Sunday, July 24, 2022

வட்டார வழக்குச் சொல்லகராதியின் மூல கர்த்தா கி.ரா.,

வட்டார வழக்குச் சொல்லகராதியின் மூல கர்த்தா கி.ரா.,                      ஒரு தனி மனிதன் மொழியைச் சிதைத்துப்பேசினால் அது கொச்சை மொழி’ எனப்படுகிறதுஒரு பகுதியின் மக்கள் முழுவதும் அவ்வாறு பேசுவதென்றால் அது வட்டார வழக்கு’ எனப்படுகிறதுவட்டார வழக்குக்குக்கென்று பண்பாட்டு அடையாளங்கள் உண்டுஇவை அந்த்தந்தப் பகுதி மக்களின் சமூகம்மொழிஇனம்பண்பாடு சார்ந்து ஒவ்வொரு வட்டாரத்திலும் ஒவ்வொரு மாதிரியாகப் பேசப்படுகிறதுஅந்தப் பேச்சுப் புரியவில்லையென்றால் அந்நிய மொழி ஆகிவிடுகிறதுதமிழ் இலக்க்கிய வகைமைகளானச் சிறுகதைநாவல்களில் இந்த வட்டார வழக்குகளின் தாக்கம் அதிகமாக இருக்கின்றனஅதற்குக் காரணம் படைப்பாளிகள்தான்படைப்பாளிகள் தான் வாழும் மண் சார்ந்தும் தான் பார்த்துப் பழகிய மக்களின் வாழ்வியல் பாடுகளைப் பதிவு செய்யஉணர்ச்சிகளை வெளிப்படுத்த தான்பேசும் மொழியை எந்தத் திரிபுக்கும் உட்படுத்தாமல் உள்ளபடியே தான்பேசும் வழக்குப்படியே பதிவுசெய்கின்றனர்தமிழ்மொழிக்குள் இப்படிப்பட்ட உணர்வை மொழிவழி ஏற்படுத்தக்கூடிய வட்டார வழக்குகள் எல்லோருக்கும் போய்ச்சேர வேண்டும் என்ற அடிப்படையில் உருவாக்கப் பெற்றதுதான் வட்டார வழக்குச் சொல்லகராதி ஆகும்கரிசல் இலக்கியத்தின் பிதாமகர் கி.ரா., என்று இலக்கிய உலகம் அன்போடு அழைக்கும் கி.ராஜநாராயணன்தான்வீரமாமுனிவரின் சதுரகராதிக்குப் பின் வந்த முதல் வட்டார வழக்குச் சொல்லகராதியை உருவாக்கியவர் ஆவார்அதற்குப் பிறகுதான் ஒவ்வொரு வட்டாரம் சார்ந்து வழக்குச் சொல்லகராதிகள் உருப்பெற்றன

வட்டார வழக்குச் சொல்லகராதிகள்:

2000இல் கொங்கு வட்டாரச் வழக்குச் சொல்லகராதி(பெருமாள் முருகன்), 2004இல் நாஞ்சில் வட்டார வழக்குச் சொல்லகராதி(.கா.பெருமாள்), 2004இல் நெல்லை வட்டார வழக்குச் சொல்லகராதிசோமலேகண்மணி குணசேகரன் போன்றோரைத் தொடர்ந்து இன்னும் பிற வழக்குச் சொல்லகராதிகள் ஒவ்வோர் இனம் சார்ந்து வந்திருக்கின்றனகரிசல் இலக்கியத்திற்கு மட்டுமல்லமால் வட்டார வழக்குச் சொல்லகராதிக்கும் கி.ரா.,தான் மூல காரணம் ஆவார்படைப்பிலக்கியத்துற்குள் மண்ணின் மணம் கமழுவதற்கு வட்டாரச் சொற்களே காரணமாகின்றன.

