன்ன அறிக்கையும் சரியாக வெளியுலகத்துக்குத் தெரியும்படி வெளியிடப்படவில்லை. டிஎன்ஏ பரிசோதனையை இலங்கையில் செய்வதற்கான வசதிகள் இல்லை என்ற தகவல் உள்ளது. அப்படியென்றால் இந்தியாவுக்கோ, வெளிநாட்டுக்கோ அனுப்பி டிஎன்ஏ பரிசோதனையைச் செய்திருந்தால், எவ்வளவு அவசரம் என்றாலும் முழு அறிக்கை பெற குறைந்தது பத்து நாட்களாவது ஆகும். அன்றைக்கு (2009 - இல் ) சென்னை பிரபல தடயவியல் நிபுணரான பி.சந்திரசேகரன் கூட, பிரபாகரனின் டிஎன்ஏ அறிக்கையை  இலங்கை அரசு இவ்வளவு விரைவாக வெளியிட்டிருப்பதால் அதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று தெளிவாகச் சொல்லியிருந்தார்.
3. பிரபாகரனின் உடலை நந்திக் கடலில் 18.05.2009 அன்று இலங்கை அரசு கைப்பற்றியிருந்தால், கைப்பற்றியபோது, எடுக்கப்பட்ட காட்சிகள் வெளியிடப்பட்டனவா?
4. ராஜீவ் காந்தி படுகொலை குற்றப் பத்திரிகையில் பிரபாகரன் கொல்லப்பட்டிருந்தால், அந்த குற்றப் பத்திரிகையில் இருந்து அவர் பெயர் நீக்கப்பட்டதா?
5. ராஜீவ் காந்தி படுகொலை தொடர்பான பன்முக விசாரணையில், பிரபாகரன் இறந்திருந்தால், தொடர்ந்து 32 ஆண்டுகளாக அவர் வாழ்வதைப் போல விசாரணைகளும் ஒருபுறம் நடக்கின்றதா? 
6. கடந்த 2009 - இல் முள்ளிவாய்க்கால் போர் தொடர்பாகப் பேசும்போது, இந்திய அரசின் உதவியால் புலிகளை அழித்தோம் என்று ராஜபக்சே சொன்னார். அன்றைய மன்மோகன் சிங் தலைமையிலான இந்திய அரசு, புலிகளின் இயக்கம் அழிக்கப்பட்டது; பிரபாகரன் கொல்லப்பட்டது குறித்து வெளிப்படையான ஆவணங்களாகவோ, இல்லை நாடாளுமன்றத்தில் அறிக்கையாகவோ  ராஜபக்சே குறிப்பிட்டது உண்மைதான் என்று வெளியிட்டதா?
7. ஒரு நாட்டில் உள்நாட்டு கலவரம், உள்நாட்டுப் போர், புரட்சி எது நடந்தாலும் இறுதியில் அது குறித்தான வெள்ளை அறிக்கை அந்த நாட்டு நாடாளுமன்றத்தில் வைக்கப்படும். முள்ளிவாய்க்கால் இறுதிப் போரைக் குறித்தும், பிரபாகரன் கொல்லப்பட்டது; புலிகள் இயக்கம் அழிக்கப்பட்டது குறித்தும், 2009 மே 14, 15, 16, 17, 18, 19 ஏன் 20 ஆம் தேதிகள் வரை தேதிவாரியாக நடந்த நிகழ்வுகளைக் குறித்தும் அதிபர் ராஜபக்சே அரசு வெள்ளை அறிக்கையை ஏன்  இலங்கை நாடாளுமன்றத்தில் வைக்கவில்லை? அதை ஏன் உலக சமுதாயத்தின் பார்வைக்கு அனுப்பவில்லை?
8. பிரபாகரன் இறந்துவிட்டார், இந்தியாவின் உதவியால் புலிகள் அழிக்கப்பட்டார்கள், முள்ளிவாய்க்கால் போரை எதிர்கொண்டோம் என்ற தெளிவான ஆவணங்களோடு இந்திய அரசுக்கு ராஜபக்சே சிங்கள அரசு ராஜாங்கரீதியாக தாக்கீதுகள் அனுப்பியதா?

