Thursday, August 31, 2023

#எங்கள்தெற்குசீமை திருநெல்வேலி செப்டம்பர் 1 உதயமான நாள் #நிமிரவைக்கும்நெல்லை திருநெல்வேலி -அதையொட்டி ஒரு சிறப்புப் பதிவு.

#எங்கள்தெற்குசீமை 
திருநெல்வேலி செப்டம்பர் 1 உதயமான நாள் #நிமிரவைக்கும்நெல்லை
திருநெல்வேலி -அதையொட்டி ஒரு சிறப்புப் பதிவு.

திருநெல்வேலி அல்லது நெல்லை (Tirunelveli), "திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி' எனச் சம்பந்தரும், "தண் பொருநைப் புனல்நாடு' எனச் சேக்கிழாரும், "பொன்திணிந்த புனல் பெருகும் பொருநைத் திருநதி' என்று கம்பரும் பாடிய பூமி, திருநெல்வேலி ஆகும்.

#நெல்லை, #திருநெல்வேலி, #திருநெல்வேலிமாவட்டம், #திருநெல்வேலிநாள், #கேஎஸ்ஆர், #கேஎஸ்ஆர்போஸ்ட், #கேஎஸ்ராதாகிருஷ்ணன், #நிமிரவைக்கும்நெல்லை, #கேஎஸ்ஆர்வாய்ஸ்,  #nellai, #thirunelveli, #thirunelvelidistrict, #thirunelveliday, #nimiravaikumnellai, #ksr, #ksrvoice, #ksrpost, #ksradhakrishnan, 




திராவிட பெரு வெளியில்….. தமிழக பல உரிமை பிரச்சனைகளை திராவிட மாடல் ஆட்சியில் முதல்வர் ஸ்டாலின் தீர்த்துவிட்டார். இனி இந்தியாவை பேசி காப்பாற்ற

மாநில சுயாட்சி, 
திராவிட பெரு வெளியில்
காவேரி, முல்லை பெரியாறு, பாலாறு என கேரளம், கார்நாடகம்,
ஆந்திராம் என பேசி 16 நதி நீர் சிக்கலில் தீர்வு,
கண்ணகி கோட்ட பிரச்சனை,
நெய்வேலி சிக்கல்,
சேலம் இரும்பு ஆலை,
கடலூர், நாகை துறைமுகங்கள்,
சேதுக் கால்வாய்,
கச்சத்தீவு,
மேற்கு - கிழக்கு தொடர்ச்சி மலைகள் பாதுகாப்பு என இப்படி
தமிழக பல உரிமை பிரச்சனைகளை திராவிட மாடல் ஆட்சியில் முதல்வர்
ஸ்டாலின் தீர்த்துவிட்டார்.
இனி இந்தியாவை பேசி காப்பாற்ற
ஸ்டாலின் முடிவு எடுத்துவிட்டார்.ஏற்கனவே மத்திய ஆட்சி அமைச்சர் அவையில் 18 ஆண்டுகள் திமுக பங்கு பெற்று இதை தீர்த்து முடித்தது!.

#Dmk 
#TamilNadu #தமிழகம் @CMOTamilnadu @mkstalin @KanimozhiDMK 
#ksrpost
#கேஎஸ்ஆர்போஸ்ட்


Wednesday, August 30, 2023

*The Cavery river , its waters , the dispute and the award by the tribunal*.



Some features : Groundwater is not accounted for nor allotted.

The final allotment seems as follows



Kerala 30 TMC
Karnataka 284.75 TMC
Tamil Nadu 404.25 TMC
Pondicherry 7 TMC

The change from the decision of the Cauvery water tribunal is only for the run-off from Karnataka to Tamil Nadu. While the tribunal had said Karnataka should keep 270 Tmc and release 192 Tmc from its reservoirs and river waters , the Supreme Court has said that Karnataka can keep 284.75 TMC and must release 177. 25 Tmc to Tamil Nadu . This release from Karnataka along with releases from Kerala means that Tamil Nadus share is 404.25 TMC with a 50 % probable flows in the river. I’m 



The distress sharing formula and its management is still not clear and one will wait for the detailed Supreme Court order.

#Cauveryriver

# KSR Post 
30-8-2023.

நிஜமென்றால் கடந்துவிடும் கனவென்றால் கலைந்துவிடும் நினைவில் மட்டுமே மிதக்கும் நீங்காத நினைவுகள்

"It was the best of times, it was the worst of times." -  #Charles Dickens #A_Tale of Two Cities 



















நிம்மதியாய்...
 
கடந்த 1970 களில் மாணவர் அரசியல்- போராட்டங்களில் படித்த கல்லூரிகளிலிருந்து கல்வி ஆண்டில் இடையில் நீக்கம் செய்து டிசி கொடுத்து விடுவார்கள். பின் வேறு கல்லூரி தேடி சேர வேண்டும். அப்போது கற்றது வேறு கல்லூரி பல்கலை கழக தேர்வுகள் எழுத வேறு கல்லூரியாக வாழ்க்கையில் ஆகி விட்டது.
இப்படியான கல்லூரி வாழ்க்கை…..
இளங்கோவடிகளின் சிலப்பதிகாரம் ஊழ்வினையின் துணை கொண்டே நடைபோடுகிறது சொல்கிறது. ஆறுதலாக
இந்த நேரங்கள் என் தாயார் ‘ஆடி காற்றடித்தால் அம்மியும் பறக்கும்’ . நீ ஆடியில் பிறந்தாய் இப்படிதான் உன் ஊழ் என்பார். மூன்று கல்விகலாசாலைகளில் படிக்க வேண்டிய நிலையில் ஆறு இடங்களில் மாறி கல்வியை பெற்றேன். அதுவும் இதமாகத்தான் இருந்தது இளமை காலத்தில்….

#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
30-8-2023.

இதுதான் இப்படித்தான் என் அரசியல்…

என் அரசியல் வாழ்க்கை முடிவுக்கு வராது. உணமையான அரசியலுக்கு இறுதி இல்லை… பணம்-ஓட்டு, காசிசில் சம்பளமாக கொடுத்து கூட்டப்படும் கூட்டம் என்பவை வியாபாரம் (வியல் + பாரம்) தரகு அரசியல் என்ற தளத்தில்  நான இல்லை என்பதுதான் மெய்.
நேர்மையான பலம் வாய்ந்த அரசியல் கொள்ளவதான்  என்றும் இருக்கும். இந்த நிலையில காலம் என்னை அடி பாதாளம் தள்ளினாலும் இயற்கையின் நீதி கைகொடுக்கும்…

சோகங்கள் நெஞ்சோடு இருக்கும் ஆனா மனத்திடத்தோடு சிரிக்காத நாள் இல்லேயே!

