Saturday, January 21, 2017

தமிழகத்தில் கிடப்பில் போடப்பட்ட திட்டங்களும் மாற்றாந்தாய் போக்கில் இழந்த உரிமைகளும்

தமிழகத்தில் பிரச்சனைகள் நூற்றுக்கு மேல் இருக்கும் . குறிப்பாக பலருக்கு இப்பிரச்சினைகளே  தெரியவில்லை . இந்த பிரச்சினைகளில் 50க்கு மேலாக பட்டியலிட்டு எனது செய்தி கட்டுரை இன்று ( 21/1/2017)ஒன் இந்தியா (Oneindia)இணையதள இதழில் இன்று வெளி வந்துள்ளது.
விவசாயிகள் பிரச்சினை , தமிழகத்தின் முக்கிய  நதிநீர் ஆதரர பிரச்சினைகள் , தமிழக உரிமைகள் , தமிழகத்தில் கிடப்பில் போடபட்ட திட்டங்கள் , மணல்கொள்ளைகள் என பட்டியல் இட்டுள்ளேன் .அதை படித்து விவாதியுங்கள்.ஜல்லிக்கட்டோடு இல்லாமல் இந்த பிரச்சினைகளுக்கும் குரல் கொடுத்து போராடுங்கள்...

 
 
தமிழகத்தில் கிடப்பில் போடப்பட்ட திட்டங்களும் மாற்றாந்தாய் போக்கில் இழந்த உரிமைகளும்
------------------------------------
-வழக்கறிஞர் கே.எஸ். இராதாகிருஷ்ணன்
 
குடும்பம் குட்டிகளோடு தெருக்களை எதிர்ப்பு கோஷங்களால் நிரப்பிக் கொண்டு போராட குவிந்திருக்கும் மக்களின் கோபமும் தன்னெழுச்சியும் வேறு ஆரம்பம்..... மக்கள் நிராகரிக்கின்றனர்!
ஜல்லிக்கட்டு ஒரு குறியீடே!
இளைஞர்களும் மாணவர்களும் சினிமா நடிகர்கள் ரஜினிக்கும் விஜய்க்கும் பாலாபிஷேகங்களும் கட் அவுட்டுகளும் மாலைகளும் போட்டு திரிந்தனர். மது, புகை பிடிப்பது, சினிமா மோகம், கிரிக்கெட் மோகம், பான்பராக் ஆகியவற்றில் இருந்து ஒதுங்கி நாட்டின் உரிமைக்காக மாணவர்கள் குரல் கொடுப்பது மகிழ்ச்சியளிக்கிறது.
 
இப்போது மாணவர்கள் மத்தியில் ஒரு நேர்வழியில் தங்களுடைய போர்க்குணத்தைக் காட்ட ஆரம்பித்தது நல்ல துவக்கமே. தமிழகத்தின் பண்பாடான ஜல்லிக்கட்டு பிரச்சனை மட்டும் இல்லாமல் வேறு தலையாய பிரச்சனைகளுக்கும் இந்த இளைஞர்கள் போராடினால் தமிழ் கூறும் நல்லுலகம் வளம் பெறும்.
 
தமிழகத்தின் உரிமைகள் தொடர்ந்து புறக்கணிப்பட்டு வருகின்றன. இதற்கான தீர்வு எட்டப்படாமலும் மத்திய-மாநில அரசுகளின் பாராமுகத்தால் நம்முடைய உரிமைகளும் நம்முடைய நலன்களும் நமக்கான திட்டங்களும் நெடுங்காலமாக கோப்புகளில் டெல்லி பாதுஷாக்களிடம், சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் தூசிபடிந்து தூங்குகின்றன.
 
என்னென்ன திட்டங்கள்? என்னென்ன உரிமைகள் என்பதை வரிசைப்படுத்தி இன்று போராடும் இளைஞர்களுக்கு சொல்ல விரும்புகிறேன்.
 
இதற்கான முழுமையான தரவுகளும் குறிப்புகளும் என்னுடைய வலைப்பூ தளத்தில் அறிந்து கொள்ளலாம்.
 
1) சேது சமுத்திர திட்டம்- 165 ஆண்டுகளுக்கும் மேலாக முடக்கப்பட்டுவிட்டது.
 
2) கடலூர்- நாகை- குளச்சல் துறைமுகத் திட்டங்கள் வெறும் கோரிக்கைகளாகவே உள்ளன.
 
3) சுமார் 10-க்கும் மேலான மீன்பிடி துறைமுகங்களான வானகிரி, திருக்கடையூர், மாமல்லபுரம், மூக்கையூர், திரிசோபுரம், சிலம்பிமங்கலம், காட்டுப்பள்ளி, பாம்பன் - ராமேஸ்வரம், புன்னக்காயல், மணப்பாடு, முட்டம், கன்னியாகுமரி போன்ற பல மீன்பிடி துறைமுகங்கள் கிடப்பில் உள்ளன.
 
4) அகல ரயில் பாதை திட்டங்கள் ஆமை வேகத்தில் 50 ஆண்டுகளுக்குப் பிறகுதான் ஆரம்பித்தன. இன்னும் செங்கோட்டை- புனலூர்-கொல்லம் மார்க்கம்; மதுரை- போடிநாயக்கனூர்; திண்டுக்கல்- பழனி வழியாக சபரிமலை செல்லும் மார்க்கமும் நிலுவையிலேயே உள்ளன.
 
5) விவசாயிகள் இதுவரை துப்பாக்கிச் சூட்டில் 60 பேரும் சமீபத்தில் 2012-ல் இருந்து தற்கொலையாலும் மாரடைப்பாலும் கிட்டத்தட்ட 300 பேர் வரை மரணமடைந்துள்ளனர். இது குறித்து மத்திய- மாநில அரசுகளுக்கு தடுக்கக் கூட மனம் கூட வரவில்லை. வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கும் நலத்திட்டங்கள் எதுவும் செய்வதில்லை. அனைத்து நெல் உற்பத்தி விவசாயிகள், கரும்பு உற்பத்தி விவசாயிகள், நவதானிய உற்பத்தி விவசாயிகள், பணப் பயிர் உற்பத்தி விவசாயிகள், பருத்தி விவசாயிகள், தென்னை விவசாயிகள், குமரி மாவட்ட ரப்பர் தோட்ட விவசாயிகள், தேயிலை தோட்ட விவசாயிகள் என அனைத்து விவசாயிகளுக்கும் உற்பத்தி பொருளுக்கு நியாயமான லாப விலையை அவர்களே நிர்ணயிக்கக் கூடிய உரிமைகள் வழங்கவும் வேண்டும்.
 
6) விளைநிலங்களை ஆக்கிரமித்து கையகப்படுத்தி கார்ப்பரேட்டுகள் வசம் வழங்குவதால் விவசாயம் பெரிதும் பாதிக்கிறது.
 
7) இயற்கை விவசாயத்துக்கு முழுமையாக அர்ப்பணித்து குரல் கொடுப்பது.
 
8) உதகை இந்துஸ்தான் போட்டோ பிலிம் தொழிற்சாலை மூடப்பட்டு நைனிடாலில் இந்த திட்டத்தை விரிவுபடுத்திவிட்டனர். இங்கு பணியாற்றிய ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் இன்று தெருவில் நிற்கின்றனர்.
 
9) சேலம் இரும்பாலையும் விரிவாக்கம் செய்யாமல் சர்வதேச அளவில் சேலம் இரும்பாலையின் இரும்புகளுக்கு மதிப்பு இருந்தும் உற்பத்தி கூடுதலாக்க மத்திய அரசுக்கு மனம் இல்லாமலே இருக்கிறது. இங்கு உருவாக்கப்படும் எவர்சில்வர், ஆஸ்திரேலியா சந்தையில் அதிக மதிப்புள்ளது.
 
10) கூடங்குளம் அணு உலை பிரச்சனை தீராத சிக்கலாக உள்ளது. மக்களை பாதிக்கும் அணுக் கழிவை எங்கே புதைக்கப் போகிறார்கள் என்று தெரியவில்லை.
 
11) நோக்கியோ தொழிற்சாலை முற்றிலும் மூடப்பட்டு அங்கும் தொழிலாளர்கள் தெருவில் நிற்கின்றனர்; ஆந்திரா எல்லையில் தடாவில் திறக்கப்பட்டுள்ளது.
 
12) தேனியில் நியூட்ரினோ திட்டம் மக்களின் விருப்பத்துக்கு மாற்றாக நிறைவேற்ற மத்திய அரசு முயலுகிறது.
 
13) 40 ஆண்டுகாலத்துக்கு முன்னர் திட்டமிட்டு மரக்காணத்தில் இருந்து சென்னை வழியாக ஆந்திரா, பெத்தகஞ்சம் ஒடிஷா எல்லை வரை 420 கி.மீ வரை உள்ள பக்கிங்ஹாம் கால்வாய் செயலுக்கு வராமலே இருக்கிறது.
 
14) தமிழகத்தில் நிறைவேற்ற வேண்டிய நீர்வழிப் போக்குவரத்து நான்கும் நிலுவையிலேயே உள்ளது.
 
15) நெஞ்சாலை சுங்க சாவடிகளில் கட்டண கொள்ளையை பொறுக்க முடியவில்லை.
 
16) தமிழக நீர்வள ஆதாரங்களான குமரி மாவட்டம் நெய்யாறு, நெல்லை மாவட்டம் அடவி நயினார், உள்ளாறு, செண்பகத் தோப்பு, ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே அழகர் அணை திட்டம், முல்லைப் பெரியாறு, கொங்கு மண்டலத்தில் ஆழியாறு- பரம்பிக்குளம், பாண்டியாறு- புன்னம்புழா; சிறுவானி, பம்பாறு, பவானி ஆகிய பல நீர் ஆதார பிரச்சனைகள் கேரளாவோடு பேசித் தீர்க்க முடியாமல் மத்திய அரசு வேடிக்கை பார்க்கிறது.
 
17) காவேரி- ஒகேனக்கல்- தென்பெண்ணை ஆகிய ஆறுகளின் சிக்கலை கர்நாடகாவுடனும் பாலாறு, பொன்னியாறு, பழவேற்காடு ஏரி ஆந்திராவுடன் பேசி தமிழகத்தின் உரிமைகளைப் பெற மத்திய அரசிடம் போராட வேண்டியுள்ளது.
 
18) தென்மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்கள் பயன்பெறும் கேரளா அச்சன்கோவில்- பம்பை; தமிழகத்தின் வைப்பாறுடன் இணைக்கும் திட்டம் 1975-ல் இருந்தே கொள்கை வடிவில் இருக்கிறது; உச்சநீதிமன்றத்தில் நான் தொடுத்த வழக்கில் இதற்கான ஒப்புதல் இருந்தும் இன்னும் நிலுவையிலேயே இருக்கிறது. மத்திய அரசும் பாராமுகமாக பார்த்துக் கொண்டிருக்கிறது. இத்திட்டத்தால் கன்னியாகுமரி, தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மாவட்டங்கள் குடிநீர் வசதி பெறும். என்னுடைய வழக்கு முடிந்தும் இதற்கான செயல்பாட்டு சாத்தியக் கூறுகள் கண்முன்னே தெரிய19) தாமிரபரணி- கருமேனியாறு- நம்பியாறு
மற்றும்
காவேரி- குண்டாறு- குடகனாறு இணைப்பு ;
பொன்னியாறு- பாலாறு
என 3 ஆற்று இணைப்பு திட்டங்களும் நிதி ஆதாரங்கள் இல்லாமல் நிலுவையில் உள்ளன.
 
20) நாட்டு விடுதலைக்கு முன் 50,000 ஏரி குளங்கள் இருந்ததாக கணக்கு. இன்றைக்கு அதில் பாதியாக குறைந்து 20,000 எண்ணிக்கையில்தான் உள்ளன. சென்னை, மதுரையைச் சுற்றி இருந்த 600 குளங்கள் காணாமல் போய்விட்டன. ரியல் எஸ்டேட் நடத்தும் கொடியவர்கள் கைவரிசையால் இயற்கையாக அமைந்த நீர் நிலைகள் காணாமல் போனது வேதனையைத் தருகிறது. இதை மீட்கவும் உரிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். தமிழகத்தில் உள்ள குளம், ஆறு, நீர்நிலைகளை தூர்வாரி, மதகுகளை சீர்படுத்தி பாதுகாக்க வேண்டும்.
 
21) நமக்கு உரிமையான கச்சத்தீவை இழந்தும் அது குறித்து மத்திய சர்க்கார், வாய்மூடி மெளனியாக இதுவரை இருக்கிறது.
 
22) மீனவர் பிரச்சனையில் இலங்கை ராணுவத்தின் அத்துமீறலை பலமுறை தமிழகம் வலியுறுத்தியும் மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்காமல் இந்த அவலத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. இதுவரை 1000 மீனவர்களுக்குமேல் பாதிக்கப்பட்டுள்ளனர்.
 
23) உச்சநீதிமன்றத்தின் கிளையை சென்னையில் அமைக்க வேண்டும்.
 
24) வடமாநில உயர்நீதிமன்றங்களில் இந்தியும் குஜராத்தியும் வழக்காடு மொழியாக இருப்பதைப் போல சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளையிலும் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க வேண்டும்.
 
25) அந்தமானில் வாழும் தமிழர்களின் வழக்குகள் யாவும் கொல்கத்தா உயர்நீதிமன்றத்திலேயே விசாரிக்கப்படுகின்றன. அதை சென்னை உயர்நீதிமன்றத்துக்கு மாற்ற வேண்டும்.
 
26) மேற்கு தொடர்ச்சிமலை, கிழக்கு தொடர்ச்சி மலைகளான அழகர்கோவில் மலை, சிறுமலை, யானை மலை போன்ற கொள்ளிமலை வரையிலான மலைகளின் சுற்றுச் சூழலையும், வனவளங்களையும், இயற்கை வளங்களையும், விலங்கினத்தையும் காக்க வேண்டும். கஸ்தூரி ரங்கன், காட்கில் அறிக்கையில் சொல்லப்பட்ட நியாயமான சில பரிந்துரைகளையும் ஏற்க வேண்டும்.
 
27) கருவேல மரங்களை அறவே ஒழிக்கப்பட வேண்டும்.
 
 
28) வேலூர் சிறையில் வாடும் ராஜீவ் கொலை தூக்கு தண்டனை கைதிகளை தூக்கு கயிற்றில் இருந்து விடுவிக்க வேண்டும்.
 
29) நீட் தேர்வு முறை கூடாது என்று போர்க்குரல் எழுப்ப வேண்டும்.
 
30) தேனி மாவட்டம் கண்ணகி கோட்டம் முழுமையாக தமிழகத்துக்குச் சொந்தமானது என்ற உறுதியை நிலைநாட்ட வேண்டும்.
 
31) தென்மாவட்டங்களில் கடற்கரையோ தாதுமணல் கொள்ளையைத் தடுக்க வேண்டும். குமரிமாவட்டம் மணவாளக்குறிச்சி தாது மணல் ஆலையை புதுப்பிக்க வேண்டும்.
 
32) மணல் கொள்ளையை அறவே தடுக்க வேண்டும். கேரளாவில் மேற்கு நோக்கி பாயும் 41 ஆறுகளில் மணலே அள்ள முடியாது. ஆனால் தமிழகத்தில் இருந்துதான் கேரளாவுக்கும் கர்நாடகாவுக்கும் ஆந்திராவுக்கும் மணல் செல்கிறது. எவ்வளவு ஒரு கேவலமான நிலை? அசைவ ஹோட்டல்களில் ஈரல், கால், தலை என விலைகளைப் போட்டிருப்பது போல கேரளாவில் காவேரி மணல், தாமிரபரணி மணல், வைப்பாறு மணல், தேனி மணல் என்று விலைபட்டியல் போட்டு விற்கிற கேவலமான அவல நிலை இருக்கிறது.
 
33) மலைகளையும் பூமியையும் பாளம் பாளமாக வெட்டி கிரானைட் கற்களை கொள்ளையடித்துவிட்டனர்.
 
34) தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க திட்டமிட்டும் தொடர்ந்து மத்திய அரசு வஞ்சித்து வருகிறது.
 
35) நெல்லை மாவட்டம் மகேந்திரகிரியில் இந்திய விண்வெளி மற்றும் திரவ எரிவாயு தொழில்நுட்ப மையத்தை அமைக்க மத்திய அரசு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
 
36) திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி பகுதிகளை திருவனந்தபுரம் ரயில்வே கோட்டத்துடன் இருப்பதை பிரித்து புதியதாக திருநெல்வேலி ரயில்வே கோட்டத்தை மத்திய அரசு அமைக்க வேண்டும்.
 
37) கோவை, திருப்பூர், திண்டுக்கல், மதுரை மாவட்டங்களில் கொடிகட்டிப் பறந்த நெசவாலைகள், பனியன் ஆலைகள் எல்லாம் மூடப்பட்டு வருகின்றன. அத்தொழிலை சீரமைக்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 
38) வளைகுடா நாடுகளில் தென் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் அதிகமாக பணியாற்றுகின்றனர். சொந்த ஊருக்கு விரைவாக வரவேண்டும் என்றால் மதுரை, தூத்துக்குடி விமான நிலையங்கள், பன்னாட்டு விமான நிலையங்களாக மாற்றவும் உரிய விமான சேவைகளை அதிகரிக்கவும் வேண்டும். சேலம், பாண்டிச்சேரி, தஞ்சாவூர் விமான நிலையங்களை இயங்கக் கூடிய வகையில் நிறுவப்பட வேண்டும்.
 
39) எய்ம்ஸ் மருத்துவமனையை தமிழகத்தில் தாமதம் இல்லாமல் அமைக்க வேண்டும். அதுமட்டும் இல்லாமல் ஐஐடி மத்திய பல்கலைக் கழகத்தை தென்மாவட்டத்தில் உள்ள திண்டுக்கல்லிலோ, திருநெல்வேலியிலோ அமைக்கப்பட வேண்டும்.
 
40) திருநெல்வேலி அருகே உள்ள ஆதிச்சநல்லூரில் அகழாய்வு செய்த சத்தியமூர்த்தி குழுவின் அறிக்கை 10 ஆண்டுகால மத்திய அரசின் பரிசீலனையிலேயே இருந்து கொண்டிருக்கிறது. அந்த அறிக்கையின் பரிந்துரைகளை உடனே வெளியிட வேண்டும். அந்த பரிந்துரைகளையும் நடைமுறைப்படுத்த வேண்டும்.
 
41) மதுரை அருகே உள்ள சிவகங்கை மாவட்டத்தில் கீழடியில் அகழாய்வாராய்ச்சி பணிகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளன. உடனடியாக அந்த பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
 
42) கேரளாவில் அட்டப்பாடி, கர்நாடகாவில் பெங்களூரு, மாண்டியா, கோலார், மும்பை ஆகிய இடங்களில் உள்ள தமிழர்களை பாதுகாக்கும் நிலையை அந்தந்த மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தப்பட வேண்டும்.
 
43) கொங்கு மண்டலத்தை பாதிக்கக் கூடிய கெயில் எரிவாயு குழாய் பதிக்கும் திட்டத்தை மத்திய அரசு அறவே கைவிட வேண்டும். இம்மாதிரியே ஆந்திரத்தில் இருந்து திருவள்ளூர், மதுராந்தகம், விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை வழியாக எரிவாய் குழாய் பதிக்கவும் திட்டங்கள் உள்ளன. கடலூரில் இருந்து மேற்கு திசையை நோக்கியும் இந்த எரிவாயு குழாய் பதிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
 
44) தஞ்சை டெல்டாவை வஞ்சிக்கும் மீத்தேன் திட்டத்தை முழுமையாக நிறுத்தப்பட்டது என்ற உறுதிமொழியை தமிழகத்துக்கு மத்திய அரசு வழங்க வேண்டும்.
 