இப்படியான வினாக்களுக்கு விடைகள் எவை என்பதை பிரபாகரன் குறித்தான இன்றைக்கு நடக்கும் விவாதங்களின் ஊடே  வைக்கிறேன்.

#KSR Post
18.02.2023

*உள்ளம் சொன்னதை மறைத்தவனில்லை, ஊருக்குத் தீமை செய்தவனில்லை, வல்லவன் ஆயினும் நல்லவன்...* #வேலுப்பிள்ளை பிரபாகரன்.

*உள்ளம் சொன்னதை மறைத்தவனில்லை, ஊருக்குத் தீமை செய்தவனில்லை, வல்லவன் ஆயினும் நல்லவன்...* #வேலுப்பிள்ளை பிரபாகரன்.

கே.எஸ். இராதா கிருஷ்ணன்.
K.S.Radhakrishnan.  
#ksrpost   
18-2-2023. 
https://youtu.be/QrvVt90CwVw

*ஈரோடு புதிய தேர்தல் ஃபார்முலா*

#*ஈரோடு புதிய தேர்தல் ஃபார்முலா*
—————————————
 கால்நடைகளை அடைக்கப்பட்ட பவுண்டி முறை என ஈரோடு தேர்தல் ஃபார்முலாவை அரங்கேற்றியுள்ளார்கள் என தகவல் . 

இதுவரை ஓட்டுக்கு ஆயிரக்கணக்கில் காந்தி நோட்டுகள். ஈரோடு  இடைத்தேர்தலில் காலையில் வீட்டை விட்டு வெளியேறி பவுண்டிக்கு வந்துவிட்டால் பணம்,பிரியாணி, மற்றவைகள் தந்து அவர்களை அங்கு இருத்தி நன்கு கவனித்து; மாலையில் அவர்களின் வீடுகளுக்கு அனுப்புவது என்ற முறை வந்துவிட்டதாக தகவல். மனித உரிமைகள் இங்கே சிறப்பாக கொண்டாடப்படுகின்றன. 

திருமங்கலம் ஃபார்முலாவுக்கு அடுத்து ஈரோடு ஃபார்முலா வந்துவிட்டது என...



எங்களூர் திருமங்கலத்துக்கு
நிலைத்த 
அவச் சொல்லும் 
அழிந்தொழிந்தது என
திருமங்கலத்து மக்கள் மகிழ்ச்சி.

#KSR_Post
18-2-2023.

உள்ளம் சொன்னதை மறைத்தவனில்லை, ஊருக்குத் தீமை செய்தவனில்லை, வல்லவன் ஆயினும் நல்லவன்...

உள்ளம் சொன்னதை மறைத்தவனில்லை, ஊருக்குத் தீமை செய்தவனில்லை, வல்லவன் ஆயினும் நல்லவன்...

Friday, February 17, 2023

இதில் மன அமைதி இருந்தது… #Tranquility

இதில் மன அமைதி இருந்தது…
#Tranquility


தட்சிண சித்ரா தென்னிந்திய கலாச்சாரம், நாட்டுப்புற வழக்காறுகள் குறித்து சிறு விவாதங்கள்

*Today (17-2-2023) afternoon discussions on folklore issues at Dakshina Chitra*.
இன்று பிற்பகலில் தட்சிண சித்ரா தென்னிந்திய கலாச்சாரம்,  நாட்டுப்புற வழக்காறுகள் குறித்து சிறு விவாதங்கள் நடந்தன.

