Saturday, July 23, 2022

கரிசல் காட்டின் கவிதைச் சோலை பாரதி !

சுப்பையா என்றொரு குழந்தை !
 எட்டையபுரமெனும் கரிசல் காட்டில் பிறந்து, 

தொல்லைக்கு இடையே தாமிர பரணி நதிக்கரை நெல்லையில் கற்று,,
எல்லைகள் தாண்டி கிழவி பாகீரதியுடன் கங்கைக்கரை காசி வரை சென்று 

அருந்தவப்பன்றியென தன்னையே இகழ்ந்து ,,
இந்த தேசத்தின் மீது அளவிலாத பற்று கொண்டு,,,
விடுதலைக் கவி பல பாடி,,

இதழ்கள் பல நடத்தி,,, கவிதைகள் பல நெய்து,,,
தமிழ் இலக்கியத்துக்குப் பெருமை சேர்த்து மகாகவி பாரதியார் ஆகி மறைந்த போது,,
அந்த மகாகவிஞன் இந்த மண்ணில் கழித்த ஆண்டுகள் வெறும் 39 மட்டுமே !

  முப்பத்தொன்பது ஆண்டுகள் இந்த தமிழக மண்ணிலே வாழ்ந்து மறைந்து நூறாண்டுகள் கழிந்து விட்டது.

 அவன் எழுதிய கவிகள் ஆயிரமாயிரம்,,, !
வயிற்ருக்கு உணவில்லாத போதும்,,, தமிழ் படித்தான் !
தமிழ் எழுதினான் !

யாமறிந்த மொழிகளிலே,,,
தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம் ! என்றான் ,,

  அவன் ஒரு நல் வீணை !
ஆனால்,,,
நல்லதோர் வீணை செய்தே, 
அதை நலங்கெட புழுதியில் எறிவதுதானே ? தமிழர் பண்பாடு  ?

அந்த மகாகவிஞனைப் பற்றி சொன்னவர் ஓராயிரம் உண்டு !
அந்த மகாகவிஞனைப் போற்றியவர்கள் பல்லாயிரம் உண்டு !
அந்த மகாகவிஞனைப் பற்றி எழுதியவர்கள் பல நூறுண்டு !

சென்றிடுவீர் எட்டுத் திக்கும்,
கலைச் செல்வங்கள் யாவும், 
கொணர்ந்திங்கு சேர்ப்பீர் !
என்று பாடிய அந்த மகாகவிஞனை,,

 இந்த நூறு ஆண்டுகளாக எழுதிப் போற்றிப் பாராட்டிய எழுத்துக்களை , கருத்துக்களை எல்லாம்,,ஒன்றாகச் சேர்த்து,,, சிதறிக்கிடந்த நெல்லிக்காய்களை எல்லாம், ஒன்றாக ஒரே மூட்டையில் சேர்ப்பது போல,,, தொகுத்துச் சேர்த்து,,,

கரிசல் காட்டின் கவிதைச் சோலை பாரதி 
என்ற பெரும் நூலாக்கி,,,
பாரதியின் நினைவு நூற்றாண்டு சிறப்பு வெளியீடாக,

பொருநை – பொதிகை-கரிசல் –கதை சொல்லி என பன்முகம் காட்டுகின்ற வழக்கறிஞர் கே.எஸ்.இராதா கிருஷ்ணன் அண்ணா அவர்கள்,  கலைஞன் பதிப்பகத்தின் வழியாக வெளியிட்டிருக்கிறார்கள் !

 இந்நூல் உண்மையிலேயே ஒரு பெருந் தொகுப்பு !
இதற்கான உழைப்பினை எண்ணுகையில் வியப்பாக இருக்கிறது !

 மகாகவி சுப்பிரமண்ய பாரதியைப் பற்றி,,, அன்றைய காலத்தில் பேசாதவர்களே இல்லை,,,

 ஆனால்,,யார் ! யார்,,என்னென்ன பேசினார்கள் ? எழுதினார்கள் என்றால் பதிலின்றி திகைத்திருந்த காலம் போயிற்று என்று சொல்வதற்கு,,
 ஒரு புத்தகம் வெளி வந்திருக்கிறது !

அதுதான் ,,,,,,,
கரிசல் காட்டின் கவிதைச் சோலை பாரதி !

மூதறிஞர் இராஜாஜி , 
தமிழ்த்தென்றல் திரு.வி.க.
கப்பலோட்டிய செம்மல் வ.உ.சிதம்பரம் பிள்ளை
வ.வே.சு. , உ.வே.சா, ம.பொ.சி, டி.கே.சி
பெருந்தலைவர் காமராஜர், ப.ஜீவானந்தம், 
கவிமணி, 
நாமக்கல் கவிஞர், 
பாவேந்தர், கவியரசர், வ.ரா, பி.ஸ்ரீ, 
பேரறிஞர் அண்ணா , கலைஞர் கருணாநிதி, ஆர்.நல்லக்கண்ணு ,என்று ஆரம்பித்து,,,,,

கி.இராஜநாராயணன்,
பாரதி கிருஷ்ணகுமார்,
சிற்பி பால சுப்பிரமணியம், 
அப்துல் ரகுமான்,
நா.காமராசன், 
சுஜாதா, 
மாலன்
தமிழருவி மணியன்,,
பாரதி மணி மண்டப திறப்பு விழாவின் போது கல்கி வெளியிட்ட சிறப்பிதழ்,
டாக்டர் ஜி.ஆர்.தாமோதரன் ஆசிரியராக இருந்த கலைக்கதிர் பத்திரிக்கை வெளியிட்ட பாரதி நூற்றாண்டு விழா சிறப்பிதழ்,,, வெளியிட்ட கட்டுரைகள்

என 124 மனிதர்கள் , மகாகவியினைப் பற்றி எழுதிய கட்டுரைகள் எல்லாம்,, ஒற்றை நூலாக வெளி வந்திருக்கிறது,,,

மிகச்சிறப்பான தொகுப்பு,,
ஒவ்வொரு கட்டுரை எழுத்தும்,,,,கோடிப் பொன் பெறும்,,, சீர் !

 ஒரு பானைச் சோற்றில்,, 
நான் பதம் பார்த்த சோறு,,,
வசனக் கவிதை எனும் தலைப்பில்,,, பாரதியைப் பற்றி நா.வா என்கிற 
நா.வானமாமலை அவர்கள் எழுதிய கட்டுரையில்,,,

நின்னைப் போல் எமதுயிர்
நூறாண்டு வெம்மையும்
சுடரும் தருக. தீயே
நினைப் போல எமதறிவு கனலுக  என்று பாடியவன் பாரதி என்று காட்டுகிறார் !

ஆம் !
சூரியனது இயல்புகள் மனிதனுக்குக் கிட்ட வேண்டுமென்று அவனிடம் வரம் கோரி , தமிழ் பாடும் புலவர்களை எல்லாம் பாரதி அழைக்கிறான் ! என்கிறார்,,

ஆம் !
அதனால் தான் அவன் மகாகவி !
அதனால் தான் அவன் மகாகவி பாரதி !

இப்பெரும் பணியினைச் மேற்கொண்ட பாசத்திற்குரிய அண்ணா
வழக்கறிஞர் கே.எஸ்.இராதா கிருஷ்ணன் அவர்களுக்கு  வணக்கத்துடன் வாழ்த்துக்களையும்,,பெரு மகிழ்வினையும்,,காணிக்கையாக்குகிறேன்…


No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...