45) இலங்கைக்கான இந்திய தூதராக ஒரு தமிழர் நியமிக்கப்பட வேண்டும்; இலங்கை தமிழர் பிரச்சனைக்கு சர்வதேச சுதந்திரமான விசாரணையை ஐநா மன்றத்தில் வலியுறுத்த வேண்டும். மத்திய அரசிலும் தமிழக அரசிலும் ஈழத் தமிழர் நல்வாழ்வு என்ற தனி அமைச்சகம் உருவாக்கப்பட வேண்டும். ஈழத் தமிழர் விரும்பும் அரசியல் தீர்வை முன்னெடுக்க வெகுஜன (Refrendum) வாக்கெடுப்பை இலங்கையில் நடத்த வேண்டும். வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள ராணுவத்தை சிங்கள அரசு திரும்பப் பெற வேண்டும். தமிழர்களிடம் பறிக்கப்பட்ட விவசாய காணி நிலங்களையும் வீடுகளையும் அவர்களிடமே ஒப்படைக்க வேண்டும். புதியதாக எழுதப்படும் இலங்கை அரசியல் சட்டத்தில் சமஷ்டி அமைப்பையும் மத்திய மாகாண கவுன்சில்களுக்கு நில நிர்வாகம், வருவாய், காவல்துறை, மீன்பிடி போன்ற அதிகாரங்கள் முழுமையாக தரப்பட வேண்டும். இன்று வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் தமிழ் முதல்வர்கள் அதிகாரமற்ற பொம்மை முதல்வர்களாக காட்சி தருகின்றனர்.
 
46) இந்தியாவின் வடகிழக்கும் வடமேற்கும் சீனா, பாகிஸ்தான் மூலமாக போர்களை சந்தித்தோம். தீபகற்ப இந்தியா அமைதி மண்டலமாக திகழ்ந்தது. இன்றைய தென்கிழக்கு ஆசிய புவி அரசியலில் இந்து மகாசமுத்திர பிரச்சனைகளால் தெற்கிலும் நமது அமைதி பாதிக்கப்படுமோ என்ற அச்சம் இருக்கிறது. அந்த வகையில் வங்கக் கடலிலும் இந்து மகாசமுத்திரத்திலும் அரபிக் கடலிலும் இந்தியாவின் ஆளுமையை உலக அளவில் தற்காத்துக் கொள்ள வேண்டும்.
 
47) தமிழகத்தில் உள்ள சித்தனவாசல், கழுகுமலை வெட்டுவான் கோவில், மாமல்லபுரம், திண்டுக்கல் மலைக்கோட்டை, யானைமலை சிற்பங்கள் போன்ற பாரம்பரிய சின்னங்களைப் பாதுகாக்க உரிய உதவிகளையும் திட்டங்களையும் உருவாக்க வேண்டும்.
 
48) தமிழகத்தில் விவசாயம், நெசவு, தீப்பெட்டி, அச்சுத் தொழில், பூட்டுத் தொழில் போன்றவை சிறு குடிசைத் தொழில்களாக விளங்கின. இவை அனைத்தும் காக்கப்பட வேண்டும்.
 
49) இந்தியாவின் வரலாற்றை மறு ஆய்வு செய்து தமிழகத்தில் இருந்து வரலாறு எழுதப்பட வேண்டும். பூலித்தேவர், வீரபாண்டிய கட்டபொம்மன், சுந்தரலிங்கம், தீரன் சின்னமலை, விருப்பாட்சி கோபால்நாயக்கர், வேலுநாச்சியார், மருது சகோதரர்கள் என்ற விடுதலைப் போர் அக்கால தளபதிகள் மட்டுமின்றி பண்டைய வரலாற்றில் முதல் சங்கம் மற்றும் கபாடபுர காலத்தில் இருந்து வரலாறுகள் ஆய்வு செய்து எழுதப்பட வேண்டும்.
 
50) தென்மாநிலங்களான தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா, ஒடிஷா இந்த மாநிலங்கள் ஒரு கூட்டமைப்பாக அமைந்து தங்களுக்கான பிரச்சனைகளை முறையாகப் பேசித் தீர்க்கும் வகையில் சட்டப்பூர்வமான அமைப்புகளை உருவாக்க வேண்டும்.

51) வங்கக் கடலில் போக்குவரத்து கப்பல்களை குமரியில் இருந்து நாகப்பட்டினம், சென்னை, விசாகப்பட்டினம், கொல்கத்தா, அந்தமான், இலங்கை என செல்லக் கூடிய வகையிலான கப்பல் போக்குவரத்தை நவீனப்படுத்தி பயணிகள் பயணத்துக்காக இயக்க வேண்டும்.
 
52) பொதிகை போன்ற மாநில தொலைக்காட்சிகள் வெகுஜன தொலைக்காட்சிகளாக பார்க்கக் கூடிய அம்சங்கள் இடம்பெறும் வகையில் நவீனப்படுத்த வேண்டும்.

53) மாநில சுயாட்சியை வலியுறுத்த வேண்டும். மத்திய அரசிடம் நிதி, ராணுவம், வெளிவிவகாரம், உள்துறை, தகவல் தொடர்பு, ரயில்வே, கப்பல் போக்குவரத்து போன்ற துறைகளை மட்டும் வைத்துக் கொண்டு மற்ற துறைகளை மாநில அரசுகளுக்கு வழங்க வேண்டும்.

நீதிபதி சர்க்காரியா குழு, நீதிபதி பூஞ்ச் குழு, நீதிபதி ராஜமன்னார் குழு, நேரு காலத்தில்அமைக்கப்பட்ட நிர்வாக குழு அளித்த பரிந்துரைகளின்படி மாநிலங்களுக்கு வழங்கக் கூடியஅ திகாரங்களை முறைப்படி வழங்கி சமஷ்டி அமைப்பை உறுதி செய்ய வேண்டும்.
 
54) தற்போது மோடி அரசு நதிநீர் தீர்ப்பாயத்தை அமைக்க திட்டமிட்டுள்ளது. அது மேலும் பிரச்சனைகளை உருவாக்கும். அப்படி ஒரு அமைப்பு தேவையும் இல்லை.
 
55) நதிநீர் தீர்ப்புகளை கண்டிப்பான முறையில் உடனுக்குடன் செயல்படுத்த வேண்டும்.
 
56) நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவன விவகாரத்தில் உறுதியான ஒரு முடிவை தீர்வாக மத்திய அரசு எடுக்க வேண்டும்; நெய்வேலியில் உற்பத்தியாகும் மின்சாரத்தின் பங்கை தமிழகத்துக்கு அதிகரித்து வழங்க வேண்டும்; ராயல்டி தொகையையும் அதிகரித்து தமிழகத்துக்கு வழங்க வேண்டும்.
57) கொடைக்கானலில் பெரும் சுற்றுச் சூழலை ஏற்படுத்தியுள்ள பாதரச ஆலையை அறவே மூட வேண்டும்

58) திருவண்ணாமலை கவுந்தி மலை- வேடியப்பன் மலைகளில் இரும்புத்தாது வெட்டி எடுக்கவும் பன்னாட்டு நிறுவனங்கள் முயற்சிக்கின்றன. இதை தடுத்து நிறுத்த வேண்டும்.
 
தமிழகத்துக்குத் தேவையான திட்டங்களும் உரிமைகளும் கிடைக்காமல் சுற்றுச் சூழலை பாதித்து மராட்டிய ரத்தனகிரியில் இருந்து விரட்டப்பட்ட ஸ்டெர்லைட் தூத்துக்குடியில் அமைக்கப்பட்டது. கூடங்குளம் அணு ஆலை கூடாது என போராடியும் மேலும் அணு உலைகளை அமைக்கவும் மத்திய அரசு முயற்சிக்கிறது.
 
கேரளா பிளிச்சிமீடாவில் இருந்து துரத்தப்பட்ட கோக் ஆலை, திருநெல்வேலி கங்கைகொண்டானில் நிலை கொண்டுவிட்டது. கல்பாக்கம் அணுமின் நிலையத்தால் புற்றுநோயால் மக்கள் மாண்டுபோகின்றனர். தமிழகம் என்ன ஆலைகளின் குப்பைகளைக் கொட்டும் குப்பை மேடா?  

வரலாற்றில் இடம்பெற்ற தானிய களஞ்சியம் தஞ்சையின் பெருமையை மாசுபட வைக்கிற வகையில் மத்திய அரசு தமிழக மக்களுக்கு தீங்கு நேரும் தொழிற்சாலைகளை அமைத்துக் கொண்டு வருகிறது.
 
தமிழகத்தின் பிரச்சனைகளாக இப்படி ஒரு நீண்ட பட்டியலே உள்ளது. இதற்காகவும் தமிழ் மக்கள் குரல் கொடுக்க வேண்டும்.
---------------
#தமிழகதிட்டங்களும் #தமிழகஉரிமைகளும்

#தமிழகத்தில்கிடப்பில்போட்டதிட்டங்கள்
#தமிழகத்தின்பிரச்சனைகள்
#KSRposting
#KSRadhakirushnanpost
கே.எஸ் . இராதாகிருஷ்ணன்
21/01/2017


குருசேத்திரமான மெரினா கடற்கரை-ஜல்லிக்கட்டு

Yes darling 
நேற்று  20/01/ 2017 இரவு  10 மணிக்கு பிறகு சென்னை நகரின் குருசேத்திரமான மெரினா கடற்கரைக்கு பார்வையாளராக தோழர்களின் அழைப்பை ஏற்று  சென்றேன் .முத்துக்குமார் மறைவு ,2009 முள்ளிவாய்க்கால் கொடுரம் , கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போன்ற பிரச்சினைகளில் என்னோடு அப்போது களப்பணி ஆற்றிய மாணவர்கள் இன்றைய இளைஞர்கள் கடந்த 2 நாட்க்களாக சும்மா வந்து இங்குள்ள போராட்ட களத்தையும் நிலைமையையும்  பார்க்க வாங்க  . அரசியல்வாதிகளுக்கு இங்கு இடமில்லை 
நீங்கள் எந்த பதவியும் வகிக்காதவர் . உங்களுக்கு உதவியாக இருந்தவர்கள் எல்லாம் எம்பி ஆகிவிட்டனர் என்றனர் . உங்களை போன்ற ஆட்கள்  இங்கு என்ன நடக்கிறது என்று போராட்டத்தை  பார்க்க வர வேண்டும் என்றனர் . நானும் இன்று பின்னிறவு ஒரு பார்வையாளனாக அங்கு சென்றேன் . இனியனும் , ராஜேஸ் மற்றும் சில தோழர்கள் அழைத்து சென்றனர்.போராடும் குழுக்கள் எப்படி போராடுகிறார்கள் என்று பார்க்க வாய்ப்பு கிடைத்தது .
ஜல்லிக்கட்டு ஒரு குறியீடே. குடும்பம் குட்டிகளோடு தெருக்களை எதிர்ப்பு கோஷங்களால் நிரப்பிக்கொண்டு போராட குவிந்திருக்கும் மக்களின் கோபமும் தன்னெழுச்சியும் வேறு ஆரம்பங்களைக் கொண்டதாகத்தான் எனக்குப் படுகிறது.இளைஞர்களின் கட்டுப்பாடு ;போக்குவரத்து வாகனங்களை சரிசெய்து போக்குவரத்திற்கு வழி செய்தனர் . பெண்கள் இரவு நேரத்தில் பாதுகாப்பாக இருந்தது மகிழ்ச்சியை தந்தது .

குறுகிய இரண்டு நாட்களுக்குள் திட்டமிட்ட நிர்வாகம் பாராட்டகூறிய வகையில் நடத்துகின்றனர் . உண்மையான போர் குணம் இந்த இளைஞர்களிடம் இருக்கின்றது  .போராட்டத்தில் இருந்த  இளைஞர்களிடம் பேசக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. 'அரசியல் இல்லாத அரசியல்''அரசிய்வாதி இல்லாத அரசியல்வாதி'என்ற நிலைப்பாடு எப்படி என்று அவர்களிடம் நானும் விவாதித்தேன் . ஜல்லிக்கட்டு என்ற குறியீடை தாண்டி தமிழ்நாட்டில் நலனில் அக்கறை கொள்கிறோம் என்றார்கள் . நான் அவரிடம் தமிழகத்தில் பிரச்சனைகள் நூற்றுக்கு மேல் இருக்கும் . குறிப்பாக பலருக்கு இப்பிரச்சினைகளே  தெரியவில்லை . இந்த பிரச்சினைகளில் 50க்கு மேலாக பட்டியலிட்டு எனது செய்தி கட்டுரை நாளை( 21/1/2017)ஒன் இந்தியா என்ற இணையதள இதழில் வருகிறது;
விவசாயிகள் பிரச்சினை , தமிழகத்தில் உள்ள முக்கிய  நதிநீர் ஆதரர பிரச்சினைகள் , தமிழக உரிமைகள் , தமிழகத்தில் கிடப்பில் போடபட்ட திட்டங்கள் , மணல்கொள்ளைகள் என பட்டியல் இட்டுள்ளேன் .அதை படித்து விவாதியுங்கள் ஜல்லிக்கட்டோடு இல்லாமல் இந்த பிரச்சினைகளுக்கும் குரல் கொடுத்து போராடுங்கள் என்றேன் .பயன் உள்ள குளிர்ந்த கடல் காற்றோடு நேற்று இரவு அமைந்தது . இது மகிழ்ச்சியான தருணமாக இருந்தது .  நம்மளையும் மதித்து நம்மால் வளர்க்கப்பட்ட இளைஞர்கள் நேசத்தோடு , பெருமதிப்பு கொடுத்து சீராட்டியது மனத்திற்கு  இதமாக இருந்த்து . 
44 ஆண்டுகள் பொதுவாழ்க்கையில்  உழைத்ததற்கான அங்கிகாரம் தான் இந்த அன்பான அழைப்புகள் ....

சென்னை மெரினாவின் ஆழி சூழ் பெருங்கூட்டம் போராட்டமாக  தெரியவில்லை இது ஒரு சல்லிக்கட்டு வெற்றி விழா  கொண்டாட்ட கூட்டம் .
................................................
இந்தப் போராட்டத்திற்கு அரசியல் தலைமை வேண்டும், தத்துவப் பின்னணி வேண்டும் என்று சிலர் கரிசனம் காட்டுகிறார்கள். தத்துவப் பின்னணி யுடன் (political ideology) கட்சி நடத்தும் யாருக்கும் உள்நோக்கம் (inner agenda)  இல்லாதிருக்கிறதா..... இந்தப் போராட்டம் இயற்பியல் தத்துவப்படி ஒரு மோதாற்றல் (Impulse, a momentum with initial velocity zero) அதன் வலு தான்,அந்தச் சுத்தியலடிதான் இந்தியாவையே நடுங்க வைத்திருக்கிறது... உங்கள் பட்டறையில் காய்ச்சப்பட்ட இரும்பை இதில் கூர் தீட்ட நினைக்கக் கூடாது.


#Jallikkattu
#KSRposting
#KSRadhakirushnanpost
கே.எஸ் . இராதாகிருஷ்ணன்
21/01/17Friday, January 20, 2017

ஜல்லிக்கட்டு ஒரு குறியீடே!

குடும்பம் குட்டிகளோடு தெருக்களை எதிர்ப்பு கோஷங்களால் நிரப்பிக்கொண்டு போராட குவிந்திருக்கும் மக்களின் கோபமும் தன்னெழுச்சியும்,வேறு ஆரம்பம்.....
மக்கள் நிராகரிக்கின்றனர். ஜல்லிக்கட்டு ஒரு குறியீடே!
போராட்ட களத்தினுள்ளே இருந்த குப்பைகளைஅகற்றியிருக்கிறார்கள்.போராட்டத்தின் உள்புகுந்து வேற்றுமைகளை புகுத்த கும்பலும் வெளியே வீசபட்டிருக்கிறது.இந்த போராட்டங்களின் நீட்சியாய் தமிழகத்தின் எல்லா தெருவும் போராட்ட களமாகியிருக்கிறது... வேற்று மொழி நண்பர்களும் குடும்பமாய் போராட்டத்தில் தமிழனுக்கு துணையாகியிருக்கிறார்கள்.இது தொடருனும்.இந்த போராட்டமே வெற்றி.நடிகர்களையும் சந்தர்ப்பவாத அரசியலையும் வெறும் ஐந்து நாட்கள் விலக்கி வைத்ததற்கே இத்தனை வேலை நடக்கிறது என்றால்........... 
உலகெங்கும் 40 நாடுகளில் வாழும் தமிழர்கள் போராடுகிறார்கள்...

 #Jallikkattu
#KSRposting
#KSRadhakirushnanpost
கே.எஸ் . இராதாகிருஷ்ணன்
20/01/17

பண்பாடு -கலாச்சாரம்

பண்பாடு -கலாச்சாரம் :
----------------------
பண்பாடு என்ற சொல் ரசிகமணி 
டி கே சி உருவாக்கினார்.பண்பாடு என்பது தமிழ்ச்சொல். கலாச்சாரம் என்பது தமிழ்ச்சொல்லன்று.பண்பு, பாடு என்ற சொற்கள் சங்க இலக்கியம் முதல் பயின்று வருகின்றன. பண்பு என்பதற்குக் குணம்,இயல்பு,முறை,வழக்கம் முதலிய பொருள்கள்;'பண்பெனப்படுவது பாடறிந் தொழுகுதல்'எனக் கலித்தொகை(133) கூறுகிறது. பாடு என்ற சொல்லுக்குப் பல பொருள்கள்: உண்டாதல்,நிலைமை,ஒழுக்கம்,
என பல பொருள்கள் உண்டு..ஆனால் தற்பொழுது பண்பாடு என்றால் ஒரு குழு,இனம் , மா நிலம் கொண்டொழுகும் பழக்க வழக்கம், தொன்றுதொட்டுப் பின்பற்றப்படும் வழக்கம்,வாழையடி வாழையாகப்பின்பற்றப்படும் நெறி என்பதைக் குறிக்கும். இந்த நெறிமுறைகள் பண்பாடாகும். நாகரிகம் என்பது பழக்கத்தின் வளர்ச்சியைக் குறிக்கும். நகரங்கள் வளர வளர உணவு, உடை,அணிகலன்கள்,கட்டடங்கள்,தொழில்,அறிவியல் கருவிகள், முதலியவற்றில் உண்டாகும் மாற்றங்கள் நாகரிகத்தின் அடையாளங்கள். நாகரிகத்தில் மாற்றம், வளர்ச்சி நிகழ்ந்து கொண்டே இருக்கும்..நகரங்கள் அழிந்தபின் இந் நாகரிகத்தின் இயல்பினை நாம் சிந்துவெளி நாகரிகம்,அரப்பா நாகரிகம்,மாயா நாகரிகம்,வைகை நாகரிகம்,பொருநை நாகரிகம் என அழைக்கிறோம்.

Culture என்ற சொல்லின் வேர் cultura என்ற லத்தீன் சொல். அதற்கு பண்படுத்துதல் என்று பொருள். Ager என்ற லத்தீன் சொல்லுக்கு நிலம் எனப் பொருள்.  இவை இரண்டும் சேர்ந்துதான் அக்ரிகல்சர் என்ற சொல் வேளாண்மைக்கு ஆங்கிலத்தில் பயன்படுத்தப்படுகிறது. கல்சர் என்பது மனதைப் பண்படுத்துவது. அதனால்தான் பண்பாடு.

#பண்பாடு
#கலாச்சாரம்
#நாகரிகம்
#KSRposting
#KSRadhakirushnanpost
கே.எஸ் . இராதாகிருஷ்ணன்
20/01/17

Thursday, January 19, 2017

A 19th century description of Jallikattu:

A 19th century description of Jallikattu:

 Mr. J. H. Nelson writes. “This “is a game worthy of a bold and free people, and it is to be regretted that certain Collectors (District Magistrates) should have discouraged it under the idea that it was somewhat dangerous.

