Wednesday, October 9, 2024

#காலசக்கரங்கள் வேகமாக ஓடுகின்றன. குடும்ப உறவகள் பிரிந்து வாழ்வு ஆதாரம் எட்டு திக்குக்கு தொலைவுக்கு செல்கிறது. வருடம் ஓரு முறை இரண்டு நாட்கள் சந்தித்து பேசி கூடி கலைகின்றனர். உறவு முறைகள் மட்டுமே வெறுமனை வாழ்த வீட்டில், கிராமத்தில் நடந்து திரிந்த தெருக்களில் நிற்கிறது. நினைவுகள் …அவ்வளதான்……

#காலசக்கரங்கள் வேகமாக ஓடுகின்றன. குடும்ப உறவகள் பிரிந்து வாழ்வு ஆதாரம் தேடி   எட்டு திக்குக்கு தொலைவுக்கு செல்கிறது.  வருடம் ஓரு முறை இரண்டு நாட்கள் சந்தித்து பேசி கூடி கலைகின்றனர். உறவு முறைகள் மட்டுமே வெறுமனை வாழ்ந்த வீட்டில், கிராமத்தில் நடந்து திரிந்த தெருக்களில் நிற்கிறது. நினைவுகள் …அவ்வளதான்……




வாழ்க்கை, கிராமம், பிறந்த வீடு எத்தனை அழகானது என்பதைக் நம் பூர்விக குடும்பம் தான் நமக்குக் காட்டுகிறது. எத்தனை இன்பமானது என்பதைத் நமக்கு உணர்த்துகிறது.
முதலில் வாழ்வை ரசிக்கின்ற பண்பு வேண்டும் ஏனெனில் ரசனை தான் நம் வாழ்விற்குச் சுவையூட்டுகிறது.

  “கொஞ்சம் பறந்து
கொஞ்சம் அமர்ந்து
கொஞ்சமே கொஞ்சமான 
இந்த வாழ்வில்
பறவைக்குப்  போல
அவரவர் வெளியில்
அவரவர் வழி.”-Kanaga Balan கனகாபாலன்

கடந்த காலத்தின் சான்றுகள் யாவும் நமக்குள் ஒரு அங்கமாக, நம்முடன் வாழ்ந்து கொண்டே இருக்கும்!
அவைகள் கடிகார முள்ளைப் போல் ஒவ்வொரு நொடிகளிலும் டிக்டிக் என நம்மை அரட்டிக் கொண்டே இருக்கும்!

உண்மையான இன்ப உணர்வுகளும், வேதனை மிக்க வலிகளும், ஒருபோதும் எமைவிட்டு விலகிச் செல்வதில்லை!
அவைகள் காலாவதி அற்றவைதான்

அவைகள், கலடிச் சுவடுகளைப் போல் நமது ஆத்மாவில் வாழ்ந்து கொண்டிருப்பவை!

 கூரை வீடு மாடி வீடு இரண்டிற்கும் நடுவே நிறைய ஓட்டு வீடுகள் அன்று வெயில் சுட்டிருக்கும் மாடி வீட்டிற்கு முந்தைய படியும்
கூரை வீட்டிற்கு அடுத்த படியும் ஓட்டு வீடுகள்தான்...
காலையில் பனி படர
ஓடுகளிலிருந்து வரும்
குழம்பு வாசமும்
வெள்ளைப் புகையும்
தாழ்வாரத்தில் ஒழுகும்
மழை தேங்கிய நீரும்
அதிகாலையின் வானொலிச்
செய்தியும்
உடல் சுடாது கண் கூசும்மஞ்சள் வெயிலும்



