Thursday, June 30, 2022

#சென்னை_பழைய_விமான_நிலையமும்_சில_நினைவுகள்…

#சென்னை_பழைய_விமான_நிலையமும்_சில_நினைவுகள்…
———————————————————
கீழே உள்ள பழைய படம் சென்னை விமான நிலையம் இன்றைக்குள்ள விமான நிலையத்திற்கு வடக்கு புறம் 800 மீட்டர் தள்ளிஅமைந்தது இருந்தது. இதுதான் 1960,70 களில் இருந்த விமான நிலையம். இன்றைக்கு கார்கோ வாக உள்ள பகுதி 70 களில் அன்றைக்கு விமான நிலையமாக செயல்பட்டு வந்தது. 

அப்போது இன்று போல பல தனியார்
விமானங்கள் கிடையாது. மத்திய அரசின் Indian Airlines வெளி நாடு செல்ல Air India மகாராஜா சின்னத்தோடு  இயங்கியது . இவ்வளவு 
தனியார் விமானங்கள் இயக்கம் 1990களில்தான்.




எவ்வளவோ நினைவுகள் வந்து செல்கின்றன. முதல் விமான பயணம் எனக்கு இந்த இடத்திலிருந்துதான் தொடங்கின. முதல் விமான பயணத்தில் சென்னையிலிருந்து டெல்லி செல்லக் கூடிய சூழல் அமைந்தது. அப்போதெல்லாம் விமான பயணத்தின் டிக்கெட் ரசீது மாதிரி 3, 4 பக்கங்களாக book let-செவ்வக வடிவில் தாள்களாக அமைந்திருக்கும். மத்தியில் நிதித்துறை ராஜாங்க அமைச்சராக இருந்த தாரகேஷ்வரா சின்கா ஸ்தாபன காங்கிரஸில் முக்கியமான அகில இந்திய நிர்வாகி. ஆங்கிலத்திலும் ஹிந்தியிலும் அற்புதமாக பேசக்கூடிய ஆற்றல் பெற்றவர். 

அவர் தமிழகம் வந்தால் நான் உடன் இருப்பேன்.  அவருடன் பயணித்து பணிகளை செய்வது உண்டு. அவர் குறிப்பாக கன்னியாகுமரி, மதுரை,திருச்சி-ஶ்ரீரங்கம், கோவை,சிதம்பரம், மாமல்லபுரம்,திருப்பதி போன்ற இடங்களுக்கு செல்வார். 

அவர் ஒரு முறை தமிழகம் நிகழ்ச்சிக்கு வந்து திரும்பும் போது என்னை டெல்லிக்கு வருமாறு அழைப்பு விடுத்து உடன் அழைத்து சென்றார். விமான பயணச் செலவை அவரே ஏற்று என்னை டெல்லிக்கு அழைத்து சென்றார். அதுதான் என்னுடைய முதல் விமான பயணம். முதல் விமானப் பயணம் என்பதால் பல விஷயங்கள் அறியக்கூடிய வாய்ப்பு எனக்கு 48 ஆண்டுகளுக்கு முன்  கிடைத்தது. 

டெல்லி அழைத்து சென்று தாரகேஸ்வரா அம்மையாரின் வீட்டில் என்னை தங்க வைத்து மறுநாள் என்னை இன்றைக்கு உள்ள நாடாளுமன்ற கட்டத்திற்க்கு அழைத்து சென்று;  dear Son, one day you will reach this circular building என்றார். இதெல்லாம் நடந்த நினைவுகள். நான் நாடாளுமன்றம் வளாகத்தை பார்த்தே நாற்பத்தி ஏழு எட்டு ஆண்டுகளுக்கு மேல் ஆகின்றது. சின்காவின் சொன்னபடி நாடாளுமன்ற உறுப்பினராக அங்கு செல்ல 1980, 1998,2002 இல் வாய்ப்புகள் வந்தன. ஆனால் ஏதோ யாரோ சில புன்னியவான்களால் அது ஒருவகையில் தடுக்கப்பட்டது.அவர் நன்றாக இருக்கட்டும். 