வழக்குச் சொல்லகராதி உருப்பெற்ற விதம் 

கி.ரா., தொகுத்த வட்டார வழக்குச் சொல்லகராதியை அன்னம் பதிப்பகம் 1982இல் வெளியிட்டதுகி.ரா., பாண்டிச்சேரிக்குப் புதிதாகக் குடியேறியபோது ஒருசில பொருள்கள் வாங்கக் கடைக்குப் போகிறார்அங்கே தான் கேட்ட எந்தப் பொருளும் கடைக்காரர் இல்லையென்றவுடன் கி.ரா., இது என்ன என்று கேட்டபோது கடைக்காரர் இது பொட்டுக்கடலை(பொரிகடலைஎன்கிறார்அதுபோல வேர்க்கடலை(கடலைமல்லாட்டநிலக்கடலைகடலக்கா), மிளகாய் வத்தல்(காஞ்ச மிளகா), தனியா(கொத்தமல்லிவரமல்லிமல்லி), கேப்ப மாவுராகி மாவுகேவுருஎன்று பலவாறான சொற்கள் இருந்தததால் தமிழ்பேசும்போதே மொழிக்குள் இத்தனை இடர்பாடுகளா என்பதை உள்வாங்கியவருக்கு  அகராதியை உருவாக்கம் எண்ணம் வந்திருக்கிறதுஅதன் வெளிப்பாடுதான் 1982இல் வெளியிட்ட வட்டார வழக்குச் சொல்லகராதி ஆகும்இதில் விடுபட்ட சொற்களைத் தொகுத்தும்ஒரு சில சொற்களை நீக்கியும்அனுபந்தம்,  மழை பற்றிய சொற்கள்கண்ணும் கண் சம்பந்தப்பட்ட நோய்களும்கிராமிய விளையாட்டுகள்மாடுகளின் வகைகள்ஆபரணங்கள்வண்டிநிலம் தொடர்பான சொற்கள்காற்று வகைநம்பிக்கைகள் என எல்லாவற்றையும் தொகுத்து மீண்டும் 2008இல் அன்னம் வெளியீடாக வழக்குச் சொல்லகராதி” என்று வெளிவந்திருக்கிறது

கி.ரா தான் தொகுத்த வழக்குச் சொல்லகராதிக்குப் பெரிதும் சேகரம் செய்து கொடுத்தஎஸ்.எஸ்.போத்தையாகழனியூரான்ஓவியர் மாரீஸ்பூமணிமுருகன்கே.உதயசங்கர்பெருமாள்மாணிக்கம்ஐயரப்பன் இன்னும் பலரின் துணைகொண்டு தான் இந்த வட்டார வழக்குச் சொல்லகராதி உருவாக்கம் பெற்றிருக்கிறது என்று தனக்கு சொற்களின் சேகரித்திற்கு உதவிய அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் மாண்பாளராகத் திகழந்தார்

கரிசல் வழக்குகள்:

போகணி: (ஆளுக்கு ரண்டு போகணி மூணு போகணின்னு குடிச்சிட்டு)

எசலிப்பு: (அச்சந்தலுக்கும் கிட்டப்பனுக்கும் இடையில் இப்படி வெளியில்த் தெரியாத எசலிப்பு இருக்கிறது.) 

குலுக்கை: (கம்மம்புல் எடுக்க குலுக்கைக்குள் இறங்குவதில்லை.)

வாப்பாறுதல்: (மூணு பேரையும் கொண்ணு தானும்செத்தான் என்று    வாப்பாறினார்)

வாளித்தல்: (கிட்டப்பன் களத்தில் பொலியை வாளித்துக்கொண்டிருந்தான்)

அரணிப்பு: (பருத்திச் செடிகளின் அரணிப்பு பார்த்துப் பார்த்து சந்தோஷப் படும்படியாக இருந்தது)

இப்படி போகணிஎசலிப்புஅரணிப்புபோன்ற சொற்கள் எல்லாம் கரிசல் பூமிக்குச் சொந்தமானவை என்று சொல்லலாம்ஒவ்வொரு சொல்லையும் தனியாகப் பொருள் கொள்வதைவிட அது இடம்பெற்ற சூழல் சார்ந்து பொருள் கொள்ளவேண்டும். 

