#ஆந்திர துணைமுதல்வர்
பவன்கல்யாண் அவர்களை சந்திப்பு
#Meeting with AP DyCM Shri Pawan Kalyan Garu
—————————————————————-
நேற்று பிற்பகலில் விஜயவாடா, மங்களகிரி ஜன சேனா கட்சி அலுவலகத்தில் ஆந்திரத் துணை முதல்வர் பவன் கல்யாண் அவர்களைச் சந்தித்து பேசினோம். தமிழ்நாடு மாநில பாரதிய ஜனதாக் கட்சித் தலைவர் நயினார் நாகேந்திரன் எம் எல் ஏ அவர்களும் வந்திருந்தார். மதுரை முருக பக்தர் மாநாட்டிற்கு வரவேற்கும் முகமாக பவன் கல்யாண் அவர்களிடம் நயினார் நாகேந்திரன் அழைப்பிதழை வழங்கிய போது நான் அவசியம் கலந்து கொள்கிறேன் என்றார். கடந்த முறைகளில் அவரைச் சந்தித்தபோது தமிழ்நாட்டின் நாட்டார் வழக்குகளின் முறையில் கருங்காலிக் குச்சிகளை வழங்கியதைப் பெற்றுக் கொண்டு பவன் கல்யாண் மகிழ்ச்சி அடைந்தார்.
இந்த முறை சந்தித்தபோது இரண்டு சிலம்பக் குச்சிகளை கொடுத்தேன்.சிலம்பு விளையாட்டு என்றால் எப்படி இருக்க வேண்டும் என்று அவர் எங்களிடம் அதை செய் முறையில் செய்து காட்டினார். எம்ஜிஆரின் முகராசி படத்தில் எம்ஜிஆரும் சான்டோ சின்னப்பா தேவரும் போடும் சண்டை பிரசித்தி பெற்றது. பிறகு பல படங்களில் ஓ ஏ கேத்தேவர், நம்பியார் போன்றவர்களுடனும் எம்ஜிஆர் சிலம்புச் சண்டை போட்டு இருக்கிறார். முகராசி படத்தில் ஜெயலலிதாவுடன் கூட எம்ஜிஆர் சிலம்பு சண்டை போட்டு இருக்கிறார்.என்று நான் சொல்லிய போது அவர் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டு தன் கைகளாலே குச்சியை வைத்து சுழற்றி சில அடிகளை பாவ்லா செய்து காட்டினார். அதற்குப் பிறகு நினைவுப் பரிசாக தமிழகத்தின் கலை பொருள் பொதிந்த சிறிய தெய்வச் சிலைகளை முருகன் சிலை உட்பட கொடுத்தோம்..
அத்துடன் ஈழத்தமிழர் குறித்து நான் ஜெனிவாவில் பேசிய உரையையும் ஐநா சபையில் ஈழத் தமிழர் பிரச்சனைகள் குறித்து நான் கொடுத்த மனு ஆவணங்களையும் அது கலைஞர் முன்னுரையுடன் ஆங்கிலத்தில் அச்சடிக்கப்பட்டதையும் நூல் ,அதற்கான படங்களுடன் இருந்ததைப். பார்வையிட்டார். இலங்கையில் நடந்த ஈழத் தமிழர் மரணங்களின் கோரக் காட்சிகளையும் பவன் கல்யாண் பார்த்து ஆழ்ந்த யோசனையோடு வேதனயும் பட்டார். ஈழத்தமிழர் பிரச்சனை குறித்து நீங்கள் முக்கியமாகக் குரல் கொடுக்க வேண்டும் என்றேன். அதற்குப் பதிலாக அவர் ஏற்கனவே இது விஷயங்களை நான் அறிந்தவன் என்கிற முறையில் உங்களுக்கும் தெரியும் நிச்சயமாக குரல் கொடுக்கத் தான் வேண்டுமென்றார்.
இந்த நிகழ்வில் உடன் தமிழ்நாடு பாரதிய ஜனதாக் கட்சியின் துணைத் தலைவர் சகோதரர் சக்கரவர்த்தி, சுதாகர் ரெட்டி- ஆந்திர முன்னாள் எம்எல்சி மற்றும் பலரும் கலந்து கொண்டனர். கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் மேல் தமிழக அரசியல் மட்டுமல்லாமல் பல்வேறு விஷயங்களையும் பேசினோம். நயினார் தமிழ்நாட்டு அரசியல் நிலைமைகள் பற்றிப் பேசினார். நானும் இன்றைய அரசியல் சூழல் மற்றும் வருகின்ற தேர்தல் நிலவரங்கள் எப்படி இருக்கும் என்பதைப் பற்றியும் பேசினேன். பவன் கல்யாணும் சில கருத்துக்களை பகிர்ந்து கொண்டார். பயனுள்ள சந்திப்பாகவும் கலந்துரையாடலாகவும் நேற்று ஜன சேனா அலுவலகத்தில் நடந்தது.
Yesterday( 12-6-2025 )afternoon, along with Tamil Nadu BJP State President Thiru Nainar Nagendran, State Vice President Thiru Chakravarthi, State in charge Sudhagar Reddy Ex MLC and other BJP Tamil Nadu office bearers, I met actor and Jana Sena Party President Shri Pawan Kalyan at his party office in Mangalagiri, Vijayawada.
We briefed him on the political scenario in Tamil Nadu and the preparations for the upcoming 2026 Assembly elections. The meeting was cordial and engaging, with a free-flowing discussion on national and state politics.
During the interaction, Thiru Nainar Nagendran extended an invitation to Shri Pawan Kalyan to attend the Murugan Cult Conference to be held in Madurai, which he graciously accepted.
As a token of goodwill, we presented him with a traditional Silambam stick. He appreciated the gesture and demonstrated a few swift moves, impressing everyone present. I also shared with him how Silambam was famously practiced by MGR—not just in real life but also on screen. He showcased his Silambam skills in films like Muharassi, performing memorable sequences with Candow Chinnappa Thevar, OAK Thevar, M.N.Nambiar, and alongside Selvi Jayalalithaa(Muharassi). For MGR, Silambam was not just a cinematic display but a part of his regular practice and personal discipline.
I explained the cultural significance of Silambam as a traditional martial art and a symbol of Tamil pride. Also given a copy of UNHRC petioned on Sri Lanka Tamils issues by me with Kalignar preface published on 2015 .The meeting was both memorable and meaningful.
#PawanKalyan
#janasena
#bjptamilnaduofficial
#பவன்கல்யாண்
#ஜனசோனா
#பாஜக
#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
13-6-2025
No comments:
Post a Comment