ஆரம்ப காலத்தில் இந்த விமான நிலையம் சுற்றுலா பயணிகள் பார்க்க கூடிய இடமாக திகழ்ந்தது. அன்றைய காலகட்டத்தில் விமானம் தரை ஏறுவதும், தரை இறங்குவதும் மக்கள் பிரமிப்போடு பார்த்துக் கொண்டிருப்பர்கள். அந்த விமான நிலையத்தில் அன்றைக்கு எத்தனையோ தலைவர்கள் காமராஜர் இந்திரா காந்தி, ஜெபி என சென்று வரவேற்றதெல்லாம் உண்டு. அதெல்லாம் பசுமையான நினைவுகள். அப்போதெல்லாம் மிக எளிமையான முறையில் வரவேற்பும் போலீஸ் காவல் துறையின் நெருக்கடிகள் இல்லாமல் எளிமையான நிகழ்வாக இருக்கும். அரசியலில் அன்றைக்கு தேசிய அளவிலான மாணவர் அரசியலில் இருந்தால் மாதத்திற்கு ஒரு முறையாவது  விமான பயணம் செய்வது உண்டு. பழ.நெடுமாறன், கவிஞர் கண்ணதாசன் போன்றோர்
டில்லி அரசியிலிருந்து விலகல் என
நிலையில் வட புல அரசியல் தொடர்புகள் இல்லாமல் ஆனாது. இருப்பினும்
கே.பி.உன்னி கிருஷ்ணன், மறைந்த
பஸ்வான், சந்திரஜித் யாதவ், சுரேந்திர மோகன், மற்றும் அம்பிகா சோனி என
பலரின நட்பு இருந்தது இன்னும் இருக்கிறது.
#Chennai_airport_memories

கே.எஸ்.இராதா கிருஷ்ணன்.
#ksrpost
30-6-202.


#நள்ளிரவில்_30_6_2001_தலைவர்_கலைஞரை_கைது



———————————————————
#மறக்க_முடியுமா 30-6-2001.நள்ளிரவில் 
தலைவர் கலைஞரை  
கைது செய்தாயே உனது ஆணவத்திற்கு நீ கொடுத்த விலை என்ன...?

அடியேன் அன்று ஆற்றிய பணிகளை
 தலைவர் கலைஞர்,அண்ணன் முரசொலி மாறன் பாராட்டியதைபலர் மறந்து இருக்கலாம்.
ஆனால் ஜினியர் விகடன்,கல்கி போன்ற இதழ்கள், அன்றைய தினசரிகள் சாட்சி. ஏன் தினமலரே செய்தி வெளியிட்டது.
21 ஆண்டுகள் ஆகிவிட்டன.
இன்று பலர்….
சன் டிவி சுரேஷ் குமார் அன்று உலகமே கண்ணீர் வடிக்க வைத்த சன் டிவிக்கு அந்த ஒளி (Cassette) காவலர்
துறை கண்ணில் மண்னை தூவி விட்டு
அடியேன் விடியலில் எடுத்து சென்று ரகசியமாக சேர்த்தை விரிவாக எழதியும் உள்ளார்.

பத்திரிகையாளர்கள் கல்கி ப்ரியன்,என்டி டிவி மதிவான்ன்,ஜிவி-மைபா. நாராயணன் போன்ற பத்திரிகையாளர்கள் இதற்கு சாட்சிகளாக இன்றும் உள்ளனர்.

அன்றைய முதல்வர் ஜெயலலிதா குருவாய்யூர் கோவிலுக்கு யாணயை பரிசளிக்க சென்ற நேரத்தில் இந்த கைது துயரத்தை கேட்டு ரசித்தார் என்பதும் வேதனையான விடயம்.

அன்று பகலில்நா ன் மாநில மனித உரிமை கமிசனுக்கு சென்று நீதிபதி சாமி துரையிடம் மனுவை அளித்து தமிழக மத்திய சிறைகளில் அடைக்கப்பட்ட 50,000 திமுக தோழர்களை 48 மணி நேரத்தில் விடுவிக்க செய்தேன். அன்று முதல்வர் தளபதி ஸடாலின் அவர்களை மதுரை சிறையில் அடைக்கபட்டார்.

நள்ளிரவில் அடவாடியாக கைது செய்த
அதிமுக அரசு எந்த நீதிமன்ற ஜாமின் உத்தரவு இல்லாமல் ஜெ அரசு தானாக கலைஞரை
விடுதலை செய்ய வேண்டிய நிலைக்கு
தள்ளப்பட்டது.

