`திரவிடியன் ஸ்டாக், திரவிடியன் மாடல்’
– சொல் அல்ல செயல்!
- வழக்கறிஞர் கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
"The Dravidians belong to a stock totally different from the Aryans, and have developed independently along their own lines. In the centre is the great mass of hills known as the Nilgiris or Blue Mountains; south of this, the country is flat and fertile"
- H.G. RAWLINSON C.I.E., M.A., F.R.Hist.S.
A Concise History of INDIAN PEOPLE
- OXFORD UNIVERSITY PRESS. Published 1938.
அண்ணா அவர்கள் நாடளுமன்ற மாநிலங்கள் அவையில் மேல் சொன்ன கருத்தை வாசித்து கருத்தில் கொண்டு ‘Dravidaian Stock’ என பேசினார்.
தமிழக ஆட்சிக் கட்டிலில் அதிகப்பெரும்பான்மையுடன் அமர்ந்து எட்டு மாதகாலத்தை நிறைவுசெய்ய உள்ளதுமு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க அரசு.
பொறுப்பேற்ற நாள் முதல் மக்களின்மனவோட்டத்தைப் படித்துவரும் முதல்வர், திரவிடியன் ஸ்டாக், திரவிடியன் மாடல், அதன்அணுகுமுறை அதாவது திராவிடனுக்கே உரியமரபை, கொள்கைப் பிடிப்பை, தமிழகத்தில்திராவிடத்தின் பங்கை, திராவிட கொள்கைப்போக்கு அடங்கிய ஏட்டையும் சற்றுபுரட்டவேண்டும்.
திராவிடம் என்பது தமிழ்நாட்டின்முன்னேற்றத்திற்காக, நலனுக்காக, உரிமைக்காக தொடர்ந்து குரல் கொடுப்பதே! இதன் அடிப்படையில் உருவானதே மாநிலசுயாட்சி. அண்ணாவின் உயிலைநடைமுறைப்படுத்தும் வகையில் தலைவர்கலைஞர் மாநில சுயாட்சிக்காக ராஜமன்னார்குழுவை அமைத்து, அதன் அறிக்கையை1974ல் பெற்று, அன்றைய பிரதமர் இந்திராகாந்திக்கு அனுப்பிவைத்தார். தமிழ் தேசியம்உள்ளட்டக்கியதே திரவிடியன் ஸ்டாக், திரவிடியன் மாடல் என்பதை நாம் முதலில்தெளிந்துகொள்ள வேண்டும்.
திராவிடன் என்று சொல்லிக்கொள்ளும் நாம், தமிழை, தமிழ் இனத்தை, தமிழ்ப் பண்பாட்டைமேம்படுத்தியிருக்கிறோமா? அறியா சிலருக்குவிடை சொல்ல வேண்டிய கடமை நமக்குஇருக்கிறது.
‘திராவிடம்’ என்ற சொல் எந்தெந்தக்காலகட்டங்களில், என்னென்ன பொருளில்ஆளப்பட்டுள்ளது? `திராவிடன் என்றுசொல்லாதே, தமிழன் என்று சொல்’ எனக்கூறுகின்றவர்கள், ஏதோ திராவிடமும் தமிழும்எதிரெதிரானவை என்பதுபோலப்பேசுகின்றனர். ‘தமிழ்’ என்பது நம் மொழியின்பெயர், ‘தமிழர்’ என்பது நம் இனத்தின் பெயர், `தமிழ்நாடு’ என்பது நம் நிலத்தின் பெயர். அப்படியானால், திராவிட மொழி, திராவிடஇனம், திராவிட நாடு என்பன எங்கிருந்துவந்தன என்பதை கவனிக்க வேண்டும்.
இனம் என்று எடுத்துக்கொண்டால், உலகம்முழுவதும், தொடக்கத்தில் மரபினங்கள்(Ethnic Race) இருந்தன. பிறகு அவை தேசியஇனங்களாகப் (National Race) பரிணாமவளர்ச்சி பெற்றன. இந்த அடிப்படையில்அவர்கள் வாழ்கின்ற பூமியை நிலத்தைஅவர்களுடைய மரபுரீதியிலான மாநிலமாகவும்நாடாகவும் (STATE) அரசியல்ரீதியாகஏற்றுக்கொள்ளப்பட்டது. நம் பழையமரபினத்தின் பெயர் ‘திராவிடர்’ என்பது. ஆனால் இன்று ‘திராவிடம்’ என்னும் சொல், மொழியை, இனத்தை, நாட்டைக்குறித்ததிலிருந்து விடுபட்டு, ஒரு கருத்தியலை, ஒரு சித்தாந்தத்தைக் குறிக்கும் சொல்லாகமாற்றம் பெற்றுள்ளது.
பேரறிஞர் அண்ணா அவர்கள் சட்டமன்றத்தேர்தலில் காஞ்சிபுரம் தொகுதியில் வெற்றிவாய்ப்பை இழந்த நிலையில், மாநிலங்களவைஉறுப்பினராக நாடாளுமன்றத்துக்குச்செல்கிறார். அங்கு அவர் ஏப்ரல் 1962ல் ஆற்றியகன்னிப்பேச்சில் “I BELONG TO DRAVIDIAN STOCK. I AM PROUD TO CALL MYSELF A DRAVIDIAN” என்றார். அதாவது, ``நான் திராவிட இனத்தைச்சார்ந்தவன், திராவிடன் என்றுசொல்லிக்கொள்வதில் மிகுந்தபெருமைகொள்பவன்’’ என்று அவையில்உரையாற்றினார்.
திராவிடம் என்றால் கூட்டுறவு முறையில்ஒன்றுபட்ட தமிழகம், ஆந்திரம், கர்நாடகம், கேரளம், புதுவை ஆகியவை இணைந்துநல்லிணக்கத்தை உருவாக்கி திராவிடஇயக்கத்தின் வழியே செயல்படுவது. இந்தியாஎனும் ஓர் உபகண்டத்தில் பல்வேறு தேசியஇனங்கள், மொழிகள், கலாச்சாரங்கள், வாழ்நிலை சூழல்களில் பன்மையில் ஒருமைஎனும் போக்கு கடைப்பிடிக்கப்பட்டுவருகிறது. பல்வேறு வகையான வேறுபாடுகள்இருந்தாலும் மக்கள் உரிமை காக்கப்படவேண்டும் என்ற நிலையில் உண்மையான ஒருகூட்டாட்சி வேண்டும் என்றஅவசியத்தின்பேரில் மாநில சுயாட்சி என்றுஅண்ணா அவர்கள் குரல் எழுப்பினார்.
மாநில சுயாட்சி என்பது, திராவிடஇயக்கத்தின் குரல் மட்டுமல்ல… திலகர் பூர்ணசுயராஜ்ஜியம் என்று குறிப்பிட்டதிலிருந்தேதொடங்குகிறது. காங்கிரஸின் லக்னோஉடன்படிக்கை, மோதிலால் நேருதலைமையிலான காங்கிரஸ் காரியகமிட்டியின் அறிக்கை மற்றும் பல்வேறுகுழுக்கள் மாகாண சுயராஜ்ஜியம் என்றுகூறியுள்ளது. அதுவே மாநில சுயாட்சியாகும். இந்நிலையில் காஞ்சி இதழின் தைத்திருநாள்சிறப்பு மலரில் மாநில சுயாட்சியைப் பற்றிவிரிவான கட்டுரையை அண்ணா எழுதிவெளியிட்டார். இதை ஆங்கிலத்திலும்அண்ணா எழுதியுள்ளார். இதுவே அவரின்இறுதி உயிலாகும்.
இப்படி, இந்திய மாநிலங்கள் ஒவ்வொன்றும்மாநிலத் தனித்தன்மையுடனும், மாநிலசுயாட்சியுடனும் கூட்டாட்சித் தத்துவத்துக்குஏற்ற வகையில் செயல்பட வேண்டும் என்பதேஅண்ணாவின் நோக்கமாக இருந்தது. இதைத்தான் ஆங்கிலத்தில் `DIRAVIDIAN STOCK’ என்று குறிப்பிடுவர்.