#KSR_Post
17-2-2023.,




#செம்மொழித் தமிழாய்வு நிறுவனம் Central Institute of Classical Tamil)

#செம்மொழித் தமிழாய்வு நிறுவனம்
Central Institute of Classical Tamil
————————————
இன்று (17-2-2023) சென்னையில் (பெரும்பாக்கம்)  செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் (செம்மொழித் தமிழ் உயராய்வு )மையத்துக்கு (Central Institute of Classical Tamil)  பணி நிமித்தமாக சென்று  அதன் இயக்குநர்  பேராசிரியர் - முனைவர் இரா. சந்திரசேகரனை சந்தித்தேன்.

இந்த  நிறுவனம்,தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக இந்தியக் கல்வி அமைச்சகத்தின் (தலைவர் கலைஞர் காலத்தில்)கீழ் அமைக்கப்பட்ட ஒரு ஆய்வு நிறுவனமாகும். இந்திய அரசால் தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்ட பின்பு, 2006, மார்ச்சு முதல் 2008, மே 18-தேதி வரை மைசூரிலுள்ள இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனத்தில் செம்மொழித் தமிழ் உயராய்வு மையம் (Centre of Excellence for Classical Tamil - CECT) என்னும் பெயரில் செயற்பட்டுவந்தது. அதன் பின்னர், இந்நிறுவனம் 2008 மே 19-ஆம் தேதி முதல் சென்னையில் இயங்கிவருகிறது. இந்த மையத்தின் வழியாகத் தமிழ் மொழி வளர்ச்சிக்கான பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. பொ.ஊ. 600-இக்கு முந்தைய காலத்தைச் செவ்வியல் காலமாகக் கொண்டு பண்டைத்தமிழ்ச் சமூகம் பற்றிய ஆய்வை நிகழ்த்தும் வகையில் இது நிறுவப்பட்டது. பண்டைத் தமிழ்ச் சமூகத்தின் அனைத்துக் கூறுகளையும் வெளிப்படுத்தும் வகையில் ஆவணப்படுத்துவதையும் பாதுகாப்பதையும் இந்நிறுவனம் தன் நோக்கமாகக் கொண்டுள்ளது.

இப்போது, பெரும்பாக்கத்தில் புதிதாக வாளாகம் அமைத்து அதை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

கே.எஸ். இராதா கிருஷ்ணன்.
K.S.Radhakrishnan.

#KSR_Post
17-2-2023.


Thursday, February 16, 2023

Governor-designate Jharkhand C P Radhakrishnan,

Met  to night Governor-designate Jharkhand  C P Radhakrishnan, my long term friend and my well wisher along with Dinamani editor K. Vaidyanathan and Auditor Santhanagopalan.





ரசிகமணி டி.கே.சி …#TKC

சிதம்பரநாத முதலியார் 
(T. K. Chidambaranatha Mudaliar, 11 செப்டம்பர் 1882 - 16 பிப்ரவரி 1954) ரசிகமணி டி.கே.சி  நினைவு நாள்…#TKC

#KSR_Post
16-2-2023.


#வேலுப்பிள்ளை பிரபாகரன் Prabhakaran

(#வேலுப்பிள்ளை_பிரபாகரன்)                                    
நாம் ஜெயிக்கிறோம், தோக்குறோம், ஒண்ணுமே இல்லாம போறோம்... இது எல்லாத்தையும் தாண்டி இஷ்டப்பட்ட வேலையை செய்கிறோம் என்பது எவ்ளோ பெரிய பாக்கியம்- -கே.எஸ். இராதா கிருஷ்ணன்.
#KSR Post 
16-2-2023.

https://youtu.be/CJ4B4dPmyPQ

Tuesday, February 14, 2023

வேலுப்பிள்ளை பிரபாகரன் இருக்கிறார் என தகவல். காலம் வரும், அவர் வருவார்..