அன்று வீரமணி என்ன இது குறித்து என்ன கருத்து சொன்னார்? வைகோ அன்று கருத்து சொல்லாமல் அமெரிக்க பயணம்.
கலைஞர்கை தை காங்கிரஸர்?.பி.ஜே.பி. யினர்  கடுமையாஸக  எதிர்தனர. குருவாயூர் கோயிலில்  யானை காணிக்கை செலுத்த சென்ற ஜெயலலிதா வுக்கு  கலைஞர் கைதை கண்டித்து எதிர்பு தெரிவித்த  கேரளா  பி.ஜே.பி தெண்டர்களை ஜெயலலிதா வின்  பாதுகாப்பு படையினரும்  கேரளா காவலர் களும் கடுமையாக தக்கி கேரளா பி.ஜே.பி யினர் கடுமையாக  ரத்தம் சிந்தினார்கள்

இதுதான் நான்..
பதவிக்காக எனது அரசியல் அல்ல…
போகிற போக்கில் பொறுப்புகள் நம்மை நோக்கி வரனும்.
பதவி நோக்கி நம் பணி இல்லை.

 மேலும் விரிவாக பிபிசிஇல்:
https://www.bbc.com/tamil/india-45030458

#நள்ளிரவில்_தலைவர்_கலைஞரை_கைது 
#Kalaignar_midnight_arrest

கே.எஸ்.இராதா கிருஷ்ணன்.
#ksrpost
30-6-202.

Monday, June 27, 2022

#எட்டயபுரம் #எட்டப்பர்_சம்பிரதாயம்

#எட்டயபுரம் #எட்டப்பர்_சம்பிரதாயம்
——————————————————-
நேற்று, எங்கள் வட்டாரம், மா கவி பாரதியின் எட்டயபுரத்திற்கு சென்ற பொழுது; எட்டையபுரத்தில் எட்டப்பருடைய மாளிகை புதுப்பிக்கப்பட்டுள்ளது. பார்க்கவே மகிழ்ச்சியாக இருந்ததது.
நானும் கடந்த 50 ஆண்டுகளாக மேலாக அங்கே சென்று வந்துள்ளேன். அந்த மாளிகையின் மஞ்ச கலர் மங்கி கருப்பு அழுக்குகளும், முறையான பராமரிப்பு இல்லாமலும் மாளிகை இது வரை இருந்தது. 

ஆனால், இப்போது புதிய ஒருவர் பட்டத்துக்கு வந்திருப்பதால் அந்த மாளிகையை புதுப்பித்து முறையான பராமரிப்பில் வைத்துள்ளனர். எட்டையபுரம் சமஸ்தானம் ஸ்ரீமான் தங்கச்சாமி ராஜா மறைவையடுத்து 42வது புதிய மகாராஜாவிற்கு பட்டம் சூட்டப்பட்டது. எட்டையபுரம் சமஸ்தானம் 42வதுபட்டத்து மகாராஜாவாக மோகன்ராம் ராஜா அவர்களின் குமாரர் ஸ்ரீராஜாதிராஜா ஜெகவீரமுத்து தங்ககுமார ராமவெங்கடேஷ்வர எட்டப்பநாயக்கர் அவர்களின் திருநாமத்துடன்  பட்டம் ஏற்றார். 




சுமார் 400 ஆண்டுகளுக்குமுன்னர் கட்டப்பட்ட கலைநயமிக்க அரண்மனையை சீர் செய்துள்ளனர். அங்கு பழங்காலத்து வில்வண்டி ,  தேக்குமரத்திலான அழகிய அந்த கால நாற்காலி, இளவட்டக்கல், ஊஞ்சல்,சப்பரம் போன்ற எங்கும் காணக் கிடைக்காத அரிதான பொருட்கள் அங்குள்ளது. 




எட்டையபுரத்தை சுற்றியுள்ள 23 கிராம சில்லவார் சமுதாய இளைஞர்கள் சார்பில் பாரம்பரிய கலை நிகழ்ச்சி
களான தேவராட்டம் என…..… 
இது அங்குள்ள நடை முறை சம்பிரதாயம். எனது வாழ்த்துகளை தெரிவித்தேன். 