"The jellikattu is conducted in the following manner. On a certain day in the year, large crowds of people, chiefly males, assemble together in the morning in some extensive open space, the dry bed of a river perhaps, or of a tank (pond), and many of them may be seen leading ploughing bullocks, of which the sleek bodies and rather wicked eyes afford clear evidence of the extra diet they have received for some days in anticipation of the great event.

"The owners of these animals soon begin to brag of their strength and speed, and to challenge all and any to catch and hold them; and in a short time one of the best beasts is selected to open the day’s proceedings. A new cloth is made fast round his horns, to be the prize of his captor, and he is then led out into the midst of the arena by his owner, and there left to himself surrounded by a throng of shouting and excited strangers.

"Unaccustomed to this sort of treatment, and excited by the gestures of those who have undertaken to catch him, the bullock usually lowers his head at once, and charges wildly into the midst of the crowd, who nimbly run off on either side to make way for him. His speed being much greater than that of the men, he soon overtakes one of his enemies and makes at him to toss him savagely. Upon this the man drops on the sand like a stone, and the bullock, instead of goring him, leaps over his body, and rushes after another. The second man drops in his turn, and is passed like the first; and, after repeating this operation several times, the beast either succeeds in breaking the ring, and galloping off to his village, charging every person he meets on the way, or is at last caught and held by the most vigorous of his pursuers.

"Strange as it may seem, the bullocks never by any chance toss or gore any one who throws himself down on their approach; and the only danger arises from their accidentally reaching unseen and unheard some one who remains standing.

"After the first two or three animals have been let loose one after the other, two or three, or even half a dozen are let loose at a time, and the scene quickly becomes most exciting. The crowd sways violently to and fro in various directions in frantic efforts to escape being knocked over; the air is filled with shouts, screams, and laughter; and the bullocks thunder over the plain as fiercely as if blood and slaughter were their sole occupation. In this way perhaps two or three hundred animals are run in the course of a day, and, when all go home towards evening, a few cuts and bruises, borne with the utmost cheerfulness, are the only results of an amusement which requires great courage and agility on the part of the competitors for the prizes – that is for the cloths and other things tied to the bullocks’ horns – and not a little on the part of the mere bystanders. The only time I saw this sport (from a place of safety) I was highly delighted with the entertainment, and no accident occurred to mar my pleasure. One man indeed was slightly wounded in the buttock, but he was quite able to walk, and seemed to be as happy as his friends.”

(From Edgar Thurston, Castes & Tribes of Southern India,Vol 5.)

"

Wednesday, January 18, 2017

சந்திரா பாபு நாயுடு,

தடையை மீறி ஆந்திராவில் ஜல்லிக்கட்டையும், சேவல் சண்டையை நடத்திய சந்திரபாபு நாயுடு உன்மையான ஆண்மகனா ?? அல்லது இவ்வளவு போராட்டத்துக்கும் இடையில் நமது முதல்வர்  உன்மையான ஆண்மகனா ? 

விவசாயம் முதல் மென்பொருள் வரையும் 
சேவல் சண்டை ஜல்லிக்கட்டு போன்ற பராம்பரிய விளையாட்டு வரை எதிலும் 'முதல்வரே'
மக்களின் முதல்வர்!
சந்திரா பாபு நாயுடு, 

ஒவ்வொரு ஆண்டும், திருப்பதி அடுத்துள்ள அவரது சொந்த ஊரான நாராவாரிபள்ளியில் குடும்பத்துடன் பொங்கல் கொண்டாடுவது வழக்கம். இதை சிறப்பிக்கும் வகையில், சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள், நாராவாரிபள்ளியில் இன்று பிரம்மாண்ட ஜல்லிக்கட்டு நடத்தினர்.™ தமிழகத்தில் நடைபெறும் ஜல்லிகட்டுபோல் இல்லாமல், காளை மாடுகளை மந்தை மந்தையாக பட்டியில் அடைத்து, மாட்டின் கொம்புகளின் மீது பதக்கம் கட்டப்பட்டு ஒவ்வொரு பட்டியாக திறந்து விடப்பட்டது.சீறிப்பாய்ந்த காளைகளின் இருபுறமும் நின்று கொண்டுருந்த இளைஞர்கள், காளையின் கொம்பில் கட்டப்பட்டுள்ள பதக்கத்தை எடுத்தால், அவர்கள் வெற்றி பெற்றதாக கருதப்படும். ராஜா
இதை மீறி, யார் கையிலும் சிக்காமல் எந்த மாடு குறிப்பிட்ட இலக்கை அடைகிறதோ அந்த மாடு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த வலியுறுத்தி தமிழகத்தில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், ஆந்திராவில், அம்மாநில முதலமைச்சரின் சொந்த ஊரில் போலீஸ் பாதுகாப்புடன் ஜல்லிகட்டு நடைபெற்றது. வெள்ளிக்கிழமை சொந்த ஊர் சென்றிருந்த சந்திரபாபு நாயுடு, ஞாயிற்றுக்கிழமை அங்கிருந்து புறப்பட்டுச் சென்ற பின், இந்த ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
மக்களின் மனதை புரிந்துகொண்ட மாமனிதர்


போராட்டம் ...

தமிழர்களின் தொண்மையான ஜல்லிக்கட்டுக்கு போராடுவது சரிதான் .களத்தில் நின்று போராடும் போராளிகளுக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும்.160க்கும் மேலான விவசாயிகளின் கடன் தொல்லையால் மாண்டதற்க்கும் , கொங்கு மண்டலத்தில் நீராதரமாக இருக்கும் பவானி நீர்பிடிப்பு பகுதியில் தடுப்பனை கட்டுகிறது  கேரள அரசு.

நீட் தேர்வு பிரச்சினைக்கும்  , மீனவர் பிரச்சினைகள் போன்ற பல தமிழக உரிமை பிரச்சினைகள் இதே வீரியத்தை காட்டி குரல் கொடுத்து போராடினால் நல்லது !

தமிழர் கலாச்சாரத்திற்கும் ஆதரவு தெரிவிக்கும் திரைத் துறையினரின் கருத்தை அவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து முன்னிலைப்படுத்த வேண்டாம். ஜல்லிக்கட்டிற்கான புரட்சி, பொங்கிப் பெருகுவதால், போட்டிப் போட்டுக் கொண்டு இப்போது அறிக்கையும் பேட்டியும் அளிக்கும் நட்சத்திரங்கள் பலருக்கு, தமிழுணர்வு உண்மையிலேயே உண்டென உறுதியளிக்க முடியாது. ஆகவே, நிழல் கதாநாயகர்களின் வசனங்களை கிடப்பில் விடுவோம். நிஜக் கதாநாயகர்களின் எழுச்சியை தலைப்பில் இடுவோம்...

Tuesday, January 17, 2017

பவானி நதி

பவானி நதி:
------------
கேரள அரசு,அட்டப்பாடி-தேக்குவட்டை கிராமத்தில் பவானி ஆற்றின் குறுக்கில் தடுப்பணை கட்டும் பணியில் இறங்கியுள்ளது. தமிழக-கேரள அரசியலில் மீண்டும் விவகாரமாக இது மாறியிருக்கிறது.

தமிழகத்தின் நீலகிரி வனப்பகுதியும், கேரளத்தின் நிலம்பூர் வனப்பகுதியும் இணையும் எல்லைப்பகுதியான அங்கந்தா எனப்படும் பகுதியில் உருவாகும் பவானி ஆறு, நீலகிரி மாவட்ட காடுகளில் 3 கிமீ தூரம் பயணித்து கேரள வனப்பகுதிகளுக்குள் நுழைந்து அட்டப்பாடி பிரதேசத்ததில் உள்ள சைலண்ட் வேலிக்கு வருகிறது. இங்கு பல கிளைகளாக பிரியும் பவானி நதியின் உயிர்முடிச்சு கிட்டத்தட்ட 24 கிமீ கடந்து முக்காலி கிராமத்தை அடைகிறது.

இந்த முக்காலி கிராமத்துக்கு கிழக்கே சுமார் 24 கிமீ தூரம்தான் தமிழகப்பகுதியான ஆனைகட்டி. முக்காலியிலிருந்து வடகிழக்கே நகரும் #பவானி அட்டப்பாடியில் 35 கிமீ தூரம் வளைந்து நெளிந்து பல்லாயிரக்கணக்கான ஹெக்டேர் நிலங்களை பசுமையாக்கிவிட்டு தமிழகத்தின் பில்லூர் பகுதிக்கு வந்து சேருகிறது. பில்லூர் அணைதான் கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களுக்கு பெரிய அளவில் குடிநீர் தேவையை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறது.

கோவைக்கு தென்மேற்கமுத்திக்குளம் (முக்காலிக்கு தென்கிழக்கே சுமார் 30 கிமீ தொலைவில்) பகுதியில் பல்வேறு நீரோடைகளின் மூலம் உருவாகும் சிறுவாணி கேரள காடுகளில் (இதுவும் அட்டப்பாடி பிரதேசம்தான்) கோவையின் நீர்த்தேவைக்குரிய சிறுவாணி அணையில் நிரம்பிவிட்டு அதன் உபரி நீர் நேரே வடக்கு நோக்கி கிளை விரிக்கிறது. இது வெங்கக்கடவு, சித்தூர், சிறுவாணி, நெல்லே பள்ளி, கூழிக்கடவு, அகழி போன்ற அட்டப்பாடி மலைக் கிராமங்களை சுமார் 25 கிமீ கடந்து கூட்டப்பட்டி என்ற இடத்தில் பவானியுடன் கலக்கிறது.

இப்படி சிறுவாணியை சேர்த்துக் கொண்டு பவானி மேலும் சுமார் 10 கிமீ பயணித்து தமிழகத்தின் பில்லூர் அணைக்கு வந்து சேருகிறது. இதில் #அட்டப்பாடி முக்காலி பகுதியில் 2003-ல் பல்வேறு தடுப்பணைகளை கட்டத்திட்டமிட்டது #கேரளஅரசு. முக்காலியில் அணைகள் கட்டினால் தமிழகப் பகுதிகளுக்கு தண்ணீரே வராது என்று சர்ச்சை கிளப்பிய விவசாயிகள் மற்றும் இயற்கை ஆர்வலர்கள் பல்வேறு போராட்டங்கள் எடுத்ததன் விளைவு அந்தப்பணிகள் தடுத்து நிறுத்தப்பட்டது.2012-ல் திரும்ப தூசி தட்டப்பட்டது. சிறுவாணிக்கு குறுக்காக சித்தூர் என்ற இடத்தில் ஏற்கனவே கட்டப்பட்டு பாதியில் நிறுத்தப்பட்ட அணையை கட்ட திட்டமிட்டது கேரள அரசு. சித்தூர் அணையில் ஒரு பெரிய அணையையும், அந்த ஆறுகளின் வழியோரங்களில் 12 தடுப்பணைகளும் கட்டி 6.5 டி எம்சி தண்ணீரை எடுக்க திட்டமிட்டு அதற்கு நிதியும் அறிவித்தது. அதற்கு எதிராகவும் தமிழகத்தில் எதிர்ப்புகள், போராட்டங்கள் வெடித்தன.

இறுதியில் #சிறுவாணிநதி ஓரங்களில் அணைகட்ட சின்ன ஆய்வைக்கூட செய்யாமல் கேரள அரசு ஒதுங்கிக் கொண்டது. அதற்குப் பிறகு கடந்த ஆண்டும் சிறுவாணி, சித்தூரில் அணைகட்ட மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் ஒப்புதலை பெற்று, அணைகட்ட ஆய்வுப்பணிகளை தொடங்கியது. அதற்கும் தமிழகத்திலிருந்து எதிர்ப்பு, போராட்டங்கள். #முக்காலிக்கு கீழே தேக்குவட்டை என்ற கிராமத்தில் கடந்த 10 நாட்களாக தடுப்பணைகட்டும் பணியில் இறங்கியுள்ளது கேரள அரசு.

கோவை- கேரள எல்லைப்பகுதிகள் மீண்டும் பதற்றத்திலும், பரபரப்பிலும் ஆழ்ந்துள்ளது. தற்போது தடுப்பணை கட்டப்படும் தேக்குவட்டை கிராமம் கோவையிலிருந்து மன்னார்காடு (கேரளா) செல்லும் வழியில் 70 கிமீ தாவளத்தை அடுத்து வலது புறம் அருகே 10 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இங்கே 50-க்கும் மேற்பட்ட தமிழர்கள் மற்றும் பழங்குடி குடும்பத்தினர் வசிக்கின்றனர். இவர்களின் சுமார் 500 ஏக்கர் நிலங்களுக்கு பாசன வசதியை 50 எச்.பி. மோட்டார் பம்ப் செட்  மூலம் எடுத்து குழாய்கள் வழியே கொண்டு சென்று கொடுக்க திட்டம் செய்துள்ளதாம் கேரள அரசு. இதேபோல் இந்த தடுப்பணைக்கு முன்னும் பின்னும் பவானி ஆற்றின் குறுக்கே 5 இடங்களில் உடனடியாக தடுப்பணை கட்டி அங்குள்ள கிராமங்களுக்கும் இதேபோல் பம்ப் செட் மூலம் தண்ணீர் கொடுக்க முடிவு செய்துள்ளது.

பவானி வறண்டு கொண்டிருக்கிறது. கோவை, திருப்பூர், மேட்டுப்பாளையம் குடிநீர் ஆதாரங்கள் மோசமாகியுள்ளன. இந்த நிலையில் அட்டப்பாடியிலேயே அணைகட்டித்தடுக்கப்பட்டால் நிலைமை என்னவாகும்?

எம்ஜிஆர்

எம்.ஜி. ஆரின் ராமாவரம் தோட்டத்தில் அவருடைய முழுவுருவ சிலை திறப்பு விழா மேடையில்  முதல்வர் ஓ . பன்னீர்செல்வமும் , சசிகலாவும் இருப்பதை பார்த்தேன்.

எம்.ஜி.ஆருடன் அறிமுகமாகி நெருங்கி பழகியவர்கள் யாருமே மேடையில் இல்லை  . பண்ருட்டி ராமசந்திரனோ , பொன்னையனோ , பி.எச். பாண்டியனோ , மதுசூதனன் போன்ற எம்.ஜி.ஆர் காலத்து ஆட்க்களை அமரவைத்து இருக்கலாம் .அப்படி விருப்பம் இல்லை என்றால் மூத்த தலைவராக இரா செழியன் அல்லது வேலுர் விஸ்வநாதனையாவது சிறப்பு அழைப்பாழராக அழைத்து இருக்கலாம் . விடுதலை புலிகள் பிரச்சனைகள் ஒட்டி எம்ஜிஆர்யேரடு நெருங்கிய அறிமுகமான எங்களை போன்றோர்களுக்கு குறையாக தெரிந்தது .எம்.ஜி.ஆருக்கு நன்கு அறிமுகமாகத சசிகலாவும், தீபாவும் எம்ஜிஆரின்  அதிமுகவை கைபற்ற நினைத்து தெரு சண்டை போடுபவர்களுக்கு முக்கியத்துவம் தருவது வெக்ககேடானது.

கர்நாடாவில் பிறந்து, ஒரு கிறிஸ்துவரை மணந்து , ஜெயலலிதா அவர்களால் புறக்கணிக்கப்பட்டு, இத்தனை நாட்களாக முகவரியே இல்லாத ஒருத்தர், இன்று திடீர் என்று தமிழக மக்களின் மேல் பாசம் பொங்குகிறது என்றால் ? அதே போல இத்தனை நாட்களாக ஜெயலலிதாவின் சொந்த உதவிக்கு , அவரின் வீட்டு விஷயங்களை பகிர்ந்துகொண்டு இருந்த ஒருத்தர், அவரின் குடும்பம் திடீர் என்று கிளம்பி தமிழகமே எங்களது என்று கூறும் நிலை!!. ஒன்றும் புரியலையே உலகத்திலே!!
.................
என்னதான் நடக்கும் நடக்கட்டுமே! 
இருட்டினில் நீதி மறையட்டுமே! 
தன்னாலே வெளிவரும் தயங்காதே! 
ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே!
..................
பதவி வரும் போது பணிவு வர வேண்டும்  துணிவும் வர வேண்டும் தோழா,,,

India-Bangladesh Ganga water treaty20 years of the 30 year India-Bangladesh Ganga water treaty are over, what is the future?
-------------------------------------
On the twentieth anniversary of the signing of the historic India-Bangladesh Ganga Water Sharing Treaty, one of its architects speaks about its past, present and future

The creation of the Farakka barrage, 16.5 kilometres from the India-Bangladesh border, was one of the main drivers of the treaty [image by Pfly, CC BY-SA 3.0 / Wikipedia]
The creation of the Farakka barrage, 16.5 kilometres from the India-Bangladesh border, was one of the main drivers of the treaty [image by Pfly, CC BY-SA 3.0 / Wikipedia]
Kamran Reza Chowdhury, January 17, 2017
Categories: Interviews Tags: Bangladesh Ganga India Regions: Bangladesh Ganga India Topics: Regional Cooperation Water
On 12 December 1996, Dhaka and Delhi signed a historic treaty on sharing the waters of the Ganga that travels from Nepal and India and then into Bangladesh. Until the signing of the Ganga Water Sharing Treaty, the withdrawal of water in India caused huge environmental, social and economic consequences for Bangladesh, especially after the commissioning of the Farakka barrage in 1975.

On its twentieth anniversary, Ainun Nishat, a noted Bangladeshi environmentalist and one of the architects of the treaty, spoke to Kamran Reza Chowdhury about what were the hopes from the treaty, what has come about, and what needs to be done for the future.

Professor Ainun Nishat was one of the architects of the Ganga water sharing treaty
Professor Ainun Nishat was one of the architects of the Ganga water sharing treaty

Kamran Reza Chowdhury (KRC): Can you tell us about sharing the waters of the Ganga?

Ainun Nishat (AN): First of all, you have to understand a transboundary river to understand the gravity of the Ganga water sharing treaty. A river crossing more than one independent country is called transboundary. It is common that there would be conflicts over the sharing of waters of the transboundary river among the countries involved. Even states in the same country fight over common rivers. For instance, the Indian states of Telangana and Andhra Pradesh have been fighting over sharing the waters of Krishna and other rivers. Andhra is the lower riparian like Bangladesh and Telangana is the upper riparian like India.

Andhra fears that Telangana will not give it water from the common rivers, especially because water storage is possible in Telangana. On the other hand, the demand is higher in the lower part— the valley, agricultural land, settlement and city. Another problem is the sea is in the lower part. If the fresh water supply is reduced, then you will have increased salinity, and that will affect the ecology and the environment. So, the opportunities are in the upper riparian—you can store the water, you can produce hydropower, and you can maintain the navigation in the entire river. If a river crosses through two independent countries or two provinces of a same country, none of them are interested in accommodating each other’s requirements.

Added to this is the increased demand of water is the rapid growth of population in the world. We need huge quantity of water for irrigation and agriculture. Another fact is sometimes there is too much water [leading to flooding] and sometimes too little water [leading to drought, and people not wanting to share water].

KRC: How did the treaty come about?

Based on ideas from British times, in 1951 India published its plan to construct the Farakka barrage along the Bangladesh-India border. The aim of the barrage was to maintain navigability of the Kolkata port in the state of West Bengal state. Between 1960 and 1970, officials of India and Pakistan (when Bangladesh was part of Pakistan) discussed the issues that arose out of building the barrage, but they failed to thrash out an acceptable solution.

In December 1971, Bangladesh emerged as an independent country. In April 1975, India formally sought Bangladesh’s consent to go for a test run of the Farakka barrage—to see whether the barrage was constructed properly. In August 1975, Bangabandhu (Sheikh Mujibur Rahman, the founding leader of Bangladesh) was assassinated. In 1976, India went for total withdrawal of the Ganga waters causing serious problems in areas of Bangladesh including the southwestern region, which hosts the Sundarbans, the world’s largest mangrove forest in the Bay of Bengal.