இன்று நினைத்தால்கூட
தேநீர்க் கடையின் தகரப் பந்தலின்
மேல் நின்று கத்திய
காகத்தின் நினைவோடு
கலையாமலே இருக்கிறது...
முருங்கை மரம் பூ உதிர்த்தும்
வேப்பங்கொட்டை காய்ந்தும்
ஓட்டு வீட்டிற்குள் வாழ்ந்த
அந்த வாழ்க்கை வேறு
மின்விசிறியின் சப்தம்
இசையானது
இந்த ஓட்டு வீடுகளில்தான்
விண்முட்டும் கனவுகளுக்குக்
கைகோர்க்க
வானத்து நிலா வீட்டிற்குள்
வந்ததுமிந்த
ஓட்டு வீட்டின் ஓட்டைவழிதான்
செம்பருத்தி பூத்ததும்
சில ஓட்டு வீடுகளின் மேல்
பூசணிக்கொடி படர்ந்ததும்
மைனா முட்டையிட்டதும்
ரயில்பூச்சிகள் கூட வாழ்ந்ததுமென
சொல்ல நிறைய அனுபவங்கள்
அன்று
ஒற்றை வீட்டிற்குள் இருந்தது
இன்று ஓட்டு வீடுகள்
சிட்டுக்குருவியின்
சத்தத்தோடு சேர்ந்து
குறைந்துகொண்டே வந்தாலும்
ஒற்றை வரியில்
அதன் நினைவுகளையெல்லாம்
நிரப்பி விடலாம்...
'அது வேறு காலம்!’...

50 வருடங்களுக்கு முன்
90 களில் வாழ்ந்த இனிய வாழ்க்கை,
வாழ்க்கை பயணத்தில்...
எதையோ தேடி பயணிக்கும் நமக்கு கிடைத்தவற்றைவிட
தொலைந்த வகைகள் ஏராளம்....

காலத்தின் மாற்றத்தால் நாம் மறந்தவைகளில் சில...