இதேபோன்று `DIRAVIDIAN MODEL’ பற்றியும், தமிழகப் பொருளாதாரம் வளர்ந்தவிதம் பற்றியும் நாம் தெரிந்துகொள்ளவேண்டியது, இன்றைய அரசியல் களத்தில்அவசியமானதாகிறது. அதாவது இந்தியமாநிலங்கள் அனைத்திற்கும் சமச்சீரானவாய்ப்பை வழங்க வேண்டும். ஒருமாநிலத்தைச் செழிப்புறச் செய்து, வேறு ஒருமாநிலத்தை மாற்றாந்தாய்ப் போக்கில் இந்தியஅரசு நினைப்பதை அறவே ஒழித்திடவேண்டும். அனைத்து மாநிலங்களுக்கும்சமன்பாடான நிதியை ஒதுக்கி, இந்தியத்திருநாட்டின் அனைத்துப் பகுதிகளும்சமச்சீரான வகையில் வளர்ந்திடுவதற்கானவழிமுறைகளை இந்திய அரசு மேற்கொள்ளவேண்டும். உதாரணமாக, ஆஸ்திரேலியாவில்மாநிலங்களவைக்கு ஒவ்வொருமாகாணத்துக்கும் சரிசமமான பிரதிநிதித்துவம்வழங்கப்படுவது போன்று, இந்திய நாட்டிலும்வழங்கப்பட வேண்டும். இதுபோன்றமாநிலங்களிடையே பாகுபாடற்றநடைமுறைகளே உண்மையானகூட்டாட்சிக்கும் மாகாணங்களின்வளர்ச்சிக்கும் வழிவகுக்கும்.
அன்றே, `வடக்கே வாழ்கிறது… தெற்கேதேய்கிறது’ என்று அண்ணா கூறியதைப்போன்று, இன்று `சென்னை சிதைந்துவருகிறது… பெங்களூர் பெருத்துவருகிறது’என்று குறிப்பிட்டால், அதை மறுப்பவர்கிடையாது. இந்திய அரசு தென்மாநிலங்களுக்கு ஒதுக்கப்பட வேண்டியநிதியின் அளவு நிறைவாக இல்லை என்பதுகுறிப்பிடத்தக்கது. இருப்பினும், தி.மு.கஆட்சிக் காலத்தில் இத்தனைதடங்கல்களையும் தடைகளையும் தாண்டி, தமிழகம் பொருளாதாரரீதியில் முன்னேற்றப்பாதையில் சென்று, முன்னோடி மாநிலமாகவிளங்கிக்கொண்டிருக்கிறது என்றால், இதுதான் `திராவிட மாடல்’ என்று தெளிவாகக்குறிப்பிடலாம். இதற்கு, தலைவர்கலைஞருடைய நிர்வாகத் திறமை மேலும்வலுவூட்டியது.
தமிழகம் மற்றும் புதுவையைப்பொறுத்தவரையில் மக்களவை மற்றும்மாநிலங்களையில் மொத்தம் 59 நாடாளுமன்றஉறுப்பினர்கள் உள்ளனர். இவர்கள்அனைவரும் நமது மாநில பிரச்சனைகள்குறித்து குரல் எழுப்ப வேண்டும். அதன் மூலம்அம்மாநிலங்களுக்குத் தேவையான நிதி, தமிழகத் திட்ட செயல்பாடுகளை மேம்படுத்தவேண்டும். உதாரணமாக, நதிநீர் பிரச்சனையைஎடுத்துக்கொண்டால், காவிரி, முல்லைப்பெரியாறு, பாலாறு என்று மட்டுமேபேசிக்கொண்டிருக்கிறோம். மறுக்கவில்லை. இவை உயிர்நாடியான பிரதானபிரச்சனைகள்தான். ஆனால், தமிழகத்தில்இன்னும் பல நதிநீர் பிரச்சனைகளைப் பேசத்தவறிவிட்டோம்.
• குமரி மாவட்டத்தில் தக்கலைப் பகுதியில்கட்டப்பட்ட நெய்யாறு அணை 2007-ம்ஆண்டில் மூடப்பட்டு, வலதுகால், இடதுகால் மூடி தண்ணீர் வரமால் குமரிமாவட்டம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தஅணையைக் கட்ட அன்றைய சென்னைமாகாணம் நிதியை ஒதுக்கி முதல்வர்காமராஜரும் கேரள முதல்வர் சங்கரும்திறந்துவைத்தனர்.
• நெல்லை மாவட்டம் கொடுமுடியாறு, பச்சையாறு திட்டம் இன்னும் சரியாகநடைமுறைக்கு வரவில்லை.
• தென்காசி அருகே செங்கோட்டையில்அமைந்துள்ள அடவி நயினார் அணை1989ல் தி.மு.க ஆட்சியில் கட்டப்பட்டு, கேரளாவிலிருந்து வரவேண்டிய நீர்வரத்துசரியாக வரவில்லை. மழை பெய்தால்தண்ணீர் வரும். இந்த அணையைஉடைக்க உலக வாதம் பேசும் மூத்ததலைவர் அச்சுதானந்தம் கடப்பாறைமண்வெட்டியுடன் அடவிநயினார்அணையை உடைக்க 2002ல் தமிழகத்தின்செங்கோட்டைக்கு வீறுகொண்டு வந்தார். இது எத்தனை பேருக்குத் தெரியும்?
• செண்கவல்லி தடுப்பு அணைஉடைக்கப்பட்டு, அது சீரமைக்கப்படாமல்உள்ளது. இந்த அணைசரிசெய்யப்பட்டால், தென்காசி, விருதுநகர்மற்றும் தூத்துக்குடி மாவட்டங்கள்வளம்பெரும்.
• தேசிய நதிகள் இணைக்கப்பட வேண்டும்என்று நான் உச்சநீதி மன்றத்தில் சுமார் 30 ஆண்டுகாலமாகப் பேராடிய வழக்கின்தீர்ப்பில் சொல்லப்பட்ட கேரளாஅச்சன்கோவில், பம்பை நீர்ப்படுகைகளைசெங்கோட்டை, தென்காசி, கடையநல்லூர், புளியங்குடி, சங்கரன்கோவில், திருவேங்கடம் வழியாகசாத்தூரில் உள்ள வைப்பாற்றுடன்இணைக்க வேண்டும். அப்படி இணைத்தால்திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், சிவகங்கை, இராமநாதபுரம்வரையிலான மாவட்டங்களும் செழிப்புரும். இந்தப் பிரச்சனையையும்நாடாளுமன்றத்தில் சரியாகஎழுப்பப்படவில்லை.
• ஆழியாறு - பரம்பிக்குளம், பாண்டியாறு - புன்னம்புழா, அமராவதி திட்டம், பம்பாறு, சிறுவாணி என்று பல்வேறு நதிநீர்வரத்துக்கள் கேரளாவிலிருந்து கிழக்குமுகமாக தமிழகத்தின் கொங்குமண்டலத்திற்கு தண்ணீ ர் வரவேண்டியபிரச்சனைகள் உள்ளன. இப்படி பத்துக்கும்மேலான நதிநீர் பிரச்சனைகள், தமிழகத்தின் உரிமைகள் கேரளத்துடன்பேசித் தீர்க்கவேண்டும்.
• கர்நாடகத்தில் காவிரி பிரச்சனைமட்டுமல்ல தென்பெண்ணை, ஒக்கேனக்கல், தர்மபுரி மற்றும்கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ளநீர்நிலைக்கு வரவேண்டிய தண்ணீரும்கர்நாடகத்தால் தடுக்கப்படுகிறது.
• பாலாறு பிரச்சனை மட்டும் ஆந்திராவோடுகிடையாது. பொன்னியாறு, ஆந்திரா நமதுஎல்லையில் கட்டுகின்ற தடுப்பணைகள், பழவேற்காடு ஏரி 40 சதவிகிதமான நமதுஅமைப்பு முறை சிறுகச் சிறுகஆந்திராவசம் சென்றுகொண்டிருக்கிறது. காவிரி பிரச்சனையைப் போன்றுசென்னைக்கு கிருஷ்ணா குடிநீர் வருவதும்கேள்விக்குறியாகியுள்ளது.
இப்படி ஏறத்தாழ 20-க்கும் மேலான அண்டைமாநிலங்களுடன் நதிநீர் சிக்கல்கள் உள்ளன. தமிழகத்தின் நீர்த் தேவைகளைப் பற்றிநாடாளுமன்றத்தில் பேசினால்தான் திராவிடஇயக்கத்தின் வீரியமும் உரிமைக்குரலும் அதன்மூலம் ஏற்படும் தாக்கமும் இரட்டிப்பாகும்என்பதை இன்றைய திராவிடப்பொறுப்பாளர்கள் உணரவேண்டும்.
