Tuesday, February 7, 2023

#உலகமே நாடகமேடை

இந்த மாதம் அமுதசுரபி (பிப்ரவரி) சகோதரி வாஸந்தி அவர்கள் எழுதிய  ‘மேற்கும் கிழக்கும் இணையுமா? ’ என்ற கட்டுரையைப் படித்தேன். அதில் ரூட்யார்ட் கிப்லிங் ஆங்கிலக் கவிஞரின் கவிதை வரிகளை மேற்கோள் காட்டியிருந்தார். 

இந்த கவிதையும் ராபர்ட் ஃபிராஸ்ட் எழுதிய ‘ஸ்டாப்பிங் பை வுட்ஸ் ஆன் எ ஸ்நோவி ஈவ்னிங்’ (Stopping by Woods on a Snowy Evening) என்ற கவிதையில் வரும்  ‘மைல்ஸ் டூ கோ பிஃபோர் ஐ ஸ்லீப்’ என்ற வரிகளும், தாமஸ் கிரே எழுதிய ‘எலிஜி ரிட்டன் இன் எ கன்ட்ரி சர்ச்யார்ட்’ (Elegy Written in a Country Churchyard)  என்ற கவிதையும், ஜான் கீட்ஸ் எழுதிய ‘லா பெல்லா டேம் சன்ஸ் மெர்சி’  (La Belle Dame sans Merci) என்ற  கவிதையும், ஆல்ஃபர்ட் லார்ட் டென்னிசன் எழுதிய ‘தி லோட்டஸ் ஈட்டர்ஸ்’ (The Lotus - eaters) என்ற கவிதையும், என்ற கவிதையில் வருகிற ‘ஃபார் மென் மே கம் அண்ட் மென் மே கோ’ என்ற கவிதை வரிகளும், வில்லியம் வேர்ட்ஸ் வொர்த்தின் ‘தி சாலிட்டரி ரீ பேர்’  (The Solitary Reaper) கவிதைகளோடு ரூட்யார்ட் கிப்லிங்கின்  ‘தி பேலட் ஆஃப் ஈஸ்ட் அண்ட் வெஸ்ட்’  (The Ballad of East and West)  என்ற இந்த கவிதையும்  எனக்குப் பிடித்தமான கவிதை. 
 வாஸந்தி தனது கட்டுரையில்,
“ Oh, East is East , 
And West is West, 
And never the twain shall meet,
Till Earth and Sky stand presently at 
God's great Judgment Seat 

But there is neither East nor West, 
Border, nor Breed, nor Birth,
When two strong men stand face to face,
 though they come from the ends of the earth!

இந்த கவிதை 1889 இல் எழுதப்பட்டது. அது சொல்லும் விஷயமே வேறு. கிழக்கு மேற்கு எல்லையோ, வளர்ப்போ, பிறப்போ கடவுளின் நிற்கையில் ஏதுமில்லை என்று முடிக்கிறார் கிப்லிங்.
ஆனால் கிழக்கு வேறு மேற்கு வேறு – இரண்டும் இணையவே முடியாது. (அதாவது வாழ்வின் தாத்பர்யத்தைப் புரிந்து கொள்ளும் வரை ) என்ற அவரது முதல் வரியையே, அது உண்மை என்று நினைத்தவர்கள், நினைப்பவர்கள் அதிகமாக மேற்கோளாகப் பயன்படுத்துகிறார்கள்” என்று குறிப்பிடுகிறார்.

இந்த கவிதைகளை எல்லாம் படிக்கும்போது கல்லூரியில் இளங்கலை பட்டம் படித்த காலங்களின் நினைவுகள் வந்தன.  நண்பர்களோடு தேசாந்திரியாகவும், மாணவர் அரசியலில் உத்வேகமாகவும் ஈடுபட்ட காலங்கள் அவை. இந்த கவிதைகளைப் படிக்கும்போது அவை எல்லாம் நினைவுக்கு வந்தன என்பதோ வேறு விடயம், 

இந்த கட்டுரையில் வாஸந்தி அவர்கள் விந்திய மலைக்கு வடக்கே இருப்பவர்கள் மற்றும் விந்திய மலைக்கு தெற்கே இருப்பவர்களின் அணுகுமுறைகளை எடுத்துரைக்கிறார்.  இறுதியாக உலகம் என்னும் பரந்த மேடையில் சொற்பகாலத்துக்கு நடிக்க வந்தவர்கள் நாம் எல்லாரும் என்று முடிக்கிறார். இது ஏறத்தாழ ஷேக்ஸ்பியரின் வரிகளான  ‘உலகமே நாடகமேடை ’ உலகமே நாடகமேடை என்பதோடு  ஒத்துச் செல்கின்றன.

#உலகமே_நாடகமேடை

#KSR_Post
7-2-2023.

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...