Sunday, February 12, 2023

#*நன்றி* என்ற சொல் வள்ளுவத்தில் இருந்தால் போதும் என நினைக்கும் நாடு.

To M. K. StalinVaiko OfficialKanimozhi Karunanidhi




(நேற்று  (11-2-2023)  மாலை, ரசிகமணி டி.கே.சி.யின் 141 ஆவது பிறந்தநாள் விழா சென்னையில் காந்தி கல்வி நிலையம்-
டக்கர்பாபா அரங்கில் நடந்தது. ரசிகமணியின் பேரன் தீப.நடராஜன் எழுதிய ‘ரசிகமணியின் நாத ஒலி ’ என்ற நூலை வெளியிட்டேன். நூல் வெளியிட்டு  எனது பேச்சின் சில பகுதிகள்…)




நிம்மதியுடன் வாழ்கிறேன் என யாராலும் எளிதில் சொல்லப்படுவதில்லை.
வாழ்க்கை அவ்வளவு எளிதில் நிம்மதியை யாருக்கும் தந்து விடுவதில்லை.

நடித்தால் நீ நல்லவன்.

இயற்கை தனக்குப் பிடித்தவர்களுக்கே அதிகப் பொறுப்புகளை கொடுத்து.
அதன் பொருட்டு சோதனைகளை ஏற்படுத்தி.பக்குவத்தையும், நிதானத்தையும் பரிசளிக்க விரும்புகிறது

தன்னுடைய செயலும் தன்னுடைய வார்த்தைகளும் மட்டும்தான் சரியன்று வாதாடுபவர்கள் மத்தியில் .
அமைதி மட்டும் உங்கள்ஆயுதமாக வைத்துக்கொள்க.
அவர்களுக்கு புரியவைக்க.
வரும் காலம் ஒன்று உள்ளது.
சிந்தித்து செயல்படு இதுவும் கடந்து போகும்.

நிலையென்று ஒன்றுமில்லை இவ்வுலகில்.
ஒவ்வொரு சோகமும், துன்பமும் வாழ்க்கையில் நல்ல பாடத்தை கற்று தரவே வருகின்றது.

 யாரும் உன் கண்ணீரை பார்ப்பதில்லை.
யாரும் உன் கவலைகளை பார்ப்பதில்லை.
யாரும் உன் வலிகளை பார்ப்பதில்லை.
ஆனால் எல்லோரும் உன் தவறை மட்டும் பார்ப்பார்கள்

மனிதனும் வாழை மரமும் ஒன்று தான்.
தேவைப்படும் வரை வைத்திருப்பார்கள்.
தேவை முடிந்தவுடன் வெட்டி வீசி விடுவார்கள். நன்றியற்றவர்கள் நம்மிடம் பலர்இருகின்றனர்.

இது பலருக்கும் பொருந்தும் என்பதால் பதிவிட தோன்றியது. மாபெரும் சக்தியாக கருதப்பட்ட இந்திரா காந்தியும் வேதனையும், கவலைப் பட்டு (அவசரநிலை கால பின்)1977இல் பேசியது உண்டு. நெடுமாறன்,மத்திய முன்னாள் ஆர்.வி .சாமிநாதன் மற்றும் நானும் கேட்டதுண்டு.

நேத்தாஜி, பகத்சிங், வ உ சி, சேலம் பி .வரதராஜீலு நாயுடு, ஓமந்தூரர்  என பல நல்லவர்களை பதம் பார்த்தது இந்த பூமிதானே.

ஆனால், இதை; பறந்துவந்த தூசி மேல் பட்டது போல அதை அங்கங்கே தட்டிவிடுவது போல் ... எளிதாக அமைதியாக கடந்து  செல்லவும் தெரியவது மட்டுமல்ல நிச்சியமாக முடியும்.

#KSR_Post
12-2–2023

******

சார் 1940 களில் கலைமகள் பத்திரிகையில்  பார்த்த செய்தி. பச்சையப்பன் கல்லூரி தமிழ் பண்டிதர் திருமணம் செல்வகேசராய முதலியார் அவர்கள் வரகவி அ.சுப்பிரமணியபாரதியிடம் நொந்து போய் கூறியது என்னவென்றால் பரிசுத்தமான தேசபக்தர் வ.உ.சிதம்பரனாரையே பரிதவிக்க விட்ட இந்த நாடு எப்படி உருப்படும் என்றாராம். உங்கள் பதிவை வாசிக்கையில் பெரியவர் வ.உ.சி.யே என் கண் முன்னே வந்தார்.நீங்களும் பின்னர் குறிப்பிட்டுள்ளீர்கள். ஒருதடவை டி.கே.சி.வீட்டில் இரவு தூங்கி கொண்டிருந்தாராம் வ.உ.சி. அச்சமயம் நடுஇரவுக்கு பின் திடீரென விழித்துக் கொண்ட வ.உ.சி. மடியின்மை குறளுக்கு உரை எழுதிவிட்டு நன்றாக தூங்கி கொண்டிருந்த டி.கே.சி.யை எழுப்பினாராம். அவரும் பதறிப் போய் எழுந்து என்ன என்ன என்று கேட்டாராம்.
நான் எழுதிய இந்த உரை சரிதானா என்று பாருங்கள் என்று காகிதத்தை நீட்டினாராம். விளக்கு அணையும் வேளையில் ஒரு திரியை தூண்டலினால் பிரகாசமாக எரியும். அதைப் போல வாழ்வில் சோம்பலை துலக்க ஒரு தூண்டல் தேவை . வாழ்க்கை பிரகாசமாக ஆகிவிட்ட என்பது போல உரை. டி.கே.சி. மெத்தவே மகிழ்ந்து சரியான உரை என்று சொன்னாராம். இப்படியான உறவு பெரியவர்களிடம் இருந்தது.

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...