நாடாளுமன்றத்தில் அறிஞர் அண்ணா அவர்கள்பேசுகிறார் என்றால், இவரின் பேச்சைக்கேட்பதற்கென்றே அன்றைய பிரதமர் நேருஅவர்கள் அவையில் வந்து அமர்ந்துவிடுவார். பின்பாயின்ட் அமைதி நிலவும். காரணம், தென்தமிழகத்துக்கான தேவைகள் அண்ணாஅவர்களின் உரையில் வீரியத்துடனும்எழுச்சியுடனும் வார்த்தைகளாகத் தெறித்திடும்.
அரசியல் சாசனத்தில் முதல் திருத்தம்முதன்முதலில் கொண்டுவரப்பட்டது திராவிடஇயக்கத்தின் கொடையாகும். சமூகநீதிக்காகசட்டம் திருத்தப்பட்டது. உச்சநீதி மன்றத்தில்தமிழகத்தைச் சேர்ந்த சம்பகம் துரைராஜ்தொடுத்த வழக்கும் ஒரு காரணமாகும். இதுதான் திராவிடியன் ஸ்டாக் என்பற்கானகுரல். அது ஏன் இன்று ஒலிக்கவில்லைஎன்பதுதான் என் கேள்வி. ஒவ்வொருதிரவிடியன்னும் உரிய தரவுகளுடன்நேர்மையுடனும் உரிமையுடனும்நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பி, தமிழ்நாட்டுக்குத் தேவையானவற்றையைப்பெற்றுத் தருவதே, பேரறிஞர் அண்ணாவுக்கும், தலைவர் கலைஞருக்கும் நாம் செய்யக்கூடியகைம்மாறு என்று நான் கருதுகிறேன்.
தாய்மொழியைத் தவிர்த்து வேறு மொழியைத்திணிப்பது என்பது, ஆரோக்கியமற்றசூழ்நிலையையே உருவாக்கும். அதாவதுவிருப்பத்திற்கு மாறாக இந்தி திணிப்பு என்பதுஎதிர்க்கக்கூடிய ஒன்று என்பது திரவிடியன்ஸ்டாக் என்பது அடையாளம். எந்த ஒருமொழியும் இங்கு திணிக்கக்கூடாது. அறிந்துகொள்வது தவறல்ல!
முதன்முதலாக தி.மு.க பொதுத்தேர்தலைச்சந்தித்தபோது ஈ.வி.கே.சம்பத்தும்திருவண்ணாமலையிலிருந்து தர்மலிங்கமும்வெற்றி பெற்று நாடாளுமன்றத்துக்குச்சென்றனர். அப்போது, தமிழகத்தில் இந்தித்திணிப்பு குறித்து பேரறிஞர் அண்ணாவின்வழிகாட்டுதலின்படி நாடாளுமன்ற அவையில்கடுமையாகச் சாடி உரிமைக்குரல் எழுப்பினார்ஈ.வி.கே.சம்பத். இதனால் தமிழகத்தில் இந்தித்திணிப்பால் இந்திய ஒருமைப்பாட்டுக்குக்குந்தகம் விளைந்துவிடுமோ என அஞ்சியநேரு, சம்பத்தைச் சந்திக்க நேருதொலைபேசியில் தொடர்புகொண்டபோது, சம்பத் தொலைபேசியை எடுக்க மறுத்தார். ஏனெனில், அதிகாரப்பூர்வமான உத்தரவாதம்இல்லாமல் நேருவைச் சந்திக்கவோ பேசவோகூடாது என்று சம்பத் தவிர்த்தார். ஆனால்நேருவோ, எப்படியாவது சம்பத்தைச் சந்தித்துஇந்தச் சிக்கலை தீர்க்க வேண்டும் என்று, தனது பிரதிநிதியை சம்பத்தின் டெல்லிவீட்டிற்கு அனுப்பினார். அப்போது, சம்பத்வீட்டில் இருந்துகொண்டே தான் இல்லைஎன்று மறுத்தது உண்டு. எப்படியாவதுஅண்ணாவினுடைய வேண்டுகோளின்படிஇந்தித் திணிப்பு இல்லை என்ற உத்தரவாதம்வாங்கும் வரை ஈ.வி.கே.சம்பத் போராடினார்.
தமிழகத்தில் இந்தி திணிப்பு செய்ய மாட்டோம்என்ற எழுத்துப்பூர்வமான ஒப்புதல் கைக்குகிடைத்த பிறகு அவரை நான் சந்திப்பேன். அதுவரை நான் அவரை சந்திக்கவிரும்பவில்லை என்று அன்றைய பிரதமர்நேருவுக்கே சவாலாகத் திகழ்ந்தவர்ஈ.வி.கே.சம்பத். அவர் கேட்டபடி அண்ணாவின்விருப்பத்தின்பேரில் நேரு வழங்கியஉத்தரவாதத்தின் பின்புதான் சம்பத்அண்ணாவினுடைய சம்மதத்தோடு பிரதமர்நேருவைச் சந்தித்தார். இப்படியான நிகழ்வுகள்எல்லாம் திராவிட இயக்க வரலாற்றில் உண்டு. இதுதான் திரவிடியன் ஸ்டாகின் வீரியம்.
தமிழகத்தின் சார்பில் நாடாளுமன்றத்தில்அண்ணா, ஈ.வி.கே.சம்பத், பேராசிரியர், நாஞ்சில் மனோகரன், க.ராசாராம், இரா.செழியன், முரசொலி மாறன், வைகோஎன பல்வேறு திராவிட இயக்கத்தைச்சார்ந்தவர்கள் சென்று, தமிழகத்தின்தொன்மைகளையும், சிறப்புகளையும்விளக்கியதுடன் மாநில சுயாட்சி, இந்திஆதிக்கம், ஈழத்தமிழர் பிரச்சனை, சமூகநீதி, சேது சமுத்திரத் திட்டம், கச்சத்தீவு, தமிழகஉரிமைகள் என பல்வேறு பிரச்சனைகளைஆட்சியாளர் மட்டுமல்ல, வடபுலத்து இந்தியத்தலைவர்களின் மனதில் பதியும்வண்ணம்எடுத்துரைத்து திராவிட முத்திரையைப்பதித்தனர். திரவிடியன் ஸ்டாக் என்றுபேசிக்கொள்வது மட்டுமல்ல, அதற்குரியசெயல்பாடுகளில் வீரியத்துடன்முன்னேறுவதும்தான்.
அண்ணா முதல்வராகப் பொறுப்பேற்ற பின்தமிழகம் முழுவதும் எழுச்சி நாள் என்று நடத்தி, தீர்மானத்தை நிறைவேற்றி அதை இந்தியஅரசுக்கு அனுப்பிவைத்தார். இந்த எழுச்சிநாளில், தூத்துக்குடி துறைமுகத் திட்டம், சேதுகால்வாய்த் திட்டம், சேலம் இரும்பாலைஆகியவை நிறைவேற்றப்பட வேண்டும் என்றுதீர்மானங்களாக தமிழகம் முழுவதும் குரல்கொடுக்கப்பட்டது. ஒரு முதலமைச்சர் தன்மாநிலத்தினுடைய உரிமைக்காகப் போராடியவரலாறு அண்ணாவுக்கு உண்டு. சேலம்இரும்பாலை காமராஜர் திட்டமிட்டது. தலைவர் கலைஞர் திட்டக்குழுவில் பிரதமர்இந்திராவிடம் போர்குணத்தோடு வாதாடிசாதித்தார்.
1967க்குப் பிறகு இந்தியாவில் தேசிய கட்சிஆட்சிக்கு வராத ஒரே மாநிலம் தமிழ்நாடுதான். பிரிவு 356-ஐ இந்திய அரசு இதுவரை சுமார்132 முறை நடைமுறைபடுத்திவிட்டது. முதல்ஆட்சிக் கலைப்பு என்பது 1951-ம் ஆண்டில்பஞ்சாப் காங்கிரஸ் முதல்வர் கோபிசந்த்ஆட்சிதான். பிறகுதான், மூன்றாவது முறையாகநம்பூத்ரி பாட் தலைமையிலான காங்கிரஸ்அல்லாத கம்யூனிஸ்ட் அரசை 356 பிரிவைப்பயன்படுத்தி 1959ல் கலைத்தது. இந்த 356 பிரிவு கூடாது என்று தி.மு.க தொடர்ந்துகுரல்கொடுத்து வருகிறது. இதற்கு கங்காணிவேலை பார்க்கும் ஆளுநர் தேவையற்றது, ஆட்டுக்கு தாடி எதற்கு? என்று அண்ணாகேள்வி எழுப்பினார். எஸ்.ஆர்.பொம்மைவழக்கிற்குப் பின் ஆட்சிக் கலைப்புகள்குறைந்தன.