இருப்பினும்,அது எங்கள் கரிசல்காட்டு அடையாளம். இப்போதாவது அந்த மாளிகைக்கு விடிவு காலம் வந்ததை எண்ணி மகிழ்ச்சி அடைகிறேன்.

#எட்டப்பர்_சம்பிரதாயம் #எட்டயபுரம்
#Ettayapuram #Ettappar

#ksrpost
27-6-2022.

Sunday, June 26, 2022

#கரிசல்காட்டின்_கவிதைச்சோலை_பாரதி

#கரிசல்காட்டின்_கவிதைச்சோலை_பாரதி 
——————————————————-

கரிசல்காட்டின் கவிதைச்சோலை பாரதி என்ற நான் பதிப்பித்த நூல் குறித்து இன்றைய (26-6-2022) தினமணி நாளிதழில் எனது நண்பரும்,அதன் ஆசிரியருமான திரு கே வைத்தியநாதன் சிறப்பாக எழுதி உள்ளார் அவருக்கு நன்றி. கரிசல்காட்டின் கவிதைச்சோலை பாரதி, பாரதியின் நினைவு நூற்றாண்டு  சிறப்பு வெளியீடாக வெளிவந்தது.. இந்த நூலில் உள்ள கட்டுரைகளை கடந்த 25 ஆண்டுகளாக எட்டயபுரம், கடையம், தென்காசி,சங்கரன் கோவில்,ஓட்டப்பிடாரம்,திருநெல்
வேலி,திருவனந்தபுரம்,மதுரை, சென்னை,கோவை,வாரணாசி போன்று பல்வேறு  இடங்களுக்கு சென்று அலைந்து திரிந்து சேகரித்து தொகுத்த கட்டுரை தான். இதில் என்ன சிறப்பு என்றால்  திராவிட இயக்க தலைவர்கள் பேரறிஞர் அண்ணாவும் தலைவர் கலைஞர் பாரதி பற்றி சொன்ன கட்டுரைகள் இடம்பெற்றுள்ளது. அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும், தமிழ் இலக்கியப் படைப்பாளிகளும், பத்திரிகையாளர்களும், திரைத்துறை சார்ந்தவர்களும் என  சகல தரப்பினரையும் உள்ளடக்கி அனைவருடைய கட்டுரையும் சேகரித்து தொகுத்து  வெளியிடப்பட்டது. 




இந்நூலை நண்பர் நந்தா கலைஞன் பதிப்பகம் Masilamani Nandanவெளியிட்டது. இந்த நூல் பெரிய அளவில் 653 பக்கங்களாக வெளியிடப்பட்டது எனக்கு மன திருப்தியை தந்தது. இந்த நூல் ஒவ்வொரு பல்கலைக்கழகத்திற்கும், கல்லூரிகளுக்கும், தமிழகத்தின் முக்கிய நூலகங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றது. 
••••••••••••••••••••••••••••••••••