In 1977 Bangladesh and India signed a five-year agreement that stressed that the two governments “need to cooperate with each other in finding a solution to the long term problem of augmenting the flow of the Ganga during the dry season”. After the expiry of the 1977 agreement, Bangladesh and India signed a Memorandum of Understanding (MoU) on 7 October 1982 for one year. Another MoU for water sharing between 1986 and 1988 was inked. The second MoU being over, there was no agreement on sharing of the Ganga waters from 1989 to December 1996 when the 30-year Ganga water treaty was signed.

You have to understand that in 1996 we convinced India to sign a treaty—not a MoU or agreement—on sharing the Ganga waters. A treaty is the strongest international legal deal between two countries. This is historic, though the treaty has some limitations.

KRC: Why is the treaty ‘historic’ and what are the limitations?

AN: Historic because India had not agreed to sign a treaty before; all the previous deals were for short terms. We do not face water scarcity during the rainy season—June to October, but during the dry season, particularly between January and May, the flow reduces drastically. So, the Ganga Water Treaty, signed by the prime ministers of Bangladesh and India, guaranteed a fair deal between Bangladesh and India. I will come to the limitation later on.

KRC: So, would you call it a good deal on water sharing?

AN: Yes, this is a fair deal. The treaty has been working, more or less, very well. I quote, “Subject to the condition that India and Bangladesh each shall receive guaranteed 35,000 cusec of water in alternate three 10-day periods during the period March 11 to May 10”. So, Bangladesh has been getting the benefits of the treaty. Of course there are rooms for improvements.

KRC: What are the limitations of the Ganga water treaty?

AN: One of the main problems or limitations of the treaty is the deal is for 30 years; this is not fair. For example: if you and your brother inherit a piece of land from your father, would you share it for 10 or 20 or 30 years? You will share it forever. What would happen after 30 years? The time-bound treaty will give India an upper hand in the negotiation in the long run.  So, the treaty should have stated that ‘the treaty would be in place unless replaced by another treaty’.

Another problem is that we are sharing the residual flow at the Farakka point. The other upper riparian states such as Uttar Pradesh, Madhya Pradesh and Bihar have been withdrawing waters in the upper portion. Bihar and West Bengal have been fighting with Bangladesh, but they are not talking about withdrawal of waters in their upper portion. In the future, I fear that the Indian central government may not be in a position to ensure the minimum 70,000 cusec of water at the Farakka point for sharing with Bangladesh.

The Farakka barrage is a central government project; so the Indian central government must intervene to ensure equitable share of waters of the Ganga.

KRC: Why did you limit the treaty to 30 years?

AN: The previous deals were for short terms—from one year to five years. When we got 30 years, we thought it a big achievement.

KRC: What should Bangladesh do to amend the Ganga water sharing treaty?

AN: Bangladesh should immediately start negotiation with India on signing a better and perpetual treaty on sharing the waters of the Ganga. This is because such negotiation will take at least five to six years. But I do not see any initiative from the Bangladeshi side in this regard; the issue is yet to get importance at the decision making level. We have the experience of what happens when there is not any deal. In the past, we lost at every level of the negotiation.

KRC: Do you see a friendly approach in the future talks?

AN: Yes. Bangladesh and India have been discussing augmentation of flow of the Ganga in Nepal since 1974. In 2011 India and Bangladesh agreed to manage the Ganga basin wide. This is a big step forward to make every country understand the benefits of basin-wide management of the Ganga. We have 57 trans-boundary rivers; so this is very vital issue for us.

At present, Bangladesh needs some honest, capable, dedicated, technically sound and patriotic experts who can devise a good Ganga water sharing treaty in future.

In the line of a good Ganga treaty, we can agree with India to sign deals on other common rivers.

Monday, January 16, 2017

Amal Clooney

Amal Clooney Stuns in Vintage YSL at 'Hail, Caesar!' Berlin Premiere
------------------------------------
Though her engagement and marriage to George Clooney thrust her into the public eye, internationally celebrated human rights lawyer Amal Clooney (née Alamuddin) cultivated her own personal style long before meeting her husband. A mix of playful and professional, the new Mrs. Clooney always manages to look perfectly polished for every occasion. Click through to see her top style moments so far.

சிந்தனைக்கு

சிந்தனைக்கு............
என்ன நடக்கிறது தமிழ்நாட்டில் ?
-------------------------------------
விதியே விதியே தமிழ் சாதி என்ற பாரதியின் வரிகளை வேதனையோடு நினைத்து பார்க்க வேண்டிய நிலையில் தமிழ்ர்களாக நாம் இருக்கின்றோம் . 
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு முன்னின்று ஜல்லிக்கட்டை ஆந்திரத்தில்  நடத்துகின்றார் .அங்கு சேவல் சண்டையும்  நடக்கின்றது  , முதல்வரே பாரம்பரியமான சில்லாங்குச்சி , கோலி குண்டு  விளையாடுகின்றார் . வீர தீர செயல்களுக்கு ஆந்திர அரசு நிர்வாகமும் , ஆட்சியாளர்களும் மதிப்பளிக்கின்றனர் 

மைசூர் நகரில் நடக்கும் தசரா பண்டிகை விழாவில் யானைகள் பதறக்கூடிய அளவில் சக்திவாய்ந்த வெடிகள் வெடிக்கப்படுகின்றது . கேரள மாநிலம் திருச்சூர் நகரில் கொண்டாடப்படும் பூரம் திருவிழாவில் யானைகளுக்கு முன் பயங்கர வெடி சத்தத்தோடு வெடி வெடிக்கப்பட்டு யானைகள் மிரண்டு மதம் கொண்டு பல பேரை தாக்கி மிதித்த சம்பவங்களும் நடந்தும்;அதற்கு தடை ஏற்படாமல் தொடர்ந்து நடத்தி வருகின்றார்கள் . அங்கு எல்லாம் பீட்டாவின் குரல் எங்கே ? 
கேரள மக்கள் மத இன வேற்றுமையின்றி அனைவரும் கொண்டாட கூடிய திருவிழாவான ஓணம்  விழாவிற்கு பிரச்சினைவந்தபோது
விட்டுக்கொடுககாமல திருவிழாவை மிகுந்த போர்குணத்தோடு  கேரள மக்கள் நடத்தினார்கள்.

ஆனால் தமிழர்களின. கலாச்சார பண்பாட்டு குறியீடாக  சங்க இலக்கியங்களான  கலித்தொகை , புறநானூறு , பத்துப்பாட்டு ஆகிய நூல்களில் பாடப்பெற்ற ஜல்லிக்கட்டுவிற்கு தடை என்கிறார்கள் . தடையை எதிர்த்து கிளர்ச்சியோடு எழும் தமிழகத்து இளைஞர்களை காவல்த்துறை கொண்டு அடித்து விரட்டுகின்றது . ஆனால் தடையை உடைத்து ஜல்லிக்கட்டு நடந்தது மகிழ்ச்சியை தருகிறது . தமிழக மக்களின் பணத்தின் மூலம் தங்கள் வாழ்வை வளமாக்கிய சில நடிகர் நடிகைகள் ஜல்லிக்கட்டை எதிர்க்கின்றனர்.பீட்டா என்ற டீ சர்ட்டை போட்டுக்கொண்டு சமுக வலைதளங்களில் ஒரு நடிகை  ஜல்லிக்கட்டையும் தமிழர்களையும் ஏகடியம் செய்யும் வகையில் காட்சி தருகின்றார் . தமிழ் கலாச்சாரத்தை நோக்கி வினாவும் எழுப்புகின்றார் .   அந்தநடிகைநேற்றுவிளைந்தகாளான்.
தகுதியற்ற , தரமற்ற இப்படிப்பட்டவரை தமிழகம் கொண்டாடுலாமா ? பயந்து அஞ்சி பல்டியும் அடித்துவிட்டார் . அந்த நடிகை என்ன  மார்க்ஸியம்  , காந்தியம் பெரியாரியம் படித்தவரை போன்று ஆலோசனைகள் சொல்லும் நடிகைகளை தூக்கி சும்ப்பது மக்களாகிய நாம் தானே ? நேற்று முளைத்த இந்த நடிகையின் பெயரை சொல்லக்கூட இழிவாக இருக்கின்றது .  என்ன செய்ய ?  இந்த நடிகை எல்லாம் நமக்கு அறிவுரை  சொல்கின்ற நிலையை பார்த்தால் அது நமக்கு கேவலமாக இல்லை ? 
திரிஷா கருத்து சொன்னதுக்கு கோபப்படனுமா ??
இல்ல ....திரிஷாலாம் கருத்து சொல்ற அளவுக்கு கொண்டு வந்து விட்டுட்டாங்களேன்னு கோபப்படனுமா ??

தமிழகத்தில் எத்தனையோ நேர்மையான எளிமையான அரசியல் தலைவர்கள் இருக்கின்றார்.நாம் ஏன் திரிஷா போன்றோர்களின் தறுதலைத்தனமாகபேச்சுக்கு முக்கியத்துவம் தரவேண்டும் .இது நமது குற்றம் தானே ? 

சமுகவலை தளத்தில்  அரிய கருத்துக்களை சொல்பவர்களின் பதிவுகளுக்கு விருப்பம்(Like )   தரமாட்டார்கள்.எனக்கு  தெரிந்த ஒருவர் ,பெயர்சொல்ல விரும்பவில்லை . அவர் ஒரு பெண் என்ற ஒரே காரணத்திற்காக  எந்த ஒரு ஆளமான கருத்துக்கள் எதுவும் இல்லாத அப்பெண்மணியின் முக நூல் பக்கத்திற்கு 3 லட்ச்சத்திற்கும் அதிகமான பின் தொடர்பு  விருப்பங்கள்   (Followers- likes)உள்ளன .சினிமா நடிகைகளுக்கு 10 முதல் 20 லட்சங்களுக்கு மேல் விருப்பங்கள்   (Followers likes)உள்ளது 

நல்லகண்ணு போன்ற எளிமையான நல்ல அரசியல் தலைவர்கள் சமுகவலைதளமான முகநூலுக்கு வந்தால்  150 விருப்பங்கள்   (Followers likes)கூட கிடைக்காது.

ஜெயலலிதா தோழியாக இருந்த சசிகலாவை முதல்வராக வரவேண்டும் என்கிறார்கள் . இன்னொரு புறத்தில் ஜெயலலிதா அண்ணன் மகள் என்ற காரணத்திற்க்காகவே  அவர் கட்சி ஆரம்பிக்க வேண்டும் எங்களை ஆள வேண்டும் என்று அவர் வீட்டின் முன் தினமும் மக்கள் கூடுகின்றார்கள் . சினிமா உலகில்  இருந்தாலே அவர் தமிழகத்தின் முதலமைச்சராக வரவேண்டும் ஆசை வந்துவிடுகிறது .  இது  பைத்தியக்கார தனம் இல்லையா ? 

இப்படிப்பட்டவர்களுக்கு நாம் முன்னுரிமை அளித்த காரணத்தால் தான் ஜல்லிக்கட்டு,நதிநீர் பிரச்சினைகள் , மீனவர் பிரச்சினைகள் என  பல  உரிமைகள் இழந்து நிற்கின்றோம் . 

களப்பணி தியாகங்கள. எதுவுமில்லாமல் தெருவில் போகிறவர்களை எல்லாம் முதல்வராக வரவேண்டும் என்று அழைக்கும் கொடுமைகளுக்கு யார் காரணம் ? என்று மக்களாகிய நாம் சிந்தித்து பார்க்கவேண்டும் . இப்படி மக்களை முட்டாள்களாக ஆக்கி உணர்வற்றவர்களாக  மாற்றி விட்ட தொலைக்காட்சி தொடர்களும் , அர்த்தமற்ற தொலைக்காட்சி விவாதங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தாலே  மக்கள் சிந்திக்க தொடங்கி விடுவார்கள் . திரிஷாக்களும் ,சசிகலாக்களும் ,ஜெயலலிதா அண்ணன் மகள் தீபாக்களும்  போன்றோர்களும் தலையெடுத்து ஆடுவதை தடுக்க மக்கள் சரியாக இருக்க வேண்டும் . ஓட்டுக்கு எப்போது  காசு வாங்கிணோமே அன்றே அடிப்படை நேர்மையும் , போர்குணமும் , மனஉறுதியும் போய்விட்டது . மக்களே சிந்தித்து சரியான நேர்வழிக்கு வாருங்கள் ! நம்முடைய சுயமரியாதையை காக்க நடிகர் -நடிகைகளையும்,தகுதியற்றவர்களையும் தாங்கி பிடிப்பதை புறந்தள்ளுவோம் !
#தமிழகஅரசியல்
#ஜல்லிக்கட்டு
#KSRposting
#KSRadhakirushnanpost
கே.எஸ் . இராதாகிருஷ்ணன்
16/01/17

Saturday, January 14, 2017

KiRa books released function

Times of India,today-14/1/2017; 
KiRa books released function 
---------------------------------
Telling tales of a drought-hit land
Abdullah Nurullah
Chennai:
Socrates never believed in the written word. The Greek philosopher held that the spoken word was alive and true but the written word was as good as dead. Sahitya Akademi winner and folklorist Ki Rajanarayanan went against the Socrates' `dictum', succesfully capturing life in the scorched, drought-stricken land around Kovilpatti, or `karisal kaadu'.
Five books penned by the 94-year-old writer, popular among fans as Ki Ra, were released at a function at the Chennai Book Fair on Friday .Addressing Ki Ra fans at the launch, poet Tamilachi Thangapandian said Ki Ra gave life to the written word. “He used literature as a tool to immortalise the life and times of the karisal kaadu and took it to future generations.“ She compared his works `Gopalla Gramam' and `Gopallapurathu Makkal' to `The Good Earth' (1931), the Noble prizewinning book by American writer Pearl S Buck.

K S Radhakrishnan, DMK member and advocate, who presided over the launch, and others invoked the long-pending demand for the `Jnanpith Award' to be given to the nonagenarian author. Radhakrishnan said, “We had high expectations that Ki Ra would be bestowed the honour this year. It has been 12 years since a Tamil writer won the award. Ki Ra barely went to school, but rose through hard work and learned literature on his own.“ Tamil writers Jayakanthan and P V Akilan are previous recipients of the award.

Senior Communist Party of India leader R Nallakannu recalled that Ki Ra's short story `Kadavu' (door) led to a political movement in the 1960s.“Ki Ra based the story on one of our struggles. After a farmer came under fire from revenue officials for deferring payments, we protested. The famer's house door was also seized. It was returned.“ The 92-year old leader said CPI candidate S Alagarsamy went on to contest and win five elections between 1967 and 1991based on the issue. Ki Ra retired as professor of folklore at Pondicherry central university in 2002 after serving for 12 years.

தைப் புத்தாண்டு -பொங்கல் திருநாள்

தைப் புத்தாண்டு -பொங்கல் திருநாள் 
--------------------------------
தொழுங்குலத்தில் பிறந்தாலென்    சுடர்முடி மன்னவராகி 
எழுங்குலத்தில் பிறந்தாலென் இவர்க்குப்பின் வணிகரெனும் செழுங்குலத்தில் பிறந்தாலென் சிறப்புடையரானாலென் உழுங்குலத்தில் பிறந்தோரே உலகுய்யப் பிறந்தோரே -
-கம்பர்

உழவர் திருநாள்

தை புத்தாண்டு பிறந்து பொங்கல் நாளின் போது விவசாய அறுவடைகள் முடிந்துவிடும்.  விவசாயிகள் அகம் மகிழ்ந்து போகி, தைப் பொங்கல், மாட்டுப் பொங்கல், கரி நாள் என்று கொண்டாடி கிராமங்களேமகிழ்ச்சியில் தளைக்கும். எனக்கு நினைவு தெரிந்தவரை கிராமத்தில் சிலம்பாட்டம், கபடி, பின்பு 1960களில் கைப் பந்து (volley ball) என்று விளையாட்டுப் போட்டிகள் நடப்பது வாடிக்கை.

ஞாயிறைப் போற்றும் வகையில், அதாவது சூரியன் உதிப்பது உத்ராயணம், தஷ்ணாயணம் என அழைக்கப்படுவது உண்டு.  தை மாதம் முதல் ஆனி மாதம் வரை உத்ராயணம் என்றும் ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரை தஷ்ணாயணம் என சூரியன் இடம் மாறுவதை காலங்களில் வகைப்படுத்துவார்கள். உத்ராயணம் காலத்தில் தை பிறக்கிறது.  நாம் தைப் பொங்கல் கொண்டாடுவதைப் போல ஆந்திரத்திலும், கர்நாடகத்திலும் மற்றும் வட புல மாநிலங்களிலும் மகர சங்கராந்தி என்று அறுவடை நாளை கொண்டாடுவது உண்டு.

இப்படி இந்தியா முழுவதும் தை மாதத்தை கொண்டாடுகின்றனர். தமிழகத்தில் தை பிறப்பதை விமரிசையாகவும், எதையோ எதிர்பார்த்த மகிழ்ச்சியோடு கொண்டாடுகின்றனர். எனவே தை பிறந்தால் வழி பிறக்கும் என்கிறோம்.
நினைவு தெரிந்த காலத்திலிருந்து 1950, 1960 களிலிருந்து 1990 வரை கிராமங்களில் தைப் பொங்கல் ஒரு உற்சாகத்தோடு, உறவுகளோடு கொண்டாடுவதை பார்த்துள்ளேன்.  தொலைக்காட்சிகள் வந்தவுடன் அந்த கொண்டாட்டங்கள் கொஞ்சம் அடங்கிவிட்டன.  1993 லிருந்து தொலைக்காட்சிகளின் முன்பு உட்கார்ந்துகொண்டு பொங்கலை வீட்டின் உள்ளேயே கொண்டாட ஆரம்பித்துவிட்டனர். தெருக்களிலும், கிராமத்தின் மந்தைகளிலும் கொண்டாடிய பொங்கல் வீட்டுக்குள் அடங்கிவிட்டது.

அதிகாலையில் எழுந்து பள்ளிப் பருவத்திலேயே கன்னிப் பிள்ளை, வேப்ப இலைகளை அடங்கிய கொப்புகளை எடுத்துக்கொண்டு வயற்காட்டிலும், தோட்டத்திலும் மற்றும் வானம் பார்த்த மானாவாரி நிலங்களிலும் சூரிய உதயத்திற்கு முன், விடியற்காலை வைகறைப் பொழுதில் இந்த கன்னிப் பிள்ளை, வேப்ப இலைகளை அந்த விவசாய நிலங்களில் கட்டுவதுண்டு.  இதற்கு பொழி என்று அழைப்பதுண்டு. விடியற்காலை இருட்டில் பேட்டரி லைட்டோடு பின் பனிக் காலத்தில் பனித்துளிகள் உடம்பில் படும் வண்ணம் கட்டியதெல்லாம் இன்றைக்கு மலரும் நினைவுகளாக உள்ளன.  பொழியை கட்டிவிட்டு வீட்டுக்குத் திரும்பும்போது சூரிய உதயம் ஏழு மணிக்கு வீட்டின் வெட்டவெளியில் கரும்பு, மஞ்சள், மாவிலை போன்றவற்றோடு பொங்கல் இடுவதை பார்க்க ரம்மியமாக இருக்கும்.

பொங்கல் என்பது கிராமம், விவசாயம், தொன்மை சார்ந்த திருவிழா ஆகும். இது சூரியனை வணங்கும் வழிபாடு என்று கூட கூறலாம். இது உழவுக்கும், வேளாண்மைக்கும் எடுக்கின்ற திருவிழா. இந்த பழமை வாய்ந்த ஏர்ப்பிடிப்பு கிராம விழா தற்போது சடங்காகவும், சம்பிரதாயமாகவும் ஆகிவிட்டது.