நிலப்புலத்தில்
நெடுந்தூரம்
பயணிக்கும் போது…

பேரிருளில்
திசைகாட்டிக் கொண்டு 

அப்படித்தான்
எல்லோருக்கும்
வாழ்வில்
ஒரு விண்மீன்
இருக்கக்கூடும்

அதற்கு
இருள வேண்டும் 
இருளை விரும்ப வேண்டும்
இருளால் நிரம்ப வேண்டும்
இருளுக்கப்பால்
ஒரு வாழ்விருப்பதை
நம்ப வேண்டும்
 பயணம் செய் 

சிலரின் புரிதல் அற்ற கருத்துகளுக்கு என் பதில் இது.

#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
30-8-2023.


Tuesday, August 29, 2023

#Habeascorpus #ஹேபியஸ்கார்பஸ்

#*Habeas corpus* #*ஹேபியஸ் கார்பஸ்*
—————————————
ஹேபியஸ் கார்பஸின் தோற்றம் கி.பி 1215 இல் ஜான் மன்னர் மேக்னா கார்ட்டாவின் முக்கிய ஆவணத்தில் கையெழுத்திட்டபோது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த வரலாற்று ஆவணத்தின் 39 வது ஷரத்து, "எந்த மனிதனும் கைது செய்யப்படவோ அல்லது சிறையில் அடைக்கப்படவோ கூடாது...அவரது சகாக்களின் சட்டபூர்வமான தீர்ப்பு மற்றும் நாட்டின் சட்டத்தால் தவிர" என்று கூறப்பட்டுள்ளது.
ஹேபியஸ் கார்பஸ் என்ற கருத்து உலகெங்கிலும் உள்ள சட்ட அமைப்புகளில் உட்பொதிக்கப்பட்டுள்ளது, எடுத்துக்காட்டாக, அமெரிக்காவில், 1789 ஆம் ஆண்டின் முதல் நீதித்துறைச் சட்டத்தின் மூலம், கூட்டாட்சி கைதிகளுக்கு ஹேபியஸ் கார்பஸ் நிவாரணம் வழங்குவதற்கு மத்திய நீதிமன்றங்களுக்கு காங்கிரஸ் வெளிப்படையாக அங்கீகாரம் அளித்தது. 

கைது செய்யப்பட்டவர் எங்கே இருக்கிறார் என தெரியவில்லை எனில்  "ஆட்கொணர்வு மனு" வை உயர் நீதி மன்றம், உச்ச நீதி மன்றம் என தாக்கல் செய்து சம்பந்த பட்டவரை கண்டு பிடித்து நீதி மன்றத்தில் நிறுத்தல்…

Habeas corpus (/ˈheɪbiəs ˈkɔːrpəs/ (listen); from Medieval Latin, lit. 'that you have the body') is a recourse in law through which a person can report an unlawful detention or imprisonment to a court and request that the court order the custodian of the person, usually a prison official, to bring the prisoner to court, to determine whether the detention is lawful.

The writ of habeas corpus was described in the eighteenth century by William Blackstone as a "great and efficacious writ in all manner of illegal confinement". It is a summons with the force of a court order; it is addressed to the custodian (a prison official, for example) and demands that a prisoner be brought before the court, and that the custodian present proof of authority, allowing the court to determine whether the custodian has lawful authority to detain the prisoner. If the custodian is acting beyond their authority, then the prisoner must be released. Any prisoner, or another person acting on their behalf, may petition the court, or a judge, for a writ of habeas corpus. One reason for the writ to be sought by a person other than the prisoner is that the detainee might be held incommunicado. Most civil law jurisdictions provide a similar remedy for those unlawfully detained, but this is not always called habeas corpus. For example, in some Spanish-speaking nations, the equivalent remedy for unlawful imprisonment is the amparo de libertad ("protection of freedom"). 
Accused where about not able known/ the  authorities didn’t not inform to accused’s relatives… That circumstances this writ will be invoked…by due process of law.




youtu.be/KP_txNZTWQg?si=4wGYCmfV3aGdoqWO

#Habeascorpus #ஹேபியஸ்கார்பஸ்
#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
29-82023

#*ஓணத்திருநாள்* #*Onam -Tamil*



*****************கணம் கொள் அவுணர்க் கடந்த பொலந் தார்





மாயோன் மேய ஓண நன்னாள்” 
- *மதுரைக் காஞ்சி* 

எதிரிகளின் கூட்டத்தைக் கடந்து அழிக்க வல்லவன் தொங்கு மாலை அணிந்த முல்லை நிலத் தலைவன் மாயோன், அவனைக் கொண்டாடும் சிறப்பு நாளான ஓணம் ஒரு நன்னாள். (மாயோன் முன்னாளில் அரசனாகவும் பின்னாளின் விஷ்ணுவாகவும் கருதப்பட்டிருக்கிறார்)
            அறுவடைத் திருநாள் என்றழைக்கப்படும் ஒணத்திருநாள் இன்று. மலையாள ஆண்டான கொல்லவர்ஷத்தில் சிங்கம் மாதத்தில் ஓணவிழா கொண்டாடப்படுகிறது.  ஆயிரமாண்டுகளுக்கு மேல் கொண்டாடப்படும் இவ்வோணப் பண்டிகையில் ஓணத்தப்பன் என்றழைக்கப்படும் மகாபலியை வரவேற்கும் விதமாகவும் கொண்டாடப்படுகிறது. 









        தமிழர் பண்பாட்டிலும் ஓணத் திருவிழா கொண்டாடியதற்கான இலக்கிய சான்றுகள் உள்ளன. 

       ஒரு வாரமாக கேரளத்தின் கொச்சி முழுவதும் பூக்களின் விற்பனை அமோகமாக நடக்கிறது. இன்ஃபோ பார்க்கில் உள்ள எல்லா அலுவலகங்களிலும் ஓணப் பரிபாடி. கேரள உடையுடுத்தி அலைமோதும் சேச்சியர்கள் சேட்டன்களின் கூட்டமென ஊரே திருவிழாக் கோலம் பூண்டிருக்கிறது. பல கோயில்களிலும் பாட்டு, திருவாதிரை நடனமென கலைகட்டியிருக்கிறது. சிறிய குழந்தைகளெல்லாம் வேட்டியுடுத்தியும் முண்டு கட்டியும் போகும் அழகு கண்கொள்ளாக் காட்சியாகும். 
        எல்லாவற்றிற்கும் மேலாக மதங்கள் கடந்து அனைவரும் கொண்டாடும் இவ்வோணப் பண்டிகையில் ஒற்றுமையின் வாசமடிக்கிறது.


திருவோணம் பெருமாளுக்குரிய நட்சத்திரம் . ஆவணி மாத திருவோணம் ஓணம் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது .தற்சமயம் கேரளா மட்டும்  ஓணம் பண்டிகையை கொண்டாடி வந்தாலும் இந்த பண்டைய தமிழகம் முழுவதும் கொண்டாடி இருக்கலாம் என்றே கருத படுகிறது . 