அரசியல் சாசனத்தில் நம்முடைய மாநிலங்கள்பற்றி குறிப்பிடப்பட்டுள்ளதா, இந்தியா ஒருஃபெடரல் அமைப்பா அல்லது ஒன்றியஅமைப்பா அல்லது குவாசி ஃபெடரலா அல்லதுகுவாசி யூனியனா என தெளிவாகக்குறிப்பிடப்படவில்லை.
இந்திய அரசியல் சாசனம் உலகிலேயே அதிகப்பக்கங்களும் பிரிவுகளும் கொண்டது. இதுவரை சுமார் 130 திருத்தங்கள் 75 ஆண்டுகளில் நிகழ்ந்துள்ளன. இவற்றில் சில, மசோதாக்களாக நிலுவையில் உள்ளன.
இப்படி தென் தமிழகத்தின் தொன்மைமிக்கப்பிரச்சனைகளை எல்லாம் தெளிவாகநாடாளுமன்றத்தில் விளக்கி விரைவானதெளிவு பெரும் வகையில் சபையில் உரையாடவேண்டும். அதுதான் திரவிடியன் ஸ்டாக்.
திரவிடியன் மாடல் என்றால், மாற்றாந்தாய்போக்கில் மத்திய அரசு நமது மாநிலத்தைநடத்தியும், இந்தத் தடைகளையும் மீறி சீரானபோக்கில் தமிழகம் வளர்ச்சிப் பாதையில்சென்றுகொண்டிருப்பதை குறிப்பிடலாம்.
மக்களுக்குத் தேவையான வாழ்வாதாரத்திட்டங்களை திராவிடர்களே அதிகம்கொண்டுவந்தனர். உதாரணமாக, குடிசைமாற்று வாரியம், சமச்சீர் கல்வி, விவசாயிகளுக்கு இலவச மின்சாரத் திட்டம், சத்தான சத்துணவுத் திட்டம் போன்ற பலதிட்டங்களைக் குறிப்பிடலாம்.
தமிழகத்து மக்களின் பொருளாதார நிலையைஉயர்த்த வேண்டும் என்ற நிலையில்கொண்டுவருவதுதான் திரவிடியன் மாடல்என்பது. திரவிடியன் ஸ்டாக் என்பது நம்உரிமைகளை நாடே கேட்க உரக்கமாகஎடுத்துரைத்து, உரிமைகளைப் பெறுவது. அதாவது, உரிமைக்குக் குரல்கொடுப்போம்…உறவுக்குக் கைகொடுப்போம். திரவிடியன்மாடல் என்பது நம் வாழ்நிலையைஉயர்த்திக்கொள்வதற்கான கடப்பாடுகள்என்ன, திட்டங்களை நிறைவேற்றிக்கொள்ளும்வழிவகைகள் என்ன என்பதைஆய்ந்தறிந்துகொள்வது.
தமிழ்நாட்டின் பல திட்டங்கள்நிறைவேற்றப்படாமலேயே இருக்கின்றன. தமிழகத்தில் இருக்கக்கூடிய விமானநிலையங்களை நாம் முழுவதுமாகப்பயன்படுத்துகிறோமா…. இல்லையே! சென்னை அருகே சோழபுரத்தில் உள்ளவிமான நிலையம், உளுந்தூர்பேட்டையில்உள்ள விமான நிலையம், செட்டிநாடு, கோவில்பட்டி, கயத்தாற்றில் விமானநிலையங்கள் இருப்பது எத்தனைபேருக்குத் தெரியும்?
சேவையில்லாத தேவையைத்தேடிக்கொண்டிருக்கும் இந்த நிலையங்களை, விமான பழுதுபார்க்கும் இடமாக, விமானத்தொழில்நுட்பக் கல்லூரியாக, விமானப்பணிமனையாக, கார்கோவாக, விமானஓட்டுநர்களுக்கான பயிற்சி நிலையமாக… எனபல்வேறுவிதமாக அவ்விடங்களை நாம்பயன்பாட்டுக்குக் கொண்டுவரலாம்.
திராவிடியன் ஸ்டாக் மற்றும் திராவிடியன்மாடல் என்பதற்கான என் விளக்கத்தின்அடிப்படையில் இனி வரக்கூடிய நாடாளுமன்றஉறுப்பினர்கள், தமிழக வரலாறு, அரசியல்பொருளாதாரம், புவியியல் ஆகியவைப் பற்றிதெளிவாகத் தெரிந்துகொண்டு, தமிழ்நாட்டுக்குத் தேவையானவற்றைப் பெறகுரல்கொடுப்பர் என்ற நம்பிக்கையில்தமிழகத்தில் செய்ய வேண்டிய முன்னுரிமைப்பணிகள் விளக்குகிறேன்.
• நாடு விடுதலை பெற்றபோது, தமிழகத்தில்60 ஆயிரம் ஏரி, குளங்கள் இருந்தன. இன்றைக்கு அவற்றில் சரிபாதிதான்உள்ளன. நீர்நிலைப் பகுதிகளில் கட்டிடம்கட்டும் வழக்கத்தை முற்றிலுமாகநிறுத்திவிட வேண்டும். விவசாயத்தில்பாசனமுறைகளைச் செயல்படுத்தவேண்டும்.
• பள்ளிகளில் உள்கட்டமைப்பை மேம்படுத்தவேண்டும். கழிவறைகள், விளையாடும்இடங்கள் ஆகியவை எல்லாப்பள்ளிகளிகளிலும் கட்டாயமாக்கப்படவேண்டும்.
மாணவர்களுக்கு திறம்படக் கற்பிக்கும்வழிமுறைகள் குறித்து ஆசிரியர்களுக்குதொடர்பயிற்சி அளிக்க வேண்டும். சத்துணவுத் திட்டம் மேம்படுத்தப்படவேண்டும். காலைச் சிற்றுண்டியும் அளிக்கவேண்டும். மாணவர்கள் இடைநிற்றலைமுற்றிலுமாக நிறுத்த வேண்டும்.
9-ம் ஆம் வகுப்பு படிக்கும்போதே ஒருமாணவர் தன்னுடைய துறையைத்தேர்ந்தெடுக்க உதவ வேண்டும். 11-ம்வகுப்பில் குறிப்பிட்ட ஒரு பாடத்தைஎடுக்கும் மாணவர், பல சமயம் முறையானதிட்டம் இல்லாமல்தான் எடுக்கிறார். 11-ம்வகுப்பில் சேரும்போது செய்யும் தவறுதொடர்ந்து அவரைப் பாதிக்கிறது. எனவே10-ம் வகுப்புக்குப் போவதற்கு முன்பே ஒருமாணவருக்கு தன்னுடைய துறை எதுஎன்பது பற்றிய திட்டம் ஓரளவேணும்இருக்க வேண்டும்.
• ஆற்றில் மணல் எடுக்கும் நடவடிக்கைகள், சொத்துரிமை, பத்திரப்பதிவு போன்றவை முழுக்க முழுக்க அரசின் நேரடிக்கட்டுப்பாட்டின் கீழ் வர வேண்டும்.
• குறு, சிறு மற்றும் உள்ளூர் தொழில்களைஅரசு ஊக்குவிக்க வேண்டும்.
மது பயன்பாட்டையும் விற்பனையையும்குறைக்கும்விதத்தில் மது விற்பனைக்கடைகளின் எண்ணிக்கையும், அதன்விற்பனை நேரத்தையும் குறைக்கவேண்டும்.
• அரசு அலுவலகங்கள், பொதுமக்களுக்கானதீர்வு கிடைக்கும் களமாகத் திகழவேண்டும். நிர்வாகத் தாமதம், அலைகழிக்கவைத்தல், லஞ்ச ஊழல்பெறுவது போன்ற நடவடிக்கைகளைமுற்றிலும் ஒழிக்க வேண்டும்.