# வேலுப்பிள்ளை பிரபாகரன் இருக்கிறார் என தகவல்.  காலம் வரும், அவர் வருவார்..   

எங்களின்
பொது வாழ்வில்….
எத்தனை உழைப்பு? எத்தனை பேர் நம் உதவி  பெற்று உயர்ந்த பின் நம்  முதுகில் குத்தினார்கள்?எத்தனை பயணம்எத்தனைபுறக்கணிப்புகள்? 
எத்தனை கண்ணீர்  சிந்தா அமைதி? நம்பிக்கை துரோகம்,ஏமாற்றுவித்தை 
 என் மூலம நீ ஏறிவந்தப் பல படிக்கட்டுகள். ஆட்சி அதிகாரத்தின் அருகில் நிற்கும்
உன் சுய நல மன சாட்சியற்ற புன்னகையில்
என்னைத் தின்று துப்பிய உன் நன்றியற்ற மனம் . உன்னைக் கொண்டாட முடியவில்லை.வாழ்வு சுடு மணல் அத்தனையிலும் பாலை நிலத்தில் பயணம்; பாவுகிற வெப்பமாக வாழ்க்கை இருந்த போதும் குளிர்ந்த நதியா வானமாய் நம் வாழ்க்கை நிற்கிறது. எங்களின் கீர்த்தி எங்கள் செயல்பாட்டில் உள்ளது. காசு கொடுத்து ஓட்டு வாங்கி ‘மந்திரி பின் எந்திரி’ நிலை எங்களுக்கு அல்ல. நாங்கள் அரசியல் வியாபாரிகள்(தரகர்கள்)அல்ல. நாங்கள் அரசியலார்கள்.  நேரத்துக்கு ஒரு பேச்சு என மானமற்ற மாமனிதர்கள் வேஷம்  எங்களிடம் இல்லை. எங்கள் இயலாமைகள் திட்டமிட்ட எங்கள் தன் ஏற்பாடு ஆகும்.
We are potent to do any task and face any challenges.

Puthiyamaadhavi Sankaranயின் வரிகள்
எல்லா இயலாமைகளும் இயலாமைகள் அல்ல.சில இயலாமைகள் நாமே விரும்பி தக்கவைத்துக்கொள்கிறோம்.
அந்த இயலாமை நமக்குள் ரகசியமாக
எரிந்துக் கொண்டே இருக்கிறது.
அது  அணைந்துவிடாமல் 
அடைகாத்துக் கொண்டிருக்கிறோம்.

அந்த இயலாமையைத் தூக்கி எறிந்துவிட்டு
இருந்துவிட முடியும்.
ஆளுமைமிக்க மனிதரின் வாழ்க்கையில்
அது மிகவும் எளிதானதாக இருக்கும்.
ஆனால், ரகசியமாக
தனக்குள்  எதோ ஓர் இயலாமையை 
அவ்வளவு எளிதாக கடந்துவிடாமல்
அது அணைந்துவிடாமல்
இரவுகளில் ரகசியமாக தலையணைக்கடியில் புதைத்துவைத்திருக்கிறோம்.
அந்த இயலாமை...தேவைப்படுகிறது...
உடலுக்கும் உள்ளத்திற்கும்.
யாருமில்லாத தருணங்களில்
அந்த இயலாமை  நம் எதிரில் உட்கார்ந்து
நம்மோடு பேசுகிறது.
விம்மல் வெடித்து 
கண்ணீர் விட்டு கதறுவது
கண்கள் சிவந்து மூக்குவடிய அழுவதும் 
சுகமானதாக இருக்கும்.
அது தேவைப்படுகிறது.