மஹாபலிபுரம் , திருக்கோவலூர்  , திருஊரகம் ( காஞ்சிபுரம் ) உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பண்டைய தொண்டை நாட்டு பகுதிகளில் உள்ள ஆலயங்கள்  திருவிக்கிரமர்  என்ற உலகளந்த பெருமாள் வழிபாடுகளுக்கு சான்றாக உள்ளது . சோழ நாட்டு திவ்யதேசங்களில் காழிச் சீராம விண்ணகரம், பாடலிகவனம் என்று அழைக்கப்படும் சீர்காழி திருவிக்கிரம பெருமாள் கோயில்  உள்ளது . 

பாண்டிய நாட்டு தலைநகர் மதுரையில் உள்ள ஸ்ரீ கூடலழகர் கோயில் பற்றிய " அருள்மிகு கூடலழகர் திருக்கோயில் வரலாறு"  என்ற கட்டுரையில்  பேராசிரியர் இரா. அரங்கராஜன், எம்.ஏ.பி.டி.அவர்கள் திருமால் பேருருவம் எடுத்துத் திரிவிக்கிரமனாக வளர்ந்து ஒரு திருவடியானது சத்தியலோகம் சென்றபோது நான்முகன் அத் திருவடியை விளக்கிய நீர் விண்ணிலிருந்து வீழ்ந்து வையகத்தைப் புனிதமாக்கியது. அக்காரணத்தால் அதனை வைகை என்று அழைத்தனர். அதனுள் ஒரு பிரிவு கூடலழகருக்கு மாலை அணிவிக்கப் பெற்றது சென்றதால் அதனைக் கிருதமாலை என்று அழைத்தனர். இக்கிருதமாலையினையே வையை என்றும் அழைத்ததாக அறிகிறோம் என்று குறிப்பிட்டுள்ளார் . 

இன்றும் மதுரை நகர் பகுதியில் கிருதமாலை நதி ஓடி கொண்டு  இருக்கிறது . இந்த நதிக்கரையில் உள்ள ஸ்ரீ கூடலழகர் கோயில் பெரியாழ்வாரோடு மிக மிக தொடர்புடையது .

பெரியாழ்வார் பரதத்வ நிரணயம் செய்த சபை விளங்கிய இடத்தை 'மெய் காட்டும் பொட் டல்' என்று அழைத்தனர் . இங்கு தான் பெருமாள் மீது பெரியாழ்வார் திருப்பல்லாண்டு பாடினார் . 

உடுத்துக்களைந்த நின்பீதகவாடையுடுத்துக் கலத்ததுண்டு *
தொடுத்ததுழாய்மலர்சூடிக்களைந்தன சூடும்இத்தொண்டர்களோம் *
விடுத்ததிசைக்கருமம்திருத்தித் திருவோணத்திருவிழவில் *
படுத்தபைந்நாகணைப்பள்ளிகொண்டானுக்குப் பல்லாண்டுகூறுதுமே. 

என்ற பாசுரங்களை சேவிக்கும் பொழுது திருவோணத்திருவிழா பண்டைய தமிழகம் முழுவதும் கொண்டாட பட்டு  இருக்கலாம் என்று தோன்றுகிறது .

இது போல் திருமாலிருஞ்சோலை என்னும் அழகர் கோயில் சிலம்பாறும், நூபுர கங்கை தீர்த்தமும் இந்த வாமன அவதாரம் என்னும் திருவிக்கிரம அவதாரத்தோடு தொடர்புடையதாக புராண வரலாறுகள் உள்ளது .

தமிழகம் முழுவதும்  திருவிக்ரம அவதாரம் சிறப்பாக கொண்டாட்டப்பட்டு உள்ளது என்பது தெளிவாக தெரிகிறது .  

அனைவருக்கும் ஓணம் பண்டிகை வாழ்த்துக்கள் . தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்ய ஓங்கி உலகளந்த உத்தமரை  வேண்டுவோம் .

Celebrating the ancient Hindu  rice harvest festival that is held in the name of the great king Maha_bali, of the daitya lineage, who was known throughout time for providing good governance to the land. It is  called Onam, after its name used in Keralam. It falls on the 22nd nakshatra Thiruvonam in the month Chingam. The earliest Sangam literature mentions it as a popular festival when people come together to thank the gods and welcome the harvest. One of the later ditties associated with Onam goes as follows:

Gangs of lads, playing their bows hoot loudly again and again; All women make their husbands provide wealth and pleasure; All men are wandering hither and thither to present beautiful garments to their women. The festivity of 'Sravana' takes place in Kerala.


வ உ சியை மறந்து விட்டோம்.

*ஓட்டப்பிடாரம் தன் சொந்த ஊர் குறித்து பா. ஆரிச்சன் படைத்த ‘’ வீரமும் தியாகமும் ஓர் மண்ணின மணம்’’ என்ற நூலை ம.தி. தா இந்து கல்லூரி மேல் நிலைப்பள்ளி கூட்ட அரங்கில் கடந்த  27-8-203 அன்று வெளியிட்டேன்.  அன்றைய மாலை பொழுதில் திருநெல்வேலியில் நல்ல நிறைவான நிகழ்ச்சி*…

#திருநெல்வேலி
#ஓட்டப்பிடாரம்

#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
29-8-2023.
( *தினமணி*- 28-8-2023)


Monday, August 28, 2023

#டி.கல்லுப்பட்டி காந்திநிகேதன்ஆசிரமம் #ஜே.சி.குமரப்பா, #கோ.வேங்கடாசலபதி

#டி.கல்லுப்பட்டி காந்திநிகேதன்ஆசிரமம் 






#ஜே.சி.குமரப்பா, #கோ.வேங்கடாசலபதி



—————————————————————
இன்று (28-8-2023) மதுரை செல்லும். வழியில் சீலார்பட்டி மறைந்த தம்பி வாசுதேவன் இல்லத்துக்கு சென்று விட்டு டி. கல்லுப்பட்டி காந்தி நிகேதன் ஆசிரமம் சென்றேன். கடந்த  1940ல் காந்திய சிந்தனைகளை பரப்புவதற்கு, என். எம். ஆர். சுப்பராமன் மற்றும் அ. வைத்தியநாத ஐயர் ஆகியோர்களின் வழிகாட்டுதலின் படி, கோ. வேங்கடாசலபதி, மதுரை மாவட்டம், திருமங்கலம் வட்டம், தே. கல்லுப்பட்டி ஊராட்சி ஒன்றியம், தே. கல்லுப்பட்டி பேரூராட்சியில் 40 ஏக்கர் நிலப்பரப்பில் நிறுவப்பட்டது. 1956ல் காந்தியவாதி ஜே. சி. குமரப்பா, காந்தி நிகேதன் ஆசிரமத்தை பதிவு செய்யப்பட்ட சங்கமாக நிறுவினர்.