விவசாயிகளுடைய சிக்கல்கள்சிரமங்களைப் போக்கி விவசாயவிளைபொருட்களுக்கு இலாபகரமானவிலையும், விவசாய இடுபொருட்களுக்குநியாமான விலையும் இருக்கும் வகையில்அணுகுமுறைகள் வேண்டும்.
• பெண் கல்வி, பெண்களுக்கான சமூகப்பாதுகாப்பு, பெண் விடுதலை போன்றசெயல்பாடுகளில் உறுதித்தன்மையைபலப்படுத்த வேண்டும்.
• இயற்கையையும் சுற்றுச்சூழலையும்பாதிக்கும் எந்த ஒரு திட்டத்தையும்தவிர்க்க வேண்டும்.
• தமிழகத்தின் மரபுச் செல்வங்களானகோயில்கள், சிற்பங்கள், மருத்துவம், உணவு வகைகள், பயிர்கள், கைவினைக்கலைகள் போன்ற தமிழ் கலாச்சாரவரலாற்று சிறப்புமிக்க இடங்களைபாதுகாப்பதுடன் அவற்றை மேம்படுத்தவேண்டும்.
• மீனவர் பிரச்சனை…..
• நெசவாளர் பிரச்சனை…
• கச்சத்தீவு…
• இந்தியப் பெருங்கடலில் சீனாவின்அத்துமீறலும் தமிழகப் பாதுகாப்புகுறித்தும்…
• ஈழத்தமிழர்கள் இலங்கையில் தாங்கள்விரும்பும் அரசியல் நிலைப்பாட்டிற்குபொது வாக்கெடுப்பு, அங்கு நடைபெற்றஇன அழிப்புக் குறித்தான பிரச்சனைகள்…
• தடைகளைத் தாண்டி தார்மீகக்கடமையுடன் குரல் எழுப்பியும், இன்றுவரைகிடப்பில் கிடக்கும் தமிழகத்தின் சிலஉரிமைகளையும் இங்கு பட்டியலிடுகிறேன். முழுமையாக, தமிழகத்தின் அனைத்துப்பிரச்சனைகள், சிக்கல்கள் அடங்கியஎன்னுடைய விரிவான நூல் விரைவில்வெளிவர இருக்கிறது.
• புதுக்கோட்டை நெடுவாசல், சீர்காழி, இராமநாதபுரம் ஆகிய இடங்களில்விவசாயம் பாதிக்கக்கூடிய வகையில்ஹைட்ரோ கார்பன் எடுப்பதால் நிலத்தடிநீர் கடுமையாகப் பாதிக்கப்பட்டு விவசாயம்பொய்த்துப்போகும்.
• திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருமேகரும்மலை, ரெங்கமலை அருகேஉலோகங்கள் எடுக்கும் திட்டத்தினால்அப்பகுதி விவசாயமே பாதிக்கப்பட்டுள்ளன. இப்படி பல இடங்களில் தமிழகத்தில் இந்தபிரச்சனைகள் உள்ளன.
• தாதுமணல் கொள்ளையைத் தடுப்பதுடன், குமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி மணல்ஆலையைப் புதுப்பிக்கும் முயற்சியைவிரைவாக எடுக்க வேண்டும்.
• கேரள மாநில இறைச்சி மற்றும்மருத்துவமனைக் கழிவுகள் தமிழகஎல்லையில் கொட்டப்படுவதைத் தடுக்கவேண்டும்.
• மேற்கு மற்றும் கிழக்கு தொடர்ச்சிமலைகளின் சுற்றுச்சூழலையும், வனத்தின்வனப்பையும் பாதுகாத்திட வேண்டும். அங்கு வாழும் விலங்கு மற்றும்பறவைகளைப் பெருக்க உரிய நடவடிக்கைஎடுக்க வேண்டும். இதுகுறித்தானஎன்னுடைய வழக்கு நிலுவையில் உள்ளது.
• கோவை, திருப்பூர், திண்டுக்கல் ஆகியமாவட்டங்களில் மூடப்பட்டு வரும் நெசவுஆலைகள், துணி உற்பத்தித்தொழிற்சாலைகள் ஆகியவைபுனரமைக்கப்பட வேண்டும்.
• நாங்குநேரியில் ரயில் இன்ஜின்தொழிற்சாலைத் திட்டம் நடைமுறைக்குவர வேண்டும். நாங்குநேரியில்தொழிற்பூங்கா, கங்கைகொண்டான்தொழில்நுட்பப் பூங்கா ஆகியவைசெயல்பாட்டுக்கு வர வேண்டும்.
• மதுரை விமான நிலையத்திலிருந்துவளைகுடா நாடுகளுக்கான விமான சேவைமேலும் வேகமெடுக்க வேண்டும்.
• கிழக்கு கடற்கரைச் சாலை, இராமநாதபுரம்– குமரிமுனை மற்றும் திருச்சி நான்குவழிச்சலை ஆகியவை மக்கள்செயல்பாட்டுக்கு விரைவில் வரவேண்டும்.
• சேது சமுத்திரத் திட்டம் 100 ஆண்டுக்குமேலாக முடக்கப்பட்டுவிட்டது. கடலூர், நாகை, குளச்சல் துறைமுகத்திட்டங்கள் பல ஆண்டுகளாகவே கிடப்பில்உள்ளன. மூக்கையூர் காட்டுப்பள்ளி, எண்ணூர் சிறு துறைமுகம், திருச்சோபுரம், சிலம்பிமங்கலம் கப்பல்கட்டும்தளம், பரங்கிபேட்டை, காவேரி (நிலக்கரியைகையாள்வதற்காக பூம்புகார் அருகேநாகப்பட்டினம் மாவட்டத்தில்ஏற்படுத்தப்பட்டது), வணகிரி, திருக்கடையூர், திருக்குவளை, புன்னக்காயல், மணப்பாடு, கூடங்குளம், பனையுர், உடன்குடி, வாலிநோக்கம்போன்ற சிறு, மீன்பிடித் துறைமுகத்திட்டங்களை சுற்றுச்சூழல் பாதிப்பில்லாதவகையில் நடைமுறைப்படுத்த வேண்டும்.
• மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைஅமைதல்.
• திருநெல்வேலியில் ஐ.ஐ.டி அமைத்தல்.
• புதுவை மாநில அந்தஸ்து பெறுவது.
• தலைவர் கலைஞரின் கனவைநிறைவேற்றும் வகையில், தமிழகத்தில்இந்திய வரலாற்றில் முதல்முதலாகஅமைக்கப்பட்ட சான்றோர் அவையானசட்ட மேலவையை மீண்டும் அமைப்போம்.
• உச்சநீதி மன்றத்தின் பிரிவு ஒன்றைசென்னையில் அமைக்க வேண்டும்.
இப்படியான தமிழக உரிமைகளின் பட்டியல்நீண்டது. அனைத்தையும் இங்கே குறிப்பிடவாய்ப்பில்லை.
இவற்றை நடைமுறைப்படுத்தபோர்குணத்தோடு ஆக்கப்பூர்வமானசெயல்பாடுகளை முன்னெடுப்போம். இதுவே, திரவிடியன் ஸ்டாக், திரவிடியன் மாடல் என்றகோட்பாடு.
மேற்கு வங்கத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சி ஆட்சியில் இருந்தும், கை ரிக்ஷாவைஒழிக்கவில்லை. ஆனால் தமிழகத்தில்கலைஞர் ஆட்சியில் கைரிக்ஷாஒழிக்கப்பட்டது. அதேபோல இலவசமின்சாரத்தை இந்தியாவிலேயே முதன்முதலாகஅனைத்து விவசாயிகளுக்கும் வழங்கியதுகலைஞர் ஆட்சியில்தான். அதேபோலபல்வேறு முன்மாதிரி திட்டங்களைஇந்தியாவிற்கு முன்னெடுத்ததும் கழகஆட்சியில்தான். அதுவே ஒரு நீண்டபட்டியலாக இருக்கும்.
இன்றைக்கு தமிழகத்தில் முதல்வர் முகஸ்டாலின் அவர்களின் தலைமையில் நடக்கும்திமுக ஆட்சியில், திரவிடியன் மாடல் என்றநிலையில் சில அரசியல், பொருளாதாரரீதியான விடயங்கள்.