நாம் எங்கே செல்கிறோம் ??
பனையோலை விசிறி எங்கே?
பல்லாங்குழி எங்கே?
கிச்சுகிச்சு தாம்பாளம் எங்கே?
கோகோ விளையாட்டு எங்கே?
சாக்கு பந்தயம் எங்கே?
கில்லி எங்கே?
கும்மி எங்கே?
கோலாட்டம் எங்கே?
திருடன் போலீஸ் எங்கே?
ஆலமர விழுது ஊஞ்சல் எங்கே?
மரப்பாச்சி கல்யாணம் எங்கே?
மட்டை ரெயில் எங்கே?
கமர்கட் மிட்டாய் எங்கே?
குச்சி மிட்டாய் எங்கே?
குருவி ரொட்டி எங்கே?
இஞ்சி மரப்பா எங்கே?
கோலி குண்டு எங்கே?
கோலி சோடா எங்கே?
பல் துலக்க ஆலங்குச்சி எங்கே?
எலந்தை பழம் எங்கே?
சீம்பால் எங்கே?
பனம் பழம் எங்கே?
பழைய சோறு எங்கே?
நுங்கு வண்டி எங்கே?
பூவரசன் பீப்பி எங்கே?
கைகளில் சுற்றிய பம்பரங்கள் எங்கே?
நடை பழக்கிய நடை வண்டி எங்கே ?
அரைஞான் கயிறு எங்கே?
அன்பு எங்கே?
பண்பு எங்கே?
பாசம் எங்கே?
நேசம் எங்கே?
மரியாதை எங்கே?
மருதாணி எங்கே?
சாஸ்திரம் எங்கே?
சம்பரதாயம் எங்கே?
விரதங்கள் எங்கே ?
மாட்டு வண்டி எங்கே?
மண் உழுத எருதுகள் எங்கே?
செக்கிழுத்த காளைகள் எங்கே?
எருமை மாடுகள் எங்கே?
பொதி சுமந்த கழுதைகள் எங்கே?
பொன் வண்டு எங்கே?
சிட்டுக்குருவி எங்கே?
குயில் பாடும் பாட்டு எங்கே?
குரங்கு பெடல் எங்கே?
அரிக்கேன் விளக்கு எங்கே?
விவசாயம் எங்கே?
விளை நிலம் எங்கே?
ஏர் கலப்பை எங்கே?
மண் வெட்டி எங்கே?
மண் புழு எங்கே?
வெட்டு மண் சுமந்த பின்னல் கூடை எங்கே ?
பனை ஓலை குடிசைகள் எங்கே?
தூக்கனாங் குருவி கூடுகள் எங்கே?
குளங்களில் குளித்த கோவணங்கள் எங்கே?
அந்த குளங்களும் எங்கே?
தேகம் வளர்த்த சிறுதானியம் எங்கே?
அம்மிக்கல் எங்கே?
ஆட்டுக்கல் எங்கே?
மோர் மத்து ?
கால் கிலோ கடுக்கன் சுமந்த காதுகள் எங்கே?
நல்லது கெட்டது சுட்டிக்காட்டும் பெரியவர்கள் எங்கே?
தோளிலும் இடுப்பிலும் சுமந்த பருத்தி துண்டு எங்கே?
பிள்ளைகளை சுமந்த அம்மாக்களும் எங்கே?
தாய்பாலைத் தரமாய் கொடுத்த தாய்மை எங்கே?
மங்கலங்கள் தந்த மஞ்சள் பை எங்கே?
மாராப்பு சேலை அணிந்த பாட்டிகள் எங்கே?
இடுப்பை சுற்றி கட்டிய பணப் பை எங்கே?
இடுப்பில் சொருகிய சுருக்கு பை எங்கே?
தாவணி அணிந்த இளசுகள் எங்கே?
சுத்தமான கிணற்று நீரும் எங்கே?
மாசு இல்லாத காற்று எங்கே ?
நஞ்சில்லாத காய்கறி எங்கே?
பாரம்பரிய நெல் ரகங்களும் எங்கே?
எல்லாவற்றையும் விட நம் முன்னோர்கள் வாழ்ந்த முழு ஆயுள் நமக்கு எங்கே?
சிந்திக்க நமக்கு நேரம் தான் எங்கே?
எங்கே?
எங்கே??
எங்கே???
இத்தனையும் தொலைத்து விட்டு நாம் செல்கின்றோம்...

1. செருப்பு அறுந்தால் தைத்து போட்டுக் கொண்டோம்... கிழிந்த துணிகளை தைத்து போட்ட காலம்....

2.மனித மனங்களில் பாகு
பாடில்லாமல்அன்னி
யோன்யம் சிறகடித்து பறந்த நாட்கள்...

3. காதலித்து திருமணம் செய்தாலும்
கணவனை “வாங்க, போங்க” என்று தான் மனைவி அழைப்பாள்.
இன்று போல் வாடா போடா என்று அழைக்கலாம் காலம்....

4.ஏன் வாக்காளர் சரிபார்க்க வரும் ஆசிரியர்களிடம்.. தங்கள் வீட்டுகாரர் பெயரை உச்சரிக்காமல்...
.யஎன்று சொல்ல வந்த ஆசிரியர் விழிபிதுங்க.. பக்கத்து வீட்டு மாமி வந்து...பெயரைச்சொல்லும் மரியாதை நிறைந்த காலம்...

4.திருமண வைபவங்
களுக்கு பத்திரிகை வைத்து அனைவரையும் நேரடியாக அழைத்தகாலம்...

5.நெருங்கிய சொந்த மென்றால் கூட்டம் குடும்பமாக கும்மியடித்து இருக்கிற உணவை பங்கு வைத்த காலம்... எவ்வளவு கும்மி அடித்தாலும் வாப்பா வந்தால் வீட்டில் ஏற்படும் அமைதி...