#இன்றைய_தினமணியில்…..
#இந்த வாரம்.
#கலாரசிகன்.
பாரதியாரின் நினைவு நூற்றாண்டை ஒட்டி நூற்றுக்கணக்கான வெளியீடுகள் வந்திருக்கின்றன. அவை ஒவ்வொன்றுமே பல புதிய தகவல்களை நமக்குத் தருகின்றன. பெரியவர் சீனி.விசுவ நாதன், பேராசிரியர் ய.மணிகண்டன், ஆ.இரா.வேங்கடாசலபதி உள்ளிட்டோர் ஆய்வு நோக்கில் வழங்கியிருக்கும் தரவுகள் புதிய வெளிச்சத்தைப் பாய்ச்சுகின்றன.
அந்த வரிசையில் வழக்குரைஞர் கே.எஸ்.இராதாகிருஷ்ணன் தனது பங்குக்கு வெளிக்கொணர்ந்திருக்கும் 'தொகுப்புக் கருவூலம்'தான் 'கரிசல் காட்டின் கவிதைச் சோலை பாரதி. அவரது பல வருட உழைப்பு இதில் தெரிகிறது. கோவில்பட்டிக்காரர் என்பதால் இயல்பாகவே நண்பர் கே.எஸ்.இராதாகிருஷ்ணனுக்கு பாரதியாரிடம் பற்று கலந்த அபிமானம் உண்டு. அவருக்கு இப்படியொரு வாய்ப்புக் கிடைத்தால் விட்டுவிடுவாரா என்ன?
"தமிழ் நாட்டின் தென்புலக் கரிசல் மண்ணில் பிறந்து தன் பாட்டுத் திறத்தாலே இவ்வையகம் பாலிக்கப் பாடிய குடுகுடுப்பைக் கோணங்கி மறைந்து ஒரு நூற்றாண்டு ஆகிவிட்டது. அத்தகைய பெருமகனை நம் தமிழ்கூறும் நல்லுலகத்தின் அறிஞர் பெருமக்கள் பலரும் தம்முள் நினைவுகூர்ந்து எழுதிய பல விதமான கருத்துக் களஞ்சியங்களை ஒரு சேரத் தொகுப்பது, சிதறி உருண்டோடும் நெல்லிக்கனிகளை ஓடிப் பொறுக்கி ஒரு மூட்டைக்குள் அடக்குவதற்கு ஒப்பான செயல். கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளாக பலவாறாகத் தேடிச் சேகரித்த கட்டுரைகள் இத்தொகுப்பில் இடம்பெறுகின்றன” என்கிற பதிப்பாசிரியர் உரையை மெய்ப்பிக்கின்றன கட்டுரைகள்.
பாரதியார் வாழ்ந்த காலத்தில் அவருடன் வாழ்ந்து, நெருங்கிப் பழகிய ராஜாஜி, திரு.வி.க., வ.உ.சி., வ.வே.சு. ஐயர், உ.வே.சா., குவளை கிருஷ்ணமாச்சாரியார், பரலி சு.நெல்லையப்பர், சோம சுந்தர பாரதி, பாரதிதாசன் போன்றவர்களும், பாரதியாரின் குடும்பத்தினரும் அவர் குறித்து எழுதியிருக்கும் கட்டுரைகள் அந்த ஆளுமை எப்படி இருந்தார் என்பதைப் படம் பிடிக்கின்றன. 
பாரதியார் குறித்து அவருக்குப் பின்னால் வந்த அரசியல் ஆளுமைகளான எஸ்.சத்திய மூர்த்தி, ப.ஜீவானந்தம், ம.பொ.சி. போன்றவர்களும், திராவிட இயக்கத்தினர்களான அண்ணா, கருணாநிதி உள்ளிட்டவர்களும் வெளிப்படுத்தி இருக்கும் பார்வை, அந்த ஆளுமை எப்பேர்ப்பட்டவர் என்பதை  வெளிப்படுத்துகின்றன.
கவிஞர்கள், இலக்கியவாதிகள், இதழியலாளர்கள், பேராசிரியர்கள், ஆய்வாளர்கள் என்று எந்தவொரு பகுதியினரையும் விட்டு வைக்காமல், அவர்கள் எழுதிய கட்டுரைகளைத் தேடி சேகரித்துத் தொகுத்திருக்கும் வழக்குரைஞர் கே.எஸ். இராதாகிருஷ்ணனுக்கு தமிழக அரசு பாரதியார் விருது வழங்கி கௌரவிக்க வேண்டும்.
பாரதி மணிமண்டபத் திறப்பு விழாவின்போது ‘கல்கி ஒரு சிறப்பிதழ் வெளியிட்டது .அதேபோல, பாரதியாரின் பிறந்த நூற்றாண்டின்போது கலைக்கதிர் சிறப்பு மலர் ஒன்றைவெளியிட்டது.அந்த மலர்களில் வெளிவந்த கட்டுரைகளும் இதில் இணைக்கப்பட்டிருப்பது பாராட்டுக்குரியது. ஆளுமைகளுக்காக சேர்க்கப்பட்டிருக்கும் கட்டுரைகளும், சொல்லப்படும் செய்திக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் கட்டுரைகளும் இடம்பெற்றிருப்பதைப் பார்க்க முடிகிறது. தவிர்த்திருக்கலாமே என்று சொல்லும்படி எந்தவொரு கட்டுரையும் இல்லை.
பாரதியார் ஒரு தங்கச் சுரங்கம். தோண்டத் தோண்டக் கொட்டிக் கிடக்கும் தங்கத்தை அள்ளி அள்ளி மாளாது. அடுத்த தலைமுறைக்கு இந்தக் கட்டுரைகள் கிடைப்பதற்கு வழிகோலியிருக்கிறார் கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
‘ரிலே ஓட்டப்பந்தயத்தின் ஒருகட்டம் ஓடியிருக்கிறார் அவர். இதைப் படித்த பிறகு, அடுத்தகட்ட ஓட்டத்துக்குத் தயாராக என்னைத் தூண்டுகிறது ஆர்வம்.