அங்கு இருக்கும் ஜே. சி. குமரப்பா, கோ. வேங்கடாசலபதி  சமாதிகளை வணங்கினேன். கோ. வேங்கடாசலபதி  அன்றைய சென்னை மாநிலத்தில் கிராமங்களில் ஆரம்ப  பள்ளிகளை நிறுவினர். இவர் எனக்கு உறவினர். இன்றைக்கும் அந்த  ஓட்டு கட்டிட பள்ளிகள்
பல கிராமங்களில் உறுதியாக கட்டுமானத்
தோடு இருக்கிறது. ஜே. சி. குமரப்பா, கோ. வேங்கடாசலபதி  ஆகியோர் கிராம ஆதார பணிகள், சுய சார்பு விவசாய முறையை மக்களிடம் கொண்டு சென்றவர்கள்…ஜே. சி. குமரப்பா உத்தமர் காந்தியின் நெருங்கிய சகா.




#டி_கல்லுப்பட்டி_காந்திநிகேதன்_ஆசிரமம் 
#ஜே_சி_குமரப்பா, 
#கோ_வேங்கடாசலபதி

#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
#கே_எஸ்_இராதாகிருஷ்ணன்.
28-8-2023.

Sunday, August 27, 2023

#திருநெல்வேலி #ஓட்டப்பிடாரம்

*இன்று மாலை( 27-8-203)  ஓட்டப்பிடாரம் தன் சொந்த ஊர் குறித்து பா. ஆரிச்சன் படைத்த ‘’ வீரமும் தியாகமும் ஓர் மண்ணின மணம்’’ என்ற நூலை ம.தி. தா இந்து கல்லூரி மேல் நிலைப்பள்ளி கூட்ட அரங்கில் வெளியிட்டேன்.  மாலை பொழுதில் திருநெல்வேலியில் நல்ல நிறைவான நிகழ்ச்சி*…













#திருநெல்வேலி
#ஓட்டப்பிடாரம்




#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
27-8-2023.

#எனது சுவடு-37 கேஎஸ்ஆர்- KSR

#எனது சுவடு_37
—————————-

எதையும் துணிவுடன் எதிர்கொள்ள முடியும்...
துரோகம் நம் பக்கத்தில் இல்லாதிருந்தால்...!

#Congress_O #Tamilnaducongress
#Kamarajar   #ksrvoice
#தமிழ்நாடுகாங்கிரஸ் #காமராஜர் #ஸ்தாபனகாங்கிரஸ்

https://youtu.be/ygciGDo6ZZg?si=-bbOmQXK9O0Isp7P

#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
27-8-2023.

#lifeexperience #thoughtsforlife 

#பி_எச்_பாண்டியன் (P. H. Pandian,

#பி_எச்_பாண்டியன் (P. H. Pandian, (29 மார்ச் 1945– 4 ஜனவரி 2020)
—————————————————————-

திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி அருகே கோவிந்தபேரியில்  உள்ள அண்ணன் பி. எச். பாண்டியன் நினைவிடத்தில் இன்று (27-8-2023) …..கடந்த  1976 முதல்  மறையும் வரை இவர்  என் மீது தம்பி என்று அன்பு காட்டியவர். சக வழக்கறிஞர். எம்ஜிஆரிடம் வேலுப்பிள்ளை பிரபாகரனை அழைத்து சென்ற முன்பே  இவர் மூலம் அறிமுகம்.

அவருடைய இந்த  நினைவு மண்டபத்துக்கு செல்ல நீண்ட நாட்களுக்கு பின் இன்று செல்ல முடிந்தது. இவருடன் பயணித்த ஐரோப்பிய நாடுகள். பல முறை டில்லி மற்றும் காஷ்மீர், கேரள மட்டும்மல்ல தமிழகத்தில்  பல  பகுதிகள் என இன்றும் நினைவுகள்… காஞ்சி பெரியவர், ஜானகி அம்மா ஆட்சி நம்பிக்கை வாக்கெடுப்பில், அவரின் ஆட்சி கலைப்பு நேரத்தில் பேரவைத் தலைவராக பாண்டியன்



இருந்த நேரத்தில் எனக்கு ஒரு வார கால முக்கிய பணிகளை நம்பி கொடுத்தார். அவரின் கட்சியில் கூட இல்லை. இவை நான் திமுகவில் சேரும் 1987க்கு முன்பு நடந்தவை. பி. எச். பாண்டியன் சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி டி. என். சிங்காரவேலு தீர்ப்பை தமிழக சட்டப்பேரவையில் ரத்து செய்தது என பல நிலைகளில் உடன் இருந்தவன்.

1980 பிப்ரவரி 27, 1985 முதல் பிப்ரவரி 5, 1989 வரை தமிழ்நாட்டுச் சட்டமன்ற பேரவைத் தலைவராகப் பதவி வகித்தார். முதல் 1985 வரை தமிழ்நாட்டுச் சட்டமன்ற பேரவைத் துணைத்தலைவராகப் பதவி வகித்தார்.இவர் சேரன்மகாதேவியில் இருந்து 1977, 1980, 1984 1989 ஆண்டுகளில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகக் கட்சியின் சார்பாக தமிழ்நாட்டுச் சட்ட மன்ற உறுப்பினராக இருந்தவர்.

#பி_எச்_பாண்டியன் #P_H_Pandian, 
#திருநெல்வேலிமாவட்டம் 
#சேரன்மகாதேவி

#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
27-8-2023.


Saturday, August 26, 2023

வானம்பார்தத புஞ்சை கரிசல் காட்டில் #மானாவாரிப்பயிர்கள்

இன்று மாலை கிராமத்திலிருந்து   திருநெல்வேலி   செல்லும் வழியில் வானம் பார்தத எனது புஞ்சை கரிசல் காட்டில் உழுது மானாவாரிப் பயிர்கள் Millets என்றழைக்கப்படும் புல்-தானிய சாகுபடிக்கு …..; புல்-செய்ப் பயிர்கள் என்றழைக்கப்பட்ட இவை, மருவி, புன்செய்ப் பயிர்கள் ஆகி, இப்போது புஞ்சைப் பயிர்கள் என அழைக்கப்படுகின்றன. கம்பு, கேழ்வரகு, குதிரைவாலி, சோளம், வரகு, திணை போன்றவை புஞ்சைப் பயனர்கள் விதைப்புக்கு….