தீபாவளியைப் போல புத்தாடையில் மஞ்சள் தடவி, விடியற்காலை குளித்து பொங்கல் இடும்போது ஏற்படுகின்ற அதிர்வலைகள் இன்றைய காலக்கட்டத்தில் ஏற்படவில்லையே என்று மனதிற்குள் எண்ண ஓட்டமும் இருக்கிறது.

பொங்கலுக்கு முதல் நாள் போகிப் பண்டிகையையொட்டி வீட்டிற்கு வெள்ளையடித்து, பழையதை ஒதுக்கி, மறுநாள் பொங்கலுக்காக, வீட்டையும் மாட்டுத் தொழுவத்தையும் ஒரு தொண்டாக சுத்தப்படுத்துவதும் உண்டு.

பொங்கலுக்கு அடுத்த நாள் மாட்டுப் பொங்கல். மாட்டுப் பொங்கல் அன்று மாடுகளை குளங்களிலோ, ஊரணிகளிலோ குளிப்பாட்டி, அதன் கொம்புகளுக்கு வர்ணமிட்டு, மாலை ஆறரை மணி அளவில் மாட்டுப் பொங்கலுக்கு பொங்கலிட்டு, படையலிட்டு பூஜைகள் செய்வதெல்லாம் உண்டு. அந்த பூஜைகள் இரவு ஏழு, எட்டு மணி வரை நீடிக்கும். ஏரி கலப்பைகளையும், மாட்டு வண்டிகளையும், நன்றாக துடைத்து சுத்தப்படுத்துவதும் உண்டு. 

இவையெல்லாம் படிப்படியாக குறைந்து, ஏதோ பொங்கல் என்று இன்றைக்கு நடப்பது மனதளவில் சோபிக்கவில்லை.  இருப்பினும் கால மாற்றம், பரிணாம மாற்றங்கள், உலக மயமாக்கல், தொலைக்காட்சிகள் என்ற நிலையில் பழைமையிலிருந்து இன்றைய பொங்கல் மாறுபட்டுவிட்டது. தமிழர்கள் தைத் திருநாளை பாரம்பரியமாக கொண்டாடுவது முக்கிய நிகழ்வாக நாட்டில் நடப்பதை எக்காலத்திலும்அழியாது என்ற நம்பிக்கை உள்ளது.

சில கிராமங்களில் மாட்டுப் பொங்கல் முடிந்து கரி நாள் அன்று நாட்டுப்புற தெய்வங்களான சிறுவீட்டம்மன் போன்ற தெய்வங்களின் உருவங்களை கோவில்பட்டி போன்ற நகரங்களில் செய்து கிராமத்தில் வைத்து இரண்டு வாரங்கள் முறையான பூஜைகள் செய்து இரண்டு வாரத்திற்குப் பிறகு, பெரிய கொண்டாட்டமாக, திருவிழாவாக, அந்த நாட்டுப்புற தெய்வங்களை ஊர் முழுக்க சுற்றி எடுத்து வந்து குளத்தில் கரைப்பது உண்டு. அன்றைக்குப் பெரும் திருவிழா. அந்த திருவிழாவில் கரகாட்டம், வில்லிசை, நாடகம், பாவைக் கூத்து போன்ற நிகழ்வுகளும் கிராமத்தில் விடிய விடிய நடக்கும்.  இதுவும் தைப் பொங்கலின் தொடர்ச்சி ஆகும்.

இப்படியான தொன்மையான நாகரிகத்தின் பழக்க வழக்கங்களை இந்த ஒரு பதிவில் சொல்லிவிட முடியாது.  

தைப் பிறந்தால் ஒரு நம்பிக்கை, ஒரு மகிழ்வு, ஒரு எதிர்பார்ப்பு. விவசாயிகளுக்கு தைப் பிறந்தால் வீட்டில் திருமணங்களோ, புது வீடு கட்டினால், புகுமனை விழாவோ என்பது நடத்துவது ஒரு வாடிக்கை.  அதனால்தான் தைப் பிறந்தால் வழி பிறக்கும் என்பதுண்டு.

கவிஞர் கண்ணதாசனோடு நெருங்கிப் பழகியவன். அவர், "நம்பிக்கை நம்பிக்கை" என்பார்.  அவர் சொல்கின்ற விதத்தைப் பார்த்தால், மனதளவில் ஒரு தைரியத்தை கொடுக்கும்.  அதைப் போல தை மாதம் நெருங்கிவிட்டால், தை பிறக்குது, எல்லாம் சரியாகிவிடும் என்பது நாட்டுப்புற நம்பிக்கை. இந்த நம்பிக்கையில்தான் இந்த மானிட வாழ்வே உள்ளது. அதற்கு அச்சாரமாக திகழ்வதுதான், தைப் பொங்கல் திருநாள், உழவர் திருநாள். நாம் அனைவரும் போற்றுவோம்.  

நம்பிக்கையில் நம்பிக்கையோடு பயணிப்போம். போலிகளை ஒதுக்குவோம். நல்லவற்றை அடையாளம் காண்போம்.  தைத் திருநாள் 
பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
ஞாயிறு போற்றுதும்..... ஞாயிறு போற்றுதும் ....
திங்கள் போற்றுதும் ...திங்கள் போற்றுதும் ...
மாமழை போற்றுதும்

#தமிழ்ப்புத்தாண்டு 
#தைத்திருநாள்
#பொங்கல்வாழ்த்துகள்
#ksradhakrishnanposting #ksrposting #pongal #தைப்பொங்கல்
கே.எஸ் . இராதாகிருஷ்ணன்
14/01/17

தை திருநாள்

போடா எல்லாம் விட்டுத்தள்ளு
பழச எல்லாம் சுட்டுத் தள்ளு
புதுசா இப்போ பிறந்தோமுன்னு
எண்ணிக்கொள்ளடா....டோய்!.
பயணம் எங்கே போனால் என்ன
பாதை நூறு ஆனால் என்ன
தோட்டம் வச்சவன் தண்ணீர் விடுவான்
சும்மா நில்லடா...டோய்!..
ஊதக் காற்று வீச உடம்புக்குள்ள கூச
குப்ப கூலம் பத்தவச்சி காயலாம் ஹே!..
தை பொறக்கும் நாளை விடியும் நல்ல வேளை 
பொங்கப்பாலு வெள்ளம் போல பாயலாம்
அச்சி வெல்லம் பச்சரிசி வெட்டி வச்ச செங்கரும்பு 
அத்தனையும் தித்திக்கிற நாள் தான்....ஹே

சொந்தங்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் தித்திக்கும் தை திருநாள் பொங்கல் மற்றும் மகர சங்கராந்தி நல்வாழ்த்துக்கள், அனைத்து மக்களும் எல்லா நலன்களும்,வளங்களும் பெற்று மகிழ்வாக வாழ வாழ்த்துக்கள்...

கிரா நூல்கள் வெளியிட்டு விழா

கிரா நூல்கள்  வெளியிட்டு விழா
-------------------------------
 மூத்த படைப்பாளி கிரா அவர்களின் ருசியான கதைகள் , கதைசொல்லி -கிரா குறிப்புகள் , பதிவுகள் , சங்கீத நினைவலைகள் , லீலை என்ற நான்கு நூல்கள்  இன்று(13/1/2017)மாலை   சென்னை புத்தக கண்காட்சி அரங்கில் வெளியிடபட்டன .

அன்னம் அகரம் பதிப்பகத்தின் சார்பில் நடைபெற்ற இவ்விழாவில்  
தமிழக மூத்த அரசியல் தலைவர் தோழர் ஆர் .நல்லகண்ணு அவர்கள் பங்கேற்று பேசியபோது,கிரா அவர்களுக்கும் இவருக்கும் உள்ள நட்பு  60 ஆண்டுகளுக்கு மேலான நட்பாகும் என கூறினார் .  பொதுவுடமை இயக்கத்தில் இருவரும் சேர்ந்து ஆற்றிய பணிகள் குறிப்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் அட்டையை மறைந்த சீனிவாச ராவ் அவர்களிடம் 60 ஆண்டுகளுக்கு முன்பாக கிரா பெற்ற போது அடைந்த மகிழ்ச்சி , விவசாய போராட்டங்களில் திருநெல்வேலி சதி வழக்கில் கிரா அவர்களுடைய பங்களிப்பு குறித்து விரிவாக பேசினார் . 

கோவில்பட்டி வட்டார கரிசல் மக்களின் குறைகளை நீக்க போராடும் அடியேனை 40 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே நன்கு தெரியும் நதிநீர் பிரச்னைகள், ஈழப்பிரச்சனை ,தமிழ்நாட்டு உரிமைகளுக்காக உச்சநீதிமன்றம் வரை சென்று போராடினார்  என்று  என்னை பாராட்டியது எனக்கு ஊக்கமும் மகிழ்ச்சியும் அளித்தது .

வெளயிடப்பட்ட கிராவின் நான்கு நூல்களை திறனாய்வு செய்து பேசிய சகோதரி கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன் அவர்களின் உரை அனைவரையும் ஈர்க்கும் வகையில் சிறப்பாக அமைந்தது . கிரா அவர்களின் ஐம்பது ஆண்டு படைப்பு உலகத்தை 1 மணிநேரத்தில் அற்புதமாக அரிய தகவல்களுடன் பேசியது நிகழ்ச்சிக்கு பெருமை சேர்ந்தது .ஏதோ ஒரு உறவும் உரிமையும் கிராவோடு இருப்பதாக சகோதரி கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன் அவர்களின் பேச்சில் தெரிந்தது.

அவருடைய தாய் மாமன் கழுகுமலை என்று சொன்னவுடன் எனக்கு மிக நெருங்கிய ஊரானதே அது என்று மனதில்பட்டது .கரிசல் இலக்கியத்திற்கு பாத்திகட்டி , நாற்று ஊன்றிய கிரா ,
கு . அழகிரிசாமி அவர்களின் வரிசையில் இன்றைக்கு உள்ள நவீன இலக்கிய உலகில்,பின் நவீனத்துவத்தில் கரிசல் இலக்கிய படைப்புகளை புதிய அணுகுமுறையில் படைக்கும்  சகோதரி தமிழச்சி போன்ற நண்பர்களை  கரிசல் வட்டார மக்கள் நன்றி பாராட்ட வேண்டும் .கிரா அவர்களின் நான்கு நூல்களை திறனாய்வு செய்து தமிழச்சி தங்கப்பாண்டியன் பேசியது போல வேற யாரும் பேசிட முடியாது என்று கருதுகிறேன் . அவரின் இந்த திறனாய்வு இசையின் சப்தசுவரங்கள் எழுவது  போல அமைந்தது .கதைச் சொல்லி சார்பில் அவருக்கு பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும
தெரிவித்துக்கொள்கிறேன்.

 அவரை தொடர்ந்து திரைபட கலைஞர்  சார்லி அவர்கள் கரிசல் வட்டார கோவில்பட்டி வலக்கு மொழி நடையில் மேடையில் பேசினார் . சாகித்திய அகாடமியில்  தாகூர்  பற்றி அற்புதமான ஆய்வு கட்டுரையை எழுதி அவர் வாசித்தார்  என்று கூறியது புதிய செய்தியாக இருந்தது .  1975 ஆம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே கிரா அவர்களுடன் தொடர்பு உண்டு என்பதை தெரிவித்தார் நடிகர் சார்லி . அவர் திரைப்பட துறைக்கு வராமல் இருந்திருந்தால் கரிசல் இலக்கிய பனடைப்பாளியாக இருந்திருப்பார் என்றால் மிகையாகாது . 

நிகழ்ச்சியை நல்லமுறையில்  கழனியூரான்ஒருங்கிணைத்தார் .
அன்னம்- அகரம் பதிபகத்தின் நிறுவனர் கவிஞர் மீரா அவர்கள் பேரறிஞர் அண்ணா , தலைவர் கலைஞர் அவர்களால் பாரட்டப்பட்டவர் .நவீன புதுகவிதைகளின் பிதாமகனாவார் கவிஞர் மீரா அவர்கள் . அவரின் புதல்வர்  கதிர்மீரா அனைவரையும் வரவேற்றார் . கிராவின் புதல்வர்  பிரபாகரன் நன்றி கூறானார் . அடியேன் இந்த பெருமைவாய்ந்த புத்க வெளியீட்டு விழாவிற்கு தலைமை தாங்கினேன் . 

புத்தக கண்காட்சி அரங்கில் இன்றைய மாலை  நேரத்த்தில் இந்த  நல்ல நிகழ்ச்சி அரங்கேறியது மனதிற்கு மகிழ்ச்சியாக அமைந்தது .
#கிராஜநாரயணன் 
#தமிழ்இலக்கியம்
#கரிசல்இலக்கியம்
#KSRposting
#KSRadhakirushnanpost
கே.எஸ் . இராதாகிருஷ்ணன்
13/01/17

கிரா நூல்கள் வெளியிட்டு விழா

கிரா நூல்கள்  வெளியிட்டு விழா
-------------------------------
நாளை 13/01/17 மாலை ஐந்து மணியளவில் சென்னை புத்தக கண்காட்சி அரங்கில் (பச்சயப்பா கல்லூரி எதிரில் ) தமிழ் இலக்கிய மூத்த படைப்பாளி கிரா அவர்கள் எழுதிய  ( ருசியான கதைகள் , கதைசொல்லி -கிரா குறிப்புகள் , பதிவுகள் , சங்கீத நினைவலைகள் , லீலை என்ற நான்கு நூல்கள் வரும் வெளியிடபடுகின்றன. 

மறைந்த கவிஞர் மீராவின் அன்னம் பதிப்பகம் மூலமாக கிராவின் நூல்கள் அனைத்தையும் கடந்த 40 ஆண்டுகளாக பதிப்பித்து வெளியிட்டு வருகின்றனர் . அவர் மறைவிற்கு பிறகு அவர் புதல்வன் கதிர் மீரா தொடர்ந்து இப்பணியினை ஆற்றி வருகின்றார் 

அன்னம் அகரம் பதிப்பகம் வெளியீட்டு விழா நிகழ்ச்சியில்

தமிழக மூத்த அரசியல் தலைவர் தோழர் ஆர் .நல்லக்கண்ணு , 

எழுத்தாளர் கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன் ,

திரைபட நடிகர் சார்லி , 

கவிஞர் கழனியூரான் 

கிரா .பிரபாகரன் 

மற்றும் அடியேனும் பங்கேற்கிறோம் . அவசியம் இந்த நூல் வெளியிட்டு விழாவிற்கு அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம் . அனைவரும் வருக !


உடலில் வலிமை....

உடலில் வலிமை இருந்தாலும் மனதில் அடிபட்டால் எல்லாமே தளர்ந்து போகும். பாரதத்தில் துரோணாசார்யரை ‘அசுவத்தாமன் இறந்தான்‘ என்று சொல்லி மனக்கலக்கம் அடையச் செய்து வென்றான் அர்ச்சுனன். 
மனச்சோர்வு வீரனையும் வாழாதிருக்க வைத்துவிடும்!
.......

தோல்விகளால்
சலித்து போகிறவனை
வெற்றிகள்
நெருங்குவதில்லை
........
இரத்தம் சூடாக இருக்கும் போது எவரையும் எதிர்க்கும் திறன் இருக்கும்... சூடு இறங்க இறங்க சாமானியனோடும் சமாதானம் செய்து கொள்ளத் தோன்றும்..
.......
உங்களை நிராகரிக்கப்பட்ட இடத்தில்,
உங்களை நிராகரிக்க முடியாத அளவுக்கு செயல்படுவதே உண்மையான வெற்றி...!!!

விவசாயிகள்

17 விவசாயிகள்,இது எப்படி ? 130 விவசாயகள்
அல்லவா...

விவசாயிகளுக்கு முதல்வர் அறிவித்துள்ள நிவாரணம் முறையாக பாதிக்கப்பட்டவர்களை சென்று சேர வேண்டும்....

இலவசம்...

தமிழக அரசு வழங்கும் இலவச வேஷ்டிகள்  திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவிலுக்கு அருகில் உள்ள கடைகளில் தமிழக அரசின் இலவச வேஷ்டி என்ற முத்திரையுடன்  விற்கபடுகிறது அதே போல் ஆந்திரமாநிலம் ஓங்கோலில் மறைந்த ஜெயலலிதா படத்தோடு அம்மா இலவச மின் விசிறி , மிக்ஸிகள் தாராளமாக விற்கபடுகிறது .

இந்த அரசு எப்படி மக்களை முட்டாள்களாக்குகின்றனர் என்பதற்கு இதைவிட என்ன சான்று வேண்டும் !

திராவிட இயக்கம்

திராவிட இயக்க அரசியலில் தந்தை பெரியார் நுழைந்த போது மகளிரின் பிரநிதியாக இருந்து மகளிரை வழிநடத்திய அலமேலு மங்கத்தாயார்அம்மாள்  அவர்கள் பற்றி எந்த வரலாற்று குறிப்புகளும் இல்லையே ஏன் ?

வெட்டி பேச்சுகளை

வெட்டி பேச்சுகளை மேடைகளில் பேசி தங்கள் வருவாயை பெருக்கி கொள்கிறவர்கள் தான் அரசியல் தலைவர் என்று நினைப்பது மடமை .இவர்கள் , திரைபட நடிப்பை போல  பேசி பேசி நாட்டை ஏமாற்றுகின்றனர் .

இந்த பாசங்கு மனிதர்களால் அரசியல் களத்திற்கோ  ,நாட்டுக்கோ ,மக்களுக்கோ எந்த பயணும் இல்லை இப்படி பட்ட சுயநலவாதிகள் பொதுவாழ்க்கையில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும் .
ஏற்ற இறக்க வசன பேச்சுகளை ரசிக்கலாம் .ஆனால் உரிமைகளை நிலைநாட்ட களப்பணிகள் தான் வேண்டும் .ஏட்டு சர்க்கரை தித்திக்காது.