#ksrpost
26-6-2022.


Monday, June 20, 2022

கண்ணீர் விட்டா வளர்த்தோம்,,,! இப்பயிரைக் கருகத் திருவுளமோ ?

வீரபாண்டிய கட்டபொம்மனும்,
பூலித்தேவனும்,
வாஞ்சிநாதனும்,
வ.உ.சிதம்பரம் பிள்ளையும், 
மகாகவி பாரதியும்,,, 
பிறந்த நெல்லை மண்ணிலேதான்,,,,,
இந்த கழிசடைகளும்,,,,,,

இந்துத்வ பயங்கரவாதி வாஞ்சிநாதன் !
பட்டம் கொடுத்த கழிசடைகளே,,,,
உங்களை நினைத்தால்,,,,,?

இந்திய விடுதலைக்காக ஆங்கிலேயரை எதிர்த்துப் போராடிய வாஞ்சிநாதன், அப்போதைய திருநெல்வேலி மாவட்ட ஆங்கிலேய கலெக்டர் ஆஷ் துரையை,,,,
 மணியாச்சி ரயில் நிலையத்தில் துப்பாக்கியால் சுட்டார் என்ற அளவில்தான் ,,,நீங்களும், நானும்,,,,அறிந்திருப்போம்,,,,

ஆனால்,,,,
1806-ம் ஆண்டிலே நடைபெற்ற ,,முதல் இந்திய சுதந்திர போராட்டம் என்றழைக்கப்பட்ட,,,,
வேலூர் புரட்சிக்குப் பின்,,,,
 1910-ம் ஆண்டு வரையில் ஆங்கிலேயருக்கு எதிராக எவரும்,,,, எவரும்,,,,ஆயுதம் ஏந்தவில்லை.,,
ஏன் ஆயுதத்தினை கையிலெடுக்கக் கூட,,அஞ்சி நடுங்கிக் கொண்டிருந்த வேளையிலே,,,,

 105 ஆண்டு கள் கழித்து 1911-ல் ஆங்கிலேயருக்கு எதிராக ஆயுதம் ஏந்தியவர் வாஞ்சிநாதன்.!

அடக் கழிசடைகளே,,,,,!
உங்கள் கூற்றுப்படியே பார்த்தாலும்,,கூட,,,
வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்கள் உங்களையெல்லாம்,,புறக்கணித்தாரா ?
கோரல் மில் போராட்டத்தினை நடத்தியது,,அங்கு பணியாற்றிய உங்க முப்பாட்டன்களுக்கும்,,சேர்த்துத்தானே ?

நீங்கள்,,,,
வீரவணக்கம் செலுத்தியது,,,,,
உங்களின் அடிமைப் புத்தியைத்தான் காட்டுகிறதோ?

இல்லையெனில்,,,
நீங்களெல்லாம்,,,, ஆஷ் துரையவரின் வாரிசுகளா ?

அப்படி வாரிசுகளென்றால்,,,,?
நீங்கள் இருக்க வேண்டிய இடம்,,,!
இந்த தேசம் அல்லவே ?

இங்கிலாந்திற்கு ,
எப்போது செல்கிறீர்கள் ?
செல்லப்போகிறீர்கள் ?,,

இதையெல்லாம்,,,செய்யச் சொல்லி,,,
உங்களின் பின்னால்,,,,நிற்பவர்கள் யார் ?
உங்களை ஊக்குவிக்கும் சக்தி எது ?
உங்களின் இந்நிகழ்வுக்கு அனுமதியளித்தவர் எவர் ?

ஊருக்கே அன்னமிட்ட வ.உ.சிதம்பரம் பிள்ளை வறுமையிலே செத்தார் !
அவர் குடும்பம் வறுமையிலே உழன்றது !

ஆஹா என்றெழுந்தது பார் யுகப்புரட்சி என்று உலகிற்கே சித்தாந்தம் சொன்ன பாரதியின் குடும்பம்,,,, வறுமையிலே உழன்றது,,

இதோ,,,வீரவாஞ்சி தன்னைத்தானே மாய்த்துக் கொண்ட பின் அவர் மனைவி பொன்னம்மாள் வீடு வீடாகப் பாத்திரம் தேய்த்து கும்பிப் பசி அடக்கினாள் !