தாயரிப்பு பணிகள் ; பருவ மழை ஒன்று பெய்ந்தால் போதும்.
பின்னால் கழுகுமலை. (காவடிச் சிந்து தந்தை அண்ணாமலை ரெட்டியார் (1865 - 1891) காவடிச் சிந்து பாடி வந்த ஊர் )

#வானம்பார்ததபுஞ்சைகரிசல் காட்டில் #மானாவாரிப்பயிர்கள்

#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
26-8-2023.


பசுமை நிறைந்த நினைவுகளே

சக 1970 மாணவ தோழர்கள், தோழிகள் விமான, ரயில் நிலையங்கள் என
பொது வெளியில் பலரை அடையாளம் நமக்கு தெரியல….. அவர்களே நம்மை பார்த்ததும் நம்மை நோக்கி வந்து அன்பக பேசும் போது மனது இதமாகிறது . தனி ஆழ் மகிழ்ச்சி…..
பல நினைவுகள்… அவற்றை அன்று ஜீவிய நாள் முழுதும்  அசை போடும்
இன்பமே தனி சூழல் …

#ksrpost
26-8-2023.



பசுமை நிறைந்த நினைவுகளே 
பாடித்திரிந்த பறவைகளே
பழகிக் கழித்த தோழர்களே
பறந்து செல்கின்றோம்
குரங்குகள் போலே மரங்களின் மேலே தாவித்திரிந்தோமே
குயில்களைப் போலே இரவும் பகலும் கூவித் திரிந்தோமே
வரவில்லாமல் செலவுகள் செய்து மகிழ்ந்திருந்தோமே
வாழ்க்கைத் துன்பம் அறிந்திடாமல் வாழ்ந்து வந்தோமே
எந்த ஊரில் எந்த நாட்டில் என்று காண்போமோ?
எந்த அழகை எந்த விழியில் கொண்டு செல்வோமோ?
இந்த நாளை அந்த நாளில் மறந்து போவோமோ?
இல்லம் கண்டு பள்ளி கொண்டு மயங்கி நிற்போமோ?
என்றும் மயங்கி நிற்போமோ?

youtu.be/JkMQB64YMho

#சந்திராயன்3 #Chandrayaan3-சிவசக்தி…….. ……சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய், வல்லமை தாராயோ,-இந்த

#சிவசக்தி……..
……சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்,

வல்லமை தாராயோ,-இந்த

மாநிலம் பயனுற வாழ்வதற்கே?

சொல்லடி,சிவசக்தி!-நிலச்

சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ? 1

விசையுறு பந்தினைப்போல்-உள்ளம்

வேண்டிய படிசெலும் உடல்கேட்டேன்,

நசையறு மனங்கேட்டேன்-நித்தம்

நவமெனச் சுடர்தரும் உயிர்கேட்டேன்,

தசையினைத் தீசுடினும்-சிவ

சக்தியைப் பாடும்நல் அகங்கேட்டேன்,

அசைவறு மதிகேட்டேன்;-இவை

அருள்வதில் உனக்கெதுந் தடையுளதோ?



Friday, August 25, 2023

முல்லைக்கு குழல் தந்த பெண்மைக்கு பெண்மை நீ பிள்ளைக்கு தோள் தந்த அன்னைக்கு அன்னை நீ அதிகாலையில் நான் கேட்பது நீ பாடும் பூபாளம்




முல்லைக்கு குழல் தந்த பெண்மைக்கு பெண்மை நீ பிள்ளைக்கு தோள் தந்த அன்னைக்கு அன்னை நீ அதிகாலையில் நான் கேட்பது நீ பாடும் பூபாளம்….