ப்ரியா சகோதரிகள்

ப்ரியா சகோதரிகள் இன்றைய இசை உலகில் அறியபடுகின்ற ஆளுமைகளாவார்கள் . ஷண்முக ப்ரியா , ஹரி ப்ரியா என இரு சகோதரிகள் உச்சரிப்பும் சப்தஸ்வரங்களோடு உயிரோட்டத்தோடு பாடுகின்றனர். இவர்கள் பாடும் ஜீவன் கூடிய ரசனை ரசிகர்களை கட்டிப்போட்டு மெய்மறக்க செய்கிறது . இவர்கள் பாடும் அரங்கமே விறுவிறுப்போடு இயங்கும் .ப்ரியா சகோதரிகள் தமிழில் அற்ப்புதமாக ,உச்சரிப்புநயத்தோடு பாடுவதை பாராட்டவேண்டும் .
ப்ரியா சகோதரிகள் ஆந்திர மாநிலம் அமலா புரத்தில் பிறந்து இசையை கற்க சென்னைக்கு வந்தனர் . அறவே தமிழ் தெரியாது . ராதா –ஜெயலட்சுமி ஆகியோரிடம் இசையை பயின்று ; இந்தியா மட்டும் இல்லாமல் உலகெங்கும் இவர்களுடைய இசை கச்சேரிகள் நடக்கின்றன . இதற்க்கு பெரும் வரவேற்ப்பும் ஆதரவும் உண்டு . 
கடந்த பத்தாண்டுகளாக இவர்களுடைய இசை நிகழ்ச்சிகளை கவனித்தது உண்டு . வெகு ஜனங்கள் கண்டு ரசிக்கும் ஜனரஞ்சகமான நிகழ்வுகளாக இவர்களுடைய நிகழ்சிகள் அமைகின்றன .
ப்ரியா சகோதரிகள் அடிப்படையில் தமிழ் தெரியாமல் தினத்தந்தி நாளேடு ,சினிமா விளம்பர சுவரொட்டிகளை பார்த்து எழுத்து கூட்டி படித்து சுயமாகவும் ஆர்வத்தோடும் தமிழை கற்றனர் . இந்த ஆர்வம் அவர்களை அருமையாக கன்னல் தமிழில் பாட செய்தது . முன்டாசு கவி பாரதியின் பலபாடல்களை இவர்கள் பாடியுள்ளனர் . பாரதியின் பாடல்களில் கம்பீரமும் போர் குணமும் உண்டு . அந்த கம்பீரத்தை லாவகமாக கையாண்டு பாரதியின் பாடல்களை ப்ரியா சகோதரிகள் பாடும் போது நமக்கே உடலில் உள்ள மயிர்கால்கள் எழுந்து நிற்பது போல உணர்வு ஏற்படும் . பாரதி இன்று உயிரோடு இருந்திருந்தால் இவர்கள் பாடும் பாரதி பாடல்களைகேட்டு இதய சுத்தியோடும் மகிழ்ச்சியோடும் பாராட்டி இருப்பார் .
என்னுடைய கைபேசியின் கேட்க்கும் பாடலாக பாரதியின் நெஞ்சுக்கு நீதி ....என்ற ப்ரியா சகோதரிகள் பாடிய பாடலை வைத்து இருந்தேன் . தலைவர் கலைஞர் அவர்கள் என்னுடைய செல்பேசியில் என்னை அழைத்த போது என்னய்யா ? இந்த பாடல் நல்லா இருக்குய்யா ! இந்த குரல் யாருடையதுய்யா ?என்று கேட்டார் . தலைவர் கலைஞர் அவர்கள் ஏற்கனவே நெஞ்சுக்கு நீதியை எழுதியவர் . நான் ப்ரியா சகோதரிகள் என்றேன் .அதற்க்கு தலைவர் கலைஞர் அவர்கள் நல்லா இருக்குய்யா வளமான குரல் என பாராட்டினார் .
.தமிழ் தெரியாமல் தமிழகத்துக்கு வந்து ஆர்வத்தில் தமிழ் கற்று அருமையாக தமிழில் ப்ரியா சகோதரிகள் பாடுவதை நாம் பாராட்ட வேண்டாமா ?
@priyasisters
https://www.google.co.in/url…
https://www.google.co.in/url…
https://www.google.co.in/url…
https://www.google.co.in/url…
https://www.google.co.in/url…
https://www.google.co.in/url…
   #ப்ரியாசகோதரிகள் #priyasisters #கலைஞர் 
#KSRPOSTING #KSRADHAKIRUSHNANPOST
கே.எஸ் .இராதாகிருஷ்ணன் 
06/01/2017

விவசாயிகள் தற்கொலை,

இன்றைய தமிழ் இந்து நாளிதழில் (4/1/2016)விவசாயிகள் தற்கொலை,மன வேதனையிலும் மரணம்தொடர்பான என்னுடைய பத்தி வெளிவந்தள்ளது.
................
விவசாயிகளே! உரிமைகளுக்கு ஆழ உழுங்கள்

வழக்கறிஞர். கே.எஸ். இராதாகிருஷ்ணன்

 

தமிழகம் பெரும் வறட்சியில் வாடுகிறது; மரணத்தின் பிடியில் விவசாயிகள். கடந்த ஒன்றரை மாதங்களில் மட்டும் தமிழகத்தில் இந்தத் துயரத்தினால்91விவசாயிகள் 2 பெண் விவசாயிகளும் உட்பட தற்கொலை மற்றும் வேதனையில் மரணம் அடைந்தனர். தூக்கு கயிறு, விஷம் மருந்து, அதிர்ச்சி மாரடைப்பு என்ற வகையில் இந்த துயரங்கள் நடந்தேறியுள்ளன. நாகை மாவட்டத்தில் மட்டும் சமீபத்தில் 15விவசாயிகள் தற்கொலையிலும், கடன் தொல்லை வேதனையாலும் இறந்துள்ளனர்.  கடந்த 24.12.2016அன்று ஒரே நாளில் மூன்று விவசாயிகள் ரணத்தில் துடித்து மறைந்துள்ளனர். 
தொடர்ந்து ஒரு நாளில் ஐந்து விவசாயிகள் 31 /12/2016 அன்று 12 விவசாயிகள் துயரத்தால் இறந்தனர் இப்படியான வேதனைகள் தொடர்கின்றன .

இதுவரை கடந்த 26 ஆண்டுகளில் இந்திய அளவில் ஏறத்தாழ 6 லட்ச விவசாயிகளுக்கு மேல் தற்கொலையாலும், மன வேதனையாலும் இறந்துள்ளனர். 1995-லிருந்து 2013 வரை 2,96,438விவசாயிகள் புள்ளி விவரங்கள் தெரிவித்தாலும், விவசாயிகள் தற்கொலை 1980களிலிலே துவங்கிவிட்டது. மராட்டிய மாநில விதர்பாவிலும், ஆந்திரத்திலும், கர்நாடகத்திலும், சத்தீஸ்கரிலும், உ.பி. என வடபுலத்தில் நடந்தன. இந்த கொடுமை தமிழகத்தில் 2012-லிருந்து நடக்க தொடங்கியது. இதைத் தடுக்க மத்திய - மாநில அரசுகளும் எந்த நடவடிக்கை எடுக்க இயலவில்லை. 

தற்போது தமிழகத்தில் வறட்சி மழையில்லாமல் ஏற்பட்டுள்ளது. சராசரியாக 75% சதவீதம் மழை அளவு பொய்த்துவிட்டது. தமிழ்கத்து இந்த ஆண்டு தென்மேற்கு பருவ மழை 19%குறைவாகவும், வடகிழக்கு பருவ மழை61% சதவீதம் பொய்துவிட்டது என வானிலை அறிக்கை சொல்கின்றனர். மேலும், காவேரி நடுவர் மன்றத் தீர்ப்பு செயல்படுத்தவில்லை; முல்லை பெரியார், குமரி மாவட்ட நெய்யாறு,பாலாறு என அணைத்து தமிழக நதி நீர் ஆதாரங்கள் பிரச்னைகளில் இருப்பதாலும் விவசாயம் பாதிக்கப்பட்டது. குடிநீர் டேங்கர் லாரிகள் மூலமாக பயிர்களுக்கு நீர்பாசனம் செய்கின்ற அபத்தமான நிலை ஏற்பட்டுள்ளது .

செப்டம்பர் 20-ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டும், காவேரி டெல்டாவில் பயிர்கள் வாடி,வயல்வெளிகள் எல்லாம் பாளம் பாளமாக வெடித்துவிட்டன. நெல், கரும்பு, பருத்தி, ராகி, சோளம், நிலக்கடலை, மக்காச்சோளம், மரவள்ளிகிழங்கி, மிளகாய் பயிர் போன்ற அனைத்து பயிர்களும் வாடி தற்போது மாநிலம் முழுவதும் இதே நிலை. இதற்காக கடன் வாங்கி விவசாயி போட்ட தொகையும் வீனாகிபோய், வட்டி கட்ட முடியாமல் தவிக்கின்ற நிலைமை. பல லட்சக்கணக்கான ஏக்கர்கள் கையில் பணம் இல்லாமலும், மழை இல்லாமலும் தரிசாக விடப்பட்டது. விவசாயப்பணிகளுக்கு இவ்வாறான சிக்கலில் இருப்பதால் வேலைத் தேடி திருப்பூர், கோவை, சென்னை என்று மட்டுமல்லாமல் பம்பாய், டெல்லி சென்று போகும் அவல நிலை. 

தீவன பற்றாக்குறையால் தென் மாவட்டத்தில், கால்நடைகளை கேரளத்திற்கு அடிமாட்டு விலைக்கு நஷ்டத்தில் விற்று வருகின்றனர். குடிநீரும் பற்றாக்குறை, நிலத்தின் நீர் மட்டமும் குறைந்து விட்டது. இப்படியான நிலைமை இருந்தால் விவசாயம் எதிர்காலத்தில் கேள்வி குறியாகிவிடும். 

இந்த நிலைமைகளை போக்க, மத்திய - மாநில அரசுகள் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள்;  

1. தமிழகத்தில் வறட்சி மாநிலமாக அறிவித்து நிவாரணப் பணிகளை போர்கால அடிப்படையில் உடனடியாக தொடங்க வேண்டும்.

2. கருகிப் போன பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். நெல் ஏக்கர் ஒன்றுக்கு 25 ஆயிரமும், கரும்புக்கு ஏக்கர் ஒன்றுக்கு 50 ஆயிரமும், நிலக்கடலை, மக்காச்சோளம் போன்ற மாணாவாரி பயிர்களுக்கு ஏற்றவாறு இழப்பீடு விவசாயிகளுக்கு மாநில அரசு இழப்பீடு அளிக்க வேண்டும்.

3. தற்கொலையாலும், வேதனையாலும் மரணமடைந்த விவசாய குடும்பத்திற்கு உரிய நஷ்டயீடு அரசு வழங்கிட வேண்டும்.

4. கூட்டுறவு, தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய பயிர் கடன்களை அறவே தள்ளுபடி செய்ய வேண்டும்.

5. ஜப்தி நடவடிக்கைகளை மாநில அரசு விவசாயிகள் மீது ஏவக்கூடாது-

6. முடங்கி போன கூட்டுறவு வங்கிகளை இயங்கக்கூடிய வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

7. வறட்சி காரணமாக தரிசாக போட்ட நிலங்களில் ஏக்கர் ஒன்றுக்கு 5,000ரூபாய் இழப்பீடு மாநில அரசு வழங்க வேண்டும்.

8. கால்நடைகளுக்கு தேவையான தீவனங்களை எளிதில், மலிவான விலையில் கிடைக்க ஏற்பாடுகளை மாநில அரசு செய்ய வேண்டும்.

9. கரும்பு விவசாயிகள் ஆலைகளுக்கு அனுப்பிய கரும்புகளுக்கு உரிய பணம் ஆலை நிர்வாக தராமல் நீண்ட காலமாக பாதிக்கப்பட்டுள்ளனர். கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 228கோடி ரூபாயும், தனியார் சர்க்கரை ஆலையில் 1100 கோடி ரூபாயும் விவசாயிகள் தரவேண்டிய பாக்கி இப்பவும் நிலுவையில் உள்ளது. இவ்வளவு பெரிய தொகையை நிலுவையில் வைத்துக் கொண்டு கரும்பு ஆலை நிர்வாகங்கள் விவசாயிகளை பல ஆண்டுகளாக வாட்டி வதைப்பதை போராடி பார்த்தும் எந்த தீர்வும் கிடைக்கவில்லை. கரும்பு விவசாயிகள் இனி ஆலைகளுக்கு விற்க மாட்டோம் யார் வேண்டுமானாலும் வெட்டி எடுத்துச் செல்லுங்கள் என்று தண்டோரா அடிக்கின்ற நிலைக்கு தள்ளப்பட்டன. இப்படியும் பரிதாபநிலை.

10. விவசாய உற்பத்தி பொருள்களுக்கு நியாயமான விலை கிடைக்கவேண்டும். உதாரணத்திற்கு, பருத்தி விவசாயிகள் உற்பத்தி செய்கின்ற செலவுக்கான லாபம் கிடைப்பதில்லை. அப்படியே பருத்தி ஆலைகளுக்கு அளித்தாலும் உடனடியாக அதற்கான பணமும் கிடைப்பதில்லை. விவசாயிகளுக்கு காசோலை மட்டும் தருகின்றார்கள். விவசாயிகளுக்கு காசோலை பற்றி என்ன தெரியும்? விவசாயி அதற்கு தனியாக வங்கி கணக்கு ஆரம்பித்து அந்தக் காசோலையும் திரும்பி வரும்போது நீதிமன்றத்திற்கு செல்லவேண்டிய அவலநிலை.

11. ஏரி, குளங்கள், பாசனா வாய்க்கால்களை தூறு வார வேண்டும். 

12. உடனடியாக மத்திய அரசிலிருந்து வறட்சி நிவாரண பணிகளுக்கு ஆன செலவை மத்திய அரசிடம் கோரிக்கை வைத்து உடனே பெற வேண்டும்.
விவசாயிகளின் பொருளாதார -சமூகப் 13.பிரச்சனைகளை ஆய்வு செய்ய மாநிலவாரியாக குழுக்களை அமைத்து உண்மைகளை அறிந்து அதன் பரிந்துரைகளை நடைமுறைப் படுத்தவேண்டும்.

இந்தக் கோரிக்கைகள் நிறைவேறினால் தான் விவசாயமும், விவசாயிகளும் பாதுக்காக்கப்படுவார்கள்.

நாட்டின் முதுகெலும்பான விவசாயத்திற்கு உரிய அக்கறை நாம் எடுத்துக் கொள்ளவில்லை. நேரு காலத்திலிருந்தே தொழிற்சாலைகளுக்கு அளித்த முக்கியத்துவம்  விவசாயத்திற்கு காட்டவில்லை. அதே நிலைதான் இன்றும் தொடர்கிறது. ஐந்து ஆண்டு திட்டம் என்று ரஷ்யாவின் கொள்கையை நேரு சில மாற்றங்களோடு கையாண்டார். அதன்  விளைவாக தொழிற்சாலைகளை நிர்மாணித்த மாதிரி விவசாயத்தை பிராதனமாக கருதாமல் புறக்கணித்தால் படிப்படியாக விவசாயம் தோய்ந்து போனது. இதனை வட இந்திய தலைவர்களான சரண்சிங், மோகன் தாரியா இந்தப் போக்கை கடுமையாக எதிர்த்தனர். ஜெயபிரகாஷ் நாராயணனும், நேருவின் இந்த அணுகுமுறையை கண்டித்தார். நாட்டு விடுதலைக்கு பின்பு, உத்தமர் காந்தியும் அவர் சகாக்கள் ஜே. குமரப்பா, கிருபளானி, பட்டவர்தன் போன்றவர்கள் கிராமிய பொருளாதாரத்திற்கும், சுயபூர்த்தி விவசாயத்திற்கும் குரல் கொடுத்தனர். கிராமங்கள் தான் உண்மையான இந்தியா. விவசாயிகள் முன்னேற்றத்திற்கு கிராம ராஜ்ஜியமும், கூட்டுறவும் அடிப்படை காரணிகள் என்று அப்போதே கூறினார்கள். அந்தக் கருத்துக்கள் தான் இன்றைய கிராம சபைகள் :  ராஜுவ் பிரதமராக இருந்த போது சட்டத்திருத்தங்களை மேற்கொள்ளப்பட்டு கிராம சபைகள் நிறுவப்பட்டன.

விவசாயிகளின் போராட்டம் புதியது அல்ல. விடுதலைப் போராட்டத்தின் போது வங்கத்தில் அவுரி விவசாயிகள் போராட்டம், கேரள விவசாயிகள் போராட்டம் நடந்தது. தமிழகத்தில் முதல் முறையாக பிரிட்டிஷ் ஆட்சி காலத்தின் போது நெல்லை மாவட்டம் கடம்பூரைச் சேர்ந்த ஒரு விவசாயி துப்பாக்கி சூட்டில் பலியானார். வேர்வையை விதைத்து வேதனையை அறுவடை செய்யும் விவசாயிகளுக்கு யார் ஆறுதல் சொல்ல? 

விவசாயிகளின் பொருளாதார -சமூகப் பிரச்சனைகளை ஆய்வு செய்ய மாநிலவாரியாக குழுக்களை அமைத்து உண்மைகளை அறிந்து அதன் பரிந்துரைகளை நடைமுறைப் படுத்தவேண்டும்.
தமிழகத்தில் 1970 இறுதியிலும் 1980களிலும்  விவசாயப் போராட்டம் சி. நாராயண சாமி நாயுடு தலைமையில் கிளர்ந்து விட்டு எழுந்தன. கிருஷ்ணசாமி கவுண்டர் போன்றவர்கள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றனர். தமிழகத்தில்  நடந்த போராட்டங்களில் 1972லிருந்து 1992வரை காவல் துறை துப்பாக்கி சூட்டில் 50க்கு மேற்பட்ட விவசாயிகள் சாகடிக்கப்பட்டனர். கோவில்பட்டி, குருஞ்சாக்குளம், சாத்தூர், வெத்தலையூரணி, வேடசந்தூர், திருவண்ணாமலை, திருத்தனி, பெத்தநாயக்கன் பாளையம், கோவை என பல இடங்களில் துப்பாக்கி சூட்டில் விவசாயிகள் சாகடிக்கப்பட்டனர். தமிழகமே விவசாயிகள் போராட்டத்தில் அப்போது கொந்தளித்தது. பொது உடைமை கட்சியை சார்ந்த விவசாய சங்கங்களும் கோவில் பட்டி எஸ். அழகிரி சாமி, ஆதிமூலம் மற்றும் வீரய்யன் தலைமையில் தமிழகம் முழுவதும் போராட்டத்தை நடத்தினர். இதே காலகட்டத்தில் உத்திரபிரதேசம், அரியானா, பஞ்சாப், ராஜஸ்தான், டெல்லி பகுதிகளில் திக்காயத், மராட்டியத்தில் சரத் ஜோஷி, ஆந்திரத்தில் செங்கால் ரெட்டி, கர்நாடகத்தில் நஞ்சுண்ட சாமி போன்றோர்கள் எழுச்சி மிக்க போராட்டங்களை நடத்தினர். தற்போது தமிழகத்தில் விவசாய சங்கங்கள் எழுச்சி போராட்டங்ளை நடத்த முடியாமல் வலுவிழந்து இருப்பது வேதனையான விடயம்.

 பலர் ஆளுமைகள் முன்னெடுத்த இந்தப் போராட்டம்; இன்றைக்கு விவசாயிகள் பல குழுக்களாக ஆகிவிட்டனர். டெல்டா பாசன விவசாயிகள், கரும்பு விவசாயிகள், மஞ்சள் விவசாயிகள், ரப்பர் விவசாயிகள், தேயிலை விவசாயிகள் என பல பிரிவுகளாக பிரிந்ததால் விவசாயிகளுடைய முந்தைய வீரியம் இல்லாத காரணத்தினால் ஆளவந்தார்களுக்கு விவசாயிகளின் மேல் இருந்த அச்சமும், அக்கறையும் போய்விட்டது. தன்னலம் மற்ற அப்பாவி சம்சாரிகளுக்கும்  இந்த அரசியல் சூழல் புரியாமல் இருப்பதுதான் வேதனையாக உள்ளது.

விவசாய வீட்டில் பிறந்து, நாராயணசாமி நாயுடு காலத்தில் நீதிமன்றத்திலும் மாணவர்களிடையே விவசாய அமைப்புகளை அமைத்து போராடியவன் என்ற நிலையில் இன்றைய விவசாயின் ஒற்றுமையின்மையை பார்க்கும் போது, கவலை தருகின்றது.  விவசாயிகளே! உங்களின் சுயமரியாதையும், எழுச்சியும், மலர்ச்சியும் திரும்பக் காண வேண்டும். நீங்கள் வாழ்ந்தால்தான் கிராமங்கள் வாழும், நாடும் வாழும். எப்படி வயல்வெளி ஆழ உழுகின்றீர்களோ, அதைபோல உங்கள் உரிமைகளை பெற ஆழ உழுங்கள். நிச்சயமாக கால, தேச வர்த்தமான்கள் உங்களை பார்த்து சலியூட் அடிக்கும்.

 அனைத்து விவசாயிகளே ஒன்று கூடுங்கள்; போராடுங்கள்; உங்கள் நியாயமான உரிமையை பெறுங்கள்; நீங்கள் தான் நாட்டின் பிதாமகன்கள்.

