Thursday, October 10, 2024

#சீதாராம்எச்சூரி

 #சீதாராம்எச்சூரி 




அகில இந்திய சிபிஎம் பொதுச் செயலாளர் சீதாராம் எச்சூரி  நோய்வாய் பட்டுக் கவலைக்கிடமாக  புது டில்லி எய்ம்ஸ் இல் இருக்கிறார் என்கிற செய்தியை கேள்விப்பட்டேன்! Sitaram Yechury on respiratory support, condition critical: CPM மிக கவலையாக இருக்கிறது!. அது ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்ட அனைவரின் கவலையும் கூட!! 


1970களில் டெல்லி JNU வில் நான் சில காலம் படித்த போது எச்சூரி அங்கு ஸ்டீபன் காலேஜில் படித்தார். அப்போதும்  JNU இடதுசாரி இயக்கங்களின் பிரபலமான இடம்! அதற்குச் சமமான காலத்தில் பிஜேபியைச் சார்ந்த  அருண் ஜெட்லி டெல்லி பல்கலைக்கழகத்தில் படித்தார். இதெல்லாம் கடந்த காலத்தின் நினைவுகள்.


தமிழ்நாட்டில்  1996 தேர்தல் காலத்தில் மதிமுக சிபிஎம்  கூட்டணியில் இணைந்து இருந்த போது பிரகாஷ் காரத் மற்றும் அன்றைய சிபி எம் பொலிட் பீரோ மெம்பராய் இருந்த கரூரைச் சேர்ந்த பி  ராமச்சந்திரன் PRC போன்றோர்கள் என்னுடன் தொடர்பில் இருந்தார்கள். தில்லி ஏ கே ஜி பவனில் அடிக்கடி இவர்களைச் சந்தித்து இருக்கிறேன்!


பி  ராமச்சந்திரன் மிகச்சிறந்த ஒரு மார்க்சியச் சிந்தனையாளர். அவருடன் ஒரு நல்ல தொடர்பு எனக்கு இருந்தது. 


பிறகு எனக்கு ஏற்பட்ட அரசியல் தொய்வுகளில் இவர்களின் தொடர்புகள் யாவும் சற்று காலம் விட்டு போயிருந்தது. இன்று எச்சூரி நோய்வாய்ப்பட்டிருக்கும் போது அக்காலத்தில் இவர்களோடு எனக்கு இருந்த அரசியல்க் காரணி

களை மீண்டும் எண்ணிப் பார்க்கிறேன்.


எச்சூரி அவர்கள் தமிழ் இந்தியா டுடே ஆசிரியராக இருந்த சகோதரி வாஸந்தி அவர்களின் உறவினர். ஆந்திராவைச் சேர்ந்தவர்.


இந்திரா காந்தியின் 1976 ன் அவசரகாலச் சட்டத்தின் எச்சூரி போது  மாணவராக இருந்த நேராக அதைத் தீவிரமாக எதிர்த்துக் கேள்விகள் கேட்டவர். சித்தாந்தப் பிடிப்போடு இந்திய மக்கள் ஜனநாயகத்தில் பல்வேறு உரிமைகளுக்காக உறுதியாக நின்றவர்.


 இந்தியாவின் நீண்டகால அரசியல் சாட்சியாக இருந்து வரும் அவர் இந்த நோயிலிருந்து மீண்டு நலம் பெற்று வர வேண்டும் என்று வேண்டுகிறேன்!!


#SitaramYechury 

#emergency

#CPM

#சீதாராம்எச்சூரி 

#சிபிஎம்


#ksrpost

#கேஎஸ்ஆர்போஸ்ட்

11-9-2024

No comments:

Post a Comment

Water Crisis..

Water Crisis Threatening World Food Production – Report channelstv.com/2024/10/17/wat… நீரின்றி அமையாது உலகு..    எல்லா காலத்துலயுமே தண்ணீர்...