ஓமந்தூர்ராமசாமி ரெட்டியார் #omandur Ramasamy Reddiyar

#*ஒமந்தூராரின் நினைவுநாள் இன்று* (25-8-2023) 
இன்று பாரதி புத்தகாலயம் வெளியிட்ட திருமதி தேவிமோகன் எழுதிய
‘’ஓமந்தூரர்’’  என்ற புத்தகத்துக்கு எனது அணிந்துரை:
•••••••••
*மக்களின் முதல்வர்!
முதல்வர்களின் முதல்வர்!!* 
—————————————
பொது வாழ்வு, அரசியலில் நேர்மையின் இலக்கணமாகத்திகழ்ந்த ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் சென்னை ராஜதானியின், ஏன் தமிழ்நாட்டின் முதல் முதல்வர். உத்தமர்காந்தி அடியொற்றி விடுதலைப் போராட்டம், காங்கிரஸ் கட்சிகளப்பணிகள் என ஆரம்ப கட்டத்தில் பங்கேற்றவர். நிலக்கிழாராக இருந்தாலும் எளிமையான வாழ்வு வாழ்ந்தவர். காங்கிரஸ்வாதியாக விடுதலைப் போராட்டக் காலத்தில் நடந்தே சென்று கிராமம் கிராமமாக தண்டோரா போட்டு, கூட்டங்களை நடத்தி விடுதலை உணர்வை மக்கள் மத்தியில் ஊட்டியவர்.
 அன்றைய திருநெல்வேலி ஜில்லாவுக்கு 1936-ல் கோவில்பட்டியிலிருந்து கழுகுமலை வந்து மதிய உணவிற்கு எங்கள் கிராமத்திற்கு வந்ததாகவும் அங்கே மதிய உணவை முடித்துக்கொண்டு எங்கள் வீட்டின் பெரிய திண்ணையில் பாயை விரித்து எளிமையாக படுத்து உறங்கி சங்கரன்கோவில் சென்றார் என்றும் எங்கள் தந்தையார் சொல்வார். என்னுடைய தந்தை கே.வி.சீனிவாசநாயுடுவிடம் அன்பு பாராட்டியவர் ஓமந்தூரார். அவர் எழுதிய கடிதங்களை எங்கள் தந்தையார் பாதுகாத்து வந்தார் என்பதெல்லாம் எங்களுக்கு மகிழ்ச்சியான செய்தி. எங்கள் வீட்டில் இந்த உத்தமரின் காலடி பட்டது எங்களுக்கு காலம் வழங்கிய அருட்கொடை என்பதை மகிழ்ச்சியாக தெரிவித்துக் கொள்கிறேன்.
திண்டிவனம் காங்கிரஸ் கமிட்டி தலைவராகத் துவங்கி முதலமைச்சர் பொறுப்பு வரை உயர்ந்த விவசாயிகளின் முதல்வர்.  தென்னார்காடு மாவட்டத்தில் படையாச்சிகளை குற்றப்பரம்பரை என ஆங்கிலேயர்கள் ஆட்சிக் காலத்தில் சட்டம் கொண்டு வந்தபோது அதை கடுமையாக எதிர்த்தவரும் ஓபிஆர்.
ஓமந்தூரார் முதல்வரான பின் 1949-ல் நிலச் சீர்த்திருத்தங்கள் குறித்தான நடவடிக்கைகளை ஜே.சி.குமரப்பா அறிக்கைக்கு சற்றுமாறுபட்டு விவசாயிகளின் நலன்கருதி தன் கருத்தில் ஆணித்தரமாக இருந்ததெல்லாம் உண்டு. பின் புதுச்சேரி மாநிலம் பிரெஞ்ச் காலனி ஆதிக்கத்திலிருந்து இந்தியாவில் இணைய எடுத்துக் கொண்ட போராட்டங்கள் அதிகம். அதேபோல ஹைதராபாத் நிஜாம் இந்தியாவோடு இணைய யோசித்து சற்று எதிர்வினைகள் ஆற்றியபோது இரும்பு மனிதர் சர்தார்படேலுக்கு உதவியாக சென்னை ராஜதானியில் பாதுகாப்பு படையை அனுப்பி ஹைதராபாத் சமஸ்தானத்தை இந்தியாவோடு இணைக்க பட்டேலோடு பெரும் பங்காற்றியவர். தமிழக தலைவர்கள் அந்தக் கால கட்டத்தில் ராஜாஜி, காமராஜர் என பல்வேறு திசைகளில் பயணித்தாலும் அத்தனை காங்கிரஸ் தலைவர்களும் ஏற்றுக் கொள்ளக்கூடிய - விரும்பிய தலைவராக ஓமந்தூரார் இருந்தார்.
தமிழகத்தில் ஒடுக்கப்பட்ட மக்கள் ஆலயப்பிரவேசம், விவசாய நலன்களுக்கான திட்டங்களைத் தீட்டியவர் ஓமந்தூரார். இன்றைக்கு சமூகநீதி என்று பலர் முழங்குகிறார்கள். ஆனால், நாட்டின் விடுதலைக்குப் பின் நீதிக்கட்சி ஆட்சியில் அறிவிக்கப்பட்ட முத்தையா முதலியார் கம்யூனல் ஜீவோவிற்கு அடுத்து செயல்பாட்டிற்கு வரக்கூடிய பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக சமூகநீதி உத்தரவை முதன்முதலாக பிறப்பித்த ஒரு காங்கிரஸ் முதலமைச்சராக ஓ.பி.ஆர். திகழ்ந்தார். 
இப்படியெல்லாம் மக்களின் உரிமைகள், நலன்களைப் போற்றி கடமையாற்றிய ஓமந்தூர் ராமசாமி ரெட்டியாரை இன்றைய இளைஞர்கள் அறியவோ, புரியவோ இல்லை என்பது எங்களைப் போன்றோர்க்கு ரணமான செய்திகள். பொதுவாழ்வில் நீண்டகாலம் எங்களைப் போன்றோர் பணியாற்றினாலும் எங்களுக்கு என்றைக்கும் ரோல் மாடலாக ஓமந்தார் இருக்கின்றார். தன்னுடைய சொத்துக்கள் அனைத்தையும் வடலூர் வள்ளலார் சுத்த சன்மார்க்க அமைப்புக்கு வழங்கி அந்த அமைப்புக்கான கட்டிடங்கள் கட்டி, வள்ளலாருடைய வடலூர் ஆசிரமத்தை மேலும் சீராக்கி கொண்டாடியவர் ஓமந்தூரார். 
இந்த இடத்தில் ஒன்றை பதிவு செய்ய வேண்டும். இன்றைக்கு எத்தனையோ அமைச்சர்கள் தேசியக்கொடி கட்டி சிகப்புவிளக்கு கார்களில் காதைப் பிளக்கும் ஒலி எழுப்பான்கள் (ஹாரன்) அடித்துக் கொண்டு செல்வதைப்பார்க்கின்றோம். அவர்கள் ஒருசிலரிடம் ஓமந்தூராரைத் தெரியுமா? என்று நான் கேட்டபோது மேலும் கீழும் பார்க்கிறார்களே தவிர பதிலில்லை. 
தமிழ் வளர்ச்சி, தமிழ்இலக்கியங்கள், பெரியசாமி தூரன் தலைமையில் அமைந்த தமிழ்க் கலைக்களஞ்சியம் உருவாக்குதல், உயர்கல்வி சீராக்குதல், நீர்ப்பாசன திட்டங்கள், மின்சார வசதி, தமிழக திருக்கோவில்களின் சீர்திருத்தங்கள் என பலதுறைகளில் சீரமைப்பை திட்டமிட்டு செய்தவர் ஓமந்தூரார்.
ஸ்ரீவில்லிப்புத்தூர் கோபுரத்தையே அரசு சின்னமாக அறிவித்து, தமிழருடைய கலாச்சாரத்தைப் போற்றி வளர்த்தவர். ஒருமுறை இங்கிலாந்து எலிசபெத் ராணி சென்னை வந்தபோது அவரை வரவேற்கச் செல்ல வேண்டும். குளித்துவிட்டு தயாராகி கசங்கிய கதர் சட்டையோடு வெளியே வருகிறார் ஓமந்தூரார். இவரை எதிர்பார்த்து அழைத்துச் செல்ல இருந்த அதிகாரிகள், “ஐயா, நீங்க கோட்டு சூட்டு போட்டுக் கொண்டு வருவீர்கள் என நினைத்தோம். ஆனால் என்றும் போல கதர் ஆடைகளோடு சென்றால் ராணியை வரவேற்க நல்லாவா இருக்கும்” என்று கேட்டவுடன் ஓபிஆர், “இதோ பாருங்க... இதுதான் என் இயல்பு... நீங்க சொன்னாப்புல நான் வரமுடியாது. என்னால் வேஷங்கட்ட முடியாது. இப்படி வரவேற்க வருவதே நல்லது. இல்லையென்றால் நான் வரலை.. நீங்க எல்லாம் போங்க...”என்ற பதிலளித்தவர் தான் ஓமந்தூரார்.
தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை என்றால் ஜகத்தினை அழித்திடுவோம் என்று பாடிய முண்டாசுக் கவி பாரதியின் பற்றாளர். எட்டயபுரத்தில் பாரதியின் மண்டபம் அமைய கல்கிக்கு உதவியாக இருந்தவர் ஓமந்தூரார். பாரதியுடைய கவிதைகள் மேல் இருந்த தடையை நீக்க வேண்டும் என்று ரசிகமணி டி.கே.சியோடு குரல் கொடுத்தவர்.
இவர் நேர்மையின் திருவிளக்கு! நேர்மையற்றோர்க்கு அவர்களை அழிக்கும் அக்கினி! ஏழை பாழைகளை முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச்செல்லும் ஒப்பற்ற ஜோதியாக விளங்கியவர்.
இப்படிப்பட்ட மாமனிதருடைய படத்தை தமிழகச் சட்டப் பேரவையில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னால்தான் பல்வேறு கோரிக்கைகளுக்குப் பின் வைக்கப்பட்டது. பலருடைய படம் ஏதோ ஒரு ஆதாயத்திற்காக அங்கே வைக்கப்பட்ட போது இந்த மாமனிதனுடைய படத்தை வைக்க நாடு விடுதலைப்பெற்று 70 ஆண்டுகளுக்குப் பிறகு தான்ஆட்சியாளர்களுக்குத் தெரிகிறது.
தகுதியே தடை என்ற நிலையில் இன்றைய அரசியல் இங்கே நடக்கின்றது. ஓமந்தூரார் போல் இன்றைக்கு பார்ப்பது சிரமம். இவ்வளவு நெறியான வாழ்க்கையை வாழ்ந்த மாமனிதர் 25 ஆகஸ்ட் 1975-ல் காலமானார்.
இப்படி ஒரு ஆளுமையினுடைய நூலினைத் திருமதி தேவிமோகன் அவர்கள் எழுதி, பாரதி புத்தகாலயம் வெளியிடுகின்றது. திருமதி தேவிமோகன் என்ற பாரததேவியின் தந்தையார் பெயரும் ராமசாமி ரெட்டியார். நூலாசிரியரின் பிறந்த தேதியும் ஓமந்தூரார் பிறந்தநாளன்றே.
ஒரு பொருத்தமான நுண்மான் நுழைபுலம் கொண்ட திருமதி தேவிமோகன் சிறப்பாக இன்றைய தலைமுறைக்கு ஓமந்தூராரை புரிந்து அவரையே வழிகாட்டியாக எடுத்துக்கொள்கின்ற அளவில் இந்த நூலை வடித்துள்ளார். இந்த நூல் ஓமந்தூரார் முதல் முதல்வர் என்ற தலைப்பில் தமிழக மக்களிடம் சென்றடைய வேண்டும். இந்நூல் ஆங்கிலம், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் மொழியாக்கம் செய்ய வேண்டும். இதை படைத்த நூலாசிரியர் திருமதி தேவிமோகனுக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும்!


