# வேலுப்பிள்ளை பிரபாகரன் இருக்கிறார் என தகவல். காலம் வரும், அவர் வருவார்..
எங்களின்
பொது வாழ்வில்….
எத்தனை உழைப்பு? எத்தனை பேர் நம் உதவி பெற்று உயர்ந்த பின் நம் முதுகில் குத்தினார்கள்?எத்தனை பயணம்எத்தனைபுறக்கணிப்புகள்?
எத்தனை கண்ணீர் சிந்தா அமைதி? நம்பிக்கை துரோகம்,ஏமாற்றுவித்தை
என் மூலம நீ ஏறிவந்தப் பல படிக்கட்டுகள். ஆட்சி அதிகாரத்தின் அருகில் நிற்கும்
உன் சுய நல மன சாட்சியற்ற புன்னகையில்
என்னைத் தின்று துப்பிய உன் நன்றியற்ற மனம் . உன்னைக் கொண்டாட முடியவில்லை.வாழ்வு சுடு மணல் அத்தனையிலும் பாலை நிலத்தில் பயணம்; பாவுகிற வெப்பமாக வாழ்க்கை இருந்த போதும் குளிர்ந்த நதியா வானமாய் நம் வாழ்க்கை நிற்கிறது. எங்களின் கீர்த்தி எங்கள் செயல்பாட்டில் உள்ளது. காசு கொடுத்து ஓட்டு வாங்கி ‘மந்திரி பின் எந்திரி’ நிலை எங்களுக்கு அல்ல. நாங்கள் அரசியல் வியாபாரிகள்(தரகர்கள்)அல்ல. நாங்கள் அரசியலார்கள். நேரத்துக்கு ஒரு பேச்சு என மானமற்ற மாமனிதர்கள் வேஷம் எங்களிடம் இல்லை. எங்கள் இயலாமைகள் திட்டமிட்ட எங்கள் தன் ஏற்பாடு ஆகும்.
We are potent to do any task and face any challenges.
Puthiyamaadhavi Sankaranயின் வரிகள்
எல்லா இயலாமைகளும் இயலாமைகள் அல்ல.சில இயலாமைகள் நாமே விரும்பி தக்கவைத்துக்கொள்கிறோம்.
அந்த இயலாமை நமக்குள் ரகசியமாக
எரிந்துக் கொண்டே இருக்கிறது.
அது அணைந்துவிடாமல்
அடைகாத்துக் கொண்டிருக்கிறோம்.
அந்த இயலாமையைத் தூக்கி எறிந்துவிட்டு
இருந்துவிட முடியும்.
ஆளுமைமிக்க மனிதரின் வாழ்க்கையில்
அது மிகவும் எளிதானதாக இருக்கும்.
ஆனால், ரகசியமாக
தனக்குள் எதோ ஓர் இயலாமையை
அவ்வளவு எளிதாக கடந்துவிடாமல்
அது அணைந்துவிடாமல்
இரவுகளில் ரகசியமாக தலையணைக்கடியில் புதைத்துவைத்திருக்கிறோம்.
அந்த இயலாமை...தேவைப்படுகிறது...
உடலுக்கும் உள்ளத்திற்கும்.
யாருமில்லாத தருணங்களில்
அந்த இயலாமை நம் எதிரில் உட்கார்ந்து
நம்மோடு பேசுகிறது.
விம்மல் வெடித்து
கண்ணீர் விட்டு கதறுவது
கண்கள் சிவந்து மூக்குவடிய அழுவதும்
சுகமானதாக இருக்கும்.
அது தேவைப்படுகிறது.
நிம்மதியை
தருகிறது.
இதை அனுபவித்தவர்கள் மட்டுமே
புரிந்து கொள்ள முடியும்.
ஆம்... இது ஓர் அனுபவம்.
இது ஓரு பரீட்சை.
தீக்குள் விரலை வைத்தால்
உன்னைத் தீண்டும் இன்பம் தோன்றுதடா...
அது இதுதான்...
ஆளுமைகள் இயலாமையை ரகசியமாக
பாதுகாத்துக்கொண்டிருக்கிறார்கள்,
அது அவர்கள் ஆளுமையை இன்னும்
ஆழமானதாகவும் அழகானதாகவும்
பட்டைத்தீட்டிக்கொண்டிருக்கிறது.
தன் இயலாமைக்குள்
தன்னை எரித்துக்கொண்டே
இருப்பதும் சுகம்தானே.
மரணத்தின் சுகம்.. அது.
வாழும் போதே மரணத்தை
துளித்துளியாக அனுபவிக்கத் தெரிந்தவர்கள் ..
பாக்கியசாலிகள்.
நீ எரிய எரிய
பிரபஞ்சம் வெளிச்சமாகிறது.
இருள் கவிந்தப் பூமி
எரிமலைகள் வாய்ப்பிளந்து
என்னைத் தின்று துப்புவதற்குள்
உன் கைப்பிடித்து
வெளியில் வருகிறேன்.
learned helplessness...
கே.எஸ். இராதா கிருஷ்ணன்.
K.S.Radhakrishnan.
#KSR_Post
14-2-2023
(எங்கோ கிராமத்தில் நேற்று ஒரு சாமானியர்
வரைந்த படம்)
No comments:
Post a Comment