அடப் பரதேசிகளா,,,,?
அதுவெல்லாம்,,,உங்கள் காமாலைக் கண்களுக்குத் தெரியவில்லை என்றால்,,,,?

எவனோ ?
ஆங்கிலேயனுக்கு மடி தடவிக் கொண்டிருந்த பண்டிதன் சொன்னதை மட்டுமே ? ஆதாரமாகக் காட்டுகிற ஈனர்களே,,,

கருவின் குற்றம்,,,என்கிற சொல்லாடல்,,,, இப்போது என் ஞாபகத்தில் வந்து தொலைக்கிறது,,,

எல்லாவற்றையும்,,,,
வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்த ,
காலமொன்று,,,
இந்நாட்டிலே இருந்திருந்தது,,,! என்பதும் உண்மைதான்,,,,
ஆனால்,,,
இது,,நேற்று,,அல்ல,,,,,

நாளை,,இப்படியே,,இருக்குமா ?
இப்படியே தான் இருக்குமா ?
•••••

தூத்துக்குடி தொழிலாளர் வேலை நிறுத்தத்தையும் பொதுமக்களின் எதிர்ப்பையும் நிறுத்த ஆஷ் துப்பாக்கியால் சுட்டான். அதில் மாண்டவர்கள் நால்வர். ஒருவர் இஸ்லாமியர். ஒருவர் பட்டியல் சமுதாயத்தை சார்ந்தவர்.  ஒருவரின் வயது 17. வலம்புரியம்மன் கோவிலில் பணி செய்யும் இளைஞர். மண்டையில் குண்டு பாய்ந்து மாய்ந்தார். மற்றொருவர் வயது 18. ரொட்டிக்கடையில் வேலை செய்யும் இளைஞர். இவரும் ஆஷின் துப்பாக்கி குண்டுக்கு பலியானார்.  இறந்தவர்களின் தேகங்கள் எவ்வித அக்கறையும் மரியாதையும் இன்றி மாலை வரை தெருக்களிலேயே கிடக்கும்படி அராஜகம் செய்தான் ஆஷ். இந்த விவரங்கள் ம.பொ.சிவஞானம் ஐயா அவர்கள் எழுதிய ’கப்பலோட்டிய தமிழன்’ எனும் ஆதாரபூர்வமான நூலில் பக்கங்கள் 54-55 இல் உள்ளன. 

ஆனால் இப்படிப்பட்ட ஆஷை குறித்து அவன் ஏதோ சாதி கொடுமைகளை எதிர்த்த தயாளதுரை போல சில மக்கட் பதடிகள் பேசியும் எழுதியும் வருகின்றனர். வீர வாஞ்சிநாதனின் தியாகத்தையும் அவரது மனைவி பட்ட கஷ்டங்களையும் மோசமாக பேசுகின்றனர். இப்படிப்பட்ட கீழ்த்தர ஜன்மங்களையும் பெற்றிருக்க அவர்களின் தாயார்கள் என்ன பாவம் செய்தார்களோ தெரியவில்லை. 

இதில் நம்முடைய ஒரு தவறும் இருக்கிறது. இந்த நான்குபேரையும் யார் யார் என்பதை கண்டறிந்து அவர்களை தேச விடுதலைக்கான பலிதானிகள் தியாகிகள் என கௌரவிக்க நாம் தவறிவிட்டோம். திருநெல்வேலி தேசபக்தர்கள் இவர்கள் யார் யார் என கண்டறிந்து ஆஷின் கொடுங்கோன்மைக்கு பலியான நம்மவர்களான இவர்களின் நினைவை மக்களிடம் கொண்டு செல்லவேண்டும்.




வீரவாஞ்சி ஓவியம் ; Jeeva Nandham அண்ணா

தோல்வி இல்லாத வாழ்க்கை உப்பு இல்லாத உணவு போன்று...!

 தோல்வி இல்லாத வாழ்க்கை உப்பு  இல்லாத  உணவு போன்று...! உற்சாகமான மனநிலை   பாதி  வெற்றியை   கொடுத்து  விடும்...!!