முதல்வர் ஸ்டாலின் பதவியேற்றபோது தமிழகஅரசின் கடந்த ஆட்சிக் கால கடன்கள்ஏறத்தாழ 7,77,800 கோடிகள் கடந்த 2020-21 நிதிநிலை அறிக்கையின்படிஇருப்பதாகதகவல். இந்தக் கடனோடு மாதாந்திரம், வருடாந்திரம் வட்டியும் கூடி கடன் சுமைநாளுக்கு நாள்கூடுகின்றது. இந்தக் கடன்கள்மாநில அரசு மற்றும்அதைச் சார்ந்தபொதுத்துறை நிறுவனங்களின்கடன்களைஉள்ளடக்கியதாகும்.
தமிழக அரசின் கீழ் 51 வணிக நிறுவனங்கள்உள்ளன.இந்த நிறுவனங்களின் மொத்தக்கடன் 2018 மார்ச் வரை 168 லட்சம் கோடிகள்ஆகும். இதற்கு அடிப்படைகாரணம்நிறுவனத்தின் வருவாயை விட நடப்புசெலவுகள் அதிகமாக உள்ளது. அதாவதுவருமானத்தைவிட செலவுகள் அதிகம்உள்ளது.
கவலை அளிக்கும் விதமாக தற்போது தமிழகநிதி நிலைதிருப்திகரமாக இல்லை.
நிலுவையில் மற்றும் செலுத்த வேண்டியவட்டித் தொகை ரூ. 82,730 கோடி (மாநிலஅரசின் வட்டி ரூ. 53,600 கோடி மற்றும் மாநிலபொதுத் துறை நிறுவனங்களின் வட்டி ரூ. 29,130 கோடி) ஆகும். இன்றைய நிலவரப்படிநிதி நிலைமையைப் பார்த்தால் மாநிலத்தின்கடன் ரூ. 8,00,000 கோடியும் மற்றும்வட்டிக்கான செலவினங்கள் ரூ. 80,000 கோடியுமாக இருக்கும். சுமாராக மாநிலகுடிமக்கள் ஒவ்வொருவர் மீதும் ரூ. 1,00,000த்துக்கும் மேல் கடன் சுமை உள்ளதாகக்கருதலாம்.
2020-21-ம் ஆண்டின் வருவாய் ரூ. 3,13,700கோடி (மாநில வரிகளில் இருந்து ரூ. 1,09,000 கோடி, மத்திய அரசு வரியில் இருந்து ரூ. 23,039 கோடி மற்றும் இதர வருமானங்கள்ரூ.1,87,000 கோடி) ஆகும். நிதி பற்றாக்குறைரூ.59,000 கோடியாக இருந்தது.
இந்தக் கடன் சுமைகளைத் தீர்த்துநிலைமையைச்சமன்படுத்த வேண்டியதுமட்டுமல்லாமல், கடந்த ஆட்சியில் நடந்தபிழைகளையும் திருத்த வேண்டிய நிலையில்தமிழக முதல்வர் இருக்கின்றார்.
தமிழக அரசில் ஏறத்தாழ 34 துறைகள்உள்ளன. இதில் சமூக நலத்துறை, புள்ளிவிவரத் துறை, மக்கள் நல்வாழ்வுத்துறை, ஆதிதிராவிடர் நலத்துறையிலிருந்து பெரியவருமானங்கள் மாநில அரசுக்கு வருவதில்லை. மற்ற துறைகளிலிருந்துதான் தமிழக அரசுவருவாயை ஈட்ட வேண்டும். ஏற்கனவே ஜிஎஸ்டிவகையிலும்தமிழகத்திற்கு வரவேண்டிய பங்குவராமல் இருக்கின்றது.
சில புள்ளி விவரங்கள் தமிழக அரசின் கடன்நிலவரம் 2021 முடிய 4.85 லட்சம் கோடியைத்தாண்டும் என்று சொல்லுகின்றது. ஆனால்கடன் குறித்து வெவ்வேறு இலக்காக புள்ளிவிவரங்கள் இருக்கின்றன.
தமிழக அரசின் கடனும், தமிழக அரசின் பொதுநிறுவனங்களின் கடனும் சேர்த்தால் 7 ஆயிரம்கோடியைத் தாண்டும் என்று ஒரு கணக்கு. இதில் எந்தப் புள்ளிவிவரம் சரி என்றுதெரியவில்லை.
இந்திய செலவுத் தணிக்கைக் குழுவின் (The Comptroller and Auditor General of India) சமீபத்திய அறிக்கையின்படி, தமிழகத்தின்2020-21-ஆம் ஆண்டின் மொத்த வருவாய்1,74,256 கோடி ரூபாய்களாகவும், மொத்தசெலவினங்கள் 2,66,561 கோடிரூபாய்களாகவும், மொத்த நிதிப்பற்றாக்குறை92,305கோடி ரூபாய்களாககணக்கிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் ஒரேநிதியாண்டில் ரூ13ஆயிரம் கோடி அளவுக்குஇழப்பு ஏற்பட்டுள்ளதாக தணிக்கை துறையின்அறிக்கை கூறுகின்றது. அதுபோல மருத்துவகாப்பீடு திட்டத்திலும் 1000 கோடி பயனற்றமுறையில் சென்று விட்டதாகவும்2019ஆண்டிலேயே 4 லட்சம் கோடி தமிழகஅரசின் கடன் எட்டப்பட்டுள்ளதாகவும்தணிக்கை துறை தெரவித்துள்ளது
மேலும் தமிழ்நாடு அரசின் கடன் சுமை கடந்த2019-ஆம் ஆண்டு மார்ச்சு டன் முடிந்தகாலத்திலேயே 4 லட்சம் கோடியைஎட்டியுள்ளது. இந்தத் தகவல் தணிக்கைத்துறை தலைவரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தணிக்கைத் துறை தலைவர்அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது - தமிழ்நாடு அரசின் மொத்த கடன் சுமை 2018-ஆம் ஆண்டு மார்ச்சுடன் முடிந்த காலத்தில்ரூ.3 லட்சத்து 59 ஆயிரத்து 426.63 கோடியாகஇருந்தது. இந்தக் கடன் அளவு 2019-ஆம்ஆண்டு மார்ச் மாதத்தில் ரூ.4 லட்சத்து 2 ஆயிரத்து 599.33 கோடியாக இருந் தது. அதாவது, ஒரே நிதியாண்டில் ரூ.43 ஆயிரத்து172.07கோடி கூடுதலாக கடன்பெறப்பட்டுள்ளது.
இதில், பல்வேறு அம்சங்கள் மூலமாகஉள்நாட்டிலேயே பெறப்பட்ட கடன்கள் 2018-ஆம் ஆண்டில் ரூ.2 லட்சத்து 72 ஆயிரத்து634.40 கோடியாகவும், 2019-ஆம் ஆண்டுமார்ச்சில் 3 கோடியே 4 லட்சத்து 350.06 கோடியாகவும் இருந்தது என்று தணிக்கைத்துறை. தலைவரின் அறிக்கையில்தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அதிகரிக்கும் கடந்த 2019-ம் ஆண்டுமாரச்சில் ரூ.4 லட்சம் கோடியாக இருந்தகடன்சுமை, கொரோனா போன்றகாரணங்களால் நிகழ் நிதியாண்டில் மேலும்அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடன் சுமையின் அளவு ரூ.5 லட்சம்கோடியைத் தாண்டும்.
இந்தக் கடனை திருப்பிச் செலுத்த வேண்டும்என்பதால்,ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசுபெறும் கடன் நிதி வட்டிவிகிதம் அதிகரித்துக்கொண்டு போகிறது. கடந்த கால ஆட்சிகளால்தமிழக அரசின் நிதி சந்தை மீது வைத்துள்ளநம்பிக்கையும் குறைந்துவிட்டது.இப்படியானநிலையில் இன்றைக்கு புதிய அரசுபொறுப்பேற்றுள்ளது.
இப்படிப்பட்ட நிலையில் இந்தநிறுவனங்களை சீர்திருத்தி நடத்த வேண்டியஒரு கட்டாயம் இருக்கின்றது. நடப்புநிதியாண்டில் தேவையில்லாத செலவுகளைஒதுக்க வேண்டும்.