இந்த பத்தியாளர்,

வழக்கறிஞர், விவசாயி, இணையாசிரியர் - கதைச்சொல்லி, நூலூாசிரியர்.

rkkurunji @gmail.com

இலங்கை

அண்மையில் நியூயோர்க்கில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபைக்குள்ளே இலங்கை மற்றும் இந்திய தூதரகங்கள் இணைந்து கூட்டமொன்றை நடாத்தி முடித்துள்ளன.
அந்த கூட்டத்திலே அறுபதிற்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
நடைபெற்ற கூட்டத்திலே இலங்கை அரசினால் தெரிவிக்கப்பட்ட விடயங்களாவன.

#இலங்கையில் தற்போது இனங்களுக்கிடையே அமைதி நிலவுகிறது.
#புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகளுக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்டு சுதந்திரமாக வாழ்கிறார்கள்.
மாவீரர்தினம் சுதந்திரமாக அனுஷ்டிக்கப்பட அனுமதிக்கப்பட்டிருக்கிறது.
இலங்கை பாராளுமன்றத்திலே தமிழர் தரப்பே எதிர்கட்சியாக இருக்கிறது.
#மீள்கட்டமைப்பு பணிகளிலே இராணுவமே முன்னின்று பணியாற்றுகிறது.
இராணுவ கட்டுப்பாட்டிலிருந்த கணிசமான நிலப்பரப்பு பொதுமக்களிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.
கடந்த அரசாங்கத்தை விடவும் தற்போதைய அரசானது தமிழர் விவகாரங்களுக்கு முக்கியத்துவமளித்துவருகிறது.
பொறுப்புக்கூறலுக்கான செயற்திட்டங்களை மேற்கொண்டிருப்பதால் அதற்கு தமக்கு வருகின்ற மார்ச் மாதத்திலிருந்து 18 மாதங்கள் தேவைப்படுவதாகவும் அதாவது 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதம்வரை கால அவகாசம் வழங்க வேண்டுமென்றும் அத்துடன் அதற்காக தமக்கு நிதியுதவிகள் வழங்கவேண்டுமென்றும் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்கள்.

கட்டபொம்மன்

அஞ்சா சிங்கம் கட்டபொம்மன் பிறந்தநாள் பதிவு
______________________________________________(
மிள் பதிவுகள் ) 20/8/2013

இன்றைக்கு எங்கள் தெற்குச் சீமையின் வீரத்தின் இலக்கணமாக திகழ்கின்ற வீரபாண்டிய கட்டபொம்மனின் பிறந்த 
நாள்.  காலையிலிருந்து பல்வேறு பணிகளில் இருந்ததால் அவரை குறித்து விரிவான பதிவுகள் உடனடியாக செய்ய 
முடியவில்லை. நான் பதிப்பாசிரியராக கொண்டு உயிர்மை பதிப்பகம் வெளியிட இருக்கின்ற ஜெகவீர பாண்டியனாரின் 
'பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம்' இன்ற இரண்டு பகுதிகள் அடங்கிய விரிவான நூலுக்கு நான் எழுதிய பதிப்பாசிரியர் 
உரையிலேயே கட்டபொம்மனின் பராக்கிரமத்தை அறிந்துகொள்ளலாம். 

செம்பதிப்பாக திருநெல்வேலி ஓவியர் வள்ளிநாயகத்தின் அட்டைப் படத்தோடு, தலைவர் கலைஞர், கி.ரா., மாலன் 
ஆகியோரின் அணிந்துரையோடு வெளியாக இருக்கின்றது. 

இத்தோடு கட்டபொம்மன் திரைப்படத்தை சிவாஜி கணேசன் நடித்தபோது, இராஜஸ்தான் மாநிலத்தில் படப்பிடிப்பு 
காட்சிகளில் சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் இணைந்த அரிய புகைப்படமும், அதன் வெற்றி விழாவில் தலைவர் 
கலைஞர் அவர்கள் கலந்துகொண்ட கருப்பு வெள்ளை புகைப்படங்களும் இன்றைக்கும் மனதை ஈர்க்கின்றன. 

எனது பதிப்பாசிரியர் உரை வருமாறு:  
பார் புகழும் பாஞ்சாலங்குறிச்சியின் மாண்புகள்!
_____________________________________

 
பண்டிதமணி ஜெகவீரபாண்டியனாரின் 'பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம்' 1954 வரை இரண்டு பதிப்புகளாக வந்து, 
மூன்றாவது பதிப்பு செம்பதிப்பாக உயிர்மை பதிப்பகத்தின் சார்பில் நண்பர் மனுஷ்ய புத்திரனின் சீரிய முயற்சியில் 
வெளிவர இருக்கின்றது. இந்த நூல் தலைவர் கலைஞர் அவர்களின் ஆட்சியில் நாட்டுடமை ஆக்கப்பட்டுள்ளது என்பது 
மகிழ்ச்சியான செய்தியாகும். இந்த நூலுக்கு அற்புதமான வாழ்த்துரை வழங்கிய தலைவர் கலைஞர் அவர்களை 
நன்றியோடு வணங்குகிறோம். அடியேன் பொதிகை-பொருநை-கரிசல் என்ற அமைப்பை எட்டு ஆண்டுகளுக்கு முன்பு 
அமைத்தபொழுது முதற் பணியாக வீரபாண்டிய கட்டபொம்மனின் புகழ் சொல்லும் பாஞ்சாலங்குறிச்சி வீர 
சரித்திரத்தை வெளியிட வேண்டும் என்று முயற்சிகளை மேற்கொண் டோம். வீரபாண்டிய கட்டபொம்மனின் வீரமும் 
பராக்கிரமும் ஆளுமையும் வெள்ளையர் களை அஞ்ச செய்த பெருமைகளையும் சொல்லித் தெரிய வேண்டிய தில்லை.
கெட்டிபொம்மு என்று அழைக்கப்பட்டு, காலப்போக்கில் கட்டபொம்மன் என்று பெயர் வழங்கப்பட்டது. தந்தை ஜெகவீர 
கட்டபொம்மனுக்குப் பின்பு 1790 பிப்ரவரி 2ஆம் தேதி 30 வயதில் மன்னனாக முடிசூட்டப்பட்டார். வீரபாண்டிய 
கட்டபொம்மனுக்கு தளவாய் குமாரசாமி (ஊமைத்துரை), துரைசிங்கம் (சுப்பையா) என்ற தம்பியர் இருவர் இருந்தனர். 
வீரபாண்டிய கட்டபொம்மனின் மனைவி வீர சக்கம்மாள் ஆவார். கட்டபொம்மன் தமது முப்பதாம் வயதில் 
பாஞ்சாலங்குறிச்சியின் அரசர் ஆனார். தம்பியர் இருவரை இளவரசர்களாகவும், தனக்கு அமைச்சராகச் 
சிவசுப்பிரமணியம் பிள்ளை, தளபதியாக வெள்ளையத்தேவனை நியமித்தார். வீரர் சுந்தரலிங்கம் கட்டபொம்மனின் 
அணியில் இருந்து சாதனைகள் படைத்தார்.

கட்டபொம்மனின் பாஞ்சாலங்குறிச்சிப் பாளையத்தில் முதலில் 96 ஊர்கள் இருந்தன. அவை ஆறு பகுதிகளாகப் 
பிரிக்கப்பட்டன. அவை கவுனகிரி, பசுவந்தனை, புதியம்புத்தூர், ஆதனூர், வேடநத்தம், பட்டணமருதூர் என்பனவாகும். 
இவைகளைக் காக்க தளக்காவல், திசைக்காவல் படைகளைக் கட்டபொம்மன் திறம்பட அமைத்து செயல்பட்டார். 
இதனால் வழிப்பறி, கொள்ளை, கொலை முதலிய குற்றங்கள் குறைந்தன. மதுரை நாயக்கர் காலத்தில் ஏற்படுத்தப்பட்ட 
எழுபத்திரண்டு பாளையங்களில் திருநெல்வேலிச் சீமையில் மட்டும் முப்பது பாளையங்கள் இருந்தன.  அவையும், 
மற்ற பாளையங்களும் இவரிடம் தொடர்பு கொண்டு இவருக்கு இணங்கி நடந்தன. பாளையங் களுக்குள் ஏற்படும் 
குழப்பங்களையும், பிறங்கடையுரிமைப் போர்களை யும் கட்டபொம்மன் தீர்த்து வைப்பார். நாயக்க மன்னர்களும் 
கட்டபொம்மன் மரபினருக்கு மதிப்பளித்தனர்.

இக்கால முறைப்படி இவரிடமிருந்த வீரர்கள் வரிசைப்படுத்தப்பட்டி ருந்தனர். இவரிடம் 6,000 நாயக்க வீரர்களும், 5,000 
மறவர்களும், 3,000 பிறவினத்தவரும் பட்டாணியர், கவுண்டர், கவரையர், வலையர் முதலிய இனத்தைச் சேர்ந்த 
வீரர்களும் இருந்தனர். வாள், வேல், வல்லயங்கள், கம்புகள் ஆகிய படைகள் வகைக்கு ஆறாயிரம் வில், கவண் 
முதலிய படைகளுமாக மொத்தம் இருபதாயிரத்திற்கும் மேலிருந்தன. குதிரைகளும், யானைகளும், ஒட்டகங்களும், 
காளைகளும், செம்மறிக் கிடாய்களும், வேட்டை நாய்களும் கூட இவர் படையில் இருந்தன. எண்பது கோட்டைகள் 
இவருடைய ஆளுமையிலிருந்தன.

ஆங்கிலேயர் கி.பி.1792இல் ஆர்க்காட்டு நவாபுக்கு உட்பட்டிருந்த திருச்சி, திருநெல்வேலிப் பகுதிகளிலிருந்த ஊர்களில் 
வரித்தண்டல் செய்துகொள்ளும் உரிமையைப் பெற்றனர். தண்டலுக்கு ஏற்ற வகையில் இப்பகுதிகளிலிருந்த நிலங்கள் 
முழுவதும் அளக்கப்பட்டதோடு, தரம் பிரிக்கப்பட்டு ஒதுக்கீடும் செய்யப்பட்டது. இந்த ஒதுக்கீட்டில் ஆங்கிலேயருக்கு 
அடங்கி நடப்பவர்கள் பெரிதும் நன்மையடைந்தனர். இப்பணியை மேற்கொண்ட படைத்தளபதி லெப்டினென்ட் கர்னல் 
மேச்சுவல் என்பவர் பாஞ்சாலங்குறிச்சிக்கு உட்பட்டிருந்த ஆதனூர் பகுதியிலிருந்த அருங்குளம், சுப்பலாபுரம் ஆகிய 
இரண்டு ஊர்களை எட்டயபுரத்து எட்டையப்பனுக்குக் கொடுத்துவிட்டார். இந்நிகழ்ச்சியி லிருந்தே கட்டபொம்மனுக்கும் 
ஆங்கிலேயருக்கும் பகைமை மூண்டது. மேலும், கட்டபொம்மன் பிற பாளையக்காரர்களைப் போல் ஆங்கிலே 
யர்களைக் கண்டு வணங்காமலும், ஆறு ஆண்டுகள் வரி கொடாமலும் இருந்து வந்தார். இது பகையை மேலும் 
வளர்த்தது. ஆங்கிலேயர்கள் மைசூர்ப் போர்களிலும், வங்காளப் போர்களிலும், கருநாடகத்திலும், மராட்டியத்திலும் எந்த 
எதிர்ப்புமின்றி வளர்ச்சியடைந்தனர். மூன்றாம் மைசூர்ப் போருக்குப் பின் 1792இல் சீரங்கப்பட்டணத்தில் ஏற்பட்ட 
உடன்படிக்கைக்குப் பின்னரே ஆங்கிலேயர்கள் தமிழகத்தின் மீது ஆளுமை பெற்றனர். 1785இல் இராமநாதபுரமும் வேறு 
சில இடங்களும் இவர்களின்கீழ் வந்தன. மணப்பாறையை ஆண்ட இலக்குமண நாயக்கருடைய பாளையமும் 
ஆங்கிலேயரால் கைப்பற்றப்பட்டது. பழநி பாளையக்காரர் திண்டுக்கல் கோட்டையில் சிறை வைக்கப்பட் டார். 1796இல் 
சங்கம்பட்டி, மடூர், ஏற்றி வடூர் முதலிய ஊர்களையும் ஆங்கிலேயர் கைப்பற்றினர். இவ்வாறு ஏதாவதொரு குற்றம் 
சாட்டப் பெற்றுப் பாளையங்கள் பலவற்றையும் ஆங்கிலேயர் கம்பெனி ஒடுக்கும் ஆணைகளை இட்டதோடு ஒடுக்கி, 
அடக்கும் செயல்களைத் தொடர்ந்து மேற்கொண்டது. பாளையக்காரருக்கு முதுகெலும்பாக விருந்த மைசூரும் (ஐதரும், 
திப்புவும்) கடைசியாக நான்காம் மைசூர்ப் போரில் (1799) ஒடுக்கப்பட்டுவிட்டது.

கட்டபொம்மன் கிஸ்தி வசூலிக்க வந்த மாக்ஸ்வெல், ஆலன் ஆங்கிலேயரை எதிர்த்தது வரலாற்றில் இடம்பெற்றுள்ளது. 
ஆங்கிலேய ருக்கு ஆதரவாகவும் கட்டபொம்மனுக்கு எதிராகவும் இருந்த எட்டயபுரம் எட்டப்பனுக்கு அதிகாரம் 
வழங்கப்பட்டது. 1798இல் நெல்லைக்கு கலெக்டராக வந்த ஜாக்ஸன் தன்னைச் சந்திக்க கட்டபொம்மனைக் 
கேட்டபொழுது, கலெக்டருடைய உத்தரவைக் கட்டபொம்மன் தூக்கி எறிந்தார்.

கட்டபொம்மன் பிற பாளையக்காரர்களைப் போல் திறை செலுத்தாமல் வாழ்வதே தன் பிறப்புரிமை என்றார். வானம் 
பொழி கிறது;  வையகம் விளைகிறது;  உனக்கேன் திறை செலுத்துவது என்பதே அவருடைய வினா. ஆனால், 
ஆங்கிலேயர்கள் 1792லிருந்து 1798 வரை தங்களுக்குப் பாஞ்சாலங்குறிச்சிக் கட்டபொம்மன் 3,300 பகோடா கிஸ்தி 
செலுத்த வேண்டுமென்று பல நினைவூட்டல் அறிக்கைகளையும், மடல்களையும், தூதுவர்களையும் அனுப்பிக் 
கேட்டனர். ஆலன், பெயருக்காவது சிறு தொகையைக் கொடுக்குமாறு கேட்டும் கட்டபொம்மன் மறுத்தார்.
1799இல் நான்காம் மைசூர்ப் போர் நடந்து கொண்டிருந்தது. ஆங்கிலேயப் படைகள் அப்போருக்கு அனுப்பப்பட்டிருந்தன. 
திருநெல் வேலியில் கலெக்டராக இருந்தவர் ஜாக்ஸன். 1798ஆம் ஆண்டு ஆகஸ்டு திங்களில் வீரபாண்டியனைத் 
தன்னைக் காணுமாறு ஜாக்ஸன் கூறினார். கட்டபொம்மன் தன் பரிவாரம் சூழ ஜாக்சனைக் காணச் சென்றார். ஆனால், 
ஜாக்சன் அவருக்கு நேர்காணல் (பேட்டி) கொடுக்க மறுத்து, காலந்தாழ்த்தம் செய்தவண்ணம் குற்றாலம், சொக்கம்பட்டி 
ஆகியவிடங்களைப் பார்வையிட்டு, இராமநாதபுரம் சேர்ந்தார். கட்டபொம்மனும் தம்பியர் ஊமைத்துரையும், 
துரைசிங்கமும் அமைச்சர் சிவசுப்பிரமணியப் பிள்ளையும் படையில் ஒரு பகுதியும் ஜாக்சனைப் பின்தொடர்ந்து 23 
நாட்கள் நடந்து, 400 கல் தொலைவைக் கடந்து இராமநாதபுரத்தை அடைந்தனர். கட்டபொம்மன் கடைசியாக 
ஜாக்சனைச் சந்திக்க நேரும்போது திடீரென அவரைச் சிறைபிடிக்க ஜாக்சன் முயன்றார். வீரபாண்டியன் தப்பினார். 
ஆனால், அமைச்சர் சிவசுப்பிரமணியப் பிள்ளை மட்டுமே சிறைப்பட்டார். சென்னை ஆங்கிலேயக் கம்பெனியினர் 
அமைச்சர் பிள்ளையைப் பின்னர் விடுதலை செய்து, ஜாக்சனை வேலை நீக்கம் செய்தனர். லூசிங்டன் திருநெல்வேலி 
கலெக்டராக அமர்த்தப்பட்டார்.

நான்காம் மைசூர்ப் போர் மும்முரமாய் நடந்து கொண்டிருந்தது. கட்டபொம்மனின் நிலையைப் பிற பாளையக்காரர்கள் 
நோக்கினர். ஆங்கிலப் படைகள் தென்பாண்டி நாட்டிலிருந்து மைசூர்ப் போரில் ஈடுபட்டிருக்கும் இந்தச் சமயத்தில் 
பாளையக்காரர்களின் கூட்டணிப் படைகளைத் திரட்டித் தமிழகத்திலிருந்து ஆங்கிலேயரை அடியோடு விரட்டத் 
திட்டமிட்டனர். இதில் தீவிரமாகப் பங்கேற்றவர்கள் சிவகங்கை மருதுபாண்டியரும் திண்டுக்கல் கோபால நாயக்கரும் 
ஆனைமலையை ஆளும் நாயக்கரும் ஆவர். 1797லேயே மருதுபாண்டிய ரால் பல பாளையங்களின் கூட்டணிப் படைகள் 
அமைக்கப்பட்டு விட்டன. நாகலாபுரம், மன்னார்கோட்டை, கோலார்பட்டி, செந்நெல் குடி ஆகியவை ஒன்றுகூடி ஒரு 
கூட்டணி அமைத்திருந்தன. கட்ட பொம்மன் இவ்வணிக்குத் தலைமை தாங்கும்படி கேட்டுக் கொள்ளப் பட்டார். 
கள்ளர்களும் இவர்கீழ் ஒன்று கூடினர். சென்னையில் ஆங்கிலேயக் கம்பெனியின் நடவடிக்கைகளைக் கவனித்து செய்தி 
யனுப்ப கட்டபொம்மனின் அமைச்சர் சிவசுப்பிரமணியரின் தம்பி, பாண்டியப் பிள்ளை அனுப்பப்பட்டார். கட்டபொம்மன் 
இத்தகைய மறைமுகக் கூட்டணி செயல் படுவதற்கு பாஞ்சாலங்குறிச்சியை விட, மேற்கு மலைத் தொடர்ச்சியின் 
அடியிலுள்ள சிவகிரியே சிறந்ததெனக் கொண்டு அதனையும் தன் கூட்டணியில் சேர்த்தார். ஆங்கிலேயரிடமிருந்து 
சிவகிரி புரட்சிக்காரருக்குத் தலைமை இருக்கையாகப் போவதை எப்படியோ ஆங்கிலேயர் உணர்ந்து கொண்டனர். 
அதனை முதலில் கைப்பற்றி அங்கு தங்களின் தலைமை யிடத்தை அமைக்கப் புரட்சிக்காரர்களின் கூட்டணிப் படைகள் 
புறப்பட்டன.

இதனையறிந்த வெல்லெசுலி, தஞ்சை, திருச்சி, மதுரை ஆகிய இடங்களிலிருந்த ஆங்கிலப் படைகளைத் திருநெல்வேலி 
நோக்கி அணிவகுத்துச் செல்லும்படி ஆணை யிட்டார். தளபதி பானர்மேன் தலைமையில் ஆங்கிலப்படையினர் 1799 
ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 5ஆம் தேதி பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டையை முற்றுகையிட்ட னர். 300 அடி அகலமும் 
500 அடி நீளமுள்ள அக்கோட்டையை ஆங்கிலப் படைகள் முற்றுகையிட்ட பின்பு இராமலிங்க முதலியார் என்பவர் தூது 
செல்வதுபோல் உளவு அறியச் சென்றார். கட்ட பொம்மனைக் கண்டபின், பானர்மேனுக்குக் கோட்டை யின் 
உள்ளமைப்பையும் மற்ற ரகசியங்களையும் கூறிவிட்டார். எட்டப்பனும் திருவிதாங் கூராரும் ஆங்கிலேயருடன் சேர்ந்து 
கொண்டனர். பாளையக்காரர் படைகளுக்கு ஊமைத்துரை தலைமை தாங்கினார்.