நிம்மதியை
தருகிறது. 
இதை அனுபவித்தவர்கள் மட்டுமே
புரிந்து கொள்ள முடியும்.
ஆம்... இது ஓர் அனுபவம். 
இது ஓரு பரீட்சை.
தீக்குள் விரலை வைத்தால்
உன்னைத் தீண்டும் இன்பம் தோன்றுதடா...
அது இதுதான்...
ஆளுமைகள் இயலாமையை ரகசியமாக
பாதுகாத்துக்கொண்டிருக்கிறார்கள்,
அது அவர்கள் ஆளுமையை இன்னும்
ஆழமானதாகவும் அழகானதாகவும்
பட்டைத்தீட்டிக்கொண்டிருக்கிறது.
தன் இயலாமைக்குள்
தன்னை எரித்துக்கொண்டே 
இருப்பதும் சுகம்தானே.
மரணத்தின் சுகம்.. அது.
வாழும் போதே மரணத்தை 
துளித்துளியாக அனுபவிக்கத் தெரிந்தவர்கள் .. 
பாக்கியசாலிகள்.
நீ எரிய எரிய
பிரபஞ்சம் வெளிச்சமாகிறது. 
இருள் கவிந்தப் பூமி
எரிமலைகள் வாய்ப்பிளந்து 
என்னைத் தின்று துப்புவதற்குள்
 உன் கைப்பிடித்து
வெளியில் வருகிறேன். 
learned helplessness...

கே.எஸ். இராதா கிருஷ்ணன்.
K.S.Radhakrishnan. 

#KSR_Post
14-2-2023

(எங்கோ கிராமத்தில் நேற்று  ஒரு சாமானியர்
வரைந்த படம்)


Monday, February 13, 2023

“இயற்கை என் நண்பன்; வாழ்க்கை எனது தத்துவாசிரியன்; வரலாறு எனது வழிகாட்டி”

“அழிவின் விளிம்பிற்குத் தள்ளப்பட்ட பொழுதும் நாம் கொண்ட கொள்கையைக் கைவிடவில்லை”

“மக்களின் விடுதலை உணர்வை அடக்குமுறையால் அழித்துவிட முடியாது. உலக வரலாறு பகரும் உண்மை இது”

“இழப்புகளுக்கு அஞ்சினால் போரை நடத்த முடியாது. இழப்புகளை வளர்ச்சியின் ஈன்றுகோலாகக் கருத வேண்டும்”

“இழப்புகளும், அழிவுகளும் ஒரு விடுதலைப் போராட்டத்தில் சர்வ சாதாரண நிகழ்வுகள். நாம் எத்தனையோ இழப்புகளையும், அழிவுகளையும் சந்தித்துள்ளோம்.

அழிவுகள் எமது ஆன்ம உறுதிக்கு உரமாக அமைந்துவிட்டால், உலகத்தில் எந்த ஒரு சக்தியாலும் எம்மை அடக்கி விட முடியாது”

“நாம் ஒருவரையும் ஏமாற்றவும் இல்லை, துரோகம் இழைக்கவும் இல்லை. ஆனால் எம்மை யாரும் ஏமாற்றினால் அல்லது எமக்குத் துரோகம் இழைத்தால் நாம் பதிலடி கொடுக்கத் தயங்க மாட்டோம்”.

“இயற்கை என் நண்பன்; வாழ்க்கை எனது தத்துவாசிரியன்; வரலாறு எனது வழிகாட்டி”

Then India



Sunday, February 12, 2023

ஹம்பி-Hampi

இன்றைய (12-2-2022) மலேசிய தமிழ் மலர் செய்தித்தாளில் 

யை குறித்த எனது கட்டுரை.

#KSR_Post
12-2-2023.

#எனது_சுவடுகள்-9 கே.எஸ். இராதா கிருஷ்ணன். K.S.Radhakrishnan. #KSR_Post

https://youtu.be/ragccKa5iiM
#எனது_சுவடுகள்-9                                        கே.எஸ். இராதா கிருஷ்ணன்.
K.S.Radhakrishnan. 
#KSR_Post
12-2-2023.

#Ksr_Voice 

#*நன்றி* என்ற சொல் வள்ளுவத்தில் இருந்தால் போதும் என நினைக்கும் நாடு.