6.திருமணம் அதிகமாக வீடுகளிலே நடந்தது....ஒருவார காலம் அந்த வீட்டின் வழியாக செல்லும் போது மட்டன் குறியின் வாசனை மூக்கை துளைக்கும்....
அந்த மணத்தை நுகர்ந்து வந்து நம் வீட்டில் ரசமும் சோறும் சாப்பிடுவது😆...

7 மணவறையில் மணமகன் கொண்டு வரும் சூட்கேசில் பூவெண்ணை ..
Ponds Snow Cream
Cuticura Power..
Binaca Tooth Paste..
Charlie Spray பிரில் கிரிம்
இல்லாமல் இருக்காது...

8.மணமகன் அம்பாசிடர் வந்தால் அதிசயம்.. அந்த கார் மணமகனை விட அதிகமாக அலங்கரிக்
கப்பட்டு இருக்கும்...
மணமகன் வீட்டில் வந்தவர்களை
மணமகள் வீட்டிற்கு அழைத்து செல்ல அம்பாசிடர் கார் அணிவகுக்கும்...
அந்த காரில் எத்தனை பேர் அடைப்பார்கள்..
டிரைவருக்கு உட்கார இடம் இல்லாத அளவுக்கு....

9.அந்த கால கல்யாணங்கள் வீட்டிலேயே நடந்தது...

10.அந்தகாலங்களில் பிரியாணி வைக்க ஃபேமஸ் மாஸ்டர்கள் இருந்தார்கள்...
கட்டாயம் அஜினமோட்டோ கிடையாது...பிரியாணி சுவை அப்படி இருந்தது.நிறைந்த மனதுடன் விளம்பினார்கள்..

11.முதல் நாள் கூட்டு பொறியல் ரசம்
சாம்பாரை..பழைய  மீன் கறி சுண்ட செய்து பழங்கஞ்சியுடன் பருகினோம்.

12. ரயில் பயணத்திற்கு புளிசாதமும்
எலுமிச்சை சாதமும் தயிர் சாதமும் கட்டி சென்றோம்..

13.பெரும்பாலும் பேருந்தில் தான்
பயணம் செய்தோம்..

14. பள்ளி மாணவர்கள் குழந்தைகளாக இருந்தனர்.

15 இளையராஜா தான் எங்கும் ஒலித்தார்.இடை இடையே முகம்மது ராஃபி குரலும் ஒலித்தது 

16. பாடல்களின் வரிகள் புரிந்தன.

17. காதலிப்பவர்களுக்கும் உறவுகளுக்கும் 
.கடிதங்கள் எழுதினோம்.

18.இன்லெண்ட்..
போஸ்ட் கார்டு தகவல் பரப்பும் குறுஞ்செய்தி தாங்கிகளாக செயல்பட்டது..

19.காதலியிடம் பேசுவது அரிது..
பேசினாலும் உடல் கிடுகிடு என்று ஆடியது..

20.ரஜினி கமல் படங்கள்  போட்ட'
பொங்கல்' 'தீபாவளி' க்ரீடிங்க்ஸ் கிடைத்தது.

21. உண்டு களித்து தீபாவளிக்கு சினிமா பார்த்தோம்.

திருநாள் வந்தால் சினிமா பார்க்க அணி வகுத்தோம்..

22. காணும் பொங்கலுக்கு உறவுகளை பார்த்தோம்.
உறவுகளை பலப்
படுத்தினோம்..

23.. திருடனை பிடிக்க ஊரே கூடி ஓடியது...

24. பாம்பு அடிக்க பக்கத்து வீட்டுகாரர் வந்தார்.

25. பக்கத்து வீட்டு பெரியவர்களுக்கு
பயந்தோம்.

26..மானேஜராக பணி புரிந்தாலும் தந்தை சைக்கிளில் தான் பவனி வந்தார்.

27. வெள்ளி அன்று ஒலியும் ஒளியும் பார்க்க ஆவலோடு காத்து கிடந்தோம்.

28.. பழைய புத்தகங்களை பாதி விலைக்கு வாங்கி பாடம் படித்தோம்.