ஆங்கிலப்படைகளைத் துச்சமெனக் கருதி ஊமைத்துரை போரிட்டார். ஊமைத்துரையிடம் இராமசாமி என்பவரைத் 
தூதனாக அனுப்ப ஆங்கில படைக்குத் தலைமையேற்ற அக்கனியூ மேஜர் முயற்சி எடுத்தபொழுது ராமசாமி 
Òஊமைத்துரையிடம் சென்றால் திரும்பி வர முடியாது. வீரம் கொண்ட ஊமைத்துரையிடம் மாட்டி னால் எனக்கு 
ஆபத்து' என்று எடுத்துச் சொன்னார். கட்டபொம்மனு டைய வீரத் தளபதி வெள்ளையத்தேவன் போர்க்களத்தில் காட்டிய 
வீரம் வெள்ளையர்களைத் திக்குமுக்காடச் செய்தது.

கடைசியில் கடுந்தாக்குதலுக்குப் பின்பு கோட்டை சரிந்தது. பாளையங்கோட்டையிலிருந்து மேலும் ஆங்கிலப் படைகள் 
வந்தன. கோளார்பட்டி, நாகலாபுரம் முதலிய இடங்களில் போர்கள் நடந்தன. சிவசுப்பிரமணியப் பிள்ளை 
சிறைப்பிடிக்கப்பட்டார். கட்டபொம்மன் தப்பினார். கோளார்பட்டி பாளையக்காரர் ராஜகோபால் மாளிகையில் தங்கினார். 
அங்கு எட்டப்பன் படைகள் சூழ்ந்து கொண்டன. புதுக்கோட்டையில் தன்னுடைய நண்பர் தொண்டைமானிடம் 
அடைக்கலமாகச் சென்றார். அவரை விஜயரகுநாத தொண்டைமான் தன் ஆட்கள் மூலம் பிடித்துப் பானர்மேனிடம் 
திருக்களம்பூர் காட்டில் ஒப்படைத்தார். இதனையறிந்த பிற புரட்சிக்காரர்கள் சிவகங்கை திண்டுக்கல் போன்ற 
பகுதிகளுக்கு ஓடி மறைந்தனர்.

ஆங்கிலேயர் கட்டபொம்மனையும் பிற புரட்சி வீரர்களையும் சிறை செய்தனர். சிவசுப்பிரமணியப் பிள்ளையை 
நாகலாபுரத்தில் தூக்கிலிட்டனர். பின்பு சிவகிரி மீது படையெடுத்தது, ஆங்கில ஆட்சிக்கு எதிராகச் செயல்பட்டது, 
மக்களைக் கொள்ளையடித்தது, தீயிட்டது, கொலை செய்தது போன்ற குற்றங்களுக்காகச் சூழ்ச்சியாகக் கைது செய்து 
16.10.1799 அன்று கயத்தாறில் விசாரணை நடைபெற்றது. பின்பு 39 வயதில் கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்டார். 
கட்டபொம்மன் ஆங்கிலேயரைக் கண்டு ஏளனமாகச் சிரித்துக் கொண்டே தூக்குக் கயிற்றை முத்தமிட்டார். 
பாஞ்சாலங்குறிச்சியில் விடுதலையெழுச்சியும் வீரவுணர்வும் நாட்டுப்பற்றும் ஏற்பட வித்திட்டவர் வீரபாண்டிய 
கட்டபொம்மன். இவர் இட்ட வித்து இவருக்குப் பின் இவருடைய தம்பிகளால் பயிராக்கப்பட்டு, வெள்ளையனை 
வெளியேற்றும் ஒரு நீண்ட போர்க்களமாக மாறியதைக் காண்கிறோம்.

கறந்த பாலையும் காகம் குடியாது
கட்ட பொம்முதுரை பேரு சொன்னால்
என்ற பாடலும், பேராசிரியர் நா.வானமாமலை பதிப்பித்த கட்டபொம்மன் கதைப்பாடல்,

பஞ்ச நாட்டுக்கு ஆத்த மாட்டாமல்
படைக்கருவிகள்  வந்திருக்கு
படைக்கருவிகள் வந்திருக்கு
பரத்தி வைக்கிறேன் பாரும் இப்போ
அரும் கருவிகள் வந்திருக்கு

சம்பத்தூள் சக்கை ஆனது போல
காத்துவாக்கிலே தூத்திடுவேன்
கண்ணுக்கு இதுதான் காணுது பட்டாளம்
காலாலே எத்துவேன் பாரும் என்றார்
அதோடு,
காகம் பறவாத பாஞ்சால நாட்டிலே
கருப்பு சட்டைகள் காணுதையா
சிட்டுப் பறக்காத பாஞ்சால நாட்டில்
சிவப்பு சட்டைகள் தோணுதையா

குண்டுசட்டி போலத் தலையுமாக
குழிதாழி போல வயிறிருக்கும்
தின்ன நிலையிலே மாடு ஒன்று அவன்
ஒத்தையிலே ஒருவன் தின்றிடுவான்
முந்திரி சாராயம் மூணுபுட்டி
கோதுமை ரொட்டி முந்நூறு தின்றிடுவான்

வெள்ளிப்பிடி அருவா
வெள்ளையத் தேவன் வீச்சருவா
சங்குப்பிடி அருவா-தங்கமே
சந்தனத் தேவன் சாய்ப்பருவா
 - நாட்டுப்புறப்பாடல்.

கட்டபொம்மனின் தம்பி ஊமைத்துரையும், மற்ற உறவினர்களும் பாளையங் கோட்டைச் சிறையில் அடைக்கப்பட்டனர். 
சிறையிலிருந்து ஊமைத்துரை தப்பி, பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டையைக் கைப்பற்றி னார். திரும்பவும் போர் 
நடைபெற்றது. சிவகங்கைக்குத் தப்பிச் சென்ற ஊமைத்துரை பிடிக்கப்பட்டு 1801 ஆம் ஆண்டு ஜூன் 10ஆம் தேதி 
பாஞ்சாலங்குறிச்சியில் தூக்கிலிடப்பட்டார். பாஞ்சாலங் குறிச்சியில் யாரும் வாழக்கூடாது என்பதற்காக ஆங்கிலேயக் 
கேப்டன் புரூஸ் அந்தக் கோட்டையைத் தரைமட்டமாக்கி, ஆமணக்கு விதை களை விதைத்தான். பாஞ்சாலங்குறிச்சி 
மண் வீரமண் என்று தமிழக மக்கள் இந்த மண்ணைக் கையில் அள்ளிச் சென்றார்கள்.

நாகலாபுரம், ஏழாயிரம் பண்ணை, கோளார்பட்டி, குளத்தூர், காடல்குடி பாளையக்காரர்களும் சிறையில் வாடினர். கட்ட 
பொம்மனுக்கு ஆதரவாக இருந்த நாகலாபுரம் அரசர் சௌந்தர பாண்டிய நாயக்கர், அவருடைய திவான் கோபாலசாமி 
நாயக்கர் ஆகியோர் ஆங்கிலேயரால் மிகவும் பாதிப்புக்குள்ளாயினர். கட்டபொம்மனை அழிப்பதில் ஆங்கிலேயருக்குத் துணைபுரிந்த எட்டயபுரம்  எட்டப்பனுக்கு, அருங்குளம் என்ற ஊரும் பல்வேறு பொருள்களும் பரிசளிக்கப்பட்டன. கட்டபொம்மன் சிலை குறித்து எஸ்.ராமகிருஷ்ணன் குறிப்பிடுகிறார்:

“மதுரையிலிருந்து திருநெல்வேலி செல்லும் நெடுஞ்சாலையில் பயணிக்கும் ஒவ்வொரு முறையும் நான் அவசியம் 
பார்க்கும் இடம் கயத்தாறு. சாலையை ஒட்டிய சிறிய ஊர் அது. கோவில்பட்டிக்கு அடுத்ததாக உள்ளது. ஒவ்வொரு 
நாளும் ஆயிரக்கணக்கில் பயணிகள் கடந்து செல்லும் அந்தச் சாலையின் மேற்கில், சரித்திரத்தின் நீளும் நினைவாக 
நின்றிருக் கிறது வீரபாண்டிய கட்டபொம்மன் சிலை.

ஆம், அந்த இடத்தில்தான் கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்டான். அவனது நினைவாக அங்கு ஒரு சிலை அமைக்கப்பட்டு, 
நினைவு ஸ்தூபியும் எழுப்பப்பட்டுள்ளது.

பாஞ்சாலங்குறிச்சியில் கட்டபொம்மன் நினைவாக கோட்டையும், சிறிய காப்பகமும் உள்ளது.

அந்தப் புளிய மரம் இருந்த இடத்தில்தான் இப்போது நினைவுச் சின்னம் அமைக்கப்பட்டிருக்கிறது. திருநெல்வேலி 
செல்லும் நெடுஞ் சாலை முழுவதும் மருத மரங்களும் புளிய மரங்களும் ஆதியில் இருந்திருக்கின்றன. அப்படியொரு 
புளிய மரத்தில் மக்கள் முன்னிலை யில் கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்டிருக்கிறான். சில மாதங்களிலே அந்தப் 
புளியமரம் புனித மரமானது என்று மக்களால் வழிபடப்பட்டி ருக்கிறது. ஆனால், அதைச் சகித்துக்கொள்ள முடியாத 
வெள்ளைக்காரர் கள் அப்புளிய மரத்தைத் தீயிட்டுக் கொளுத்திவிட்டார்கள். பிற்காலத் தில் அந்த இடம் அப்படியே 
மறந்துபோனது.'

வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்பட உருவாக்கக் காலத்தில் அதைப்பற்றி ஆராய்ந்த ம.பொ.சி. போன்ற தமிழ் 
அறிஞர்கள், அந்தப் புளிய மரம் எங்கே இருந்திருக்கக்கூடும் என்ற ஆய்வை நிகழ்த்தினார்கள். அந்தப் படம் அடைந்த 
வெற்றியின் காரணமாக சிவாஜிகணேசன் கயத்தாறில் உள்ள அந்த இடத்தை விலைக்கு வாங்கி, தனது சொந்தச் 
செலவில் கட்டபொம்மனுக்கு சிலை எடுத்து நினைவு ஸ்தூபியும் அமைத்து, அன்றைய குடியரசுத் தலைவர் நீலம் 
சஞ்சீவரெட்டி திறந்துவைத்தார். இப்போது அந்த இடம் அரசிடம் ஒப்படைக்கப்பட்டு பராமரிக்கப்படுகிறது (வீரபாண்டிய 
கட்டபொம்மன் திரைப்படம் எடுப்பதற்கு தமிழகத்தில் கோட்டை களும், பழைய அரண்மனைகளும் இல்லை என்பதால், 
அந்தப் படம் முழுவதும் ராஜஸ்தானில் படமாக்கப்பட்டிருக்கிறது. நமது சரித்திரச் சான்றுகள் எந்த நிலையில் 
இருக்கின்றன என்பதற்கு ஒரு சிறிய உதாரணம் இது).

வீரம் செறிந்த எங்களின் தெற்குச் சீமையான நெல்லை மண் உயிரோட்டமானது;  உணர்ச்சிகரமானது. அதன் 
அசைவுகள் யாவும் வரலாற்று அசைவுகளாகும். அந்த மண்ணில் வீரபாண்டிய கட்டபொம்மன் மட்டுமல்லாமல், 
பூலித்தேவர், தீரர் சுந்தரலிங்கம், அழகு முத்துக்கோன், ஒண்டிவீரன், முண்டாசுக்கவி பாரதி, வ.உ.சிதம்பரனார் என 
தியாக தீபங்கள் பிறந்த மண். வீரமானாலும் இலக்கியமானாலும் மத நல்லிணக்கமானாலும் இசை, நாகரிகமானா லும் 
இவை அனைத்தையும் தன்னகத்தே கொண்ட பூமிதான் எங்களின் நிமிர வைக்கும் நெல்லை.

என்னைப் பிரசவித்த பூர்வீக மண்ணில் தோன்றிய மூத்த குடிகளைத் தொழ வேண்டும் என்ற ரீதியில் 'நிமிர வைக்கும் 
நெல்லை' என்ற நூலை ஆக்கினேன். அதன் அடுத்த கட்டமாக கட்டபொம்மன் புகழ் சொல்லும் இந்தப் 
பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் வெளிவரு கிறது. இதை கண்டு இதயசுத்தியோடு பெருமை அடைகிறன். இந்தக் 
கடமையை எங்கள் கரிசல் மண்ணுக்குச் செய்கின்ற திருப்பணி யாகக் கருதி, நண்பர் மனுஷ்ய புத்திரனிடம் 
ஒப்படைத்தேன். ஓராண்டுக்கும் மேலாக பழைய நூலினைக் கவனமாகத் தட்டச்சு செய்து கொண்டுவர 
காலதாமதமாகியது. மோசமான அதன் தாள் களைப் பாதுகாக்க முடியாமல் சிரமப்பட்டு பாதுகாத்து கவனமாகத் 
தட்டச்சு செய்ததே பெரும் பணியாக இருந்தது.

எங்கள் மண்ணுக்கு நிகர் வேறு எதுவும்  இல்லை என்ற பெருமை நெல்லை வட்டார மக்களுக்கு என்றும் உண்டு. 
இந்திய வரலாற்றை எழுத வேண்டும் என்றால் தமிழகத்திலிருந்துதான் துவங்க வேண்டும். குறிப்பாக, 
நெல்லையிலிருந்து ஆரம்பிக்க வேண்டும். தமிழர்களின் நாகரிகம் வளர்ந்த இடம். அதற்கு ஆதாரமாக ஆதிச்சநல்லூர், 
கிருஷ்ணாபுரமும் இருக்கின்றன. எத்தனை கவிஞர்கள் இம்மண்ணில் தோன்றினார்கள் என்பதை எண்ணிப் 
பார்க்கும்போது பிரமிப்பாக இருக்கின்றது. வைணவ பாசுரங்களைத் தீட்டிய நம்மாழ்வார், இலக்கண நூலை எழுதிய 
சுப்பிரமணிய தீட்சிதர், இலக்கணக் கொத்தை வழங்கிய சாமிநாத தேசிகர், திரிகூட ராசப்ப கவிராயர், அதற்கு முன்பு 
குமரகுருபரர், சிவப்பிரகாசர், மதுரகவியாழ்வார், தொல்காப்பியத்திற்கு விளக்கம் தந்த சேனாவராயர், நப்பசலையார், 
அதிவீரராமபாண்டியர், சுப்பிரமணிய தம்பிரான், கடிகை முத்துப் புலவர், அரிச்சந்திர புராணம்  எழுதிய வீரகவிராயர், 
சண்டமாருத புலவர், புனித சவேரியார், கால்டுவெல், ஜி.யு போப், வீரமாமுனிவர், ரெயின்ஸ் அய்யர், உமறுப்புலவர், 
வரகுணராமப் பாண்டியர், காவடிச் சிந்து அண்ணாமலை ரெட்டியார், விளாத்திகுளம் சுவாமிகள், பத்தமடை சுவாமி 
சிவானந்தர், எச்.ஏ.கிருஷ்ணப்பிள்ளை, ஆபிரகாம் பண்டிதர், காசிம் புலவர்,  பழனியாண்டிப் புலவர்,  அருணாசல 
கவிராயர்,  சுப்பிரமணிய முதலியார்,  கா.சு.பிள்ளை,  அ.மாதவய்யா,  ரசிகமணி டி.கே.சி., நீலகண்ட சாஸ்திரி,  
புதுமைப்பித்தன்,  கே.கே. பிள்ளை,  அ.சீனிவாச ராகவன்,  சங்கரதாஸ் சுவாமிகள், குருமலை சுந்தரம் பிள்ளை,  
காருகுறிச்சி அருணாச்சலம், பி.ஸ்ரீ.ஆச்சார்யா, சங்கரதாஸ் சுவாமிகள், வையாபுரிப் பிள்ளை, ரா.பி.சேதுப்பிள்ளை, 
நாவலர் சோமசுந்தரபாரதி, சாத்தான்குளம் ராகவன்,  பெ.நா.அப்புசாமி,  கு.அழகிரிசாமி,  தொ.மு.சி. ரகுநாதன்,  
வல்லிக்கண்ணன்,  நா.வானமா மலை, கி.ராஜநாராயணன்,  தி.க.சி. என இன்றைக்கு வரை எண்ணற்ற ஆளுமைகள். 
இவ்வாறு ஒரு பட்டியலில் அடக்கிவிட முடியாத அளவிற்கு, இயற்கை தமிழகத்திற்கு வழங்கிய அருட்கொடைகளாகும். 
அப்படிப்பட்ட இந்த மண்ணில் தோன்றியவர்தான் இந்நூலாசிரியர் ஜெகவீர பாண்டியனார்.

கட்டபொம்மன் வம்சத்தில் ஒட்டநத்தம் கிராமத்தில் பிறந்த ஜெகவீரபாண்டியனார் திருக்குறள், குமரேச வெண்பா, 
கம்பன் கடைநிலை, வீரபாண்டிய கட்டபொம்மன் சரிதம், திருச்செந்தூர் அந்தாதி போன்ற நூல்களைப் பதிப்பித்தார். 
இவருடைய தமிழ்ப் பணிக்காக மதுரைத் தமிழ்ச் சங்கம்,  கரந்தை தமிழ்ச் சங்கம் ஆகியன இவரை அழைத்துப் 
பாராட்டின.

இளமையிலேயே கவிபாடும் திறமையைப் பெற்றவர். 1920இல் கோவையில் உள்ள பேரூரில் நடைபெற்ற 
கவிப்போட்டியில் வெற்றி பெற்றவர். வ.உ.சி.  பண்டிதமணி மு.கதிரேசஞ் செட்டியார்,  சுத்தானந்த பாரதி, நாமக்கல் 
கவிஞர் சோமசுந்தரபாரதி, டி.கே.சி., ந.மு. வேங்கட சாமி நாட்டார், அவ்வை துரைசாமி பிள்ளை,  கி.ஆ.பெ.விசுவநாதம் 
ஆகியோர் இவருக்கு நண்பர்களாக இருந்தனர். காஞ்சி காமகோடி பீடாதிபதி , திருவாவடுதுறை ஆதினம்,  மதுரை 
ஆதினம்,  தருமபுர ஆதினம்,  திருக்குறுங்குடி ஜீயர்,  குன்றக்குடி ஆதினம்,  முதல்வர்கள் இராஜாஜி,  ஓமந்தூர் ராமசாமி 
ரெட்டியார்,  குமாரசாமி ராஜா,  காமராஜர், அண்ணா மற்றும் பசும்பொன் தேவர், ம.பொ.சி.,  அவினாசிலிங்கம் 
செட்டியார்,  ப.ஜீவானந்தம் , க.வேங்கடாசலபதி,  ஜ.மாயாண்டி பாரதி போன்றவர்களோடு நெருக்கமாகப் பழகியவர். 
இவரைப் பற்றி கல்கி, நா.பார்த்தசாரதி,

என் மண்…. என் பூமி….. #கரிசல்காடு

என் மண்…. என் பூமி….. #கரிசல்காடு  The beauty of village.  The beauty Of nature  Love of everything  village #கேஎஸ்ஆர்போஸ்ட்  #ksrpost  20-6...