To M. K. StalinVaiko OfficialKanimozhi Karunanidhi




(நேற்று  (11-2-2023)  மாலை, ரசிகமணி டி.கே.சி.யின் 141 ஆவது பிறந்தநாள் விழா சென்னையில் காந்தி கல்வி நிலையம்-
டக்கர்பாபா அரங்கில் நடந்தது. ரசிகமணியின் பேரன் தீப.நடராஜன் எழுதிய ‘ரசிகமணியின் நாத ஒலி ’ என்ற நூலை வெளியிட்டேன். நூல் வெளியிட்டு  எனது பேச்சின் சில பகுதிகள்…)




நிம்மதியுடன் வாழ்கிறேன் என யாராலும் எளிதில் சொல்லப்படுவதில்லை.
வாழ்க்கை அவ்வளவு எளிதில் நிம்மதியை யாருக்கும் தந்து விடுவதில்லை.

நடித்தால் நீ நல்லவன்.

இயற்கை தனக்குப் பிடித்தவர்களுக்கே அதிகப் பொறுப்புகளை கொடுத்து.
அதன் பொருட்டு சோதனைகளை ஏற்படுத்தி.பக்குவத்தையும், நிதானத்தையும் பரிசளிக்க விரும்புகிறது

தன்னுடைய செயலும் தன்னுடைய வார்த்தைகளும் மட்டும்தான் சரியன்று வாதாடுபவர்கள் மத்தியில் .
அமைதி மட்டும் உங்கள்ஆயுதமாக வைத்துக்கொள்க.
அவர்களுக்கு புரியவைக்க.
வரும் காலம் ஒன்று உள்ளது.
சிந்தித்து செயல்படு இதுவும் கடந்து போகும்.

நிலையென்று ஒன்றுமில்லை இவ்வுலகில்.
ஒவ்வொரு சோகமும், துன்பமும் வாழ்க்கையில் நல்ல பாடத்தை கற்று தரவே வருகின்றது.

 யாரும் உன் கண்ணீரை பார்ப்பதில்லை.
யாரும் உன் கவலைகளை பார்ப்பதில்லை.
யாரும் உன் வலிகளை பார்ப்பதில்லை.
ஆனால் எல்லோரும் உன் தவறை மட்டும் பார்ப்பார்கள்

மனிதனும் வாழை மரமும் ஒன்று தான்.
தேவைப்படும் வரை வைத்திருப்பார்கள்.
தேவை முடிந்தவுடன் வெட்டி வீசி விடுவார்கள். நன்றியற்றவர்கள் நம்மிடம் பலர்இருகின்றனர்.

இது பலருக்கும் பொருந்தும் என்பதால் பதிவிட தோன்றியது. மாபெரும் சக்தியாக கருதப்பட்ட இந்திரா காந்தியும் வேதனையும், கவலைப் பட்டு (அவசரநிலை கால பின்)1977இல் பேசியது உண்டு. நெடுமாறன்,மத்திய முன்னாள் ஆர்.வி .சாமிநாதன் மற்றும் நானும் கேட்டதுண்டு.

நேத்தாஜி, பகத்சிங், வ உ சி, சேலம் பி .வரதராஜீலு நாயுடு, ஓமந்தூரர்  என பல நல்லவர்களை பதம் பார்த்தது இந்த பூமிதானே.

ஆனால், இதை; பறந்துவந்த தூசி மேல் பட்டது போல அதை அங்கங்கே தட்டிவிடுவது போல் ... எளிதாக அமைதியாக கடந்து  செல்லவும் தெரியவது மட்டுமல்ல நிச்சியமாக முடியும்.