ஒரு உதாரணத்திற்கு கடந்த காலங்களில்தமிழகத்தில் கூடுதல் மின்சாரம் வாங்கியதற்கு424 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்தமின்சாரம் கூடுதலான விலைக்குவாங்கப்பட்டுள்ளது. இதில் என்ன நியாயம்இருக்கின்றது.
எப்பொழுதெல்லாம் அரசு நிறுவனங்கள் விலைநிர்ணயத்தில் தலைவிரித்தாடுகிறதோஅப்போதெல்லாம் ஏற்படும் நட்டத்தை தமிழகஅரசு தலையில்தான் ஏறிவிடுகிறது.
இதுபோன்ற தேவையில்லாதசெலவினங்களை கவனிக்காமல், பொறுப்பில்லாமல் கடந்த காலத்தில்நடந்ததால் இப்படி நிதி சுமை ஏறிவிட்டது.
பொருளாதார வளர்ச்சிக்கு விவசாயம்அதைச்சார்ந்தவையும், தொழில்கள் அதைச்சார்ந்த கட்டுமானஅமைப்புகளும், போக்குவரத்து தொழில்நுட்பத்துறைபோன்றதுறைகளும் தான் கைகொடுக்கின்றன. இவற்றில் சேவை மற்றும் தொழில்துறைகள்தமிழகத்தில்முன்னிலையில் இருக்கின்றன.
விவசாயத்தில் மாநில வருவாய் (ஜிடிபி) மொத்தம் சுமார்8 விழுக்காடு ஆகும். ஆனால்இதைச் சார்ந்துள்ளமக்கள் தொகை அதிகம். பருத்தி, நிலக்கடலை, பயிர்உற்பத்திக்குவசதியான நீர்வசதிகள் ஏற்படுத்தவேண்டும்.
அதுமட்டுமல்ல நெல், கரும்பு போன்றபயிர்களோடுகாய்கறிகள், பழங்கள், பருப்புவகைகள் எண்ணெய்வித்துக்களைதமிழகத்தில் அதிகமாகப் பயிரிடமுன்னெடுக்கவேண்டும். தமிழகத்தில் பழவகைகள்அதிகமாக விளைந்தாலும் அதைவிற்பனைசெய்யக்கூடிய வகையில்குளிர்சாதனத்துடன் கூடியரயில் வசதிகளைஏற்படுத்த வேண்டும்.
சிறு குறு தொழில்கள், சுய உதவி குழுக்கள், தொழில்முனைவோருக்கு நீண்ட காலகடன்தொகை குறைந்த வட்டியில் கொடுக்கவேண்டும். விவசாய இடுபொருட்களை மானியவிலையில் கொடுப்பதும், நீர்மேலாண்மையைச் சரிவர சீர்திருத்திபயன்கொடுக்கும் வகையில் ஏற்பாடுசெய்யவேண்டும்.
விளைந்த பொருள்களை உழவர் சந்தைபோன்று சந்தைப்படுத்தலும் உள்ளிட்டபிரச்சனைகளை மாநில அரசு கவனிக்கவேண்டும். இவற்றையெல்லாம் பார்க்கும்போதுதமிழக அரசின் மீது தற்போதுள்ள 2.85 லட்சம்கோடி கடன் இந்த நிதியாண்டில் 3.50 லட்சம்கோடியாக அதிகரிக்கலாம்.
மோட்டார் வாகன உற்பத்தி, ஜவுளி, தோல்பொருட்கள்தமிழகத்தில் அதிகம். அதைவிற்பனைப் படுத்தக் கூடியவகையில் சிலமுன்னேற்பாடுகளைச் செய்ய வேண்டும்.
இறக்குமதியை விட ஏற்றுமதிக்கு முன்னுரிமைஅளிக்கவேண்டும்.
சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) அறிமுகப்படுத்தப்பட்ட பின், மாநிலங்களுக்குதங்களது சொந்த வருமானத்தைஉயர்த்துவதற்கான வாய்ப்புகள் வெகுவாகக்குறைந்துவிட்டன. மறுபுறம்செலவினங்களைக் கட்டுப்படுத்த அதிகமுயற்சி எடுக்கப்படவில்லை.
அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும்ஒய்வூதியங்கள், கடன் சேவை, மானியங்கள்போன்ற மூன்று செலவினங்களுக்கு மொத்தவருவாய்க்கும் அதிகமாக இடைவெளிகள்உள்ளன. புதுக்கடன் வாங்க நேர்கிறது. புதியபொருளாதார வளர்ச்சித் திட்டங்களுக்குஅதிகம் செலவிட முடியவில்லை.
மாநிலஅரசின் நிதித்துறையின்; வலுவைப்பொறுத்தே எந்த ஒரு மாநிலமும் நல்லமுறையில் செயல்பட முடியும். நம் மாநிலத்தின்நிதி ஆதாரங்களாக உள்ளவை:
1. உள் மாநில வருவாய்,
2. மத்திய அரசு வருவாய்,
3. வெளிநாட்டுக் கடன் மற்றும் நிதிநிறுவனங்களிடமிருந்து பெறும் கடன். இந்தமூன்று ஆதாரங்களையும் வலுப்படுத்த சீரானமாநில நிதி அமைச்சகம் வேண்டும்.
தகுதியானவர்களுக்கு மட்டுமேநலத்திட்டங்கள்...
இவை வரவேற்கத்தக்கவை என்றாலும், இலக்கின்றி அனைத்து மக்களுக்கும் இவற்றைவழங்குவது ஏற்புடையதன்று. இத்தகையநலத்திட்டங்கள், சமூகத்தின் பலவீனமானமக்களுக்கு மட்டுமே கிடைப்பதைஉறுதிப்படுத்த வேண்டும். அனைத்தையும்உள்ளடக்கிய பொது விநியோக அமைப்பு(PDS) அல்லது அனைவருக்கும் மின்சாரம், பஸ்கட்டணம், சொத்து வரி போன்ற பொதுப்பயன்பாடுகளுக்கான கட்டணங்களையும், விலைகளையும் அதிகரிக்க அரசு தைரியமாகமுடிவெடுக்க வேண்டிய தருணமிது.
கோவிட் 19-ல் பல பாடங்களைக் கற்றுக்கொண்டோம். அந்த வகையில் பொதுச்சுகாதாரம், மக்கள் நல்வாழ்வு என்பதைஅடிப்படை வசதிகளாக எளிதில் எப்போதும்கிடைக்க வேண்டும்.
பொதுச் சுகாதாரம், மக்கள் நல்வாழ்வு, கல்வி, விவசாயம் போன்றவற்றிற்கு தாராளமான நிதிஉதவி கிடைத்து சாமானியனுக்கு அதன்பலன்சேரக் கூடிய அளவில் இந்த மூன்றுதுறைகளும் இயங்க வேண்டும்.
தமிழக அரசின் நிதி ஆதாரங்களைஎப்படிப்பெருக்கலாம்? சில விடயங்கள்
1. குறைந்த விலையில் குடியிருப்புகள்
FSI 6 என 550 சதுர அடியில் தமிழகம்முழுவதும் 25,00,000 வீடுகளை தனியாருடன்இணைத்து கட்டித் தரலாம்.
இப்போது அதிகபட்சம் FSI 2 ஆக உள்ளது. அடித்தட்டு மக்களுக்கு சொந்த வீடு வாங்கும்கனவை இது நிறைவேற்றும்.
அதில் மறு சுழற்சி நீர், சூரிய மின்சாரம் எனநவீன முறையில் கட்டித் தரப்படும்.
விலை அவர்களின் வாங்கும் வசதிக்கு ஏற்றபடிஇருக்கும்.
2. சேம நிதி
ஒரு கோடிப் பேர் சுயமாக தொழில்செய்கிறார்கள். உதாரணம் பெட்டிக் கடைவைத்து இருப்பவர்கள், ஆட்டோ ஓட்டுபவர்கள், தள்ளு வண்டியில் வியாபாரம் செய்பவர்கள்சுயமாக கடை வைத்து இருப்பவர்கள், காய்கறிபழம், உணவு விடுதி வைத்து இருப்பவர்கள்மற்றும் இவர்களிடம் பணிபுரிபவர்கள்இருக்கிறார்கள். அவர்கள் மாதா மாதம் பணம்செலுத்த வேண்டும் அரசும் அதற்குஇணையாகப் பணம் செலுத்தும்.
அந்தப் பணத்தில் அவர்கள் வீடு கட்ட முன்பணம் கிடைத்து விடும்.
