#*இன்றைய ஸ்டாலின் திமுக*
——————————————
ஸ்டாலின் தொகுதி வாரியாக திமுக நிர்வாகிகளைச் சந்திக்கிறார். அதுகுறித்து இன்றைய ஜூனியர் விகடனில் ஒரு விரிவான அலசல்க் கட்டுரை வந்துள்ளது.. அந்தக் கட்டுரையில் கலைஞருடன் இருந்த சிறந்த ஆலோசனைக் குழு team இன்று ஸ்டாலினிடம் இல்லை என்று குறிப்பிட்டு இருக்கிறார்கள். அது எதார்த்தமான உண்மைதான். எங்களைப் போன்றவர்கள் கலைஞரிடம் இருக்கும் போது ஒரு திட்டமோ அல்லது கழகத்தின் எதிர்கால நடப்புகளைப் பற்றி பேசும்போதோ கடுமையான விவாதங்கள் ஏற்படும். அது சரியாக வருமா வராதா என்பதை எல்லாம் நாங்கள் எடுத்துரைக்கும் போது கலைஞர் அதைக் கேட்டுக் கொள்வார். பலத்த ஆலோசனைக்குப் பிறகு தான் அது நடைமுறைக்கு வரும். நிலைமை அப்படி இருந்தது.
கலைஞர் இறந்தபிறகு அவருடன் நெருக்கமாக இருந்த எங்களைப் போன்றவர்களை ஸ்டாலின் வெளியேற்றி விட்டாரே என்ன செய்வது. எங்களைக் கண்டாலே அவருக்குப் பிடிப்பதில்லை. இருக்கட்டும். இன்றைக்கு இருக்கும் நிர்வாகிகள் ஸ்டாலினிடம் செல்லும் பொழுது அவரது மனம் நோகாத படி பேசிவிட்டு அல்லது அவருக்கு வாழ்த்துத் தெரிவித்து விட்டு அவரிடமே ஆசி வாங்கி விட்டுத் திரும்பவர்கள் போலத்தான் இருக்கிறார்கள். அவரை சந்திக்கப் போகும்போது முன்கூட்டியே எந்த விதத்திலும் முரண்பாடு இல்லாமல் அவரைப் பெருமைப்படப் பேசிவிட்டு திரும்பி விடுவது என்கிற நோக்கத்துடன் தான் செல்கிறார்கள். அவர் கஷ்டப்படக் கூடாது என்கிற மாதிரி நைச்சியமாக நடந்து கொள்கிறார்கள்.
நாங்கள் கலைஞருடன் எது குறித்து வாதாடினாலும் அதைப் பொருட்படுத்தி ஏற்றுக்கொள்வார் ஆனால் ஸ்டாலின் விவாதங்களையோ எடுத்துரைப்புகளையோ கேட்பதில்லை. தன்னைச் சுற்றியுள்ள சுருங்கிய வட்டத்துக்குள் மட்டும் தான் அல்லது குடும்பத்திற்குள் தான் அனைத்தையும் வைத்து பார்க்கிறார். ஒரு காலத்தில் திமுகவைத் திட்டியவர்கள் திமுகவுக்கு விரோதமாக நடந்து கொண்டவர்கள் அனைவரையுமே பதவி கொடுத்துப் பக்கத்தில் வைத்திருக்கிறார். தலைமை ஏதாவது செய்து அதனால் நாம் பதவி இழந்து விடக்கூடாது என்பதற்காக மிக ஜாக்கிரதையாகப் பலரும் பணிந்து போகிறார்கள்.
கலைஞரையோ அவரது அரசியல் நுணுக்கங்களையோ அறியாத புரியாத புதிய நபர்கள் ஸ்டாலினைச் சுற்றி team ஆக அமர்ந்திருக்கிறார்கள்.மனுஷ்ய புத்திரன் கூட ஸ்டாலின் தான் என் தலைவர் என்று இன்று அறிக்கை விடுகிறார்.
இதெல்லாம் காலத்தின் கோலம். ஆண்டிபட்டி இடைத்தேர்தலில் ஜெயலலிதா போட்டியிடும் போது அதற்கு எதிராகவும் வைகை சேகர் திமுகவின் வேட்பாளர் ஆதரவாகவும் மாவட்ட ஆட்சியருடன் கடுமையாக நான்வாதாடிய காட்சி தான் கீழே உள்ள புகைப்படத்தில் இருக்கிறது. ஆங்கில இந்துப் பத்திரிகையில் அன்று வந்தது. . இதெல்லாம் அன்றைக்கு கலைஞர் உட்பட திமுகவில் உள்ளவர்கள் அனைவரும் அறிந்ததே! இன்றைக்கு ஏதும் அறியாத புதியவர்களை வைத்துக்கொண்டு ஸ்டாலின் ஏதோ செய்து கொண்டிருக்கிறார்.தேர்தல் வருகிறது. பணம் தந்து வாக்கை பார்த்துக் கொள்ளலாம் என்பதை ஸ்டாலின் team இன் நம்பிக்கை.
#கலைஞர்திமுகteam
#ஸ்டாலின்திமுக
#DMK
#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
21-6-2025.
No comments:
Post a Comment