Tuesday, October 22, 2024

#திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களே

#திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களே
———————————————————-
காங்கிரஸ் தலைவர் மல்லிகா அர்ஜுன் கார்கே இன்னொரு மன்மோகன் சிங் என்று நான் twitter  பதிவு செய்தமைக்கு என்னை நீங்கள் திமுகவில் இடைநீக்கம் செய்தீர்கள்! மிக முக்கியமான சந்தர்ப்பங்களில் நெருக்கடிகளில் எவ்வளவு பணிகள,உதவிகளை  திமுக எதிர்கட்சியாக இருந்தபோது நான் செய்து கொடுத்தேன் என்பதை உங்கள் மனம் அறிந்தும்  அதன் நினைவொழிந்து  சர்வ சாதாரணமாக என்னை நீக்கினீர்கள்!



அது யாருக்காக எதற்காக நடந்தது என்று இதுவரைக்கும் தெளிவில்லை! அது உங்கள் குடும்ப உறுப்பினர்கள் எடுத்த முடிவாகத் தான் இருக்கும்! அதை அறிந்திருந்தும்  அதற்கான ஆதாரங்கள் இருந்தும் நான் மௌனித்துக் கொண்டுதான் இருக்கிறேன். அப்படி நான் இருந்து கொண்டது உங்களுக்கு வசதியாகிப் போய்விட்டது!







சரி அது ஒரு பக்கம் இருக்கட்டும் “தேர்தல் நேரத்தில் காங்கிரஸார் தேவையில்லாமல் நம் மீது மிக கனமாகத் தான் ஏறி உட்காருவார்கள்”  என்று அமைச்சர் கண்ணப்பன் பேசியிருக்கிறார்!

நாங்கள் எல்லாம் கட்சியில் கஷ்டப்பட்டு உழைத்தோம். இன்று என்ன நிலை❓ யார் என்றே தெரியாது இருந்த ஒருவர் இப்போது  உங்களது நிர்வாகி ஆக இருக்கிறார். இப்படி கழகத்துக்கு எந்த உழைப்பு, பணிகள் இல்லாமல் ஆளும் கடசியானவுடன் பலர் கலைஞர் அறியவர்கள் இன்று திமுகவில் அமைச்சர்கள், எம்பிக்கள்,எம்எலஏக்கள், நிர்வாகிகள் இருப்பது வேடிக்கைகள⁉️




அவர் “காமராஜர் குடியாத்தம் தொகுதியில் வரலாறு தெரியாமல் பேசினார்”.  

இப்படி உங்களைச் சுற்றி இருப்பவர்கள் பலர் காங்கிரசை கடுமையாக விமர்சித்துக் கொண்டிருக்கும் போது 
அவர்களிடம் விளக்கம் ஏதும் கேட்காமல் அதைப் பற்றியே பேசாமல் மௌனித்துக் கொள்ளும் நீங்கள் என்னை மட்டும் கண்டனம் செய்து நீக்குவதற்கு என்ன காரணம் இருக்க முடியும்?

அப்படியானால் என்னைப் பிடிக்காமல் தான்  நீங்கள்  நீக்கி உள்ளீர்கள்! அப்படிப் பிடிக்காமல் போவதற்கு நான் என்ன துரோகம் செய்தேன் என்றும் எனக்கு தெரியவில்லை! நொண்டிக்குதிரைக்குச் சறுக்கியது சாக்கு என்பது போல இருக்கிறது!

கலைஞருக்கு நெருக்கமாக மிக முக்கியமாக அரசியல் விவகாரங்களைக் கலந்தாலோசிப்பதில் அவருக்குப் பிடித்தமானவனாய் இருந்த என்னை எதற்கு நீக்கினீர்கள் என்பதற்கு நீங்கள் பொதுவில் பதில் சொல்லுங்கள்!

இந்த புகைப்படங்கள் பத்து ஆண்டுகளுக்கு முன்பாக எடுக்கப்பட்டது. அதில் ஒன்று மட்டும் நீங்கள் முதல்வர் ஆனதற்குப் பிறகு எடுக்கப்பட்டது. இன்னொன்று லண்டன்  பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் நடந்த உலகத் தமிழர் மாநாடு நடந்த போது தமிழக தலைவர்கள் கலந்து கொண்ட அந்த நிகழ்ச்சியில் நீங்கள் இறுதி உரை ஆற்றிய போது எடுக்கப்பட்டது. அடுத்த படம் பிரிட்டிஷ் கான்ஸ்லேட் தூதுவரிடம் தலைவர் கலைஞர் பேசிய போது எடுக்கப்பட்ட படம். இன்னொரு படம் எடப்பாடி பழனிச்சாமியின் அதிமுக ஆட்சியில் ஆட்சியில் விவசாயிகளின் தலைவர் நாராயணசாமி நாயுடுக்கு மணிமண்டபம் கட்ட திட்ட மிட்ட
 அக் கட்டடத்திற்கான முதல் செங்கலை நீங்கள் எடுத்து  அவரின் பேரனிடம் வழங்கிய துவக்கி வைத்ததற்கான படம்.

இந்தப் பணி எல்லாம் உங்களுக்காக உடனிருந்து நான் செய்தது என்பதற்காக இங்கு பார்வைக்கு வைக்கிறேன். இப்படியான எதிர்கட்சியாக திமுக இருந்த போது….
இப்படி என் பலபணிகள் உண்டு…. கலைஞரின மனசாட்சிக்கு தெரிந்தது தங்களுக்கும், தங்களின் மகனுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கு நான் எளிதாக படலாம். அது காட்சிபிழைகள் மற்றபடி   இதில் நான் புலம்புவதற்கு என்ன இருக்கிறது! இன்னும் பல விடயங்கள் உங்களிடம் கேட்க உள்ளது.

நான் அதிகம்.....
 கோபப்படுவது....
 உண்மை.....

ஆனால்....
 என் ....
கோபத்தில் .....
ஒரு போதும்.....
 துரோகம் இருக்காது.....
எனவே......
கவலையை ......
யார் தந்தால் என்ன... 
புன்னகை ......
நம்மிடம் .....
தானே உள்ளது......

சிரித்துக் கொண்டே .....
துன்பத்தை.....
 துடைத்து ....
தூக்கி எறிவேன்.

#திமுக #DMK

#ksrpost
#கேஎஸ்ஆர்போஸ்ட்
22-10-2024.

No comments:

Post a Comment

Life is like a party, many people will come, some leave early, some stay all night, some laugh with you, some laugh at you and some show up late.

  Life is like a party, many people will come, some leave early, some stay all night, some laugh with you, some laugh at you and some show u...