வழக்கும் வாழ்க்கையும்:

வட்டார வழக்குச் சொல்லகராதியைக் கொண்டுவர பெரிதும் முனைந்தார் கி.ரா., ”வட்டார வழக்குச் சொற்களைச் சரியாகப் புரிந்து கொள்ள விஸ்தாரமான ஒரு அகராதி தமிழில் இல்லாதது பெரிய்ய குறை” என்று கோபல்ல கிராமத்து மக்கள்’ நூலில் குறிப்பிட்டுள்ளார் கி.ரா.

வட்டார வழக்குச் சொற்கள் இயல்பாக நமக்குள் விதைக்கப்பட்டவைநீரில் அமிழ்த்திய பந்துபோல் அவ்வப்போது திமிறிக் கொண்டு வெளியே எட்டிப்பார்த்தே தீரும்இது தவிர்க்க முடியாததுஅதனால்தான் சொல்வார்கள் நான்கு பேர் சேர்ந்து தமிழில் பேசினால் அவரவர் இனத்தைவட்டாரத்தைத் தெரிந்து கொள்ளலாம் என்று.

பாமரர் பேசும் மொழியழகு ஏட்டுத் தமிழில் பார்க்கமுடியாதுஏட்டில் இயல்பு கிடையாதுஅது மணமும் இயற்கை அழகுமில்லாத வெறும் காகிதப் பூ” என்கிறார்பாமரர் பேசும் மொழியை மொழியழகு என்கிறார்

ஐந்து ஆண்டுகளாக ஊறுகாய்ப்பானையில் கிடந்த இந்த வட்டார வழக்குச் சொல்லகராதியை அன்னம் புத்தகமாகக் கொண்டுவருவது தனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது என்கிறார்முன்மாதிரிக்குக்கூட ஒன்றும் கிடைக்கவில்லைபலரை அணுகி வட்டார வழக்குச் சொல்லகராதியைப் பார்த்திருக்கிறீர்களாஎப்படி இருக்கும் அதுஎன்று கேட்டபோது அவர்கள்  கையைவிரித்தது ஏமாற்றமாக இருந்தது என்று பதிவுசெய்கிறார்மதுரைபாத்திமா கல்லூரி மாணவிகளுக்கு மத்தியில் பேசிக் கொண்டிருக்கும்போது அவர்களுடைய கேள்விகள் என்னை ஒரு கரிசல் வட்டார வழக்குச் சொல்லகராதியைத் தயாரிக்க வேண்டும் என்கிற உந்துதலை ஏற்படுத்தியதுஅதன் விளைவுதான் இந்த அகராதி என்கிறார்.

தமிழகம் முழுவதும் உள்ளடக்கிய இன்னும் தமிழ் உலகம் முழுவதும் உள்ளடக்கிய ஒரு முழுமையான வட்டார வழக்குச் சொல்லகராதி தமிழில் வரவேண்டும். ”தமிழ்நாடு வட்டர வழக்குச் சொல்லகராதி” என்று  ஒன்று உருவாக வேண்டும் என்பது கி.ரா.வின் பெருங்கனவாகும்பல வட்டாரங்கள் சார்ந்த வழக்குச் சொற்களைத் தொகுத்தால் ஒரு முழுமையான வட்டார வழக்குச் சொல்லகராதி கிடைக்கும்இது பலரின் கூட்டு முயற்சியால் நிறைவேறும் என்பதும் திண்ணமாகும். மண்டலங்கள் வாரியாக வட்டார வழக்குச் சொற்களைத் தொகுக்கும் பணியைச் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலி திட்ட இயக்ககம் மேற்கொள்வது அரியபணியாகும். 

(அகராதி மலருக்கானக் கட்டுரை )

No comments:

Post a Comment

*Some believe holding on and hanging in there are signs of great strength*

*Some believe holding on and hanging in there are signs of great strength*. However, there are times when it takes much more strength to kno...