#KSR_Post
12-2–2023

******

சார் 1940 களில் கலைமகள் பத்திரிகையில்  பார்த்த செய்தி. பச்சையப்பன் கல்லூரி தமிழ் பண்டிதர் திருமணம் செல்வகேசராய முதலியார் அவர்கள் வரகவி அ.சுப்பிரமணியபாரதியிடம் நொந்து போய் கூறியது என்னவென்றால் பரிசுத்தமான தேசபக்தர் வ.உ.சிதம்பரனாரையே பரிதவிக்க விட்ட இந்த நாடு எப்படி உருப்படும் என்றாராம். உங்கள் பதிவை வாசிக்கையில் பெரியவர் வ.உ.சி.யே என் கண் முன்னே வந்தார்.நீங்களும் பின்னர் குறிப்பிட்டுள்ளீர்கள். ஒருதடவை டி.கே.சி.வீட்டில் இரவு தூங்கி கொண்டிருந்தாராம் வ.உ.சி. அச்சமயம் நடுஇரவுக்கு பின் திடீரென விழித்துக் கொண்ட வ.உ.சி. மடியின்மை குறளுக்கு உரை எழுதிவிட்டு நன்றாக தூங்கி கொண்டிருந்த டி.கே.சி.யை எழுப்பினாராம். அவரும் பதறிப் போய் எழுந்து என்ன என்ன என்று கேட்டாராம்.
நான் எழுதிய இந்த உரை சரிதானா என்று பாருங்கள் என்று காகிதத்தை நீட்டினாராம். விளக்கு அணையும் வேளையில் ஒரு திரியை தூண்டலினால் பிரகாசமாக எரியும். அதைப் போல வாழ்வில் சோம்பலை துலக்க ஒரு தூண்டல் தேவை . வாழ்க்கை பிரகாசமாக ஆகிவிட்ட என்பது போல உரை. டி.கே.சி. மெத்தவே மகிழ்ந்து சரியான உரை என்று சொன்னாராம். இப்படியான உறவு பெரியவர்களிடம் இருந்தது.

Saturday, February 11, 2023

#ரசிகமணி டிகேசி விழா

#ரசிகமணி டிகேசி விழா
—————————————

இன்று  (11-2-2023)  மாலை ரசிகமணி டி.கே.சி.யின் 141 ஆவது பிறந்தநாள் விழா சென்னையில் காந்தி கல்வி நிலையம்-
டக்கர்பாபா அரங்கில் நடந்தது. ரசிகமணியின் பேரன் தீப.நடராஜன் எழுதிய ‘ரசிகமணியின் நாத ஒலி ’ என்ற நூலை வெளியிட்டேன். நூல் வெளியீட்டு விழாவுக்கு திருப்பூர் கிருஷ்ணன் தலைமை தாங்கினார். ஜஸ்டிஸ் எஸ்.மகராஜனின் புதல்வர் எம்.சிதம்பரம், டி.கே.சி.யின் கொள்ளுப் பேரன் இரா.தீத்தாரப்பன்,செல்லையா, டில்லி காந்தி அறநிலையத்துறையின் அண்ணாமலை,டிதிருமலை அவர்களின் புதல்வி சுபாஷினி, கிரா புதல்வர் திவாகர் மற்றும் டி.கே.சி குடும்பத்தார் உட்பட பலர் இந்த இலக்கியத் திருவிழாவில் பங்கேற்றனர். விழா இனிதே நடந்தது.






 
தொற்று நோய் பாதிப்புக்கு பின்,இரண்டு, மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு நெல்லை வட்டார மக்களைப் பார்க்கக் கூடிய வாய்ப்பும், சென்னையில் உள்ள திருநெல்வேலி வட்டார மக்களைப் பார்க்கக் கூடிய வாய்ப்பும் எனக்குக் கிடைத்தது. இன்றைய மாலைப் பொழுது நல்ல நிகழ்வுகளுடன் இனிதாகக் கழிந்தது.




#KSR_Post
11-2-2023




தோல்வி இல்லாத வாழ்க்கை உப்பு இல்லாத உணவு போன்று...!

 தோல்வி இல்லாத வாழ்க்கை உப்பு  இல்லாத  உணவு போன்று...! உற்சாகமான மனநிலை   பாதி  வெற்றியை   கொடுத்து  விடும்...!!