வழக்கறிஞர் கே.எஸ். இராதா கிருஷ்ணன்,
அரசியலார்.
 
முகாம்: கோவில்பட்டி​​​​​​  
தேதி: 29.07.2023
—————————————
#ஒமந்தூராரின்_நினைவுநாள்:
****
ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் (Omandur Ramasamy Reddiyar) சென்னை  ராஜதானி மாகாணம் மாநிலத்தின் முதல்வராகப் பணியாற்றியவர். அவரது ஆட்சியின் போது மடங்கள், ஆதீனங்கள், கோயில்களின் சொத்துக்களை சிலர் மட்டுமே சுரண்டி வருவதைத் தடுக்க சட்டம் கொண்டுவந்தார். ஜமீன்தார் இனாம் முறையை ஒழித்தார், ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தார். பூரண மதுவிலக்கை அமல்படுத்தினார்.

இராமசாமி ரெட்டியார், சென்னை மாகாணத்தின் முதலமைச்சராக மார்ச் 23, 1947 முதல் ஏப்ரல் 6, 1949 வரை பதவியில் இருந்தார். சுதந்திர இந்தியாவின் சென்னை மாகாணத்தின் முதல் முதலமைச்சராவர். இவரது பதவிக் காலத்தில், சென்னை கோயில் நுழைவு அதிகாரமளிப்புச் சட்டம் 1947 இயற்றப்பட்டது. இந்தச் சட்டத்தின் மூலம் தலித்துகள், தாழ்த்தப்பட்டோர் இந்து கோயில்களுக்குள் செல்ல உரிமையளிக்கப்பட்டது. அவரது ஆட்சியின் போது மடங்கள், ஆதீனங்கள், கோயில்களின் சொத்துக்களை சிலர் மட்டுமே சுரண்டி வருவதைத் தடுக்க சட்டம் கொண்டுவந்தார். ஜமீன்தார் இனாம் முறையை ஒழித்தார், ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தார். பூரண மதுவிலக்கை அமல்படுத்தினார்.இந்து சமய அறநிலையத்துறைச் சட்டம் மற்றும் தேவதாசி முறை ஒழிப்பு சட்டம் ஆகியவற்றை இயற்றினார். தமிழ் கலைகளஞ்சியம், தமிழ்பயிற்சி மொழி, சமூக நீதி அரசு உத்தரவு  என இவர் முன் எடுத்தார்.

நாட்டின ஹைதராபாத் சமஸ்தானத்தை இந்திய நாட்டுடன் இணைப்பதில் பெரும் பங்காற்றினார். பாகிஸ்தானில் இருந்து ஹைதராபாதுக்கு விமானம் மூலம் ஆயுதங்கள் கொண்டுவரப்படுகின்றன என படேலுக்கு ஒமந்தூரார் எச்சரிக்கை செய்தார். அதன் பின்னரே ஹைதராபாத் மீது இராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இந்திய தேசத்துடன் இணைக்கப்பட்டது. இந்த அரும்பணிக்காக படேல் அவர்கள் ஒமந்தூராரை மனம் திறந்து பாராட்டினார். ஆனால் பின்நாளில் எழுதப்பட்ட வரலாற்றில் ஒமந்தூராரின் பங்களிப்புகள் இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளன.

முதலமைச்சர் பதவியிலிருந்து விலகியபின், ஒமந்தூராரின் மனம் முழுமையாக ஆன்மீகத்தின் பக்கம் சென்றது. அரசியலில் இருந்து விலகி வடலூரில் விவசாயப் பணியை மேற்கொண்டார். வடலூரில் சுத்த சன்மார்க்க நிலையத்தை நிறுவினார். இவர் வள்ளலார் குருகுலப் பள்ளி, அப்பர் அநாதைகள் மற்றும் ஏழை மாணவர் இல்லம், அப்பர் சான்றோர் இல்லம், இராமலிங்க தொண்டர் இல்லம் என பலநிறுவனங்களை தொடங்கினார். இவர் ஆகஸ்ட்  25, 1970 இல் உடல்நலக் குறைவால் மறைந்தார்.



#ஓமந்தூர்ராமசாமி ரெட்டியார் 
#omandur Ramasamy Reddiyar

#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
25-82023.

Thursday, August 24, 2023

#MADRAS (#Chennai) Turns 384 Years…. Government Transport, Madras MSY 8534.

#MADRAS (#Chennai) Turns 384 
Years….
Government Transport, Madras 
MSY 8534
Route: 36 British Leyland Bus Enroute to Tiruvottiyur (திருவொற்றியூர்) 

Facts about MADRAS!
The first city of modern India, Chennai, is celebrating its 384th birthday today, as Chennai, then Madras was founded on 22 August, 1639.

22 August 1639 being the widely agreed date for the purchase of the village of Madraspatnam or Chennapatnam by East India Company. Rechristened as Chennai in 1996, the capital of Tamil Nadu is now home to more than 6 million people. 

