Thursday, February 9, 2023

ஜூடித் பட்லர் Judith Butler,

ஜூடித் பட்லர்  Judith Butler, ஒகையோவில் பிறந்தவர். 1984இல் யேல் பல்கலைக்கழகத்திலிருந்து மெய்யியல் முனைவர் பட்டம் பெற்றார்.1990இல் ரூட்லெட்சு பதிப்பித்த ஜெண்டர் டிரபிள் பெண்ணிய இரண்டாம் அலைக்குக் காரணமாக அமைந்தது. இந்நூலில் பால் ஈருருமையே பாலினம் எனக் குறிப்பிட்டுள்ளார்; பாலின நிகழ்த்துகைசொல் கோட்பாடு குறித்து விவரித்துள்ளார்.

இந்தக் கோட்பாடு பெண்ணியம் மற்றும் உறவுகள் கல்வியில் முதன்மை இடம் பெறுகிறது. ஜூடித் நங்கை, நம்பி, ஈரர், திருனர் சமூக இயக்கங்களில் துடிப்பான செயற்பாட்டாளராக விளங்குகிறார். பல தற்கால அரசியல் நிகழ்வுகளைக் குறித்து வெளிப்படையாக பேசி வருபவர். 

பாலினம் ஒரு நிலையான அடையாளம் அல்ல. அல்லது பல செயல்பாடுகளைத் தொடரும் முகமையும் அல்ல.இதன்அமைப்புரீதியாக உடலின் மூலம் அமைகிறது. 
பாலினமும் ஒரு ஒழங்கு விதிதான். 

குறிப்பாக, இசுரேலின் அரசியல் குறித்து வலுவாக எதிர்த்து வருகிறார். இசுரேல்-பாலத்தீனப் பிணக்கிற்கு இசுரேலின் அரசியலே காரணம் என்றும் அனைத்து யூதர்களையும் அல்லது யூதர்களின் கருத்துகளுக்கும் சார்பாளராக இசுரேல் இருக்க முடியாது என்றும் கூறி வருகிறார்

ஜூடித் பட்லர்பிப்ரவரி 24, 1956 அமெரிக்க ஐரோப்பிய மெய்யியலாளரும் பாலினக் கோட்பாட்டாளரும் ஆவார். இவரது ஆய்வுகள் அரசியல் தத்துவம், நன்னெறி, பெண்ணியக் கூறுகள், கோணல் ,கோட்பாடு மற்றும் இலக்கியக் கோட்பாடுகளில் தாக்கமேற்படுத்தி உள்ளன. தமது துணைவர் வெண்டி பிரவுனுடன் 1993 முதல் கலிபோர்னியா பல்கலைகழகத்தில் பேராசிரியையாக இருந்து வருகிறார்.


No comments:

Post a Comment

நடப்பதை பாருங்கள் நடந்ததை கிளறாதீர்கள்..

  நடப்பதை பாருங்கள் நடந்ததை கிளறாதீர்கள்.. பேசி தீருங்கள் பேசியே வளர்க்காதீர்கள்.. உரியவர்களிடம் சொல்லுங்கள் ஊரெல்லாம் சொல்லாதீர்கள்.. மன அம...