29. பனம் பழம் சுட்டு தின்ன பனை மரத்தின் அடியில் காத்து கிடந்தோம்..

30. கயித்து கட்டிலை பெரியவர்களுக்கு கொடுத்து விட்டு பாயில் படுத்து உறங்கினோம்.

31. எல்லாவற்றையும் விட காலை
பொழுதுகள் ரம்மியமாக இருந்தது,

32.எல்லா வீடுகளிலும் 
பால்காரன் பால் கொண்டு வருவதால் 
பெண்கள் காலையில் எழுந்தார்கள்..

‘மாம்பிளி மாம்பிளி மதுரைக்குப்போறோம’என்று சொக்கப்பனை எரித்து கொண்டாடிய கார்த்திகை எங்கே, ஓலை வேட்டுகள் எங்கே,சீனிக்கிழங்கு,சேவு,குக்குழு,அவற்றை வாங்கித்திங்க, பருத்தி எங்கே,பல்லால்கடித்து ருசிக்க கம்மங்கதிர் எங்காவது இருக்கா,நீச்சித்தண்ணி,கூழ்வகைகள்,இவற்றை எல்லாம்சாப்பிட கும்பாவு எங்கே பள்ளிக்கூட தூக்குவாளி எங்கே,பக்கத்து ஊரு பள்ளிக்கூடம் போக அந்தஓட்டலாட்டு சைக்கிள் எங்கே,வாத்தியாரைப்பார்த்ததும் சைக்கிளை விட்டு இரங்கும் மாணவன்எங்கே எவ்வளவு குறைவான மார்க்குகள் எடுத்தாலும் உயிரை மாய்த்துக்கொள்ள நினைக்காது முன்னேறிச்செல்லும் மாணவன் எங்கே ,உழவு என்ற சொல்லுக்கு பதம் காண ஊர் எங்கே,எங்கள் ஊர் எங்கே, உறவுக்கு அர்த்தம் தேட ஊர் சென்றேன் அந்த ஊரைக்காணோம்.ஊரைச்சுற்றி வந்தேன் யாருக்கும் என்னைத்தெரியவில்லை. காரில் திரும்பும்போது ஊர் பெயர் எழுதப்பட்ட போர்டைப்பார்த்தேன். எங்கள் ஊர்தான் என்று உறுதிப்படுத்திக்கொண்டேன்.

இப்படி பல பல நல்ல விஷயங்களை 
முன்னேற்றம் என்ற பெயரில் நல்லவற்றை தொலைத்தோம்.

"நாகரீகப் போா்வை" போா்த்தி நாசமாய் போனோம்.
அன்றைய வாழ்க்கையில் பிரச்சனைகளும் இருந்தன!
இன்று பிரச்சனைகளே வாழ்க்கையாகிப் போனது
இன்று என்ன தான் உலகம் நவீனமயம் ஆனாலும் தொலைந்த வசந்தகாலத்தை இன்று யாராலும் மீட்க முடியாது.

காலம் மாறினால் நாமும் மாறித்தானே ஆக வேண்டும்.
என்று வேறு வழி இல்லாமல் பிடிக்காமல் வாழ்கிறோம்...

மண்ணின் மணம் மாறா

#nellai #nellai360 #madurai #chennai  #trichy #thanjai #kanyakumari#tirunelvelidistrict #tirunelveli #palayamkottai  #tenkasi #thoothukudi #oldhouse #salem #trichy #chennai #tamil #tamilnadutourism #thanjavur#90s #80s #70s #90sthrowback #village #villagelife #villagefood #villagecooking #villagelifestyle #villagephotography #கிராமம் #கிராமத்து #கிராமத்துவாழ்க்கை #அந்தக்காலம் #middleclass #middleclasslife

#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
9-10-2024.
படம்#தாமிரபரணி கரையில் கிராமம்

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...