3. வெளிநாட்டு வாழும் தமிழர்கள் நலன்.
ஐம்பது லட்சம் தமிழர்கள் வெளி நாட்டில்வாழ்கிறார்கள். அவர்களுக்கும் சேம நிதிக்கணக்கு தொடங்கலாம். அது USD வெளிநாட்டு ரூபாயாக இருக்கும். அவர்கள்75சதவீதம் செலுத்தினால் தமிழக அரசு 25 சதவீதம் செலுத்தும். அந்தப் பணத்தில்அவர்கள் தமிழகத்தில் வீடு மற்றும் சொத்துபோன்ற வற்றில் மூலதனம் செய்யலாம்.
இப்போது M5 வரை வந்து விட்டது. ஓர் நூறுரூபாய் ஒரு நாளைக்கு எத்தனை நபர்களிடம்கை மாறுகிறதோ அந்த அளவிற்கு வளர்ச்சிஇருக்கும்.
இந்தியாவில் அச்சடிக்கப்பட்ட பணம் அதிகபட்சம் பதினைந்து லட்சம் கோடி ரூபாய்கள்தான். ஆனால் ஒரு நாளைக்கு டிரில்லியன்கணக்கில் பரிவர்த்தனைஆகிறது.
ஆங்கிலத்தில் ‘லிக்யூடிட்டி’ என்பார்கள். பணப்புழக்கம் அவசியம் இருக்க வேண்டும். தாராளமயமாக்கலுக்குப் பின் பணம் ஒரேஇடத்தில் தேங்காமல் அந்தப் பணம் 24 மணிநேரமும் சுற்றி வர வேண்டும். அந்தப்பணச்சுற்றே தனிமனிதப் பயன்பாடு வருவாய்என்ற நிலையில் சுழலுகின்றது.
பல பணப் பரிவர்த்தனைகள் பல முறை மாறிசுற்றுகளாக வரும்போது இயற்கையாகவேபணப்புழக்கம் கூடுதலாகின்றது. இதனால்நாட்டின் வருவாயும் நேர்முக மறைமுகவரிகளாக கூடுகின்றது. மக்களுக்கும் ஒருபக்கம் செலவீனம். இன்னொரு பக்கத்தில்இன்னொரு தரப்பினருக்கு வருமானமும்கிடைக்கின்றது.
இதைத்தான் சீனப் பழமொழியில்சொல்வார்கள். “பேப்பர் கரன்சி காற்றில்ஓடுவதைப் போல சுற்றி ஓட வேண்டும். 100, 500, 1000 என்ற வகையில் பணம் காற்றில்ஓடிக் கொண்டே இருக்கும்” என்பது சீனமக்களின் கருத்தாகும். அதேபோல சிறுமதிப்பீட்டில் உள்ள நாணயங்கள் ஒரேஇடத்தில் தங்கலாம் என்பது சீன மக்களின்பார்வை. பொருளாதாரத்தின்மீதானநம்பிக்கையும் கூட.
மஹாராஷ்டிரா மாநிலம் தான் ஐந்து லட்சம்கோடிக்கு வரவு செலவு திட்டம் தயாரித்தனர். தமிழக அரசு இந்த ஆண்டில் இதைப்பின்பற்றலாம்.
தேவை தொலைநோக்குத் திட்டங்கள்:
மாநிலத்தின் வளர்ச்சி இலக்குகளில் ஒருமித்தகருத்தை உருவாக்குவது அவசியம். 1996-2001-ல் முதல்வர் கலைஞர் ஆட்சியில், 20 ஆண்டுகளுக்குப் பிறகு, தமிழகத்தில்தொலைநோக்குத் திட்டங்கள்மற்றும்சென்னை பற்றிய ஒருதொலைநோக்குத் பார்வை திட்டத்தைத்தயாரிக்க ஒரு நிபுணர் குழுவை நியமித்தார்.
ஆனால், அவருக்கு பிறகு பதவியேற்றஜெயலலிதா2001-ல் அரசு அதனைகைவிட்டது. மீண்டும் ஜெயலலிதாதலைமையிலான அரசு, 2023-ல் தமிழகம்(Vision 2023) என்ற தொலைநோக்குத்திட்டத்தை 2017-ல் வெளியிட்டது. ஆனால், இவை இன்றளவும் ஏட்டளவில் மட்டுமேஉள்ளன. செயல்வடிவம் பெறவில்லை. தற்போது தமிழ்நாடு 2030 மட்டுமல்ல 20-40 வரையான ஒரு தொலைநோக்குத் திட்டம்தயாரிக்கப்பட வேண்டும்.
பொருளாதாரத்தில் மால்தஸ்கோட்பாடுகளின்படி மக்கள் தொகைபெருக்கம் கொண்ட இந்தியாவில் இப்படிபொருளாதார சிக்கல்கள் அவ்வப்போதுபெருகிக் கொண்டுதான் இருக்கின்றன.
இப்படிச் சுமையான காலகட்டத்தில் அரசுவழங்கும்இலவசத் திட்டங்க்ள் சலுகைகளைநிறுத்தியும்விடமுடியாது. மதுவிலக்கு என்பதும்கேள்விக்குறியாகஇருக்கின்றது.
நிதி ஆதாரம் இருந்தால்தான் மாநிலம் திடமாகஎதையும்முன்னெடுக்க முடியும். இதற்குஆதாரங்கள் மாநிலஉள்வருவாய், மத்திய அரசுமூலம் வரும் வருவாய்அயலகக் கடன்கள், நிதிநிறுவனங்களிடம் பெறும்கடன்கள் இதைக்கொண்டுதான் திட்டங்களைத் தீட்டமுடியும். அப்போது தான் ஒரு ஜனநாயகத்தில்மக்கள்நல அரசாக திகழ முடியும்.
தமிழகத்தைப் பொறுத்தவரை அண்டைமாநிலங்கள்கேரளா, கர்நாடகா, ஆந்திராபோல நீர்வளம், வனவளம், தாதுவளம் நமக்குஅதிகமில்லை. மனித ஆற்றல்மற்றும்இருக்கின்றது. இதோடு பெறப்படுகிறநிதிஆதாரங்களைக்கொண்டு நிர்வாகத்தைநடத்தவேண்டிய சூழல்.
பணப்புழக்கம் அவசியம். அந்தப்பணப்புழக்கம்வேண்டும் என்றால் தொழில்கள்சிறக்க வேண்டும். திருப்பூர் போன்றநகரங்களில் வெளிமாநிலத்தைச்சார்ந்தவர்கள்பணியாற்றுகின்றனர்.
மாநில சுயாட்சி மாநிலங்களுக்கு அதிகாரம்மத்திய தொகுப்பிலிருந்து சமன்பாடான நிதிஒதுக்கீடு மாநிலங்களிடையே வழங்கப்படவேண்டும் என்ற கோரிக்கை 1960-களிலிருந்துஎழுந்துள்ளது.
அந்தவகையில் மத்திய தொகுப்பிலிருந்துவருவாயைப் பெறுவதில் மேற்குவங்கமுதல்வரான ஜோதிபாசு தனது அரசின்வெள்ளை அறிக்கை வாயிலாக மத்தியஅரசிடமிருந்து மாநிலங்களுக்கு வழங்குகின்றநிதி ஓரளவு அதிகம்பெறக்கூடிய வகையில்போராடிப் பெற்றார்.
இன்றைக்கு தொற்று நோயினால் அங்கும்தொழில்கள்முடங்கிவிட்டன. இதையும் சீர்செய்ய வேண்டும்.
“இயற்றலும் ஈட்டலுங் காத்தலுங் காத்த
வகுத்தலும் வல்ல தரசு”
- குறள் 385:
அதாவது முறையாக நிதி ஆதாரங்களைவகுத்து, அரசாங்கக் கருவூலத்திற்கானவருவாயைப் பெருக்கி, அதைப் பாதுக்காத்துத்திட்டமிட்டுச் செலவிடுவதுதான் திறமையானநல்லாட்சிக்கு இலக்கணமாகும்.
திராவிடம் வழியே மக்கள் நல புரட்சியைஏற்படுத்துவோம்...
இந்தியாவில் புரிந்துணர்வுடன் வாழ்வோம்!
வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்!
வாழிய பாரத மணித்திரு நாடு!
-கட்டுரையாளர்
அரசியாளர்.