Madras is one of the most oldest cities. Kolkata is 50 years younger and Bombay is about 35 years younger than Madras respectively.

And it was here that almost virtually everything in modern India began - the first municipality in India as early as in 1688, then upgraded to City Corporation in 1792.

The first technical college - Guindy engg college in 1794.

The first shopping mall Spencer's in 1863.

The first cricket club in India set up here in 1846. 
The list of firsts continue with first big library in Connemara, first big book store in Higginbothams, country's oldest railway station in Royapuram, first public zoo in the country in Vandalur.

35000 people get employed newly every year in the city; Asia's biggest IT park(SIPCOT IT), Asia's Biggest Anna Cenetary Library is here.

And Asia's biggest bus terminal CMBT is here in Koyamedu, and another upcoming Asia’s Largest Bus Terminus at Kilambakkam as a bus Enthusiast, Madras is close to us!

#MADRAS/#CHENNAIDAY!!


#Chandrayaan3 #சந்திராயன்3

இந்தியாவை நியூயார்க் டைம்ஸ் உள்ளிட்ட பல நாட்டு ஊடகங்கள் கேலி பேசித் தலையங்கம், கேலிச்சித்திரங்கள் போட்டதுண்டு.                       

முதன்முதல் தும்பா ( கேரளாவில்)  இராக்கெட் தளம் அமைத்தபோது உபகரணங்களை சைக்கிளில் நமது விஞ்ஞானிகள் எடுத்துச் சென்றனார். விண்கோள்கள் அனுப்பினார்கள். இன்று உலகில் யாரும் தடம் மிதிக்காத நிலவின் தென் பகுதியில் முதன்முதலாகக் காலடி வைத்தது நமது இந்திய நாடு ஆகும்.




#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
24-8-2023.

Chandrayaan3 #சந்திரயான்3

*Yesterday night Moon-7PM*
*after reaching Chandrayaan3* 
 *நேற்று இரவு 7.00 நிலவு சந்திராயன்3  அங்கு அடைந்த பின்பு*…

சந்திரயான்-3 நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாகத் தரையிறங்கிவிட்டது. தரையிறங்கிய விக்ரம் லேண்டரில் இருந்து வெளியேறும் ரோவர் எனப்படும் ஊர்திக்கலன் என்ன செய்யும்…
அதுகுறித்த தகவல்களை இஸ்ரோ அதன் இணையதளத்தில் தெரிவித்துள்ளது. சந்திரனின் ஒரு நாள் என்பது பூமியில் 28 நாட்களுக்குச் சமம். அதாவது அங்கு 14 நாட்களுக்குப் பகல் மற்றும் 14 நாட்களுக்கு இரவு நிலவும்.












இதில் 14 நாட்களுக்கு பகல் நீடிக்கும் காலகட்டத்தில் விக்ரம் லேண்டர் தரையிறங்கியுள்ளது. இந்த இரண்டு வார காலகட்டத்தில் இஸ்ரோவின் ஆய்வுகளை அது நிலவில் மேற்கொள்ளும்.
அங்கு விக்ரம் லேண்டரில் இருந்து வெளியே வரும் பிரக்ஞான் ரோவர் மேற்கொள்ளப் போகும் ஆய்வுகள் இந்தியாவின் எதிர்கால நிலவு மற்றும் விண்வெளித் திட்டங்களில் குறிப்பிடத்தக்கப் பங்கு வகிக்கும்.




விக்ரம் லேண்டர் தரையிறங்கியதால் எழும்பிய புழுதி அடங்கிய பிறகு நிதானமாக வெளியே வரும் பிரக்ஞான் ரோவர், நிலாவை குறித்து அனுப்பும் புவி தகவல்களை விஞ்ஞானிகள் ஆய்வு செய்வார்கள்.

Ancient Indian Astronomers
1) Lagadha
2)Aryabhatta
3) Brahmagupta
4)Varahamihir
5) Bhaskara -I
6) Lalla 
7) Bhaskara II
8)Sripati 
9) Mahendra Suri 
10) Gautam Siddha
#Chandrayaan3

#ksrpost
24-8-2023.

#Chandrayaan3 
#சந்திரயான்3

#ksrpost
#கேஎஸ்ஆர்போஸ்ட்24-8-2023.



*வெற்றி தள்ளி போகலாம்... ஆனால், முயற்சி வீண் போகாது*….

*வெற்றி தள்ளி போகலாம்... ஆனால், முயற்சி வீண் போகாது*….
*Chandrayaan3*

இதுவே எனது நம்பிக்கை… சூத்திரம்,
பிறரால் திட்டமிட்டு ஏற்படும் தடைகள்,துரோகங்கள் என  இருந்தாலும் உன் இலக்கை நோக்கி செல்… காலம்,தேசம், வர்த்தமானம் உன்னை தூக்கி வைக்கும்.
தூக்கி விடுபவர் உன் தகுதியை அறிந்தவர். தூக்கி எறிபவன் உன் தகுதியை அறிய விரும்புபவன். இருவருக்கும் நன்றி சொல்லி உன் பயணத்தை தொடர்ந்து செய். 

#MotivationalQuotes |

#Chandrayaan3 
#ksrpost
#கேஎஸ்ஆர்போஸ்ட்
24-8-2023.


Wednesday, August 23, 2023

Chinggis Khan

Chinggis Khan

Chinggis Khan grew up under privileged and disadvantaged in an extremely hierarchical society of the steppes in the second half of the 12th century. His birth name was Temujin. It was only in his 40s, a rather old age for the times, he managed to create alliances involving  other underprivileged individuals. He picked up individuals from different families, knit them into units, and assigned the units military tasks. These formations were exceedingly successful against the normal  family based military systems of those times. Within a few years he had been acknowledged as the khan-- the chief-- of Mongols. Then he switched his attention to conquering the land as far as the eye could see and beyond. By the time of his death two decades later, he had crafted one of the largest empires on earth that encompassed most of Asia and almost all of Europe. His descendants were able to consolidate their hold over Asia. Bharat desh, the land across the Himalayas, was one part of the world that did not succumb to their control. Chinggis Khan has been a national hero for the people of Mongolia. His statue, riding a horse, was opened to the public in 2008. It is on the bank of the Tuul River at Tsonjin Boldog, near the capital city of Ulan Bator. Made of steel, it is about 130 feet tall.


#*தகுதியே தடை* *நான் பார்த்த அரசியல் இதுதான்*…

#*தகுதியே தடை* *நான் பார்த்த அரசியல் இதுதான்*…  ——————————— இங்கு அரசியல் என்ன நிலை, ஓட்டுக்கு பணம் Vote for sales வாரிசு அரசியல், குடும்ப அ...